புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
62 Posts - 43%
heezulia
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
6 Posts - 4%
prajai
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
2 Posts - 1%
Barushree
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
21 Posts - 5%
prajai
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
எது காலிப்பானை? Poll_c10எது காலிப்பானை? Poll_m10எது காலிப்பானை? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது காலிப்பானை?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 28, 2012 1:51 pm

அரசர் கிருஷ்ண சந்திரருக்கு அடுத்தடுத்து மகள்கள் பிறந்தனர். தனக்குப் பின் ஆட்சி செய்ய ஒரு மகன் இல்லையே என்று கவலைப்பட்டார். பல கோவில்களுக்குச் சென்று அவரும், அரசியும் வழிபட்டனர்.

அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு மகன் பிறந்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

அரண்மனையே விழாக் கோலம் பூண்டது. இளவரசனைப் பார்ப்பதற்காக, மக்கள் எல்லாரும் அரண்மனைக்கு வந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக இளவரசனைப் பார்த்து விட்டுச் சென்றனர்.

அங்கு வந்த கோபால் இளவரசனைப் பார்த்தான்.

""அரசே! இளவரசரின் முகம் மிகுந்த பொலிவுடன் விளங்குகிறது. அறிவிலும், வீரத்திலும் ஈடு இணையற்றவராக விளங்கப் போகிறார். உங்களை விடப் பேரும், புகழும் பெறப் போகிறார்,'' என்றான்.

அங்கிருந்த அமைச்சர்கள் இதைக் கேட்டனர். "கோபாலைச் சிக்கலில் மாட்ட வழி கிடைத்தது' என்று நினைத்தனர்.

""அரசே! உங்களை மகிழ்ச்சிப்படுத்தப் பொய் சொன்னால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? அவர்களை நீங்கள் நம்புவீர்களா? அது ஏமாற்றுவது போல ஆகாதா? அப்படிப்பட்டவர்களை தண்டிக்க வேண்டாமா?'' என்று கேட்டனர்.

அவர்கள் எதற்காக அப்படிப் பேசுகின்றனர் என்பது அரசருக்குப் புரிந்தது. "கோபால் அப்படிப்பட்டவன் அல்ல... யாரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பொய் சொல்லமாட்டான். இதை அவனை வைத்தே, நிரூபிக்க வேண்டும்' என்று நினைத்தார்.

""கோபால்! நீ உண்மையிலேயே என் மகனின் எதிர்காலத்தைச் சொன்னாயா? என்னை மகிழ்ச்சிப்படுத்த இப்படிப் பேசினாயா?''

""அரசே! யாரையும் மகிழ்ச்சிப்படுத்த நான் பொய் சொல்ல மாட்டேன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பர். இளவரசரின் திருமுகம் அவர் பேரும், புகழும் பெறப் போகிறார் என்பதைக் காட்டுகிறது. நான் சொல்வது முழுக்க, முழுக்க உண்மைதான்,'' என்றான் கோபால்.

இதைக் கேட்ட அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அமைச்சர்கள் நிறைவு அடையவில்லை.

அரசரைத் தனியே சந்தித்த அவர்கள், ""அரசே! எதிர் காலத்தைச் சொல்லும் ஞானி என்றா கோபாலை நினைக்கிறீர்? அவன் சொன்னது முழுப் பொய். நாங்கள் சொல்வது போல அவனுக்கு ஒரு சோதனை வையுங்கள். அவன் குட்டு வெளிப்பட்டு விடும்,'' என்றனர்.

""நீங்கள் பொறாமையால் இப்படிப் பேசுகிறீர்கள். நான் கோபாலை நம்புகிறேன். என்ன சோதனை சொல்லுங்கள் வைக்கிறேன்,'' என்றான்.

""அரசே! ஒரே அளவு ஒரு வடிவம் உள்ள இரண்டு பானைகளைக் கொண்டுவரச் சொல்லுங்கள். இரண்டிற்கும் எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. ஒரு பானை நிறைய பொற்காசுகள் இருக்க வேண்டும். இன்னொன்று காலியாக இருக்க வேண்டும். இரண்டின் வாயையும் துணியால் இறுகக் கட்ட வேண்டும்.

உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியக் கூடாது. இரண்டையும் கயிற்றால் அருகருகே கட்டி இங்கே தொங்க விடுங்கள். கோபால் வந்ததும் இரண்டு பானைகளையும் காட்டுங்கள். ஒன்று காலிப்பானை. இன்னொன்று பொற்காசுகள் நிறைந்த பானை. இவற்றின் அருகே சென்று கூர்ந்து பார்க்கலாம். எது காலிப்பானை எது பொற்காசுப் பானை என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்,'' என்றனர்.

அதன்படியே இரண்டு பானைகள் அங்கே கட்டித் தொங்க விடப்பட்டன.

ஏவலர்களிடம் கோபாலை, அழைத்து வரச் சொன்னார் அரசர்.

சிறிது நேரத்தில் கோபால் அங்கு வந்தான்.

""கோபால்! ஒருவரைப் பார்த்த உடனே அவரின் எதிர்காலத்தைச் சொல்கிறாய். அதே போலப் பொருள்களைப் பார்த்ததும், உன்னால் சொல்ல முடியுமா என்பதை, அறிய உனக்கு ஒரு சோதனை வைத்திருக்கிறேன்,'' என்றார்.

""அரசே! என்ன சோதனை? சொல்லுங்கள்,'' என்றான்.

""கோபால்! அங்கே இரண்டு பானைகள் தொங்குகின்றன. ஒன்று காலிப் பானை. இன்னொன்று பொற்காசுகள் நிரப்பப்பட்ட பானை. நீ அந்தப் பானைகளைத் தொடக் கூடாது. எது காலி பானை? எது பொற்காசுப் பானை என்று கண்டு பிடித்து சொல்ல வேண்டும். நீ பிறரைப் புகழப் பொய் சொல்பவன் அல்ல. இதை இந்தச் சோதனையால் அறிந்து கொள்வேன்,'' என்றார் அரசர்.

பானைகளைத் தொடக்கூடாது. எது காலிப்பானை? எது பொற்காசுப் பானை? என்று கண்டுபிடிக்க வேண்டும். கடினமான சோதனை தான் என்பது அவனுக்குப் புரிந்தது. எப்படியும் கண்டுபிடித்து விடலாம். வழி இல்லாமலா போகும் என்று சிந்தனையில் ஆழ்ந்தான் அவன்.

""கோபால் நீ இந்தச் சோதனையில் வெற்றி பெற்றால், பானையில் உள்ள பொற்காசுகள் அனைத்தும் உனக்கே. தோல்வி அடைந்தால் அதே அளவு பொற்காசுகளை நீ தர வேண்டும்,'' என்றார் அரசர்.

வழி கண்டுபிடித்த மகிழ்ச்சியில் சிரித்தபடியே பானைகளின் அருகே சென்றான். ஒவ்வொரு பானையையும் உற்றுப் பார்த்தான்.

அங்கிருந்த அமைச்சர்கள் அவன் தோற்று அவமானப்படப் போகிறான். இந்தச் சோதனையில் அவனால் வெற்றி பெற முடியாது! என்று அவனை ஆணவத்துடன் பார்த்தனர்.

அவர்கள் எண்ணம் கோபாலுக்குப் புரிந்தது. அவர்களைப் பொருட்படுத்தாத அவன் பானைகளையே பார்த்தபடி இருந்தான்.

இரண்டு பானைகளுக்கும் நடுவே நின்ற அவன், ""அரசே! என் வலது பக்கம் உள்ள பானை பொற்காசுப் பானை. இடப் பக்கம் உள்ள பானை காலிப் பானை,'' என்றான்.

""கோபால்! உறுதியாகத்தான் சொல்கிறாயா அல்லது குருட்டாம் போக்கில் சொல்கிறாயா?'' என்று கேட்டார்.

""அரசே! உங்கள் மகன் உங்களை விட பேரும், புகழும் பெறுவான். அதே உறுதியுடன்தான் இந்தப் பானை பொற்காசுப் பானை, இந்தப் பானை காலிப் பானை என்கிறேன்,'' என்றான்.

""கோபால்! உன் மீது இவர்கள் பொறாமை கொண்டனர். அவர்களுக்காகத்தான் இந்தச் சோதனை வைத்தேன். நீ எப்படிப் பொற்காசுப்பானையையும், காலிப்பானையும் கண்டுபிடித்தாய்? இரண்டும் ஒன்று போலவே உள்ளனவே,'' என்றார்.

""அரசே! இதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். பொற்காசுப் பானை எடை அதிகமாக இருக்கும். காலிப் பானை அவ்வளவு எடை இருக்காது. கயிற்றில் தொங்கும் போது எடை அதிகமான பானை சிறிது தாழ்வாகத் தொங்கும். உற்றுக் கவனித்தால் இதனை தெரிந்து கொள்ளலாம்.

அந்த ஒன்றை மட்டும் வைத்து நான் இந்த முடிவுக்கு வரவில்லை. பானைகளுக்கு அருகே சென்ற நான், மூச்சை இழுத்து வேகமாக ஊதினேன். காலிப் பானை சிறிது அசைந்தது. பொற்காசுப் பானை அசையவே இல்லை. நான் ஏமாற்றத்துடன் பெருமூச்சு விடுவதாக நீங்கள் அனைவரும் நினைத்தீர்கள்,'' என்று நடந்ததை விளக்கமாகச் சொன்னான்.

""கோபால்! உன் அறிவுக்கூர்மையை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. பானையில் உள்ள பொற்காசுகள் அனைத்தையும் நீயே எடுத்துக் கொள்!'' என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.

கோபாலும், அவருக்கு நன்றி சொல்லி விட்டு, பொற்காசுப் பானையை எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு சென்றான்.

தங்கள் திட்டம் இப்படியாகி விட்டதே, கோபாலுக்கு மேலும் பரிசும், புகழும் கிடைத்து விட்டதே, என்று தலை கவிழ்ந்தனர் அமைச்சர்கள்.

***

சிறுவர் மலர்



எது காலிப்பானை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 28, 2012 2:57 pm

நிறைகுடம் தளும்பாது ...குறை குடம் கூத்தாடும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது அருமையான கதை... அருமையிருக்கு
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 28, 2012 6:55 pm

புத்திமான் பலவான்.
சூப்பர் படிப்பினைக் கதை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 28, 2012 7:55 pm

அறிவினைப் புகட்டும் அற்புதக் கதை ,நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக