ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சுமி...‎

3 posters

Go down

லட்சுமி...‎ Empty லட்சுமி...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri Nov 30, 2012 9:27 am


வசுமதிக்கு இரண்டு நாட்களாகவே லட்சுமி பற்றிய கவலைதான். லட்சுமி ‎இவர்கள் வீட்டில் 20 வருடங்களுக்கும் மேலாக குடும்ப உறுப்பினர்களில் ‎ஒருவராக இருந்து வரும் பசுமாடு. சில ஆண்டுகளா கறவை மறத்துப்போச்சு.

நேற்று காலை கணவன் வசந்தன் ”வசு, லட்சுமிய இன்னும் இரண்டு நாட்கள்ல ‎வந்து அழைச்சிக்கிட்டு போயிடுவாங்க.” ”ஏங்க இப்ப எதுக்கு இப்படி ஒரு முடிவு ‎எடுத்தீங்க..? வேற என்ன செய்ய சொல்ற..கறவையும் நின்னு போச்சு, விக்கற ‎விலைவாசில அதுக்கு புல், வைக்கோல், புண்ணாக்கு பார்த்துக்க ஆளு கூலி ‎இதெல்லாம் தேவையா..?? அதான் எனக்குத் தெரிஞ்ச ஒரு நண்பன்கிட்ட ‎சொல்லி அவன் மாட்டை விற்ற அதே இடத்தில் இதையும் அனுப்பிடறதா ‎முடிவு செய்து வர திங்கட்கிழமை வரச்சொல்லியிருக்கேன்..”

அதற்கு மேல் அவரிடம் பேசி எந்தப்பிரயோசனமும் இல்லை எனப்படவே ‎செய்வதறியாது உள்ளுக்குள்ளேயே வேதனைப்படத் துவங்கினாள்.

நினைவுகள் பின்னோக்கிச் செல்ல... 20 வருடங்களுக்கு முன்பு வீட்டில் ‎குடும்பத்தில் ஒன்றாய் அங்கம் வகிக்கத் துவங்கியது லட்சுமி. வசு, லட்சுமி ‎கத்துது பாரு..அதுக்கு சாப்பிடக்கொடுத்தியா..என்று பார்த்து பார்த்து உணவு ‎வழங்கிய வசந்தனா இன்று லட்சுமியை அடிமாட்டிற்கு அனுப்பிவைக்கத் ‎துணிந்தார் நம்ப முடியவில்லை அவளால்.. அத்தை பார்வதியும் தினமும் ‎மாட்டுத்தொழுவத்தில் கோலமிட்டு சாம்பிராணி போட்டு அகத்திக்கீரை ‎கொடுக்காமல் காபி கூட சாப்பிடமாட்டாள். அவ்வளவு பாசம். அழகோடு ‎சாந்தமும் நிறைந்து பார்க்கவே பெயருக்கு ஏற்ப லட்சுமிகரமாக காட்சியளித்தது. ‎‎ ‎

அதன் முகத்தில் விழித்து சென்றால் காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை ‎கொண்டனர். அனைவரும் தினமும் அதைக்கொஞ்சி, பூசித்து வந்தனர். ‎குழந்தைகளும் அதனோடு சரிக்கு சமமா விளையாடும். குழந்தைகளைக்கூட ‎முட்டாது. அவ்வளவு சாது. தினமும் 6 படி பால்கறந்த லட்சுமி எவ்வளவு ‎வருமானமும், மகிழ்ச்சியும் ஈட்டிக்கொடுத்தது..?? இன்று அதையெல்லாம் மறந்து ‎எப்படி இந்த மனிதரால் சகஜமாக இருக்க முடிகிறது, லட்சுமியைத் ‎தடவிகொடுத்தவாரே கண்ணீர் வடிக்க, அதுவும் முகத்தை ஆட்டி ஆட்டி ஏதோ ‎சொல்வதுபோல் தோன்றியது வசுவிற்கு.

வசு, அம்மா வசு...அத்தையின் குரல் ஈனஸ்வரமாய் ஒலிக்க, வந்துட்டேன் அத்த ‎குரல் கொடுத்தவாறு உள்ளே சென்றாள். சாப்பிட்டியா வசு..? பார்வதி வசுவிற்கு ‎மாமியாராக என்றுமே இருந்தது இல்லை..பெற்ற தாயைப்போன்றே ‎அன்பைப்பொழிபவள்.

இல்ல அத்தை பிடிக்கல. ஏம்மா..ஒத்த ஆளா இந்தக்குடும்பத்த கவனிக்கிற. நீ ‎நேரத்திற்கு சாப்பிட வேணாமா..? உடம்பு என்னத்துக்கு ஆவறது..? ம்ம்... ‎இந்தக்கடவுள் என்னத்தான் இப்படி முடமாக்கி நடமாட விடாம வச்சிருக்கான். ‎நீதான உன்ன கவனிக்கனும் விழிகளில் நீர் கோர்த்துக்கொள்ள பார்வதி ‎மருமகளைக் கடிந்தாள். மனசே சரியில்ல அத்த...என்னாச்சு வசு..?? நான் ஒருத்தி ‎‎2 வருடமா உங்க யாருக்கும் பிரயோசனம் இல்லாம போயிட்டன் இல்ல..?‎

ஏன் அத்த அப்படி சொல்றீங்க..நாங்க எப்பவாச்சும் உங்க கிட்ட அப்படி ‎நடந்திருக்கமா..? வசு கண்ணீர்மல்க வினவ...பின்ன என்னம்மா நீ சாப்பிடாம ‎மனசு சரியில்லைன்னு இருக்க..அப்ப என்னமோ இங்க நடந்திருக்கு எனக்கு ‎சொல்லனும்னு உங்களுக்குத் தோனலைதான..?” அத்த நீங்களே உடம்பு ‎முடியாம இருக்கீங்க..சொன்னா நீங்க வருத்தப்படுவீங்கன்னுதான் ‎சொல்லவேண்டாம்னு இருந்துட்டேனே தவிர உங்கமேல உள்ள மரியாதை ‎என்றைக்கும் குறையவில்லை..” நம்ம லட்சுமி 2 வருடமா சும்மா இருக்காம்.. ‎தெண்டச்செலவாம். அதான் வந்தவிலைக்கு அடிமாட்டுக்கு அனுப்பறதா உங்க ‎பிள்ளை சொல்லியிருக்கார்..நான் எவ்வளவோ மறுத்தும் பிடிவாதமா இருக்கார் ‎அத்த..அதான் கவலையா இருக்கு.”

அடிப்பாவி பெண்ணே, எவ்வளவு பெரிய கொடுமை நடக்கவிருக்கு இதைப்போய் ‎நான் வருத்தப்படுவேன்னு மறைக்கப்பாத்தியே.. நீ ஒன்னு செய்..உம்புருசனுக்கு ‎போனப்போட்டு நான் ரொம்ப சீரியசா இருக்கிறதா சொல்லி வர வை..அய்யோ ‎எதுக்கு அத்த இப்படி சொல்ல சொல்றீங்க..ஒரு நேரம் போல இல்லாம ‎பலிச்சுடப்போவுது. அதெல்லாம் ஒன்னும் ஆவாது சொல்லு...சரி அத்த என்றவள் ‎கணவனுக்கு போன் செய்து..”என்னங்க அத்தைக்கு ரொம்ப சீரியசா ஆயிடுச்சு, ‎நீங்க உடனே வாங்க..நம்ம டாக்டருக்கும் போன் செய்துட்டேன்..அவரும் ‎கிளம்பிட்டார்..” இதோ வரேன் வசு, அம்மாவை கவனமாப் பார்த்துக்க.

போன் செய்த அரைமணியில் வீட்டிற்குள் நுழைந்தவன்..என்னாச்சு அம்மாவிற்கு ‎காலை கூட நல்லாத்தானே இருந்தாங்க என்றவாறே அம்மாவின் அறைக்குள் ‎சென்றான். பார்வதியை பரிசோதிக்கும் மருத்துவரிடம், டாக்டர் என்ன ஆச்சு..?. ‎இரண்டு வருடமா பெட்லயே இருந்ததால பெட்சோர் அதிகமாயிடுச்சு. இனி ‎அவங்களால இயல்பா இருப்பது கஷ்டம்..என்னதான் நீங்க நல்லா ‎பார்த்துக்கிட்டாலும் 24 மணிநேரமும் கூட இருக்கும்படி ஒருத்தர நியமிக்கனும். ‎தினமும் இந்த ஊசி போடனும், லோசன் தடவனும்..அதுக்கு நிறைய சிலவாகும். ‎பக்கவாதம் பலமா தாக்கினதால இனி இவங்களால எழுந்து நடமாட ‎முடியாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சவிசயம்தான் இருப்பினும், பெட் சோர் வராம, ‎அவங்கள பார்த்துக்கனும்னா நிறைய சிலவாகும்..என்ற டாக்டர் என்கிட்ட ஒரு ‎யோசனை, என்ன டாக்டர் சொல்லுங்க அம்மா நலனுக்காக எதுவும் செய்யத் ‎தயாரா இருக்கோம். ‎

அம்மாவை கருணைக்கொலை செய்திடறதுதான் நல்லதுன்னு எனக்குத் ‎தோனுது. இனி இவங்களால எதுவும் பிரயோசனம் இல்லை. அதோடு இவங்கள ‎பார்த்துக்க சிலவு, நேரம், உடல் உழைப்புன்னு தேவையா யோசிச்சு சொல்லுங்க ‎என்ற டாக்டரின் சட்டையை ஆவேசமாகப்பிடித்தான் வசந்தன்.

நிறுத்துடா..அம்மாவின் குரல் கேட்க அதிர்ச்சியுடன் திரும்பிய வசந்தன் அம்மா ‎நீயா பேசின என்றான் ஆச்சரியத்துடன்..ஆமாண்டா நான் தான். அவர ஏண்டா ‎சட்டைய பிடிச்சுக் கத்தற..? உன்ன உன்னப்போயி விக்கினான்..”நான் தான் அப்படி ‎சொல்லச்சொன்னேன்..”

நீயா..? ஏன்மா..? உன் மகன் அவ்வளவு சுயநலக்காரன்னு நினைச்சியா..?

பின்ன என்னடா, உன்னோட அம்மா இரண்டு வருடமா பக்கவாதத்தில ‎படுத்திருக்கேன்..என்னால எந்த பிரயோசனமும் இல்லைன்னு தெரிஞ்சும் ‎இவ்வளவு செலவு செய்து அன்பா பாத்துக்கறியே.. நம்ம லட்சுமியும் என்ன ‎மாதிரி ஒரு உசிர்தானடா..? அதுவும் நம்ம குடும்பத்தில ஒன்னாத்தான ‎இவ்வளவு ஆண்டுகாலமா இருந்து வருது.. எப்ப அத அடிமாட்டுக்கு அனுப்ப ‎துணிஞ்சிட்டியோ, என்னையும் கருணைக்கொலை ‎கொல்லவேண்டியதுதானே..ஏன்யோசனை..??

அம்மாவின் இந்த வார்த்தைகள் அவனை பளார் பளாரென அறைந்தது போல் ‎இருக்க, வருந்தியவன்,” மன்னிச்சுக்கோம்மா, ஏதோ அவசரப்பட்டு ‎புத்தியிழந்துட்டேன்..இனி அப்படி யோசிக்க மாட்டேன். “ வசு, நீயும் என்னை ‎மன்னிச்சிடும்மா.” தன் நண்பனை அழைத்து லட்சுமியை விற்கப்போவதில்லை ‎என்ற தங்கள் முடிவைத் தெரிவித்து, மாட்டு வியாபாரியை வரவேண்டாம் ‎எனக்கூறினான்.

வசுமதி அத்தை பார்வதியின் கரம் பிடித்து கண்ணீர் விட, அதில் இருந்த ‎நன்றியை உணர்ந்தாள் பார்வதி.



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

லட்சுமி...‎ Empty Re: லட்சுமி...‎

Post by யினியவன் Fri Nov 30, 2012 9:52 am

நல்ல கருத்து காயத்ரி.

கொஞ்ச நாளா காணோமே உங்கள?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லட்சுமி...‎ Empty Re: லட்சுமி...‎

Post by jenisiva Fri Nov 30, 2012 12:20 pm

கதை உண்மையிலேயே நெகிழ வைத்தது . நல்லா இருக்கு . வாழ்த்துக்கள் காயத்ரி அக்கா
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

லட்சுமி...‎ Empty Re: லட்சுமி...‎

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum