புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Poll_c10தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Poll_m10தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Poll_c10 
30 Posts - 86%
heezulia
தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Poll_c10தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Poll_m10தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Poll_c10தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Poll_m10தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Poll_c10தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Poll_m10தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 13, 2009 1:19 pm

http://www.tamilkurinji.com/TN_news_index.php?id=5628


தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி

Tuesday , 13th October 2009 07:02:14 AM

சென்னை ராயப்பேட்டையில் செயல்படும் தென்இந்திய சி.எஸ்.ஐ. திருச்சபையின் (பிரதம பேராயம்)
சுனாமி நிவாரண பணியில் ரூ.7 1/2 கோடி மோசடி நடந்துள்ளதாக சென்னை மத்திய
குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி
கமிஷனர் பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு
விசாரணை நடத்தி வருகிறார்.


இந்த வழக்கில், தென் இந்திய திருச்சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியை பாலின்
சத்தியமூர்த்தி, அவரது கணவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சத்தியமூர்த்தி, மகள்
டாக்டர் பெனாடிக்டா, உறவினர் ராபர்ட் சுனில், தென் இந்திய திருச்சபையின் முன்னாள்
பொருளாளர் கஸ்தூரி ஆகியோர் மீது போலீசார் வழக்கில் குற்றம் சுமத்தியுள்ளனர்.


இவர்களில், டாக்டர் பெனாடிக்டா, ராபர்ட் சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில்
அடைக்கப்பட்டுள்ளனர். பாலின் சத்தியமூர்த்தி, அவரது கணவர் சத்தியமூர்த்தி ஆகியோர்
திருச்சியில் வசிக்கிறார்கள். அவர்களை கைது செய்ய சப்-இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு
தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று இரவு திருச்சி விரைந்தனர்.


சுனாமி நிவாரண பணியில் ரூ.71/2 கோடி அளவுக்கு மிகப்பெரிய அளவில் மோசடி நடந்தது மிகப்பெரிய
அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி எப்படி அரங்கேற்றப்பட்டது என்பது
குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவி செய்வதற்காக அமெரிக்காவில் செயல்படும் இ.ஆர்.டி. என்ற தொண்டு
நிறுவனம் ரூ.17 கோடியே 63 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. இந்த பணத்தை தென் இந்திய
திருச்சபையின் மூலம் சுனாமி நிவாரண பணிக்கு செலவிட இ.ஆர்.டி. தொண்டு நிறுவனம்
அனுமதி அளித்திருந்தது. 2005-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை சுனாமி நிவாரண
பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தென் இந்திய திருச்சபையின் செயலாளராக இருந்த
பேராசிரியை பாலின் சத்தியமூர்த்தி இந்த நிவாரண பணிகளை முன்னின்று செய்துள்ளார்.



நிவாரண பணிகளை நிறைவேற்ற அப்போதைய தென் இந்திய திருச்சபையின் பொருளாளர் கஸ்தூரி, தனது
மகள் டாக்டர் பெனாடிக்டா, கணவர் சத்தியமூர்த்தி, உறவினர் ராபர்ட் சுனில் ஆகியோரை
பாலின் சத்தியமூர்த்தி பணி அமர்த்தியுள்ளார்.



நிவாரண பணிகளை முன்னின்று செய்வதற்கு பாலின் மற்றும் கஸ்தூரியை தவிர, மற்றவர்களுக்கு மாத
சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் சம்பளம் பெற்றுள்ளார். டாக்டர் பெனாடிக்டா மாதம் ரூ.61 ஆயிரம் வீதமும், ராபர்ட் சுனில் மாதம் ரூ.89 ஆயிரம் வீதமும் சம்பளமாக வாங்கியுள்ளனர். இந்த வகையில் சத்தியமூர்த்தி ரூ.6 லட்சமும், பெனாடிக்டா ரூ.16 லட்சம் வரையிலும், ராபர்ட் சுனில் ரூ.22 லட்சம் வரையிலும் அளவுக்கு அதிகமாக சம்பள பணமாக பெற்று சுருட்டியுள்ளனர். நிவாரண
பணிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.17 கோடியே 63 லட்சம் பணமும் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான கணக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.


சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 400 வீடுகள் கட்டிக்கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், எத்தனை வீடுகள் கட்டப்பட்டன, யார்-யாருக்கு அந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதேபோல, மீனவர்களுக்கு படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த பொருட்களும் யார், யாருக்கு கொடுக்கப்பட்டது என்ற விவரம் முறையாக தெரிவிக்கப்படவில்லை. ரூ.17 கோடியே 63 லட்சத்தில் ரூ.71/2 கோடியை பாலின் சத்தியமூர்த்தி தனது பெயரிலேயே வங்கியில் இருந்து எடுத்துள்ளார். இந்த பணமும் எதற்காக செலவழிக்கப்பட்டது என்ற கணக்கு இல்லை. முறையாக கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதன்பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடந்துள்ளது. அதிலும் முறையான கணக்கு மர்ப்பிக்கப் படவில்லை. அதனால்தான் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.


தற்போது மோசடி பணத்தில் வாங்கப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள 2 போர்டு எண்டவர் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆம்புலன்ஸ் வேன் வாங்கியுள்ளனர். அது தென் இந்திய திருச்சபையிடம் உள்ளது. கைதான ராபர்ட் சுனில் கீழ்ப்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் வீடு ஒன்று வாங்கியுள்ளார். மேலும் ஸ்கேனர் கருவிகள், ஜெராக்ஸ் மிஷின்கள், டாக்டர் பெனாடிக்டா சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்திய மருத்துவ முகாமுக்காக ஏராளமான மருத்துவ உபகரணங்களும் வாங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த
பொருட்களெல்லாம் தற்போது எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. இதுபற்றியெல்லாம்
முறையான விசாரணை நடத்தப்படும்.


ஆந்திர மாநிலம் விஜயவாடா, சென்னை, கன்னியாகுமரி, சிதம்பரம் மற்றும் கேரள மாநிலத்தில்
சுனாமி நிவாரண பணிகள் நடந்ததாக கூறியுள்ளனர். அந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை
மேற்கொள்ளப்படும். பேராசிரியை பாலின் சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டால்
இதுதொடர்பாக முழுமையான விவரங்கள் தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். சுனாமி
நிவாரண பணம் முறையாக ஏழை மக்களுக்காக செலவழிக்கப்பட்டிருந்தால் அமெரிக்க
அறக்கட்டளை நிறுவனம் மேலும் பலகோடி ரூபாய் பணத்தை வாரி வழங்கியிருக்கும். தற்போது
அது தடைபட்டுவிட்டது.



இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Oct 13, 2009 1:23 pm

மோசடி செய்வதற்காகவே சிலர் பதவிகளை தேடிக்கொள்கின்றனர் அக்கா. ஒருசிலரால் நல்ல அதிகாாிகளை கூட நம்ப மறுக்கிறது மனம். என்ன கொடுமை..இதில் திருச்சபையை சேர்ந்தவர்களும் கூட ஏன் இப்படி நடக்கின்றார்கள்.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Oct 13, 2009 1:24 pm

பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்பது சரி தான் பயம்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 13, 2009 2:05 pm

வணக்கம்
உலகத்தில் மூன்று வகையான் மனிதர்கள் உளர். ஒருவர் ஆத்திகர் இறைவன் இருக்கின்றான் அவனுக்குப் பயந்து வாழ வேண்டும் என்ற நெறியாளர். இரண்டாவது நாத்திகர், கடவுள் இல்லை என்று அதில் உறுதியாக இருப்போர். மூன்றாவது ஆத்திக நாத்திகர்,. இறைவன் இருக்கிறான் என்று சொல்லி ஊரை ஏமாற்றுபவர். இவர்கள் உள்ளத்தில் இறைவன் என்ற உணர்வே இல்லாதவர்கள். இம்மூவரும் எல்லா மதங்களிலும் உள்ளனர்
அன்புடன்
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 2:07 pm

பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்பது சரி தான்

அதுக்கா இதில் கூடவா? தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி 67637 தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி 56667

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 13, 2009 2:23 pm

வணக்கம்
இதைவிடக் கசப்பான உண்மை ஒன்று (கேள்விப் பட்டது,நம்பத் தகுந்தவர்கள் மூலம்)
ஈழத்தில் ஒரு தாய் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். எறிகணைகள் விழுந்த வண்ணம் இருந்தன. தாய் வயற்காட்டில் பிரசவித்தாள், குழந்தை பிறந்தது, அதனை வீசி எறிந்து விட்டு அந்தத் தாயையும் கொன்று விட்டு அவள் கழுத்தில் இருந்த சில நகைகளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டது சிங்கள நாய்கள்
அந்தக் குழந்தை என்ன ஆனதோ, இப்பொழுது நினைத்தாலும் குலை நடுங்குகிறது,
நந்திதா

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Tue Oct 13, 2009 2:46 pm

மகா கொடுமை

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Oct 13, 2009 2:49 pm

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?


வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?


நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?


காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?


நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 13, 2009 2:52 pm

இதற்கு பதில் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ஷெரின்! கண்ணீர் ம‌ட்டுந்தான் இருக்கிறது!



தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 13, 2009 2:54 pm

வணக்கம்
தீரர்களும் வீரர்களும் சாவதில்லை தினம் உதிக்கும் சூரியனுக்கு முன்னால் துள்ளி எழுவார்கள், உடல்கள் மாறலாம் உள்ளங்கள் மாறுவதில்லை. மாற விடமாட்டோம். என் இதயமும் பேனாவும் இதற்கே உழைக்கும். ஆயிரமாயிரம் செரின்களும் தமிழ்ப்பூங்காவும் இருக்கின்றனர், அந்த உள்ளங்களே எனக்குத்துணை
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக