ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Go down

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Empty காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Post by சிவா Wed Nov 28, 2012 2:23 pm

சோழ, விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தைக் குறிக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட (கி.பி. 1101) பல அரிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட திருத்தலம், பாலூர்.

சூரியன் வழிபட்டதைக் குறிக்கும் “சூரிய புஷ்கரணி’யைக் கொண்ட இத்திருத்தலத்தின் வரலாற்றுப் பெருமையை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவில் பாலூர் உள்ளது.

திருப்பதங்காடு உடையார், திருப்பதங்காடு உடைய மகாதேவர், திருப்பதங்காடு உடைய நாயனார் என்று இத்தலத்து இறைவன் அழைக்கப்பட்டிருக்கிறார். “ஜெயங்கொண்டா சோழ மண்டலத்து ஊற்றுக்காடு கோட்டத்தைச் சேர்ந்த பழையூர் நாடு’ என்ற குறிப்பின் மூலம், இத்தலம் “பழையூர்’ என வழங்கப்பட்டிருக்கலாம் என்று அறிகிறோம்.

இரண்டு கோபுரங்கள் கொண்ட நுழைவாயிலுடன் அமைந்த கோயிலின் நந்திமண்டபம் பல்லவர் காலத்துச் சிம்மத் தூண்களைக் கொண்டதாக அழகு சேர்க்கிறது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முக மண்டபம், உற்சவ மண்டபம் என்று, பல சிறப்புகளோடு திகழும் கோயில்.


காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Empty Re: காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Post by சிவா Wed Nov 28, 2012 2:24 pm


பதங்கீசுவரர்

“பதங்கம்’ என்பது சூரியனைக் குறிக்கும் சொல். சூரியன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால், பதங்கீசுவரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். சந்நதியின் முகப்பில், கம்பாநதியின் வெள்ளப்பெருக்கிலிருந்து ஈசனின் திருமேனியைக் காத்திடும் வகையில், அன்னை சிவலிங்கத்தை தழுவிய கோலத்தை அழகுமிக்க புடைப்புச் சிற்பமாகக் காண்கிறோம்.

அன்னை வண்டார்குழலியாக, “பிரமராம்பிகை’ எனும் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளாள். நர்த்தன விநாயகர், ஆலமரச் செல்வன், அண்ணாமலையார், நான்முகன் மற்றும் துர்க்கை, கோஷ்டங்களை அலங்கரிக்கும் அரிய சிற்பங்கள். அண்மையில் குடமுழுக்கு கண்டு எழிலோடு காட்சிதருகிறது பாலூர் பதங்கீசுவரர் திருக்கோயில்.


காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Empty Re: காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Post by சிவா Wed Nov 28, 2012 2:24 pm



ஆத்தூர்

செங்கல்பட்டிலிருந்து பாலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள தலம், ஆத்தூர். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் உருவான சிவாலயம் இங்குள்ளது. சிருஷ்டிலிங்கமாக முக்தீசுவரர் எழுந்தருளியுள்ளார். அன்னை அறம் வளர்த்த நாயகியாக அருள்பாலிக்கிறாள். ஆத்தூரைச் சுற்றிலும் உள்ள வயல்வெளிகளில் இருந்த மேலும் இரண்டு சிவலிங்கத் திருமேனிகளையும் உரிய இடங்களில் நிறுவி, திருப்பணிகள் செய்து குடமுழுக்கு ஆற்றியுள்ளனர் ஆத்தூர் கிராமத்து மக்கள். பாராட்ட வேண்டிய பணி இது!

செங்கல்பட்டு நகரத்திலும் சிவாலயங்கள் உள்ளன. காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் அவற்றுள் குறிப்பிடப்பட வேண்டியவை. கோதண்ட ராமசுவாமி மற்றும் கைலாசநாதர் கோயில்கள் முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.


காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Empty Re: காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Post by சிவா Wed Nov 28, 2012 2:24 pm


புலிப்பாக்கம்

செங்கல்பட்டுக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது புலிப்பாக்கம். புலிவனம், புலிவாய், புலியூர் என்று அடைமொழியோடு வரும்போதே, புலிக்கால் முனிவர் வழிபட்ட திருத்தலம் என்று கொள்ளலாம். அங்கே யோகமலையில் வியாக்ரபுரீசுவரர் எழுந்தருளியுள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாராயணி அம்மன் சிலையுடன் பரிவார தேவதைகள் திருமேனிகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கும் சிறப்பாக நடந்தேறியது.

யோகமலை அடிவாரத்தில் ஐந்தடி உயரங் கொண்ட முருகப்பெருமான் சிலையும் கண்டறியப்பட்டு, உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வள்ளி, தெய்வானை சகிதம் கந்தசுவாமி முகம் மலர்ந்து, பக்தர்களுக்கு அருள் வரம் தந்து கொண்டிருக்கிறார்.


காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Empty Re: காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Post by சிவா Wed Nov 28, 2012 2:25 pm


பொன் விளைந்த களத்தூர்

கடல்மல்லையிலிருந்து களத்தூருக்கு வந்தவர் லட்சுமி நரசிம்மப் பெருமாள். அதுதான் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அதிசயம்! எங்கே நிகழ்ந்ததோ, அங்கே விளைநிலத்தில், “பொன் கதிர்கள்’ நிறைந்த அதிசயமும் நிகழ்ந்ததாம். அந்தத் திருத்தலம்தான் பொன் விளைந்த களத்தூர்.

அதுமட்டுமா! நளவெண்பா எழுதிய புகழேந்திப் புலவர், படிக்காசு தம்பிரான், கூற்றுவநாயனார், அந்தகக்கவி வீரராகவ முதலியார், ஆறுமுகப் பாவலர் போன்றோரைப் பெற்றெடுத்த தலமும் இது! செங்கல்பட்டு-திருக்கழுங்குன்றம் சாலையில் 10 கி.மீ.

கடல்போல நீண்டிருக்கும் ஏரி, தாமரைமலர்கள் நிரம்பிய தடாகங்கள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென நெல் வயல்கள் சூழ, எழிலோடு விளங்கும் ஊர்தான் அது! அதனால்தான் கவிஞர்கள் போற்றும், “பொன் விளையும் பூமி’ என்பதை, தன் பெயராக்கிக் கொண்டதோ! அதுதான் இல்லை. குதிரை மேய்ந்த விளைந்த நிலத்தில், விடியலில் “பொன் கதிர்கள்’ நிரம்பி வழிந்த அதிசயம் நிகழ்ந்த திருத்தலம் இது! அதுவே இதன் தல வரலாறாகும்.

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மெய்சிலிர்க்கும் சம்பவம் இது! கடல்மல்லையில் தலசயனப் பெருமாள் கோயிலின் உற்சவராக சுற்றுப் பிராகாரத்தில் இருந்தவர்தான் களத்தூர் லட்சுமி நரசிம்மப் பெருமாள். ஏற்கெனவே அப்பகுதியில் ஆறு ஆலயங்கள் கடலில் மூழ்கிய நிலையில், ஒரு வயோதிகரின் கனவில் “அழகிய சிங்கர்’ தோன்றி, “விடிந்ததும், வானில் காணும் பட்சிராஜன் செல்லும் பாதையில் செல்க! எங்கே அது தரையைத் தொடுகிறதோ, அங்கே எனக்கு ஒரு சந்நதி எழுப்புங்கள்!’ என்று பணித்தார்.

விடிந்ததுதான்! மல்லைக் கோயில் முன் மக்கள் வெள்ளம் திரண்டது. செவிவழிச் செய்தி கேட்டு, கலியுக அதிசயம் காணத்தான் மக்கள் குழுமினர். மெல்லிய தூறல், புஷ்பமாரி போல பொலிவுற்றது. அனைவரும் வானத்தை நோக்கிட, கருடன் மூன்று முறை அவ்விடத்தைச் சுற்றிவிட்டு, மேற்குதிசை நோக்கிப் பறந்தது. கருடன் சென்ற பாதையில், ஊரார் லட்சுமி நரசிம்மரைத் தோளில் சுமந்த வண்ணம் ஓடினர். களத்தூர் வைகுந்தப்பெருமாள் ஆலயத்தின் கருவறை விமானத்தில் வந்து அமர்ந்தது கருடன்.

பக்தர்கள் கூட்டம், “நாராயணா! நாராயணா!’ என்று கோஷமிட்டது. வைகுந்தப் பெருமாள் கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு இடம் கொண்ட வரலாறு இதுதான்!

ஊரில் நடுவே, ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் வரவேற்கிறது கோயில். கொடிமரம், நாலுகால் மண்டபம், கல்யாண மண்டபம், கண்ணாடி அறை போன்ற அத்தனை அம்சங்களும் கொண்டது. வைகுந்தவாசப் பெருமாள், ஐந்து தலை நாகர் குடைபிடிக்க, சாளக் கிராம மாலையோடு அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். திருமகள், நிலமகள் அருகில் இருக்க, சுந்தரமூர்த்தியாக கடல் மல்லையிலிருந்து வந்து குடியேறிய லட்சுமி நரசிம்மப் பெருமாளும், நவநீதகிருஷ்ணன், சாளக் கிராமங்கள், வலம்புரி சங்குகள் சந்நதியை அலங்கரிக்கின்றனர்.

அஹோபிலவல்லித் தாயார், தனி சந்நதி கொண்டுள்ளார். உற்சவரான அஹோபில வல்லித் தாயார் வெள்ளித் தாமரை பீடத்தில் அமர்ந்திருக்க, இருபுறமும் கஜராஜர்கள் அலங்கரிக்கின்றனர். ஆண்டாள், ராமர், ஹயக்ரீவர், ஆழ்வாராதிகளுக்கும் தனி சந்நதிகள் உள்ளன.


காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Empty Re: காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Post by சிவா Wed Nov 28, 2012 2:25 pm


சுவர்ணபுரியில் பொன் விளைந்த கதை!

வைணவத் திலகமான சுவாமி நிகமாந்த தேசிகர், தென்னாட்டு யாத்திரையின்போது, இத்திருத்தலத்தில் தங்கினார். அவருடைய யாத்திரைக் குழுவில் ஒரு வெள்ளைக் குதிரையும் உண்டு. தன்னுடன் பூஜைக்கான ஹயக்ரீவ மூர்த்தியையும், சாளக்கிராமத்தையும் அவர் எடுத்துச் செல்வது வழக்கம்.

அன்றிரவு அவருடன் வந்திருந்த குதிரை, கிராமத்து விளைநிலத்தில் நெற்பயிர்களை மேய்ந்துவிட்டது. விவசாயிகள் ஒன்றாகத் திரண்டு வந்து தேசிகரிடம் முறையிட்டனர்.

பூஜையை முடித்துவிட்டு பக்தர்களுக்கு தேசிகர் அருளாசி வழங்கியபோது, ஓடிவந்த விவசாயி ஒருவர், நெற்பயிர் அனைத்தும் பொன் கதிர்களாக மாறியதோடு குதிரை சென்ற இடமெல்லாம் பொன்னாகிவிட்டதாகத் தெரிவித்தார். இது, தான் வழிபடும் ஹயக்ரீவப் பெருமாளின் செயலே என்று விளக்கினார் தேசிகர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு களத்தூர் கிராமம், பொன் விளைந்த களத்தூர் எனும் சிறப்பு பெயரைப் பெற்றது. அருகில் கோதண்ட ராமசுவாமிக்கு தனிக்கோயிலம், அண்மைக் காலத்தில் உருவான தலசயன ராமர் கோயிலும் உள்ளன.


காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Empty Re: காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Post by சிவா Wed Nov 28, 2012 2:25 pm


சிகாநாதர் சிவாலயம்


சிரசில் முன்குடுமியோடு காட்சி தரும் சிகாநாதர் அருள்பாலிக்கும் திருக்கோயில், ஊரின் எல்லையில் பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். கருவறை விமானம் “கஜ ப்ருஷ்டம்’. கூற்றுவ நாயனார் திருப்பணி செய்த திருக்கோயில்.

பஞ்சமூர்த்தி திருவுலாவில், கூற்றுவநாயனார், சண்டி கேசுவரரின் இடத்தில் பவனி வருவது தனிச்சிறப்பு.

திரிபுரசுந்தரி அம்மனோடு அருள்பாலிக்கும் வாலீசுவரருக்கும் தனியே கோயில் உள்ளது. வாலி வழிபட்ட தலம்.

பொன் விளைந்ததைப் பார்த்துவிட்டோம் அருகிலிருக்கும், பதர் விழுந்த தலத்திற்குச் செல்ல வேண்டாமா? அங்கே என்ன சிறப்பு?


காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Empty Re: காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Post by சிவா Wed Nov 28, 2012 2:26 pm


பொன்பதர்க்கூடம்


பொன் விளைந்த களத்தூரில் பொன்னாக மாறிய நெற்கதிர்களை களத்தில் கூற்றியபோது, பொன் பதர்கள், இரண்டு கி.மீ. தொலைவிலுள்ள ஊர் வரை சென்று விழுந்ததாம். அவை விழுந்த தலம்தான் பொன்பதர்க்கூடம். அடுத்தடுத்து உள்ள கிராமங்களும் காரணப் பெயரைக் கொண்டு எடையூர் (எடை போட்ட இடம்) தாளூர் (அளந்த இடம்) என்று விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.

நான்கு கரங்களுடன் ஸ்ரீராமன்

ராமகாதையில் ராமபிரான் இருகரங்களோடு மனித உருவில் கோதண்ட பாணியாகத்தானே காட்சி தருகிறான். அப்படியிருக்க சதுர்புஜ ராமனாக, சங்கு சக்கரமேந்தியபடி சேவை சாதித்தது எப்போது? அதற்கு விடை தருகிறது பொன்பதர்க்கூடம்! செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம்.

தேவராஜ மகரிஷியின் பக்தியினால் உருவான தலம். அதற்குச் சான்று கூறுவதாக அமைந்தது தேவராஜ புஷ்கரணி. ஆதிசேஷன் வழிபட்ட தலம். அதை நினைவூட்டுவது சேஷ தீர்த்தம்.

பொன்பதர்க்கூடத்தில் ஸ்ரீராமபிரான், சங்கு சக்கரமேந்தியபடி நான்கு கரங்களுடன் சதுர்புஜராமனாகக் காட்சி தருகிறார். அதே நேரத்தில், இப்படி நான்கு கரங்களோடு சாட்சாத் மகாவிஷ்ணுவாகவே ராமன் நான்கு தருணங்களில் காட்சி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவை எப்போதெல்லாம்?

முதலில், தனது தாயார் கோசலைக்கு! பெற்றவளுக்குத்தானே முதல் உரிமை! சக்கரவர்த்தித் திருமகனாக, அரண்மனையில் ராஜபோகத்தில் வாழ்ந்த பிள்ளை மரவுரி தரித்து கானகம் செல்ல முற்பட்டபோது, அவள் கலங்கினாள். வனத்தில் எத்துணை துன்பங்களை அவன் அனுபவிக்கப்போகிறானோ என அவளது தாயுள்ளம் தவித்தது. தனக்கு மகனாகப் பிறந்த ராமன் ஒரு தெய்வீகக் குழந்தை என்பதை மட்டும் கோசலை உணர்ந்திருந்தாள். அவன் அனுபவிக்கப்போகும் கஷ்டங்களை மனதில் நினைத்து கண்களை மூடிக் கொண்டாள். அப்போது சங்கு சக்ரதாரியாக அபய வரதனாக, நான்கு கரங்களோடு மகாவிஷயணுவாகக் காட்சி தந்த ஸ்ரீராமனை தன் அகக் கண்களினால் ரசித்து ஆனந்தம் கொண்டாள்.

“அரியணை உனக்கு இல்லை. ஆரண்ய வாசம் பதினான்கு ஆண்டுகள்’ என்று தசரதன் கட்டளையிட்டதாக சிற்றன்னை கைகேயி கூறியபோது, எந்தவித தடுமாற்றமுமில்லாமல் புன்சிரிப்போடு அதனை ராமன் எப்படி ஏற்றுக் கொண்டான்?

இந்தக் கேள்வி சிதையின் உள்மனதைத் துளைத்தெடுத்தது! அவளது திகைப்பை நீக்கிட விரும்பிய ராமபிரான், அப்போது சீதாபிராட்டிக்கு தனது திருக்கோலத்தைக் காட்டினாராம். ராமனுக்குப் பதிலாக நாராயணன் நிற்பதைக் கண்ணுற்ற சீதாப்பிராட்டி சஞ்சலம் தெளிந்தாள்.

ராமதூதனாக இலங்கைக்குச் சென்று, அசோகவனத்தில் சீதையைக் கண்டு சூடாமணியைப் பெற்றுக் கொண்டு வரும் வழியில் லங்கா தகனத்தையும் முடித்த ஆனந்தத்தோடு “கண்டேன் சீதையை!’ என்று ராமபிரானிடம் கூறியபோது, ராமபிரான், அனுமனுக்கு சதுர்புஜனாகக் காட்சி தந்தாராம்.


காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Empty Re: காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Post by சிவா Wed Nov 28, 2012 2:26 pm



திரிசடை பெற்ற பெரும் பேறு!

விபீஷணனின் குமாரி திரிசடை, தந்தையைப் போலவே நற்குணம் கொண்டவள். அரக்கிகள் அன்னை சீதாப்பிராட்டியை சூழ்ந்திருந்தபோது, அவள் ஒருத்தியே ஆதரவாக நின்றாள். அவளுக்கு ஒரு சந்தேகம்! தனது சகோதரன் ராவணனையே பகைத்துக் கொண்டு ராமனிடம் சரணடையுமளவிற்கு ராமனிடம் என்ன ஈர்ப்புச் சக்தி இருக்கக்கூடும் என்று வியந்தவள் அவள். அப்படித் திகைத்த காலத்தில், ராமபிரானின் குணாதிசயங்களை விபீஷணன் விளக்கியபோது திரிசடையின் மனக்கண்ணில் தோன்றியது, ராமனின் சதுர்புஜக் கோலம்!

இதேபோல, மண்டோதரிக்கும் இலங்கேசன் ராவணனுக்கும்கூட ராமபிரான் மகாவிஷ்ணுவாகக் காட்சி தந்துள்ளார். சுந்தரகாண்டம் 27வது சர்க்கம் கூறும் விவரம் இது!

இத்தனை சிறப்புகளையும் கொண்ட சதுர்புஜ ராமனின் திருக்கோலம் தன்னிடம் நிலைத்திருக்க, பொன்பதர்க்கூடத்து மக்கள் என்ன புண்ணியம் செய்தனரோ!

மூலஸ்தானத்தில் சீதாதேவி, லட்சுமணருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீராமபிரான். எதிரே பவ்ய ஆஞ்சநேயர் சந்நதி, சதுர்புஜ ராமனாக, உற்சவமூர்த்தியாக சங்கு, சக்கரமும், வில்லும் அம்புமேந்தியபடி காட்சி தருகிறார். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அத்தனையையும் அருள்பாலிக்கும் நான்கு திருக்கரங்கள் அவை! அருகில் வினயபாவத்துடன் நின்றகோலத்தில் நாம் காணும் அனுமனின் திருமேனி அற்புதம்!

“பிரபட மகாதேவராஜபுரம்’ என்று அழைக்கப்பட்ட திருத்தலம் பொன்பதர்க்கூடம். திருமால் சுற்றுலா திட்டத்தினுள் இணைக்கப்பட்டுள்ள சிறப்பையும் பெற்றுவிட்டது “பொன்பதர்க்கூடம்’. திவ்யதேசமாக இல்லாவிடினும் அபிமானத் திருத்தலம் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது பொன்பதர்க்கூடம் என்று கூறினால் மிகையாகாது.


காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Empty Re: காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Post by சிவா Wed Nov 28, 2012 2:29 pm


திருஇடைச்சுரம்


“சுரம்’ என்பதற்கு பாலைவனம் என்றும் காடுவழி என்றும் பொருள் இத்திருத்தலம் இடம்பெற்றுள்ள பகுதி முழுவதுமே மலைகளின் நடுவே கற்சுரத்தில் அமைந்துள்ளதால் இப்பெயர் நிலைத்தது. மக்கள் “திருவடிசூலம்’ என்று அழைக்கின்றனர். செங்கற்பட்டு-திருக்கழுங்குன்றம் சாலையில் 5 கி.மீ. பயணித்து, அங்கிருந்து வடக்கே திரும்பி திருப்போரூர் செல்லும் சாலை வழியே சென்று இத்தலத்தை அடையலாம். உள்ளடங்கிய சாலையில் சென்று திருக்கோயிலை அடைகிறோம்.

கௌதம முனிவரும் சனத்குமாரரும் வழிபட்ட தலம். திருஞான சம்பந்தர், அப்பர் பெருமான் பாடல்கள் பெற்ற தேவாரத் திருத்தலம். கிழக்கு நோக்கிய கோயில் முன்னே “மதுர தீர்த்தம்’ உள்ளது. கோயிலுக்குள்ளே நுழையும் பாதை தெற்கே உள்ளது. ராஜகோபுரம் இல்லை. மொட்டைக் கோபுரத்தின் வலப்புறம் வரசித்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார். இரண்டு பிராகாரங்கள் கொண்ட கோயில்.

தொலைவிலிருந்து காணும்போதே, மூலவர் திருமேனியின் பொலிவைக்கண்டு அதிசயித்து, தனது ஒவ்வொரு பாசுரத்தின் முடிவிலும் “இடைச்சுரம் மேவிய இவர் வண்ணம் என்னே!’ எனப் புகழ்ந்துள்ளார். வெளிச்சுற்றில், விநாயகர், தலவிருட்சம் பாதிரிமரம், பிரம்மாண்டேசுவரி, பிரம்மாண்டேசுவரர், முருகப்பெருமான் சந்நதிகளும் இந்திர தீர்த்தமும் உள்ளன. கொடி மரத்தையும் மகாநந்தியையும் கடந்து உள்சுற்றில் நுழைவோம். நேராக மூலவர் இடைச்சுரநாதர் சந்நதியை அடைகிறோம். பெரிய திருமேனி. பளிச்சிடும் பச்சை வண்ண மரகதத் திருமேனி. கற்பூர தீப ஒளியில் பிரதிபலிக்கும் அற்புதம்! சதுரபீடத்தில் அமைந்த திருமேனி. ஞானபுரீசுவரர் என்றும் இடைச்சுரநாதர் என்றும் திருநாமங்கொண்டுள்ளார்.

மகாமண்டபத்தில் தெற்குநோக்கிய சந்நதி கொண்டு அன்னை நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். அழகு தமிழில் அவளது திருநாமம் இமயமடக் கொடியம்மை. ஆவுடைநாயகி என்று பொருள்படும். கோவர்தனாம்பிகை என்பது வடமொழிப் பெயர்.

சோழர்கள் காலத்தில் கற்றளியாக உருவாகி நாளடைவில் விரிவுபெற்றது. குலோத்துங்க சோழதேவன் ஆட்சியில் திருவிடைச்சுரமுடைய நாயனார் என்று குறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. “ஜெயங்கொண்ட சோழ மண்டலத்திலுள்ள களத்தூரக் கோட்டத்தின் பகுதியான வளநாட்டிலுள்ள திருவிடைச்சுரம்’ என்ற குறிப்பு இதன் தொன்மையைக் காட்டுகிறது.

- மயன்


காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Empty Re: காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum