ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

Top posting users this week
ayyasamy ram
விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Vote_lcapவிவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Voting_barவிவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Vote_rcap 
heezulia
விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Vote_lcapவிவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Voting_barவிவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

+4
அகிலன்
Rajan Hamanthkumar
ரா.ரமேஷ்குமார்
கரூர் கவியன்பன்
8 posters

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by கரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 9:44 pm

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

இப்பதிவை கேள்வி-பகுதி பகுதியில் பதிவிட்டுருக்கலாம் என தோன்றலாம், இருப்பினும் இத்திரியை ஒரு விவாதமேடையாக கொண்டு செல்ல விழைகிறேன்.தங்களின் ஆதரவு அதற்கு நல்குகிறேன்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)


Last edited by கரூர் கவியன்பன் on Mon Nov 26, 2012 9:53 pm; edited 1 time in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty மாமன், அத்தை வகை மகன்/மகள்களை மட்டுமே திருமணம் செய்யும் வழக்கம் இருந்துவருகிறதே ஏன் அப்படி ?

Post by கரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 9:51 pm

முதல் விவாதமாக நானே ஆரம்பிக்கிறேன்.என் மனதில் நீண்ட நாட்களாக எழும் கேள்வி அது.

நமது உறவுமுறைகளில் மாமன், அத்தை வகை மகன்/மகள்களை மட்டுமே திருமணம் செய்யும் வழக்கம் இருந்துவருகிறது. ஏன் அப்படி ? குறிப்பிட்ட வகையிலான உறவுகளுக்கு மட்டும் அவ்வாறு குறிப்பிட காரணம் என்ன?

இனி இது உங்கள் கருத்துகளுக்கான இடம். பகிருங்கள் உங்கள் எண்ணங்களை...........
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty Re: விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2012 10:04 pm

நண்பரே குலங்கள் அல்லது கூட்டங்கள் என்று சில வகைகள் உள்ளது.குலங்கள் ஒன்றாக இருப்பவர்களை பங்காளிகள் என்று சொல்லுவார்கள்.ஒரே குல மக்கள் அனைவரும் அண்ணன்,தம்பி,தங்கை,அக்கா,சித்தப்பா பெரியப்பா என உறவு முறையாக ஒரே பகுதியில் வசித்து வந்தவர்கள் காலத்தின் கட்டாயத்தாலும் சூழ்நிலைகளாலும் அவர்கள் பிரிய நேரிட்டது.எந்த காலகட்டத்திலும் அண்ணன் தங்கைக்கு திருமணம் நடக்க கூடாது என்ற காரணத்தால் பங்காளிகள்என்று பிரித்தார்கள்.இதனால் தான் மாமன்,அத்தை மகன்/மகளை திருமணம் செய்து வைக்கிறார்கள்...


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092

Back to top Go down

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty Re: விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by Rajan Hamanthkumar Mon Nov 26, 2012 10:23 pm

:வணக்கம்: . இந்த தளத்தில் இணைந்து நன்றிக்கு அடுத்த என் முதல் பதிப்பு இது அப்பாவின் உடன் பிறந்த சகோதரியோ(அத்தை) , அம்மாவின் உடன் பிறந்த சகோதரனோ(மாமன்) அவர்கள் திருமணத்திற்க்கு பின் தங்கள் வாழ்க்கயின் பொருட்டு பெரிய இடைவெளி ஏற்படுகிறது அந்த உறவை வலுபடுத்த இந்த உறவு முறைத் திருமணம் செய்யபடுகிறது மட்டும் இன்றி அத்தைகோ மாமனுக்கோ ஆண் வாரிசு இல்லாத நிலையில் இந்த உறவுகள் மட்டுமே உரிமையோடும் அன்போடும் அவர்களை பார்த்துக் கொள்வார்கள் என்பது என் எண்ணம்.. :வணக்கம்:
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty Re: விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by கரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 11:03 pm

தங்கள் இருவரின் கருத்துகளுக்கும் நன்றி:

எந்த காலகட்டத்திலும் அண்ணன் தங்கைக்கு திருமணம் நடக்க கூடாது என்ற காரணத்தால் பங்காளிகள்என்று பிரித்தார்கள்
.

அது சரி. அப்படியொரு காரணம் இருப்பின் அந்தக்காரணம் யாதென்று அறியத்தாருங்கள் ரமேஷ்

தற்போது நாத்தனார் (நாற்றானவள்) என்ற காரணப்பெயர்கள் தான் நம் உறவுகளுக்கு முன்னோர் இட்டுள்ளனர் அவ்வாறு இருக்கையில் மாமன்/அத்தை என்பதற்கும் காரணம் இருந்தாகவேண்டுமல்லாவா ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty Re: விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2012 11:09 pm

உடன் பிறந்தவர்களுக்குள் திருமணம் செய்ய கூடாது என்பது நமது கலாச்சாரம்...


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092

Back to top Go down

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty Re: விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by அகிலன் Tue Nov 27, 2012 4:12 am

மாமன், அத்தை வகை மகன்/மகள் உறவுகள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் எமது சமுதாயத்தில் இல்லை. ஆனால் சகோதர உறவுகள் திருமணம் செய்துகொள்ள கூடாது என்பது கட்டாயம். மற்றப்படி யாரும் யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
மதிப்பீடுகள் : 398

http://aran586.blogspot.com

Back to top Go down

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty Re: விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by சதாசிவம் Tue Nov 27, 2012 10:35 am

ஒரு வயிற்றில் பிறந்த ஆண், பெண் இணைவதில் பிறக்கும் சந்ததி பலமற்றதாக இருக்கும். காட்டுவாசியாக வாழ்ந்த மனிதன் இயற்கையில் கற்றுக்கொண்ட பாடம் இது. மனிதன் மட்டுமல்ல ஒரே மரத்தில் ஆண் பூ , பெண் பூ ஒரே நேரத்தில் பருவம் அடைந்து மகரந்தத்தை வெளியிடுவதில்லை. ஒரு சில கால இடைவெளியில் தான் இது நடைபெறுகிறது. இக்கால இடைவெளியில் வேறு மரத்தில் பூத்த மலர்களின் மகரந்தத்தால் சூல் கொள்கிறது. அப்பொழுது தான் பிறக்கும் வித்து வீரியமானதாக இருக்கும். இவ்வழக்கத்தில் வந்தது தான் அண்ணன், தங்கை வழக்கம். அக்காலத்தில் பெண்களுக்கு சொத்து கிடையாது, சொத்துக்கு உரியவன் ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிசு தான். இந்நிலையில் குடும்பத்தில் பிறக்கும் பெண்ணுக்கு பாதுகாப்பாகவும், அவள் வழி உறவுமுறை மீண்டும் உரிமை கொண்டாடி சொத்துகள் ஒரு கட்டுக்குள் இருக்க செய்த ஏற்பாடு இவை. சில மதங்களில் ஆண் போல் பெண்ணும் சொத்துக்கு உரியவள் அவளுக்கு என்ன பங்கு கொடுக்க வேண்டும் என்ற வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் சாய்ஸ் அவர்கள் கையில், உடன் பிறந்த சகோதரன், அல்லது சகோதரி பிள்ளைகளை மனம் முடிக்கலாம்.

இந்திய அரசியல் சட்டத்தில் எந்த எந்த உறவு முறை திருமணம் செல்லாது என்று சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒருவன் அவன் பெற்ற தாயை, அவள் உடன் பிறந்தவளை மனம் முடிக்க முடியாது, அது போல் அவன் மாமியார், மகளை மனம் முடிக்க முடியாது. உடன் பிறந்தவளை மனம் முடிக்கமுடியாது. இப்பட்டியல் இன்னும் நீளுகிறது. இன்னொரு தகவல் ஒருவன் ஒருவளை (விதவையை) திருமணம் செய்து அவளை தீண்டாத பட்சத்தில் அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவளுக்கு ஓரு மகள் இருந்தால் அவளை திருமணம் செய்யலாம் என்றும் சில மதங்கள் கூறுகிறது.

அடிப்படையில் வீரியமான வாரிசு, தன் இனக் கூட்டம் மேல் உள்ள அக்கறை, இனவிருத்தி ஆகியவை தான் இந்த ஏற்பாடுகளின் பின்னணி. ஒரு இனம் தொடர்ந்து தாக்கப்படுமானால், அதில் உள்ள மக்கள்தொகை பெருக்க எல்லா வகை விதிவிலக்குகளும் அளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு இனமும், மதமும் தங்கள் மக்கள் தொகையை நிலைநாட்ட சில வழிமுறைகளை வைத்து இருக்கிறது. இதில் சரி தவறு என்று எதுவும் இல்லை. Cross breed என்று விலங்கிலும், தாவரத்திலும் உள்ளவை அதன் சராசரி வாரிசுகளை விட பலம் மிக்கதாகவே உள்ளது. நம் புராணங்களிலும் இது போன்ற பல Cross breed கதாபாத்திரங்களைப் பார்க்கலாம். இவை அனைத்தும் மற்றவர்களை விட பலசாலிகள், திறமைசாலிகள்.

இன்றைய மருத்துவ அறிவுரைப்படி உறவுமுறைத் திருமணத்தில் பிறக்கும் குழந்தை சற்று பலம் குறைந்ததாகத் தான் பிறக்கும், பரம்பரை நோய்கள் தொடர வாய்ப்பு அதிகம்.
Last edited by சதாசிவம் on Tue Nov 27, 2012 3:44 pm; edited 1 time in total
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty Re: விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by கரூர் கவியன்பன் Tue Nov 27, 2012 9:08 pm

பல புதுகருத்துகளை காண்கிறேன். பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றி.இது பலருக்கு பயனுள்ள புரிதலை ஏற்படுத்தி இருக்கும்.

வரும்காலங்களில் இன்னும் பல நற்கருத்துகள் பிறப்பெடுக்கும் என நம்புகிறேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty Re: விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by சிவா Tue Nov 27, 2012 9:46 pm

மாமன் மகள்/மகன், அதாவது தாயுடன் பிறந்த சகோதரன் மகள்:

இவரது இரத்தக்கூறு நம் தாயுடன் சிறிதும் தொடர்பற்ற மாமன் மனைவியின் மூலம் கிடைக்கப்பெற்றது. எனவே உறவு முறையில் திருமணம் என்றால் மாமன் மகள் திருமணம் செய்ய ஏற்றவராகிறார். ஆனால் அக்கா மகளைத் திருமணம் செய்யும் முறை எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை. எங்களில் அப்பழக்கம் இல்லை!

அத்தை மகள்/மகன்:

நம் உடலில் உள்ள இரத்தக்கூறு நம் தாயை அடிப்படையாகக் கொண்டது! எனவே தந்தையின் சகோதரி மகளைத் திருமணம் செய்தால் அதில் ஒரே இரத்தக்கூறு இணைவதற்கான சாத்தியம் இல்லை.

இதைத் தவிர ஒரே குலத்தில் திருமணம் செய்வதற்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது ஒரு குலத்தில் பல பிரிவுகள் இருக்கும். அதைக் கிளை எனக் கூறுவர். ஒரே கிளையுள்ள ஒரு ஆணும் பெண்ணும் சகோதர உறவு எனப் பொருள்படும். திருமணத்திற்கு பெண் தேடும் பொழுது முதலில் அவர்கள் என்ன கிளை எனக் கேட்டுத்தான் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையைத் துவங்குவர். இங்கும் ஒரே இரத்த சம்பந்தம் தவிர்க்கப்படுவதற்காகவே இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.

தாயும் தந்தையும் வேறு வேறு கிளை, ஆனால் குழந்தைக்கு தாயின் கிளைதான் கூறப்படும். காரணம் அக்குழந்தைக்கு தாயின் இரத்தக்கூறு மிகுந்திருப்பதுதான் காரணம்.

விஞ்ஞானம் அறியாத காலத்திலேயே நம்மவர்கள் ஒரே இரத்த உறவில் திருமணம் செய்வது தவறானது என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty Re: விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by ரா.ரா3275 Fri Nov 30, 2012 8:45 pm

சொந்தத்துல கண்ணாலம் பண்ணலேன்னு வெட்டுக் குத்து நடக்குற இந்த சமயத்துல நல்ல போட்டீங்கப்பா ஒரு பதிவு...
புதுசா புதுசா கருத்துக்கள போட்டுத் தாக்குங்க மக்கா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty Re: விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by nikky Wed Apr 03, 2013 2:51 pm

ஐயா,
உடன் பிறந்த பிறப்புகளை எக்காரணம் கொண்டும் தவறான கண்ணோட்டம்(பாலுணர்ச்சி) கொண்டு பார்பது உறவை கொச்சை படுத்துவது போன்று. ஒரே கருவறையில் பிறந்தவர்கள் ஒன்று சேர்வது என்பது இரண்டு ஒரே மாதிரியான துருவங்களை இணைக்க முயற்சிப்பது போன்று ... சகோதர சகோதிரி உறவு ஒரே தொப்புள் கொடியில் மலர்ந்தது .... மலரை கொண்டு மலரை கட்டமுடியாது நார் கொண்டு கட்டினால் தான் மலருக்கும் பெருமை.. நாருக்கும் பெருமை... நடனம்
nikky
nikky
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Empty Re: விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை