ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
VENKUSADAS
ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
VENKUSADAS
ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

4 posters

Go down

ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Nov 26, 2012 9:23 pm

ஹைகூ வானம்

நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் 93.சி .வி .ஆர் .தெரு ,சின்ன காஞ்சிபுரம் .631501 செல் 9894809812.

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அன்னை ராஜேஷ்வரி பதிப்பகம் ,41.கல்யாண சுந்தரம் தெரு ,பெரம்பூர் ,சென்னை .11 விலை ரூபாய் 60

நூலின் அட்டைபடமே நூலை வாங்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் மிக நேர்த்தியாக உள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர்
வீ .தங்கராஜ் அவர்களின் இரண்டாவது நூல் இது .முதல் நூலான குறிஞ்சிப்பூக்கள் நூலின் மூலம் பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட,பாராட்டப்பட்ட கவிஞர் .முதல் நூலில் ஹைக்கூ ,புதுக் கவிதை ,மரபுக் கவிதை மூன்றும் இருந்தது .இந்த நூலில் ஹைக்கூ கவிதைகள் மட்டும் இடம் பெற்றுள்ளது .தள்ளாத வயதிலும் தளராத தேனீ இவர் .இவரது ஹைக்கூ வராத சிற்றிதழே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .குறுந்தகவல் இதழ்கள் பல இயங்கி வருகின்றன .அவற்றிலும் ஹைக்கூ கவிதைகள் பங்களிப்பு செய்து வருபவர் . ஒய்வு அறியாத உன்னத படைப்பாளி .

இந்நூலை ஹைக்கூ அன்னை முனைவர் தி .லீலாவதி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் ,பேராசிரியர் மித்ரா , 55 வருடங்கள் நன்பர் கவிஞர் பழனி எழில்மாறன் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக உள்ளது .ஹைக்கூ கவிதை ரசிகர்களுக்கும் , ஆய்வாளர்களுக்கும் ஹைக்கூ விருந்தாக உள்ளது .இந்நூலிற்கு பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கும் தகுதி உள்ளது.

அணுவுக்குள் அண்டம்
மூவடிக்குள் ...
ஹைகூ வானம் !

என்ற முதல் ஹைக்கூ கவிதையே நூலின் சிறப்பை பறை சாற்றுவதாக உள்ளது .பாராட்டுக்கள் .

இயற்கையைப் பற்றி ஹைக்கூ கவிதை எழுதுவதில் ஜப்பானிய கவிஞர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல தமிழ்க்கவிஞர்கள் என சவால் விடும் வண்ணம் ஹைக்கூ வடித்துள்ளார் .இயற்கையை உற்று நோக்கி ,ரசித்து ,ருசித்து ,ஒன்றி ஹைக்கூ படைத்துள்ளார் .நூலில் உள்ள அத்தனை ஹைக்கூவும் பிடித்தாலும், பதச்சோறாக சில மட்டும் தங்கள் ரசனைக்கு மேற்கோள் காட்டி உள்ளேன் .

நகராத சூரியன்
கிழக்கிலும் மேற்கிலும்
நகர்த்தும் பூமி !

சூரியன் நகர் வில்லை பூமிதான் சுற்றுகிறது என்ற அறிவியல் செய்தியை ஹைக்கூவில் உணர்த்துகின்றார் .

நிலாவை பாடாத கவிஞரே இல்லை .இவரும் பாடி உள்ளார் .ஆனால் இவரது பார்வை மிகவும் வித்தியாசமானது .பாருங்கள் .

மீனுக்கு இரையாகாமல்
மிதக்கிறது அப்பம்
குளத்தில் நிலா !

இந்த ஹைக்கூவை திருபவும் ரசித்துப் படித்தேன் .நம் கண் முன் இயற்கையை காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

நாம் மலையில் இருந்து கிழே பார்த்தால் கிழே உள்ளவை மிகவும் சிறிதாகவே தோன்றும் .ஹைக்கூ என்பது ஒரு உணர்வு படைப்பாளி தான் உணர்ந்ததை வாசகருக்கும் உணர்த்துதல் .

மலை ஏற ..ஏற
தெருவெல்லாம்
தீப்பெட்டி வீடுகள் !

மனிதர்கள் கவிதை எழுதுவார்கள் படித்து இருக்கிறோம். நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் அவர்களின் கற்பனையில் மேகமும் கவிதை எழுதுகின்றது பாருங்கள் .

மேகம் எழுதிய
இருவரிக் கவிதை
இடி மின்னல் !

சோகத்திற்கு வருந்தாதீர்கள் என்று இயற்கையின் மூலம் தன்னம்பிக்கை உணர்த்தும் ஹைக்கூ இதோ !

விதையின் வாழ்க்கை
மரணத்தில் தொடக்கம்
உயிர்த்தெழும் அற்புதம் !

தன் உழைப்பில் வாழாமல் பிறர் உழைப்பில் வாழும் சோம்பேறிகளுக்கு அறிவுரை கூறும் வண்ணம் ஒரு ஹைக்கூ .

காக்கை கூடு கட்டுகிறது
குயிலுக்குக் கொண்டாட்டம்
முட்டையிடலாமே !

வாழ்க்கை வாழ்வதற்கே ! விரக்தி சோகம் கவலை வேண்டாம் என்று உணர்த்திடும் ஹைக்கூ .

வாழ்க்கை
அகல் விளக்கு அல்ல
அற்புத விளக்கு !

மலர்களையும் வண்ணத்துப்பூச்சியையும் ரசிப்பது சுகமோ சுகம் .நூல் ஆசிரியர் அவர் ரசித்த காட்சியை நமக்கும் உணர்த்துகின்றார் .

வண்ணப் பூவில்
வண்ணத்துப் பூச்சி
அழகுக்கு அழகு !

சுற்றுச்சுழல் விழிப்புணர்வும் விதைக்கின்றார் .நமது நாட்டில் உள்ள ஆறுகள் எல்லாம் பாழாகி வருகின்றது .நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடி உள்ளது .ஆனால் இன்று குட்டை போல சாக்கடை தண்ணீரே தேங்கி உள்ளது .பார்க்க நெஞ்சம் பொறுக்க வில்லை .இப்படி பல்வேறு சிந்தனைகளை மலர்வித்தது இந்த ஹைக்கூ .

ஓடிய ஆறு
முடமானது
சாக்கடைக் கலப்பு !

நாட்டில் திட்டங்கள் திட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள் .ஆனால் வறுமை மட்டும் ஒழிந்த பாடில்லை .ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் அவர்கள் வறுமையை ஒழித்து ,அவர்களது பல தலைமுறைக்கும் பயன்படும் வண்ணம் சொத்துக்களை குவித்து விடுகின்றனர் .நாட்டின் வறுமையை உணர்த்தும் ஹைக்கூ .

குப்பையைக் கிளறுவது
கோழியல்ல
கோணியுடன் சிறுவன் !

தங்கம் விலை ஏற ஏற நாட்டில் கொலை, கொள்ளை குற்றங்கள் பெருகிக் கொண்டே போகின்றது .ஏழைகளின் வாழ்வில் தங்கம் பெரிய தலைவலியாக உள்ளது .தங்க ஆசை பெருகப் பெருக ஏழைகளுக்கு திண்டாட்டம் .ஏழையின் மகளுக்கு திருமணம் என்றாலே நொந்து நூலாகி விடுகின்றனர் .

பொட்டுத் தங்கமில்லை
"ஆளானாள் " மகள்
ஆடிப்போனது வீடு !

எந்த மதமும் வன்முறை போதிக்க வில்லை .வன்முறை போதித்தால் அது மதமே இல்லை .மதம் என்பதே விலங்கில் இருந்து வந்த மனிதனை நெறிப் படுத்த , அன்பு செலுத்த மனிதனால் தோற்றுவிக்கப்பட்டதுதான் .ஆனால் இது புரியாமல் , பகுத்தறிவை பயன்படுத்தாமல் மதத்தின் பெயரால் மோதி விலங்காக மாறி வரும் முட்டாள்களுக்கு புத்தி புகட்டும் ஹைக்கூ .

நாவில் நாமாவளி
கையில் ஆயுதம்
மனத்தில் மதம் !

இன்று மின் வெட்டு பெரிய பிரச்சனையாக உள்ளது .பொது மக்கள் யாவரும் மிக மிக கோபத்தில் உள்ளனர் .உடனடியாக மின் வெட்டை நீக்க வேண்டும் . மின்சாரம் என்பது அடிப்படை தேவையாகி விட்டது .இதனை பூர்த்தி செய்ய வேண்டியது மத்தியிலும் , மாநிலத்திலும் ஆள்வோரின் தலையாய கடமை .அது விடுத்து மாறி மாறி குற்றம் சொல்வது ,புள்ளி விபரங்கள் தருவது ,காரணங்கள் சொல்வது ,இவற்றை கேட்கும்போது பொதுமக்களுக்கு எரிச்சல் வருகின்றது .மின் வெட்டு பற்றியும் ஒரு ஹைக்கூ எழுதி உள்ளார் .

வாடும் பயிர்
வரப்பில் உழவன்
மின்வெட்டு !

மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் .ஆசிரியர் பற்றி அவர்களது தியாக உணர்வு பற்றி மிக சிக்கனமான சொற்களில் மிக நேர்த்தியாக ஒரு ஹைக்கூ படைத்துள்ளார் .

பல தீபங்கள் ஒளிர
ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது
நல்லாசிரியர் !

இன்று ஒரு சில ஆசிரியர்கள் மிக உயர்வான ஆசிரியர் பணியை புனிதமாக நினைக்காமல் தவறு செய்த காரணத்தால் மிக கவனமாக ஆசிரியர் என்று எழுதாமல் நல்லாசிரியர் என்று எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .மிக சிறந்த ஹைக்கூ நூல் .அனைவரும் வாங்கி படியுங்கள் .

வயது வேறுபாடு இன்றி எல்லோரோடும் அன்பாகப் பழகும் மிகச் சிறந்த மனிதரின் மிகச் சிறந்த படைப்பு .தொடர்ந்து எழுதுங்கள் .தங்கள் இலக்கியப் பனி சிறக்க வாழ்த்துக்கள் .மிக நேர்த்தியாக வடிவமைத்து அச்சிட்ட அன்னை ராஜேஷ்வரி பதிப்பகதாருக்கும் பாராட்டுக்கள்



--
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by றினா Tue Nov 27, 2012 8:16 pm

அருமையான கருத்துக்கள் அடங்கிய விமர்சனம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Nov 27, 2012 8:28 pm

காஞ்சிபுரத்தில் இருந்து ஹைக்கூ வானம் நூல் நண்பர் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றேன் . நண்பர் இரா இரவி குறிப்பிட்டு உள்ளதைப்போல் ஹைக்கூ கவிதைகள் அனைத்துமே அருமை.



கா.ந.கல்யாணசுந்தரம்


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Dec 02, 2012 12:35 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun Dec 02, 2012 2:32 pm

நல்ல பகிர்வு....\

ஹைக்கூ எழுதுவதற்கான விதிமுறைகள் என்ன என கவிஞர்கள், அறிஞர்கள் குறிப்பிட்டால் முயற்சிக்கலாம்...புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Dec 02, 2012 5:02 pm

ஹைக்கூ மூன்று வரிகளில் இருக்க வேண்டும் மூன்றாவது வரியில் விடை இருக்க வேண்டும் .சொற்ச் சிக்கனம் இருக்க வேண்டும் அவ்வளுவுதான் .நீங்களும் எழுதலாம் ஹைக்கூ வாசகர்களே ஹைக்கூ படிக்கலாம் .வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றி நான் எழுதிய ஹைக்கூ.

அட்சயப் பாத்திரம்
திருவோடானது
பட்டச் சான்றிதழ் !

மத சண்டைகள் பற்றி நான் எழுதிய ஹைக்கூ.

அன்று நெறி
இன்று வெறி
மதங்கள் !

காதலி பற்றி நான் எழுதிய ஹைக்கூ.

அமாவாசையன்று
நிலவு
எதிர் வீட்டு சன்னலில் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Dec 02, 2012 5:03 pm

ஹைக்கூ வாசகர்களே ஹைக்கூ படைக்கலாம் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வானம் வசப்படும் நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பூ பூக்கும் வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வானம் வசப்படும் நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum