ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு!

+3
பூவன்
யினியவன்
சிவா
7 posters

Go down

தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Empty தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு!

Post by சிவா Sun 25 Nov 2012 - 11:28

தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையால், சென்னை தவிர மற்ற பகுதிகளில், 18 மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. இரவு, பகல் என, மின்சாரம் இருக்கும் நேரம் தெரியாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில், காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில், அனல் மின் நிலையங்கள் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் குறைந்த அளவு மின்சாரம் மட்டுமே, அன்றாட மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

18 மணி நேரம்:

இதனால், மின் உற்பத்திக்கும், தேவைக்கும் உள்ள இடைவெளி, 5,000 மெகா வாட் அளவிற்கு உயர்ந்து, மின் தடை நேரம், 18 மணி நேரமாக உயர்ந்து விட்டது. சென்னையில், அரசு அறிவித்த, இரண்டு மணி நேரம் மட்டும் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.மற்ற பகுதிகளில், பகலில், 14 மணி நேரமும், இரவில் நான்கு மணி நேரமும் மின்சாரம் தடை படுவதால், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். நகர்ப்புறங்களில் ஓரளவு மக்களுக்கு, மின்சாரம் வரும், தடைபடும் நேரம் தெரியும். ஆனால், கிராமப்புற மக்களுக்கு, எந்த நேரத்தில் மின்சாரம் வரும் என்பதே தெரியாத நிலையில், கொசுத் தொல்லையும் அதிகரித்திருப்பதால், கடும் அவதியுற்று வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில், மழையும், காவிரி நீரும் கிடைக்காத நிலையில் குறுவை பொய்த்து விட்டது.

சம்பா தப்புமா?:

சம்பா சாகுபடியை மேற்கொள்ள, தினசரி, 12 மணி நேரம், மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தற்போதுள்ள சூழலில், அப்பகுதிகளில், மூன்று மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே பெரிய விஷயமாகி விட்டது.இதனால், மின் மோட்டாரை நம்பியிருக்கும் விவசாயிகள், பயிர்களை காப்பாற்ற என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதே போல், மின்சாரத்தை நம்பியுள்ள சிறு, குறு தொழில் நடத்துவோரும், தங்கள் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தினசரி, 18 மணி நேர மின் தடை, சமீபகாலமாக தொடர்ந்து நீடித்து வருவதால், தொழிலாளிகள் தொடர் வேலையிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல பகுதிகளில் மின் வெட்டை கண்டித்து, வேலை நிறுத்தம், கடையடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், ஆற்றில் கலந்து, நீரை மாசுபடுத்துவதை தடுக்க, பல கோடி ரூபாய் மதிப்பில், பூஜ்யக் கழிவு மேலாண்மை திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள், முழுமையாக இயங்க, நாள் முழுவதும் மின்சாரம் தேவைப்படும். தற்போது. அப்பகுதிகளில், நான்கிலிருந்து, ஐந்து மணி நேரம் வரை மட்டுமே மின்சாரம் கிடைப்பதால், அத்திட்டம் பயனற்றதாகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி குறைவு:

நேற்று முன்தின நிலவரப்படி, தமிழக மின் திட்டங்கள், மத்திய தொகுப்பில் இருந்து, 7,436 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்துள்ளது. நேற்று காலை, 7:00 மணிக்கு, 6,849 மெகாவாட் அளவிற்கே கிடைத்துள்ளது. இந்த மின்சாரம் மட்டுமேஅனைத்து பகுதிகளுக்கும் பிரித்தளிக்கப்படுகிறது.புதிய மின் திட்டங்களான, வல்லூர், மேட்டூர் திட்டங்களில் சோதனை நடந்து வருகிறது. வடசென்னை மின் நிலையம், மின்சார உற்பத்தியை துவக்க முற்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழல் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இதற்கிடையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு யூனிட்டில் ஏற்பட்ட திடீர் பழுதால், 210 மெகாவாட் மின்சார உற்பத்தி தடை பட்டுள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான, இந்த அனல் மின் நிலையத்தில், தலா, 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய, ஐந்து யூனிட்டுகள் உள்ளன.நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணியளவில், ஐந்தாவது யூனிட்டில் உள்ள பாய்லரில் ஓட்டை விழுந்தது; அதன் இயக்கம் நிறுத்தப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்னையால், மின்வெட்டு நேரம், மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி பழுது :

தூத்துக்குடி அனல் மின் நிலைய, மூன்றாவது யூனிட்டில், பாய்லரில் ஓட்டை ஏற்பட்டதால், இம்மாதம், 19ம் தேதி மாலை, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பின், சரி செய்யப்பட்டது. இங்குள்ள இயந்திரங்கள் அனைத்தும், 25 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகின்றன.இதனால், அடிக்கடி பழுது, விபத்து ஆகியவை ஏற்பட்டு, மின் உற்பத்தி பாதிக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது. எனவே, இந்த அனல் மின் நிலையத்தை ஒட்டுமொத்தமாக, புதுப்பிக்க வேண்டும் என, தொழிற்சங்க தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில், மூன்று மணி நேரம் மட்டுமே மின் வெட்டு இருப்பதாக மின் பகிர்மானக் கழகம் அதிர்ச்சி அளித்துள்ளது.தமிழகத்தில் சென்னை மண்டலம் தவிர்த்த பிற பகுதிகளில், தினமும் 16 லிருந்து, 18

மணி நேரம் வரை மின் வெட்டு அமலில் உள்ளது. கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு மட்டுமே, இந்த பாரபட்சத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், பொது நல மனுதாக்கல் செய்தது.

இதே விவகாரம் தொடர்பாக, சில தகவல்களையும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைமை யிட பொது தகவல் அலுவலரிடம் இவ்வமைப்பு கோரியிருந்தது. அமைப்பின் செயலர் கதிர்மதியோன் கேட்ட அக்கேள்வியில் முக்கியமானது, "மின் வினியோகத்தில் பாரபட்சம் காட்டுவதற்கு எந்த சட்டம் அனுமதிக்கிறது' என்பது தான்.

எதன் அடிப்படையில், சென்னை மண்டலத்துக்கு மட்டும் மின் வெட்டில் விலக்கு அளிக்கப்படுகிறது, எந்த சட்டத்தில், விதியில் அதற்கு இடம் உள்ளது, அப்படியிருந்தால் அதன் நகல் தேவை என, பல கேள்விகளையும் அவர் கேட்டிருந்தார். அதற்கு, மின் பகிர்மானக் கழகத்தின் பொது தகவல் அலுவலரான தலைமை பொறியாளர் (வர்த்தகம்) பதில் அனுப்பியிருந்தார். தமிழகம் முழுவதற்கும் ஒரே மாதிரியான கட்டணமே வசூலிக்கப்படுகிறது என்றும், சென்னைக்கு கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

அரசின் ஒப்புதலின் படி, சென்னையில் இரண்டு மணி நேரமும், மாநிலத்தின் பிற பகுதிகளில் மூன்று மணி நேரமும் மின் வெட்டு அமல் படுத்தப்படுகிறது என்றும் பதில்கள் தரப் பட்டிருந் தன. தினமும் குறைந்த பட்சமாக, 16 மணி நேரம் மின் வெட்டு அமலில் இருக்கும் நிலையில், இப்படி யொரு பதிலைத் தந்ததன் மூலமாக, தமிழக மக்களை கேலிப்பொருளாக்கியுள்ளார் அந்த அதிகாரி.

தினமலர்


தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Empty Re: தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு!

Post by யினியவன் Sun 25 Nov 2012 - 11:32

முடியும் தருவாயில் இருந்த பல நிலையங்கள் முந்தைய அரசு தொடங்கியது என்பதனால் கிடப்பில் போட்டு அம்மணி மக்களை பழி வாங்குகிறார்.

பாராளுமன்ற தேர்தல் வரை இப்படியே தொடர்ந்து தேர்தல் சமயத்தில் தீர்வு கண்டு (தற்காலிகமாக) வோட்டு வாங்கி நிரந்தரமாக மக்களை ஏமாற்றும் திட்டத்தில் வெற்றி பெறாமல் இருக்க மக்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Empty Re: தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு!

Post by பூவன் Sun 25 Nov 2012 - 11:38

இருப்பது 6 மணிநேரம் தான் அதையும் நிறுத்தி விட வேண்டியது தானே , இதில் வேற வாக்கெடுப்பு மின் பற்றகுறைக்கு யார் காரணம் அப்படின்னு .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Empty Re: தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு!

Post by பிளேடு பக்கிரி Sun 25 Nov 2012 - 12:46

என்ன கொடுமை சார் இது



தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Empty Re: தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு!

Post by ராஜா Sun 25 Nov 2012 - 13:04

யினியவன் wrote:பாராளுமன்ற தேர்தல் வரை இப்படியே தொடர்ந்து தேர்தல் சமயத்தில் தீர்வு கண்டு (தற்காலிகமாக) வோட்டு வாங்கி நிரந்தரமாக மக்களை ஏமாற்றும் திட்டத்தில் வெற்றி பெறாமல் இருக்க மக்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.
என்னத்தை பண்ணுவது , எப்ப தேர்தல் வரும் அடுத்து நாம் ரத்தம் குடிக்கலாம் என்று ஒரு ஓ*** காத்துருக்கிறது .

இந்த திராவிட மாயைகளுக்கு மாற்றி மாற்றி ஒட்டு போட்டு இரண்டு தலைமுறை தமிழர்கள் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார்கள் , இப்ப மூன்றாவது தலைமுறையும் அதே தவறை பண்ணுகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Empty Re: தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு!

Post by றினா Sun 25 Nov 2012 - 20:26

இங்கும் அதே நிலைதான்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Empty Re: தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு!

Post by பூவன் Sun 25 Nov 2012 - 20:29

ராஜா wrote:
யினியவன் wrote:பாராளுமன்ற தேர்தல் வரை இப்படியே தொடர்ந்து தேர்தல் சமயத்தில் தீர்வு கண்டு (தற்காலிகமாக) வோட்டு வாங்கி நிரந்தரமாக மக்களை ஏமாற்றும் திட்டத்தில் வெற்றி பெறாமல் இருக்க மக்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.
என்னத்தை பண்ணுவது , எப்ப தேர்தல் வரும் அடுத்து நாம் ரத்தம் குடிக்கலாம் என்று ஒரு ஓ*** காத்துருக்கிறது .

இந்த திராவிட மாயைகளுக்கு மாற்றி மாற்றி ஒட்டு போட்டு இரண்டு தலைமுறை தமிழர்கள் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார்கள் , இப்ப மூன்றாவது தலைமுறையும் அதே தவறை பண்ணுகிறது.

கரண்ட் கானல் நீராக்கி
நம் கண்ணை கண்ணீராக்கி விட்டார்கள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Empty Re: தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு!

Post by DERAR BABU Sun 25 Nov 2012 - 21:01

தமிழ்நாட்டின் தலைஎழுத்து . ஆண்டவா அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்று .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Empty Re: தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum