ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்)

+9
உதயசுதா
ஜாஹீதாபானு
கார்த்தி
அச்சலா
கரூர் கவியன்பன்
பூவன்
றினா
MYTHILY JAYABALAN
ச. சந்திரசேகரன்
13 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 8 Empty ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-7) (தொடர்கதை ஞாயிறுதோரும்)

Post by ச. சந்திரசேகரன் Sun Nov 25, 2012 3:57 am

First topic message reminder :

ஆரோக்கியமான உறவுகள் - (தொடர்கதை ஞாயிறுதோரும்)

அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள். நான் இன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் படித்து இன்புறும் வகையில் "ஆரோக்கியமான உறவுகள்" என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை உங்கள் ஆசீர்வாதத்தோடு எழுத உள்ளேன். இக்கதையில் நான் கூற விழைவது உறவுகளுக்குள்ளே உள்ள அன்பின் ஆழம் பற்றித்தான்". தங்கள் நல்லாதரவுடன் இதோ தொடங்குகிறேன்.

அது யாரும் எதிர் பார்க்காத ஒரு மரணச்செய்தி. மகேஷ் அதைக் கேட்டதும், நிலைகுலைந்து விட்டார். இறந்தவர் மகேஷின் தங்கை சீதாவின் கணவர். வயது வெறும் 47தான். தன் ஒரே தங்கை சீதாவுக்கு இப்போது 38 வயது தான் ஆகிறது. பண வசதி நன்றாக இருந்த போதும் இந்த சிறிய வயதில் தன் தங்கை 15 வயது மகனுடன் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ற கேள்விதான் மகேஷை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. அப்படியே, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன.

ஒருநாள் சீதா தன் அண்ணன் மகேஷ் வீட்டுக்கு வந்திருந்தாள். மகேஷ் தங்கை இளைத்து முகம் வாடி இருப்பதைக் கண்டு மிக வருத்தத்துடன் சீதாவிடம் "எப்படிம்மா இருக்க? உன் மகன் வைத்யா எப்படி இருக்கிறான்?" என கேட்க,
சீதா கண்ணில் வழிந்த நீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு மெதுவாக சொல்லத் தொடங்கினாள். " அண்ணா, என்னவென்று சொல்வது? வைத்யா மிகவும் வாடிவிட்டான். எப்போதும் தன் அப்பா இல்லாத வெறுமையை தாங்க மாட்டாமல் தவிக்கிறான். அவனை தேற்ற என்னால் முடியவே இல்லை. அவனை எப்படி ஆளாக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை." என கண்ணீர் மல்கக் கூறினாள். மகேஷும் கண்கள் குளமாக, அவளை மனதளவில் தேற்றி விடை கொடுத்தான்.

மகேஷ் ஒருநாள் தன் வீட்டில் இருந்தபோது, அவரின் சகலை (சகலபாடி) சந்திரன் வந்தார். வந்தவர் மெல்ல சீதாவின் குடும்ப சூழ்நிலை குறித்து மகேஷிடம் விசாரிக்க, மகேஷ் தன் தங்கை பையன் வைத்யாவின் நிலையையும் அப்பாவின் நினைவால் அவன் வாடும் துயர் பற்றியும் சந்திரனிடம் சொன்னார். சந்திரன் மகேஷிடம் "மகேஷ், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்? இப்போதே பேசலாமா?" எனக் கேட்க, மகேஷும் தலையாட்ட, சங்கரன் சொல்ல ஆரம்பித்தார்.
"மகேஷ், நீங்கள் என் சகலை (சகலபாடி), எனில் உங்கள் தங்கை சீதா எனக்கும் தங்கைதானே?" என்று கூற, மகேஷும் ஆம் என்பதுபோல் தலையாட்ட, சங்கரன் தொடர்ந்தார். - "என் கடைசி அக்கா, கீதாவைப்போலவே சிறு வயதில் கணவனை இழந்தவர். கணவன் இறந்தபின், தன் ஒரே மகளை வளர்க்க மிகவும் பாடுபட்டார். தம்பியாக நானும் என் அண்ணனும் பண உதவிகள் செய்தபோதிலும், எங்களால், அக்கா மகளுக்கு ஒரு அப்பா ஸ்தானத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. அக்காவுக்கும் ஒரு கணவன் இல்லாது பட்ட துயரங்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் இருந்தோம். எப்படியோ, அக்காவிற்கு அடைக்கலம் தந்து, குழந்தையை வளர்த்து அவளுக்கு ஒரு கல்யாணமும் செய்து முடித்தோம். ஆனால், எங்களால் என் அக்காவிற்கு உதவ முடிந்ததே தவிர, அவருக்கு கணவரின் இழப்பையும், அக்காவின் மகளுக்கு அப்பாவின் இடத்தையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது." எனக் கூற
மகேஷ் "அண்ணா, நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?" எனக் கேட்க

சந்திரன் தொடர்ந்தார் - " மகேஷ், நான் சொல்லப் போவது உங்களுக்கு புதுமையாக இருக்கும். ஏற்றுக்கொள்ள முடியாதது போல் இருக்கும். ஆனால் உங்கள் தங்கை சீதா மற்றும் அவள் மகன் வைத்யா ஆகிய இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நான் சொல்லப் போவது கண்டிப்பாக நல்லதாக இருக்கும். என்ன விஷயம் என்பதை நாளை நீங்கள் என்னோடு என் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தீர்களானால் அவரின் வீட்டில் வைத்து சொல்லுவேன்? என்று கூறினார். மகேஷ் ஒன்றும் விளங்காதவராக, சரியென தலையாட்டினார்.

மறுநாள் காலையில் சந்திரன் மகேஷை கூட்டிக்கொண்டு, தன் உறவுக்காரரான அசோக் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீடே களையிழந்து வருத்தத்தோடு இருந்தது. அசோக் இருவரையும் வரவேற்று தேநீர் அளித்தார். வீடு வசதியாக இருந்தது. அசோக் தன் அம்மாவை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அசோக்குக்கு கிட்டத்தட்ட 45 வயது இருக்கும். அவருக்கு இரு குழந்தைகள். பெரியவன் இந்த வருடம்தான் கல்லூரி சேர்ந்திருந்தான். இரண்டாவது மகள். அவள் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அசோக் ஒரு வண்டி பாகங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனத்தில் சார்ஜ்மேனாக இருந்தார். நல்ல சம்பளம். ஆனால், சமீபத்தில் தன் மனைவியை விபத்தில் இழந்திருந்தார். மகேஷ் சந்திரனிடம் வந்த விவரம் குறித்து தனியாகக் கேட்க, சந்திரன் வீட்டுக்குச் சென்று சொல்கிறேன் எனக் கூற, மகேஷ் ஓரளவு யூகித்தவராக இருவரும் சந்திரனின் வீட்டுக்குத் திரும்பினர்.

சந்திரன் மகேஷிடம் "அசோக் குடும்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்க, மகேஷும் "நல்ல குடும்பம்" என்றார்.
சந்திரன் " மகேஷ், இப்போது அசோக் குடும்பத்தில் இரு குழந்தைகள் அம்மாவிற்காக ஏங்குகின்றன. அதுபோல் உன் தங்கையின் மகன் அப்பாவிற்காக ஏங்குகிறான். ஆனால் நீங்கள் மனது வைத்தால் மூன்று குழந்தைகளின் ஏக்கத்தையும் போக்க முடியும். அதாவது, அசோக்கிற்கு உங்கள் தங்கை சீதாவை ஏன் மனைவியாக்கக் கூடாது? இது மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து நான் எடுத்த முடிவாகும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என கேட்டு, ஆவலோடு மகேஷின் முகத்தை பார்த்தார்.
மகேஷ் "அண்ணா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால், அதற்கு அசோக் சீதா மற்றும் மூன்று குழந்தைகளின் சம்மதம் மட்டுமில்லாமல், இரு குடும்பத்தாரின் சம்மதம் வேண்டுமே" எனக் கூற,
சந்திரன் " மகேஷ், நான் அசோக்கின் குடும்பத்தில் இது பற்றி ஏற்கனவே கூறி, அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்றுவிட்டேன். நீங்கள், சீதாவிடம் மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்து சம்மதம் பெற்றால், குழந்தைகளை ஒன்றாக சந்திக்க வைத்து, பரஸ்பரம் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்தை நான் பெற்று விடுகிறேன்." எனக் கூற,
மகேஷுக்கு அப்போதே கல்யாணம் நடந்ததைப் போல நம்பிக்கை கிளைவிடத் தொடங்கியது. உடனே போய், தங்கையிடம் முழுதும் விளக்கி சம்மதம் பெற்றார்.
சந்திரன், மூன்று குழந்தைகளையும் ஒரு பூங்காவில் சந்திக்கச் செய்து பரஸ்பரம், இந்த கல்யாணத்தால் கிடைக்கப் போகும் நல்ல எதிர்காலத்தை விளக்கினார். குழந்தைகளும் அந்த "ஆரோக்கியமான உறவு" பற்றி புரிந்து சம்மதிக்க,
வடபழனி முருகன் கோவிலில் மூன்று குழந்தைகளும் முன்னின்று தங்கள் பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் நெருங்கிய உறவுகள் சம்மதிக்கவில்லை என்றாலும், போகப் போக, அனைவரும் அந்த உறவை ஆரோக்கியமாக உணர்ந்தனர்.

அசோக்கும் சீதாவும் ஆனந்தமாய் சந்திரனை நன்றிப் பெருக்கோடு ஆண்டவனாய் பார்த்தனர்.

(தொடரும்)






Last edited by ச. சந்திரசேகரன் on Sun Jan 06, 2013 9:55 am; edited 2 times in total (Reason for editing : to change the name of the characters)


ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 8 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 8 Empty Re: ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்)

Post by ச. சந்திரசேகரன் Sun Apr 07, 2013 10:45 am

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோறும்)
போன வாரம்-18 வரை நடந்தது

//கணவரை இழந்து 2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் மகேஷின் சகலை சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.

மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின் விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூற, கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்துப் பேச அதையும் சீதா மறுத்து கலாவின் மேல் உள்ள கோபத்தை மகேஷிடம் கொட்டித்தீர்க்க சீதா மகேஷை அழைக்க மகேஷ் சரியாகப் பேசாததால், மகேஷின் சூழல் அறியாத சீதா மகேஷின் மேல் கோபம் கொள்கிறார். பின்னர் உண்மை அறிந்து அண்ணனிடம் கோபம் கொண்டதற்கு மன்னிப்புக் கேட்கிறார். ஆனால், மகேஷ் தன் சகலை சந்திரனின் ஆலோசனைப்படி தங்கையிடம் கைப்பேசியில் கடிந்து பேசி அவரை உதாசீனப் படுத்துகிறார்.

இந்நிலையில் சீதா மனம் உடைந்து போகாமல் இருக்க வேண்டி, சீதாவின் பள்ளித்தோழி
சரிதாவிடம் விஷயத்தைக் கூறி, சீதாவை சமாதானப் படுத்தும் முயற்சி நடக்கிறது.
சரிதாவும் சீதாவிடம் பேசி சீதாவின் கவலைக்கு மருந்தாகிறாள்.
அதே தினம் சீதா கலா அக்காவிடம் மன்னிப்பு கேட்கிறாள். கலா அக்காவும் அடுத்த ஞாயிறன்று மீண்டும் சீதாவை சந்திப்பதாக இருக்கிறார். அந்த சந்திப்பில் கலா அக்கா சீதாவிடம் மறுமணம் குறித்து என்ன பேச வேண்டும் என தீர்மானிக்க வெங்கி சந்திரன் இருவரும் மகேஷை குடும்ப சமேதராய் சந்திரன் வீட்டுக்கு வரச் சொல்கிறார்கள்.
அந்த சந்திப்பிற்கு வெங்கி ஒரு புதிய நபரை அழைத்துவரப்போவதாகக் கூறி சீதாவின் மகன் வைத்யாவை அழைத்துவருகிறார். அவர் வைத்யாவிடம் சீதாவின் மறுமணம் குறித்துப் பேசியதை அனைவருக்கும் விளக்குகிறார்.
இனி.....//

வைத்யாவின் அடுக்கடுக்கான கேள்விகள் வெங்கியை சிறிது தடுமாறத்தான் செய்தன. இருப்பினும் சுதாரித்துக்கொண்டு விளக்க முற்பட்டார்.

வெங்கி: வைத்யா, நீ கேட்ட கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்டால், நான் உனக்கு விளக்கம் தர ஏதுவாக இருக்கும். உன்னுடைய முதல் கேள்வி?

வைத்யா: எங்கள் வீட்டிற்கு வரப்போகின்ற அந்த நபர் யார்?

வெங்கி: அவர் பெயர் அசோக். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் வீட்டில் மொத்தம் நாலு பேர். அவர், அவருடைய அம்மா, அவரின் மகன் மற்றும் மகள்.

வைத்யா: அவருடைய மனைவி?

வெங்கி: அவருடைய மனைவி சமீபத்தில் ஒரு விபத்தில் இறந்து விட்டார்.

வைத்யா: அப்படியானால் அவரின் இரு குழந்தைகளுக்கும் அம்மா கிடையாதா?

வெங்கி: ஆமாம்.

வைத்யா: நான் அப்பா இல்லாமல் படும் அவஸ்தையைக் காட்டிலும் அவர்களின் அவஸ்தை அதிகமாயிற்றே?

வைத்யாவின் இந்த பரிதாப உணர்வுகளை வெங்கி உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்ப தன பதிலைத் தொடர்ந்தார்.

வெங்கி: ஆமாம். நீ சொல்வது முற்றிலும் சரி. ஒரு குழந்தைக்கு அப்பாவின் நிரந்தரப் பிரிவை விட அம்மாவின் நிரந்தரப் பிரிவு தாங்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கும். ஏனெனில், அது தன் குழந்தைப் பருவத்தை அப்பாவை விட அம்மாவிடம் தான் அதிகம் செலவிடுகிறது.

வைத்யா: நீங்கள் சொல்வது சரிதான் அங்கிள். எனக்குக் கூட அப்பாவின் நினைவு எப்போதாவதுதான் வரும். ஆனால், முன்பெல்லாம் அம்மா ஒரு நாள் வீட்டில் இல்லைஎன்றாலும் உடனே பார்க்கவேண்டும் போல் இருக்கும். மனம் எதையோ இழந்ததுபோல் பரிதவிக்கும்.

வெங்கி: முற்றிலும் உண்மை. அதுதான் தாய்ப்பாசம். தனக்கென எதுவும் கொள்ளாமல் நம் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தன்னை வருத்திக் கொள்ளும் ஒரு உன்னதப் பிறவிதான் தாய்.

வைத்யா: ஆமாம் அங்கிள். இப்போக் கூட, என் அம்மா, எனக்குச் சுடச்சுட பரிமாறி என் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு, நான் சோர்ந்து போகும் நேரத்தில் என் தலையை வருடி என்னை சோர்விலிருந்து விடுவித்து, புத்துணர்ச்சி தந்து, நான் படிக்காமல் அலட்சியமாக உள்ளபோது செல்லமாகக் கடிந்து, என் படிப்பின் முக்கியத்துவத்தை எனக்கு மெதுவாகப் புரியவைத்து, நான் உறங்கியபின் உறங்கிய பின் உறங்கி, நான் எழுமுன் எழுந்து அப்பப்பா! என்ன ஒரு தியாகம்?

வெங்கி: அதுதான் உலகிலேயே உயர்ந்த தியாகம். ஆனால், அப்படிப்பட்ட ஒரு உறவு இன்று அசோக்கின் குழந்தைகளுக்கு இல்லாமலே போய்விட்டது என்பதுதான் துரதிஷ்டவசமானது.

வைத்யா: அங்கிள், இந்த இழப்பிற்கு ஈடு செய்ய வேறு வழியே இல்லையா?

வெங்கி: இருக்கிறது. அதைத்தான் நான் உனக்கு இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்லப் போவதை கவனமாகக் கேள்.

வைத்யா: கேட்கிறேன் சொல்லுங்கள் அங்கிள்.

வெங்கி: அடுத்த குழந்தைகளுக்கு அம்மா இல்லை என்று வருத்தப்படும் உனக்கு அப்பா இல்லை. எனவே, உங்கள் இரு குடும்பத்தின் கவலையும் ஒரே நேரத்தில் தீர என்னிடம் ஒரு ஐடியா உள்ளது.

வைத்யா: அது என்ன ஐடியா அங்கிள்?

வெங்கி: உனக்கு ஒரு அப்பா கிடைக்கவும், அவர்களுக்கு ஒரு அம்மா கிடைக்கவும் ஒரே தீர்வு என்னவென்றால், நீங்கள் மூன்று குழந்தைகளும் சேர்ந்து உன் அம்மாவிற்கும், அசோக் அவர்களுக்கும் மறுமணம் அதாவது re - marriage செய்து வைக்க வேண்டும்.

வைத்யா: என்ன சொல்கிறீர்கள் அங்கிள். இப்படிப்பட்ட திருமணத்தை நான் இதுவரை கேள்விப் பட்டதே இல்லையே?

வெங்கி: யாரும் கேள்விப்படவில்லைதான். நமக்கு இது புதுசுதான். ஆனால், உனக்கு ஒரு அப்பாவும், அவர்களுக்கு ஒரு அம்மாவும் கிடைத்தால் அது ஒரு நல்ல விஷயம்தானே?

வைத்யா: நல்ல விஷயம்தான். ஆனால், இதற்கு அம்மா ஒத்துக் கொள்வார்களா எனத் தெரியவில்லையே?

வெங்கி: அம்மாவையும், அசோக் அவர்களையும் ஒத்துக் கொள்ளவைக்க வேண்டியதுதான் உங்கள் மூவரின் முயற்சி.

வைத்யா: அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்?

வெங்கி: வரும் ஞாயிற்றுக்கிழமை கலா அக்கான்னு ஒருத்தர் உங்கள் வீட்டிற்கு வருவார்.

வைத்யா: இப்போ ரெண்டு நாளைக்கு முன் வந்தாங்களே அந்த ஆண்ட்டியா?

வெங்கி: ஆமாம். அவங்களே தான். அவங்க வந்து அம்மாக்கிட்ட பேசுவாங்க. அப்போ அவங்களே உன்கிட்ட இதுக்கு சம்மதமான்னு கேட்பாங்க. அப்போது நீ என்ன பண்ணனும்னு முடிவு பண்றதுக்கு நாம் கலா அக்காவை சந்தித்து பேச உன்னை அழைத்துச் செல்லப் போகிறேன். அப்போது நீ அம்மாவிடம் படிப்பு சம்மந்தமாக ஒருவரை காணச் செல்வதாகக் கூறிவிட்டு, என்னோடு வரவேண்டும் ஒ.கே. வா?

வைத்யா: ஒ.கே. அங்கிள்.

இப்படியாக வைத்யாவை வெங்கி சம்மதிக்க வைத்ததாக அனைவரிடமும் கூற அனைவரும் பாதி கல்யாணம் முடிந்து விட்டதாகவே எண்ணி மகிழ்ந்தனர்.

(தொடரும்)


Please drop your comments




ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 8 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 8 Empty Re: ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்)

Post by ச. சந்திரசேகரன் Tue Jun 17, 2014 11:41 pm

இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த தொடரகதையை தொடர உள்ளேன்.  கால தாமதத்திற்கு அனைவரும் மன்னிக்கவும்.


ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 8 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 8 Empty Re: ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum