ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா

+2
அச்சலா
சிவா
6 posters

Go down

இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Empty இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா

Post by சிவா Sat Nov 24, 2012 8:21 am

இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Jeyalalitha_21

இல்லற வாழ்வு இனிமையாக இருக்க வேண்டும் என்றால், கணவன் – மனைவி எப்படி இருக்க வேண்டும்? என்பதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா குட்டி கதை மூலம் விளக்கி கூறினார். அப்போது அவர் கூறியதாவது:–

கபீர்தாசர்

கபீர்தாசர் என்கிற ஒரு மிகப் பெரிய ஆன்மிகவாதியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை நான் விளக்க விரும்புகிறேன். ஒரு நாள் கபீர்தாசர் இல்லத்தில் ஏகப்பட்ட பக்தர்கள். எல்லோரும் அவரிடம் ஆன்மிகச் சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கபீர்தாசர். நண்பகல் 12 மணிக்கு எல்லோரும் போய்விட்டனர். ஆனால், ஒருவர் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தார். ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று கபீர்தாசர் கேட்டார். அதற்கு பதில் சொல்லத் தயங்கினார் அந்த மனிதர். உடனே கபீர்தாசர், ‘‘உங்கள் முகத்தில் காணப்படுகிற அறிகுறிகளைப் பார்த்தால், உங்களுடைய இல்வாழ்க்கை இன்பமாக இல்லை என்று தோன்றுகிறது; அப்படித்தானே?’’ என்று கேட்டார்.

‘‘அப்படித்தாங்க. என்னுடைய மனைவியும், நானும் சந்தோஷமாக குடும்பம் நடத்தவில்லை; எப்பொழுதும் சண்டை தான். நான் என்ன சொன்னாலும், அவள் கேட்பதில்லை. எதிர்த்து பேசுகிறாள். கோபப்படுகிறாள். ஆத்திரப்படுகிறாள். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை’’ என்றார், அந்த மனிதர்.

நூல்கண்டு

உடனே கபீர்தாசர், ‘‘இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க. யோசனை செய்து பதில் சொல்கிறேன்’’, என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர், ஒரு பெரிய நூல் கண்டை எடுத்து வந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார். நூல் கண்டில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்து எடுத்தார். அப்போது, மனைவியை கூப்பிட்டு ‘‘விளக்கை ஏற்றி எடுத்து வா’’ என்று சொன்னார். அந்த அம்மையாரும் ஒரு விளக்கை ஏற்றி எடுத்து வந்து அவர் பக்கத்திலே வைத்தார்.

இவ்வளவு வெளிச்சம் இருக்கும் போது, கபீர்தாசர் தான் விவரம் இல்லாமல் விளக்கு கொண்டு வரச் சொன்னால், அந்த அம்மையாரும் விளக்கு கொண்டு வருகிறாரே என்று நினைத்து, திகைத்துப்போனார் அந்த மனிதர்.

பாலில் உப்பு

சிறிது நேரம் கழித்து, அந்த அம்மையார் இரண்டு டம்ளர்களில் பாலை எடுத்துக் கொண்டு வந்து, அவர்கள் முன்பு வைத்தார். பாலை குடிக்க ஆரம்பித்த அந்த மனிதரின் முகம் சுருங்க ஆரம்பித்தது. பாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், கபீர்தாசரின் மனைவி தவறுதலாக பாலில் சர்க்கரைக்கு பதிலாக, உப்பை போட்டிருந்தார்.

அந்த பக்தர், கபீர்தாசரைக் கவனித்தார். கபீர்தாசரோ, கிடுகிடுவென்று பாலை குடித்தார். பாலை குடித்து முடிக்கும் தருவாயில், அவரது மனைவி சமையல் கட்டில் இருந்து கொண்டே, ‘‘பாலுக்கு சர்க்கரை சரியா இருக்கிறதா?’’ என்று கேட்டார். இதற்கு கபீர்தாசர், ‘‘சரியாக இருக்கிறது’’ என்று சொன்னார்.

சொர்க்கம் போல

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் கபீர்தாசரை நெடுஞ்சாண்கிடையாக வணங்கினார். உடனே கபீர்தாசர், அந்த மனிதரைப் பார்த்து ‘‘என்னவோ கேட்க வேண்டும் என்று கூறினாயே?’’ என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் ‘‘ஒன்றும் கேட்க வேண்டாம் அய்யா. நண்பகலில் நீங்கள் விளக்கேற்றி வைக்கச் சொல்கிறீர்கள். உங்கள் மனைவியும் விளக்கேற்றி வைக்கிறார். உப்பு போட்ட பாலில் சர்க்கரை சரியாக இருக்கிறதா? என்றால் சரியாக இருக்கிறது என்று நீங்கள் பதில் கூறுகிறீர்கள். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது’’ என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

அதாவது, கணவனை மாற்ற வேண்டும் என்று மனைவி நினைக்காமலும்; மனைவியை மாற்ற வேண்டும் என்று கணவன் நினைக்காமலும்; ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டால், இல்லற வாழ்வு அமைதியாக, இனிமையாக, சொர்க்கம் போல் இருக்கும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது. இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

தினத்தந்தி


இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Empty Re: இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா

Post by அச்சலா Sat Nov 24, 2012 8:58 am

ஆகா..அப்படியா செய்தி... சூப்பருங்க


இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Paard105xzஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Paard105xzஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Paard105xzஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Empty Re: இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா

Post by மாணிக்கம் நடேசன் Sat Nov 24, 2012 10:37 am

ஒரு பூஜாங் குடும்ப வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்காங்கே.

பூஜாங் என்பதன் பொருள் மாமா அங்கள் தருவார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Empty Re: இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா

Post by றினா Sat Nov 24, 2012 1:11 pm

ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டால், இல்லற வாழ்வு இனிமையாக இருக்கும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Empty Re: இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா

Post by Muthumohamed Sat Nov 24, 2012 1:29 pm

"ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டால், இல்லற வாழ்வு இனிமையாக இருக்கும்."
இந்த வரி இந்த காலத்து கணவன் மனைவிகளுக்கு புரிவதில்லை



இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Mஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Uஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Tஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Hஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Uஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Mஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Oஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Hஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Aஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Mஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Eஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Empty Re: இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா

Post by சிவா Sat Nov 24, 2012 1:55 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஒரு பூஜாங் குடும்ப வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்காங்கே.

பூஜாங் என்பதன் பொருள் மாமா அங்கள் தருவார்.

என்னைப் போன்ற திருமணம் ஆகாத கன்னிப் பையன்களை மலாய் மொழியில் bujang என்று கூறுவார்கள். ஜொள்ளு


இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Empty Re: இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா

Post by யினியவன் Sat Nov 24, 2012 2:47 pm

ஆக பவர் கட் பிரச்சினையை பெரிது படுத்தாமல்
அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்ல வராங்க அம்மணி...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Empty Re: இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum