ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம் Poll_c10ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம் Poll_m10ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம்

2 posters

Go down

ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம் Empty ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம்

Post by நிலாசகி Mon Oct 12, 2009 8:51 pm

அவுட் சோர்ஸிங் என்பது உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி
பறக்கும் காலமிது. விவசாயம் மட்டும் இதற்கு விதி விளக்கா என்ன? விவசாயமும்
தற்போது ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அவுட் சோர்ஸ் ஆக தொடங்கி
உள்ளது. மற்ற துறைகளில் அவுட் சோர்ஸிங் என்றால் வளரும் நாடுகளுக்கு புதிய
வேலை வாய்ப்பு, அன்னிய முதலீடு என்று ஒரு சில பயன்கள் கிடைக்கும். ஆனால்
விவசாயத்தை அவுட் சோர்ஸ் செய்ய படுவதால் ஏழை நடுகள் மிக பெரிய பட்டினி
சாவிற்கு அழைத்து செல்ல பட இருக்கின்றனர்.

சோமாலயா, சூடான் போன்ற
நாடுகள் பற்றி கேள்வி பட்டாலே நம் அனைவரின் கண் முன்னாலும் நிற்பது
அந்நாட்டு மக்கள் பட்டினியில் வதை படுவது பற்றி நாம் பார்த்த புகை
படங்களாக தான் இருக்கும். அவ்வாறு பஞ்சத்தில் வாழும் நாடுகள் உணவு
பொருட்களை சீனா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போகிறார்கள்
என்றால் ஆச்சிரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை!

உலக மக்கள் தொகை
இன்று இருப்பதைவிட 2050ல் ஐந்து பில்லியன் உயரக்கூடும்.ஆனால் விவசாய நிலமோ
அதற்கேற்ப்ப உயர சாத்தியம் இல்லை. தற்போது பெட்ரோலிய பொருட்களுக்கு
ஏற்பட்டுள்ள தட்டுபாடு நாளை உணவு பொருளுக்கும் வர கூடிய சாத்திய கூறு
அதிகம் உள்ளது. இன்று அரபு நாடுகளிடம் பெட்ரோடாலர் பணம் அதிகம்
குவிந்துள்ளது. சீனா, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடம் ஏற்றுமதி
மூலம் அதிக அன்னிய செலாவனி குவிந்துள்ளது. இந்த இரண்டு வகை நாடுகளும்
வருங்காலத்தில் தனது மக்களின் உணவு பொருட்களுக்கான தேவைக்கு வெளி நாடுகளை
சார்ந்திருக்கும் கட்டாயத்தில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறமோ
முதலீடுகளுக்கு வழி இல்லாமல், நல்ல இயற்கை வளங்கள், ஊழல் எதேச்சதிகார
ஆட்சியாளர்களை கொண்டு, அவ்வப்போது பஞ்சத்தில் வாடும் ஏழை ஆப்ரிக்க
நாடுகளும், ஒரு சில ஆசிய நாடுகளும் உள்ளன.

இவ்வகை நாடுகளிடம் அன்னிய முதலீட்டு கையிருப்பும் மிக குறைவு. அதன் விளைவு

1.உணவு
பற்றாக்குறையை எதிர் நோக்கும் அரபு மற்றும் ஆசிய நாடுகள் ஏழை ஆப்ரிக்க
மற்றும் ஆசிய நாடுகளில் பணத்தை முதலீடு செய்கின்றனர். மிக அதிக அளவில்
நிலங்களை வாங்கி குவித்து அல்லது நீண்ட கால குத்தகைக்கு எடுத்து, சிறு
மற்றும் குறு ஏழை விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி தங்கள் நாடுகளுக்கு
தேவையான உணவை நவீன விவசாயம் செய்து தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்து
கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

2.தற்போது ஏற்பட்டுள்ள நிதி
நெருக்கடியால் நிதி துறையில் பெரும் லாபம் குறைவதாலும், உணவு பொருளின்
விலை ஏற்றத்தாலும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும், மிக பெரிய பன்னாட்டு
கார்போரேசன்களும் ஏழை நாடுகளின் விவசாயத்தில் அதிக முதலீடு செய்து பெரும்
லாபம் பார்க்க முனைகின்றனர்.
இதனால் பெரும்பாலான ஏழை விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து வறுமையின் பிடிக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது

விவசாயிகளிடமிருந்து
நிலத்தை பிடுங்குவது வரலாற்றில் புதிது அல்ல. அமெரிக்கா செவ்விந்திய
மக்களிடமும், ஆப்ரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களிடம் ஐரோப்பியர்கள்
நிலத்தை பிடுங்கியது வரலாற்று செய்தி. ஆனால் இன்று ஏழை நாடுகளிடம்
மீண்டும் நிலத்தை பிடுங்கும் அவல நில உலகெங்கும் நடக்க ஆரம்பித்துள்ளது.
ஆனால் பத்திரிக்கைகளில் பெரிய அளவு இந்த செய்தி வெளியாவது இல்லை.

சமீபத்தில்
தென் கொரிய நிறுவனம் மடகாஸ்கர் நாட்டின் பாதி விவசாய நிலங்களை குத்தகைக்கு
எடுத்து தென் கொரிய நாட்டுக்கு தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்ய
ஒப்பந்தம் இட்டது. அந்நாட்டு மக்கள் புரட்சிக்கு பின் இத்திட்டம் கை விட
பட்டது. இது போன்ற செயல்களில் முக்கியமாக இறங்கியிருக்கும் நாடுகள்
சினா,கொரியா,ஜப்பான்,அரபு நாடுகள் மற்றும் சில மேலை நாடுகள். இந்தியாவை
சேர்ந்த கம்பெனிகளும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்திய
கம்பெனிகள் மடகாஸ்கரில் நெல்,கோதுமை மற்றும் பயறு வகைகள், மலேசியா
,இந்தோனேசியா போன்ற நாடுகளில் எண்ணெய் வித்து மற்றும் பயிறு வகைகள்
போன்றவற்றை உற்பத்தி செய்வதில் அர்வம் காட்டுகிறார்கள்.

இவ்வகை
வியாபரத்தில் சீனாவின் பங்கு மிகவும் குறிப்பிட தக்க அளவில் வளர்ந்து
வருகிறது. சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சியாலும்,தொழிற்மயமாதலும் விவசாய
நிலம் குறைந்து வருகிறது. சீனா தன் வருங்கால விவசாய தேவையை பூர்த்தி செய்ய
ஆப்ரிக்க(காங்கோ,சாம்பியா,சூடான்,சோமாலியா என பல நாடுகள்),தென்
அமெரிக்க,ரஷ்யா,பாக்கிஸ்தான் என பல நாடுகளில் பெருமளவு நிலத்தை வாங்கி
குவித்து வருகிறது. இனி வரும் காலங்களில் சீனா சுமார் ஒரு மில்லியன் சீன
விவசாயிகளை ஆப்ரிக்க நாடுகளில் விவசாயத்துக்காக குடி அமர்த்த போவதாக
செய்திகள் வந்து கொண்டுள்ளது.

அது போல் அரபு நாடுகள் தங்கள்
நாடுகளில் விவசாயம் செய்ய அதிக செலவு ஆவதாலும் ,தண்ணீர் பற்றாக்குறையாலும்
தங்கள் வருங்கால உணவு தேவையை சரி செய்ய பாக்கிஸ்தான்,கம்போடியா,பிலிபைன்ஸ்
போன்ற ஆசிய நாடுகளிலும், தென் அமரிக்க நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில்
பெருமளவில் நிலங்களை வாங்கி குவிக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம்
கம்போடியா நாட்டில் குவைத், குவத்தார் போன்ற நாடுகள் சுமார் 125,000
ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு வாங்கி உள்ளது.

தற்போதய நிதி
நெருக்கடியால் மற்ற துறைகளில் லாபம் குறைவதாலும், விவசாய பொருட்களின் விலை
ஏற்றத்தாலும் பெரும்பாலான மேலை நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இது போல்
பெரிய அளவு ஏழை நாடுகளில் விவசாய நிலங்களில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர்

இதனால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் நன்மைகளாக கூற படுபவை

1.ஏழை
நாடுகளிடம் விவசாயத்தில் முதலீடு செய்ய அதிக பணம் இல்லாததால் புதிய தொழில்
நுட்பம் பயன்படுத்தி தேவையான் இடு பொருட்களை இட்டு அதிக உற்பத்தியை
பெருக்க வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இவ்வகை முதலீடுகளால் நவீன தொழில்
நுட்பத்தை பயன் படுத்தி அதிக அளவு உற்பத்தியை ஏற்படுத்த் முடியும்.

2.
பல நாடுகளில் அதிக அளவு விவசாயம் செய்யும் நிலங்கள் இருந்தாலும் முதலீடு
இல்லாததால் அவற்றை அந்நாட்டு மக்கள் விவசாயம் செய்வதில்லை. இது போன்ற வெளி
நாட்டு முதலீடு மூலம் அந்த நிலங்களில் விவசாயம் செய்து உற்பத்தி பெருக்கம்
செய்யலாம்

3. வெளி நாட்டினர் முதலீடு செய்யும் போது அவர்கள் நல்ல
சாலை, சேமிப்பு கிடங்கு, துறைமுகம் போன்ற உள் கட்டமைப்பு வசதிகளை
பெருக்குவர். அதை பயன் படுத்தி ஒட்டு மொத்த நாடே வளர்ச்சி அடையும்.

4.பெரும்பாலான
நாடுகள் ஏழை நாடுகளிடம் நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் போது அந்நாடுகளில்
நல்ல மருத்துவமனை கட்டி தருவது, கல்வி நிறுவனங்கள் அமைப்பது போன்ற
வளர்ச்சி பணியில் அதிக கவனம் செலுத்த உறுதி அளித்துள்ளனர்.

5.ஏழை நாடுகளில் இது அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும

இந்த நில பிடுங்கல் ஏழை நாட்டு மக்களுக்கு தீமையை ஏற்படுத்தும் காரணங்கள்

1.
நிலத்தை விற்கும் ஏழை நாடுகள் இது போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்
போது அவர்களுடைய நன்மையை ஒப்பந்தத்தில் சேர்க்கும் அளவு பேசுவதற்கு ஏற்ற
உயர்ந்த நிலையில் (bargaining power) இல்லை.அதாவது அவர்களது பொருளாதார
நிலை மிகவும் மோசமாக உள்ளது. அந்நிய செலாவணி மற்றும் முதலீட்டை கவர
எதற்கும் அவர்கள் ஒத்து கொள்ளும் நிலையில் உள்ளனர். மேலும் இது போன்ற
நாடுகளின் உயர்மட்டத்தில் ஊழல் அதிக அளவு இருப்பதால் விவசாயிகளின்
நன்மைக்கான சரத்துகளை ஒப்பந்தத்தில் சேர்ப்பது கேள்வி குறியே.

2.
லாப நோக்கில் பெரிய அளவில் இந்த ஒப்பந்தம் செய்ய படுவதால், சிறு மற்றும்
குறு விவசாயிகளின் நிலங்கள் பிடுங்க பட்டு பெரிய அளவில் இயந்திரங்கள்
கொண்டு விவசாயம் செய்ய தொடங்கபடும்.

3. சிறு மற்றும் குறு
விவசாயிகள் நிலம் இழந்து விடுவர். அதே நேரம் இயந்திரமயமான விவசாயம் செய்ய
போவதால் நிலம் இழந்த அனைவருக்கும் வேலை கிடைப்பது கடினம்.

4.
ஏற்கனவே இந்த நாடுகளில் அவ்வப்போது பஞ்சமும் பட்டினியும் காணப்படுகிறது.
இனி பெரும்பாலான உணவு பொருட்களை விளைவித்து வெளி நாட்டுக்கு ஏற்றுமதி
செய்வதால் இது போன்ற பஞ்சத்தின் பாதிப்பு மேலும் அதிகறிக்க கூடும்.

5.
ஒப்பந்தத்தால் பயிரிட படும் பயிர்கள் பெரும்பாலான நாடுகளில் அந்த
நாட்டினரால் விரும்பி உண்ணபடுவது இல்லை. அதனால் இந்த பயிரினால் உள் நாட்டு
மக்களுக்கு எந்த உபயோகமும் இருக்காது.

6, அந்நாடுகளில் பாரம்பரிய வகையில் செய்ய படும் விவாசயமும், பாரம்பரிய பயிர் வகைகளின் பன்முகமும் (crop diversity) அழிக்க படும்.
7. நவீன விவசாயத்தால் சுற்று புற சூழ்நிலை பாதிப்படைவதுடன், காடுகள் போன்ற இயற்கை வளங்கள் அதிக அளவு அழிக்க பட வாய்ப்புள்ளது

8. வேளாண் இடு பொருட்களான விதை, உரம், பூச்சி மருந்து போன்றவறை அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

ஏழை
நாடுகளுக்கு முதலீடு அதிகம் கிடைத்தாலும் அதனால் பயனடைய போவது அங்கு
பெரும்பான்மையாக இருக்கும் ஏழை விவசாயிகளாக இருப்பது சந்தேகமே .

தற்போது
உள்ள சூழ்நிலையில் இந்திய சிறு மற்றும் குறு விவசாயிகள் சற்று
ஜாக்கிரதையாக இருப்பது நல்லது தான். அரசு அந்நிய செலவானி கிடைக்கும்
என்பதால் நம்ப ஊர் நிலங்களையும் பெ ரிய பன்னாட்டு கம்பெனிகளுக்கு
விற்றாலும் ஆச்சிரிய படுவதற்கில்லை.
http://tamilfuser.blogspot.com/2009/05/outsource.html

Control oil and you control nations; control food and you control the people,”--Henry Kissinger in 1970.
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம் Empty Re: ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம்

Post by மீனு Mon Oct 12, 2009 9:06 pm

அருமையான தகவல்களை தந்து உள்ளீர்கள் நிலாசகி..நன்றிகள்.. மகிழ்ச்சி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum