புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_lcapசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_voting_barசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_lcapசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_voting_barசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_lcapசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_voting_barசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_lcapசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_voting_barசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_lcapசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_voting_barசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_lcapசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_voting_barசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_lcapசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_voting_barசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_lcapசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_voting_barசிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 22, 2012 10:42 am

First topic message reminder :

புதுக்கவிதைக்கு இலக்கணம் என்ன என்ற தேடுதலில் இறங்கும் போது, ரசிக்கப்படும் அனைத்தும் சிறந்த கவிதைகளே என்ற விடையே மேலோங்கி இருக்கிறது. ஆயினும் கவிதை எழுத வேண்டும் என்று கற்பனையுடன் கற்க நினைக்கும் மாணவனுக்கு இது நிறைவில்லாத பதில் தான்.

புதுக்கவிதை சென்ற நுற்றாண்டின் மத்தியில் தழைத்து, செழித்து, படர்ந்து, வளர்ந்து வந்த போதிலும் ஆரம்ப காலக் கவிதைகளில் ஓர் ஒழுங்கு இருந்ததாகத் தெரிகிறது. தளை இலக்கணத்துக்கு கட்டுப்படாமல் இருப்பினும் அடி, சீர் எண்ணிகையில் ஒழுங்கு, மொழிப்புலமை, கற்பனைவளம் ஆகியவை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர முடிந்தது.

புலமை பெற்றவரை புலவர் என்று அழைக்கும் போது, கவிதை எழுதுபவரை கவிஞர் என்று அழைப்பதும் சரி என்ற நிலையில் இன்று நாம் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்நிலையில், கருத்து மட்டும் இருந்தால், அது கவிதை ஆகிவிடுமா? சரியான அல்லது சிறப்பான கவிதை எது என்ற கேள்விக்கு விடை, கைக்கெட்டா கனியாகவே உள்ளது.

தமிழ் இணையதளங்கள் பெருகி, கவிதைகளும் பெருகிவிட்டது. தினசரி செய்திகளைப் போல், கவிதைகளும் புற்றீசல் போல் வந்துகொண்டே இருக்கிறது. ஈசல்கள் போல் குறைந்த ஆயுளை கொண்டுள்ளது. உரைநடைகளை மடக்கி எழுதி கவிதையாய் செய்யும் வித்தையே காலூன்றி நிற்கிறது.

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும், உறவுகள் தங்களின் மேலான கருத்தை தெரிவித்தால் கவிதை கற்க நினைப்பவனுக்கு மேலும் தெளிவு பிறக்கும்.

ஆவலுடன்....

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 22, 2012 7:59 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:கவிதை என்பது என்ன?
கவிதை எழுதுதல் சிறப்பு யாது?
கவிதை எப்படி அமையவேண்டும்?

கண்ணதாசனின் திரைப்பட பாடல் வரிகள் அனைத்துமே கவித்துவம் வாய்ந்தவை.
சின்ன சின்ன எளிய சொற்களால் நமது மனதை ஆட்டிப் படைக்கும் தன்மை வாய்ந்தவை.

பல நவீன கவிதைகள் சிறப்பாக இருந்தாலும் அனைவராலும் புரிந்துகொள்ள முடியாமல் போனதுண்டு.

எளிய அடுக்கு மொழிகளைக் கொண்டு எழுதும் கவிதைகள் சிறப்பிடம் பெறுகின்றன.

' தொட்டால் பூ மலரும் ....
தொடமால் நான் மலர்ந்தேன்....
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ...... '

இலக்கணத்தோடு புனையும் கவிதைகளை விட மேற்கண்ட கவிதை இசைப்பாடலாகவும் அமைகிறது. அனைவரது எண்ணங்களையும் ஈர்க்கிறது.

மேலும் சில கவிதைகள் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புரட்சியை தூண்டுகிறது.

பாரதியாரின் கவிதைகள் இப்படித்தான் அமைந்தன. ' என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? ' என்னும் வரிகள்.

பின்பு எழுதப்பட்ட ஒரு கல்லூரி மாணவனின் கவிதை:
' இரவில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை ' என்று சுதந்திரத்தைப் பற்றி எழுதிய வரிகள் அனைவர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

எனவே கவிதை என்பது கருப்பொருளோடு எளிய வகையில் ஒரு மாற்றத்தை தர வேண்டும் . காதல், களவு, வீரம், கொடை, சமூகம் என எந்த கருப்பொருளிலும் எளிய சொற்களோடு அமைந்த கவிதைகளே தற்கால மன மேடையில் உலா வருகின்றன.

நன்றி நல்லதொரு திரியின் அறிமுகத்திற்கு சதாசிவம் அவர்களே.

அழகான விளக்கத்திற்கு மிக்க நன்றி அய்யா. தங்களின் கூற்று இன்றைய கவிதைகளை படம் பிடித்து காட்டுகிறது. இருப்பினும் திரைப்பட பாடல் வரிகள் பலதும் இசையில்லாமல் படித்து பார்க்கும் போது, உரைநடை போன்ற மாயையும் ஏற்படுத்துகிறது. பாரதி, பாரதிதாசன் கவிதைகள் கற்பனை வளமும், சிறப்பான சொல்லாச்சியும், எளிமையும், ஓசை நயத்துடனும் இருந்தது. ஆகையால் தான் அவை காலம் கடந்து வாழ்கிறது.

அதுமட்டுமல்லாமல், சென்ற தலைமுறையில் மொழியின் கூறுகளான எதுகை, மோனை, இயைபு என்ற ஓசை நயம் மிகுத்து காணப்பட்டது. அப்படி எழுதுவதே கவிதை என்று கருதப்பட்டது. இன்றைக்கு நாளுக்கு நாற்பது கவிதைகள் இணையத்தில் இடம்பெறுகிறது. புதிய தலைமுறைக் கவிஞருக்கு மொழியின் சிறப்பு பண்புகள் தெரியாமலே போய்விடுகிறது, அல்லது அவசியம் இல்லை என்ற எண்ணம் தலைதூக்கி இருக்கிறது. இச்சிறப்புகள் மெல்ல அழிந்து விடுமோ என்ற அச்சமும் மேலோங்குகிறது.
கவிதை வடிவமாக இருப்பினும், வார்த்தைகள், கருத்துகள், உவமைகள் பெரும்பாலும் சுழன்று சுழன்று வருகிறது. தாய்மை, காதல், ஈழம், ஊழல், நட்பு, தாய்மொழி, சமூக அவலங்கள் என்ற வட்டத்துக்குள் வலம் வருகிறது. இயற்கை வெகு அபூர்வமாகவே போற்றப்படுகிறது.

இதைத்தாண்டி என்ன எழுதலாம் என்று கவிஞர்களை கவிதைகளை வைத்து பட்டியலிட ஆரம்பித்தால் அப்பட்டியல் ஒரு கை விரலுக்குள் அடங்கி விடுகிறது.

இரவு சுதந்திரச் சிந்தனை, சிந்தையில் நிற்கிறது. இரவல் சிந்தனைச் சுதந்திரம் சிந்திய நீராய் சிதறி மறைகிறது.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 22, 2012 8:26 pm

கே. பாலா wrote:கவிதையில் கவித்துவம் இருக்கவேண்டும்

வெற்று வார்த்தைகளும் எதுகை மோனைகளும் ,,சிலர் நினைப்பதுபோல் தளை, சீர் போன்ற இலக்கண அளவுகோல்கள் சரியாக இருந்து கவிதை நயம் இல்லை என்றால் என்ன பயன் !

கவிகோ அப்துல் ரஹ்மான் படைத்த கவிவரியை உதாரணம் சொல்லலாம்
புகையை காற்று மேலே கொண்டுபோர்யிற்று .புகைக்கு தலைகால் புரியவில்லை அது சூரியனையும் சந்திரனையும் கர்வத்தோடு பார்த்தது நானும் உங்களோடு ராஜா வீதியில் பவனிவருகிறேன் என்று பெருமை பேசியது
மேகத்தை பார்த்து புகை சொன்னது உன்னை போலவே நிறம் உன்னை போலவே உருவம் உன்னை போலவேஉயரத்தில் இருக்கிறேன் நானும் மேகம்தான் என்றது
சில முட்டாள் மயில்கள் தோகை விரித்து ஆடின

மேகம்
கடகடவென்று சிரித்து விட்டு
மழையாய் இறங்கியது
நனைந்து சிலிர்த்த
பூமி சொன்னது
பெருமை மேலே ஏறுவதில் இல்லை
கீழே இறங்குவதில் இருக்கிறது

நன்றி பாலா சார்.

என்னுடைய சந்தேகம் இங்கு தான் ஆரம்பமாகிறது. நீங்கள் எடுத்துக்காட்டிய கவிதை சிறப்பான சிந்தனை, இச்சிந்தனை பேச்சாகப் பேசினாலும் கைதட்டு பெரும் சிறப்பு வாய்ந்தது. கவிதைக்கு தளை, இலக்கணச் சிறப்பு இல்லாமல் போகலாம். இந்த கவித்துவம் மட்டுமே இருந்தால் அது கவிதை ஆகிவிடுமா ? ஆங்கிலத்தின் quotes என்று சொல்லப்படும் பலதும் இது போன்ற மாற்றுச் சிந்தனையில் மலர்கிறது. ஆனால் இவைகள் POEMS என்று அங்கீரிக்கப்படுவதில்லை.

உதாரணம்

"you need power when you want to something harmful , love is enough to get everything done " -சார்லி சாப்ளின்

இதை தமிழாக்கம் செய்தால் கவிதை ஆகிவுடுமா,

தமிழாக்கம் செய்யப்பட்ட மற்றொன்று

உனக்கென உலகத்தில்
யாருமே இல்லாமல்
இருக்கலாம், ஆனால்
யாரோ ஒருவருக்கு
நீங்கள் உலகமாகலாம்

கவிதை போல் தோன்றுகிறது, ஆனால் கவிதையா. இதை ஆங்கிலப் படுத்தினால் Quotes என்று தான் சொல்லப்படுகிறது.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 22, 2012 9:11 pm

கவிதை என்பது எழுதுவதில் இல்லை;ஈர்ப்பதில் இருக்கிறது என்பது என் தரப்பு வாதம்.இது சிலருக்கு வதமாகவும் இருக்கலாம்.நியாயமே.தவறில்லை.

மொழி ஆளுமை என்பது கவிதைக்கும்-கவர்ந்திழுக்கும் பேச்சுக்கும் கட்டாயம் முக்கியமான முதுகெலும்பு என்பதில்தான் எப்போதும் எனக்கு உடன்பாடு.

வார்த்தைகள் படை திரட்டி வரும் காட்டாறும் சரி - கட்டுக்குள் ஓடும் ஆறும் சரி எதுவானாலும் கரைகளை அரித்துவிட்டுப் போவதை விட உடைத்துவிட்டுப் போக வேண்டும்.அதில்தான் உணர்வும் உணர்ச்சியும் மிதந்து மிதந்து மேலே வரும்.மேன்மை காட்டும்.இல்லையேல் வெறும் மேனா மினுக்கி வித்தைகளாகி மிச்ச சொச்சம் இருப்பதும் குப்பைக்குப் போய்விடும்.

ஒன்றை மட்டும் ஒவ்வொருவரும் உரத்தக் குரலில் பேசி ஒப்புக்கொள்ள வேண்டும்.ஆம்.அது...காதல் மட்டுமே கவிதைக்குப் பாடுபொருள் என்பதாகவே இன்றைய கவிஞர் திருக்கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது.இது என்னைப் பொறுத்தவரை இன்றைய கவிஞர்கள் எல்லோருக்கும் பொருந்தும் ஏறக்குறைய.

'அருகில்'-'அருகாமையில்' இரண்டுக்கும் வேறுபாடு தெரியாத ஒரு பெருங்கூட்டமும்,'ஒரு'வுக்கும் 'ஓர்'க்கும் உரித்தான இடங்களாகட்டும் ஒற்று மிகும்-மிகா இடங்களாகட்டும் எதிலும் கவனம் கொள்ளாமல் அதைக் காற்றில் பறக்கவிடும் இன்றைய 'பிரபல' பாடலாசிரியர்கள் சிலரும் தாங்கள் எழுதுவதுதான் சிறந்த கவிதை என்பதாகச் சித்தரிக்கின்றனர்.இதைக் கேட்டுச் சித்தம் கலங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இலக்கணம் கற்றவர்கள் தான் எழுத வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடில்லைதான்.ஆனால் மொழியின் ஆழ-அகலங்களை
ஓரளவேனும் உள்ளிருத்திக்கொள்வது நல்லது என்ற கட்சியில்தான் நான் எப்போதும்.

மரபோ-புதிதோ எதில் எழுதினாலும் ஏதேனும் புதிதாக எழுதினால் உத்தமம்.

ஆனால் அதற்கு முன்பாக...

ஒரு வார்த்தை எழுத வேண்டுமானால் ஒரு நூறு வார்த்தைகளை வாசிக்க வேண்டும் என்று எங்கள் பேராசிரியர் ஒருவர் சொன்னது
எல்லோருக்கும் பொதுவானது என்பதாகவே நான் உணர்கிறேன்...

இந்த திரியில் என் கருத்தையும் பகிர வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த சதாசிவம் அவர்களுக்கு நன்றி...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 22, 2012 9:30 pm

அருமையான திரி ....நானும் தெரிந்துக்கொள்ள நிறைய இருக்குது....

[You must be registered and logged in to see this image.]
அச்சலா
என் தளம்:[You must be registered and logged in to see this link.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 22, 2012 9:31 pm

கவிதை என்பது எழுதுவதில் இல்லை;ஈர்ப்பதில் இருக்கிறது
இதை நானும் வழிமொழிகிறேன்

எது ஈர்க்கும் என்பதில் தனி தனியான ரசனை உண்டு ...அது வாசிப்பு அனுபவத்தை பொறுத்தது .

மௌனி நகுலன் ஆகியோரின் கவிதைகள் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு பிடிபடாமேலேயே போகும்,, சிலருக்கு எளிமையாக சொல்வதுதே புரியும்

எது நல்ல சினிமா என்று கேட்டால் என்ன விடைவரும்

கண்டிப்பாக ஒரே விடைவராது என்பது மட்டும் நிச்சயம்

எனக்கு பிடித்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
உங்களுக்கு பிடித்த கவிதை எனக்கு பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 22, 2012 9:44 pm

கே. பாலா wrote:

எது ஈர்க்கும் என்பதில் தனி தனியான ரசனை உண்டு ...அது வாசிப்பு அனுபவத்தை பொறுத்தது .

உண்மைதான்...

எது நல்ல சினிமா என்று கேட்டால் என்ன விடைவரும்

கண்டிப்பாக ஒரே விடைவராது என்பது மட்டும் நிச்சயம்

இது சற்றே சர்ச்சைக்குரிய விவாதமே...இருந்தும் அப்பட்டமான உண்மை...

எனக்கு பிடித்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
உங்களுக்கு பிடித்த கவிதை எனக்கு பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

இது எப்பேர்ப்பட்ட உண்மை முரண்...சூப்பர்...

எல்லாமே நிஜம் பாலா சார்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 9:57 pm

நல்லது.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Nov 23, 2012 5:28 pm

கருத்துகள் பகிர்தமைக்கு பாலா சாருக்கும், நண்பர் ரா ரா அவர்களுக்கும் மிக்க நன்றி.

ஒவ்வொரு பொருளுக்கும், திறமைக்கு தரக்கட்டுப்பாடு அவசியம். அப்போது தான் இருப்பதில் எது சிறந்தது என்று முடிவு செய்ய இயலும். 40 மார்க் எடுத்தவன் பாஸ், 60 மேல் உள்ளவவன் first கிளாஸ் என்று சொல்வது போல். உலக அளவில் ஒருவரின் ஆங்கிலப் புலமை அல்லது மொழித்திறமை பலவகை அடுக்குகளாக வகுக்கப்பட்டுள்ளது.

ரசனையில் மட்டும் ஒரு கவிதையின் சிறப்பு வெளிப்படுமா ? திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் ஒவ்வொருவருக்கும் ஒரு படம் பிடிக்கும். இதை வைத்து நாம் அத்திரைப்படத்தை மதிப்பீடு செய்கிறோம். இது சரியா என்று கேட்டால் உலகப் பார்வையில் இது பழைய சிந்தாந்தம். திரைப்பட கல்லூரியில் அனைத்து படங்களும் பாடங்களாக நடத்தப்படுவதில்லை.

ஆஸ்கர் விருந்து போன்றவைகளுக்கு, சில இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளது. எவர் நடுவராக இருக்கலாம், என்ன என்ன அம்சம்கள் பரீசிலிக்கப்பட வேண்டும், இதன் அளவுகோள் என்ன என்பது உட்பட. ஏன் இந்தியாவில் ஒவ்வொரு மாநில தணிக்கைத் துறை குழுவுக்கும் ஒரு வழிகாட்டி கையேடு அளிக்கப்படுகிறது. ஆதலால் தனக்கு பிடித்தது சிறந்தது என்று ஒரு வாசகன் முடிவு செய்யலாம், ஆனால் ஒரு நடுவரோ, விமர்சகரோ இப்படி முடிவு செய்யக்கூடாது. அதற்கு சில வரைமுறைகள் தேவைப்படுகிறது. இதனால் தான் தமிழை குரங்குடன் ஒப்பீடு செய்வதை அனுமதித்த தணிக்கை குழுவால் , ஒரு ஜாதியையோ, மதத்தையோ இப்படி ஒப்பீடு செய்வதை அனுமதிக்க முடியவில்லை. மும்பையில் அனுமதிக்கபட்ட காட்சி சென்னையில் ரத்து செய்யப்பட்டுகிறது.

கவிதை கற்பவனுக்கும், திரைப்படம் கற்பவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. வெறும் ரசனையை மையமாக வைத்து திரைப்படக் கல்லூரிகள் பாடம் நடத்துவதில்லை.

இதுபோன்ற வரைமுறைகள் மரபுக்கவிதைகளில் இருந்ததால் நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்றும், தமிழ்ச் சங்கத்தில் மன்னனே நிராகரித்தாலும் இப்பாட்டில் என்ன குற்றம் என்றும் கேள்வி கேட்க முடிந்தது. ஆனால் இன்றைய போட்டிகளில் நடுவர் தீர்ப்பே இறுதியானது. தேர்வுக்கு என்ன என்ன அம்சங்கள் பரீசீலிக்கப்பட்டது என்று பெரும்பாலான நடுவர் குழுக்குள் வெளியிடுவதே இல்லை. சிற்பம், நாட்டியம், சினிமா, சங்கீதம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் ஓர் இலக்கணம் எதிர்பார்க்கப்படுகிறது. தப்பாங்குத்துக்கும் தாளக்கட்டு அவசியம்.. இக்கட்டுப்பாடுகள் அல்லது நெறிமுறைகள் கலையை கற்க விரும்பும் ஒருவனுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

சிறப்பான கவிதைக்கு பாடம் நடத்துவதானால் ரசனையைத் தாண்டி, நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். கவிதைக்கு ஈர்ப்பு என்பது உயிர், வார்த்தை அல்லது மொழிப் பிரயோகம் உடல் போன்றது. பல கவிதைகளில் உயிர் இருக்கிறது, உடல் இல்லை. மொழியின் சிறப்புகள் உதாசீனப் படுத்தப்படுகிறது.

ஆனால் இன்றைய கவிஞர்கள் சுலபமான வழியை ஆதரிக்கின்றனர்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 23, 2012 9:01 pm

///சிறப்பான கவிதைக்கு பாடம் நடத்துவதானால் ரசனையைத் தாண்டி, நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். கவிதைக்கு ஈர்ப்பு என்பது உயிர், வார்த்தை அல்லது மொழிப் பிரயோகம் உடல் போன்றது. பல கவிதைகளில் உயிர் இருக்கிறது, உடல் இல்லை. மொழியின் சிறப்புகள் உதாசீனப் படுத்தப்படுகிறது. ///

இதை நான் முழுக்க முழுக்க ஒப்புக்கொள்கிறேன்-உடன்படுகிறேன்...
நன்றி சதாசிவம் அவர்களே...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 24, 2012 10:56 am

ரா.ரா3275 wrote:///சிறப்பான கவிதைக்கு பாடம் நடத்துவதானால் ரசனையைத் தாண்டி, நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். கவிதைக்கு ஈர்ப்பு என்பது உயிர், வார்த்தை அல்லது மொழிப் பிரயோகம் உடல் போன்றது. பல கவிதைகளில் உயிர் இருக்கிறது, உடல் இல்லை. மொழியின் சிறப்புகள் உதாசீனப் படுத்தப்படுகிறது. ///

இதை நான் முழுக்க முழுக்க ஒப்புக்கொள்கிறேன்-உடன்படுகிறேன்...
நன்றி சதாசிவம் அவர்களே...

தங்களின் ஒப்புதலுக்கு மிக்க நன்றி....

நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக