ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை

4 posters

Go down

முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை Empty முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை

Post by DERAR BABU Wed Nov 21, 2012 5:42 pm

"ஒரு வாழைப்பழத்துக்குப் போய் இவ்வளவு பெரிய சண்டையா...'' என்ற கேள்வியும், ""வாழைப் பழம் என்ன...? சாதாரண விஷயமா'' என்று கூறி நீண்ட விளக்கம் அளிக்கும் பதிலும் திரைப்படத்தில் வரும் பிரபலமான நகைச்சுவைக் காட்சி.

அதே நேரத்தில், வாழைப் பழம் என்பது சாதாரண விஷயம் இல்லைதான் என்பதை ஐரோப்பிய யூனியனுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த வாழைப்பழ வர்த்தகச் சண்டை உணர்த்தியுள்ளது.

ஐரோப்பிய யூனியனுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப் பழத்துக்கு விதிக்கப்படும் சுங்க வரிதான் இங்கு சண்டைக்கு மூலகாரணம்.

வாழைச் சாகுபடியில் உலகில் முன்னணியில் இருப்பது ஈக்வடார், குவாதமாலா, ஹோண்டுராஸ், மெக்சிகோ, கொலம்பியா, பெரு, வெனிசூலா. பிரேசில், பனாமா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள். அதே நேரத்தில் வாழைப்பழ நுகர்வில் முன்னணியில் இருப்பவை ஐரோப்பிய யூனியன் நாடுகள். அங்கு வாழைப்பழத்துக்கு மிகப் பெரிய சந்தை உண்டு. லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏழை விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் வாழைப் பழங்கள்தான், ஐரோப்பியச் சீமான்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது.

வாழைப் பழத்தை பெருமளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் அதனை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. குளிர் பிரதேசத்தில் வாழையைச் சாகுபடி செய்ய முடியாது என்பதால் வாழைப் பழத் தேவைக்கு ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை நம்பியுள்ளன.

இதனிடையே ஆப்பிரிக்கா, கரிபீயன், பசிபிக் பிரதேசப் பகுதிகளில் (ஏசிபி நாடுகள்) தங்களிடம் அடிமைப்பட்டு இருந்த நாடுகளில் இருந்து வாழைப்பழ இறக்குமதி செய்யும்போது அவற்றுக்குச் சலுகை அளித்தன ஐரோப்பிய நாடுகள். அதாவது, தங்களின் காலனி நாடாக முன்பு இருந்தவற்றுக்கு வாழைப்பழ இறக்குமதியின்போது சுங்க வரி கிடையாது என்று அறிவித்தன.

அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்க வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட பிரச்னை தொடங்கியது.

தடையற்ற வாணிப ஒப்பந்தத்தின்படி இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்கவரி வசூலிப்பது நியாயமற்றது என்று போர்க்கொடி தூக்கின அந்நாடுகள். ஐரோப்பிய நாடுகள் இதனைக் கண்டுகொள்ளாததை அடுத்து பிரச்னை உலக வர்த்தக அமைப்புக்கு (டபிள்யூ.டி.ஓ) எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து பலகட்டங்களில் பேச்சு நடைபெற்றும் இறுதி முடிவு எட்டப்படாமலேயே இருந்தது.

ஐரோப்பிய நாடுகள் ஆண்டுக்கு சராசரியாக ஐந்தரை கோடி டன் வாழைப் பழத்தை இறக்குமதி செய்கின்றன. இதில் 70 சதவீதம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வருகிறது. 17 சதவீதம் "ஏசிபி' நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஸ்பெயின், போர்ச்சுகல், சைப்ரஸ், கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு சில இடங்களில் வாழைச் சாகுபடியாகிறது. ஆனால், இவற்றின் மூலம் 10 சதவீதத் தேவையை மட்டுமே நிறைவு செய்ய முடிகிறது.

வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஐரோப்பாவால் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளாலும் ஏற்றுமதி செய்யாமல் இருக்க முடியவில்லை.

ஏனெனில் ஐரோப்பாவுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழை ஏற்றுமதி பெரும் வருவாய் ஈட்டித் தருவதாக உள்ளது. முக்கியமாக ஈக்வடாரில் எண்ணெய்க்கு அடுத்தபடியாக, அதிக பணம் ஈட்டித் தருவது வாழைப்பழ ஏற்றுமதிதான்.

இதனிடையே உலக வர்த்தக அமைப்பின் மத்தியஸ்தத்தின்படி, ஐரோப்பிய யூனியனும், 10 லத்தீன் அமெரிக்க நாடுகளும் வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னைகளைத் தீர்க்க 8 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று உலக வர்த்தக அமைப்பு வர்ணித்துள்ளது.

இந்த ஒப்பந்தங்களின்படி அடுத்த 8 ஆண்டுகளில் வாழைப் பழத்துக்கான சுங்க வரியை படிப்படியாக குறைத்துக்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வாழைப் பழச் சண்டைக்கு தாற்காலிகத் தீர்வு காணப்பட்டுள்ளது.

வாழைப்பழ வர்த்தகத்தில் 20 ஆண்டுகள் பிரச்னை நீடித்துள்ளது என்றால், நமது உள்நாட்டுச் சந்தையை அன்னியர்களுக்குத் திறந்து விடுவதன் மூலம் இனி எந்தெந்த பிரச்னைகளை இந்தியா எதிர்கொள்ளப் போகிறதோ என்ற கவலையும் எழுகிறது.

இந்தியாவில் விவசாயம் இப்போது புறக்கணிக்கப்படும் தொழிலாக மாறிவருகிறது. இதனை மாற்ற முயற்சிக்காமல், அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நமது விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிலை வந்தால், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவையும் மலையான பிரச்னையாக மாறி அச்சுறுத்தும் என்ற அச்சம் எழுகிறது. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும், தண்ணீருக்கும் அன்னியர் முன்பு மண்டியிடும் சூழ்நிலை வந்துவிடக் கூடாது.
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை Empty Re: முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை

Post by ராஜா Wed Nov 21, 2012 6:22 pm

இந்தியாவில் விவசாயம் இப்போது புறக்கணிக்கப்படும் தொழிலாக மாறிவருகிறது. இதனை மாற்ற முயற்சிக்காமல், அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நமது விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிலை வந்தால், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவையும் மலையான பிரச்னையாக மாறி அச்சுறுத்தும் என்ற அச்சம் எழுகிறது. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும், தண்ணீருக்கும் அன்னியர் முன்பு மண்டியிடும் சூழ்நிலை வந்துவிடக் கூடாது
இதன் விபரீதம் இப்போ தெரியாது , இன்னும் சில வருடங்களுக்கு பிறகு தான் தெரியவரும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை Empty Re: முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை

Post by றினா Wed Nov 21, 2012 8:32 pm

வாழைப்பழத்தின் பெறுமதி அறிந்தவர்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை Empty Re: முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை

Post by கரூர் கவியன்பன் Wed Nov 21, 2012 8:40 pm

தற்போது உள்ள நிலை தொடந்தால் நிச்சயம் இந்தியா கை ஏந்தும் நிலை வரும் என்பது மட்டும் உறுதி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை Empty Re: முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்
» 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை!
» ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு!--முடிவுக்கு வந்தது
» 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை
» பாதுகாப்பு படைவீரர்கள் சரணடைந்தனர் : முடிவுக்கு வந்தது வங்கதேச புரட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum