ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்

3 posters

Go down

 சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர் Empty சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்

Post by சிவா Mon Nov 19, 2012 9:26 am



சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே உடல் நேற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சிவாஜி பார்க் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக பால் தாக்கரே இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்.

பால் தாக்கரே மரணம்

மராட்டிய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய சிவசேனா தலைவரான 86 வயது பால்தாக்கரே நேற்று முன்தினம் மாலை 3.33 மணிக்கு மூச்சு திணறல் மற்றும் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். பால் தாக்கரேயின் உடல் நேற்று முன்தினம் இரவு அவருடைய வீட்டிலேயே பிரமுகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.நேற்று நாக்பூர், சத்தாரா, புனே, அவுரங்காபாத், நாசிக், வாசிம், தானே மற்றும் மும்பையின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த லட்சக்கணக்கிலான சிவசேனா கட்சி தொண்டர்கள் மற்றும் பால் தாக்கரேயின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் அவரது வீட்டின் முன்பாக அதிகாலைகளிலேயே குவியத்தொடங்கினர். காலை 9 மணி அளவில் கலாநகர் பகுதியில் உள்ள சாலைகள் முழுவதுமே எங்கு பார்த்தாலும் கட்சி தொண்டர்களின் கூட்டமாக காணப்பட்டது. ஆகாய நடைமேம்பாலங்கள் மற்றும் மரங்களின் உச்சியிலும் ஏறி தொண்டர்கள் அமர்ந்திருந்தனர்.

இறுதி ஊர்வலம்

பால் தாக்கரேயின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிரக்கில் ஏற்றப்பட்டது. டிரக்கின் முன்பகுதியில் பால் தாக்கரே படம் பொறிக்கப்பட்ட ராட்சத பேனர் வைக்கப்பட்டிருந்தது. பால் தாக்கரேயின் உடல் காவி துணியாலும், அதற்கு மேல் மூவர்ண கொடி வைக்கப்பட்டு இருந்தது. பால் தாக்கரே மூக்கு கண்ணாடி அணியும்பழக்கம் உடையவர் என்பதால் அவருடைய கண்ணில் கறுப்பு நிற கண்ணாடி அணிவிக்கப்பட்டிருந்தது.காலை 9.30 மணி அளவில் இறுதி ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டது. பால் தாக்கரே உடல் வைக்கப்பட்டிருந்த லாரியில் அவருடைய மகன் உத்தவ் தாக்கரே, உத்தவ் தாக்கரே மனைவி ரேஷ்மி தாக்கரே, மகன்கள் ஆதித்ய தாக்கரே மற்றும் தேஜஸ் தாக்கரே மற்றும் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் மட்டும் இருந்தனர்.பால் தாக்கரே உடல் வைக்கப்பட்ட வாகனத்தின் பின்பகுதியில் சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவுத், கட்சியின் மூத்த தலைவரான மனோகர் ஜோஷி, சுபாஷ் தேசாய் எம்.எல்.ஏ., பா.ஜனதா கட்சியின் மேல் சபை உறுப்பினர் வினோத் தாவ்டே எம்.எல்.சி., மேயர் சுனில் பிரபு, சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள், கட்சி தொண்டர்கள் நின்றிருந்தனர்.

சிவசேனா பவனை அடைந்தது

பால் தாக்கரே உடலை சுமந்தவாறு வாகனம் மெல்ல, மெல்ல ஆமை வேகத்தில் நகர்ந்து வந்தது. மாகிம் கழிமுகப்பகுதி, மாகிம் பேராலயம், சிட்டி லைட் தியேட்டர் வழியாக தாதர் சிவாஜி பார்க்கில் உள்ள சிவசேனா கட்சியின் தலைமை அலுவலகமான சேனா பவன் நோக்கி வந்தது. அப்போது வழி நெடுக எங்கு பார்த்தாலும் கட்சி தொண்டர்களின் தலைகளாகவே இருந்தது.வீடுகளின் பால்கனிகளிலும், மொட்டை மாடிகளிலும் நின்றவாறு பால் தாக்கரேயின் நலம் விரும்பிகள், ஊர்வல காட்சிகளை புகைப்படம் எடுத்தனர். மேலும் கண்ணீர் மல்க பால் தாக்கரேயின் உடலை பார்த்து கட்சி தொண்டர்கள் கைகூப்பியவாறு மரியாதை செலுத்தினர்.

தலைவர்கள் அஞ்சலி

பால் தாக்கரே உடல் வைக்கப்பட்டிருந்த லாரிக்கு முன்னாள் ஆம்புலன்சு வாகனமும், போலீசாரின் வாகனமும் அணிவகுத்து சென்றது. காலை 9.30 மணிக்கு பாந்திராவில் தொடங்கிய பால் தாக்கரே இறுதி ஊர்வல வாகனம் மாலை 3 மணிக்கு சிவசேனா கட்சியின் தலைமை அலுவலகமாக சேனா பவனை அடைந்தது. அவரது உடல் கட்சி அலுவலக கட்டிடத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு கட்சியின் மூத்த தலைவர்களான மனோகர் ஜோஷி, தீபக் சாவந்த், நீலம் கோர்ஹே உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.இதனையடுத்து பால் தாக்கரே உடல் மாலை 4.55 மணிக்கு சிவாஜி பார்க் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் கலந்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிவாஜி பார்க்கில் பால்தாக்கரே உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. மத்திய வேளாண் மந்திரி சரத் பவார், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

துப்பாக்கி குண்டுகள் முழங்க..

இதனையடுத்து பால்தாக்கரே உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. அப்போது மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரும், பால் தாக்கரேயின் சகோரரர் மகனுமான ராஜ் தாக்கரே தன்னை அறியாமல் தேம்பி, தேம்பி கதறி அழுது கொண்டே இருந்தார்.பின்னர் மராத்திய பாரம்பரிய முறைப்படி இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து உத்தவ் தாக்கரே மாலை 6.15 மணிக்கு பால் தாக்கரேயின் உடலுக்கு சிதை மூட்டினார். அப்போது அரசு மரியாதை செலுத்தப்பட்டது. போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சிவாஜி பார்க் மைதானத்தில் திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் பாலா சாகேப், பாலா சாகேப் நீங்கள் மீண்டும் மண்ணில் பிறக்க வேண்டும்Õ என்று பலத்த சத்தத்துடன் கோஷங்கள் எழுப்பினர். சிவாஜி பார்க் மைதானத்தில் தொண்டர்கள் குவிந்ததால் அந்த மைதானம் குலுங்கியது.

அமைதியாக நடந்தது

சிவாஜி பார்க் மைதானம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் நேற்றைய தினம் ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அதில் 15 கம்பெனி மாநில ரிசர்வ் படையினர் மற்றும் 3 கம்பெனி கலவர தடுப்பு படையினர் முக்கிய சந்திப்புகள் மற்றும் நுழைவு வாயில்களில் நிறுத்தப்பட்டிருந்தனர்.எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் அமைதியான முறையில் இறுதி ஊர்வலம், இறுதி சடங்கு நடந்து முடிந்தன.

தினத்தந்தி


 சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர் Empty Re: சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்

Post by பிளேடு பக்கிரி Mon Nov 19, 2012 11:05 am

சோகம் சோகம் சோகம்



 சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர் Empty Re: சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்

Post by றினா Mon Nov 19, 2012 11:38 am

நன்மையே செய்வோம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

 சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர் Empty Re: சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum