புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_vote_lcapமுதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_voting_barமுதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
முதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_vote_lcapமுதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_voting_barமுதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
முதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_vote_lcapமுதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_voting_barமுதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
முதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_vote_lcapமுதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_voting_barமுதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
முதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_vote_lcapமுதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_voting_barமுதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Nov 18, 2012 3:37 pm

தாய் நிலமாகிய தமிழகத்திலேயே தமிழுக்கு எதிலும் மதிப்பில்லாச் சூழல் தான் பல காலமாக உள்ளது. கல்வியிலும் பணியிலும் நிர்வாகத்திலும் ஆலய வழிபாட்டிலும் என எல்லா இடங்களிலும் தமிழுக்குத் தலைமையை நாம் தரவில்லை. பெயர் சூட்டுவதில் இருந்து ஆரம்பமாகும் இந்த வேதனையான உண்மை தமிழர்களின் பல நிலைகளில் தொடர்கிறது.
பெயருக்கு முன்னால் குறிக்கப்படும் முதல் எழுத்து (இனிஷியல்) என்பது தமிழகக் கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஒன்றாகும். குடும்ப உறவு முறை இன்னும் சிதையாமல் கட்டிக் காப்பாற்றப்படும்இந்தியாவில் இந்த முதல் எழுத்து என்பது இல்லாமல் ஒருவர் பெயர் எழுதினால் அவரை ஒவ்வாமைப் பார்வைகள் சூழும். இனிசியல் என்பதற்குத் தலையெழுத்து, தலைப்பெழுத்து ஆகிய சொற்களை முன்னோர் சிந்தித்திருக்கின்றனர். தலை என்பது முதன்மை என்னும் பொருளில் வரும் சொல். ‘எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்பது போல பெயருக்கு தலைப்பெழுத்தே முக்கியமாகக் கருதப்படுகிறது.
தந்தை பெயரின் முதல் எழுத்தை பெயரின் அடையாளமாகக் குறிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒன்றாகும். அந்த முதல் எழுத்தை தற்போதுள்ள நம் தமிழர்கள் பலர்- வேகமான முற்போக்கு வாதிகள்- அதனால்தான் தப்பித் தவறி தமிழில் தன் பெயரை எழுதிவிட்டாலும் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில், அரசு ஆவணங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதி தங்கள் பெயரை எழுதுகின்றனர். தமிழில் பெயர் எழுதுபவர்கள் கூட முன்னெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி விடுகின்றனர்.
ம.குமார் என்ற தனது பெயரை M.குமார் என்று எழுதுகின்றார்கள். பள்ளிக்கூட வருகைப் பதிவேடு தொடங்கி அனைத்து இடங்களிலும் இதே நிலைதான்.உலகில் வேறு எந்த மொழியினரும் அவர்கள் தலைப்பெழுத்தை வேற்று மொழியில் எழுதுவதில்லை. தங்கள் தாய்மொழியில்தான் எழுதுகிறார்கள். ஆனால் தமிழர்கள் மட்டுமே தன் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி அகமகிழ்கிறார்கள். மு.murugan என்பதைத் தவறென உணரும் தமிழர் M.முருகன் என்பதை தவறென அறியாமல் எழுதுகின்றனர்.
இந்தத் தவறுகளை செய்வதில் சில அரசியல்வாதிகளும் திரைப்படத் துறையினரும் முன்னணியில் உள்ளனர். காரணம் எண் கணிதம் முறை. ஒரு நடிகர் தன் பெயரையே சுருக்கி S.T.R. என்று மாறிவிட்டார். அரசியல்வாதிகளும் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டு மூன்று நான்கு ஆங்கில எழுத்துக்களாக தங்கள் பெயரை அழைப்பதில் பெருமை கொள்கிறார்கள். இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக உள்ளது.
ஆங்கிலத்தில் தலைப்பெழுத்து எழுதுவதால்நேரும் இன்னொரு குழப்பத்தை பலரும் அறிவதில்லை. K என்று ஆங்கில எழுத்தை எழுதி ஒருவர் தன் பெயரை எழுதுகிறார். K என்பது கண்ணனையும் குறிக்கும் காத்தமுத்துவையும் குறிக்கும். குறிலுக்கும் நெடிலுக்கும் ஆங்கில எழுத்து ஒன்றுதான். பெயர்கள் வேறு வேறாக இருந்தாலும் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதினால் ஒரே எழுத்துதான். க. அமுதன்என்றும் கா. எழிலன் என்றும் தமிழில் முதல் எழுத்தை குறிப்பிட்டால் இந்தக் குழப்பம் வராதே. ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதும் தமிழர்கள் இதை பரிசீலிப்பார்களாக.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. என்னவென்றால் ‘உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், தங்கள் முதலெழுத்தை, தமிழில்தான் எழுத வேண்டும்’ என்பதாகும். ஆனால் இதனை எத்தனை அரசு ஊழியர்கள் பின்பற்றினார்கள் என்று தெரியாது. சட்டம், உத்தரவு,ஆணை இவையெல்லாம் தான், தமிழர்க்கு தமிழ் உணர்வை ஊட்ட உதவும் கருவிகள் என்று எண்ணும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் உணர்வு இயல்பாய் எழ வேண்டும். உணர்வில் கலந்த தமிழை கையெழுத்தாய், கையெழுத்தின் முதல் எழுத்தாய் வெளிப்படுத்த வேண்டும்.
முதல் எழுத்தையே தமிழில் எழுதாதவர்கள் எப்படி தமிழில் கையெழுத்து போடுவார்கள்? தமிழில் கையெழுத்திடுவது ஏளனம், ஆங்கிலக் கையொப்பம்தான் நமக்கு அறிவு இருப்பதைக் காட்டுகிறது என்று ஆங்கிலத்தில் கையொப்பமிட்டு பெருமிதப்படுகிறார்கள். இப்படி தன் ஆங்கில அறிவை வெளிக்காட்டிக்கொள்ள தமிழை ஒதுக்கிவைத்து விட்டு வங்கிக் காசோலைகள்,கடவுச் சீட்டு, அலுவலக ஆவணங்கள், பிற விண்ணப்பங்கள், ஓட்டுநர் உரிமம் என்று எல்லாவற்றிலும் ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இடுகிறார்கள் நம் தமிழகத்துத் தமிழர்கள்.
படிப்பறிவு இல்லாதவர்கள் கைநாட்டு வைக்கும்போது கொஞ்சம் படித்தவர்கூட அதை கேலியாகப் பார்ப்பார்கள். இப்போது தமிழில் கையெழுத்திட்டால் அது மதிப்புக் குறைவு என்று எண்ணிக் கொள்கிறார்கள். படிப்பறிவு இல்லாதவரையும்தமிழில் கையெழுத்திடுவோரையும் ஒரேகோட்டில் நிறுத்திப் பார்க்கும் சூழல் இன்னும் அகலவில்லை.
நாம் தேசத் தந்தை என்று போற்றும் காந்தி அடிகளாருக்கு நண்பராக விளங்கிப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர்தாயார் உடல் நலமில்லாமலிருந்தபோது 1915 ஆம் ஆண்டு, காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10ரூபாய் பண உதவி அனுப்பினார். அதில் காந்திஅடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார்.இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதும் தமிழில் கையொப்பமிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது, பெருமிதம் கொள்ள வேண்டியது.
“தாய்மொழியினை மதித்து வீழ்ந்த நாடுமில்லை
தாய்மொழியினை மிதித்து வாழ்ந்த நாடுமில்லை” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இதை நினைவில் நிறுத்துவோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக