Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழிக்கு பழி!!
2 posters
Page 1 of 1
பழிக்கு பழி!!
வைரவன் பெரும் பணக்காரனாக இருந்தார். அவர் பணக்காரர்களை தனக்கு சமமாக நடத்தினார். அவர் அரண்மனையில், ஏராளமான வேலைக்காரர்கள் வேலை செய்து வந்தனர். தன்னைத் தேடி வருகின்ற பணக்காரர்களுக்கு, சுவையான உணவை கொடுத்து வந்தார்.
தனது பணக்கார நண்பர்களுக்கெல்லாம் அறுசுவை உணவினைக் கொடுத்த அவர், தன்னிடம் வேலை செய்கிற வேலையாட்களுக்கு மட்டமான உணவுகளைக் கொடுத்து, கடினமாக வேலை வாங்கினார். சம்பளமும் குறைவாக கொடுத்தார்.
இதன் காரணமாக, வேலையாட்கள் எல்லாரும் வைரவன் மீது மிகவும் வெறுப் பாகவே இருந்தனர். அவரை எந்த நேரத்தில், பழி வாங்கலாம் என்று தக்க நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் வைரவன் வெளியூர் புறப்பட முடிவு செய்தார். தனக்கு உதவியாக தனது வேலையாட்கள் நான்கு பேர்களை உடன் அழைத்துக் கொண்டார்.
வேலைக்காரர்களின் உதவியோடு, வண்டியில் பயணமானார்.
வண்டி ஓர் காட்டுப் பாதையின் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வேலைக்காரர்கள் நால்வரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர். தங்களுக்குள் மவுன பார்வை பார்த்தபடி, ஓர் முடிவுக்கு வந்தனர்.
உடனே, ஒரு வேலையாள் மெல்ல வண்டி ஓட்டுனரின் முதுகில் தட்டினான்.
உடனே வண்டி ஓட்டுனரும் நான்கு வேலைக்காரர் களின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கிற வகையில், வண்டியை நிறுத்திக் கொண்டான்.
வேலைக்காரர்கள் நால்வரும் வண்டியை விட்டுக் கீழே இறங்கினர். அவர்களோடு வண்டி ஓட்டுனரும் கீழே இறங்கினார்.
இதனைக் கண்ட வைரவன் ஆத்திரமடைந்தார்.
""வேலைக்காரர்களே! இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது. வண்டிக்காரர் ஏன் வண்டியை நிறுத்தி விட்டார். நீங்கள் எல்லாரும் எதற்காக வண்டியை விட்டு கீழே இறங்கினீர்கள்?'' என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
""ஐயா! நீங்கள் எங்கள் முதலாளிதான். ஆனால், இந்த நேரத்தில் நாங்கள் உங்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டால்தான் எங்கள் மனது அமைதியடையும். இதற்காகவே, காத்துக் கொண்டிருந்தோம். அது இப்போதுதான் நிறைவேற போகிறது,'' என்றான் ஒரு வேலையாள்.
அதனைக் கேட்ட வைரவன் திடுக்கிட்டார்.
""நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்கள் பேச்சு எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது?'' என்றார்.
""ஆமாம்! ஆமாம்! எங்களின் பேச்சு உங்களுக்கு வியப்பைத்தான் ஏற்படுத்தும். ஏனென்றால் நீங்கள் வாழ்க்கையிலேயே இதுவரையிலும் சந்திக்காத ஒன்றினை சந்திக்கப் போகிறீர்கள். அந்த சந்திப்பானது, நீங்கள் நினைத்துப் பார்த்திராத ஒன்றாகும்!'' என்றார் இன்னொரு வேலையாள்.
அதனைக் கேட்ட வைரவன், மேலும் திடுக்கிட்டார்.
வேலைக்காரர்களின் கண்களை உற்று நோக்கினார். அவர்களோ கொலை வெறி பிடித்தவர்கள் போன்று காணப்பட்டனர். அவர்கள் முகத்தைப் பார்த்த வேளையில், சற்று நடுங்கத் தொடங்கினார் வைரவன்.
வேலைக்காரர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்பதை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை.
வேலைக்காரர்களோ வைரவனை, வண்டியை விட்டுக் கீழே இறக்கினர். பின்னர் அருகில் இருந்த ஓர் குகையை நோக்கி இழுத்துச் சென்றனர்.
""வேலைக்காரர்களே! உங்களுக்கு என்னாயிற்று? எதற்காக என்னைக் குகையை நோக்கி இழுத்துச் செல்கிறீர்கள்?'' என்று கேட்டார் வைரவன்.
""உங்களுக்கு சரியான பாடம் புகட்டவே, நாங்கள் இந்த மாதிரி நடந்து கொள்கிறோம்! எத்தனையோ நாட்கள் எங்களைக் கொடுமைப் படுத்தியிருக்கிறீர்கள்! எங்களுக்கு மட்டமான உணவினைக் கொடுத்து விட்டு, எங்களை அடித்து துன்புறுத்தி வேலை வாங்கினீர்கள்! வேலைக்காரர்கள் என்றால் கேவலமானவர் கள் என்று நினைத்தீர்கள்! அதற்கெல்லாம் நீங்கள் கண்டிப்பாக தண்டனை அனுபவித்து, எங்கள் கஷ்டமான நிலையினை உணர வேண்டும். எனவே, உம்மை நாங்கள் குகையில் அடைத்து வைத்திருக்கப் போகிறோம். நீர் இனிமேல் இந்தக் குகையில்தான் இருக்க வேண்டும். நாங்கள் சாப்பிடுகிற உணவைத்தான் நீரும் சாப்பிட வேண்டும்,'' என்று கூறியபடி வைரவனை இழுத்துக் குகையின் உள்ளே சென்றனர் வேலைக்காரர்கள்.
அந்த நேரத்தில், அந்த பகுதியில் வசித்து வருகிற முனிவர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.
"அடடே! குகையின் உள்ளே மனிதர்களின் நட மாட்டம் இருப்பது போன்று தெரிகிறதே!' என்று மனதுக்குள் நினைத்தவராய் தன் கண்களை மூடியபடி ஆராயத் தொடங்கினார்.
சிறிது நேரத்தில், அவருக்கு எல்லாமே தெரிந்தது.
உடனே அவர் குகைவாசலில் நின்று கொண்டார்.
""அறிவில் முழுத் தேர்ச்சிப் பெறாத மனிதர்களே! நீங்கள் எல்லாரும் குகையை விட்டு வெளியே வாருங்கள்,'' என்று அழைத்தார்.
அவர் சத்தத்தைக் கேட்டதும், வேலைக் காரர்களும், வைரவனும் திடுக்கிட்டனர். பின்னர் குகையை விட்டு வெளியே வந்தனர்.
குகையின் வெளியே கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் முனிவரைப் பார்த்ததும் வியப்படைந்தனர்.
ஒரு வேலைக்காரர் அந்த முனிவரின் அருகே சென்று அடிபணிந்து நின்றார்.
""ஐயா! முனிவரே! நீங்கள் தானே எங்களை அழைத்தீர்கள்! உங்கள் கம்பீரமான குரலைக் கேட்கிற போது எங்களுக்கு அச்சமாக இருக்கிறது,'' என்றான்.
முனிவரோ அமைதியுடன் அந்த நான்கு வேலைக்காரர்களை நோக்கினார். பின்னர் வைரவனை நோக்கினார்.
""நீர் பணம் படைத்தவராகயிருக்கிறீர்! பணம் உம்மிடம் ஏராளமாக இருக்கிறது என்ற மமதையில் மற்றவர்களை மதிக்காமல் இருக்கிறீர். உமது வேலைக்காரர்களை நீர் சரியாக நடத்தாத காரணத்தினால் அவர்கள் உங்கள்மீது கோபமடைந்து விட்டனர். அவர்கள் உங்கள் மீது காட்டிய வெறுப்பானது அவர்களை இந்த அளவுக்கு தூண்டி விட்டது. இவர்கள் எல்லாரும் தாங்கள் பட்ட சித்ரவதைகளை நீயும் அனுபவிக்க வேண்டிதான் உன்னை குகையில் அடைக்க இழுத்து வந்தார்கள் என்பதை நான் என்னுடைய ஞானத்தினால் அறிந்து கொண்டேன்.

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பழிக்கு பழி!!
"ஒரு சமயம் நானும் உன்னைப் போன்று பெரும் பணக்காரனாகயிருந்தேன். அடுத்த வரை மதிக்கிற பண்பு இல்லாமல் வாழ்ந்து வந்தேன். என்னிடம் இருக்கும் பணமே எனக்குப் பல எதிரிகளைத் தேடித் தந்தது. அதனால் நான் பல துன்பங்களையும், அவமானத்தையும் அடைந்தேன். அதன் பின்னர் பணம் இருந்தும் என் வாழ்க்கையில் நிம்மதியில்லை. நான் பட்ட அவமானங்கள் எல்லாம் என்னை வாட்டியெடுத்துக் கொண்டிருந்தன. நான் ஒவ்வொரு நாளும் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் என்னிடம் இருக்கிற சொத்துக் களை எல்லாம் நான் ஏழைகளுக்குப் பகிர்ந் தளித்தேன். அதில், எனக்கு பெரிய நிம்மதி ஏற்பட்டது. நாள்பட நாள்பட என்னுடைய செல்வங்களை எல்லாம் நான் தர்மம் செய்து முடித்து விட்டேன். பின்பு தனிமையில் வாழத் தொடங்கினேன். தனிமையில் வாழ்ந்ததின் பயனாக, இப்போது நான் முனிவரானேன். எதையும் உணர்ந்து அறியும் சக்தியைப் பெற்றேன்,'' என்றார் முனிவர்.
முனிவரின் பேச்சானது வைரவனுக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தியது.
""முனிவரே! உங்கள் பேச்சில் உள்ள உண்மையினை நான் உணர்கிறேன். உங்கள் பேச்சைக் கேட்ட பின்னர் என் மனதில் பல மாற்றங்கள் உருவாகின்றன. அவைகள் என் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. இப்போது நான் என்னை நினைத்தே வெட்கப் படுகிறேன். இத்தனைக் காலமும் நான் வாழ்ந்த வாழ்க்கையானது தவறு என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது. இனிமேல் நான் இந்தத் தவறினை தொடர்ந்து செய்து கொண்டிருக்க மாட்டேன். இப்போதே நான் என்னுடைய வீட்டிற்குச் சென்று என் வேலையாட்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுநாள் வரையிலும் நான் செய்தத் தவறினை எல்லாம் அவர்கள் பொறுத்துக் கொள்ளுமாறு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் நான் என்னிடம் இருக்கிற பணத்தைக் கொண்டு எல்லாருக்குமே உதவிகள் செய்வேன். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடெல்லாம் எனக்கு ஒரு போதுமே ஏற்படாது,'' என்று கூறினார்.
வைரவன் அவ்வாறு கூறியதைக் கேட்டதும், அந்த நான்கு வேலையாட்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
முனிவரும் மகிழ்ச்சியோடு அந்த வேலைக்காரர்களை நோக்கினார்.
""ஒருவர் தவறானச் செயல் செய்து வருகிறார் என்பதற்காக நாம் ஒருபோதும் அவரை துன்புறுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக அவர் தனது குற்றத்தை உணர்ந்து திருந்தும் படியாகச் செய்ய வேண்டும். இனிமேல் யாரையும் துன்புறுத்தும் நோக்கத் தோடு இங்கே அழைத்து வராதீர்கள். இப்போது உங்கள் முதலாளி திருந்தி விட்டார். இனிமேல் உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. பணத்தின் மீதிருந்த ஆசையானது இப்போது அவருக்கில்லை. இனிமேல் அவர் உங்களுக்கு வேண்டிய வசதிகளை யெல்லாம் செய்து கொடுப்பார்!'' என்று கூறியபடி அங்கிருந்து புறப்பட்டார் முனிவர்.
""ஐயா! எங்களை மன்னித்து விடுங்கள்! அந்த முனிவர் உங்களை திருத்தியதோடு எங்களையும் திருத்தி விட்டார். நாங்கள் எங்கள் தவறை உணர்கிறோம்,'' என்றனர்.
"" தவறு செய்தவன் நான். நான் தான் வருத்தப்பட வேண்டும். நீங்கள் ஒரு போதும் வருத்தபட வேண்டாம். இப்போதே நாம் வீடு செல்லலாம். உங்கள் முதலாளியாகிய நான் இப்போது புதியவனாகி விட்டேன். வீட்டிற்குச் சென்றதும், முதல் வேலையாக உங்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறேன்,'' என்றார்.
அதனைக் கேட்ட வேலையாட்களும், வண்டி ஓட்டுனரும் அளவிலா மகிழ்ச்சி யடைந்தனர். நல்லுரை வழங்கிய முனிவரை நினைத்து மனதில் வணங்கிக் கொண்டனர்.
சிறுவர் மலர்!

றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» உலகின் மோசமான பழிக்கு பழி
» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
» தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி'
» திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு
» சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum