ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!

3 posters

Go down

21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Empty 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!

Post by சாமி Sun Nov 18, 2012 8:03 am

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் மரபுத் தொடர்களைத் தொகுத்து தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். அவருக்குப் பின் பல நூறு ஆண்டுகள் கழித்து வந்த இளம்பூரணரும், சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் தத்தம் உரைகளில் தொல்-சூத்திரங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகத் தென்பாண்டி நாட்டு வழக்குச் சொற்களைத் தந்துள்ளனர். உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டிய அந்த மரபுத் தொடர்கள் இன்றும் நெல்லைச் சீமைப் பேச்சுவழக்கில் உள்ளன.

கேட்டையா - கண்டையா
உண்மையல்லாத ஒன்றைச் சொல்லும் ஒருவருடைய கருத்தை மறுக்கும்பொழுது, ""அதை நீ... கேட்டையா... இல்ல... நீ கண்டையா...'' என்று பேசுவது தென்பாண்டி நாட்டின் சிற்றூர் மக்களிடையே இன்றும் கேட்கலாம்.

கேட்டை என்றா நின்றை என்றா
காத்தை என்றா கண்டை என்றா
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி
முன்னுறக் கிளந்த இயல்பா கும்மே.

(தொல்.சொல். எச்-சூ.30)

கேட்டை எனவும், நின்றை எனவும், காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அம்முன்னிலை வினைச்சொல் நான்கும் முன்னிலைப் பொருளை உணர்த்தி நில்லாக்கால் மேற்சொல்லப்பட்ட அசை நிலையாம். இவையும் கட்டுரைக்கண் (பேச்சு வழக்கில்) அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் வந்து ஏற்புழி அசைநிலையாய் நிற்கும். இவையும் இக்காலத்து அரிய; இவை சிறுபான்மை வினாவொடு வருதலும் கொள்க''- இவ்வாறு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் தந்துள்ளார்.

"நின்றை, காத்தை - என்பன இக்காலத்துப் பயின்றுவாரா'' - எனச் சேனாவரையர் கூறுகிறார். அதனால், அவர் காலத்தில் கேட்டை, கண்டை எனும் இரு சொற்கள் மட்டும் பயின்றனவாகக் கொள்ளலாம்.

ஆகவே, தொல்காப்பியர் சுட்டிக்காட்டிய கேட்டையா, கண்டையா எனும் மரபுச் சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் இருப்பது வியப்புக்குரியது!

பெண்டாட்டி
உயர்திணைப் பெயர்களை வழங்கும் முறையைத் தொல்.சொல்.பெயரியல்-சூ.9 கூறுகிறது. அதில் வரும் ""பெண்மை அடுத்த இகர இறுதி'' என்பதற்குப் "பெண்டாட்டி' என்றே இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் உரை விளக்கம் தந்துள்ளனர்.

அம்மூவனார் பாடிய ஐங்குறுநூறு, செய்.113-இல் உள்ள ""ஊரார் பெண்டென மொழிப'' என்பதையும், மருதன் இளநாகனார் பாடிய கலித்தொகை, செய். 77-இல் உள்ள ""என்னை நின் பெண்டெனப் பிறர் கூறும் பழிமாறப் பெறுகற்பின்'' என்பதையும் நச்சினார்க்கினியர் மேற்கோளாகத் தந்துள்ளார்.

நெல்லைச் சீமைச் சிற்றூர் மக்கள் இன்றும் தாம் சந்திக்கும் உறவினர்களிடம் ""வீட்டிலே பெண்டு பிள்ளைகள் நல்லா இருக்காங்களா'' என நலம் கேட்பது சங்க இலக்கியத் தொடர்கள் அல்லவா! தொல்காப்பியரும் உரையாசிரியர்களும் வழங்கிய பெண்டு, பெண்டாட்டி எனும் சொற்கள் இன்றைய நாளிலும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது.

பெண் மகன்
எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை அடுத்த மகனென் கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்''
(தொல்.சொல்.பெயரியல்.சூ.10)

"புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலரைப் "பெண் மகன்' என்று வழங்குப; பிறவும் அன்ன'' இவ்வாறு உரை தருகிறார் இளம்பூரணர். ""கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை அடுத்து, நாணுவரை இறந்து, புறத்து விளையாடும் பருவத்தான் பால் திரிந்த பெண் மகன் என்னும் பெயர்ச் சொல்லும், பெண் மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் (தொல்காப்பியர் காலம்) அவ்வாறே வழங்கினராயிற்று. இங்ஙனம் கூறலின்'' - என விளக்கம் தருகிறார் நச்சினார்க்கினியர்.

"புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோகத்தார் (கொற்கை சூழ்ந்த நாடு) இக்காலத்தும் பெண் மகன் என்று வழங்குப'' என விரிவுரை தந்துள்ளார் சேனாவரையர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் கொற்கைக்கு வடக்கே கடற்கரையை அடுத்ததாக மேல்மாந்தை எனும் ஊர் உள்ளது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் "மாறாந்தை' எனும் ஊர் உள்ளது. இவை சங்க காலத்துக் கொற்கை சூழ்ந்த மாறோகம் எனும் பகுதியின் இன்றைய எச்சங்களாகும். இங்கேதான் பெண் மகன் என்ற மரபுத்தொடர் வழங்குவதாகச் சேனாவரையர் குறிப்பிடுகிறார்.
(நன்றி-தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Empty Re: 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!

Post by றினா Sun Nov 18, 2012 11:10 am

நன்றிகள் தகவல்களுக்கும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Empty Re: 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!

Post by Dr.S.Soundarapandian Mon Dec 31, 2012 9:13 pm

'மாறோக்கத்தார் வழக்கு' என்பதற்கு விளக்கமாக ,’மாறாந்தை’என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரைக் காட்டியது பயன் மிக்கது!
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Empty Re: 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum