ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

Top posting users this week
ayyasamy ram
ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Poll_c10ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Poll_m10ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Poll_c10 
heezulia
ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Poll_c10ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Poll_m10ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Poll_c10 
E KUMARAN
ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Poll_c10ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Poll_m10ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Poll_c10 
mohamed nizamudeen
ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Poll_c10ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Poll_m10ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!

3 posters

Go down

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Empty ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!

Post by Powenraj Sat 17 Nov 2012 - 16:46

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்குவரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.
உணவு உண்ணும் முறை:
உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர்,மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள்கொண்ட உணவுகளாகும்.
துவர்ப்பு:
உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.
இனிப்பு:
மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.
புளிப்பு:
உணவின் சுவையை அதிகரிக்கும்சுவையிது. பசியைத் தூண்டும்.நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.
காரம்:
பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.
கசப்பு:
பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத்தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய்,சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.
உவர்ப்பு:
அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.
உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ணவேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.
இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசாயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள்அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவுஉண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோதுக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
எப்போதும் உணவ உண்ணும்போது,கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.
எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.
உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.
நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம்வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும்பழக்கத்தினால், நோய்களுக்குஇடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Empty Re: ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!

Post by அப்துல் Sat 17 Nov 2012 - 16:51

அருமையிருக்கு
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Empty Re: ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!

Post by றினா Sat 17 Nov 2012 - 20:03

இப்போது இதெல்லாம் எங்கே பார்க்கப்படுகிறது.
கூடுதலாக எல்லாமே துரித உணவுதான்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு! Empty Re: ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum