புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
49 Posts - 60%
heezulia
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
44 Posts - 60%
heezulia
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 பாசப் பறவைகள்! Poll_c10 பாசப் பறவைகள்! Poll_m10 பாசப் பறவைகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசப் பறவைகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 1:27 am

அன்றைக்கு மாலை அப்பா கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே புறப்படத் தயாரானார். அப்பா புறப்பட்டிருப்பது மார்க்கெட்டுக்கு என்று எனக்குத் தெரிந்தது.

“அப்பா! நானும் வரேன்’ ஆர்வத்துடன் அப்பா முன்போல் நின்றேன்.

“பார் ரவி. நான் மார்க்கெட்டுப் போகப் போகிறேன். அங்கே ஜாஸ்தி கூட்டம் இருக்கும். உன்னைப் பார்த்துக் கொள்வது கஷ்டம். ஏதாவது பார்க்குக்கு அழைத்துக் கொண்டு போகிறேன், இன்னொரு நாளைக்கு. இன்றைக்கு வேண்டாம்’

“நான் உன் கையைப் பிடித்துக் கொண்டு வருகிறேன் அப்பா. எங்கேயும் காணாமல் போய்விட மாட்டேன். எனக்கு ரொம்ப போரடிக்கிறது வீட்டில். விளையாடுவதற்கும் யாரும் இல்லை.’

“பார். மார்க்கெட்டுக்கு வந்து அது வேணும் இது வேணும்னு ராகம் பாடினால் நான் உன்னை அழைத்துக் கொண்டு போக மாட்டேன். தெரிந்ததா?’

“இல்லை அப்பா. நான் எதையும் கேட்க மாட்டேன். சும்மாவே வருகிறேன்’ நான் கொடுத்த வாக்கை மீறாமல் இருந்ததில்லை என்று எனக்கு தெரியும். அப்பாவுக்கும் தெரியும்!

“போகட்டும் பாவம் அழைத்துக் கொண்டு போங்களேன். சும்மா உட்கார்நதிருப்பது அலுப்புத் தட்டுகிறது ரவிக்கு’

அம்மாவுடைய சிபாரிசு வேலை செய்தது!

“சரி நட. நான் சொன்னதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள். அங்கே வந்து ஏதாச்சும் ரகளை செஞ்சா உதை விழும்.’

ஒரு வழியாக அப்பாவுடன் மார்க்கெட்டுக்குப் புறப்பட்டேன். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது மார்க்கெட். நடந்தே போனோம்.

வழி நெடுக ரேகா மிஸ் பறவைகள் பற்றி நடத்திய பாடம் ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்த. வண்ண, வண்ணப் பறவை சித்திரங்களை எவ்வளவு நன்றாகக் காட்டி எத்தனை விஷயங்களைச் சொன்னார்! பட்சிகளை எப்படி வளர்க்க வேண்டும், எந்த வகையான ஆகாரங்களைக் கொடுக்க வேண்டும், அவைகளுடன் எப்படிப் பேச வேண்டும்... அப்பப்பா! எவ்வளவு சுவாரஸ்யமான சமாசாரங்கள்!

பட்சிகள் நல்ல நண்பர்களும் கூட. அவைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும். நேரம் போவதே தெரியாது என்றெல்லாம் சொன்னாங்களே!

என் மனமே ஒரு பறவைபோல இறக்கையடித்துப் பறக்கத் துவங்கி விட்டது! என் மனதில் பறவைகளை வளர்க்கும் ஆசை பெரிதாக விரிந்தது!

என் மனதைக் கவர்ந்த பறவை “லவ்-பர்ட்ஸ்’!

எனக்கு ஞாபகம் வருகிறது. ஒருமுறை நாய் வளர்க்க வேண்டுமென்று சொன்னபோது அம்மாவுக்கு வந்ததே கோபம். கூடவே கூடாது என்று கறாராகச் சொல்லி விட்டார்கள். எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். நாயை வளர்ப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி ஹூம்ஹூம். ஒப்புக் கொள்ளவேயில்லை. அன்றே அந்த ஆசையைக் கைவிடவேண்டியதாயிற்று.

ஆனால் பட்சிகளை வளர்ப்பதால் தொந்தரவு ஏதுவும் இல்லையே! என்னுடைய இந்த ஆசையை அம்மா நிராகரிக்க மாட்டார்கள் என்கிற எண்ணத்தோடுதான் புறப்பட்டேன் அப்பாவுடன் மார்க்கெட்டுக்கு என் ஆசையை வெளிக்காட்டாமல்!

எப்படியாவது அப்பாவை ஒப்புக் கொள்ளச் செய்து ஒரு ஜோடி லவ் பார்ட்ஸை வீட்டுக்குக் கொண்டு வந்து விட வேண்டும்! என் மனமும் பறவையின் சிறகுகளைப் போலவே அடித்துக் கொண்டிருந்தது!

“ஏண்டா ரவி! ஒன்றும் பேசாமல் மௌனமாக வருகிறாய் ஏதோ யோசிப்பது போல் தோன்றுகிறதே!’

அப்பாவின் பேச்சு என் சிந்தனை வண்டிக்கு ப்ரேக் போட்ட.

“ஒன்றுமில்லேப்பா. இன்றைக்கு மிஸ் ரொம்ப நன்றாகப் பாடம் செய்தார் பள்ளிக்கூடத்தில். அதைப் பற்றித்தான்’ பாதி பொய்யும் பாதி மெய்யுமாய் பதிலளித்துச் சமாளித்தேன்.

“சரி. சரி. மார்க்கெட்டுக்கு வந்தாச்சு. நான் சாமான்களை வாங்கும்போது நீ என் பக்கத்திலேயே இருக்க வேண்டும். எங்கேயோ பார்த்துக் கொண்டு என் கையை விட்டு விடாதே.’

வீட்டுக்கு வேண்டிய சாமான்களையெல்லாம் அப்பா வாங்கியான பின்பு அவருடன் மெல்ல நடந்தேன். கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொம்மைகள், பென்சில்கள், காமிக் புஸ்தகங்கள் எல்லாவற்றையும் பார்ப்பது போல நடித்துக் கொண்டு. என் மனது முழுவதும் இருந்ததோ லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ்.

ரப்பரோ பென்சிலோ கேட்டிருந்தால் அப்பா வாங்கித் தந்திருப்பார். ஆனால் அதை ஏதாவது கேட்டு வாங்கித் தந்துவிட்டால் லவ் பேர்ட்ஸ் வாங்கிக் கொடுக்க அப்பா சம்மதிக்கமாட்டார் என்று மனதில் கணக்கு போட்டுக் கொண்டு எதையும் வாங்கிக் கொடு என்று கேட்காமல் மௌனமாக அப்பாவுடன் நடந்து வந்து கொண்டே இருந்தேன்.

“ரவி, வேண்டியதெல்லாம் வாங்கியாயிற்று. வீட்டுக்குப் போகலாமா?’

“சரி அப்பா. என்னிடம் ஒரு பையைக் கொடப்பா. நான் கொண்டு வருகிறேன்.’

“வேண்டாம் ரவி. பை பாரமாயிருக்கிறது. உன்னால் முடியாது. நட புறப்படுவோம். உனக்கெதுவும் வேண்டாமா?’

“வேண்டாம்பா. எனக்கு எதுவும் வேண்டாம்.’

“குட் பாய்! நட. நட. நேரமாகிவிட்டது. அம்மா காத்துக்கொண்டிருப்பாள் நமக்காக’

மார்க்கெட்டை விட்டு வெளியே வந்தோம். தெருவைத் தாண்ட ஒரு மூலையில் நின்றோம்.

அப்பாவின் பார்வை எல்லாம் நெரிசலான ட்ராஃபிக் மேல் இருக்க, என் பார்வை ஒரு மூலையில் உட்கார்ந்து பறவைகளை விற்றுக் கொண்டிருந்தவனின் மேல் படர்ந்தது.

அப்பாவின் கையைப் பிடித்து இழுத்தேன். அவர் என் பக்கம் திரும்பியதும் கீச், மூச் என்று ஓசை எழுப்பிக் கொண்டிருந்த வண்ண வண்ண பறவைகளை நோக்கி கையைக் காட்டினேன்.

“அப்பா நாமும் பறவைகளை வாங்குவோமா? அவைகளை வளர்ப்பதென்றால் எனக்கு ரொம்ப ஆசை அப்பா.’

“சரி. ஆரம்பமாயிற்று உன் கதை. நாயாயிற்று, பூஜையாயிற்று இப்போதுதான் சந்தோஷப் பட்டேன். காட்டி விட்டாயே உன் புத்தியை!’



 பாசப் பறவைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 1:27 am

“அம்மா நிச்சயமாகச் சம்மதிப்பாள் அப்பா. நாய், பூஜை போல எந்தத் தொந்தரவும் கொடுப்பதில்லையே பட்சிகள்! அவைகளுக்குக் கொஞ்சூண்டு தான்யம் போட்டால் போதும். அவைகள் நம் நண்பர்கள் போல இருக்கும். எனக்குப் போரடிக்கும்போது அவைகளுடன் பேசலாம், விளையாடலாம்!’

“சரி. நீ படிப்பதை மறந்துவிட்டு, சதா சர்வகாலம் அந்தப் பறவைகளோடு விளையாடிக் கொண்டிரு. உன் அம்மா என்னை வதக்கி எடுத்துக் கொண்டிருப்பாள்.’

“இல்லை அப்பா. சாயங்காலம் ஸ்கூலிலிருந்து வந்த பிறகு கொஞ்ச நேரம் அவைகளுடன் விளையாடுவேன் அப்புறம் படிப்பேன். சரியா அப்பா? இந்த ஒரு தடவை மாத்திரம் அப்பா. ப்ளீஸ். இனிமேலே கேக்க மாட்டேன் அப்பா. பல்லிளித்துக் கெஞ்சினேன்’

என்னுடைய நச்சரிப்பைத் தாங்க முடியாமல் பறவை விற்பவன் அருகில் போனார். அவனிடம் இந்த அழகான ஜோடி பட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தது. அவை லவ் பேர்ட்ஸ் என்பதை உடனே கண்டுபிடித்து விட்டேன்.

“இந்தப் பட்சிகள் என்ன விலைப்பா?’

“இது லவ் பேர்ட்ஸ் சாமி. ஒரு பறவையைத் தனியே விற்பதற்கில்லை. ஜோடியாத்தான் வாங்கிக்கணும் சாமி. ரொம்ப மலிவு. ஜோடி நூறு ரூபாய் தான் சாமி.’

“என்னப்பா இந்த பறவைகளுக்கு நூறு, ரூபாயா? ரொம்ப ஜாஸ்தி. நியாயமான விலையா சொல்லு.’ அப்பா தன் பேர சாமர்த்தியத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்.

“சாமி. இது நம்ம தேசப் பறவை அல்ல சாமி. உங்களுடையதே முதல் போணி வேறே. குழந்தை அவ்வளவு ஆசையா கேட்குது. வாங்கிக்குங்க சாமி.’ அவன் தன் விற்பனை சாமர்த்தியத்தைக் காட்டினான்!

ரொம்ப நேரம் பேரம் நடந்து கொண்டிருந்தது. இறுதியில் எழுபது ரூபாய் கொடுத்துப் பறவைகளை வாங்கினோம்.

லவ் பேர்ட்ஸ் கிடைத்து விட்டது! நானே பட்சிபோல பறந்தேன்!

பட்சிகளை வாங்கியாயிற்று. அவைகளை எங்கே வைப்பது? அதற்காக ஒரு சின்ன கூண்டையும் கொஞ்சம் தானியங்களையும் வாங்கினார் அப்பா.

வீடு திரும்பினோம்.

“நூற்றைம்பது ரூபாய் தண்டம் பண்ணிவிட்டு வந்திருக்கிறீர்களே’ என்று வீட்டை ரெண்டு பண்ணிவிட்டான் அம்மா!

“என்னங்க, இவன் என்னவோ சிறுவன். புத்தி இல்லை. கண்டது, காணாதது எல்லாம் கேட்கிறான். உங்களுக்குப் புத்தி எங்கே போச்சு? சாமான விலையெல்லாம் வானத்தைத் தொட்டு நிற்கிறது. குடும்பத்தை நடத்துவதே பெரிய பாடாக இருக்கிறது. “கஷ்ட காலத்திலே அதிக மாசம் வேறே’ என்று சொல்கிறார் போல இந்த பட்சிகளைக் கொண்டு வந்து விட்டீர்கள்!’

“கமலு, ஏன் இவ்வளவு அலுத்துக் கொள்கிறாய்? பிராணிகள், பட்சிகள் இவைகளை வளர்ப்பதால் குழந்தைகளுடைய வாகனங்கள் என்று யானை, பசு, கருடன் எல்லாவற்றையும் வணங்குவதில்லையா? ஹனுமானைப் பூஜிப்பதில்லையா? ரவியின் டீச்சர்... பட்சிகளைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்லித் தந்திருக்கிறார். அதனால் ரவியின் ஆசை வளர்ந்துள்ளது. இதெல்லாம் நமக்குப் புரிய வேண்டாமா?...

நம் ரவி பள்ளிக்கூடத்தில் பாடங்களை நன்கு கவனமாகக் கற்கிறான் என்பது புரிகிறதா? அது மாத்திரம்லாமல் ரவி நமக்கு ஒரே மகன். அவனுடன் விளையாட அவனுக்கு அண்ணனோ தம்பியோ, தங்கையோ இருந்திருந்தால், அவனுடைய மனநிலை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் அந்தப் பாக்கியம் நமக்கில்லையே. அவனுடன் அதிக நேரம் செலவழிக்கக் கூட நம்மால் இயலவில்லை. அதனாலேயே தான் ரவிக்கு ஓடி விளையாடுவதற்கு சிநேகிதர்கள் வேண்டியிருக்கிறது. பள்ளியில் சிநேகிதர்கள் இருக்கிறார்கள், ஆனால் வீட்டில்? இவன் ஒண்டியாகி விடுகிறானல்லவா?...

இதையெல்லாம் யோசித்துத்தான் இந்தப் பட்சிகளை வாங்கித் தந்தேன். இனிமேல் பார். ரவி எவ்வளவு மலர்ச்சியுடன் இருக்க போகிறான் பார்.’

அப்பாவின் ஃபுல் சப்போர்ட் எனக்கு! நல்ல லெக்சர் கொடுக்கிறாரே!

“என்னவோங்க. அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க சொல்றீங்க. ரவி சந்தோஷமா இருந்தால் சரி. நல்லாப் படிக்கவும் வேணும் அவ்வளவுதான் சரி எழுதுங்க... சாப்பாட்டுக்கு நேரமாகுது.’

வீடு முழுவதும் அலசிப் பார்த்து, காற்று, வெளிச்சம் வரும் ஒரு இடத்தைத் தேடினேன். வராண்டா மூலையில் ஒரு ஸ்டூல் போட்டு அதன் மேலே கூண்டை வைத்து, ஒரு ப்ளாஸ்டிக் கிண்ணத்தில் கொஞ்சம் தான்யம் போட்டு, கூண்டில் வைத்து, அதன் கதவை மூடினேன்.

நாட்கள் உருண்டோடிக் கொண்டிருக்க நான், பட்சிகளுக்கு வெகு நெருக்கமாகி விட்டேன். என்னருமை லவ் பேர்ட்ஸ் எங்கள் வீட்டு உறுப்பினராகி விட்டன. எனக்கு இரண்டு சிநேகிதர்கள் கிடைத்ததில் படுகுஷி!

பட்சிகளின் வருகையால் என் தினசரி நடப்புகளே மாறின.

காலையில் எந்தத் தகராறும் செய்யாமல் எழுந்தேன். ஒருமுறை பட்சிகளுடன் அளவளாவிய பின்னரே முகம் கழுவி, குளிப்பது ஸ்கூல் யூனிஃபார்ம் அணிந்து மறுபடியும் வந்து பட்சிகளின் அருகே நின்று பேசிய பிறகுதான் பள்ளிக்குப் புறப்படுவேன்.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை எப்படா வரும் என்று காத்திருப்பேன். என்னுடைய லவ் பேர்ட்ஸ்களுடன் கூர்மையாகக் கவனித்துக் கொண்டே இருந்தால் போதும். எவ்வளவு அற்புதம்!! நேரம் போவதே தெரியாது!

சில சமயம் அந்தப் பட்சிகளின் சப்தங்களே வேடிக்கையாக இருந்தது. ஒர மூலையில் நின்று கொண்டு ஒன்றையொன்று பார்த்துக் கொண்டு ஏதோ கீச் மூச் என்று பேசிக் கொள்ளும், ஒரு சமயம் கூண்டில் ஆளுக்கொரு மூலையில் சேர்ந்து கொண்டு சப்தம் எழுப்பும், இன்னொரு சமயம் துள்ளித் துள்ளி விளையாடி, ஓசை உண்டாக்கும் மற்றொரு சமயம்-தான்யம் போடுவது கொஞ்சம் தாமதமாகிவிட்டால் விசித்திரமாக ஒலியை உண்டாக்கும். அப்பொழுதெல்லாம் நான் செல்லமாகப் பேசி, தான்யங்களை வாஞ்சையுடன் போடுவேன்.

அம்மா-அப்பாவுடன் கலந்தாலோசித்து, ஆண் பறவைக்கு “முத்து’ என்றும், பெண் பறவைக்கு “மணி’ என்றும் நாமகரணம் செய்தேன்.

என்ன ஆச்சர்யம்! பின்னர் சில தினங்களிலேயே தங்கள் பெயர் என்னவென்று தெரிந்து விட்டது என் இனிய லவ் பேர்ட்ஸுக்கு! பெயரிட்டு அழைத்தால் கரெக்டாக முத்துவோ மணியோ என் பக்கம் திரும்பிப் பார்க்கும்!

எனக்கு ஒரே குதூகலம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 1:27 am

இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன. எனக்கும் பட்சிகளுக்குமிடையே நெருக்கம் வெகுவாக வளர்ந்தது. வீட்டிலிருந்த போதெல்லாம் ஒரு கணமும் அவைகளை விட்டு என்னால் பிரிந்து இருக்க முடியவில்லை. ஹோம் வொர்க் செய்வது, டிபன் சாப்பிடுவது, பால் குடிப்பது... எல்லாமே என் இனிய பறவைகளுடன் தான்!

ஆனால் படிப்பை உதாசீனப் படுத்தவேயில்லை நான். அதற்கு மாறாகப் படிப்பின் மீது என் சிரத்தை இன்னும் அதிகமாயிற்று. படிக்கும் நேரத்தில் மிகக் கவனத்துடன் படித்தேன். விரைவாகப் படித்து முடித்தவிட்டு, லவ் பேட்ர்ஸ் அருகில் ஓடி வந்து விடுவேன். பரீட்சைகளிலெல்லாம் நல்ல மார்க்! அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஆனந்தம்.

வீட்டில் ஒருவனே இருக்கிறேன் என்ற குறை இல்லாமல் முத்து மணி துணைக்கு இருக்கிறார்களே என்ற மனநிறைவு.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், அம்மாவும் வீட்டு வேலையெல்லாம் முடித்துக் கொண்டு முத்து-மணி முன் வந்து உட்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்ததுதான்! அவையிரண்டும் அம்மாவிடம் பேச்சுக்குப் பேச்சு பதில் கொடுத்துப் பேச, அம்மா குலுங்கி, குலுங்கிச் சிரிக்க எனக்கு ஆனந்தமோ ஆனந்தம்!

நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் தினமும் அம்மா, மணி இப்படிச் செய்தது, முத்து இப்படிப் பேசியது என்று என்னிடம் நிறைய சொல்வாள்.

“பாத்தியா அம்மா. பறவை இருப்பது, எவ்வளவு பெரிய ஆனந்தம், அனுபவம் என்று மனதிற்குள் சந்தோஷத்தால் குதிப்பேன்’

அப்பாவும் ஆபீஸிலிருந்து வந்ததும் கொஞ்ச நேரமாவது முத்து-மணியுடன் பேசாமல் இருந்ததில்லை.

அன்று என்னுடைய பிறந்த நாள்!

எனக்காக அப்பா, முந்தைய நாளே புதிய ட்ரெஸ், இனிப்புகள் எல்லாம் வாங்கி வந்திருந்தார்.

காலையில் அம்மா எனக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டினாள். சம்பிரதாயமாக புது ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு அப்பாவுடன் பக்கத்திலிருந்த விநாயகர் கோவிலுக்குப் போனேன். என் பெயரில் அர்ச்சனை செய்யச் சொன்னார் அப்பா. கோயிலில் பூஜை, மங்களாரத்தி எல்லாம் ஜோராக நடந்தது.

அம்மா வீட்டில் வகை வகையான தின்பண்டங்களுடன் பெரிய விருந்தையே தயார் செய்து விட்டாள்.

“சமையல் தயாராக நேரமாகும். முதலில் இந்த டிபனை சாப்பிட்டு விடு’ என்று முந்திரிப் பருப்புக்கள் மிதக்கும் சூடான, கமகமக்கும் பொங்கலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

டிபன் தட்டைக் கையில் எடுத்ததும்தான் நினைவுக்கு வந்தது.

“அடடா! என் பிரிய முத்து-மணிக்கு காலையிலிருந்தே தான்யம் போடவில்லையே!’

டிபன் தட்டை அப்படியே கீழே வைத்த விட்டு வராந்தாவிற்கு ஓடினேன்!

அங்கே நான் கண்டது..!

கூண்டின் உள்ளே ஒரு மூலையில் முத்து விழுந்து கிடந்தது! மணி அதைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது! மணி துடித்துக் கொண்டிருந்தது எனக்குப் புலப்பட்டது. என்றைக்குமே முத்துவை இந்த நிலையில் பார்த்ததில்லை நான்!

திக் என்றது எனக்கு!

“ஏய் முத்து! என்னடா இப்படி படுத்துக் கொண்டிருக்கிறாய்? மணி பாவம் ரொம்ப பயந்து போயிருக்கிறது. எனக்கும் கை கால் ஓடவில்லை. இன்னிக்கு என் பர்த்டே தெரியுமா முத்து. நீ என்னை விஷ் எப்படி பண்ணுவாய் என்று கற்பனை செய்து கொண்டிருந்தேன். நீ இப்படி படுத்திருக்கிறாயே. எழுந்திரு சீக்கிரம்.’

பேசிக்கொண்டே கூண்டின் கதவைத் திறந்து, முத்துவைத் தொட்டு அசைத்தேன்.

முத்து அசையவே இல்லை!

“முத்து என் மேல் கோபமா? உனக்கு ரொம்ப பசித்து விட்டதா? கிண்ணம் நிறைய தான்யம் கொடு வந்திருக்கிறேன். அதை வயிறார சாப்பிட்டு விட்டு என்னோடு நிறைய பேசுவியாம். சாரி முத்து! சாரின்னு சொன்னேனில்லே. எழுந்திரு முத்து..’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 1:28 am

ஆனால் முத்து ஆடாமல் அசையாமல் கிடந்திருந்த!

“அப்பா...’ கூவினான்.

ஓடி வந்தார் அப்பா.

முத்துவை மெல்ல அசைத்துப் பார்த்து, பின்பு கையிலும் நிதானமாக எடுத்துக் கொண்டார்.

அப்பாவின் கண்கள் கலங்கின.

“முத்து மடிந்து போய் விட்டது ரவி.’

“எப்படியப்பா?’ எனக்குத் துக்கம் பீறிக்கொண்டு வந்தது.

கூவிவிட்டேன். “நிஜமாகவா?’

மறுகணம் ரேகா மிஸ் கிளாஸில ஒருநாள் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. மனிதர்கள் எப்படி தங்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்களோ அதே போல் பட்சிகளும் விருப்பப்படுகின்றன சுதந்திரமாக வாழ. கூண்டில் வைத்து விட்டால் அதிக நாட்கள் வாழ்வதில்லை என்று சொன்னது பளிச்சிட்டது.

ஆமாம். என்னுடைய செல்ல முத்துவைக் கூண்டில் அடைக்காமல் இருந்திருக்கலாம்.

“அப்பா, என்னால்தானே முத்து உலகை விட்டு, நம்மையெல்லாம் விட்டு போய்விட்டது. நான் இப்போது என்ன செய்யட்டும்?’

“நீ அழாதே ரவி’

“அப்பா, மணியையாவது கூண்டிலிருந்து வெளியே விட்டு விடுவோம். அதாவது சுதந்திரமாக வாழட்டும்.’

“சரி’ என்று சொல்லி, அம்மா கூண்டைத் திறந்து விட்டார்.

ஆனால் மணி கூண்டை விட்டு வெளியே வரவில்லை! நானும் அப்பாவும் மணியை வெளியே வந்துவிடு என்று கெஞ்சினோம்.

வெளியே வர மறுத்த மணி, முத்துவை சில முறை சுற்றிச் சுற்றி வந்தது. முத்துவின் பக்கத்திலேயே தானும் விழுந்தது. மணியும், முத்துவும் இணைந்துவிட்டது என்று சொன்னார் அப்பா சோகம் ததும்பிய குரலில்.

எனக்குப் பேச்சே வரவில்லை. அப்பாவை இறுக கட்டிக் கொண்டேன். அழுகை கட்டுக்கடங்காமல் வெடித்தது.

என்னுடைய பிறந்த நாள் என் இனிய நண்பர்களின் இறுதி நாளாக ஆகிவிட்டதே என்று என் மனம் பரிதவித்தது.

அப்பா அந்த இரு பறவைகளையும் ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து, வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு தோட்டத்தில் மண்ணைத் தோண்டிப் புøத்துவிட்டு வந்தார். நான் மௌனமாக அவருடனே நடந்தேன்.

“அம்மா. என்னுடைய உயிருக்குயிரான நண்பர்கள் என்னை விட்டுப்போய் விட்டனர். இனி நான் யாருடன் விளையாடுவேன்? பேசுவேன்?’

“பார் ரவி. இவ்வளவு நொந்து போகாதே. பிராணிகள், பறவைகள் இவற்றை வளர்த்தால் இத்தகைய நிலை வந்து தீரும். அதற்காகத்தான் நான் அவைகளை வளர்ப்பது வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். பட்சிகளின் ஆயுளே குறைவுதான். நாம் அதை எவ்வளவு அக்கறையுடன் பார்த்துக் கொண்டாலும் அதிக காலம் வாழ்வதில்லை. பறவைகள் விண்ணில் பறப்பதே அழகு. அந்தக் காட்சியை மனதாரப் பார்த்து ரசித்து மகிழ்வதுதான் நாம் அந்தப் பறவைகளுக்கு அளிக்கும் அன்பு. கௌரவம், ஆதரவு எல்லாமே’ என்று அம்மா சொல்லச் சொல்ல எனக்கு எல்லாமே புரிந்தது.

“ரவி நடந்ததெல்லாம் நடந்து விட்டது. பாட்டி அவர்கள் வீட்டில் உன் பிறந்தநாள் கேக் வெட்ட ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். போன் செய்திருந்தார்கள். புறப்படு. சாப்பிட்டு விட்டு போகலாம்’ அப்பா என் கையை ஆதரவாகப் பிடித்தார்.

மனமில்லாமல் ஏதோ சாப்பிட்டுவிட்டுப் பாட்டி வீட்டுக்குக் கிளம்பினேன்.

எனக்குப் பிறந்த நாள் வருடா வருடம் வருகிறது. முத்து, மணியின் நினைவுகளும் தான்!

என் இதயத்தில் ஒரு மாய காயம்!

- தமிழில் வடபழனியான்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக