ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை வறுகறி

Go down

 சிறுகதை வறுகறி Empty சிறுகதை வறுகறி

Post by சிவா Sun Nov 11, 2012 1:21 am

தாத்தன் செத்தபோது குமரேசனுக்கு ஏழு எட்டு வயதிருக்கும். அந்த ஊரில் வயிற்றுப்பாட்டுக்கு அவ்வளவாகப் பிரச்சினை இல்லை என்பதால் ஓராண்டுக்கு மேல் அவன் குடும்பம் அங்கே நிலையாகத் தங்கியிருந்தது. பறவைகள் கும்மாளமிடும் ஏரிக் கரையோரப் பாறைச் சிறுகுடிசை அவர்களின் வசிப்பிடம். நீர்ப் பறவைகளை வேட்டையாடுவது அவர்களின் தொழிலல்ல. ஊரார் யாரும் எச்சமயத்திலும் பறவைகளுக்கு ஊறு விளைவிப்பதில்லை. ஆகவே அவற்றோடு விளையாடி மகிழ்ந்திருந்தான். தாத்தா பாட்டியுடன் அவன் குடும்பமும் சித்தப்பன் குடும்பமும் எனப் பன்னிரண்டு, பதின்மூன்று பேர் இருந்தார்கள்.

பாட்டிக்குத் தினம் ஒரே வேலை. முன்னிரவில் ஊருக்குள் போய் வருவாள். மூன்று சட்டிகளே அவள் சொத்து. அவள் கைச்சட்டியில் சோறு நிறைந்திருக்கும் நாளில் ‘நெறசட்டி கட்டியாள்ற மவராசருங்க ஊரு’ என்பாள். குறைந்திருப்பின் ’கழுவிக் கமுத்துன வெறுஞ்சட்டிப் பிசுனாரி ஊரு’ என்பாள். தூங்கிவிட்ட பிள்ளைகளையும் எழுப்பிக் கைநிறையக் கொடுப்பாள். பெரும்பாலும் கம்மஞ்சோற்று உருண்டைகள் சாற்றோடு கலந்துகிடக்கும். களியைத் தனிச்சட்டியில் வாங்கியிருப்பாள். உருண்டைகள் மிஞ்சினால் தண்ணீரில் போட்டுவைப்பாள். ஊறிய களியைக் கரைத்துக் குடித்துவிட்டுப் பகலெல்லாம் பெருவேம்பின் அடியில் சுகமாகப் படுத்திருப்பாள். அவளுக்கு விருப்பமிருந்தால் விறகு வெட்டுவது, தண்ணீருக்குப் போய்வருவது எனச் செய்வாள். மூன்று சட்டிகளையும் கழுவிச் சோற்று நாற்றம் போக வெயிலில் உலர்த்துவது தவறாத வேலை.

அவன் அம்மாவும் சித்தியும் மற்ற பெண்பிள்ளைகளும் கட்டைக்கொடி வெட்டிவரக் காடுகாடாகச் சில நாள் போவார்கள். நீண்டு செல்லும் கிழுவை வேலிகளில் கட்டைக் கொடிகள் ஏறிக்கிடக்கும். நடுவிரல் தடிமன் அளவு பெருத்த கொடிகளையே வெட்டுவார்கள். ஓரளவு கொடி சேர்ந்ததும் அவை வெயிலில் காயும். இணக்கம் கிடைக்கும் அளவு வாடியதும் கொடிகளைக் கொண்டு ஒட்டுக்கூடை பின்னுவார்கள். ஐந்தாறு கூடை சேர்ந்ததும் அவற்றைக் கவுண்டர்களின் காடுகளுக்கு எடுத்துச்சென்று கொடுத்தால் தவசமோ பணமோ கிடைக்கும். ஓரிரு சந்தைகளுக்கும் போவதுண்டு. கட்டைக்கொடியைத் துண்டிக்காமல் வெகுநீளம் விட்டு அவர்கள் பின்னும் ஒட்டுக்கூடைமீது கவுண்டர்களுக்குப் பெருவிருப்பம். கட்டைக் கொடி காயக் காய ஒட்டுக்கூடை லேசாகும். சாணியும் குப்பையும் அள்ளவும் உதறவும் அவையே வாகு. அரிவாளால் வெட்டினால் ஒழியத் துண்டாகாது. வெகுநாள் உழைக்கும்.

அந்தியில் மட்டுமே ஏரிக்குள் அடுப்பு புகையும். பெண்களின் வருமானம் சோற்றுக்குப் போதும். சாறு காய்ச்ச ஆண்கள் எப்படியும் கறியைத் தயார்செய்துவிடுவார்கள். நாள் முழுக்க ஆண்களுக்கு அது தான் வேலை. பகலெல்லாம் புதர்களையும் வங்குகளையும் அணைந்து கிடப்பார்கள். வெள்ளாமைக் காலத்தில் இரவுகளிலும் அவர்களின் வேட்டை தொடரும். எலி, பெருக்கான், முயல், உடும்பு என ஏதாவது ஒன்று தினமும் மாட்டிக்கொள்ளும். காடை, கௌதாரிகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பார்கள். அந்த ஊரில் தென்னைகளும் இருந்தன. அவற்றில் அணில்கள் ஏறிக் குரம்பைகளைக் கடித்து உறிஞ்சித் துப்பும். தென்னைக்காரர்கள் தேடிவந்து அணில்களைப் பிடிக்கச் சொல்வார்கள். கிட்டிவைத்தால் ஓரிரு நாட்களில் அணில்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அணில்கறி நெய் வடியும் ருசி. குமரேசன் விதவிதமான கறிச்சுவை கண்டு சுற்றித் திரிந்தான்.

தாத்தனுடனும் அப்பனுடனும் காடுமேடாகத் திரிந்துகொண்டிருந்தவனைக் கட்டாயப்படுத்தி மதிய உணவுக்காகப் பள்ளிக்கூடத்தில் வைத்தார்கள். அவன்சோட்டுப் பையன்களை வாத்தியார் குறி வைத்துப் பெருமளவு வெற்றியும் பெற்றிருந்தார். மதிய உணவுத் திட்டம் தொடங்கிய சமயம் அது. சில நாள் போவான். சில நாள் எங்காவது ஓடி ஒளிந்துகொள்வான். கோதுமைச் சோறு போடும் நாளில் அவனைப் பள்ளிகூடப் பக்கமே பார்க்க முடியாது. ஒரே ஒரு வாத்தியார். சிறுகுழந்தையில் எலிக்குஞ்சு போல இருந்ததால் ‘எலியான்’ என்றே அதுவரை எல்லாரும் அவனைக் கூப்பிட்டார்கள். வாத்தியார்தான் அவனுக்குப் பெயர்சூட்டினார். அவனை அடிக்கமாட்டார். செல்லமாக ஏதாவது சொல்வார். அடித்தால் ஓடிப்போய்விடுவான். பள்ளியில் எண்ணிக்கை குறைந்துபோகும். அதனால் அந்தச் செல்லம். பெயர் சூட்டியிருந்தாலும் அது ’அட்டன்டன்ஸ் பெயர்’தான். ‘டேய் தொம்பப் பயலே’ என்று கூப்பிடுவார். ‘ஒடக்கானையும் பல்லியையும் தவிர எல்லாத்தையும் சாப்பிடுவாண்டா இவன்’ என்று அவ்வப்போது கேலி பேசுவார்.

ஊர் முழுக்கக் கவுண்டர்களே வசித்தார்கள். கவுண்டப் பெண்கள் பன்றிக் கறி சமைக்கவும்மாட்டார்கள். சாப்பிடவும்மாட்டார்கள். ஆனால் ஆண்களை அப்படிச் சொல்ல முடியாது. அவர்கள் பன்றி வெறியர்கள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறையேனும் பன்றிக்கறி சாப்பிடாமலிருக்க வெள்ளக்கவுண்டரால் முடியாது. ‘ஒடம்பு சூடாயிருச்சு’ என்றோ ‘ஒழுங்கா வெளியில போவ முடியில’ என்றோ அவர் யாரிடமாவது சொல்ல ஆரம்பித்தால் பன்றிக் கறிக்கு அடிபோடுகிறார் என்று அர்த்தம். அடுத்த ஒரு வாரத்திற்குள் அப்படி இப்படி என்று பத்துப் பதினைந்து கூறுக்கு ஆள் சேர்த்துவிடுவார். கூறு இரண்டு ரூபாய். பன்றியைப் பொறுத்துக் கூறுகளின் எண்ணிக்கை மாறும். பத்துப் பேரைச் சேர்த்து அவர்களிடம் இரண்டி ரண்டு ரூபாய் முன்பணமும் வாங்கியாயிற்று என்றால் உடனே பன்றி தேட ஆரம்பித்துவிடுவார்.

மனைவியைச் சமாளிப்பதுதான் அவருக்குக் கஷ்டம். பேச்சுக்குப் பேச்சுப் ‘பீத்தின்னி’ என்று திட்டுவாள். ‘பன்னிக்கறி திங்கலீன்னா இந்தப் பீத்தின்னிக்கு வீங்கிப்போயிரும்’ என்று சாடை பேசுவாள். ‘எந்தக் குடியானச்சியாச்சும் முருவானப் பன்னின்னு சொல்லுவாளா’ என்ப தோடு அவர் நிறுத்திக்கொள்வார். வீட்டுக்குப் போவதைத் தவிர்த்து விட்டுக் காட்டுப் பக்கமே சுற்றிக்கொண்டிருப்பார். சுற்று வட்டாரத்தில் பன்றி வளர்க்கும் இடங்கள் எல்லாம் அவருக்கு அத்துபடி. தினம் ஓரிடம் என்று போய்வருவார். பத்துப் பதினோரு மணிக்கு அங்கே இருக்கிற மாதிரி போவார். காலை நேரத்தில் பன்றிகள் சுறுசுறுப்பாகப் போய் உணவு தேடிவிட்டு வெயில் நேரத்தில் வந்து வீடடைந்து படுத்துக் கிடக்கும். அவரோடு பேச்சுத் துணைக்கு என்று பெரும்பாலும் குமரேசனின் தாத்தனைக் கூட்டிச் செல்வார். தாத்தனை அந்த ஊரில் எல்லாரும் ‘பூச்சி’ என்று கூப்பிடுவார்கள். பூச்சியிடம் ‘மனசனாட்டம் வேவாத வெயில்ல எந்த மிருகமும் வேலசெய்யாதப்பா. வெயில் நேரத்துல ஊடடஞ்சு சொகமா இருக்கோணும். முருவானப் பாத்தே அதத் தெரிஞ்சுக்கலாம்’ என்று சொல்வார். கிழடாகவும் இல்லாமல் பிஞ்சாகவும் இல்லாமல் பருவமாகப் பார்த்து முடிவுசெய்வார். பூச்சி என்ன சொல்கிறார் என்று கேட்டுக்கொள்வார்.

நான்கைந்து இடங்களையும் பார்வையிட்ட பிறகே விலைபேச ஆரம்பிப்பார். விலை படிந்தால் ஒரு வாரம் தவணை சொல்லி முன் பணமும் கொடுத்துவிட்டு வருவார். முடிவானதும் எத்தனை கூறு வரும் என்பதையும் கணக்கிட்டுவிடுவார். இன்னும் ஆள் சேர்க்க வேண்டியிருந்தால் அதற்கும் முயல்வார். பார்க்கிற ஆட்களிடம் எல்லாம் ‘முருவானப் பாக்கோணுமே அப்பிடியே வெள்ளாட்டுக்கெடா மாதிரி. பீத்திங்கற பக்கமே உடாத வளத்தறானப்பா ஒட்டன் ரங்கன். குச்சிக்கெழங்கு மாவு போட்டுத் திங்கடிக்கறான். டவுனுப் பக்கம் போயி சோத்தோட நீத்தண்ணி கொடங்கொடமா எடுத்தாந்து ஊத்தறான். அதுவ உலும்பித் திங்கறதப் பாக்கோணுமே! நம்புளுக்கும் ஆசயா இருக்குது. நாம்ப ஆடு வளக்கற மாதிரியேதானப்பா. என்ன, ஆட்டோட இது ஒடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லதுதான் பாத்துக்க’ என்பார். ‘அட எல்லா முருவானுமாப்பா பீத்திங்குது? வரப்பீய மருக்குமருக்குன்னு திங்கற ஆடுவகூடத்தான் இருக்குது’ என்று பல மாதிரி பேசுவார். பன்றிக்கறி சாப்பிட்டுப் பழக்கம் இல்லாதவர்க்குக்கூட ஒருமுறை சாப்பிட்டுப் பார்க்கலாம் என்று எண்ணம் தோன்றிவிடும். கறி போடும் நாளாக வியாழக்கிழமையைத் தேர்வுசெய்வார். அன்றைக்கு வேறு பிரச்சினை ஏதும் இருக்காது. ஞாயிறு, புதன் கிழமைகளில் ஆடு, கோழி என்று வீட்டில் செய்யக்கூடும். அதுவா இதுவா என்று யாருக்கும் குழப்பம் ஏற்படும். அன்று எல்லாக் காட்டுக் கட்டுத்தரைகளிலும் ஆண்கள் கண்ணெரிய அடுப்பூதுவார்கள்.


 சிறுகதை வறுகறி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிறுகதை வறுகறி Empty Re: சிறுகதை வறுகறி

Post by சிவா Sun Nov 11, 2012 1:21 am

பன்றிக்கறி போடும் திட்டத்தில் இறங்கிவிட்டால் அவருக்குப் பூச்சி துணை இல்லாமல் முடியாது. ஒவ்வொருமுறையும் தாத்தனோடு வருவதாகக் குமரேசன் அடம் பிடிப்பான். அவர் வலுக்கட்டாயமாக மறுத்துவிடுவார். ‘கவுண்டருங்க அடிச்சிருவாங்க’ என்று பயமுறுத்துவார். போய்விட்டு வந்ததும் அங்கே கிடைத்த வறுகறிச் சுவையை நாக்கு நுனியில் நிறுத்திக்கொண்டு ‘அம் மாதிரி இருந்துது’ என்பார். வறுகறியில் தன் பங்கு குறைந்துவிடும் என்பதால்தான் தாத்தன் தன்னைத் தவிர்த்ததாக நினைத்தான். வறு கறியைப் பொறுத்தவரை அங்கேயே சாப்பிட்டுவிட வேண்டும். கொஞ்சம்கூட எடுத்துச் செல்லக் கூடாது என்பது எழுதப்படாத விதி. எப்படியாவது ஒருமுறை அவருக்குத் தெரியாமலாவது பின்னால் போய்விட வேண்டும் என்று நினைத்திருந்தான். வெயில் சுளீரென்று முதுகில் சாட்டைவாராய் இறங்கும்வரை கோட்டுவாய் ஒழுகத் தூங்கும் அவனுக்குத் தெரியாமலே விடிவேளையில் அவர் போயிருப்பார். தன் தூக்கத்தின் மேல் அவனுக்கு வெறுப்பாய் இருக்கும்.

அன்றைக்கும் அப்படித்தான் நேர்ந்திருக்கும். ஆனால் அவசரமாய் மல் முட்டி அவனை எழுப்பியது. நல்லாயிக் கவுண்டிச்சி ‘தொம்பச்சி கொண்டாந்த தழையில வெக்கிற ரசம் அப்பிடி இருக்குமாமே! எனக்குப் பொறிச்சாந்து குடேன்’ என்று வற்புறுத்திக் கேட்டதால் பாட்டி தன் வழக்கத்திற்கு மாறாக வேலிவேலியாய்ச் சுற்றிக் கிழுவங் கொழுந்து, முடக்கத்தான், புண்ணாக்குப் பூடு என்று பல தழைகளையும் பறித்துக்கொண்டுபோய்க் கொடுத்தாள். அங்கிருந்து பாட்டி வாங்கிவந்த தழை ரசத்தை வயிறு முட்டக் குடித்ததால் அந்நேரத்தில் புரண்டு படுத்து அடக்கப் பார்த்தும் முடியவில்லை.

கண்ணைச் சரியாய்த் திறக்காமல் எழுந்து பாறை கடந்து போய் நின்றான். ‘பன்னிக்குப் போறன். ஒரு கூறு தருவாங்க. ஆளுக்கு ரண்டுதான் வரும். சாறு காச்சிரலாமா?’ என்று தாத்தன் யாரிடமோ கேட்கும் குரல் உணர்ந்ததும் அவசரமாய் மண்டு விட்டுக் கோவணத்தை இறுக்கிக்கொண்டு ஓடினான். ஏரி மேட்டில் அவர் ஏறியபோது ஓடிப்போய்த் தொடையைக் கட்டிக்கொண்டான். காலை அவர் எப்படி அசைத்தும் அவன் விடவில்லை. ‘வறுகறி திங்காத உடமாட்ட. செரி வந்து தொல’ என்றபின்தான் விட்டான். ஒற்றைக் கையால் தூக்கி அவனைத் தோளில் வைத்துக்கொண்டார். நெடுநெடுத்த அவர் உருவத்தின் மேல் உட்கார்ந்திருப்பது வானில் பறப்பதைப் போலச் சுகமாயிருந்தது. கோவணம் அசைய அவர் நடப்பது கருங்கல் ஒன்று பெயர்ந்து போவதைப் போலவே தோன்றும். அவர் தலையைப் பற்றிக்கொண்டான். வெள்ளக்கவுண்டரின் கட்டுத்தரைக்குப் போய்ச் சேர்ந்ததும் இறக்கிவிட்டார்.

நேரம் எவ்வளவிருக்கும் என்பது ஒன்றும் அவனுக்குத் தெரியவில்லை. இருள் தேன்கூடாய் அடர்ந்திருந்தது. சாணி அள்ளிய கட்டுத்தரையில் மாடுகள் தீனி தின்றுகொண்டிருந்தன. கவுண்டர் இடுப்பில் வேட்டியைச் சுற்றிக்கொண்டிருந்ததை லாந்தர் வெளிச்சத்தில் கண்டான். அவரும் பேருருப் பெற்றவர்தான். தாத்தனுக்கும் கவுண்டருக்கும் இந்த வேட்டி ஒன்றுதான் வித்தியாசம். காட்டில் இருக்கும்போதெல்லாம் கவுண்டரும் கோவணம்தான் கட்டியிருப்பார். முழங்கால்வரை நீண்டு தொங்கும் கோவணம். எங்காவது வெளியே கிளம்புவது என்றால் கோவணத்திற்கு மேலேயே வேட்டியைச் சுற்றிக்கொண்டு தோளில் துண்டு ஒன்றையும் போட்டுக்கொள்வார். ஆனால் தாத்தன் எங்கே போனாலும் கோவணம்தான். கவுண்டர் கிளம்பியதும் அவனை மீண்டும் தாத்தன் தோளில் ஏற்றிக்கொண்டார். நகரத்தின் விளிம்புக்குப் போக வேண்டும். அங்கேதான் ரங்கனின் பன்றிக்கிட்டி இருந்தது. இருளும் நடை வேகமும் இல்லை என்றால் கீழே விட்டு நடக்கச் சொல்லியிருப்பார். எத்தனை பேர் கறி சொல்லியிருக்கிறார்கள் என்று தாத்தனிடம் கவுண்டர் வரிசை சொல்லியபடி வந்தார். அதில் சிலரைத் திட்டிக்கொண்டிருந்தார்.

அவருடைய இணைபொலிக்காரர் செல்லக்கவுண்டரோடு இப்போது பேச்சு இல்லை. பொதுப் பொலியில் நின்றிருந்த வேம்பின் வாதுகளை ஆளுக்கொரு வருசம் அரக்கி விட்டுக்கொள்வது என்பது அவர்களின் அப்பன் தாத்தன் காலத்திலிருந்து வழக்கம். மரம் பலத்து வாதுகளைப் பரப்பியிருந்தது. கதவுக்கும் நிலவுக்கும்கூட ஆகும். ஆனால் யாருக்கும் வெட்ட உரிமையில்லை. வெள்ளாமைக் காட்டில் நிழல் விழுந்து பயிர்களைத் தீய்த்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தழைகளை அரக்குவது. இரண்டு பேரும் ஒத்துவந்து மரத்தை வெட்டி விற்கலாம். அதற்குத் தேவை வரவில்லை. அதில் போன வருசம் தழைகளை அரக்கியபோது கிழக்குப் பக்கம் ஓடியிருந்த வாது ஒன்றை இரண்டு மார் அளவுக்குச் செல்லக் கவுண்டர் வெட்டிவிட்டார். அதையும் வெள்ளக்கவுண்டர் கவனிக்கவில்லை.

மம்மட்டிக் காம்பு போட ஆசாரியிடம் போனபோது அவர் செதுக்கிக்கொண்டிருந்த வேப்பங்கட்டையைப் பார்த்தார். கலப்பைக்கு வாகாகத் தோன்றியது. ‘உங்க பங்காளிதான் கலப்ப செய்யச் சொல்லிக் கட்டயக் கொண்டாந்து போட்டாரு’ என்று ஆசாரி சொன்னார். உடனே பொலி வேம்பைப் போய்ப் பார்த்தார். கிழக்குப் பக்க வாது முடமாகியிருந்தது. பொது மரத்தை எப்படி வெட்டலாம் என்று இருவருக்கும் பிரச்சினை ஆகி அடிதடிவரைக்கும் போய்விட்டது. அரிவாளைத் தூக்கிக்கொண்டு செல்லக்கவுண்டர் துடியாய்ப் பேசினார். எனினும் வெள்ளக்கவுண்டரும் அடங்கவில்லை. ‘அரக்கும்போது அருவாத் தவறி வாதுல வெட்டு உழுந்திருச்சு’ என்றும் ‘எங்காட்டுப் பக்கந்தான வாது நெறைய இருக்குது. அதுல ஒன்ன வெட்ட எனக்கு உரிம இல்லயா?’ என்றும் செல்லக்கவுண்டர் வாதிட்டார். வெள்ளக்கவுண்டர் விடவில்லை. ஊர்க்கூட்டம் கூட்டினார்.

வெட்டிய வாதுக்கு நிகராக வெள்ளக்கவுண்டரும் ஒருவாதை வெட்டிக்கொள்ளலாம் அல்லது அதற்கெனப் பத்து ரூபாய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஊருக்குத் தண்டமாக இரண்டு ரூபாய் கொடுத்துவிட வேண்டும் என்றும் நியாயம் பேசியபின்தான் ஓய்ந்தார். வாதுக்கு நிகராக வாது என்பதை அவர் மறுத்துவிட்டார். அதேமாதிரி வாதைத் தேடி வெட்டினாலும் யாருடையது பெரிது என்று பிரச்சினை வரக்கூடும். அதனால் பத்து ரூபாய்ப் பணத்தைக் கொடுத்துவிடட்டும் என்று சொன்னார். ஊருக்கு முன்னால் உடனொத்த பங்காளிக்குப் பத்து ரூபாய் கொடுத்ததைச் செல்லக் கவுண்டர் மானப்பிரச்சினையாக எடுத்துக்கொண்டார். வேறு வழியில்லை. ஊர்ப்பேச்சைத் தட்ட முடியாது. அதிலிருந்து ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும்போது காறித் துப்பும் அளவுக்கு உறவு முறிந்துவிட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிறுகதை வறுகறி Empty Re: சிறுகதை வறுகறி

Post by சிவா Sun Nov 11, 2012 1:22 am

அப்பேர்ப்பட்ட சண்டைக்காரரான செல்லக்கவுண்டர் பன்றிக்கறி போடும்போது மட்டும் வெட்கம் இல்லாமல் தொப்புளாக் கவுண்டர் மூலமாகத் தனக்கும் ஒரு கூறு சொல்லியிருந்தார். அந்த விவரம் முதலில் வெள்ளக்கவுண்டருக்குத் தெரியவில்லை. இரண்டு கூறு என்று சொல்லித் தொப்புளாக்கவுண்டர் பணத்தைக் கொடுத்திருந்தார். யார் யாருக்கு என்று அவரும் சொல்லவில்லை. இவரும் கேட்கவில்லை. கூறுக் கணக்குப் போடும்போது எதேச்சையாகக் கேட்க விஷயம் தெரியவந்தது. ‘அவனை எப்படிச் சேர்க்கலாம்?’ என்று கோபமாகக் கேட்டதும் ‘பொதுக்காரியம்னா நாலு பேரு வரத்தான் செய்வாங்க. அதுல சேக்காளியும் இருப்பான், பகையாளியும் இருப்பான். அதயெல்லாம் பாத்தா முடியுமா?’ என்று தொப் புளாக்கவுண்டர் சாதாரணமாகச் சொல்லிவிட்டார். அதைப் பற்றி விலாவாரியாகத் தாத்தனிடம் விவரித்துக்கொண்டே வந்தார் வெள்ளக்கவுண்டர்.

குமரேசனின் குடும்பம் அந்த ஊருக்கு வந்தபோதிருந்து தாத்தனுக்கும் கவுண்டருக்கும் ஒரு நெருக்கம் இருந்தது. அதற்குக் காரணம் பன்றிக் கறிதான். தாத்தனோடு சேர்ந்து கவுண்டரும் சில சமயம் வேட்டைக்குப் போவார். ‘உடனொத்த வெள்ளாளனுக்கு ஊருக்கு முன்னால காசெடுத்துக் கொடுத்ததில கெவுருதி போச்சுனா இப்ப ஆளு வெச்சுக் கறி வாங்கிச் சப்புக் கொட்டிக்கிட்டுத் திங்கறப்ப அந்தக் கெவுருதி போவுலியா?’ என்றார் கவுண்டர். ‘அது செரி சாமி’ என்றார் தாத்தன். கவுண்டர் எது சொன்னாலும் ‘அது செரி சாமி’ என்றே தாத்தன் பெரும்பாலும் சொல்வார். அப்படித்தான் சொல்ல வேண்டும் போல எனக் குமரேசனும் அப்போது நினைத்திருந்தான். ‘தங்காட்டுக்குள்ள தான் நெறைய வாது இருக்குதுன்னு வெட்டுனன்னு சொன்னானே, இப்ப எங்காட்டுக்குள்ள போடற முருவாங்கறிய எப்பிடித் திங்க வாய் வருது?’ என்று அவர் வேகமாகக் கேட்டுக்கொண்டிருந்தபோது ரங்கன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

சொப்பியிருந்த இருள்கூடு மெல்லக் கலையத் தொடங்கியது. தோளிலிருந்து துண்டு நழுவுவதுபோலக் குமரேசன் கீழிறங்கினான். ஆளரவம் கேட்டோ இருள் விலகிக்கொண்டிருந்ததாலோ கிட்டிக்குள் இருந்த பன்றிகள் அப்போது லேசாக உறுமத் தொடங்கியிருந்தன. வாசலில் படுத்துக்கிடந்த ரங்கனைக் கவுண்டர் காலால் எத்தினார். ‘நடுச்சாமம் வெரைக்கும் குடிச்சுக்கிட்டிருந்தா ஊடுன்னு தெரீமா வாசலுன்னு தெரீமா?’ என்றார். ரங்கன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குச் சூழல் புரிபடக் கவுண்டரின் குரல்தான் காரணமாயிருந்தது. வெளிச்சம் வந்துவிட்டால் கிட்டிப் பன்றிகள் வெளியேறிவிடும். ஒன்றைப் பிடிக்க வேண்டும் என்றால் அத்தனை எளிதல்ல. பறக்கும் கோழியும் கொஞ்ச நேரத்தில் சங்கிப் போகும். ஆனால் பன்றி வெகுதூரம் ஓடினாலும் சங்காது. துரத்தும் ஆட்கள்தான் ஓய்ந்து நிற்க வேண்டும். அதனால் கிட்டிக்குள்ளேயே பன்றியைப் பிடித்துவிடக் கவுண்டர் இந்த நேரத்தில் புறப்பட்டு வருவார்.

நாற்புறமும் தோளுயர மண்சுவர்க் கிட்டிக்குள் ரங்கனோடு தாத்தனும் நுழைந்தார். கவுண்டரோடு குமரேசன் வாசலிலேயே நின்றான். ‘நீ எப்படா புடிச்சுப் பழவப் போற?’ என்று கவுண்டர் அவனிடம் கேட்டார். அவன் பயந்து போய்த் தாத்தனின் பின்னால் ஓடினான். ‘அங்கயே நில்லுடா’ என்று அவனைத் துரத்தினார் தாத்தன். ‘இருட்டுல மாத்திப் புடிச்சராதீங்கடா’ என்று கவுண்டர் கத்தினார். ரங்கனின் குரல் பன்றிகளுக்குப் பழக்கப்பட்டதுபோலவே பன்றிகளின் குரல்களும் அவனுக்குப் பழக்கப்பட்டிருந்தன. கவுண்டர் பேசியிருந்த பன்றியைப் பிடித்துக் குரல்வளைமேல் கால்வைத்து ரங்கன் அழுத்திக்கொண்டான். பன்றியின் கால்களைச் சேர்த்துத் தாத்தன் கட்டினார். மற்ற பன்றிகள் பயந்து கிட்டி ஓரங்களுக்கு ஓடின. வாய்க்குக் கயிற்றுச் சுருக்கால் பூட்டுப் போட்டு வெளியே தூக்கிவந்தார்கள். மரக் கட்டைகளால் கட்டப்பட்டிருந்த பாடையில் பன்றியைப் போட்டு அதனோடு சேர்த்துக் கவுண்டர் கொண்டுவந்திருந்த சேந்துகயிற்றால் இறுக்கிக் கட்டினார்கள். அதைப் பாடை என்று சொன்னால் ரங்கன் கோபித்துக்கொள்வான். இரண்டு பக்கமும் தோளில் வைக்க வாகாக வழவழப்பான ஒற்றைக் கட்டையை நீட்டிவிட்டிருந்தான். அதைப் பல்லக்கு என்றே சொல்வான். ஒவ்வொரு பன்றியையும் ஏற்றி அனுப்பிய பின்னால் ‘எஞ்சாமி பல்லக்குல போவுது’ என்று சந்தோசமாகக் கூவுவான்.

நிழல்போல வெளிச்சம் பரவியிருந்தபோது பன்றிப் பல்லக்கைக் கவுண்டர் ஒரு பக்கமும் தாத்தன் மற்றொரு பக்கமும் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். முன்பக்கமாய்த் தாத்தன் இருந்ததால் குமரேசன் அவரை ஒட்டி ஓட வேண்டியிருந்தது. ‘பொறத்தாண்ட வாடா’ என்று அதட்டினார். ‘பொடிப்பயன இந்நேரத்துக்கு எதுக்குக் கூட்டியாந்தீடா பூச்சி’ என்று சலிப்பாகக் கேட்டார் கவுண்டர். ‘வறுகறி ரண்டு துண்டு வேணுமாம் சாமி. அதுக்குத்தான் பய தூங்காத எந்திருச்சு வந்திட்டான். நீங்கதான் சாமி பாத்துக்கோணும்’ என்று வேண்டுகோள் வைத்தார் தாத்தன். ‘அறியாப் பயனுக்கு ரண்டு துண்டு குடுக்கறதுல என்ன கொறஞ்சி போயிருது வா’ என்று கவுண்டர் சொன்னதும் குமரேசன் உற்சாகம் பெற்றான். கட்டுகளை மீறிப் பன்றி அவ்வப்போது அசைந்தது. உறுமவும் முயன்றது. கொஞ்ச தூரத்திற்கு ஒருமுறை தோள் மாற்றிக்கொண்டார்கள். அவர்களைத் தொடர்ந்து குமரேசன் ஓடிக்கொண்டிருந்தான்.

பச்பச்சென்று விடிந்தபோது கவுண்டரின் காட்டுக்குப் போயிருந்தார்கள். ஆழக் கிணறும் அதில் குருவி குடிக்கப்போதுமான அளவு நீரும் இருந்தன. இரண்டு தென்னைகள் வெகு உயரமாய் நின்றன. அவை எப்போதும் காற்றில் ஒடிந்து விழலாம் என்பதால் அவற்றை ஒட்டி இரண்டு இளம்பிள்ளைகளை வைத்திருந்தார். அவையும் ஐந்தாறு மட்டைகளை விட்டுப் பெரும்பரப்பில் படர்ந்திருந்தன. இரவே வெட்டிப் போட்டிருந்த மட்டை ஒன்று வாய்க்காலில் வாடலோடு கிடந்தது. பன்றியைப் பல்லக்கோடு இறக்கிவைத்துவிட்டுக் கவுண்டர் கட்டுத்தரைக்குப் போய்விட்டார். அவருக்கு இன்னும் சில வேலைகள் இருந்தன. அவர் வருவதற்குள் தாத்தன் பன்றிக்கான சில வேலைகளைச் செய்துவைத்திருக்க வேண்டும். அங்கே இருந்த பண்ணையில் கவுண்டர் முதல்நாளே நீர் நிறைத்துவைத்திருந்தார். அவர் போனதும் தென்னையில் முதுகைச் சாய்த்தபடி துண்டில் முடிந்துவைத்திருந்த சுருட்டை எடுத்துப் பற்றவைத்தார் தாத்தன்.

நீர் நிறைந்திருந்த பண்ணை குமரேசனை ஈர்த்தது. பெரிய கல்லைத் தொட்டியாகச் செதுக்கியிருந்தார்கள். இதை எப்படி, எங்கிருந்து தூக்கி வந்திருப்பார்கள் என்னும் யோசனையோடு அதை நெருங்கினான் குமரேசன். ‘டேய் பக்கத்துல போயராத. தண்ணீல கை வெச்சிட்டீன்னாப் போச்சு. நம்மள ஊர உட்டுத் தொரத்தீருவாங்க. வா இந்தண்ட’ என்று தாத்தன் அதட்டினார். பன்றிக்கு அருகில் போய் நின்றான். அது கட்டுண்டுகிடந்தது. எனினும் சிறுத்த கண்களால் அவனை உற்றுப் பார்த்தது. சிறு குச்சியை எடுத்து அதன் மூக்கில் நுழைத்தான். சுழித்து உடலை உதற முயன்றது. வாய்ச்சுருக்கு இறுகிக்கிடந்ததால் சத்தம் மெல்லவே வந்தது. உடல் முழுக்கச் சேறு படிந்திருந்தது. குட்டை வால் நெளிந்து அசைந்தது. அதைச் சீண்டி விளையாடினான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிறுகதை வறுகறி Empty Re: சிறுகதை வறுகறி

Post by சிவா Sun Nov 11, 2012 1:22 am

அதற்குள் தாத்தன் ‘வாடா இங்க. பன்னி பலத்தச் சேத்துத் துள்ளுச்சுன்னாக் கட்டுப் பிரிஞ்சாலும் பிரிஞ்சிரும். என்னோட வந்து வேலயப் பாரு. வேல செஞ்சீன்னாத் தான் ரண்டு துண்டு கறி குடுப்பாங்க’ என்றார். வாடல் மட்டையைக் கீற்றாகப் பிளந்துகொண்டிருந்தார். பிளந்தவற்றைச் சேர்த்துத் திருப்பி எதிர் எதிராகப் போட்டுப் பின்னல் வேலையைத் தொடங்கினார். அவரோடு சேர்ந்து பின்ன அவனுக்கும் ஆசையாக இருந்தது. ஆனால் அவரது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவரது கைக்குள் போய்ப் போய் விழுந்தான். வாயைச் சப்பிச் சலித்தபடி ‘போயி நாலு ஓல, பன்னாட எதுனாப் பொறுக்கி எடுத்துக்கிட்டு வாடா’ என்று அனுப்பினார். ஓரணப்பு தாண்டி நின்றிருந்த பனஞ்சாரியை நோக்கி ஓடினான். ஓலைகளும் பட்டைகளும் பன்னாடைகளும் யாரோ விசிறிவிட்டாற்போல் கிடந்தன. மரத்தடியிலேயே நுங்கு வெட்டித் தின்று விட்டுப் போட்ட தொரட்டிகள் இரைந்திருந்தன. ஓலைகளை இழுத்தபடி புழுதிக் காட்டில் வேகமாக ஓடிவந்தான். பனித்துளி விழுந்து மண் அடங்கிக்கிடந்ததால் புழுதி பறக்கவில்லை. ஓலைகளின் பரபரப்பு ஓசையில் பன்றி துள்ளிப் பார்த்தது. மறுபடியும் ஓடி ஓலையின் மேல் பன்னாடைகளையும் பட்டைகளையும் பரப்பிவைத்து இழுத்தோடி வந்தான். ஓலைவண்டி என்று அதற்குப் பெயரும் வைத்தான்.

தாத்தன் கீற்று பின்னி முடிப்பதற்குள் அவன் பெருமளவு விறகைச் சேர்த்திருந்தான். ‘இவ்வளவு எதுக்குடா? என்னயப் போட்டு எரிக்கவா?’ என்று சொல்லிக்கொண்டே ஓலைகளையும் பன்னாடைகளையும் பிரித்து வைத்துவிட்டுப் பட்டைகளைத் தனியாக எடுத்துக் கட்டிவைத்தார். எடுத்துப்போனால் விறகாகும். அவன் மீண்டும் ஓலைக்கு ஓடினான். தாத்தன் திரும்பவும் சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டு கவுண்டருக்காகக் காத்திருந்தார். பொழுது கிளம்பிப் பனை உயரம் வந்த பிறகுதான் கவுண்டர் வந்தார். சுருட்டை வேகமாக அணைத்த தாத்தன் பல்லக்கிலிருந்து பன்றிக் கட்டை அவிழ்த்தார். அப்போது தான் பன்றி நன்றாக மூச்சுவிட்டது தெரிந்தது. வயிறு ஏறி இறங்கியது. இந்த மூச்சு இன்னும் கொஞ்ச நேரம்தான். ஓலை விளையாட்டை விட்டுவிட்டுப் பன்றியைப் பார்க்கத் தொடங்கினான்.

பன்றியின் முன்னங்கால்களைத் தாத்தனும் பின்னங்கால்களைக் கவுண்டரும் பிடித்துத் தூக்கிக்கொண்டு போய்க் காட்டுக்குள் போட்டார்கள். வாய்க்குப் போட்டிருந்த கட்டை அவிழ்க்காமலே சேந்துகயிற்றைக் கொண்டு வாயை மேலும் இறுக்கிக் கட்டினார் தாத்தன். கயிற்றின் மறுமுனையைத் தென்னையில் கட்டினார் கவுண்டர். ஆவலோடு அருகே போன குமரேசனைப் ‘போடா தூர’ என்று தாத்தன் விரட்டினார். கவுண்டர் அவனை எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பதாகத் தோன்றியது. கவுண்டர் அவனைப் பொருட்படுத்தவில்லை. அவர் எண்ணம் முழுதும் செல்லக் கவுண்டர் மேலேயே இருந்தது. ‘இப்பிடி மூனாம் மனசன் மூலமாக் கறி எடுத்துத் திங்கறதுக்குப் பிய்யத் திங்கலாமே! மானங்கெட்ட நாயி’ என்று பேசினார். செல்லக்கவுண்டரின் அற்பத்தனங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே வேலையில் ஈடுபட்டார். தாத்தன் ‘அது செரி சாமி’ என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லவில்லை.

காட்டுக்குள் கிடந்த செவ்வகக் கல் ஒன்றைப் பன்றியின் முன்னால் போட்டு அதன் மேல் பன்றிவாயைத் தூக்கிவைத்து அளவு பார்த்தார்கள். அவன் தென்னையின் பக்கம் நின்றுகொண்டிருந்தான். ஒரு தென்னையை ஒட்டிச் சாய்த்துவைத்திருந்த சம்மட்டியைத் தாத்தன் எடுத்துச் சென்றார். என்ன செய்யப்போகிறார் என்பது புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். கவுண்டர் பன்றியின் மேல் ஏறிக் கால்களால் அதை அழுத்திப் பிடித்துக்கொண்டார். கல்லில் வைத்திருந்த பன்றித் தலையில் சம்மட்டியால் தாத்தன் அடித்தார். இமைப்பொழுதும் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து நான்கைந்து அடிகள். பன்றி எந்தச் சத்தமும் இல்லாமல் அடங்கிப்போயிற்று. அவன் இதை எதிர்பார்க்கவில்லை. எப்படியும் பன்றி வெகுநேரம் துடிக்கும் என்றே நினைத்திருந்தான். அடிபட்டு வெகுநேரம் துடித்துச் சாகும் உயிர்களையே அவன் கண்டிருந்தான். சட்டென இப்படிச் செத்துப் போவதும் நல்லதுதான் எனத் தோன்றியது. ‘இந்த அடி வித்ததான் எனக்கெல்லாம் வரமாட்டீங்குதுடா’ என்று சொன்ன கவுண்டர் ‘செரி தீச்சு வெய்யி. நாம் போயி வவுத்துக்கு ஒரு வா நீத்தண்ணி ஊத்திக்கிட்டு ஆயுதத்தோட வர்றன்’ என்று கிளம்பிவிட்டார்.

பன்றியின் கட்டுகளை அவிழ்த்ததும் கால்கள் விறைத்து இழுத்தன. உயிர்போகும் இறுதி அது. பன்றியையே அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தவனைத் ‘தீபத்தப் போடு வாடா’ என்று தாத்தன் அதட்டினார். மீண்டு ஓடிப்போய்ப் பஞ்சாய் இருந்த பன்னாடை ஒன்றை அடியில் வைத்துத் தீபோட்டான். ஓலையில் ஏறித் தீ நன்றாய்ப் பற்றியதும் பன்றியைத் தாத்தன் தீக்குக் கொண்டுவந்தார். ஓலைகளைத் தூக்கிப் பன்றியின் மேல் போட்டார். கொழுந்து உயர எரிந்து ஓலை தீரத் தீர எடுத்துவந்து போட்டுக்கொண்டேயிருந்தான். பன்றியைத் திருப்பித் திருப்பித் தீக்குள் போட்டபடியே தாத்தன் இருந்ததைப் பார்த்து ஓலைகள் போதாதோ என்று தோன்றியது. அப்போது தாத்தன் அவனைக் கூப்பிட்டார்.

அரணாக்கயிற்றில் எப்போதும் தொங்கவிட்டிருக்கும் சூரியால் பன்றியின் காதுகளை அறுத்தார். அவனிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு மற்றொன்றை அவர் தின்றார். சூடாகவும் மொரமொரப்பாகவும் கையில் அழுந்திய காதைக் கைமாற்றிச் சூடாற்றினான். எதுவும் செய்யாமல் அப்படியே வாய்க்குள் போட்டுத் தாத்தனால் எப்படி மெல்ல முடிந்தது? கையகலம் தட்டிப் போட்டுச் சுட்ட குச்சிக் கிழங்கு வடையைத் தின்பதுபோல ருசியாக இருந்தது காது. அதைத் தின்று முடிப்பதற்குள் வாலையும் அறுத்து அவனிடம் நீட்டினார். இதற்கெல்லாம் கவுண்டர் ஒன்றும் சொல்லமாட்டார்போல. இவை தாத்தனின் பங்கு என்று புரிந்துகொண்டான். வால் மொருமொருக்கவில்லை. சதைக் கறியைத் தின்பது போலத்தான் இருந்தது. அவன் தின்பதைப் பார்த்துச் சிரித்தார் தாத்தன். அவருடைய பங்கு இன்று தனக்கு வந்துவிட்டது என்று நினைத்தான். அவர் அதைப் பற்றி ஒன்றும் நினைத்த மாதிரி தெரியவில்லை.

ஏற்கனவே எடுத்துவைத்திருந்த தேங்காய்த் தொட்டியைக் கொண்டு பன்றியின் தோலை அழுத்திச் சுரண்டினார். அவனும் அவருக்கு உதவ அருகில் போனான். ‘சுடும்டா. பாத்துச் சொரண்டோனும். நீ தொடப் பக்கம் வேண்ணாச் சொரண்டு’ என்று சொல்லிக்கொண்டே அவர் வேகமாகச் சுரண்டினார். அவ்வப்போது கையால் நீவிப் பார்த்தார். மயிர் துளியும் அழுந்தாமல் மொழு மொழுவென்று இருந்தால்தான் வார்க்கறி தின்ன நன்றாக இருக்கும். மயிர் அழுந்தினால் தாத்தனுக்குத் திட்டு விழும். வெகுநேரம் இருவரும் சுரண்டினார்கள். சூடு குறைந்துவிட்டதாகத் தோன்றினால் உடனே ஓலை ஒன்றைப் பற்ற வைத்துச் சூடாக்கிச் சுரண்டினார். சுரண்டியபின் பன்றியின் கருநிறம் போய்த் தோல் முழுக்க வெளுத்துத் தோன்றியது. ஓலை ஒன்றில் பன்றியைத் தூக்கி வைத்துவிட்டு ஓய்வாக உட்கார்ந்து சுருட்டு பிடிக்கத் தொடங்கினார். பெருக்கான் வால் போல உருண்டிருந்த வாலை மென்றுகொண்டு மேடும் பள்ளமுமாய் இருந்த வாரிவெளியில் ஓடி விளையாடினான் அவன்.

கொஞ்ச நேரத்தில் பேச்சரவம் கேட்டது. தொப்பளாக்கவுண்டரும் செல்லக்கவுண்டரும் வந்தார்கள். செல்லக்கவுண்டரின் கையில் மரக்கைப்பிடி போட்ட பெருங்கத்தி மினுங்கியது. ‘பூச்சி வேலயெல்லாம் முடிச்சு வெச்சுட்டு உக்காந்திட்டயா?’ என்றார் தொப்புளாக் கவுண்டர். ‘முடிஞ்சுச்சுங்க சாமி’ என்றார் தாத்தன். கவுண்டரைத் தண்ணீர் ஊற்றச் சொல்லிக் கையைக் கழுவிக்கொண்டார். குமரேசனும் கைக்கழுவினான். ‘என்ன பேரனுக்குப் பழக்கி உடறயா?’ என்றார் கவுண்டர். தாத்தன் சிரிப்பையே பதிலாக்கினார். ‘எதோ தொம்பக்குடி ஒன்னு நம்பூருக்கு வந்ததுனால முருவான் சுத்தம் பண்ணப் பிரச்சின இல்லாத போச்சு’ என்றார் தொப்புளாக் கவுண்டர். ‘பூச்சிதான நம்ப பங்காளிக்கு நெருக்கம்’ என்று ஒரு மாதிரியாகத் தாத்தனைப் பார்த்துக்கொண்டே சொன்னார் செல்லக்கவுண்டர். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே வெள்ளக்கவுண்டர் இன்னும் இருவரோடு வந்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிறுகதை வறுகறி Empty Re: சிறுகதை வறுகறி

Post by சிவா Sun Nov 11, 2012 1:22 am

செல்லக்கவுண்டர் வந்திருந்ததைப் பார்த்ததும் வெள்ளக்கவுண்டர் முகம் வேப்பெண்ணெய் குடித்தது போலாயிற்று. தொப்புளாக்கவுண்டரைப் பார்த்து முறைத்தார். ‘கூறு போடற வேலக்கி நானும் வர்றமின்னு சொல்லி எம் பொறத்தாண்டயே வர்றான், நானென்ன பண்ணட்டும்?’ என்று தொப்புளாக் கவுண்டர் குசுகுசுத்தார். ‘கூறுபோட ஆளுப்படை போதும். ஆரும் புதுசா வந்து சேந்துக்க வேண்டாம்’ என்று சத்தமாகச் சொன்னார் கவுண்டர். ‘சும்மா வல்ல. கூறுக்குக் காசு குடுத்த ஆளுதான். ரண்டு வறுகறிக்கு லச்ச கெட்டு ஒன்னும் வல்ல’ என்றார் செல்லக்கவுண்டர். அத்தோடு சாடைப் பேச்சை நிறுத்தும் வகையில் ‘மஞ்சளக் கொண்டாங்கப்பா. வேலயப் பாப்பம்’ என்றார் தொப்புளாக்கவுண்டர். ‘தொம்பத் தீட்டு போவ நல்லாத் தேச்சுக் கழுவுங்கப்பா’ என்றார் இன்னொருவர்.

பன்றிக்கு மஞ்சள் குளியல் நடந்தது. தோலே மஞ்சளாக மாறிற்று. பிறகு கீற்றில் தூக்கிப் போட்டுக் கால்களை வெட்டி எடுத்தார்கள். கிழிக்க நுனிக்கூரும் அறுக்கத் தீட்டிய வாயுமாய் ஆளுக்கொரு கத்தி. மல்லாக்கவைத்து நெஞ்சின் இருபுறமும் நீள்வாக்கில் வகுந்தெடுத்ததும் குடல் வெளியே முட்டிற்று. ஒதவு சிந்தாமல் உருவுவது பழக்கமானவர்கள் வேலை. வயிற்றுப் பகுதியில் தேங்கியிருந்த ரத்தம் இரண்டு படி இருக்கும். அதற்கான குண்டா நிறைந்தது. குடலைச் சுத்தம்செய்ய இருவரும் கறி வெட்ட இருவரும் உட்கார்ந்துகொண்டார்கள். வெள்ளக்கவுண்டர் வாய்க்கால் ஓரமாய்க் கிடந்த கற்களைக் கொண்டு அடுப்பு கூட்டச் சொன்னார். தாத்தனும் அடுப்பு கூட்டி நிமிர்ந்தார். வறுகறிக்கெனக் கிணற்றோர நொச்சியின் அடியில் கவிழ்த்துவைத்திருந்த முட்டியை எச்சரிக்கையாகத் தூக்கித் துடைத்த படியே ‘பூச்சி நீ போயி கூறுக்குப் பச்ச ஓல கொண்டா’ என்று சொன்னார் கவுண்டர். ‘நம்ம காட்டுக்குள்ள இருக்கற கருக்குலயும் வெட்டிக்கிட்டு வா பூச்சி’ என்று செல்லக்கவுண்டர் சத்தமாகச் சொன்னார். இதுவெல்லாம் வறுகறிக்கு அனத்தம் என்பது புரிந்தாலும் என்ன செய்வதென்று தாத்தனுக்குத் தெரியவில்லை. வெள்ளக்கவுண்டர் ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்தார். அவர் ஒன்றும் சொல்லவில்லை. அப்படியானால் அவருக்கும் சம்மதம்தான் என்று நினைத்துக் குமரேசனைக் கூட்டிக்கொண்டு தாத்தன் நகர்ந்தார்.

ஆளுயரப் பனங்கருக்குகளில் நீட்டிக்கொண்டிருந்த ஓலைகளில் நடுப்பகுதியை மட்டும் லாவகமாக அரிந்தெடுத்தார் தாத்தன். ‘ஓல ஒடஞ்சிராம வெச்சுக்கோணும்’ என்று சொல்லி அவனிடம் கொடுத்தார். பத்து விரல்களையும் சேர்த்து விரித்ததுபோல விரிந்த ஓலை கூறுக் கறியை வைத்துச் சுருட்டிக்கட்ட வாகாக இருக்கும். அவன் இரு கைகளையும் ஏந்தி ஓலையை வாங்கிக்கொண்டான். வெள்ளக் கவுண்டர் காட்டில் பெரும்பகுதியும் செல்லக்கவுண்டர் காட்டுக் கரையில் இருந்த கருக்குகளில் பேரளவுக்கும் வெட்டினார். கறி இருபது கூறோடு வறுகறி பிரிக்கவும் என எண்ணிக் கிட்டத்தட்ட முப்பது ஓலைகள் சேர்ந்தபின் கறிபோடும் கிணற்று மேட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வந்தபோது வறுகறி வாசம் காடெங்கும் கமழ்ந்தது. குடல், ரத்தம், கால் ஆகியவற்றோடு ஓரிரு துண்டு வார்க்கறியும் சதைக்கறியும் போட்டு முட்டியில் வெந்துகொண்டிருந்தது. வெள்ளக்கவுண்டர் பனந்திடுப்பால் கிளறிவிட்டுத் தீயைத் தணித்துவைத்தார். ஒவ்வொருமுறையும் வறுகறி பற்றித் தாத்தன் சொல்லும் போது நாக்கில் எச்சில் ஊறும். இப்போது மணமே நாவூற வைத்தது.

கறிக்கூறுகள் கீற்றில் பிரிந்துகிடந்தன. ஒவ்வொரு கூறுக்கும் எல்லா வகைக் கறியும் வரும் வகையில் போட்டுக்கொண்டிருந்தார்கள். ‘போனமொறையவிட இந்தமொற கறி எச்சுத்தான் மாமோய்’ என்று ஒருவர் வெள்ளக்கவுண்டரிடம் சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டார். ‘வாரு பாரப்பா சீம்புத் துண்டாட்டம். பருவத்துல பன்னிகூட நல்லாத் தான் இருக்கும்னு செலவாந்தரம் சும்மாவா சொல்லுது’ என்றார் இன்னொருவர். ‘கறி வெந்திருக்குமா?’ என்று சொல்லியபடி செல்லக்கவுண்டர் வறுகறி வேகும் இடத்திற்குப் போய்த் திடுப்பால் கிண்டி விடுவதுபோல இரண்டு துண்டுகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். ‘இன்னம் கொஞ்ச நேரம் வேவோணும். ரண்டு கல்லு உப்பு போட்டா ஜோரா இருக்கும்’ என்றார். ‘உப்பு பாக்கறன், வெந்துச்சான்னு பாக்கறன்னு ஆளாளுக்கு அள்ளித் தின்னா பாடுபட்டவங்களுக்கு வறுகறி வந்தாப்பலதான்’ என்றார் வெள்ளக்கவுண்டர். ‘அட ஒருசோறு பதம் பாத்துத்தானப்பா ஆவணும்’ என்று எங்கோ பார்த்துக்கொண்டு செல்லக்கவுண்டர் சொன்னார். இருவரின் பேச்சும் நேருக்கு நேர் அமைவதில்லை. சாடைதான்.

கூறுபோடும் வேலை முடிந்து ஒவ்வொரு கூறாகக் ஓலையில் எடுத்துக் கட்டினார்கள். ஒருவர் ஓலையை விரித்துப் பிடிக்க இன்னொருவர் கறியை எடுத்துவைத்தார். ஓலையைச் சுருட்டிக் கோட்டையாக்கும் கைகளையே பார்க்க வேண்டும்போலிருந்தது அவனுக்கு. ஓலையை எடுத்து எடுத்து நீட்டினார் தாத்தன். ஒவ்வொருவரும் அவரவருக்குச் சேர வேண்டிய கூறுகளைத் தனித்து வாங்கிக்கொண்ட பிறகு வறுகறிப் பக்கம் வந்தார்கள். வெள்ளக்கவுண்டர் கொஞ்ச தூரத்தில் காட்டுக்குள் இருந்த கம்மந் தட்டுப் போருக்குப் போய் அங்கிருந்து சாராயப் போத்தல்கள் இரண்டை எடுத்துவந்தார். அவை பன்றிக்கறி செலவில் அடங்கும். வறுகறிச் சட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு மின்ன மரத்தடியில் உட்கார்ந்தார்கள். பொழுது அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்தது. அவனுக்குப் பசி தொடங்கி அடங்கிவிட்டிருந்தது.

தாத்தன் வெள்ளக்கவுண்டருக்கு முன்னால் போய் ‘சாமீ சின்னப் பையன் இருக்கறான்’ என்றார். ‘வறுகறியப் பிரிக்கறதுக்குள்ள தொம்பனுக்கு அவசரம் என்னப்பா?’ என்றார் தொப்புளாக் கவுண்டர். ‘கறி அறுக்கறமின்னு வந்து ஒப்புக்கு ஒக்காந்தவனுக்கே பங்கு வருதுன்னா முருவானச் சொமந்து வந்தவனுக்கு அவசரமில்லாத இருக்குமா?’ என்ற வெள்ளக்கவுண்டர் ஒரு ஓலைக் கோட்டையில் பாதியளவு கறியை அள்ளிப்போட்டுக் கொடுத்ததோடு தாத்தனுக்கான பங்காகக் கறிக்கூறு ஒன்றையும் கொடுத்தார். தாத்தனுக்குப் பின்னாலிருந்து மெதுவாகக் குமரேசனின் ஓலையும் நீண்டது. ‘ஒனக்குத் தனியா வேணுமாடா பயா?’ என்று சிரித்தபடி கவுண்டர் அவனுடைய ஓலையிலும் ஓரகப்பை வைத்தார். ‘கவண்டன உடத் தொம்பனுக்குதாம்பா இப்பக் காலம்’ என்றார் செல்லக்கவுண்டர். ‘இன்னொரு கோட்டயக் கொண்டாடா பூச்சி’ என்று சொல்லி அதில் சாராயத்தை ஊற்றினார் வெள்ளக்கவுண்டர். பன்றியைக் கொன்ற கல்லருகே போய் இருவரும் உட்கார்ந்துகொண்டார்கள்.

தாத்தன் சாராயத்தைக் குடித்தார். அதற்குள் வறுகறியைப் பார்த்தான் குமரேசன். ரத்தமும் குடலும் கலந்து கருநிறத்தில் இருந்தது. பச்சை மிளகாய் ஒன்றிரண்டு கண்ணுக்குத் தெரிந்தன. கையில் அள்ளி ஒரு வாய் தின்றான். இதுவரைக்கும் இப்படி ஒரு ருசியை எந்தக் கறியிலும் அவன் கண்டதில்லை. இத்தனைக்கும் வெறும் பச்சை மிளகாயும் உப்பும் தான். சீக்கிரம் தீர்ந்துவிடுமோ என்னும் பயத்தில் முதல் வாய்க் கறியையே மெதுவாகத் தின்றான். அப்படித் தின்பதுதான் ருசியை மிகுவித்தது. தாத்தனும் கறியை அள்ளி வாயில் வைத்தார். அதற்குள் வறுகறிப் பிரிப்பில் கவுண்டர்களுக்குள் ஏதோ தகராறு. வழக்கம்போலக் கவுண்டர்கள் இருவரும் ஏதாவது பேசிக்கொள்வார்கள் என்று தோன்றியது.

வெள்ளக்கவுண்டர் ‘அலஞ்சு திரிஞ்சு முருவான் பேசிக் கொண்டாறது ஒருத்தன். பேருக்கு வந்து நின்னுட்டு இன்னொருத்தன் சமபங்கு கேட்டா ஞாயமா?’ என்று கத்தினார். ‘பெரிய ஞாயத்தக் கண்டிட்ட. எதுக்கெடுத்தாலும் ஞாயம் பேசறவனா நீ?’ என்று செல்லக் கவுண்டர் எழுந்து வெள்ளக்கவுண்டரின் நெஞ்சில் கைவைத்துத் தள்ளினார். ‘வறுகறியப் பிரிச்சுக் குடுத்திட்டுப் பங்காளிச் சண்டய வெச்சுக்கங்கப்பா’ என்று தவித்தார் ஒருவர். ‘எங்காட்டுக்குள்ளயே வந்து என்னயவே தள்ளறயாடா நீ?’ என்று வெள்ளக்கவுண்டர் வேகமாக எழுந்தார். கையில் எதுவும் கிடைக்குமா எனத் தேடினார். அதற்குள் கறி அரிந்த கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டார் செல்லக் கவுண்டர்.

வாயில் வைத்த கறியை அப்படியே துப்பிவிட்டுத் தாத்தன் ஓடி ‘வேண்டாஞ் சாமீ’ என்று கைநீட்டிக் குறுக்காட்டினார். மற்றவர்களும் ஆளுக்கொரு ஆளைப் பிடித்தார்கள். செல்லக்கவுண்டரின் வேகத்தைத் தடுக்க முடியவில்லை. தாத்தனின் தோள்பட்டையில் ஆழ இறங்கிய கத்தியைச் சிரமத்தோடு பெயர்த்தெடுத்து வெள்ளக்கவுண்டரை நோக்கிப் பாய்ந்தார் அவர். வெள்ளக் கவுண்டர் பயந்து காட்டுக்குள் ஓடினார். வாய்க்காலில் சாய்ந்த தாத்தனைத் தாங்கிப் பிடிக்கக் குமரேசனைத் தவிர அங்கே யாருமில்லை.

பெருமாள்முருகன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிறுகதை வறுகறி Empty Re: சிறுகதை வறுகறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum