ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி

+6
மாணிக்கம் நடேசன்
கரூர் கவியன்பன்
றினா
பிளேடு பக்கிரி
அருண்
சிவா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி - Page 2 Empty தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி

Post by சிவா Sun Nov 11, 2012 12:51 am

First topic message reminder :

குழப்புவது எப்படி?

இந்த உலகத்தில் தெளிவாய் பேசிக் குழப்புகிறவர்களும் உண்டு. குழப்பமாய் பேசித் தெளிவுப்படுத்துகிறவர்களும் உண்டு.

அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்வது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

ஒரு பெரிய திடல்.

அங்கே ஒருவன் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான். அங்கே இருக்கிற புல்வெளியில் ஏராளமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.

அவற்றில் கருப்பு ஆடுகளும் இருந்தன.

வெள்ளை ஆடுகளும் இருந்தன.

அங்கே ஆடு மேய்க்கிறவன் எதிலும் தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான்.

குழப்பப்படுவது - குழம்புவது இரண்டுமே அவனுக்கு பிடிக்காது.

அந்த வழியாக ஒரு பெரியவர் வந்தார்.

தம்பி இங்கே ஆடு மேய்க்கிறீயா...?

ஆமாம்

உன்கிட்டே சில விவரம் கேட்டு தெரிஞ்சிக்கலாம். எதுவா இருந்தாலும் தெளிவாக கேளுங்க... பதில் சால்றேன்...!

இந்த மந்தையில் மொத்தம் எத்தனை ஆடுகள்....?

பார்த்தீங்களா? குழப்பமாக கேக்கறீங்க....!

வேற எப்படிக் கேட்கணும்ங்கறே?

நீங்க. கறுப்பு ஆட்டை கேக்கறீங்களா? வெள்ளை ஆட்டை கேக்கறீங்களா?

கறுப்பு ஆடு எத்தனை?

அப்படி கேளுங்க... கறுப்பு ஆடு ஐம்பது இருக்கு

வெள்ளை ஆடு?

அதுவும் ஐம்பது தான்!.

பெரியவர் அடுத்த கேள்வியை கேட்டார்.

இந்த ஆடெல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு புல் சாப்பிடும்?

மறுபடியும் குழப்புறீங்க!

என்ன சொல்றே?

கறுப்பு ஆடா? வெள்ளை ஆடா?

கறுப்பு ஆடு...!

10 கிலோ சாப்பிடும்.

சரி வெள்ளை ஆடு....?

அதுவும் 10 கிலோ சாப்பிடும்?

பெரியவர் லேசாக குழம்ப ஆரம்பித்தார். அடுத்த கேள்வி...

இதெல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கறக்கும்?

மறுபடியும் தெளிவாக கேளுங்க.... கறுப்பு ஆடா? வெள்ளை ஆடா?

கறுப்பு ஆடு...!

ஐந்து லிட்டர் கறக்கும்

வெள்ளை ஆடு...?

அதுவும் ஐந்து லிட்டர் கறக்கும்.

பெரியவர் கொஞ்சம் குழப்பத்தோடு யோசிக்க ஆரம்பித்தார்.

அப்புறம் கேட்டார்

தம்பி எல்லாத்துக்கும் பதில் ஒண்ணாத்தானே இருக்கு.

ஆமாம்!

அப்படி இருக்கும்போது... எதுக்கு பிரிச்சி பிரிச்சி கேக்க சொல்றே...?

ஓ,.... அதை கேக்கறீங்களா... இதை ஆரம்பத்திலேயே கேட்டிருந்தா தெளிவாக சொல்லியிருப்பேனே.. எதுக்காக அப்படி கேக்க சொல்றேன்னா....

இங்கே இருக்கிற அந்த கறுப்பு ஆடுகள் எல்லாம் எதிர்த்த வீட்டுக்காரனுக்கு சொந்தமானவை.

வெள்ளை ஆடுகள்....?

அதுவும் எதுத்த வீட்டுக்காரனுக்குத் தான் சொந்தம்

இதற்கு மேலும் இவனிடம் பேசிக்கொண்டிருந்தால் நமக்கு பைத்தியம் பிடித்து விடும் என்பதை உணர்ந்த அந்த பெரியவர்

சரி.. நீ உன் வேலையை பாரு... நான் என் வேலையை பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு மெல்ல அந்த இடத்தை விட்டு நழுவினார். தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி? என்பதை அந்த ஆடு மேய்க்கிறவனிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.


தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian, கண்ணன் and kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி - Page 2 Empty Re: தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி

Post by ராஜா Mon Nov 12, 2012 1:48 pm

சிவா wrote:தென்கச்சி அவர்களின் பேச்சுக்கு நான் அடிமை! அவரது குழப்பத்தைக் குழப்பமின்றிப் படித்த உள்ளங்களுக்கு நன்றி!
ஒரு காலத்தில் . இன்று ஒரு தகவல் கேட்டுகொண்டே கல்லூரிக்கு கிளம்பியது நினைவுக்கு வருகிறது. (அது ஒரு அழகிய நிலாக்காலம் சோகம்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி - Page 2 Empty Re: தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி

Post by பிளேடு பக்கிரி Mon Nov 12, 2012 2:09 pm

ராஜா wrote:
சிவா wrote:தென்கச்சி அவர்களின் பேச்சுக்கு நான் அடிமை! அவரது குழப்பத்தைக் குழப்பமின்றிப் படித்த உள்ளங்களுக்கு நன்றி!
ஒரு காலத்தில் . இன்று ஒரு தகவல் கேட்டுகொண்டே கல்லூரிக்கு கிளம்பியது நினைவுக்கு வருகிறது. (அது ஒரு அழகிய நிலாக்காலம் சோகம்)
ஆமா தல.. நானும் வானொலியில் கேட்ட்பேன் தினமும்..(7to7.15 க்கு உள்ளேன்னு நினைக்கிறேன்)



தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி - Page 2 Empty Re: தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி

Post by மாணிக்கம் நடேசன் Mon Nov 12, 2012 2:42 pm

அவரது மறைவு எங்களுக்கெல்லாம் ஓரு பேரிழப்பு.

அன்னாரது ஆத்மா சந்தியடையட்டும்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி - Page 2 Empty தென்கச்சியாரின் இன்று ஒரு தகவல்

Post by kandansamy Mon Oct 19, 2020 9:03 pm

மிகவும் சிந்திக்க தூண்டும் பதிவு , அருமை வாழ்த்துக்கள் ஐயா !

தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி - Page 2 3838410834
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Back to top Go down

தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி - Page 2 Empty Re: தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி

Post by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

தெளிவான குழப்பங்கள் ! சிரி மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி - Page 2 Empty Re: தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum