புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்க்சிய வரலாற்றாசிரியர் இருவர்
Page 1 of 1 •
எரிக் ஹாப்ஸ்பாம்
(1917-2012)
“1913ஆம் ஆண்டின் கோடைக் காலத்தில், ஆஸ்திரிய–ஹங்கேரிப் பேரரசின் தலைநகரான வியன்னாவில் ஓர் இளம்பெண் உயர் நிலைப்பள்ளியில் தேறினாள். அக்கால மத்திய ஐரோப்பாவில் பெண்கள் இவ்வாறு தேர்ச்சி பெறுவது அரிதானதால், இதைக் கொண்டாடுவதற்காக அவளுடைய பெற்றோர் அவளை வெளிநாட்டுச் செலவுக்கு அனுப்ப முற்பட்டனர். கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த பதினெட்டு வயதுப் பெண்ணைத் தனியே அனுப்ப இயலுமா? உதவிக்குப் பொருத்தமான துணையைத் தேடினர். அதிர்ஷ்டவசமாக, போலந்திலிருந்தும் ஹங்கேரியிலிருந்தும் அதற்கு முந்தைய தலைமுறையில் மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்து, செல்வமும் கல்வியும் ஈட்டிய பல உறவுக்காரக் குடும்பங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று சிறந்த செல்வ வளம் பெற்றிருந்தது. ஆல்பர்ட் மாமா கான்ஸ்டான்டினோபிள், ஸ்மிர்னா, அலெப்போ, அலெக்ஸாண்ட்ரியா என்று பல நகரங்களில் தன் கடையின் கிளைகளை நிறுவியிருந்தார். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆட்டமன் பேரரசிலும் மத்தியக் கிழக்கிலும் வணிக வாய்ப்புகள் ஏராளம்; மத்திய ஐரோப்பாவின் கிழக்குப் பக்கத்திற்கு வணிகச் சாளரமாக விளங்கியது ஆஸ்திரியா. எகிப்து, ஒருவர் தன்னைப் பண்பாட்டு மேம்பாட்டுக்குத் தகுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளை அளித்த வாழும் அருங்காட்சியகமாக விளங்கிய அதே வேளையில் பரந்த உலக நோக்கு கொண்ட ஓர் ஐரோப்பிய நடுத்தர வர்க்கத்தையும் கொண்டிருந்தது. பிரஸ்ஸல்ஸ் அருகே இருந்த உறைவிடப் பள்ளியில் இளம் பெண்ணும் அவள் சகோதரிகளும் கற்றுத் தேர்ந்த பிரெஞ்சு மொழி இந்த நடுத்தர வர்க்கத்துடன் தொடர்புகொள்வதை எளிதாக்கியது. இங்கே அரபு மக்களும் இருந்தனர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஹாப்ஸ்பர்க் பேரரசின் முதன்மையான துறைமுகமான டிரியெஸ்டவிலிருந்து (இத்தாலி) – ஜேம்ஸ் ஜாய்ஸ் அப்போது இங்கேதான் வசித்துவந்தார் – லாயிட் டிரிஸ்டினோ கம்பெனியின் நீராவிக் கப்பலில் புறப்பட்டுவந்த தன் உறவுக்கார இளம்பெண்ணை வரவேற்பதில் ஆல்பர்ட் மாமாவுக்கு மகிழ்ச்சி. அந்த இளம்பெண்தான் இந்நூலாசிரியரின் தாய்.
“இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் இளைஞனும் – ஆனால் இலண்டனிலிருந்து – எகிப்துக்கு வந்திறங்கியிருந்தான். அவனுடைய குடும்பப் பின்னணி ஒப்பீட்டளவில் மிகச் சராசரியானது. ருஷ்யப் பேரரசின் பகுதியாக இருந்த போலந்திலிருந்து 1870களில் பிரிட்டனுக்குக் குடி பெயர்ந்த அவனுடைய தந்தை ஒரு மரத்தச்சர். கிழக்கு இலண்டனிலும் மான்செஸ்டரிலும் தொழில் செய்து, தம் முதல் மனைவிவழிப் பிறந்த மகளையும் இரண்டாம் திருமணம் மூலமாகப் பிறந்த எட்டு மகன்களையும் ஒருவாறு வளர்த்துவந்தார். அவருடைய மகன்களில் ஒருவனுக்கு மட்டுமே பள்ளி செல்லும் வாய்ப்பு கிட்டியது. அப்போது பிரிட்டிஷ் பேரரசின் அறிவிக்கப்படாத ஒரு பகுதியாக இருந்த தென் அமெரிக்காவில் அவன் சுரங்கப் பொறியாளனானான். ஆனால் சகோதரர்கள் அனைவருமே ஆங்கில மொழியையும் பண்பாட்டையும் ஆர்வத்துடன் கற்று, ஆங்கிலவாக்கம் எய்தினர். ஒருவன் நடிகனானான். ஒருவன் குடும்பத் தொழில் செய்தான். ஒருவன் தொடக்கப்பள்ளி ஆசிரியனானான். அக்காலத்தில் விரிவடைந்துவந்த அரசுத் துறைகளில் ஒன்றான அஞ்சல் துறையில் இரு மகன்கள் சேர்ந்தனர். அண்மையில்தான் (1882) இங்கிலாந்து எகிப்தைக் கைப்பற்றியிருந்தது. இதன் விளைவாக ஒரு சகோதரன் பிரிட்டிஷ் பேரரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும்வகையில் எகிப்து அஞ்சல் துறையில் பணியாற்றினான். தன்னுடைய தம்பியருள் ஒருவனுக்கு எகிப்து ஏற்ற இடமாக இருக்கும் என அவன் கருதினான். இத்தம்பி கூர்த்த மதி, இணக்கமாகப் பழகும் பாங்கு, இசைப் பயிற்சி, விளையாட்டுத் திறன், குத்துச்சண்டைப் பயிற்சி உடையவன். சுருங்கச் சொல்வதானால் காலனிகளின் கப்பல் போக்குவரத்துத் துறையில் பணியாற்றுவதற்கேற்ற மிகப் பொருத்தமான ஆங்கில இளைஞன்.
“இந்த இளைஞன்தான் இந்நூலாசிரியரின் தந்தை. பேரரசின் காலத்தில் – 1875–1914 – பொருளாதாரமும் அரசியலும் சமூக வரலாறும் இணையும் ஓரிடத்தில் தன் எதிர்கால மனைவியைச் சந்தித்தான். இந்தப் புத்தகம் விவரிக்கும் காலப் பகுதியைத் தவிர வேறு ஒரு காலத்தில், இத்தகைய ஓர் இடத்தில் இவர்களைப் போன்ற இருவரின் சந்திப்பு நிகழ்ந்து அது திருமணத்தில் முடிந்திருக்காது என்று சொல்லலாம்.”

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எரிக் ஹாப்ஸ்பாம் எழுதிய நவீன உலக வரலாற்றின் மூன்றாம் பகுதியாக அமைந்த The Age of Empires, 1875-1914 என்ற நூல் மேற்கண்டவாறு தொடங்குகிறது. இரண்டு பத்திகளில் ஹாப்ஸ்பாம் ஒரு வாணவேடிக்கைக் காரனைப் போல் திணித்துக்காட்டும் தேர்ந்த தகவல்களின் வரிசை, அதன் மூலம் திரளும் கருதுகோள், கடந்த காலமும் நிகழ்காலமும் இணையும் விந்தை, தனிமனித வரலாற்றை ஊடறுத்துச் செல்லும் பாரிய சமூக வரலாற்றுப் போக்குகளின் அசைவியக்கம் ஆகிய அனைத்தும் இணைந்து ஆர்வமுள்ள வாசகனைக் கொக்கி போட்டு ஈர்க்கும் ஒரு மொழிநடை: ஒரு முக்கால் நூற்றாண்டுக் காலம் வரலாற்றியல் வானில் வடமீனாக ஒளிர்ந்த ஹாப்ஸ்பாமின் எண்ணற்ற படைப்புகளில் இத்தன்மைகளுக்கு என்றுமே பஞ்சமிருந்ததில்லை.
ஹாப்ஸ்பாம் பிறந்தது யூதக் குடும்பத்தில். இத்தகவல் அவரைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதது. தீவிர மாற்றங்களை எதிர்கொள்ளவும் வரவேற்கவும் விழைந்த மரபில் வந்தவர் ஹாப்ஸ்பாம். 1917இல் எகிப்திய நகரான அலெக்ஸாண்ட்ரியாவில் பிறந்த ஹாப்ஸ்பாமின் குடும்பம் விரைவிலேயே ஆஸ்திரியாவின் வியன்னாவிற்கும் பிறகு ஜெர்மனியின் பெர்லினுக்கும் குடிபெயர்ந்தது. ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக ஆட்சியைக் கைப்பற்றிய செய்தியை நாளேடுகளின் சுவரொட்டியாகத் தெருவில் வாசித்தவர் பதினைந்து வயது ஹாப்ஸ்பாம். அவருடைய எழுத்துகளில் மீண்டும் மீண்டும் தோன்றும் படிமம் இது. நல்லவேளையாக அவருடைய குடும்பம் இங்கிலாந்திற்குக் குடிபெயர முடிவெடுத்தது. ஹிட்லரின் வதைமுகாமிலிருந்து ஒரு பெரும் வரலாற்றாசிரியராவது தப்பினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது மார்க்சியச் சிந்தனைகளின் தாக்கம் ஏற்பட்டுக் கம்யூனிஸ்டு கட்சியின் ஆர்வமிக்க உறுப்பினரானார். மோகன் குமாரமங்கலம் கிங்ஸ் கல்லூரியில் அவருடைய ஒருசாலை மாணாக்கர். கலப்படமற்ற ஓர் இலட்சியத்திற்கு உதாரணமாக ஸ்பானிய உள்நாட்டுப் போரைச் சொல்வார் ஹாப்ஸ்பாம். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற பிறகு மீண்டும் கேம்பிரிட்ஜ் திரும்பினார்.
இக்காலப் பகுதியில்தான் கம்யூனிஸ்டு கட்சி வரலாற்றாளர் குழு (Communist Party Historians’ Group) என்ற ஒரு குழு பிரிட்டிஷ் கம்யூனிஸ்டு கட்சிக்குள் உருவானது. வரலாற்றியலின் போக்கில் பெரும் தாக்கம் செலுத்திய இத்தனை வரலாற்றாசிரியர்கள் ஒரே சமயத்தில் கூடிப் பணியாற்றியது அபூர்வம் என்று சொல்லலாம். மாரிஸ் டாப், கிறிஸ்டபர் ஹில், விக்டர் கியர்னன், ராட்னி ஹில்ட்டன், இ. பி. தாம்சன், ஜார்ஜ் ரூடே, ஜான் ஸாவில், டாரதி தாம்சன் . . . என்று நீளும் அக்குழுவின் பட்டியல் மார்க்சிய வரலாற்றியல் என்ற புது மரபைத் தோற்றுவித்தது. இவர்களுடைய நூல்கள் பல இன்றளவும் பொருட்படுத்தத்தக்கனவாக இருப்பது அவர்களுடைய அரசியலின் முக்கியத்துவத்திற்கு மட்டுமல்லாமல் வரலாற்றுப் புலமைக்கும் சான்றாக விளங்குகின்றது. 1956 இக்குழுவிற்குச் சோதனைக் காலம். ஸ்டாலின் காலக் கொடுமைகள் பற்றிய குருஷேவின் அறிக்கையும் ஹங்கேரியின் சனநாயக எழுச்சியை சோவியத் படைகள் கொடூரமாக ஒடுக்கியதும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டு கட்சியை உலுக்கின. மூன்றில் ஒரு பிரிவினர் கட்சியைவிட்டு விலகினர். இவ்வாறு விலகிக் கட்சியின் நிலைப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியவர்களில் வரலாற்றுக் குழுவைச் சேர்ந்தவர்கள் முன்னின்றனர். தாம்சன், ஹில், ஹில்ட்டன் முதலானோர் கட்சியிலிருந்து விலகினர். இதற்கான அனைத்துக் காரணங்களுடனும் உடன்பட்ட ஹாப்ஸ்பாம் ‘அமைப்புரீதியான ஒரு கட்சி இன்றியமையாதது’ என்று கருதியதால் கட்சியிலிருந்து விலகவில்லை. இருப்பினும் விலகிய வரலாற்றாசிரியர்களுடனான தொடர்பும் அவர்களின் படைப்புகள் மீதான மதிப்பும் தொடர்ந்தன. மார்க்சிய அரசியலுக்குள் நின்று எழுதிய ஹாப்ஸ்பாமின் படைப்புகள் வரலாற்றியல் நெறிகளில் சமரசம் செய்து கொண்டதில்லை. அவருடைய ஆய்வுரைகள் இடதுசாரியல்லாத, கல்விப் புல ஆசிரியர்களால் மட்டுமல்லாது பொது வாசகர்களாலும் ஈடுபாட்டுடன் படிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
பனிப்போர் உக்கிரமடைந்துவந்த காலம். கட்சி உறுப்பினர் என்பதால் ஆகஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் ஹாப்ஸ்பாமைப் பணியில் அமர்த்தவில்லை. தொழிலாளர்கள் மாலை நேரத்தில் படிக்கும் பிர்க்பெக் கல்லூரியில்தான் அவர் வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார். அமெரிக்கா சென்றபோதெல்லாம் விசா படிவத்தில் தாம் ஒரு கம்யூனிஸ்டு என்பதை அறிவிக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கிருந்தது.
சோவியத் ஒன்றியம் உடைந்து, பிரிட்டிஷ் கம்யூனிஸ்டு கட்சி கலைக்கப்படும் தருணம்வரை ஹாப்ஸ்பாம் அதன் உறுப்பினர். சோவியத் ஒன்றியத்திற்காக ஒற்றாடியதாக 1950களில் கண்டுபிடிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் முன்னாள் மாணவர்கள் பற்றிப் பின்னாளில் குறிப்பிட்டபோது, பணிக்கப்பட்டிருந்தால் நானும் வேவு பார்த்திருப்பேன் என்று கூறும் துணிவு ஹாப்ஸ்பாமிற்கு இருந்தது. இப்படிப்பட்ட ஹாப்ஸ்பாமின் நூல்கள், உலகின் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் சோவியத் ஒன்றியத்தில் வெளியிடப்பட்டதே இல்லை என்பதை அவருடைய வரலாற்றுத் திறத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டும்.

1940களின் கடைசியில் எழுதத் தொடங்கிய ஹாப்ஸ்பாமின் கடைசி நூல் - நான் அறிந்தவரை! - சென்ற ஆண்டு வெளிவந்தது: How To Change the World: Tales of Marx and Marxism. அறுபதாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் அவர் படைத்த நூல்களை ஒரு நெட்டோட்டமாக அறிமுகப்படுத்துவதுகூட சவாலான வினையாகும். வரலாற்றுத் துறையில் ஒவ்வொரு வரும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே வல்லமையும் தேர்ச்சியும் பெறுவது வழமை. பத்தொன்பதாம் நூற்றாண்டு பற்றிக் கற்றுத் துறைபோனவர் என்று பொதுவாக ஹாப்ஸ்பாமைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். பதினேழாம் நூற்றாண்டின் இங்கிலாந்துப் புரட்சியைப் பற்றித் தம் வாழ்நாளெல்லாம் ஆராய்ந்து அதில் தன்னேரிலாத புலமை பெற்ற கிறிஸ்டபர் ஹில் தம்முடைய நூல் ஒன்றைப் பின்வரும் முறையில் காணிக்கையாக்கி இருந்தார்: ‘பதினேழாம் நூற்றாண்டு உட்பட அனைத்தையும் அறிந்த ஹாப்ஸ்பாமிற்கு’! தமிழின் எழுவாய் பயனிலைத் தொடரமைப்பைவிட ஆங்கில மூலத்தில் இது இன்னும் பொருத்தமாக அமைந்திருக்கும்.
ஹாப்ஸ்பாமின் தொடக்ககால வரலாற்று ஆய்வுகள் பாட்டாளி வர்க்கத்தைப் பற்றியவை. அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு ஃபேபியன் சங்கத்தின் சோசலிசச் சிந்தனைகள் பற்றியது. இது நூலாக்கம் பெறவில்லை. பிரிட்டனின் பாட்டாளி வர்க்கப் போராட்டங்கள் மற்றும் இயக்கம் பற்றிய இவருடைய கட்டுரைகள் இத்துறையில் விவாதத்திற்கு வழிவகுத்தன. அதுவரையான வரலாற்று ஆய்வுகள் பெரிதும் தொழிற் சங்க நடவடிக்கைகள், தலைவர்களின் செயல்பாடுகள், தொழிற்சட்டங்களின் உருவாக்கம் முதலானவற்றைப் பற்றியே மையங்கொண்டிருந்தன. இதிலிருந்து பாட்டாளி வர்க்கம் பற்றிய ஆய்வுகளை மீட்டெடுத்து வேறு ஒரு தளத்திற்கு அவற்றை உயர்த்தியதில் ஹாப்ஸ்பாமின் பங்கு முதன்மையானது. தொழிற்புரட்சியின் விளைவாக பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியம் என்ன, பாட்டாளி வர்க்கத்திற்குள்ளேயே ஒரு மேட்டுக்குடி உருவானதா முதலான விவாதங்களை முன்னெடுத்ததில் ஹாப்ஸ்பாம் முக்கியப் பங்காற்றினார்.
1960களின் இடைப்பகுதியில் ஹாப்ஸ்பாம் நகர்ப்புறப் பாட்டாளி வர்க்கப் போராட்டங்களிலிருந்து நாட்டுப்புற உழைக்கும் வர்க்கங்களைப் பற்றித் தன் ஆய்வுப் பார்வையைத் திருப்பினார். 1963இல் இ. பி. தாம்சனின் ‘இங்கிலாந்து தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கம்’ வெளியாகி, மார்க்சிய வரலாற்றியலில் மட்டுமல்லாமல், சமூகவியல், வரலாறு உள்ளிட்ட அனைத்துச் சமூக அறிவியல் புலங்களையுமே புரட்டிப் போட்டுவிடுகிறது. அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்குமான இயந்திர முறையிலான உறவைக் கேள்விக்கு உள்ளாக்கிய இ. பி. தாம்சன் தன்னியலான, ஓர்மைமிக்க போராட்டங்களின் வழியே தொழிலாளர் வர்க்கம் உருவாவதை ஏராளமான தகவல்களின் அடிப்படையில் மட்டுமல்லாமல் உணர்ச்சி சான்ற நடையாலும் இ. பி. தாம்சன் மார்க்சியச் சொல்லாடலில் ஓர் உடைவை ஏற்படுத்துகிறார்.
தற்செயலாகவோ என்னவோ, ஹாப்ஸ்பாம் இத்தருணத்தில் வேறு ஓர் ஆய்வுக் களத்தைத் தேர்கிறார். அதுவரையான மார்க்சிய, இடதுசாரி ஆய்வுகள், நிலப்பிரபுத்துவ காலத்தில் விவசாய எழுச்சிகள் பற்றியும் தொழிற்புரட்சி ஏற்பட்டு முதலாளியம் மேலோங்கும் காலத்தில் நகர்சார்ந்த பாட்டாளிகளின் போராட்டங்கள் பற்றியுமே கவனம் செலுத்தின. முதலாளியம் எழுச்சிபெறும்போது, தொழில்மயமாக்கத்துக்கு முற்பட்ட வர்க்கங்கள் எவ்வாறு அதற்கு முகங்கொடுக்கின்றன? மரபுவழி மார்க்சியம் வரலாற்றின் முன்னேற்றத்திற்குத் தரப்பட வேண்டிய தவிர்க்க முடியாத விலையாகவே இவ்வர்க்கங்களின் அழிவைப் பார்க்கின்றன. இந்தியாவின் நவீனவாக்கத்திற்கு பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இன்றியமையாத பங்காற்றியது என்பதே மார்க்சின் வாதம். இந்தியாவின் வளர்ச்சிக்குக் கூடங்குளம் மக்கள் தம் வாழ்வையும் உயிரையும் பணயம் வைக்க வேண்டும் என்பது இந்த தர்க்கத்தின் நீட்சி. தொழில்மயமாக்கத்திற்கு முற்பட்ட வர்க்கங்களின் வாழ்வனுபவத்தையும் போராட்டங்களையும் ஆய்வுப்பொருளாக முதன்முதலில் மாற்றியவர் ஹாப்ஸ்பாம்.
இங்குப் பிற பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றாளர்களுக்கும் ஹாப்ஸ்பாமிற்குமான மற்றொரு வேறுபாட்டையும் சுட்ட வேண்டும். விக்டர் கியர்னன் (இவர் சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தின் ஆசிரியர்) நீங்கலாகப் பிறர் பிரிட்டனின் வரலாறு பற்றியே பெரிதும் அக்கறை செலுத்திவந்தனர். ஹாப்ஸ்பாம் அடிப்படையில் ஐரோப்பிய அறிவாளர். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் முதலான நாடுகளின் இடதுசாரி இயக்கங்களோடும் அறிவு மரபுகளோடும் தொடர்ந்த உரையாடல்களை மேற்கொண்டவர். அது மட்டுமல்லாமல் இலத்தீன் அமெரிக்கச் சமூகங்களைப் பற்றி ஆழ்ந்த அக்கறையும் கவனமும் செலுத்தியவர். இலத்தீன் அமெரிக்காவில் அவருக்குப் பெரிய ரசிகர் குழாமே உண்டு. இவற்றின் பின்னணியில், உலக முழுவதிலுமுள்ள விவசாயச் சமூகங்களில் கிளர்ந்த எதிர்ப்பியக்கங்களை இவர் ஆராய்ந்தார். தலைமை இல்லாத எதிர்ப்பு இயக்கங்களைப் புறமொதுக்குவது மரபுரீதியான மார்க்சியம். ராபின் ஹுட் பாணியிலான கொள்ளையர், விவசாய எழுச்சிகள், தொழில்மயமாக்கத்திற்கு முந்தைய நகர்ப்புற ‘கும்பல்’ நடவடிக்கைகள், சமய வடிவெடிக்கும் பொற்காலத்தை விழையும் இயக்கங்கள், இத்தாலிய ‘மாஃபியா’ முதலான நிகழ்வுப்போக்குகளை, ‘ஆதிவடிவக் கிளர்ச்சி’ (primitive rebellion) என்றும் சுட்டினாலும், அரசியல் நடவடிக்கைகளாகவே ஹாப்ஸ்பாம் பார்க்கிறார். 1950களுக்குப் பிறகு உலகின் பல பகுதிகளில் கிளர்ந்த விவசாய எழுச்சிகளைப் புரிந்துகொள்வதற்கு ஹாப்ஸ்பாம் வழிசமைத்தார். இதன் தொடர்ச்சியாக Bandits என்றொரு நூலை, கொள்ளையர்களை மட்டுமே ஆய்வுப் பொருளாகக் கொண்டு, எழுதினார். இதன் பின்னுரையில் நம் ஜம்புலிங்க நாடாரைப் பற்றியும் ஒரு குறிப்பிருக்கும். அரசாங்க ஆவணங்கள், காவல் துறைக் குறிப்புகள் மட்டுமல்லாமல் கொள்ளையர்களைப் பற்றிய கதைப்பாடல்கள், செவிவழிச் செய்திகள் ஆகியவற்றையும் ஹாப்ஸ்பாம் பயன்படுத்தி இருப்பார்.

ஜார்ஜ் ரூடேவுடன் இணைந்து அவர் எழுதிய Captain Swing என்ற நூல் மிக முக்கியமானது. 1830களில் பிரிட்டனின் நாட்டுப்புறமெங்கும் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் குலைக்கும் வகையில் நுழைந்த இயந்திரங்களை உடைத்தும் நிலக் கிழார்களின் உடைமைகளைத் தீயிட்டும் ‘தளபதி ஸ்விங்’ என்று கையெழுத்திட்ட மிரட்டல் கடிதங்கள், அறிக்கைகளை வெளியிட்டும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தோல்வியில் முடிந்ததாக வழமையான வரலாற்று ஆய்வுரைகள் முடிவுரைத்ததற்கு மாற்றாக இப்போராட்டத்திற்கு ஹாப்ஸ்பாமும் ரூடேவும் புது விளக்கம் அளித்தனர். பெருவாரியான உழைக்கும் மக்கள் பரந்துபட்ட அளவில் முதன்முறையாக அணி திரண்டதற்கு உதாரணமாக இப்போராட்டங்களைக் கண்டதோடு, 1860கள் வரை இவை நீடித்ததையும் நிறுவினர்.
சபால்டர்ன் ஆய்வுக் குழுவை நிருமித்த ரணஜித் குஹா (இவரும் 1956இல் கம்யூனிஸ்டு கட்சியை விட்டு வெளியேறியவரே) எழுதிய The Elementary Aspects of Peasant Insurgency in Colonial India 1983இல் வெளிவரும்வரை ஹாப்ஸ்பாமின் விவசாயச் சமூகக் கிளர்ச்சிகள் பற்றிய ஆய்வுரைகள் கோலோச்சின என்று சொல்லலாம்.
1970களில் ஹாப்ஸ்பாமின் ஆய்வுகள் வேறொரு பாதையில் பயணித்தன. முதலாளியத்தின் விளைவாக உருவான நவீன உலகம் தோன்றி வளர்ந்துள்ள முறையை ஹாப்ஸ்பாம் விளக்க முற்பட்டார். அதுவரையான அவருடைய ஆய்வுகளை – எந்த ஓர் இடதுசாரி அறிவாளரையும் போலவே – ஓரளவு கல்வித் தேர்ச்சி பெற்ற எந்தவொரு வாசகரும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் எழுதினாலும் அடிப்படையில் அவை கல்விப் புலம் சார்ந்தனவாகவே இருந்தன. 1970களில் அவர் எழுதிய நூல்கள் பொது வாசகர்களை நோக்கியனவாக அமைந்தன. இதனால் கல்விப் புல நெறிகளை மீறிவிட்டார் என்பதல்ல.
‘பத்தொன்பதாம் நூற்றாண்டு 1789இல் தொடங்கி 1914இல் முடிகின்றது’ என்பது அவருடைய புகழ்பெற்ற வாசகம். நம் கல்விப்புல வாத்தியார்களுக்கு இது புரியுமா என்று சொல்ல முடியவில்லை. இந்த ‘நீண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டை’ப் புரட்சியின் காலம், 1789-1848; மூலதனத்தின் காலம், 1848-1875; பேரரசின் காலம், 1875-1914 என வகுத்துக்கொண்டு அவர் எழுதிய வரலாற்று நூல்களை இப்போது படித்தாலும் மலைப்பு உண்டாகின்றது. வெறும் அரசியல் வரலாறாகவோ சமூக வரலாறாகவோ பொருளாதார வரலாறாகவோ நின்றுவிடாமல் ஒரு ‘முழுமை’யின் வரலாற்றைத் தீட்டிக்காட்ட முற்படுகிறார் ஹாப்ஸ்பாம்.
இதன் தொடர்ச்சியாக அவர் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் வரலாறு, அதீதங்களின் காலம் முதல் உலகப் போர் முதல் சோவியத் ஒன்றிய உடைவுவரை பேசும் ஒரு சமகால வரலாறாகும். உலகைப் புரட்சிகரமாக மாற்றியமைக்க முடியும் என்ற அறிவொளிக்கால – மார்க்சிய நம்பிக்கையைக் கைவிடாமலேயே எவ்வாறு முதலாளிய உலகத்தின் வரலாற்றை நேர்மையாக எழுத முடியும் என்பதற்கு இந்நூல் உதாரணமாகும். கம்யூனிசம் எவ்வாறு முதலாளியம் தன்னைத் தகவமைத்துக்கொள்ள உதவியது; சோவியத் பொருளாதார அமைப்பு எவ்வாறு நீட்டிக்க முடியாததாயிருந்தது என்பன பற்றிய ஹாப்ஸ்பாமின் பகுப்பாய்வுகள் நேர்மையான சுயவிமர்சனத்தின் விளைவானவை.
2002இல் அவர் எழுதிய Interesting Times என்ற சுயசரிதையை இதன் மறுபுடையாகப் பார்க்கலாம். வாழ்நாள் முழுவதும் ஆற்றலுடன் ஒருவர் பங்களித்த ஓர் இயக்கம் அடைந்த தோல்வியை நேராக எதிர்கொள்ளும் துணிவு அனைவர்க்கும் வாய்ப்பதில்லை.
இதுவரை சுருக்கமாகச் சுட்டிய ஹாப்ஸ்பாமின் படைப்புகளின் பட்டியல் எந்த வகையிலும் முழுமையானதல்ல. மார்க்சியத்தின் வரலாற்றில் அவருக்குப் பெரும் ஈடுபாடு இருந்தது. சமகால அரசியலில் நேரடிப் பங்காற்றி, கம்யூனிஸ்டு கட்சியிலும் தொழிலாளர் கட்சியிலும் தம் இடையீடுகள் மூலமாகப் பல விவாதங்களை அவர் கிளப்பினார்.
காலத்திற்கும் வரலாற்றாளனுக்குமான உறவு நேரடியானது. காலத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் அதை அவன் வெற்றிகொள்ள முயல்கிறான். ஹாப்ஸ்பாம் என்ற வரலாற்றாசிரியனின் புரிதலுக்குக் கட்டுப்பட்டிருந்த காலம், காலன் என்ற உருவெடுத்து அவரைக் கடைசியில் காவுகொண்டுவிட்டது.

தோழர் ஸி. எஸ்.
(1910-2011)
தோழர் ஸி.எஸ். என்று அறியப்படும் கோமல் சுந்தரம் சுப்பிரமணியம் மறைந்து ஓராண்டாகிவிட்டது. அகால மரணம் அல்லது மிக நீண்ட வாழ்க்கை என்பதையே இந்தியக் கம்யூனிஸ்டு இயக்கத் தலைவர்களுக்கு ஊழ் விதித்துள்ளது போலும். நூற்றியொரு வயது நிறைவாழ்வு வாழ்ந்தவரைப் பற்றி மனக்குறை இருப்பதற்கு முகாந்திரம் இல்லை. ஆனால் இருக்கிறது. அதுதான் தமிழ்ச் சூழல்.
ஸி. எஸ். மறைந்து ஓராண்டாகிய பிறகும் அவரைப் பற்றிய முழுப் பதிவு இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ப. ஜீவானந்தம் காலத்து ஜனசக்தி தலையங்கங்கள்’ என்ற பெயரில் வெளிவந்த இரு பெருந்தொகுதிகளின் பதிப்புரையின் முதல் வாக்கியத்திலேயே அவருடைய முதலெழுத்து தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது! உங்கள் நூலகம், புதிய புத்தகம் பேசுது ஆகிய இதழ்களில் வெளியானவை சம்பிரதாயமான இரங்கலுரைகளாகவே அமைந்துள்ளன. ஆனால் இதற்காக யாரையும் குறை சொல்வதில் நியாயமல்ல. பொதுவுடைமை இயக்கத்தில் தனிமனிதர்களுக்கு முதன்மை வழங்க வேண்டியதில்லை என்று உறுதியாக நம்பியவர் ஸி. எஸ். இதை ஸ்டாலின் ஆராதனையின் எதிர்விளைவு என்று கருதலாம். தன்னைப் பற்றிப் பேசுவதைப் பிடிவாதமாகத் தவிர்த்தவர் ஸி. எஸ். 1980களில் பேராசிரியர் பிபன் சந்திரா தம் ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸி. எஸ். அவர்களோடு விரிவானதொரு நேர்காணலைச் செய்ய விரும்பியபோது அவர் இணங்க மறுத்தார். கவிதா முரளிதரனைக் கொண்டு 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் அவரோடு ஒரு நேர்காணலைச் செய்ய முயன்றேன். அதற்கும் அவர் இசையவில்லை. புகழ் மறுப்பில் ஏ. கே. செட்டியாரை நினைவூட்டக்கூடியவர் ஸி. எஸ். இதனால் செயலூக்கம் மிக்க அவருடைய ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை.
1984ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்திற்குள் வ. உ. சி. ஆய்வுக்காக முதன்முறையாக நுழைந்தேன். அதன் ஆய்வுக்கூடம் ஆராய்ச்சியாளர்களால் நிரம்பி வழிந்த காலம் அது. வெளியே தேநீர்க் கூடத்திலும் உற்சாகம் பொங்கும். ஆய்வு செய்வதும் விவாதிப்பதுமாகக் காலம் பயனுடனும் மகிழ்ச்சியுடனும் கழிந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு வார நாளிலும் முற்பகல் 11:30 மணி அளவில் ஒற்றை நாடி உருவம் ஒன்று ஆய்வுக்கூடத்தில் நுழையும். சிவந்த மேனி. பழுப்பேறிய கதர் வேட்டி, சட்டை, மேல்துண்டு. நெற்றியில் துலக்கமாக ஒரு புடைப்பு இருக்கும் – இப்படி ஒரு அடையாளத்தை வைத்துக்கொண்டு எப்படித் தலைமறைவு வாழ்க்கையில் போலீசின் பிடியிலிருந்து தப்பினாரோ! வெளுத்து மடித்த உடையணிந்து அவரைப் பார்த்ததில்லை. ஆவணக்காப்பக ஊழியர்கள் எல்லாம் சுதந்திரப் போரட்டத் தியாகி என்று மரியாதையுடன் நடந்துகொள்வார்கள். அவர்தாம் தோழர் ஸி. எஸ்.
ஸி. எஸ். சுப்பிரமணியம் என்றதும் எனக்குப் பாரதி தரிசனம் இரண்டு தொகுதிகளும் உடனே நினைவுக்கு வரும். ஒரு வசங்கெட்ட குக்கிராமத்தில் இருந்துகொண்டு, கல்கத்தா தேசிய நூலகத்திலிருந்த பாரதியின் இந்தியா இதழின் முதல் தொகுதியின் நுண்படச் சுருளை 1970களின் தொடக்கத்திலேயே வரவழைத்து, எப்படியோ அதிலுள்ள கட்டுரைகளைப் படியெடுத்திருந்தார் இளசை மணியன். அக்கட்டுரைகளைப் பிரித்து, குறிப்புகள் எழுதிப் பதிப்பித்தார் ஸி. எஸ். பாரதி எழுத்துக்களின் பதிப்பியலில் ஒரு முக்கிய மைல் கல் பாரதி தரிசனம். ரா. அ. பத்மநாபனின் பதிப்பு முயற்சிகள் ஏறக்குறைய ஓய்ந்து, சீனி. விசுவநாதனின் தேடல்கள் கால்கொள்ளாத ஓர் இடைக்காலத்தில் பாரதி தரிசனம் தொகுதிகள் வெளிவந்திருந்தன. இதையொட்டி, மிதவாதிகளுக்கு டால்ஸ்டாயின் கடிதம்: பாரதியின் ஒப்புநோக்கு என்றொரு சிறு நூலையும் ஸி. எஸ். பதிப்பித்திருந்தார். எந்தவொரு பிரதியையும் சூழலில் பொருத்திப்பார்த்துப் பொருளுரைப்பது மார்க்சியத்தின் அடிப்படை. அதன் துலக்கமான ஒரு தமிழ் எடுத்துக்காட்டாக முதலில் நான் அறிந்தது இச்சிறு நூலே.
என். சி. பி. எச்சில் சில காலம் பணியாற்றிய புலவர் த. கோவேந்தன் வழியாக ஸி. எஸ். பற்றிய பின்னணித் தகவல்கள் சிலவற்றை அறிந்துகொண்டேன். ஆய்வுக்கூடத்தில் பேசுவதை ஸி. எஸ். விரும்பமாட்டார். உரையாடுவதென்றால் வெளியே வர வேண்டும். சுருக்கமாகப் பேச்சை முடித்துக்கொள்வார். அப்போது என். சி. பி. எச். மற்றும் கட்சியின் மூலமாகத் தென்னிந்திய ஆய்வு நிறுவனம் என்றொரு அமைப்பை அவர் நடத்தி வந்தார். அண்ணா, எல்லிஸ், வாலாஜா சாலைகள் சந்திக்கும் இடத்தில் 6, நல்லதம்பி தெரு முதல் மாடியில் இந்நிறுவனம் செயல்பட்டுவந்தது. தீபம் அலுவலகம் என்றால் தமிழ் ஆர்வலர்களுக்குத் தெரியும் - அது கீழ்த்தளத்தில். தீபம் திருமலை இருப்பார். சில சமயங்களில் நா. பார்த்தசாரதி நுழைவதையும் பார்த்திருக்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெயர்தான் நிறுவனம். பெரும்பாலும் மாலை நேரங்களில் ஸி. எஸ். வரும்போதுதான் அதைத் திறப்பார்கள். ஓர் அறையில் நூலகமும் உண்டு. கட்சியின் பழைய பிரசுரங்களும் தேசிய இயக்கம் தொடர்பான நூல்களுமாக ஓராயிரம் நூல்களுக்கு மேல் அடுக்கப்பட்டிருக்கும். ஏ. கே. செட்டியார் பதிப்பித்த புண்ணியவான் காந்தி முதல் தொகுப்பை அங்கேதான் பார்த்தேன்.
தன்னைப் பற்றி அதிகம் பேசாதவராயினும் என் வயதின் காரணமாகவும் (17 அகவை) ஆர்வத்தின் காரணமாகவும் இங்கிதமற்ற அறியாமை காரணமாகவும் அவரிடமிருந்து எப்படியோ பல செய்திகளைக் கொக்கி போட்டு இழுத்து விடுவேன். நான் பதிப்பித்து வெளியிட்டிருந்த வ. உ. சி. கடிதங்கள் நூல் அவருக்கு என்மீது அன்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
1985 ஏப்ரல் மாதக் கடைசி நாள். ஸி. எஸ். வருகைக்காக நிறுவன வாசலில் நான் காத்துக்கிடந்தேன். இரவு எட்டு மணியாகியும் அவர் வரவில்லை. மறுநாள் ஆவணக்காப்பகத்தில் அவரைப் பார்த்தபோது, தன் மனைவியின் ஆறாம் நினைவு நாளானதால் தான் வரவில்லை என்று கூறினார். நான் பழகிய ஒரு பத்தாண்டுக் காலத்தில் அவர் கண்களில் நெகிழ்ச்சியைப் பார்த்தது அந்தத் தருணத்தில்தான். மன அழுத்தம் அவரை ஆட்கொண்டிருந்திருக்கலாம் என இன்று தோன்றுகிறது.
டாக்டர் சுகுணாபாயுடனான திருமணம்தான் ஸி. எஸ். வாழ்க்கையின் திருப்புமுனை. ஸி. எஸ்ஸின் சொந்த ஊர் மாயவரம் அருகேயுள்ள கோமல். தந்தையார் கல்வித் துறை அதிகாரி. வேலூர் ஊரிஸ் பள்ளியில் படித்த பின்னர் மாநிலக் கல்லூரியில் பயின்றார். மேற்படிப்புக்காகவும் ஐ. சி. எஸ். (ஐ. ஏ. எஸ்ஸின் பூர்வாசிரமம்) தேர்வு எழுதவும் 1930ஆம் ஆண்டளவில் இங்கிலாந்து சென்றார். (இவருடைய உடன்பிறந்த தம்பி ஸி. எஸ். இராமசந்திரன் ஐ. சி. எஸ். அதிகாரியானார்.) பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் கேம்பிரிட்ஜில் படித்தார்கள். இந்தியாவில் பணியாற்றிய உயர் வெள்ளையதிகாரிகள் அதிகமும் படித்த ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தின் பாலியோல் கல்லூரியில் படித்து பி. ஏ. பட்டம் பெற்றார் ஸி. எஸ். இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இளைஞர்களிடையே இடதுசாரிச் சிந்தனைகள் கோலோச்சின. கம்யூனிஸ்டு மாணவர்களின் அக்டோபர் க்ளப்பில் தம்மை இணைத்துக்கொண்டார். 1931இன் பிற்பகுதியில், இரண்டாம் வட்ட மேசை மாநாடு நடைபெற்றுவந்த காலப்பகுதியில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டு கட்சியின் ஏடான டெய்லி வொர்க்கர்இலும் பணியாற்றினார். ரஜனி பாமி தத் முதலான பிரிட்டிஷ் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, ஐ. சி. எஸ். தேர்வு எழுதாமல் திரும்பினார் ஸி. எஸ். கிறிஸ்டோபர் காட்வல் தனக்கு இளையவர் என்று அவர் ஒருமுறை கூறியது நினைவிலிருக்கிறது. சி.வி. BowraÞ¡ The Romantic Imagination நூலை என் கையில் பார்த்தபோது, பௌராவின் விரிவுரைகளைக் கேட்டதை நினைவுகூர்ந்தார்.
1930களின் தொடக்கத்தில் ஸி. எஸ். இந்தியா திரும்பியபோது தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சி முளைவிட்டிருக்கவில்லை. அப்போது பொதுவுடைமைப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரே இயக்கம் பெரியாரின் சுயமரியாதை இயக்கம்தான். முதலில் தேசிய அரசியலில் ஈடுபட்ட ஸி. எஸ்., காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தமிழகத்தில் உருவானதில் பங்குவகித்தார். 1934இல் கம்யூனிஸ்டு கட்சி தடைசெய்யப்பட்டபோது தமிழகக் கம்யூனிஸ்டு தலைவர்களின் முதல் தலைமுறையில் ஒருவராக விளங்கியிருக்கிறார். ஜனசக்தி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதன் ஆசிரியக் குழுவில் முக்கியப் பங்காற்றியதோடு அச்சக நிர்வாகப் பொறுப்புகளையும் மேற்கொண்டார். பொதுவுடைமைக் கட்சி தமிழ் மண்ணில் ஊன்றிய காலத்திலிருந்து அதன் இணைகோடாக ஸி. எஸ்ஸின் வாழ்க்கை அமைந்திருந்திருக்கிறது.
1940ஆம் ஆண்டின் இறுதியில் பி. ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம், ஸி. எஸ். முதலானோர்மீது ‘சென்னை கம்யூனிஸ்டு சதி வழக்கு’ என்றறியப்படும் வழக்கு தொடரப்பட்டது. சில காலம் ஸி. எஸ். தலைமறைவானார். ‘லுக் அவுட் நோட்டீஸ்’ ஒன்றைப் போலீசார் வெளியிட்டனர். இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஸி. எஸ். பதினெட்டு மாதக் கடுங்காவல் தண்டனை பெற்றார்.
இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளுடன் சோவியத் ஒன்றியம் கைகோத்ததும் கம்யூனிஸ்டு கட்சிமீதான தடை நீக்கப்பட்டது. ஜூலை 1942இல் ஸி. எஸ். முதலான கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் அதுவரை மிக உக்கிரமாகப் போராடி வந்த கட்சி, காங்கிரஸ் அறிவித்த ஆகஸ்டு போராட்டத்தை எதிர்க்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இது பற்றி மத்தியக் குழுக் கூட்டத்தில் விவாதம் நடந்தபோது பி. சீனிவாச ராவ், பி. ராமமூர்த்தி, ஸி. எஸ். ஆகியோர் காங்கிரஸ் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு எடுப்பதை ஆதரிக்கவில்லை என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும்.

கட்சியின் செயல்பாடுகளில் தொடர்ந்து முன்னின்றிருக்கிறார் ஸி. எஸ். களப்போராளி என்பதினும் கட்சியின் நிர்வாக மற்றும் அறிவுசார் பணிகளில் அவர் அதிகம் கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது. 1948 கல்கத்தாவில் நடந்த கட்சியின் காங்கிரசில், இந்திய அரசை ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் மூலமாகக் கைப்பற்றுவது என்ற பி. டி. ரணதிவே நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டதையொட்டிக் கட்சி தடைசெய்யப்பட்டது. தலைவர்கள் பலர் தலைமறைவாயினர்.
கட்சித் தோழரின் கையில் இல்லற வன்முறைக்கு ஆளாகியிருந்த சுகுணாபாய் என்ற மங்களூரைப் பூர்விகமாகக் கொண்ட மருத்துவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் ஸி. எஸ். ஒழுக்கமீறல்கள் என்று கருதியவற்றைக் கடுமையாகக் கடியும் வழமையைக் கொண்ட கம்யூனிஸ்டு கட்சி அவரைக் கட்சியிலிருந்து நீக்கியது. பொதுவுடைமை இயக்கத்தையே தம் வாழ்க்கையாகக் கொண்ட ஸி. எஸ்ஸுக்கு இது பேரிடியாக அமைந்தது. 1952இல் அவர் மனைவியோடு கோபி செட்டிபாளையத்திற்குக் குடிபெயர்ந்தார். ஒரு கால் நூற்றாண்டுக்காலம் அங்கேயே வாழ்ந்தார்.
கட்சிதான் ஸி. எஸ்ஸை நீக்கியதேயொழிய ஸி. எஸ். எப்போதும் கட்சியைவிட்டு நீங்கியதில்லை. 1980களின் பிற்பகுதியில் கோர்பச்சேவ் காலத்து ‘க்ளாஸ்நாஸ்ட்’ கொள்கை கட்சி அமைப்பில் சில நீக்குபோக்குகள் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஸி. எஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதற்காக ஒரு கடிதம் தருமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். கட்சியிலிருந்து தன்னை நீக்கிய தீர்மானத்தை விலக்கிக் கொள்வதே போதுமானது; தனியே கடிதம் எதுவும் தேவையில்லை என்று தோழர் ஆர். நல்லகண்ணுவுக்கு ஸி. எஸ். பதில் சொல்லிவிட்டார். உறுதி என்றும் சொல்லலாம், பிடிவாதம் என்றும் சொல்லலாம். அதுதான் ஸி. எஸ்.
1950களிலும் 1960களிலும் ஸி. எஸ். என்ன செய்துகொண்டிருந்தார் என்பது புலப்படவில்லை. 1956 இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை; எனவே ஸி. எஸ்ஸின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழவில்லை. 1964இல் கம்யூனிஸ்டு கட்சி பிளவுண்டபோது அவர் தாய்க் கட்சியைச் சார்ந்திருந்ததும் எதிர்பார்க்கக்கூடியதே.
1960களின் கடைசியில் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்று ஆவணங்களைத் தொகுத்துப் பதிப்பிக்கும் பணியை ஜி. அதிகாரி மேற்கொண்டார். அவரோடு ஸி.எஸ்ஸுக்குக் கட்சியின் ஆரம்ப நாளிலிருந்தே நல்ல தொடர்பு இருந்தி ருக்கிறது. பி. சி. ஜோஷியின் உந்துதலின் பேரில் நா. வானமாமலைக்கு நாட்டார் இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டதுபோல ஜி. அதிகாரியின் தூண்டுதல் ஸி. எஸ். கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றை ஆராய்வதற்கும் காரணமாயிருந்திருக்கிறது. ஜி. அதிகாரியின் பணிக்கு ஸி. எஸ். நிறைய உதவி இருப்பதாகத் தெரிகிறது. சிங்கார வேலு செட்டியார் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் கம்யூனிஸ்டு கட்சி வரலாற்று ஆவணத் தொகுப்பு களில் இருப்பது இதற்கொரு ஆதாரம். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம்/கட்சியின் வரலாற்றை எழுதுவதே தன்னுடைய வாழ்நாள் பணியாக மாறும் என்று ஸி. எஸ். எதிர்பார்த்திருக்கமாட்டார்.
1975இல், கம்யூனிஸ்டு கட்சியின் பொன்விழாவையொட்டி ஸி. எஸ். பல வெளியீடுகளைக் கொண்டுவந்தார். பல்லாண்டு உழைப்பில் வெளிவந்த Singaravelu:
First Communist of South India இன்றளவும் முக்கியமானதொரு நூலாகும். சிங்காரவேலர் வாழ்க்கையை எழுதுவதில் தொடங்கிய கம்யூனிஸ்டு கட்சி வரலாற்றை எழுதும் பணி, சிபிஐயின் 17ஆம் காங்கிரஸ் சென்னையில் 1998இல் நடைபெற்றபோது அவர் எழுதிய Our Party’s Growth in Tamilnadu: A Brief Sketch என்ற குறுநூலுடன் முற்றுப்பெறுவதாகக் கொள்ளலாம். ஸி. எஸ். முடிக்காமல் விட்டுச் சென்ற பணியை இனி யார் தொடர்வார்களோ!
ஹிந்து, சுதேசமித்திரன் முதலான நாளிதழ்களை அவர் சிங்காரவேலர் பற்றிய நூலுக்காகப் பார்வையிட்டார். அந்நூலின் இணையாசிரியர் சிங்காரவேலரை நேரில் அறிந்தவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஒரே இந்தியக் கம்யூனிஸ்டு உறுப்பினராக விளங்கிய சக்லத்வாலா, தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியை அமைத்தவர்களில் ஒருவராகிய எஸ்.வி. காட்டே ஆகியோரைப் பற்றியும் இரு சிறு நூல்களை இச்சமயத்தில் அவர் எழுதினார்.
அமைப்புச் சார்ந்த கம்யூனிஸ்டு இயக்கத்திற்காகச் சிங்காரவேலரை மீட்டெடுத்துக்கொடுத்தவர் ஸி. எஸ்தான் என்று சொல்ல முடியும். 1924இல் கம்யூனிஸ்டு தலைவர்கள்மீது சுமத்தப்பட்ட கான்பூர் சதி வழக்கில் சிங்காரவேலர் விடுவிக்கப்பட்டதற்கு அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதே காரணம் என்ற அவதூறை அரசு ஆவணங்களைக் கொண்டே ஆணித்தரமாக முறியடித்தவர் ஸி. எஸ். புது உலகம் முதலான இதழ்களில் புதையுண்டுகிடந்த சிங்காரவேலர் எழுத்துகளைத் திரட்டியதோடு, ‘பொதுவுடைமை விளக்கம்’ என்ற கையெழுத்துப்படிக்கும் நூல்வடிவம் கொடுத்தவர் ஸி. எஸ்.

சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகல் ஏற்பட்ட காலப் பகுதியில் சிங்காரவேலர் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த மாத இதழ் புது உலகம். இதைத் தேடித் துறைமுகத் தொழிலாளர் சங்கத்திற்கு 1982 வாக்கில் நான் சென்றிருக்கிறேன்; தோழர் கே. முருகேசன் அவர்களைக் காண முடியவில்லை. அதைத் தொடர்ந்து தோழர் வைகறையைத் தேடி, தியாகராய நகர் 15 சாரி தெருவிலிருந்த கார்க்கி நூலகத்திற்குச் சென்றேன். கடைசியில் கே. முருகேசனையும் புது உலகத்தையும் ஸி. எஸ். நிறுவனத்தில்தான் பார்த்தேன்.
மாலை நேரங்களில் சில நாள் கே. முருகேசன் நிறுவனத்திற்கு வருவார். சுயமரியாதை இயக்கத்தின்வழியே பொதுவுடைமை இயக்கத்திற்கு வந்தவர் முருகேசன். 1930களிலிருந்து இருவரும் நண்பர்கள். ஸி. எஸ். – முருகேசன் உறவு விந்தையானது. பழுத்த பழங்கள் இரண்டு ‘நீ, நீ’ என்று ஒருமையில் பேசிக்கொள்வது பதினேழு வயது இளைஞனுக்கு வேடிக்கையாக இருக்கும். நான் பார்த்த வேளையிலெல்லாம் ஏதாவது காரணம் பற்றி முருகேசனைக் கடிந்துகொண்டிருப்பார் ஸி. எஸ். கடிதலுக்குள் ஆழ்ந்த அன்பு பொதிந்திருக்கும். புது உலகம் தொகுப்பை எவரிடமோ இரவல் கொடுத்துவிட்ட பொறுப்பில்லாத்தனத்திற்கு ஒருமுறை அவரை ஸி. எஸ். ‘வைது’கொண்டிருந்தார். அமைதியாக, தலைகுனிந்து முருகேசன் ‘வசவு’களைக் கேட்டுக்கொண்டிருந்தார். முருகேசன் வரும் நாள்களில் கட்டாயம் தேநீர் வரவழைப்பார் ஸி. எஸ். ஒரு நாள் தேநீர் குடித்த பிறகு, ‘சரி, சரி’ என்று ஒரு புத்தகத்தை ‘நம்முடையது’ என்று சொல்லி அவரிடம் நீட்டினார் ஸி. எஸ். ‘கே. முருகேசன் - ஸி. எஸ். சுப்பிரமணியம்’ இணையாசிரியர்கள் என்றோ இணைப் பதிப்பாசிரியர்கள் என்றோ அச்சிட்ட முகப்புப் பக்கத்தைக் கொண்ட புது வெளியீடு அது. கே. முருகேசன் பெயர்தான் எல்லா நூல்களிலும் முதலில் இருக்கும். புத்தகம் அவர் அறியாத ஆங்கில மொழியில் வெளியாகியிருந்தாலும் அப்படித்தான். இப்படி ஒரு புத்தகம் வெளிவருவதுதானும் அவருக்குத் தெரிந்திருக்காது. அதுதான் ஸி. எஸ்.
நான் ஸி. எஸ்ஸைச் சந்தித்த காலத்தில் எம். பி. டி. ஆசாரியாவைப் பற்றி ஆய்வுசெய்துகொண்டிருந்தார். பாரதியை ஆதரித்த மண்டயம் குடும்பத்தைச் சேர்ந்தவர் மண்டயம் பிரதிவாதி திருமலை ஆசாரியா. பாரதி புதுவையில் தஞ்சமடைந்தபோது இந்தியா இதழை அங்கு நிறுவியவர். அப்போது அவருக்குப் பதினெட்டு வயது. சிறிது காலத்தில் அவர் இலண்டனுக்குச் சென்று சாவர்கர், வ. வே. சு. அய்யர் முதலான புரட்சிகர பயங்கரவாதிகளுடன் தொடர்புகொண்டிருந்தார். லார்டு கர்சன் வைலியை மதன்லால் திங்கரா சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து இக்குழு சிதறியது. பின்பு அவர் துருக்கி, பிரான்சு, அமெரிக்கா சென்றார். 1919இல் லெனினை நேரில் சந்தித்தார்.1920இல் தாஷ்கண்ட்டில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியை எம். என். ராய், முஸாபர் அகமது, அபானி முகர்ஜி முதலானவர்களோடு இணைந்து தோற்றுவித்தார். எம். என். ராயுடன் ஏற்பட்ட கசப்பின் விளைவாகக் கம்யூனிஸ்டு இயக்கத்திலிருந்து விலகி, அனார்க்கோ-ஸிண்டிகலிஸ்டாக ஜெர்மனியில் பல்லாண்டுகள் வாழ்ந்தார். 1934இல் இந்தியா திரும்பிய எம்.பி.டி. ஆசாரியா வறுமையில் வாடி 1953இல் பம்பாயில் காலமானார். கம்யூனிஸ்டு கட்சியின் தோற்றுநர்களில் ஒருவர் என்ற முறையிலேயே அவர்மீது ஸி. எஸ்ஸுக்கு ஈடுபாடு என்று சொல்ல வேண்டியதில்லை. ஜி. அதிகாரி தொகுத்த கம்யூனிஸ்டு கட்சி வரலாற்று ஆவணத் தொகுப்புகளில் எம். பி. டி. ஆசாரியா பற்றிப் பல குறிப்புகளைக் காணலாம். இந்திய சமூக அறிவியல் ஆய்வுப் பேரவையிலிருந்து (ICSSR) பெற்ற ஒரு சிறு நல்கையைக் கொண்டு ஸி. எஸ். ஆய்வு செய்துவந்தார். தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மட்டுமல்லாமல், புனா கேசரி மராட்டா நூலகத்திலும், புதுதில்லி தேசிய ஆவணக் காப்பகத்திலும் நேரு நினைவு நூலகத்திலும் ஆராய்ந்து பல செய்திகளைச் சேகரித்தார். சிவராம காரந்துக்கு எம். பி. டி. ஆசாரியா எழுதிய ஒரு கடிதத்தையும் அவர் கண்டெடுத்தார். இந்த ஆராய்ச்சியின்போது தான் மண்டயம் குடும்பத்தாரிடமிருந்து மண்டயம் ஸ்ரீநிவாசாசாரியார் எழுதிய நினைவுக் குறிப்புகளின் கைப்படியைத் தேடியெடுத்தார். இவ்வாறு தேடியெடுத்த பல ஆவணங்களை என்னோடு அவர் பகிர்ந்துகொண்டார்.
நானும் ஆ. சிவசுப்பிரமணியனும் இணைந்து எழுதிய பின்னி ஆலை வேலைநிறுத்தம், 1921 என்ற நூலுக்கு ஒரு விரிவான பின்னுரையையும் ஸி. எஸ். எழுதிக் கொடுத்தார்.
எம். பி. டி. ஆசாரியா பற்றி ஸி. எஸ். எழுதிய ஆய்வுரையின் தட்டச்சுப் படியை நான் படித்திருக்கிறேன். பின்புலத்தை விளக்கும் முதல் இயல் ரஜினி பாம் தத் எழுதிய இன்றைய இந்தியாவைப் பெரிதும் தழுவி அமைந்திருக்கும். ஸி. எஸ்ஸின் கோட்பாட்டுப் புரிதலை இது ஒருவாறு சுட்டுவதாகக் கொள்ளலாம். பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு 1996இல்தான் இவ்வாய்வுரை நூலாக்கம் பெற்றது. ஸி.எஸ். தாம் எழுதும் ஆங்கில எழுத்துகளை எல்லாம் சென்னைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையில் சிலகாலம் பணியாற்றிய பேராசிரியர் ஆர். பாலசந்திரன் மேற்பார்த்த பின்புதான் அச்சுக்குக் கொடுப்பார். தன் பெயரை வெளியிடக் கூடாது என்ற முன்னிபந்தனையை அவர் விதிப்பார்.
ஸி. எஸ். கையெழுத்து – தமிழானாலும் ஆங்கிலமானாலும் – எளிதில் புரியாது. தட்டச்சிடுவோரும் அச்சுக்கோப்பவரும் படும் அவதி சொல்ல முடியாது. மெய்ப்புத் தாளிலும் ஏராளமான திருத்தங்கள் போடுவார். மூத்த தோழர் என்று அனைவரும் அவரை மதிப்பார்கள். ஒருமுறை கே. இராதாகிருஷ்ணமூர்த்தியை (முதிய தோழர் என்பதல்லாமல், என். சி. பி. எச். செயலாளருமாவார்) அவர் கடிந்துகொண் டதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் வேலை நடக்காது. அதுவும் போட்டோ டைப்செட்டிங் முறையில் அச்சுக் கோத்ததால் திருத்தங்கள் செய்வது செலவு பிடிக்கும் காரியம். ஆறேழு ஆண்டு தாமதத்திற்குப் பிறகு 1996 தொடக்கத்தில் பாலன் இல்லம் விரிவாக்கிக் கட்டப்பட்டதைக் குறிக்கும் விழாவில், இதன் வெளியீடு நடந்தது. ‘அன்றைய நிகழ்ச்சிக்கென சில பிரதிகளை மட்டும் தயாரித்துத் தந்தனர் அச்சகத்தார். இப்போதைய நிலையில் cost அதிகமாயிருப்பதாலும் இது போன்ற நூலை ஒருசிலர் மட்டும் வாங்கக்கூடும் என்பதாலும் 700 பிரதிகளே தயாரிப்பதாக முடிவு. அதில் 100 பிரதிகள் மட்டும் அச்ககத்தார் தந்துள்ளனர்’ என்று ஸி.எஸ். எனக்குக் கடிதம் (10 மார்ச் 1996) எழுதினார். பின்னர் எனக்கொரு பிரதியும் அனுப்பிக்கொடுத்தார்.

தாம் தயாரிக்கும் நூல்களை என். சி. பி. எச். விரைந்து வெளியிடாததால் அவரே சில முயற்சிகளையும் மேற்கொண்டார். வ. வே. சு. அய்யர் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பை ஆங்கிலத்தில் வெளியிட முனைந்தார். பம்பாய் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் ஆர். சீனிவாசன் வ. வே. சு. அய்யரைப் பற்றி ஓர் அருமையான மதிப்பீட்டை எழுதி இருந்தார். வ. வே. சு. அய்யரின் தேசியச் சிந்தனைகளின் மத அடிப்படை, வலதுசாரித் தன்மை முதலானவற்றை ஒரு வீச்சான ஆங்கிலத்தில் எழுதிய அக்கட்டுரையைத் தட்டச்சாகப் படிக்கக் கொடுத்தார் ஸி. எஸ். இன்றளவும் என் மனங்கவர்ந்த கட்டுரை அது. சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர். சண்முகசாமி சேரன்மாதேவி குருகுலம் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். விரிவான ஆதாரங்களின் அடிப்படையில் தவறான முடிவை அடைந்தாலும் அது முக்கியமான கட்டுரை. ஸி. எஸ். எழுதிய கட்டுரை சற்றுப் பலவீனமானது. சென்னைத் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களைப் பற்றி ஆராய்ந்துவந்த தேவ. வீரராகவன், இ. எல். அய்யர் தொழிலாளர்களுக்கென்றே நடத்திய முதல் ஆங்கில வார ஏடான சுதர்மாவை அப்போது கண்டெடுத்திருந்தார். அதில் வெளியாகியிருந்த வ. வே. சு. அய்யர் எழுதிய ஒரு கதையையும் சேரன்மாதேவி குருகுலம் பற்றிய ஓர் அறிக்கையையும் வ. வே. சு. அய்யரைப் பற்றிய அந்நூலில் சேர்த்தார் ஸி. எஸ். பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ஆகியோர் வ. வே. சு. அய்யருக்கு இயற்றிய இரங்கற்பாக்களை நான் ஆங்கிலத்தில் மொழியாக்கினேன். அவையும் பிற்சேர்க்கையில் இடம்பெற்றன. மே. து. ராசுகுமாரின் மக்கள் அச்சகத்தில் அச்சிடப்பட்டு V.V.S. Aiyar: Criticial Studies நூல் 1986இல் வெளிவந்தது.
ஸி. எஸ். செய்துவந்த ஆராய்ச்சிகளின் வழியாக, புதுவைப் பொதுவுடைமை இயக்கத் தலைவர் வ. சுப்பையாவின் தொடர்பின்வழி, புதுவை அரவிந்த ஆசிரமத்திலிருந்த மூத்த எழுத்தாளர் ப. கோதண்டராமனிடமிருந்து பாரதி நடத்திய இந்தியாவின் 1908–09ஆம் ஆண்டு தொகுப்பு ஸி. எஸ்ஸுக்குக் கிடைத்தது. இத்தொகுப்பிலுள்ளவற்றைப் பாரதி தரிசனம் வரிசையில் வெளியிட வேண்டுமென்று ஸி. எஸ். விரும்பினார். இதற்கு முன்னோட்டமாக, விற்றுத் தீர்ந்துவிட்ட பாரதி தரிசனம் முதலிரு தொகுதிகளின் (1906–07) மறுபதிப்பை வெளியிட விரும்பினார். விரிவாக்கப்பட்ட பதிப்பாக இது அமைய வேண்டும் என்பது அவர் விருப்பம். முதல் தொகுதியின் மறுபதிப்பு தாமதமாக வந்தது. விடுபட்ட சில கட்டுரைகளை நானும் சேர்த்துக் கொடுத்திருந்தேன். அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அவர் நூலில் நன்றி பாராட்டியிருந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இரண்டாம் தொகுதி மறுபதிப்பாகவில்லை. இடைப்பட்ட 1907–08ஆம் ஆண்டுக்கான இந்தியா தொகுப்பு இதுவரை கிடைக்கவில்லை. இந்த இடைவெளியை நிரப்ப ஸி. எஸ். ஒரு திட்டம் வகுத்தார். அரசாங்கத்தின் ரகசிய போலீஸ் துறை சுதேசிகள் நடத்திய பத்திரிகைகளை எல்லாம் கவனித்து வந்ததோடு, முக்கியக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டுவந்தது. இவை அறிக்கைகளாக அச்சிடப்பட்டு, கமுக்கமாகப் பேணவும் பட்டன. பாரதியின் இந்தியா பத்திரிகை அரசின் சிறப்பான கவனத்தைப் பெற்றதில் வியப்பில்லை. கிடைக்கப்பெறாத இந்தியா இதழ்களின் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளை மீண்டும் தமிழாக்கி வெளியிடலாம் என ஸி. எஸ். திட்டமிட்டார். மூல இதழ்கள் கிடைக்காத நிலையில் இந்த மறு மொழிபெயர்ப்புகளேனும் ஆராய்ச்சிக்குப் பயன்படட்டுமே என்பது எண்ணம். அவ்வாறு மொழிபெயர்க்கும் வேலையை எனக்களித்தார். கூடுமானவரை அக்கால நடையில், பாரதியின் பாணியிலேயே நான் மொழிபெயர்த்தது ஸி. எஸ்ஸுக்குப் பேருவகை அளித்தது; மனமாரப் பாராட்டினார். துரதிருஷ்டவசமாக இத்தொகுப்பும் வெளிவரவில்லை. கையெழுத்துப்படியும் என்னவாயிற்றென்று தெரியவில்லை.
இப்பணியினூடாக எனக்கு வேறு சில பயன்களும் ஏற்பட்டன. பாரதி பற்றி ஸி. எஸ். அவர்களோடு பலமுறை விவாதித்து வளம்பெற்றேன். ரகுநாதன் எழுதிய பாரதி: சில பார்வைகள், பாரதி: காலமும் கருத்தும் ஆகிய நூல்கள் என்னை ஆட்கொண்டிருந்த நேரம் அது. பாரதி படைப்புகள் ஒவ்வொன்றின் பின்னணியையும் கண்டறிந்து, விவாதப் போக்கில் ரகுநாதன் எழுதிய கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்த்தன. ‘புதுமைப்பித்தன் வரலாறு’ உண்டாக்கியிருந்த போதை வேறு. கள்ளுண்ட குரங்கைத் தேளும் கடித்தால்? ஸி. எஸ்ஸினுடைய பார்வை வேறாக இருந்தது. ரகுநாதன் ஆய்வுகளுக்குப் போதுமான ஆவண அடிப்படையில்லை என்பதையும், வாதத்திறனின் அடிப்படையில் அமைவதல்ல வரலாற்று உண்மைகள் என்பதையும் ஸி. எஸ். அவருக்கே உரிய முறையில் குறிப்புணர்த்தினார். ரகுநாதனைக் கடந்து செல்வதற்கு ஸி. எஸ். மிக உதவினார் என்றே சொல்ல வேண்டும்.
ப. கோதண்டராமன் கொடுத்துதவிய இந்தியா தொகுப்பு கட்டுக்கோப்பானது. அதை ஸி. எஸ். பெரும் பொருட்செலவில் நுண்படச் சுருளாகவும் படியெடுத்திருந்தார். இத்தொகுப்பைப் பார்க்கும்போதெல்லாம் பாரதியின் கருத்துப்படங்கள் அனைத்தையும் முறையாகத் தொகுத்து, படியெடுத்து, தக்க முன்னுரைகளுடன் நூலாக்க வேண்டும் என்று கனவு காண ஆரம்பித்தேன். அதை அவரிடம் வெளியிட்டபோது மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆமோதித்தார். பல ஆண்டுகள் கழித்து, 1994இல் இப்பணியில் நான் வெற்றிபெற்றபோது, முழு ஒத்துழைப்பு தந்ததோடு, தாமாக முன்வந்து ஆயிரம் ரூபாய் நன்கொடையும் கொடுத்தார். 23.02.1995இல் கோபிசெட்டிபாளையத்திலிருந்து அவர் எழுதிய அஞ்சலட்டையின் முதல் வரி: ‘பாராட்டு. நல்வாழ்த்து. இன்று பதிவு அஞ்சலில் உனது “பாரதியின் கருத்துப் படங்கள்” நூலின் பிரதிகள் இரண்டு கிடைத்தன. எடுத்த காரியத்தை முடித்துள்ளதற்கு எனது பாராட்டுகள்.’
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றைப் பதிவுசெய்வதிலும் ஸி. எஸ். தொடர்ந்து கவனம் செலுத்தினார். 1931இலிருந்து சில ஆண்டுகள் சென்னையிலிருந்தவாறு கட்சியை ஊன்ற முயன்றவர் அமீர் ஹைதர் கான். இதற்காகக் கட்சித் தலைமையகமே அவரை இங்கு அனுப்பியிருந்தது. தலைமறைவாக இருந்து கட்சியை வளர்க்க முயன்ற அமீர் ஹைதர் கான் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். தமிழகத்தில் கட்சிப் பணியாற்றியது தொடர்பான நினைவுக் குறிப்புகளை அவர் ஆங்கிலத்தில் எழுதிவைத்திருந்தார். அதை ஜி. அதிகாரியிடமிருந்து பெற்று, வெளியிடப் பெரிதும் முயன்றார் ஸி. எஸ். நான் அவரை முதலில் சந்தித்த காலத்தில் அப்பணியிலும் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். அந்நூலும் மிகத் தாமதப்பட்டு, ‘தென்னிந்தியாவைக் கண்டேன்’ என்ற தலைப்பில் 1989இல் என்.சி.பி.எச். வெளியீடாக வந்தது. ஏராளமான பின்னணித் தகவல்களை முன்னுரையாகவும் அடிக்குறிப்புகளாகவும் பின்குறிப்புகளாகவும் தருவது ஸி. எஸ்ஸின் வழக்கம். அதை அந்நூலிலும் பார்க்கலாம்.
1987 முதல் 1990 வரை மறைமலையடிகள் நூலகத்தில் நான் பணியாற்றினேன். அக்காலத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்தன. இருப்பினும் அவ்வப்போது சந்தித்துக்கொள்வோம். எம். கல்யாணசுந்தரம் காலமானபோது (1998) ஜனசக்தி அலுவலகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மண்ணடியிலிருந்த மறைமலையடிகள் நூலகத்திற்கு என்னைக் காண வந்தார். அவரிடம் மனக்கலக்கம் தென்பட்டது. அம்பையின் வற்புறுத்தலின் பேரில், பாரதி நடத்திய சக்கரவர்த்தினியின் சிதிலமடைந்த ஓரிதழை ஒளிப்படி எடுப்பதற்காகவும் இரண்டொருமுறை வந்தார்.

தமிழ்நாட்டில் காலனியாதிக்கம் என்பது பற்றி ஒரு தொகுப்பு நூலை வெளியிடுவதற்காக ஓர் ஆலோசனைக் கூட்டத்தை ஒழுங்குசெய்தேன். அது ஸி. எஸ்ஸின் நிறுவனத்தில் ஒரு ஞாயிறு மாலை நிகழ்ந்தது. பழ. அதியமான், எம். எஸ். எஸ். பாண்டியன், நா. இராஜேந்திரன், ஞா. ஸ்டீபன், ம. மதியழகன், தேவ. வீரராகவன், வி. ஆர். முரளிதரன் முதலானவர்கள் கலந்துகொண்டார்கள். கடைசியில் அது ஆண்டிகள் கட்டிய மடமாகப்போனது. தமிழ்நாட்டுத் தொழிலாளர் போராட்டங்கள் பற்றி ஆராய்ந்துவந்த வீரராகவன்மீது அவருக்கு அன்பு அதிகம் என்பதையும் இங்கே பதிய வேண்டும்.
ஸி. எஸ். செய்துவந்த ஆய்வுப் பணிகளில் என் பங்காகச் சில உதவிகளைச் செய்துவந்தேன். புது தில்லிக்குச் சென்றபோது (1985, 1988) அவருக்குத் தேவையான சில ஆவணங்களைத் தேடி எடுத்துக்கொடுத்தேன். சிங்காரவேலு: தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் நூலின் விரிவான தமிழ்ப் பதிப்பு வெளிவந்தபோது அதன் முன்னுரையில் பின்வருமாறு அவர் குறிப்பிட்டிருந்தார்: ‘பாரதிதாசன் கவிதையின் தமிழ் மூலப் பிரதி (‘புது உலகம்’ வாழ்த்துப் பாடல்) தந்துதவிய, கல்லூரிப் படிப்பு நாட்களில் வ. உ. சி. பற்றிய ஆராய்ச்சி செய்யத் துவங்கி ஆராய்ச்சித் துறையில் சொந்த முயற்சியினால் அனுபவம் பெற்றவரும், மறைமலையடிகள் நூலக உதவி நூலகராயிருந்து தற்சமயம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி மேல் படிப்பில் ஈடுபட்டுள்ள திரு கி.ஸி. வேங்கடாசலபதிக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.’
இந்த வாக்கியத்தைப் படிக்கும்போது அவரோடு நடத்திய விவாதங்கள் நினைவுக்கு வருகின்றன. ஸி. எஸ்ஸின் மொழிநடை தொடக்க கால கம்யூனிஸ்டு இயக்கத்தில் ஊறியது. பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் நடைச் சிறப்புக்குப் பெயர்பெற்றவர்கள். தமிழ்நாட்டுக்கு அந்தப் பேறு வாய்க்கவில்லை.
நான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சென்ற புதிதில் அவர் எழுதிய கடிதம் (18.9.1990) வருமாறு: ‘தமிழில் எழுதலாமா அல்லது ஆங்கிலத்தில் எழுதுவதா என்று சற்றே தயங்கினேன். என்னுடைய தமிழ் தமிழ்தானா என்று உங்கள் தலைமுறை நினைக்குமல்லவா? எனினும் வடக்கே இருக்கும் நம்மவர்களுக்கு நம் மொழியின் ஒலியோ, எழுத்தோ கொஞ்சம் மன மகிழ்ச்சியைத் தருமல்லவா?’ 20.8.1994இல் கோபிசெட்டிபாளையத்திலிருந்து எழுதிய கடிதத்திலும் பின்வருமாறு எழுதியிருந்தார். ‘நான் எழுதும் தமிழ் தமிழ்தானா என்று நீ நினைக்கக் கூடும். என்றாலும் இந்த ஊரில் இருப்பதால் இப்போது தமிழில் பேசுவது வழக்கமாகி வருகின்றது.’
என்னோடு பேசும்போது பெரிதும் ஆங்கிலத்தில் பேசுவார். தமிழில் பேசும்போது மிக இயல்பாக ஒருமையில் பேசுவார்.
சென்னையில் அவர் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் வாழ்ந்துவந்தார். பெரிய வீடு. பழுது பார்க்க வேண்டிய நிலையிலேயே எப்பொழுதும் இருக்கும். அவருடைய தமக்கையும் அவ்வீட்டில் இருந்தார். மிக ஆசாரமானவர் என்பதைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். ஸி. எஸ். பூணூல் அணியாதவர். 1930களிலேயே கழற்றி எறிந்திருப்பார் என்று அனுமானம். கட்சித் தொடர்புகள், திருமணம் இவற்றின் காரணமாக அவர் விலக்கிவைக்கப்பட்டுமிருந்தார் என்று நினைக்கிறேன். எப்போதும் சொந்தச் சமையல்தான். பிறப்பு வளர்ப்பின் காரணமாகச் சாதி சார்ந்த சில புறவியல்புகள் அவர்மீது படிந்திருக்கலாம். மற்றபடி அவருடைய செயல்பாடுகளில் சாதியத்தின் நிழலையும் உணர்ந்ததில்லை. (ஸி. எஸ்ஸின் சொந்த ஊரினரான கோமல் சுவாமிநாதன் கடைசிவரை பூணூல் அணிந்தவர்; ஸஷ்டியப்தபூர்த்தியை வைதிக முறைப்படி கொண்டாடியவர்!)
சாதி என்பது சமூகத்தின் மேற்கட்டுமானத்தின் ஒரு பகுதி என்று அவர் கருதியிருப்பார். வர்க்கப் போராட்டத்தின் வழியாக உருப்பெறும் சோசலிச சமுதாயத்தில் சாதி தானாக மறைந்துபோகும்; அதுவரை அது ஒரு போலி பிரக்ஞை (false consciousness) என்று அவர் கருதியிருப்பார். கோட்பாடு சார்ந்த விவாதங்களில் அவர் ஆர்வம் செலுத்தியதில்லை. எல்லாக் கேள்விகளுக்குமான விடைகளையும் 1930களிலேயே அவர் கண்டடைந்திருப்பார் என்றே எண்ணுகிறேன்.
பிரிட்டிஷ் மார்க்சியர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. ஹாப்ஸ்பாமின் சுயசரிதையைப் படித்தால் வாழ்க்கையின் இன்பம் எதையும் அவர் துறந்ததாகத் தெரியாது. Vote with the Left, Dine with the Right என்று பிரிட்டிஷ் இடதுசாரிகளைப் பற்றிக் கிண்டலாகச் சொல்வார்கள். பிரிட்டிஷ் கம்யூனிஸ்டு தலைவர் ஹாரி பொலிட் இந்தியக் கம்யூனிஸ்டு தலைவர்களின் புலன்மறுப்பைக் கண்டு மலைத்துவிட்டாராம். காந்தியோடு எவ்வளவோ முரண்பட்டாலும் இந்தியக் கம்யூனிஸ்டு தலைவர்கள் அவருடைய வாழ்முறையில் ஒழுகியிருக்கிறார்கள். ஐந்துமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கம்யூனிஸ்டு தலைவர் ஒருவர் வீட்டில் அமர்வதற்குச் சரியான நாற்காலிகூட இல்லாதைப் பார்த்து அதிர்ந்த அனுபவம் எனக்குண்டு. பாரதியிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த ஸி. எஸ். ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா’ என்ற பாடலை அனுபவித்திருப்பார் என்று நம்பக் காரணங்களில்லை.
புது தில்லி சென்ற பிறகும், திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (1995 - 2000) சென்ற பிறகும் எங்கள் உறவில் இடைவெளி ஏற்பட்டது. ஸி. எஸ். மீண்டும் கோபிக்கே சென்றுவிட்டார். அதன்பின் சில கடிதங்களைப் பரிமாறிக்கொண்டதோடு சரி. 10.3.1996இல் அவர் பின்வருமாறு எழுதினார்: ‘இப்போது பல்கலைக்கழகத்தில் உள்ள நிலையை அறிந்து ஓரளவேனும் உன்னுடைய பணியில் திருப்தி ஏற்பட்டுள்ளதா? உடனுள்ளவர்கள், விரிவுரைகளைக் கேட்கும் மாணவர்கள் எப்படி இருக்கின்றனர்? வரலாற்றுப் பிரச்சினைகளையும் சமுதாய வளர்ச்சிப் பிரச்சினைகளையும் பற்றி விரும்பித் தேடும் பணி தொடர்ந்து செய்வதற்கு முடிகின்றதா? விஷயங்களைப் பற்றி பயனுள்ள வகையில் கலந்து பேச நண்பர்கள் கிடைத்துள்ளனரா?’
2001ஆம் ஆண்டளவில் சென்னை அசோக் நகரில் ஒருமுறையும் பாலன் இல்லத்தில் ஒருமுறையும் அவரை நேரில் சந்தித்தேன்.
தென்னிந்திய ஆய்வு நிறுவனம் உருவாக்கப்பட்ட நோக்கங்களுக்குப் புறம்பான நூல்கள் அதன்வழி வெளிவருவது பற்றி அவருக்கு மனக்குறை இருந்தது. 1996ஆம் ஆண்டளவில் நல்லதம்பி தெருவிலிருந்து நிறுவனம் காலி செய்யப்பட்டது. அங்கிருந்த அரிய நூல்களும் கோப்புகளும் ஆவணங்களும் அம்பத்தூர் என். சி. பி. எச். அலுவலகத்தில் போடப்பட்டதாகக் கேள்விப்பட்டுப் பதறினேன். பாரதியின் இந்தியா தொகுப்பு பற்றி மிகவும் கவலைப்பட்டேன். இதைப் பற்றிக் கவலைப்படும் நிலையில் ஸி. எஸ். இல்லை. தோழர்கள் சி. மகேந்திரன், மே. து. ராசுகுமார், ஆ. சிவசுப்பிரமணியன் ஆகியோரோடும் இது பற்றிப் பேசினேன். பயனில்லை.
2009இல் தேவ. வீரராகவன் காலமானபோது அத் தகவலை மிகச் சிரமப்பட்டே ஸி. எஸ்ஸுக்குத் தெரிவிக்க முடிந்தது.
கடந்த ஆண்டு நான் சிங்கப்பூரில் வசிக்கநேர்ந்தது. இதனால் தோழர் ஸி. எஸ். அவர்களுடைய மறைவு எனக்கு ஓராண்டுக்குப் பிறகுதான் தெரியவந்தது! காலந்தாழ்த்திய இந்த அஞ்சலியைச் செலுத்தும் வேளையில் ஒரு கேள்வி மனத்துக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஸி. எஸ். போன்ற தன்னலமற்ற எண்ணற்ற உறுப்பினர்களையும் தலைவர்களையும் கொண்ட ஓர் இயக்கம் ஏன் வெற்றிபெறவில்லை?
ஆ.இரா.வேங்கடாசலபதி

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1