ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி - என்னுடைய 11 ,000வது பதிவு இது :)

+7
றினா
ரா.ரா3275
ராஜா
ஹர்ஷித்
சார்லஸ் mc
ஜாஹீதாபானு
krishnaamma
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Empty தீபாவளி - என்னுடைய 11 ,000வது பதிவு இது :)

Post by krishnaamma Thu Nov 08, 2012 2:18 pm

என்னுடைய 11 ,000 வது பதிவு இது புன்னகை


தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) 220px-Diwali_fireworks

தீபாவளி , ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும்.தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி லேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.


ஐதீகமாகவும், தத்துவார்த்த ரீதியிலும் விளங்கும் தீபாவளியானது உலகின் பல பாகங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தீமையை விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்றோம்.
இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம். வேத காலத்திலிருந்து கொண்டாடப்பட்டு வரும் இந்த விழாவானது மனிதர்களிடையே அன்பையும் நட்புறவையும், ஞானத்தையும் வலியுறுத்துகிறது.

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Krishna-colage


பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் ‘சந்திர தரிசனம்’ என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும். ‘சந்திர தரிசனம்’ என்றால் என்ன? ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லிய தொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆகையால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை ‘கங்கா ஸ்நானம்’ என்று கூறுகிறார்கள். கங்கா ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று ஆன்றோர் கூறுவார்கள். சூரியன் உதயமாவதற்கு முன்னர் பிறைச் சந்திரன் தோன்றும் வேளையில் பூமியில் உள்ள நீர்நிலைகளில் கங்காதேவி ஆவாஹனம் ஆவாள். அதே சமயத்தில் நல்லெண்ணெயில் மஹாலட்சுமியின் அம்சங்கள் தோன்றும். ஆகையால் அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வார்கள். தீபாவளியை ஒரு நாள் கொண்டாடுவோரும், நான்கு நாள், ஐந்து நாள் கொண்டாடுவோரும் உண்டு..இந்துக்கள் மட்டுமின்றி ஜைன, பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்களும் சேர்ந்து கொண்டாடுகிற ஒரு உன்னதமான பண்டிகை தீபாவளி.
தீபாவளியின் தோற்றம் குறித்த கதையாக நரகாசுரனைக் கிருஷ்ணனும், சத்தியபாமாவும் சேர்ந்து அழித்த கதைதான் எல்லோருக்கும் தெரிந்த ரகசியக் கதை.;.

பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன். நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு சாவு…மரணம் சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கிட்டோம்ங்கிற தைரியத்துல அவனை விட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.
எப்படிப்பட்ட தொல்லைன்னா இராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! இருளை நேசிக்கும் இரக்கமில்லாதவன். வெளிச்ச விளக்குகளை வீட்டில் வைத்தவர்களின் தலைகளைக் கொய்தான், கொடும்பாதகன் நரகாசுரன்.

நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார். பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு. போர் நடக்கும் போது நரகாசுரன் விட்ட அம்பு கிருஷ்ணருக்கு மயக்கமடையும் நிலைக்கு ஆளாயிட்டார். பூமா தேவி இதைப் பாத்தாங்க. அவங்க மனசு பொறுக்கல. மிகுந்த கோபத்தோட சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை போட்டாங்க. கொடியவன் நரகாசுரனை வெட்டி வீழ்த்தினாங்க, சத்தியபாமா.

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Krishna_Narakasura%5B1%5D


போன ஜன்மத்து தாயான சத்யபாமா கையால், பூமாதேவியின் அம்சமானசத்யபாமா கையால் , நரகாசுரன் அழிந்தான் . நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செஞ்சான். எனக்குச் சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் விளக்கேத்தி சந்தோஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான்.

பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக் கிட்டாங்க. மக்கள் அரக்கன் ஒழிஞ்சான் அப்டீங்கிற நிம்மதியோட வீட்டு வீட்டுக்குவிளக்குகளா ஏத்தி தங்களோட சந்தோஷத்தை வெளிப்படுத்தினாங்க. வீட்டுல யாரும் விளக்கு ஏத்தக் கூடாதுன்னு நரகாசுரன் போட்ட தடை நீங்கிடிச்சு இல்லையா? அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இறந்து அழிந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக… தீபவிழா…என்று தீபாவளியாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.


தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Deepavali

தவறு செய்பவர் தன் மகனேயானாலும் அவன் மகன் என்று பாராமல் தண்டிக்க வேண்டும் என்பதுதான் இதில் பொதிந்திருக்கும் உண்மை.சத்தியபாமையென்ற பெண்ணின் உதவியின்றியே கிருஷ்ணரால் நரகாசுரனை வென்றிருக்க முடியும். பின் ஏன் அப்பெண்ணின் துணையை அவன் நாடினான்?

இதில் வாழ்க்கையின் ஒரு முக்கியத் தத்துவம் அடங்கியுள்ளது. இன்ப, துன்பம் நிறைந்த வாழ்க்கையில் மனைவியென்ற ஒரு துணையின்றி வெற்றி பெற இயலாது என்பதை உணர்த்துவதற்காகவே சத்தியபாமையென்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. கணவனும், மனைவியும் இணைந்து வாழ்வதே உண்மையான வாழ்க்கையாகும்.

தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் இன்னும் பல கூறப்படுகின்றன.

இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாள் என்றும், திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலியை வதம் செய்த நாள் என்றும், சிலர் அதுதான் புதிய ஆண்டும் என்றும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.


குஜராத்தில் இது புது வருடமாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டை முதலிலிருந்தே சுத்தப்படுத்தி, வர்ணங்கள் பூசி, லட்சுமியை வரவேற்கத் தயார் செய்து கொள்கிறார்கள். மாவிலைகள் கட்டப்படுகின்றன, கணபதியும் இலட்சுமியும் சேர்ந்து அமர, பூஜை செய்யப்படுகிறது, வியாபாரிகள் தங்கள் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்றனர், அன்று கொடுக்கல் வாங்கல் இருப்பதில்லை, பல இனிப்புக்கள் இலட்சுமிக்குப் படைக்கிறார்கள் அவளை வரவேற்க இரவு முழுவதும் கதவை அடைக்காமல் திறந்தே வைக்கின்றனர், நேரம் போக்க சீட்டும் விளையாடுகின்றனர்.

மஹாராஷ்ட்ராவில் இதை "பலிபாத்யாமா என்று சொல்கிறார்கள். மகாபலி சக்ரவர்த்தி வாமனரால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு சென்று அங்கு அரசனாகிறார் என்பதை இது குறிக்கிறது. தீபாவளியின் ஒரு வாரம் முன்பே "ரங்கோலி" என்ற வண்ணங்களால் ஆன கோலங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அலங்கரிக்கின்றது. இதிலே போட்டிகளும் வைத்துப் பரிசுகளும் தரப்படுகின்றன. தீபாவளிஅன்று கலர் பேப்பரில் முக்கோணம் அல்லது சதுரம், ஷட்கோணம் போன்று கூண்டுகள் தயார் செய்து அத்னுள் விளக்குகள் பொருத்துகின்ற்னர், அதைத் தன் வீட்டு வாசல், பால்கனியில் எரியவிடுகின்றனர். நரகாசுரன் வதத்தையும் கொண்டாடுகின்றனர். தீபாவளியின் போது பசுவும் கன்றும் சேர்ந்து பூஜிக்க்கின்றனர், இவர்களது தீபாவளி ஸ்பெஷல் கராஞ்சி லாடு, சங்கர்பாலே, சேவ் சிவ்டா, அமாவாசையன்று லட்சுமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது. இவர்களும் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்ற்னர். பின் "பாவுபீஜ்" என்று சகோதர நலத்திற்காகப் பிரார்த்தனை செய்கின்ற்னர், சகோதரர்களும் சகோதரிகளுக்குப் பரிசுகள் வழங்குகின்றனர். ராஜஸ்தானிலும் உத்தர்பிரதேசத்திலும் கோவர்தன பூஜையும் நடக்கிறது. கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தது நம் அனைவருக்கும் தெரியும் ,இதைக் குறித்து "அன்னகுட்" என்று சாதம் வெடித்து அதை ஒரு பெரிய மலைப்போல் பிடித்து கிருஷ்ணர் தூக்குவதைப் போல் செய்கிறார்கள். கிருஷ்ணர் இந்திரனை ஜெயித்ததையும் கொண்டாடுகிறார்கள் பெங்காலிகள் காளி பூஜை செய்கிறார்கள். சகோதர சகோதரிகளின் நலனுக்குப் பிரார்த்தனையும் "பாய் போலே" என்ற பெயரில் நடக்கிறது. ( நம் தமிழ் நாட்டில் பொங்கலுக்கு அடுத்த நாள் 'கனு' அன்று கூடப்பிறந்த சகோதரர்களுக்காக 'கன்னுப்பிடி' வைப்போமே அது போல அவர்கள் இப்ப கொண்டாடுகிறார்கள் புன்னகை )

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Images?q=tbn:ANd9GcQIVEh2omqdGpAC_Pm7LI_REkm4PvRjPtY1_RAuct8XUQE-Z1JFH16fhlJO


சீக்கியர்களும் இந்தத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசிங் மிகப் புகழ் அடைந்து வரும் போது முகல் அர்சர் ஜஹாங்கீருக்கு இது பிடிக்காமல் அவரைக் கைது செய்து குவாலியர் கோட்டையில் அடைத்தார். அவருடன் அவரைச் சார்ந்த 21 சீக்கியர்களும் உள்ளே அடைக்கப்பட்டனர். பின் ஜஹாங்கீரே அவர்களைத் தீபாவளியன்று சிறையிலிருந்து விடுவித்தார், ஆகையால் இந்நாளை "பந்தி சோர்ரா" என்று கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் "கால்ஸா" என்ற கூட்டமும் உருவானது அத்துடன் குரு கிரந்த சாஹேப் என்ற புத்தகமும் சிறிது மாற்றங்களுடன் சீக்கியர்களின் குருவானது. ஜைனர்களுக்கும் இது மிக முக்கியமான நாள். ஜைனமத ஸ்தாபகர் குரு மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். இன்று தீபங்கள் ஏற்றி "உத்தராத்த்யாயன் சூத்ரா"வைப் படிக்கின்றனர். இதில் மகாவீரரின் ஐந்துபிரவசங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் தீபாவளி என்பது நமக்குள் இருக்கும் அக்ஞான இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும்.

நன்மையின் வெற்றி. தீமையின் அழிவு என்பதைத்தான் கிருஷ்ண பகவான் நரகாசுரன் கதை கூறுகிறது. தீபாவளிக்கு முன்னரே வரும் நவராத்திரியின் போதும், பின்னர் வரும் கந்த சஷ்டியின் போதும் இந்தக் கருத்துத்தான் வலியுறுத்தப்படுகிறது. இந்த இரண்டு விழாக்களிலும் அரக்கர்கள் அழிக்கப்படுகின்றனர். நன்மை வெற்றி கொள்கிறது, தீமை அழிகிறது. இந்தக் கருத்து பண்டைய இந்துக்களை ஈர்த்திருக்க வேண்டும். ஆகவேதான் ஒன்றன் பின்னர் ஒன்றாக வரும் பண்டிகைகளில் அதை வலியுறுத்தியுள்ளனர் போலும். மேற்குறிப்பிட்ட எந்த ஒரு காரணத்திற்காகவும் தீபாவளி கொண்டாடப்பட்டாலும் அதனை சமூக ரீதியாகப் பார்ததால் என்ன? மனிதன் மகிழ்ந்திருப்பது அவனின் இயல்பு. குடும்பத்துடனும் நண்பர்களுடனும் மற்ற இனத்தவருடனும், சமயத்தினருடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு நாள் தீபாவளி.


தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Lord-krishna-photos_7
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Empty தீபாவளி - என்னுடைய 11 ,௦௦௦ வது பதிவு இது :)

Post by ஜாஹீதாபானு Thu Nov 08, 2012 2:22 pm

11000 பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அம்மா... தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) 806360 தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) 806360 தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) 139731 தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) 806360 தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) 806360


Last edited by ஜாஹீதாபானு on Thu Nov 08, 2012 3:08 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Empty Re: தீபாவளி - என்னுடைய 11 ,000வது பதிவு இது :)

Post by சார்லஸ் mc Thu Nov 08, 2012 2:25 pm

ஜாஹீதாபானு wrote:1100 பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அம்மா... தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) 806360 தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) 806360 தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) 139731 தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) 806360 தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) 806360

ஒரு சைபரை காணவில்லையே...

இன்னும் பல ஆயிரம் பதிவுகளைக் கடக்க வாழ்த்துகிறேன்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Empty Re: தீபாவளி - என்னுடைய 11 ,000வது பதிவு இது :)

Post by ஹர்ஷித் Thu Nov 08, 2012 2:25 pm

ஜாஹீதாபானு wrote:1100 பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அம்மா...

அக்கா பதினொன்றாயிரம்....
தீபாவளிக்கு இத்தனை காரணங்களா,ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு காரணம் உள்ளது.எது சரி அம்மா?
தீபாவளிக்கு ஏற்ற பதிவு.வாழ்த்துக்கள்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Empty Re: தீபாவளி - என்னுடைய 11 ,000வது பதிவு இது :)

Post by ராஜா Thu Nov 08, 2012 2:31 pm

அருமையான 11000 ஆவது பதிவு அக்கா , வாழ்த்துக்கள்
தீபாவளியை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லியுள்ளீர்கள்

பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் ‘சந்திர தரிசனம்’ என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும். ‘சந்திர தரிசனம்’ என்றால் என்ன? ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லிய தொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்க வேண்டும்.
இது ஒரு அறிய தகவல் , இப்போது தான் நான் கேள்விபடுகிறேன்.

இது நாள் வரை , அம்மாவாசை கழிந்து மூன்றாம் நாள் தான் பிறை தெரியுமென்று கேள்விபட்டுள்ளேன். பார்த்தும் உள்ளேன்.
இப்போ தான் முதல் முறையாக தீபாவளி அன்று காலையிலும் பிறை சந்திரன் தெரியுமென்று தெரிந்துகொண்டேன். இது தீபாவளியன்று மட்டு ம்தான் தெரியுமா அல்லது ஒவ்வொரு அமாவாசை அன்றும் காலையில் தெரியுமா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Empty Re: தீபாவளி - என்னுடைய 11 ,000வது பதிவு இது :)

Post by ரா.ரா3275 Thu Nov 08, 2012 3:03 pm

பதினோராயிரமாவது பதிவு...கொஞ்சம் நெய்-இனிப்புத் தூக்கலா இருக்கு...
வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா அவர்களே...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Empty Re: தீபாவளி - என்னுடைய 11 ,000வது பதிவு இது :)

Post by றினா Thu Nov 08, 2012 6:29 pm

இந்த தீபாவளி பட்டாசு போலே என்றென்றும் சுருசுப்பாய் திகழ்ந்து நல்ல பதிவுகள் பல தந்து எம் அன்பர்கள் அனைவருக்கும் அறிவுரை வழங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Empty Re: தீபாவளி - என்னுடைய 11 ,000வது பதிவு இது :)

Post by krishnaamma Thu Nov 08, 2012 7:10 pm

நன்றி பானு, நன்றி சார்லஸ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Empty Re: தீபாவளி - என்னுடைய 11 ,000வது பதிவு இது :)

Post by krishnaamma Thu Nov 08, 2012 7:18 pm

ஜேன் செல்வகுமார் wrote:

அக்கா பதினொன்றாயிரம்....
தீபாவளிக்கு இத்தனை காரணங்களா,ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு காரணம் உள்ளது.எது சரி அம்மா?
தீபாவளிக்கு ஏற்ற பதிவு.வாழ்த்துக்கள்.

நன்றி ஜேன் புன்னகை எது சரி எது தவறு என்று சொல்ல கஷ்டம் ஜேன் புன்னகை அவங்க அவங்க மாநிலத்துக்கும் சுற்றுப்புற சூழ்நிலைக்கும் ஏற்ற வாறு பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள் , அவ்வளவுதான். யார் எந்த பண்டிகை கொண்டாடினாலும் அதுக்கு காரணம், குடும்ப சந்தோஷம மற்றும் சமுக ஒற்றுமை மேலோங்குவதாக இருக்கணும் அவ்வளவுதான் புன்னகை அதனால் தான் நாம் மகளிர் தினம் ,
வேலயன்ட்ஸ் டே எல்லாமே கொண்டாட ஆரம்பித்து விட்டோமே புன்னகை சரியா?

எங்க விட்டில் மற்ற பண்டிகைகள் போல வே கிறிஸ்துமஸ்ம் கேக் வெட்டி ஸ்டார் கட்டி கொண்டாடுவோம் தெரியுமா? என் தம்பி மற்றும் கிருஷ்ணா அப்பா வின் அண்ணா வீட்டில் 'portable X Mas Tree ' இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Empty Re: தீபாவளி - என்னுடைய 11 ,000வது பதிவு இது :)

Post by krishnaamma Thu Nov 08, 2012 7:27 pm

ராஜா wrote:அருமையான 11000 ஆவது பதிவு அக்கா , வாழ்த்துக்கள்
தீபாவளியை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லியுள்ளீர்கள்

பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் ‘சந்திர தரிசனம்’ என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும். ‘சந்திர தரிசனம்’ என்றால் என்ன? ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லிய தொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்க வேண்டும்.
இது ஒரு அறிய தகவல் , இப்போது தான் நான் கேள்விபடுகிறேன்.

இது நாள் வரை , அம்மாவாசை கழிந்து மூன்றாம் நாள் தான் பிறை தெரியுமென்று கேள்விபட்டுள்ளேன். பார்த்தும் உள்ளேன்.
இப்போ தான் முதல் முறையாக தீபாவளி அன்று காலையிலும் பிறை சந்திரன் தெரியுமென்று தெரிந்துகொண்டேன். இது தீபாவளியன்று மட்டு ம்தான் தெரியுமா அல்லது ஒவ்வொரு அமாவாசை அன்றும் காலையில் தெரியுமா ?!

எனக்கும் இது புதிய தகவல் தான் ராஜா புன்னகை நானும் அமாவாசை கழித்து மூன்றாம்நாள் தான் பிறை பார்த்திருக்கேன். வேண்டுமானால் எங்க வாத்யாரை கேட்டு சொல்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) Empty Re: தீபாவளி - என்னுடைய 11 ,000வது பதிவு இது :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum