ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு

+13
அசுரன்
mbalasaravanan
yarlpavanan
dhilipdsp
ச. சந்திரசேகரன்
jenisiva
கா.ந.கல்யாணசுந்தரம்
அச்சலா
kirikasan
T.N.Balasubramanian
ரா.ரா3275
சதாசிவம்
ரமணி
17 posters

Page 9 of 29 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 19 ... 29  Next

Go down

கவிதையில் யாப்பு - Page 9 Empty கவிதையில் யாப்பு

Post by ரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


கவிதையில் யாப்பு - Page 9 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Thu Dec 27, 2012 7:31 pm

4.59. தளைப் பயிற்சி

நினைவிற் கொள்ள:
மாமுன் நேர்வரின் நேரொன் றாசிரியம்
விளம்முன் நிரைவரின் நிரையொன் றாசிரியம்
மாமுன் நிரையோ விளம்முன் நேரோ
மாறி வருவது இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை
காய்முன் நிரைவரின் கலித்தளை யாகும்
கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சி
கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சி
என்பன எழுதளை வாய்பா டாகும்.


பயிற்சி 1. தளைவர அமைத்தல்: நேரொன்று நிரையொன்று ஆசிரியத்தளைகள்

கீழ்வரும் அடிகளில் கருவிளம் தேமாச்
சீர்கள் கலந்து உள்ளதைப் பிரித்து
நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியத்
தளைகள் மட்டுமே தனித்தனி வருமாறு
அடியிணை இரண்டில் அமைத்து எழுதுக.

இனிவரும் பின்னிப் செய்த பணிவுடன்
கனிவுறும் தினங்களில் புகழினைப் பரவுவோம்.
இன்னல் பின்னால் இறைவனின் எல்லாம்
முன்னம் சூழும் பின்னி. மனம்பெறப்


பயிற்சி 2. தளைவர அமைத்தல்: இயற்சீர் வெண்டளை

கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்னும் நிரல்வர அடிகள் நாலில்
இயற்சீர் வெண்டளை பயில எழுதுக.

மிஞ்சும் காக்கை விருந்தினர் எஞ்சும்
விரைத்தால் கரைந்தால் இனிவரும் பெயரும்
வாசலில் வாசலில் வினைகள் யாக்கை
மறைந்திடும் உறவினர் யோனியில் நாட்செல.


*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 9 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Sat Dec 29, 2012 11:39 am

அன்புடையீர் வணக்கம்.

இந்தக் ’கவிதையில் யாப்பு’ தொடரில் நான் அமைத்துள்ள பயிற்சிகள் பற்றி இங்கு ஏதும் பின்னூட்டம் இல்லையெனினும், ஒரு சில ஆர்வலர்களாவது அவற்றை முயன்றுபார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆர்வலர்கள் மேலும் எளிதாக அவற்றை முயலும் வகையின் பரீட்சார்த்த முயற்சியாக ஒரு புதிய வலைதளைத்தைத் தொடங்கியுள்ளேன். முதலிரண்டு தளைப் பயிற்சிகளை அங்கு அமைத்துள்ளேன். இந்தத் தொடரின் வாசகர்கள் அவற்றை முயன்றுபார்த்து இங்குப் பின்னூட்டம் இடுவது எனக்கு மேலும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும்.

http://kavithaiyilyappu.blogspot.in/

அன்புடன்,
ரமணி


Last edited by ரமணி on Sun Dec 30, 2012 9:54 am; edited 1 time in total
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 9 Empty Re: கவிதையில் யாப்பு

Post by dhilipdsp Sat Dec 29, 2012 11:47 am

அவற்றை முயன்றுபார்த்து இங்குப் பின்னூட்டம் இடுவது எனக்கு மேலும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும் நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 9 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Sat Dec 29, 2012 6:38 pm

பயிற்சிகளின் விடைகளை அஞசல் 83-இல் கொடுத்துள்ள வலைதளத்தில்
ஒவ்வொரு பயிற்சியின் இறுதியிலும் கண்டுகொள்ளலாம்.


பயிற்சி 3. தளைவர அமைத்தல்: இயற்சீர் வெண்சீர் வெண்டளைகள்

கீழ்வரும் அடிகளின் சீர்களைப் பிரித்து
முன்வரும் அடியிணை இயற்சீர் வெண்டளை
பின்வரும் அடியிணை வெண்சீர் வெண்டளை
நாவலர் நானலம் நாவலரும் நாவன்மை
என்பன அடிகளின் முதற்சீராய் வரவே
அடிகள் நான்கினில் அமைத்து எழுதுக.

பாவலர் கொண்டானே. நாவன்மை நாவலரும்
நானலம் கைநலம் பாவன்மை நாவலர்
கைவண்மை நாடிவரும் காவலனே பாநலம்
பாவலரும் நாடிடும் கொண்டவன். காவலன்


பயிற்சி 4. தளைவர அமைத்தல்: கலித்தளை

கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
என்னும் நிரல்வர அடிகள் நாலில்
கலித்தளை பயின்று வந்திட எழுதுக
இடப்பக்கம் வலப்பக்கம் படகொன்றின் வலைமாதின்
என்பன அடிகளின் முதற்சீராய் வரவே.

பசுமைநிறம் வலைகொள்ளாக் மெதுவாக வலப்பக்கம்
கடல்வகைமீன். வலைமாதின் விரிப்பினிலே முகில்தவழும்
படகொன்றின் வலித்திடும்பெண் அலையடிக்கும் படகினிலே
மலைச்சாரல் இடப்பக்கம் கடல்நீரின் துடுப்புகளை


*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 9 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Sun Dec 30, 2012 9:58 am

4.59. தளைப் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. தளைவர அமைத்தல்:
நேரொன்று நிரையொன்று ஆசிரியத்தளைகள்: விடை


நேரொன்றாசிரியத் தளை:
முன்னம் செய்த இன்னல் எல்லாம்
பின்னால் சூழும் பின்னிப் பின்னி.

நிரையொன்றாசிரியத் தளை:
இனிவரும் தினங்களில் கனிவுறும் மனம்பெறப்
பணிவுடன் இறைவனின் புகழினைப் பரவுவோம்.

பயிற்சி 2. தளைவர அமைத்தல்:
இயற்சீர் வெண்டளை: விடை


காக்கை கரைந்தால் விருந்தினர் வாசலில்
யாக்கை விரைத்தால் உறவினர் வாசலில்
எஞ்சும் வினைகள் இனிவரும் யோனியில்
மிஞ்சும் பெயரும் மறைந்திடும் நாட்செல.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 9 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Mon Dec 31, 2012 9:35 am

பயிற்சி 3. தளைவர அமைத்தல்:
இயற்சீர் வெண்சீர் வெண்டளைகள்: விடை


இயற்சீர் வெண்டளை:
நாவலர் பாவலர் நாடிடும் காவலன்
நானலம் பாநலம் கைநலம் கொண்டவன்.

வெண்சீர் வெண்டளை:
நாவலரும் பாவலரும் நாடிவரும் காவலனே
நாவன்மை பாவன்மை கைவண்மை கொண்டானே.

பயிற்சி 4. தளைவர அமைத்தல்:
கலித்தளை: விடை


இடப்பக்கம் முகில்தவழும் மலைச்சாரல் பசுமைநிறம்
வலப்பக்கம் அலையடிக்கும் கடல்நீரின் விரிப்பினிலே
படகொன்றின் துடுப்புகளை மெதுவாக வலித்திடும்பெண்
வலைமாதின் படகினிலே வலைகொள்ளாக் கடல்வகைமீன்.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 9 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Mon Dec 31, 2012 4:33 pm

பயிற்சி 5. தளைவர அமைத்தல்: ஒன்றிய வஞ்சித்தளை

கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
புளிமாங்கனி கருவிளங்கனி
என்னும் நிரல்வர அடிகள் நாலில்
ஒன்றிய வஞ்சித் தளைவர எழுதுக
நடுக்கும்குளிர் என்பது முதற்சீர் எனவரவே.

கடல்மூழ்கியே கடற்கோழியின்
கடற்கோழிகள் அணிவகுத்திடும்
பனிநிலத்தினில் பறப்பதற்கென.
நடுக்கும்குளிர்ப் உடற்சிறகுகள்


பயிற்சி 6. தளைவர அமைத்தல்: ஒன்றாத வஞ்சித்தளை

கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி
என்னும் நிரல்வர அடிகள் இரண்டில்
ஒன்றாத வஞ்சித் தளைவர எழுதுக
நூறாண்டுகள் என்பது முதற்சீர் எனவரவே.

காலமாயினான். என்றேபல நூல்படைத்தவன் நூறாண்டுகள்
நோய்ப்படுக்கையில் அல்லாடியே வாழ்வெதப்படி ஆறாண்டுகள்


*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 9 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Tue Jan 01, 2013 10:51 am

பயிற்சி 5. தளைவர அமைத்தல்:
ஒன்றிய வஞ்சித்தளை: விடை


நடுக்கும்குளிர்ப் பனிநிலத்தினில்
கடற்கோழிகள் அணிவகுத்திடும்
கடற்கோழியின் உடற்சிறகுகள்
கடல்மூழ்கியே பறப்பதற்கென.

பயிற்சி 6. தளைவர அமைத்தல்:
ஒன்றாத வஞ்சித்தளை: விடை

நூறாண்டுகள் வாழ்வெதப்படி என்றேபல நூல்படைத்தவன்
ஆறாண்டுகள் நோய்ப்படுக்கையில் அல்லாடியே காலமாயினான்.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 9 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Wed Jan 02, 2013 4:01 pm

பயிற்சி 7. தளை, பாவகை அறிதல்
http://kavithaiyilyappu.blogspot.in/p/459-7.html

எண்ணிட்ட தளைகள் பதினாலும் பாவகையும்
தக்க ஈரெழுத்தால் கீழே
கலைந்த நிரலில் குறிக்கப் பட்டன.
எண்களை நோக்கி வரும்தளை யறிந்து
கலைந்த தளையின் எழுத்துகளை நேர்செய்து
சரியான நிரல்வர எழுதிக் குறித்து
இறுதியில் பாவின் எழுத்தையும் குறிக்கவும்.

நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா

பதினெண்1 கணனு2 மேத்தவும்3 படுமே4
எல்லா5 வுயிர்க்கு6 மேம7 மாகிய8
நீரற9 வறியாக்10 கரகத்துத்11
தாழ்சடைப்12 பொலிந்த13 வருந்தவத்14 தோற்கே.


நேஆ நேஆ நேஆ நேஆ
நிஆ வெவெ இவெ நிஆ
இவெ இவெ இவெ
இவெ ஆபா இவெ நிஆ

பயிற்சி 8. தளை, பாவகை அறிதல்
http://kavithaiyilyappu.blogspot.in/p/459-8.html

எண்ணிட்ட தளைகள் ஏழும் பாவகையும்
தக்க ஈரெழுத்தால் கீழே
கலைந்த நிரலில் குறிக்கப் பட்டன.
எண்களை நோக்கி வரும்தளை யறிந்து
கலைந்த தளையின் எழுத்துகளை நேர்செய்து
சரியான நிரல்வர எழுதிக் குறித்து
இறுதியில் பாவின் எழுத்தையும் குறிக்கவும்.

நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா

தாயெனக்கொளுந்1 தகையரும்பண்பீ2
ஈயெனமுயல்3 எறும்பியற்படு4
கரிநினைவிரு5 காகமென்னணை6
வரியெனவொறு7 திரிகயவரை


வறி வறி
வெவெ வறி
வறா வறி
வறி வபா


Last edited by ரமணி on Wed Jan 02, 2013 7:16 pm; edited 1 time in total
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 9 Empty Re: கவிதையில் யாப்பு

Post by yarlpavanan Wed Jan 02, 2013 6:07 pm

தொடருங்கள்
தங்கள் கவிதைப் பயிற்சியை
பயிலுவோர்
நலமே நற்பயன் ஈட்டட்டும்!
தொடரைச் செவ்வனே நடாத்த
என் வாழ்த்துகள்!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 9 Empty Re: கவிதையில் யாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 29 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 19 ... 29  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum