ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு

+13
அசுரன்
mbalasaravanan
yarlpavanan
dhilipdsp
ச. சந்திரசேகரன்
jenisiva
கா.ந.கல்யாணசுந்தரம்
அச்சலா
kirikasan
T.N.Balasubramanian
ரா.ரா3275
சதாசிவம்
ரமணி
17 posters

Page 7 of 29 Previous  1 ... 6, 7, 8 ... 18 ... 29  Next

Go down

கவிதையில் யாப்பு - Page 7 Empty கவிதையில் யாப்பு

Post by ரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


கவிதையில் யாப்பு - Page 7 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Mon Dec 10, 2012 12:37 pm

4.46. மூவசைச் சீர்

ஈரசைச் சீர்கள் நான்கின் இறுதியில்
நேரசை நிரையசை சேர்ந்து
மூவசைச் சீர்கள் உருவா கிடுமே.

ஈரசை இறுதியில் நேரசை சேர்ந்துவரும்
மூவசைச் சீர்கள் நான்கும் காய்ச்சீர்
ஈரசை இறுதியில் நிரையசை சேர்ந்துவரும்
மூவசைச் சீர்கள் நான்கும் கனிச்சீர்.

’தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்’
என்பது காய்ச்சீர் வாய்பா டாகும்.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர்
என்னும் நால்வகை காய்ச்சீர் வகைகள்.

’தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி’
என்பது கனிச்சீர் வாய்பா டாகும்.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நிரை நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நேர்நிரைநிரை
என்னும் நால்வகை கனிச்சீர் வகைகள்.

வெண்பாவுக் குரியதால் காய்ச்சீர் நான்கும்
வெண்சீர் வெண்பா வுரிச்சீர்
எனவிரு பெயர்கள் பெற்று வருமே.

வஞ்சிப்பா வில்வரும் கனிச்ச்சீர் நான்கும்
வஞ்சிச்சீர் வஞ்சி யுரிச்சீர்
எனவிரு பெயர்கள் பெற்று வருமே.

தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு தென்கிழக்கு,
பொன்னாக்கும் பொருளாக்கும் பொருள்பெருக்கும் பொன்பெருக்கும்
என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களில்
காய்ச்சீர் அனைத்தும் முறையே காண்க.

பூவாழ்பதி திருவாழ்பதி திருவுறைபதி பூவுறைபதி
மீன்வாழ்துறை சுறவாழ்துறை சுறமறிதுறை மீன்மறிதுறை
என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களிலே
கனிச்சீர் அனைத்தும் முறையே காண்க.
[சுற=சுறா மறி=திரிதல் துறை=நீர்த்துறை]
---பசுபதி, ’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.49

காய்கனிச் சீர்களுக்கு இன்றைய வழக்கில்
டீவீபார் சினிமாபார் நகைக்கடைபார் சீரியல்பார்
ஜூவீபடி குமுதம்படி தினமலர்படி பாடமும்படி
போன்ற சான்றுகள் அறிந்து மகிழலாம்.


காய்ச்சீராம் வெண்பா வுரிச்சீர் களேவரும்
கீழ்வரும் வெண்பா விலே.

ஆராரோ ஆரிரரோ கண்ணேநீ கண்ணுறங்கு
ஆராரோ பேசினாலும் உன்கண்ணை மூடிவைத்து
நான்தூளி ஆட்டுவதில் நன்றாய்நீ கண்ணுறங்கு
நானோய்ந்து தூங்குமுன்நீ தூங்கு.


தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் காசு

கனிச்சீராம் வஞ்சி யுரிச்சீர் களேவரும்
சான்று கீழ்வரும் வஞ்சி அடிகளில்.

பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவியலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மண்முரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும்


தேமாங்கனி கூவிளங்கனி
கூவிளங்கனி கூவிளங்கனி
கருவிளங்கனி கருவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்கனி
கருவிளங்கனி கூவிளங்கனி
புளிமாங்கனி புளிமாங்கனி

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 7 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Tue Dec 11, 2012 9:28 am

4.47. மூவசைச் சீர் பயிற்சி

நினைவிற் கொள்ள:
தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர்
என்பன மூவசைச் சீர்களின் அமைப்பு.

பயிற்சி 1. சீர் காணல்

மூவசைச் சீர்களே முழுவதும் பயிலும்
கீழ்வரும் கலிப்பா அடிகளை அலகிட்டுச்
சீர்களைப் பெயரிட்டுக் கணக்கிட்டு எழுதுக
அடிக்கீழ் பெயர்களும் இறுதியில் கணக்கும்.

ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள்
கருநோக்கா வகைக்கருணைக் கண்ணோக்கம் செயுஞானத்
திருநோக்க அருணோக்கம் இருநோக்கும் செயச்செய்து
மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை


பயிற்சி 2. சீர் நிரல் வர அமைத்தல்: காய்ச்சீர்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
என்ற நிரலில் பொருளுடன் அமைந்து
மூன்று அடிகள் வருமாறு எழுதுக.

பழமரங்கள் ஒன்றிடுமே முழுவதுமே கடலுப்பு மேலமரும் நீலநிறம்
வானத்தில் மாந்தோப்பில் கிளிக்கூட்டம் நிறத்தினிலே முகிலின்றேல் கற்பூரம்


பயிற்சி 3. சீர் நிரல் வர அமைத்தல்: கனிச்சீர்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி
என்ற நிரலில் பொருளுடன் அமைந்து
மூன்று அடிகள் வருமாறு எழுதுக.

உள்மனவெளி பூமகளிடம் நிறைவெய்திட மலர்மீதிலே வெண்டாமரை கலைமகளவள்
கண்டால்மனம் வெண்டாமரை மலர்போலவே மணமிகுந்திடும் வரம்வேண்டுவோம் வீற்றிருப்பது


*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 7 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Wed Dec 12, 2012 7:14 am

4.47. மூவசைச் சீர் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. சீர் காணல்: விடை

ஒரு/நோக்/கம் பகல்/செய்/ய ஒரு/நோக்/கம் இருள்/செய்/ய
இரு/நோக்/கில் தொழில்/செய்/தும் துயில்/செய்/தும் இளைத்/துயிர்/கள்
கரு/நோக்/கா வகைக்/கரு/ணைக் கண்/ணோக்/கம் செயு/ஞா/னத்
திரு/நோக்/க அரு/ணோக்/கம் இரு/நோக்/கும் செயச்/செய்/து
மரு/நோக்/கும் பொழில்/தில்/லை மணி/மன்/றுள் நடஞ்/செய்/வோய்.

நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர்
நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர்
நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நிரைநேர்நேர்
நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர்
நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர்

புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
புளிமாங்காய் கருவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்

தேமாங்காய்: 1 புளிமாங்காய்: 17 கருவிளங்காய்: 2 கூவிளங்காய்: 0 மொத்தம்: 20

பயிற்சி 2. சீர் நிரல் வர அமைத்தல்: காய்ச்சீர்: விடை

தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்:
கற்பூரம் கடலுப்பு நிறத்தினிலே ஒன்றிடுமே
வானத்தில் முகிலின்றேல் முழுவதுமே நீலநிறம்
மாந்தோப்பில் கிளிக்கூட்டம் பழமரங்கள் மேலமரும்

பயிற்சி 3. சீர் நிரல் வர அமைத்தல்: கனிச்சீர்: விடை

தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி:
வெண்டாமரை மலர்மீதிலே கலைமகளவள் வீற்றிருப்பது
கண்டால்மனம் நிறைவெய்திட வரம்வேண்டுவோம் பூமகளிடம்
வெண்டாமரை மலர்போலவே மணமிகுந்திடும் உள்மனவெளி

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 7 Empty Re: கவிதையில் யாப்பு

Post by சதாசிவம் Wed Dec 12, 2012 10:40 am

பயனுள்ள தொடர், நேரம் கிடைக்கும் பொழுது மேலும் படிக்கிறேன்....தொடருங்கள் ... சூப்பருங்க


சதாசிவம்
கவிதையில் யாப்பு - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 7 Empty Re: கவிதையில் யாப்பு

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 12, 2012 1:28 pm

சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 7 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Wed Dec 12, 2012 2:33 pm

பயிற்சி 4. ஒருசீர் ஒருமுறை: காய்ச்சீர்

காய்ச்சீர் நான்கும் இயன்றிடு மாறு
சொற்றொட ரொன்றோ வாக்கிய மொன்றோ
ஒருசீர் ஒருமுறை வருமா றெழுதுக.

கீழ்வரும் அடியினைச் சான்றெனக் கொள்க:
வானத்தில் முயலொன்று விழித்திருக்கும் வெண்ணிலவில்
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்


பயிற்சி 5. ஒருசீர் ஒருமுறை: கனிச்சீர்

கனிச்சீர் நான்கும் இயன்றிடு மாறு
சொற்றொட ரொன்றோ வாக்கிய மொன்றோ
ஒருசீர் ஒருமுறை வருமா றெழுதுக.

கீழ்வரும் அடியினைச் சான்றெனக் கொள்க:
விழிசோர்ந்திட இமைகவிழ்ந்திடும் எப்பொழுதிலும் தூக்கம்வரும்
புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி தேமாங்கனி


*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 7 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Thu Dec 13, 2012 7:37 am

பயிற்சி 4. ஒருசீர் ஒருமுறை: காய்ச்சீர்: விடை

உதாரணத்தில் உள்ளதுபோல் தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்று அதே நிரல் வர எழுதுதல் கொஞ்சம் கடினம்.
மேலும் சான்றுகள் கீழே:

தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
ஆசானின் அடிபற்றி நடந்திடுவான் மாணவனே
காசென்ன பணமென்ன குணமிருந்தால் மானிடனே
தேனென்றால் எவருக்கும் தினவெடுக்கும் நாவினிலே

மற்றபடி ஒரு காய்ச்சீர் ஒருமுறை வருமாறு எழுதுவது கடினமில்லை.

வானத்தின் பரப்பினிலே வெண்முகிலின் சுவடில்லை
தேமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் புளிமாங்காய்

பழியொன்று பாவமொன்று வழியெதுவும் உண்டோசொல்
புளிமாங்காய் கூவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய்

படபடத்த பாவையவள் நெஞ்சத்தில் திகிலோங்கும்
கருவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்

பூவிரித்த இதழ்களிலே தேனீக்கள் உறவாடும்
கூவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்

பயிற்சி 5. ஒருசீர் ஒருமுறை: கனிச்சீர்: விடை

மலரமர்ந்திடும் முரல்வண்டினம் தேனுண்டிடத் தூங்கிடும்நிலை
கருவிளங்கனி புளிமாங்கனி தேமாங்கனி கூவிளங்கனி

மழைபெய்யுமுன் கருமுகில்குழு சூழ்வந்திடும் காரிருளிலே
புளிமாங்கனி கருவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி

கடற்கரையிலே காற்றுவாங்கையில் காதல்மகள் மகிழும்நிலை
கருவிளங்கனி கூவிளங்கனி தேமாங்கனி புளிமாங்கனி

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 7 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Thu Dec 13, 2012 11:36 am

பயிற்சி 6. அனைத்தும் ஒரே சீர்: காய்ச்சீர்

காய்ச்சீர் ஒன்றே அடிகளில் பயில
மூவசைச் சீர்கள் நான்கினை வைத்து
நாற்சீர் கொண்ட அளவடி எழுதுக.

சான்றாகக் கீழ்வரும் வரிகளைக் கொள்க:
அம்மாவும் அப்பாவும் எல்லோரின் முன்தெய்வம்
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்


பயிற்சி 7. அனைத்தும் ஒரே சீர்: கனிச்சீர்

கனிச்சீர் ஒன்றே அடிகளில் பயில
மூவசைச் சீர்கள் நான்கினை வைத்து
நாற்சீர் கொண்ட அளவடி எழுதுக.

சான்றாகக் கீழ்வரும் வரிகளைக் கொள்க:
தீபாவளி நாளாகியும் இன்னும்மழை பெய்யும்நிலை
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி


பயிற்சி 8. செய்யுளடி புனைதல்

கீழ்வரும் அடிகளின் ஈரசைச் சீர்களைக்
காய்ச்சீர் களாக்கி விளங்காய்ச் சீர்களே
ஒரேவகை நிரலுடன் அடிகளில் பயில
ஒரேவித ஓசை வருவது அறிக.

கருவிழி நோக்கில் காலம் உறைய
பரிவுடன் பாவை பார்த்ததில் எனைமறந்தேன்


*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 7 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Fri Dec 14, 2012 8:35 am

பயிற்சி 6. அனைத்தும் ஒரே சீர்: காய்ச்சீர்: விடை

முழுவதும் தேமாங்காய்ச் சீர்வரும் அடிகள்:
கார்மேகம் போலுள்ள கார்மேனிக் கண்ணாநீ
பார்மீது வேறெங்கும் பார்க்காத ஆச்சர்யம்
யாருள்ளார் என்வாழ்வில் என்றும்நீ காப்பாயே

முழுவதும் புளிமாங்காய்ச் சீர்வரும் அடிகள்:
வழிமீது விழிவைத்து எதிர்நோக்கும் இளமங்கை
படித்தோரிப் படிசெய்தால் படிக்காதோர் எதுசெய்வார்
கலிகால உலகத்தில் பலியாகும் தருமங்கள்

முழுவதும் கருவிளங்காய்ச் சீர்வரும் அடிகள்:
சடசடவென் றிடியிடித்துப் பெருமழையாய்ப் பொழிந்திடவே
கடகடவென் றனைவரும்நாம் தெருவினிலே விரைந்திடுவோம்
படபடக்கும் மனத்துடனே ஒதுங்கிடவே ஒருமனையில்

முழுவதும் கூவிளங்காய்ச் சீர்வரும் அடிகள்:
பாட்டினிலே பேச்சினிலே யாருமென்னை விஞ்சுவரோ
நாட்டினிலே நல்லதெல்லாம் நீங்கிடுமே நாளடைவில்
காட்டினிலே யானையுடன் ஆடிவரும் குட்டியானை

பயிற்சி 7. அனைத்தும் ஒரே சீர்: கனிச்சீர்: விடை

முழுவதும் தேமாங்கனிச் சீர்வரும் அடிகள்:
மானாடிடும் பூங்காவினில் மாமன்மகள் தானேவரும்
பூவொன்றினில் வண்டாடிடப் பூந்தாதுகள் கீழ்சிந்திடும்
நானாவித ஆட்டங்களும் காணாமலே போய்விட்டன

முழுவதும் புளிமாங்கனிச் சீர்வரும் அடிகள்:
எதிர்பார்த்தது நிறைவேறவே அவர்கள்மனம் களிப்புற்றது
பனிக்காற்றிலே தனியாகவே நடந்தேவரக் கலக்கம்வரும்
தொலைக்காட்சியின் ஒளிவீச்சினில் குளிர்விப்பது எதுவுள்ளது

முழுவதும் கருவிளங்கனிச் சீர்வரும் அடிகள்:
சடசடவென இடியிடித்திடப் பெருமழையெனப் பொழிந்ததுவே
மனம்மகிழ்ந்திடும் ஒலிபரப்புகள் ஒளிபரப்புகள் மிகக்குறைந்தன
செலும்வழியினில் சிறுதொலைவினில் கடற்கரையினில் அமர்ந்துசெல்லுவோம்

முழுவதும் கூவிளங்கனிச் சீர்வரும் அடிகள்:
வான்தருவது பூமழையெனில் தேன்தருவது செந்தமிழ்மொழி
கான்தருவது தண்நிழலெனில் மான்தருவது மான்மதப்பொருள்
தான்தருவது உள்ளுணருமோ தென்னைமரமும் வாழைமரமும்

பயிற்சி 8. செய்யுளடி புனைதல்: விடை

கருவிழியின் நோக்கினிலே காலமெலாம் உறைந்துநிற்கப்
பரிவுடனே பாவையவள் பார்த்ததிலே எனைமறந்தேன்

கரு/விழி/யின் நோக்/கினி/லே கா/லமெ/லாம் உறைந்/துநிற்/கப்
பரி/வுட/னே பா/வைய/வள் பார்த்/ததி/லே எனை/மறந்/தேன்

கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்

சீர்களின் நிரல்களில் சீர்த்தெழும் ஓசை
சொற்களின் தேர்வினில் சிறப்பது காணீர்.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 7 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி Sat Dec 15, 2012 6:53 am

4.48. நாலசைச் சீர்

மூவசைச் சீர்கள் எட்டின் இறுதியில்
நேரசை நிரையசை சேர்ந்து
நாலசைச் சீர்கள் பதினாறாகும்.

நாலசைச் சீர்கள் பதினா றில்வரும்
தண்பூ நான்கு நறும்பூ நான்கு
தண்ணிழல் நான்கு நறுநிழல் நான்கு.

நாலசைச் சீர்கள் அமைவது அறிய
ஈரசைச் சீர்கள் எட்டின் பின்னே
தண்பூ நறும்பூ தண்ணிழல் நறுநிழல்
குறிகள் சேர்ந்து வருவது புலப்படும்.

நேரில் முடியும் எட்டு சீர்களும்
பூச்சீர் என்று அழைக்கப் படுவது.
நிரையில் முடியும் மீதம் எட்டும்
நிழற்சீர் என்று அழைக்கப் படுவது.
நான்கசைச் சீர்கள் அருகியே வருமாம்.

’தேமாந்தண்பூ, புளிமாந்தண்பூ, கருவிளந்தண்பூ, கூவிளந்தண்பூ’,
’தேமாநறும்பூ, புளிமாநறும்பூ, கருவிளநறும்பூ, கூவிளநறும்பூ’

என்பன பூச்சீர் வாய்பா டாகும்.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர்நேர் நிரைநேர்நேர்நேர் நிரைநிரைநேர்நேர் நேர்நிரைநேர்நேர்
நேர்நேர்நிரைநேர் நிரைநேர்நிரைநேர் நிரைநிரைநிரைநேர் நேர்நிரைநிரைநேர்

என்னும் எட்டு பூச்சீர் வகைகள்.

’தேமாந்தண்ணிழல், புளிமாந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல்’,
’தேமாநறுநிழல், புளிமாநறுநிழல், கருவிளநறுநிழல், கூவிளநறுநிழல்’

என்பன நிழற்சீர் வாய்ப்பா டாகும்.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர்நிரை நிரைநேர்நேர்நிரை நிரைநிரைநேர்நிரை நேர்நிரைநேர்நிரை
நேர்நேர்நிரைநிரை நிரைநேர்நிரைநிரை நிரைநிரைநிரைநிரை நேர்நிரைநிரைநிரை

என்னும் எட்டு நிழற்சீர் வகைகள்.

வெண்பா ஒழிந்த பிறபாக் களிலே
பொதுப்பட வந்து நிற்றலால்
பொதுச்சீர் என்று நாலசை பெயர்பெறுமே.

பொதுவெனும் சொல்லிங்கு பொதுமக்கள் என்பதில்போல்
சிறப்பற்ற சாதாரணம் என்று பொருள்படும்
இதனால் நாலசைச் சீர்கள் செய்யுளில்
பொதுவென் பதனால் அருகியே வருமே.

நாலசைச் சீர்களை அலகிடும் போது
பூச்சீர் களெட்டும் காய்ச்சீர் எனவும்
நிழற்சீர் களெட்டும் கனிச்சீர் எனவும்
கொண்ட லகிட்டுத் தளைகாண வேண்டும்.


சான்றாக ’வடிவார்கூந்தல் மங்கையரும்’ என்பது
போன்ற தொடர்களை அலகிடும் போது
வடி/வார்/கூந்/தல் மங்/கைய/ரும்
புளிமாந்தண்பூ கூவிளங்காய் என்றுவரும் சீர்களை
புளிமாங்காய் கூவிளங்காய் என்றே கொண்டு
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை
என்றே தளைதனைக் காணுதல் வேண்டுமே.

இவ்வாறே ’அங்கண்வானத் தமரரசரும்’ என்னும்
தொடரை அங்/கண்/வா/னத் தம/ரர/சரும் என்று
அலகிட தேமாந்தண்பூ கருவிளங்கனி யாகித்
தேமாங்காய் கருவிளங்கனி என்றே கருதக்
காய்முன் நிரைவரும் கலித்தளை பயிலுமே.

’வெங்கண்வினைப்பகை விளிவெய்த’ என்பதை அலகிட
வெங்/கண்/வினைப்/பகை விளி/வெய்/த
தேமாநறுநிழல் புளிமாங்காய் என்னும் சீர்களைத்
தேமாங்கனி புளிமாங்காய் என்றே கருதக்
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித்தளையாம்.

’அந்தரதுந்துபி நின்றியம்ப’ என்பதை அலகிட
அந்/தர/துந்/துபி நின்/றியம்/ப
கூவிளந்தண்நிழல் கூவிளங்காய் என்னும் சீர்களைக்
கூவிளங்கனி கூவிளங்காய் என்றே கருதக்
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித்தளையாம்.

வஞ்சிப் பாவினில் பொதுச்சீர் வரலாம்
வெண்பாவில் பொதுச்சீர் வருதல் ஆகாது
குற்றுகரம் வந்தால் ஒழியப் பொதுச்சீர்
அகவல் கலியெனும் பாக்களில் வராது.


பூச்சீர் நிழற்சீர் நாமைத்த சொற்றொடர்கள்:
வாவாவென்று வருவாயென்று தெரிவதுகாண்பாய் கண்டதுகாண்பாய்
வாவாவெனச்சொல் வருவாயெனச்சொல் தெரிவதென்றுசொல்வாய் கண்டதுகொடுப்பாய்
வாவாவந்துபார் வருவாய்வந்துபார் தெரிவதுவந்துபார் கண்டதுவந்துபார்
பூவாய்வருவது வருவாய்வருவது தெரிவதுவருவது கண்டதுவருவது

இப்படிச் சொற்கள் முயன்றமைத் தாலும்
இவைபோல் வந்திடும் சொற்கள் பிரிந்திட
நாலசை அமைவது அரிதெனப் புரியுமே.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 7 Empty Re: கவிதையில் யாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 29 Previous  1 ... 6, 7, 8 ... 18 ... 29  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum