புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதையில் யாப்பு
Page 6 of 29 •
Page 6 of 29 • 1 ... 5, 6, 7 ... 17 ... 29
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
பள்ளி படிப்பில் விரும்பி படித்த இலக்கணம் . கால சூழ்நிலையால் தொடர முடியவில்லை . பிறகு தேர்விற்கு இலக்கணம் படிக்கும் சூழ்நிலை. நேரம் கிடைக்கும் பொது தமிழ் இலக்கண நூல்களை படிப்பது உண்டு . படிக்கும் போதெல்லாம் என் தமிழ் வாதியாரை நினைத்து கொள்வேன் . உங்கள் பதிப்பை படிக்கும் போது என் தமிழ் வாதியாரை சந்தித்தது போல் உணர்கிறேன் . தொடருங்கள் , உங்கள் பதிப்பு சிறந்த நூலாக வெளிவர என் வாழ்த்துக்கள்
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.18. முற்றிய லுகரம்
மாத்திரை குறையா தொலிக்கும் உகரம்
முற்றிய லுகரம் என்று பெயர்பெறும்.
இஃது தனிக்குறில் அடுத்தும்
மெல்லின இடையின மெய்மேல் ஏறியும்
வருவது சான்றாக: ’நகு,தடு, தபு,பசு,
அது,அறு, தும்மு, கதவு, உண்ணு’
சொற்களில் உகரம் முழுவதும் ஒலிக்கும்.
4.19. குற்றியலுகரம்
தன்னியல் பாகிய ஒருமாத் திரையில்
குறைந்தே அரைமாத் திரையில் குறுகி
ஒலிக்கும் உகரம் குற்றிய லுகரம்.
குசுடு துபுறு என்று மெய்யுடன் உகரம்
சேரவரும் வல்லின உயிர்மெய் உகரம்
தனிக்குறில் அல்லாத மற்றச் சொற்களில்
வந்திடும் போது, குற்றிய லுகரமாக்
குன்றி அரைமாத் திரையில் ஒலிக்கும்.
அயலெழுத்தை யொட்டிக் குற்றிய லுகரம்
ஆறு வகைப்பட்ட தொடர்களில் அமையும்.
வல்லின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
வன்றொடர்க் குற்றிய லுகர மாகும்.
’சுக்கு மச்சு பட்டு பத்து உப்பு உற்று’
’சாக்கு நீச்சு பாட்டு கூத்து காப்பு உற்று’
என்பன வன்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
மெல்லின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
மென்றொடர்க் குற்றிய லுகர மாகும்.
’சங்கு பஞ்சு வண்டு பந்து தும்பு நின்று’
’பாங்கு காஞ்சு வாண்டு சாந்து பாம்பு சான்று’
என்பன மென்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
இடையின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
இடைத்தொடர்க் குற்றிய லுகர மாகும்.
’தேய்கு ஆர்கு அல்கு --வ்கு மாழ்கு தெள்கு’ ... [--வ்+கு சொல்லில்லை]
’வெய்து --ர்து --ல்து --வ்து போழ்து --ள்து’
’தோய்பு மார்பு சால்பு --வ்பு வாழ்பு வள்பு’
என்பன இடைத்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
இடைத் தொடரில் சுதுறு என்பன
ஈற்றயலிற் குற்றுகர மாகக் கொண்டு
அமையும் சொற்கள் இல்லை காண்க.
மீதமுள்ள குதுபு குற்றிய லுகரமும்
இடையினம் மெய்கள் அனைத்தையும் ஈற்றயலின்
கொள்வதில்லை என்றும் சான்றுகளில் காண்க.
உயிர்மெய் யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
உயிர்த்தொடர்க் குற்றிய லுகர மாகும்.
’படகு நகாசு அகடு தகாது அளபு கதறு’
என்பன உயிர்த்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
தனிநெடி லெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
நெடிற்றொடர்க் குற்றிய லுகர மாகும்.
’பாகு காசு நாடு காது பாபு ஆறு’
என்பன நெடிற்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் தனிநெடில்
பின்வந்து ஈரெழுத்துச் சொற்களிலே அமையும்.
’தகாது ஆகாது’ போன்று இரண்டின்
மிஞ்சிய எழுத்துச் சொற்களில் வருகிற
குற்றிய லுகரம் உயிர்த்தொட ராகிவிடும்.
ஆய்த எழுத்தை ஈற்றயலில் கொண்டவை
ஆய்தத்தொடர்க் குற்றிய லுகர மாகும்.
’எஃகு கஃசு அஃது சுஃறு’
என்பன ஆய்தத்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
குற்றியலுகரச் செயல்பாடு:
குற்றிய லுகரச் செயல்பாடு பற்றி
மொழியியல் கருத்து மகிழ்ச்சி தருவது
வல்லின மெய்கள் வந்தால் இறுதியில்
எளிய தல்ல ஒலித்தல் அவற்றை
காட் அஃத் பஞ்ச் மார்ப்
போன்ற சொற்களை ஒலித்தல் எளிதா?
எனவே
காடு அஃது பஞ்சு மார்பு
என்று அந்த வல்லின மெய்மேல்
உகரம் ஏறி ஒலித்தல் எளிதாகி
உகரம் தானும் இசையில் நலிந்து
குற்றியல் இகரம் ஆகி விடுமே.
ஆங்கிலம் பயிலும் இற்றைநாள் தமிழில்
ஓங்குவது காணீர் குற்றிய லுகரமே!
சாக் பாஸ் போட் ஷாப் டேப் பார் ... [chalk pass boat shop tape bar]
என்று பேச்சில் பரந்த ஆங்கிலம்
நன்கு குற்றிய லுகரம் சேர்ந்து
சாக்கு பாசு போட்டு டேப்பு பாரு
என்று பேச்சில் ஒலிக்கும் அன்றோ?
4.20. குற்றியலிகரம்
நிலைமொழி ஈற்றில் குற்றுகரம் நிற்க
வருமொழி முதலில் யகரம் வந்தால்,
உகரம் இகர மாகத் திரிந்து,
அரைமாத் திரையால் குறைந்து ஒலித்து
குற்றிய லிகரம் ஆகி விடும்.
நாடு + யாது = நாடியாது என்றும்
வரகு + யாது = வரகியாது என்றும்
கொக்கு + யாது = கொக்கியாது என்றும்
வருவது குற்றிய லிகரச் சான்றுகள்.
இவ்வாறே மியா எனும் அசைச்சொல்லில்
மகரம் மேலூர்ந்த உகரம் மாத்திரை
குன்றி ஒலிப்பதும் குற்றிய லிகரம்.
கேள் + மியா = கேண்மியா என்றும்
செல் + மியா = சென்மியா என்றும்
வருவதும் குற்றிய லிகரச் சான்றுகள்.
மாத்திரை குறையா தொலிக்கும் உகரம்
முற்றிய லுகரம் என்று பெயர்பெறும்.
இஃது தனிக்குறில் அடுத்தும்
மெல்லின இடையின மெய்மேல் ஏறியும்
வருவது சான்றாக: ’நகு,தடு, தபு,பசு,
அது,அறு, தும்மு, கதவு, உண்ணு’
சொற்களில் உகரம் முழுவதும் ஒலிக்கும்.
4.19. குற்றியலுகரம்
தன்னியல் பாகிய ஒருமாத் திரையில்
குறைந்தே அரைமாத் திரையில் குறுகி
ஒலிக்கும் உகரம் குற்றிய லுகரம்.
குசுடு துபுறு என்று மெய்யுடன் உகரம்
சேரவரும் வல்லின உயிர்மெய் உகரம்
தனிக்குறில் அல்லாத மற்றச் சொற்களில்
வந்திடும் போது, குற்றிய லுகரமாக்
குன்றி அரைமாத் திரையில் ஒலிக்கும்.
அயலெழுத்தை யொட்டிக் குற்றிய லுகரம்
ஆறு வகைப்பட்ட தொடர்களில் அமையும்.
வல்லின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
வன்றொடர்க் குற்றிய லுகர மாகும்.
’சுக்கு மச்சு பட்டு பத்து உப்பு உற்று’
’சாக்கு நீச்சு பாட்டு கூத்து காப்பு உற்று’
என்பன வன்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
மெல்லின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
மென்றொடர்க் குற்றிய லுகர மாகும்.
’சங்கு பஞ்சு வண்டு பந்து தும்பு நின்று’
’பாங்கு காஞ்சு வாண்டு சாந்து பாம்பு சான்று’
என்பன மென்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
இடையின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
இடைத்தொடர்க் குற்றிய லுகர மாகும்.
’தேய்கு ஆர்கு அல்கு --வ்கு மாழ்கு தெள்கு’ ... [--வ்+கு சொல்லில்லை]
’வெய்து --ர்து --ல்து --வ்து போழ்து --ள்து’
’தோய்பு மார்பு சால்பு --வ்பு வாழ்பு வள்பு’
என்பன இடைத்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
இடைத் தொடரில் சுதுறு என்பன
ஈற்றயலிற் குற்றுகர மாகக் கொண்டு
அமையும் சொற்கள் இல்லை காண்க.
மீதமுள்ள குதுபு குற்றிய லுகரமும்
இடையினம் மெய்கள் அனைத்தையும் ஈற்றயலின்
கொள்வதில்லை என்றும் சான்றுகளில் காண்க.
உயிர்மெய் யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
உயிர்த்தொடர்க் குற்றிய லுகர மாகும்.
’படகு நகாசு அகடு தகாது அளபு கதறு’
என்பன உயிர்த்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
தனிநெடி லெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
நெடிற்றொடர்க் குற்றிய லுகர மாகும்.
’பாகு காசு நாடு காது பாபு ஆறு’
என்பன நெடிற்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் தனிநெடில்
பின்வந்து ஈரெழுத்துச் சொற்களிலே அமையும்.
’தகாது ஆகாது’ போன்று இரண்டின்
மிஞ்சிய எழுத்துச் சொற்களில் வருகிற
குற்றிய லுகரம் உயிர்த்தொட ராகிவிடும்.
ஆய்த எழுத்தை ஈற்றயலில் கொண்டவை
ஆய்தத்தொடர்க் குற்றிய லுகர மாகும்.
’எஃகு கஃசு அஃது சுஃறு’
என்பன ஆய்தத்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
குற்றியலுகரச் செயல்பாடு:
குற்றிய லுகரச் செயல்பாடு பற்றி
மொழியியல் கருத்து மகிழ்ச்சி தருவது
வல்லின மெய்கள் வந்தால் இறுதியில்
எளிய தல்ல ஒலித்தல் அவற்றை
காட் அஃத் பஞ்ச் மார்ப்
போன்ற சொற்களை ஒலித்தல் எளிதா?
எனவே
காடு அஃது பஞ்சு மார்பு
என்று அந்த வல்லின மெய்மேல்
உகரம் ஏறி ஒலித்தல் எளிதாகி
உகரம் தானும் இசையில் நலிந்து
குற்றியல் இகரம் ஆகி விடுமே.
ஆங்கிலம் பயிலும் இற்றைநாள் தமிழில்
ஓங்குவது காணீர் குற்றிய லுகரமே!
சாக் பாஸ் போட் ஷாப் டேப் பார் ... [chalk pass boat shop tape bar]
என்று பேச்சில் பரந்த ஆங்கிலம்
நன்கு குற்றிய லுகரம் சேர்ந்து
சாக்கு பாசு போட்டு டேப்பு பாரு
என்று பேச்சில் ஒலிக்கும் அன்றோ?
4.20. குற்றியலிகரம்
நிலைமொழி ஈற்றில் குற்றுகரம் நிற்க
வருமொழி முதலில் யகரம் வந்தால்,
உகரம் இகர மாகத் திரிந்து,
அரைமாத் திரையால் குறைந்து ஒலித்து
குற்றிய லிகரம் ஆகி விடும்.
நாடு + யாது = நாடியாது என்றும்
வரகு + யாது = வரகியாது என்றும்
கொக்கு + யாது = கொக்கியாது என்றும்
வருவது குற்றிய லிகரச் சான்றுகள்.
இவ்வாறே மியா எனும் அசைச்சொல்லில்
மகரம் மேலூர்ந்த உகரம் மாத்திரை
குன்றி ஒலிப்பதும் குற்றிய லிகரம்.
கேள் + மியா = கேண்மியா என்றும்
செல் + மியா = சென்மியா என்றும்
வருவதும் குற்றிய லிகரச் சான்றுகள்.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.21. ஐகாரக் குறுக்கம்
ஐ-எனும் உயிரெழுத்து தனித்து வந்தால்
இரண்டு மாத்திரை யளவில் ஒலிக்கும்.
அதுவே மற்ற எழுத்துகள் சேர்ந்து
முதலிடை கடையில் வந்த போது
ஒருமாத் திரையாகக் குன்றி ஒலிப்பது
ஐகாரக் குறுக்கும் என்று பெயர்பெறும்.
ஐப்பசி, தலைவன், வலை,கலை சான்றுகள்.
4.22. ஔகாரக் குறுக்கம்
ஔ-எனும் உயிரெழுத்து தனித்தோ அல்லது
தனித்து நிற்கும் உயிர்மெய் யாகவோ
தன்னை உணர்த்தி வரும்போதும்
அளபெடுத்து வரும்போதும்
தன்னிரு மாத்திரை குன்றாது ஒலிக்கும்.
அதுவே உயிரெழுத்து உயிர்மெய் என்று
சேர்ந்தால் முதலில் மட்டுமே வந்து
ஓசையில் குறைந்து மாத்திரை யளவு
ஒன்றரை அல்லது ஒன்றென ஒலித்து
ஔகாரக் குறுக்கம் ஆகி விடுமே:
ஔவை, வௌவால், கௌதாரி சான்றுகள்.
4.23. மகரக் குறுக்கம்
ணகர, னகர மெய்களின் முன்னும்
வகரத்தின் பின்னும் வருகிற மகரம்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது மகரக் குறுக்கம் என்பது.
கேண்ம் = கேளும், மருண்ம் = மருளும்
போன்ம் = போலும், சென்ம் = செல்லும்
வரும் வங்கம் = வரும் கப்பல்
என்பன மகரக் குறுக்கச் சான்றுகள்.
4.24. ஆய்தக் குறுக்கம்
லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சியால்
ஆய்தம் தோன்றி, இருபுறத் தொடர்பால்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் என்பது.
அல் + திணை = அஃறிணை
கல் + தீது = கஃறீது
முள் + தீது = முஃடீது
என்பன ஆய்தக் குறுக்கச் சான்றுகள்.
4.25. எழுத்தும் அசையும்
எழுத்து என்பது தனியெழுத் தாகவும்
’அக்ஷரம்’ என்று வடசொல் குறிக்கும்
’ஸிலபிள்’ என்று ஆங்கிலம் குறிக்கும்
’அசை’யென் பதாகத் தமிழ்மொழி குறிக்கும்
செய்யுளின் முக்கிய உறுப்பில்
குறில்நெடில் ஒற்று வகைகளில் இசைந்தும்;
தொடையெனும் உறுப்பில் எதுகை மோனை
முரணெனும் வகைகளில் தொடுக்க உதவியும்
இயைபெனும் உறுப்பில் ஒலியில் ஒன்றியும்;
வண்ணம் என்பதில் தாளம் கூட்டியும்;
இழைபில் தேர்ந்த சொற்களின் நடையிலும்
அடிப்படை உறுப்பாக அசைந்து வருமே.
ஐ-எனும் உயிரெழுத்து தனித்து வந்தால்
இரண்டு மாத்திரை யளவில் ஒலிக்கும்.
அதுவே மற்ற எழுத்துகள் சேர்ந்து
முதலிடை கடையில் வந்த போது
ஒருமாத் திரையாகக் குன்றி ஒலிப்பது
ஐகாரக் குறுக்கும் என்று பெயர்பெறும்.
ஐப்பசி, தலைவன், வலை,கலை சான்றுகள்.
4.22. ஔகாரக் குறுக்கம்
ஔ-எனும் உயிரெழுத்து தனித்தோ அல்லது
தனித்து நிற்கும் உயிர்மெய் யாகவோ
தன்னை உணர்த்தி வரும்போதும்
அளபெடுத்து வரும்போதும்
தன்னிரு மாத்திரை குன்றாது ஒலிக்கும்.
அதுவே உயிரெழுத்து உயிர்மெய் என்று
சேர்ந்தால் முதலில் மட்டுமே வந்து
ஓசையில் குறைந்து மாத்திரை யளவு
ஒன்றரை அல்லது ஒன்றென ஒலித்து
ஔகாரக் குறுக்கம் ஆகி விடுமே:
ஔவை, வௌவால், கௌதாரி சான்றுகள்.
4.23. மகரக் குறுக்கம்
ணகர, னகர மெய்களின் முன்னும்
வகரத்தின் பின்னும் வருகிற மகரம்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது மகரக் குறுக்கம் என்பது.
கேண்ம் = கேளும், மருண்ம் = மருளும்
போன்ம் = போலும், சென்ம் = செல்லும்
வரும் வங்கம் = வரும் கப்பல்
என்பன மகரக் குறுக்கச் சான்றுகள்.
4.24. ஆய்தக் குறுக்கம்
லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சியால்
ஆய்தம் தோன்றி, இருபுறத் தொடர்பால்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் என்பது.
அல் + திணை = அஃறிணை
கல் + தீது = கஃறீது
முள் + தீது = முஃடீது
என்பன ஆய்தக் குறுக்கச் சான்றுகள்.
4.25. எழுத்தும் அசையும்
எழுத்து என்பது தனியெழுத் தாகவும்
’அக்ஷரம்’ என்று வடசொல் குறிக்கும்
’ஸிலபிள்’ என்று ஆங்கிலம் குறிக்கும்
’அசை’யென் பதாகத் தமிழ்மொழி குறிக்கும்
செய்யுளின் முக்கிய உறுப்பில்
குறில்நெடில் ஒற்று வகைகளில் இசைந்தும்;
தொடையெனும் உறுப்பில் எதுகை மோனை
முரணெனும் வகைகளில் தொடுக்க உதவியும்
இயைபெனும் உறுப்பில் ஒலியில் ஒன்றியும்;
வண்ணம் என்பதில் தாளம் கூட்டியும்;
இழைபில் தேர்ந்த சொற்களின் நடையிலும்
அடிப்படை உறுப்பாக அசைந்து வருமே.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.26. எழுத்தியல் பயிற்சி
பயிற்சி 1 ஓசை நிறைக்கும் அளபெடைகள்
ஈரசைச் சீரிடை உள்ள ஓரசைச்
சொற்களை அளபெடுக்கச் செய்து ஓசை
நிறைய ஈரசை யாக்கி எழுதுக.
பளார் என்று அறைந்து விட்டான்
பெண்ணவள் கலீர் என்று சிரித்தாள்
தொண்டன் தலையாடச் சொன்னான் ஊம்
எலே என்றால் சட்டை செய்யான்
மன்னன் கணை தொடுத்து வீழ்த்தினான்
சலோ சலோ கூறக் குதிரை நகர்ந்தது
ஔ என்று மிழற்றியது குழந்தை
ஆம் சொல்வதினும் ஓம் சொல்வது அவரது பழக்கம்
வளை சென்ற சாலையில் விபத்து
அளை பேசினால் துன்பம் இல்லை
பயிற்சி 2 குற்றியலுகரம் அறிதல்
கீழ்வரும் சொற்களில் குற்றிய லுகரங்கள்
தேர்ந்து அவற்றின் வகைகள் குறிக்கவும்
மஞ்ஞு உண்ணு தும்மு பன்னு நெல்லு கவ்வு துள்ளு
பயிற்சி 3 குற்றியலுகரம் வகைப்படுத்தல்
கீழுள்ள முப்பத் தாறு சொற்களை
வகைக்கு ஆறாக வன்றொடர் மென்றொடர்
இடைத்தொடர் உயிர்த்தொடர் நெடிற்றொடர் ஆய்தத்தொடர்
எனுமாறு வகைகளில் பகுத்து எழுதுக.
மாசு ஒஃகு கொக்கு வள்பு மஞ்சு ஏச்சு
குந்து இங்கு ஊறு சோறு பெரிசு எய்து
குத்து மண்டு காடு நட்பு ஜவ்வு கூட்டு
தம்பு சுஃறு வெஃகு பஃது அளபு கஃசு
அஃகு வாகு மாது கூடாது அமிழ்து தகடு
காற்று கோபு பல்கு மார்பு குடகு துன்பு
பயிற்சி 1 ஓசை நிறைக்கும் அளபெடைகள்
ஈரசைச் சீரிடை உள்ள ஓரசைச்
சொற்களை அளபெடுக்கச் செய்து ஓசை
நிறைய ஈரசை யாக்கி எழுதுக.
பளார் என்று அறைந்து விட்டான்
பெண்ணவள் கலீர் என்று சிரித்தாள்
தொண்டன் தலையாடச் சொன்னான் ஊம்
எலே என்றால் சட்டை செய்யான்
மன்னன் கணை தொடுத்து வீழ்த்தினான்
சலோ சலோ கூறக் குதிரை நகர்ந்தது
ஔ என்று மிழற்றியது குழந்தை
ஆம் சொல்வதினும் ஓம் சொல்வது அவரது பழக்கம்
வளை சென்ற சாலையில் விபத்து
அளை பேசினால் துன்பம் இல்லை
பயிற்சி 2 குற்றியலுகரம் அறிதல்
கீழ்வரும் சொற்களில் குற்றிய லுகரங்கள்
தேர்ந்து அவற்றின் வகைகள் குறிக்கவும்
மஞ்ஞு உண்ணு தும்மு பன்னு நெல்லு கவ்வு துள்ளு
பயிற்சி 3 குற்றியலுகரம் வகைப்படுத்தல்
கீழுள்ள முப்பத் தாறு சொற்களை
வகைக்கு ஆறாக வன்றொடர் மென்றொடர்
இடைத்தொடர் உயிர்த்தொடர் நெடிற்றொடர் ஆய்தத்தொடர்
எனுமாறு வகைகளில் பகுத்து எழுதுக.
மாசு ஒஃகு கொக்கு வள்பு மஞ்சு ஏச்சு
குந்து இங்கு ஊறு சோறு பெரிசு எய்து
குத்து மண்டு காடு நட்பு ஜவ்வு கூட்டு
தம்பு சுஃறு வெஃகு பஃது அளபு கஃசு
அஃகு வாகு மாது கூடாது அமிழ்து தகடு
காற்று கோபு பல்கு மார்பு குடகு துன்பு
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பயிற்சி 1 ஓசை நிறைக்கும் அளபெடைகள்: விடை
பளாஅர் என்று அறைந்து விட்டான்
பெண்ணவள் கலீஇர் என்று சிரித்தாள்
தொண்டன் தலையாடச் சொன்னான் ஊஉம்
எலேஎ என்றால் சட்டை செய்யான்
மன்னன் கணைஇ தொடுத்து வீழ்த்தினான்
சலோஒ சலோஒ கூறக் குதிரை நகர்ந்தது
ஔஉ என்று மிழற்றியது குழந்தை
ஆம்ம் சொல்வதினும் ஓம்ம் சொல்வது அவரது பழக்கம்
வளைஇ சென்ற சாலையில் விபத்து
அளைஇ பேசினால் துன்பம் இல்லை
பயிற்சி 2 குற்றியலுகரம்: விடை
குசுடுதுபுறு என்னும் வல்லின உயிர்மெய்களே குற்றியலிகரமாக வரும்.
மெல்லின இடையின் மெய்களின் மேலேறிய உகரம் குற்றுகரம் ஆகாது.
எனவே எதுவும் குற்றியலுகரம் அல்ல.
பயிற்சி 3 குற்றியலுகரம் வகைப்படுத்தல்: விடை
வன்றொடர்: கொக்கு ஏச்சு கூட்டு குத்து நட்பு காற்று
மென்றொடர்: இங்கு மஞ்சு மண்டு குந்து தம்பு துன்பு
இடைத்தொடர்: எய்து மார்பு பல்கு ஜவ்வு அமிழ்து வள்பு
உயிர்த்தொடர்: குடகு பெரிசு தகடு கூடாது அளபு சோறு
நெடிற்றொடர்: வாகு மாசு காடு மாது கோபு ஊறு
ஆய்தத்தொடர்: அஃகு ஒஃகு வெஃகு கஃசு பஃது சுஃறு
பளாஅர் என்று அறைந்து விட்டான்
பெண்ணவள் கலீஇர் என்று சிரித்தாள்
தொண்டன் தலையாடச் சொன்னான் ஊஉம்
எலேஎ என்றால் சட்டை செய்யான்
மன்னன் கணைஇ தொடுத்து வீழ்த்தினான்
சலோஒ சலோஒ கூறக் குதிரை நகர்ந்தது
ஔஉ என்று மிழற்றியது குழந்தை
ஆம்ம் சொல்வதினும் ஓம்ம் சொல்வது அவரது பழக்கம்
வளைஇ சென்ற சாலையில் விபத்து
அளைஇ பேசினால் துன்பம் இல்லை
பயிற்சி 2 குற்றியலுகரம்: விடை
குசுடுதுபுறு என்னும் வல்லின உயிர்மெய்களே குற்றியலிகரமாக வரும்.
மெல்லின இடையின் மெய்களின் மேலேறிய உகரம் குற்றுகரம் ஆகாது.
எனவே எதுவும் குற்றியலுகரம் அல்ல.
பயிற்சி 3 குற்றியலுகரம் வகைப்படுத்தல்: விடை
வன்றொடர்: கொக்கு ஏச்சு கூட்டு குத்து நட்பு காற்று
மென்றொடர்: இங்கு மஞ்சு மண்டு குந்து தம்பு துன்பு
இடைத்தொடர்: எய்து மார்பு பல்கு ஜவ்வு அமிழ்து வள்பு
உயிர்த்தொடர்: குடகு பெரிசு தகடு கூடாது அளபு சோறு
நெடிற்றொடர்: வாகு மாசு காடு மாது கோபு ஊறு
ஆய்தத்தொடர்: அஃகு ஒஃகு வெஃகு கஃசு பஃது சுஃறு
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.30. அசை
அவனின்றி அசையாது அணுவும் எனும்போது
அசையென்றால் அதிர்வாகும் என்பது விளங்கும்
அணுக்கள் தனியே அசைவது அதிர்வு
அணுக்கள் சேர்ந்து அதிர்வுகள் சீர்ப்பட்டு
ஒருமித்து அசைவது அசையென அறியலாம்.
அசைதல் என்றால் இயங்குதல் எனப்பொருள்
அசையின் இயக்கம் நுடங்கி விரிந்து ... ... ... [நுடங்குதல்=மெலிதல்]
இசைந்து ஒலிக்கும் இதயத் துடிப்பென.
4.31. அசையென்பது
தனித்தே வலிதாய் ஒலிக்கும் எழுத்துகள்
கனித்துச் சீராய் ஒலிப்பது அசையாம்.
தனிநின் றொலிக்கும் எழுத்துகள் பலவும்
நனிசேர்ந் தொலிப்பதில் எழுந்திடும் ஓசை
அசையெனச் செய்யுளில் அடிப்படை உறுப்பாய்
இசைந்து சீர்களில் இணைந்து தளைகளில்
தழைத்து தொடைகளில் தொடுத்து
இழைந்து ஒலிக்க எழுந்திடும் கவிதையே.
4.32. எழுத்தும் அசையும்
எழுத்துகள் தனியே அசைந்திடும் போது
முழுதாய் ஓசை அவற்றில் ஒலிக்கும்.
எழுத்துகள் சேர்ந்து அசைந்திடும் போது
ஓசைகள் குறையலாம், வலுவும் பெறலாம்.
’தாஅ’ என்று கேட்கும் போது
தாவின் ஓசை முழுதும் ஒலிக்கும்.
அதுவே ’தார்’என ஆகும் போது
மெய்யுடன் சேர்ந்து ஒலிகள் மழுங்கி
’தா’-வின் ஓசை குறைந்து ஒலிக்கும்.
’குயி’எனச் சொல்லும் போது அதிலே
வல்லின மெய்யின ஒலிகள் முரண்பட்டுப்
பொருளேது மின்றி கேட்கும் அசைந்து.
அதுவே ’குயில்’எனச் சொல்லும் போது
இடையின ஒற்றின் வரவால்
தனிக்குறில் ஓசைகள் இயைந்து
இறுதி ஒற்றில் அழுத்தம் பெற்றுக்
குயில்கள் பாடும் இன்னிசை சுட்டும்!
எழுத்தும் தனியே தானே அசையும்,
தனியே வருகிற குறில்நெடில் எழுத்தும்
தனித்தனி அசையாய் ஆக முடியும்.
4.33. அசை வகைகள்
அசைகளின் அடிப்படை உயிரொலிக் காலம்
ஒற்றுகள் அசையா தனித்தோ இணைந்தோ.
ஒற்றுடன் உயிரெழுத் தொன்று சேர்ந்தால்
உயிர்மெய் யாகி மெய்யுயிர் பெறுமே.
அசையில் இரண்டு வகைகள் உண்டு:
நேரசை நிரையசை என்பன அவையே.
நேரே வருவதால் நேரனப் பட்டது:
ஒரேஒரு எழுத்தால் ஆவதால் நேரசை.
ஒன்றை யொன்று தொடர்வது நிரையாம்:
எழுத்துகள் இரண்டு தொடர்ந்து வந்து
இணைந்து அசைவதால் நிரையசை யாவது.
குறிலோ நெடிலோ தனித்து வந்தாலோ
ஒற்றடுத்து வந்தாலோ நேரசை எனப்படும்
குறில்கள் இரண்டோ குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும் ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.
4.34. நேரசை என்பது
நேரசை வந்திடும் வகைகள் நான்கு
குறிலொன்று தனித்து வருவது நேரசை
குறிலொன்று ஓற்றடுத்து வருவதும் நேரசை ... ... ... ... [ஒற்றடுத்து வருவது = அடுத்து வருவது ஒற்றெழுத்து]
நெடிலொன்று தனித்து வருவது நேரசை
நெடிலொன்று ஓற்றடுத்து வருவதும் நேரசை.
’இ,இல்; க,கல்;’ குறில்களின் நேரசை;
’ஆ,ஆல்; பா,பால்;’ நெடில்களின் நேரசை.
’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
தனிக்குறில் நேரசை பெரிதும் சீரின்
இறுதியில் வருவதே: ’பானு, வாலி’.
ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
’அர்த்தம்’ என்பது நேர்-நேர்’ ஆகும்.
4.35. நிரையசை என்பது
நிரையசை வந்திடும் வகைகள் நான்கு
குறில்கள் இரண்டு வருவது நிரையசை
குறிலிணை ஓற்றடுத்து வருவது நிரையசை
குறில்நெடில் இணைந்து வருவது நிரையசை
குறில்நெடில் ஓற்றடுத்து வருவது நிரையசை.
’அணி,கனா’ குறிலிணை, குறில்நெடில் நிரையசை.
’அணில்,சவால்’ குறிலிணை, குறில்நெடில் ஒற்றடுத்தது.
’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
ஒற்றில்லா நேரசையில் எழுத்து ஒன்று
ஒற்றில்லா நிரையசையில் எழுத்துகள் இரண்டு
அவற்றுள் முதலது என்றும் குறிலே.
4.36. அசையும் சொல்லும்
சொல்லின் பகுதியே பொதுவில் வரினும்
சொற்களும் அசையில் வருவது உண்டு
சொல்லொன்று வரலாம் நேரசை ஒன்றில்
சொல்லொன்றோ இரண்டோ வரலாம் நிரையசையில்.
’உ’வெனும் குறில்வரும் நேரிலும் பொருளுண்டு
’பா’வெனும் நேரசை பாட்டெனப் பொருள்தரும்
’கா’வெனும் நேரசைப் பொருள்கள் பலவுள
’பல்,கால்’ என்பன நேரசைச் சொற்களே.
இவ்வாறே
’உ’வெனும் எழுத்தே தனிச்சொல் லாகிட
’மா’வெனும் எழுத்து பலபொருள் குறிக்க
’உமா’வெனும் நிரையில் இருசொல் காணீர்
’சில,கழல்’ ’பலா,இறால்’ எனவரும் நிரைகளில்
பயின்றிடும் சொற்கள் அனைவரும் அறிந்ததே.
*****
அவனின்றி அசையாது அணுவும் எனும்போது
அசையென்றால் அதிர்வாகும் என்பது விளங்கும்
அணுக்கள் தனியே அசைவது அதிர்வு
அணுக்கள் சேர்ந்து அதிர்வுகள் சீர்ப்பட்டு
ஒருமித்து அசைவது அசையென அறியலாம்.
அசைதல் என்றால் இயங்குதல் எனப்பொருள்
அசையின் இயக்கம் நுடங்கி விரிந்து ... ... ... [நுடங்குதல்=மெலிதல்]
இசைந்து ஒலிக்கும் இதயத் துடிப்பென.
4.31. அசையென்பது
தனித்தே வலிதாய் ஒலிக்கும் எழுத்துகள்
கனித்துச் சீராய் ஒலிப்பது அசையாம்.
தனிநின் றொலிக்கும் எழுத்துகள் பலவும்
நனிசேர்ந் தொலிப்பதில் எழுந்திடும் ஓசை
அசையெனச் செய்யுளில் அடிப்படை உறுப்பாய்
இசைந்து சீர்களில் இணைந்து தளைகளில்
தழைத்து தொடைகளில் தொடுத்து
இழைந்து ஒலிக்க எழுந்திடும் கவிதையே.
4.32. எழுத்தும் அசையும்
எழுத்துகள் தனியே அசைந்திடும் போது
முழுதாய் ஓசை அவற்றில் ஒலிக்கும்.
எழுத்துகள் சேர்ந்து அசைந்திடும் போது
ஓசைகள் குறையலாம், வலுவும் பெறலாம்.
’தாஅ’ என்று கேட்கும் போது
தாவின் ஓசை முழுதும் ஒலிக்கும்.
அதுவே ’தார்’என ஆகும் போது
மெய்யுடன் சேர்ந்து ஒலிகள் மழுங்கி
’தா’-வின் ஓசை குறைந்து ஒலிக்கும்.
’குயி’எனச் சொல்லும் போது அதிலே
வல்லின மெய்யின ஒலிகள் முரண்பட்டுப்
பொருளேது மின்றி கேட்கும் அசைந்து.
அதுவே ’குயில்’எனச் சொல்லும் போது
இடையின ஒற்றின் வரவால்
தனிக்குறில் ஓசைகள் இயைந்து
இறுதி ஒற்றில் அழுத்தம் பெற்றுக்
குயில்கள் பாடும் இன்னிசை சுட்டும்!
எழுத்தும் தனியே தானே அசையும்,
தனியே வருகிற குறில்நெடில் எழுத்தும்
தனித்தனி அசையாய் ஆக முடியும்.
4.33. அசை வகைகள்
அசைகளின் அடிப்படை உயிரொலிக் காலம்
ஒற்றுகள் அசையா தனித்தோ இணைந்தோ.
ஒற்றுடன் உயிரெழுத் தொன்று சேர்ந்தால்
உயிர்மெய் யாகி மெய்யுயிர் பெறுமே.
அசையில் இரண்டு வகைகள் உண்டு:
நேரசை நிரையசை என்பன அவையே.
நேரே வருவதால் நேரனப் பட்டது:
ஒரேஒரு எழுத்தால் ஆவதால் நேரசை.
ஒன்றை யொன்று தொடர்வது நிரையாம்:
எழுத்துகள் இரண்டு தொடர்ந்து வந்து
இணைந்து அசைவதால் நிரையசை யாவது.
குறிலோ நெடிலோ தனித்து வந்தாலோ
ஒற்றடுத்து வந்தாலோ நேரசை எனப்படும்
குறில்கள் இரண்டோ குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும் ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.
4.34. நேரசை என்பது
நேரசை வந்திடும் வகைகள் நான்கு
குறிலொன்று தனித்து வருவது நேரசை
குறிலொன்று ஓற்றடுத்து வருவதும் நேரசை ... ... ... ... [ஒற்றடுத்து வருவது = அடுத்து வருவது ஒற்றெழுத்து]
நெடிலொன்று தனித்து வருவது நேரசை
நெடிலொன்று ஓற்றடுத்து வருவதும் நேரசை.
’இ,இல்; க,கல்;’ குறில்களின் நேரசை;
’ஆ,ஆல்; பா,பால்;’ நெடில்களின் நேரசை.
’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
தனிக்குறில் நேரசை பெரிதும் சீரின்
இறுதியில் வருவதே: ’பானு, வாலி’.
ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
’அர்த்தம்’ என்பது நேர்-நேர்’ ஆகும்.
4.35. நிரையசை என்பது
நிரையசை வந்திடும் வகைகள் நான்கு
குறில்கள் இரண்டு வருவது நிரையசை
குறிலிணை ஓற்றடுத்து வருவது நிரையசை
குறில்நெடில் இணைந்து வருவது நிரையசை
குறில்நெடில் ஓற்றடுத்து வருவது நிரையசை.
’அணி,கனா’ குறிலிணை, குறில்நெடில் நிரையசை.
’அணில்,சவால்’ குறிலிணை, குறில்நெடில் ஒற்றடுத்தது.
’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
ஒற்றில்லா நேரசையில் எழுத்து ஒன்று
ஒற்றில்லா நிரையசையில் எழுத்துகள் இரண்டு
அவற்றுள் முதலது என்றும் குறிலே.
4.36. அசையும் சொல்லும்
சொல்லின் பகுதியே பொதுவில் வரினும்
சொற்களும் அசையில் வருவது உண்டு
சொல்லொன்று வரலாம் நேரசை ஒன்றில்
சொல்லொன்றோ இரண்டோ வரலாம் நிரையசையில்.
’உ’வெனும் குறில்வரும் நேரிலும் பொருளுண்டு
’பா’வெனும் நேரசை பாட்டெனப் பொருள்தரும்
’கா’வெனும் நேரசைப் பொருள்கள் பலவுள
’பல்,கால்’ என்பன நேரசைச் சொற்களே.
இவ்வாறே
’உ’வெனும் எழுத்தே தனிச்சொல் லாகிட
’மா’வெனும் எழுத்து பலபொருள் குறிக்க
’உமா’வெனும் நிரையில் இருசொல் காணீர்
’சில,கழல்’ ’பலா,இறால்’ எனவரும் நிரைகளில்
பயின்றிடும் சொற்கள் அனைவரும் அறிந்ததே.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.40. சீர்
எத்தனை பொருள்கள் சீரெனும் சொல்லுக்கு!
அத்தனையும் ஆகிவரும் சீரெனும் உறுப்பு
நேரடி யாகவோ மறைமுக மாகவோ.
செய்யுளின் கட்புலன் உறுப்பு சீரே:
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
முன்வரும் கட்புலன் இவ்வடிச் சீர்களே.
சீரே செய்யுளின் செல்வம் அழகு
நன்மை பெருமை மதிப்பு புகழும்
என்பது கீழ்வரும் செய்யுளில் புரியும்.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
---ஔவையார், நல்வழி 12
சீர்களே மேலிட்ட பாவின் பொற்காசு
சீர்களின் அமைப்பு பாவின் அழகு
சீர்களின் கருத்து பாவின் நன்மை
சீர்களே பாவின் மதிப்பில் புகழில்.
சீர்களே பெரும்பங்கு செய்யுள் இயல்பில்
சீர்களே துலாமென நிறுக்கும் ஓசையை
சீர்களின் அளவில் தாளமும் பாட்டும்
ஓர்வகை யாகி ஓங்கி ஒலிக்கும்.
இன்னும் செய்யுளின் நேர்மை சமன்பாடு
செம்பொருள் உறுதி ஆயுதம் தண்டை
என்னும் பொருள்களும் சீரினில் அடக்கம்.
காரணித்துக் காதலித்து முன்னோர் இட்டபெயர்
ஆரணிய மெனவிரியும் யாப்புறுப் புகளிலே.
4.41. சீரென்பது
ஓசை லயம்பட நிற்க உதவும்
செய்யுளின் உறுப்பு சீரெனப் படுமே.
அசைகள் தனித்தோ தொடர்ந்தோ பயின்று
இசைந்து ஒலிக்கும் சீரெனும் உறுப்பிலே.
நச்சினார்க் கினியர் கலித்தொகை உரையில்,
தாளம் என்பதில் மூன்று உறுப்புகள்,
தாளத்தின் காலச்சுழல் பாணியில் தொடங்கும்,
தாளத்தின் நீடிப்பு தூக்கில் அடங்கும்,
தாளத்தின் முடிவு சீரில் அடங்கும்
என்று சீரினைப் பாணியுடன் ஒப்பிடுவார்.
சீரின் எல்லை சொல்லில் முடியலாம்
சீரின் எல்லையில் சொற்பிளவு வரலாம்
சீர்வரும் சொற்பிளவு வகையுளி யெனப்படும்.
சீரிசை நோக்கிச் சொற்பொருள் நோக்காது
நேர்வரும் ஓசை சொற்களைப் பிரிக்கும்.
இக்குறளில் ’வேண்டுதல்வேண் டாமை’ வகையுளி:
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
வகையுளி இல்லாத குறள் ஒன்று:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
4.42. சீர் வகைகள்
நேரசையும் நிரையசையும் பலவகை இணந்து
செய்யுளின் சீர்களில் கூடி வருமே.
ஓரசைமுதல் நான்கசைவரை உருவாகும் சீர்களில்,
ஈரசையும், மூவசையும் அதிகம் பயின்றும்,
நான்கசைச் சீர்கள் அருகியும் வருமே.
சீர்களின் வகைகளை நினைவில் வைக்க
சீர்களின் வாய்பாடு மிகவும் உதவும்.
4.43. ஓரசைச் சீர்
தனித்துவரும் நேரசை நிரையசை யிரண்டும்
தனித்துநிற்கும் ஓரசைச் சீர்களின் வகைகளே.
அசைச்சீர் என்றும் இன்னொரு பெயர்பெறும்
ஓரசைச்சீர் வெண்பாவின் நிச்சயம் பயிலும்
வேறு பாக்களில் மிகவும் அரிதே.
’நாள், மலர், காசு, பிறப்பு’
என்பது ஓரசைச் சீர்கள் வாய்பாடு.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர், நிரை, நேர்பு, நிரைபு
என்னும் நால்வகை ஓரசைச் சீர்கள்.
இறுதிச் சீராக வெண்பாவின் ஈற்றடியில்
இவற்றில் ஓன்று மட்டும் வருமே.
’காசு, பிறப்பு’ ஓரசைச் சீர்களே.
தனிக்குறில் தவிர மற்ற நேருடன்
குற்றிய லுகரம் சேர்ந்தால் நேர்பு.
நிரையுடன் சேர்ந்தா லாகும் நிரைபு.
’நாள்’-இல் முடிவது கீழ்வரும் குறள்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
’மலர்’-இல் முடிவது கீழ்வரும் குறள்:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
’காசு’-வில் முடிவது கீழ்வரும் குறள்:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
’பிறப்பு’-வில் முடிவது கீழ்வரும் குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
*****
எத்தனை பொருள்கள் சீரெனும் சொல்லுக்கு!
அத்தனையும் ஆகிவரும் சீரெனும் உறுப்பு
நேரடி யாகவோ மறைமுக மாகவோ.
செய்யுளின் கட்புலன் உறுப்பு சீரே:
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
முன்வரும் கட்புலன் இவ்வடிச் சீர்களே.
சீரே செய்யுளின் செல்வம் அழகு
நன்மை பெருமை மதிப்பு புகழும்
என்பது கீழ்வரும் செய்யுளில் புரியும்.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
---ஔவையார், நல்வழி 12
சீர்களே மேலிட்ட பாவின் பொற்காசு
சீர்களின் அமைப்பு பாவின் அழகு
சீர்களின் கருத்து பாவின் நன்மை
சீர்களே பாவின் மதிப்பில் புகழில்.
சீர்களே பெரும்பங்கு செய்யுள் இயல்பில்
சீர்களே துலாமென நிறுக்கும் ஓசையை
சீர்களின் அளவில் தாளமும் பாட்டும்
ஓர்வகை யாகி ஓங்கி ஒலிக்கும்.
இன்னும் செய்யுளின் நேர்மை சமன்பாடு
செம்பொருள் உறுதி ஆயுதம் தண்டை
என்னும் பொருள்களும் சீரினில் அடக்கம்.
காரணித்துக் காதலித்து முன்னோர் இட்டபெயர்
ஆரணிய மெனவிரியும் யாப்புறுப் புகளிலே.
4.41. சீரென்பது
ஓசை லயம்பட நிற்க உதவும்
செய்யுளின் உறுப்பு சீரெனப் படுமே.
அசைகள் தனித்தோ தொடர்ந்தோ பயின்று
இசைந்து ஒலிக்கும் சீரெனும் உறுப்பிலே.
நச்சினார்க் கினியர் கலித்தொகை உரையில்,
தாளம் என்பதில் மூன்று உறுப்புகள்,
தாளத்தின் காலச்சுழல் பாணியில் தொடங்கும்,
தாளத்தின் நீடிப்பு தூக்கில் அடங்கும்,
தாளத்தின் முடிவு சீரில் அடங்கும்
என்று சீரினைப் பாணியுடன் ஒப்பிடுவார்.
சீரின் எல்லை சொல்லில் முடியலாம்
சீரின் எல்லையில் சொற்பிளவு வரலாம்
சீர்வரும் சொற்பிளவு வகையுளி யெனப்படும்.
சீரிசை நோக்கிச் சொற்பொருள் நோக்காது
நேர்வரும் ஓசை சொற்களைப் பிரிக்கும்.
இக்குறளில் ’வேண்டுதல்வேண் டாமை’ வகையுளி:
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
வகையுளி இல்லாத குறள் ஒன்று:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
4.42. சீர் வகைகள்
நேரசையும் நிரையசையும் பலவகை இணந்து
செய்யுளின் சீர்களில் கூடி வருமே.
ஓரசைமுதல் நான்கசைவரை உருவாகும் சீர்களில்,
ஈரசையும், மூவசையும் அதிகம் பயின்றும்,
நான்கசைச் சீர்கள் அருகியும் வருமே.
சீர்களின் வகைகளை நினைவில் வைக்க
சீர்களின் வாய்பாடு மிகவும் உதவும்.
4.43. ஓரசைச் சீர்
தனித்துவரும் நேரசை நிரையசை யிரண்டும்
தனித்துநிற்கும் ஓரசைச் சீர்களின் வகைகளே.
அசைச்சீர் என்றும் இன்னொரு பெயர்பெறும்
ஓரசைச்சீர் வெண்பாவின் நிச்சயம் பயிலும்
வேறு பாக்களில் மிகவும் அரிதே.
’நாள், மலர், காசு, பிறப்பு’
என்பது ஓரசைச் சீர்கள் வாய்பாடு.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர், நிரை, நேர்பு, நிரைபு
என்னும் நால்வகை ஓரசைச் சீர்கள்.
இறுதிச் சீராக வெண்பாவின் ஈற்றடியில்
இவற்றில் ஓன்று மட்டும் வருமே.
’காசு, பிறப்பு’ ஓரசைச் சீர்களே.
தனிக்குறில் தவிர மற்ற நேருடன்
குற்றிய லுகரம் சேர்ந்தால் நேர்பு.
நிரையுடன் சேர்ந்தா லாகும் நிரைபு.
’நாள்’-இல் முடிவது கீழ்வரும் குறள்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
’மலர்’-இல் முடிவது கீழ்வரும் குறள்:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
’காசு’-வில் முடிவது கீழ்வரும் குறள்:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
’பிறப்பு’-வில் முடிவது கீழ்வரும் குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.44. ஈரசைச் சீர்
நேர்நிரை யெனவரும் அசைகள் கூடி
ஈரசைச் சீர்வரும் வழிகள் நான்கு
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
ஈரசைச் சீர்கள் இப்படி நான்கே.
ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கில்
மாச்சீர் இரண்டு, விளச்சீர் இரண்டு.
ஈற்றசை நேர்வரின் மாச்சீர் ஆகும்
ஈற்றசை நிரைவரின் விளச்சீர் ஆகுமே.
’தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்’
என்பது ஈரசைச் சீர்களின் வாய்பாடு.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
என்னும் நான்கு ஈரசைச் சீர்கள்.
அனைவரும் அறிந்த மரங்கள் அவற்றில்
விளைந்திடும் பூக்கள் காய்கள் கனிகளை
அழைத்திடும் பெயர்களைச் சீர்களுக் கிட்டனர்.
---கி.வா.ஜ. ’கவி பாடலாம்’
தேமா என்பது பழுக்கும் மாங்காய்
புளிமா என்பது ஊறுகாய் மாங்காய்
கருவிளம் என்பது விளாமர மாகும்
கூவிளம் என்பது வில்வ மரமே.
அகவற்சீர் இயற்சீர் ஆசிரிய வுரிச்சீர்
எனவும் ஈரசைச் சீர்கள் பெயர்பெறும்.
செய்யுள் வழக்கில் பேச்சின் வழக்கில்
பெரிதும் இயல்பாய்ப் பயின்று வருதலால்
இயற்சீர் என்ற பெயரில் வருமே.
அகவல் ஓசை தாங்கி வருவதால்
அகவற் சீரெனும் பெயரில் வருமே.
அகவல் பயிலும் ஆசிரியப் பாவிற்
குரிய சீரென் றாகும் இதுவே
ஆசிரிய வுரிச்சீர் என்றும் பெயர்பெறும்.
இயற்சீர் மட்டுமே அமைந்த குறள்:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
இந்தக் குறளை அலகிட வருவது
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
புளிமா புளிமா மலர்-என அறிக.
நேர்நிரை யெனவரும் அசைகள் கூடி
ஈரசைச் சீர்வரும் வழிகள் நான்கு
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
ஈரசைச் சீர்கள் இப்படி நான்கே.
ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கில்
மாச்சீர் இரண்டு, விளச்சீர் இரண்டு.
ஈற்றசை நேர்வரின் மாச்சீர் ஆகும்
ஈற்றசை நிரைவரின் விளச்சீர் ஆகுமே.
’தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்’
என்பது ஈரசைச் சீர்களின் வாய்பாடு.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
என்னும் நான்கு ஈரசைச் சீர்கள்.
அனைவரும் அறிந்த மரங்கள் அவற்றில்
விளைந்திடும் பூக்கள் காய்கள் கனிகளை
அழைத்திடும் பெயர்களைச் சீர்களுக் கிட்டனர்.
---கி.வா.ஜ. ’கவி பாடலாம்’
தேமா என்பது பழுக்கும் மாங்காய்
புளிமா என்பது ஊறுகாய் மாங்காய்
கருவிளம் என்பது விளாமர மாகும்
கூவிளம் என்பது வில்வ மரமே.
அகவற்சீர் இயற்சீர் ஆசிரிய வுரிச்சீர்
எனவும் ஈரசைச் சீர்கள் பெயர்பெறும்.
செய்யுள் வழக்கில் பேச்சின் வழக்கில்
பெரிதும் இயல்பாய்ப் பயின்று வருதலால்
இயற்சீர் என்ற பெயரில் வருமே.
அகவல் ஓசை தாங்கி வருவதால்
அகவற் சீரெனும் பெயரில் வருமே.
அகவல் பயிலும் ஆசிரியப் பாவிற்
குரிய சீரென் றாகும் இதுவே
ஆசிரிய வுரிச்சீர் என்றும் பெயர்பெறும்.
இயற்சீர் மட்டுமே அமைந்த குறள்:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
இந்தக் குறளை அலகிட வருவது
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
புளிமா புளிமா மலர்-என அறிக.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.45. ஈரசைச் சீர் பயிற்சி
நினைவிற் கொள்ள:
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
என்பன ஈரசைச் சீர்கள் அமைப்பு.
பயிற்சி 1. சீர் காணல்
கீழ்வரும் குறளின் சீர்களை அறியவும்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பயிற்சி 2. சீர் நிரல் வர அமைத்தல்
கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்ற நிரலில் பொருளுடன் அமைந்து
மூன்று அடிகள் வருமாறு எழுதுக.
நேசம் பாசம் மிகுந்த வாய்க்கால் களிப்புறும் வருவதுன்
தகப்பனால் வரப்பில் மாமனே ஆவதே மிகுந்தால் நெஞ்சமே
பயிற்சி 3. ஒருசீர் ஒருமுறை
இயற்சீர் நான்கும் இயன்றிடு மாறு
சொற்றொட ரொன்றோ வாக்கிய மொன்றோ
ஒருசீர் ஒருமுறை வருமா றெழுதுக.
கீழ்வரும் அடியினைச் சான்றெனக் கொள்க:
ஆவினம் திரும்பிடும் மாலைப் பொழுதில்
கூவிளம் கருவிளம் தேமா புளிமா
பயிற்சி 4. அனைத்தும் ஒரே சீர்
ஒரேவகை ஈரசைச் சீர்வரு மாறு
ஈரசைச் சீர்கள் நான்கினை வைத்து
நாற்சீர் கொண்ட அளவடி எழுதுக.
சான்றாகக் கீழ்வரும் வரிகளைக் கொள்க:
கொன்றால் பாவம் தின்றால் போச்சு
தேமா தேமா தேமா தேமா
பயிற்சி 5. கண்ணதாசன் திரைப் பாடல்
கீழ்வரும் கண்ணதாசனின் புகழ்பெற்ற திரைப்பாடல் வரிகளின்
யாப்பிலக்கணத் தனிச்சிறப்பென்ன?
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.
இதேபோல இரண்டு வரிகள் எழுத முயலவும்.
பயிற்சி 6. செய்யுளடி புனைதல்
’செல்வர் செழுமை,கிளை தாங்கு அழகு’
இந்தச் சொற்களை வைத்து இயற்றுக
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்ற நிரலில் நடந்திடும் அடியே.
*****
நினைவிற் கொள்ள:
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
என்பன ஈரசைச் சீர்கள் அமைப்பு.
பயிற்சி 1. சீர் காணல்
கீழ்வரும் குறளின் சீர்களை அறியவும்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பயிற்சி 2. சீர் நிரல் வர அமைத்தல்
கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்ற நிரலில் பொருளுடன் அமைந்து
மூன்று அடிகள் வருமாறு எழுதுக.
நேசம் பாசம் மிகுந்த வாய்க்கால் களிப்புறும் வருவதுன்
தகப்பனால் வரப்பில் மாமனே ஆவதே மிகுந்தால் நெஞ்சமே
பயிற்சி 3. ஒருசீர் ஒருமுறை
இயற்சீர் நான்கும் இயன்றிடு மாறு
சொற்றொட ரொன்றோ வாக்கிய மொன்றோ
ஒருசீர் ஒருமுறை வருமா றெழுதுக.
கீழ்வரும் அடியினைச் சான்றெனக் கொள்க:
ஆவினம் திரும்பிடும் மாலைப் பொழுதில்
கூவிளம் கருவிளம் தேமா புளிமா
பயிற்சி 4. அனைத்தும் ஒரே சீர்
ஒரேவகை ஈரசைச் சீர்வரு மாறு
ஈரசைச் சீர்கள் நான்கினை வைத்து
நாற்சீர் கொண்ட அளவடி எழுதுக.
சான்றாகக் கீழ்வரும் வரிகளைக் கொள்க:
கொன்றால் பாவம் தின்றால் போச்சு
தேமா தேமா தேமா தேமா
பயிற்சி 5. கண்ணதாசன் திரைப் பாடல்
கீழ்வரும் கண்ணதாசனின் புகழ்பெற்ற திரைப்பாடல் வரிகளின்
யாப்பிலக்கணத் தனிச்சிறப்பென்ன?
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.
இதேபோல இரண்டு வரிகள் எழுத முயலவும்.
பயிற்சி 6. செய்யுளடி புனைதல்
’செல்வர் செழுமை,கிளை தாங்கு அழகு’
இந்தச் சொற்களை வைத்து இயற்றுக
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்ற நிரலில் நடந்திடும் அடியே.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.45. ஈரசைச் சீர் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. சீர் காணல்: விடை
மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ் வார்.
நிரைநிரை நேர்நிரை நேர்நிரை நேர்நேர்
நிரைநிரை நேர்நிரை நேர்
கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் கூவிளம் நாள்
பயிற்சி 2. சீர் நிரல் வர அமைத்தல்: விடை
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
வாய்க்கால் வரப்பில் வருவதுன் மாமனே
பாசம் மிகுந்த தகப்பனால் ஆவதே
நேசம் மிகுந்தால் களிப்புறும் நெஞ்சமே
பயிற்சி 3. ஒருசீர் ஒருமுறை: விடை
என்வழி தனிவழி உனக்கேன் கோபம்?
கூவிளம் கருவிளம் புளிமா தேமா
வழியிலோர் பெரிய பாம்பினைப் பார்த்தேன்
கருவிளம் புளிமா கூவிளம் தேமா
சொற்களின் வீரம் செயல்தனில் வருமோ?
கூவிளம் தேமா கருவிளம் புளிமா
பயிற்சி 4. அனைத்தும் ஒரே சீர்: விடை
கீழ்வரும் அடிகள் எல்லாம் தேமா:
ஒன்றே ஒன்று என்றும் உண்டு
வண்டு வந்து உண்ணும் பூவில்
காதல் கானல் நீரா காது
கீழ்வரும் அடிகள் எல்லாம் புளிமா:
பசுமை மரங்கள் அடர்ந்த வனமாம்
கவிஞன் இலக்கு ரசிகன் இதயம்
அடித்துத் துவைத்து உலர்த்து துணியை
கீழ்வரும் அடிகள் எல்லாம் கருவிளம்:
மலரதன் மணத்தினில் மகிழ்ந்திடும் மனமிது
புலவரும் கலைஞரும் புகழ்ந்திடும் புரவலன்
குழலினும் இனியது குழந்தைகள் மிழற்றுதல்
[’குழந்தைகள்’ என்ற சொல்லில் ஐகாரக் குறுக்கம் பயில்வதால்
’குழந்தகள்’ போல் ஒலித்து ஈரசைச் சீரே ஆகும்.
இதனால் குறுக்கங்கள் உள்ள சீர்களை கவனித்து அலகிட வேண்டும்.]
கீழ்வரும் அடிகள் எல்லாம் கூவிளம்:
கெஞ்சினால் மிஞ்சுவான் மிஞ்சினால் கெஞ்சுவான்
அன்னமும் நாணிடும் மென்னடை கொண்டவள்
ஏழையின் சொல்லிது அம்பலம் ஏறுமோ?
பயிற்சி 5. கண்ணதாசன் திரைப் பாடல்: விடை
கீழ்வரும் கண்ணதாசனின் புகழ்பெற்ற திரைப்பாடல் வரிகளின்
யாப்பிலக்கணத் தனிச்சிறப்பென்ன?
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.
ஈரசைச் சீர்கள் எல்லாமே தேமாவாக வருவது.
(பாடலின் இறுதிவரை இவ்வாறு வருகிறதா என்று அறிந்திடுக.)
இதேபோல இரண்டு வரிகள் எழுத முயலவும்.
இரண்டு வரிகள் மட்டுந்தான் என்றால் எளிதில் முடிவதே:
அன்னை தந்தை ஆசி தந்து
நாங்கள் இன்று நன்றாய் உள்ளோம்.
வந்தால் கோழி இன்றேல் முட்டை
கொன்றால் பாவம் தின்றால் போச்சு.
நானும் நீயும் பார்க்கும் வேலை
வேறு யாரும் பார்க்க லாகும்?
ஆலும் வேலும் பல்லுக் காகும்
நாலும் ரெண்டும் சொல்லுக் காகும்.
பயிற்சி 6. செய்யுளடி புனைதல்: விடை
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
*****
பயிற்சி 1. சீர் காணல்: விடை
மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ் வார்.
நிரைநிரை நேர்நிரை நேர்நிரை நேர்நேர்
நிரைநிரை நேர்நிரை நேர்
கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் கூவிளம் நாள்
பயிற்சி 2. சீர் நிரல் வர அமைத்தல்: விடை
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
வாய்க்கால் வரப்பில் வருவதுன் மாமனே
பாசம் மிகுந்த தகப்பனால் ஆவதே
நேசம் மிகுந்தால் களிப்புறும் நெஞ்சமே
பயிற்சி 3. ஒருசீர் ஒருமுறை: விடை
என்வழி தனிவழி உனக்கேன் கோபம்?
கூவிளம் கருவிளம் புளிமா தேமா
வழியிலோர் பெரிய பாம்பினைப் பார்த்தேன்
கருவிளம் புளிமா கூவிளம் தேமா
சொற்களின் வீரம் செயல்தனில் வருமோ?
கூவிளம் தேமா கருவிளம் புளிமா
பயிற்சி 4. அனைத்தும் ஒரே சீர்: விடை
கீழ்வரும் அடிகள் எல்லாம் தேமா:
ஒன்றே ஒன்று என்றும் உண்டு
வண்டு வந்து உண்ணும் பூவில்
காதல் கானல் நீரா காது
கீழ்வரும் அடிகள் எல்லாம் புளிமா:
பசுமை மரங்கள் அடர்ந்த வனமாம்
கவிஞன் இலக்கு ரசிகன் இதயம்
அடித்துத் துவைத்து உலர்த்து துணியை
கீழ்வரும் அடிகள் எல்லாம் கருவிளம்:
மலரதன் மணத்தினில் மகிழ்ந்திடும் மனமிது
புலவரும் கலைஞரும் புகழ்ந்திடும் புரவலன்
குழலினும் இனியது குழந்தைகள் மிழற்றுதல்
[’குழந்தைகள்’ என்ற சொல்லில் ஐகாரக் குறுக்கம் பயில்வதால்
’குழந்தகள்’ போல் ஒலித்து ஈரசைச் சீரே ஆகும்.
இதனால் குறுக்கங்கள் உள்ள சீர்களை கவனித்து அலகிட வேண்டும்.]
கீழ்வரும் அடிகள் எல்லாம் கூவிளம்:
கெஞ்சினால் மிஞ்சுவான் மிஞ்சினால் கெஞ்சுவான்
அன்னமும் நாணிடும் மென்னடை கொண்டவள்
ஏழையின் சொல்லிது அம்பலம் ஏறுமோ?
பயிற்சி 5. கண்ணதாசன் திரைப் பாடல்: விடை
கீழ்வரும் கண்ணதாசனின் புகழ்பெற்ற திரைப்பாடல் வரிகளின்
யாப்பிலக்கணத் தனிச்சிறப்பென்ன?
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.
ஈரசைச் சீர்கள் எல்லாமே தேமாவாக வருவது.
(பாடலின் இறுதிவரை இவ்வாறு வருகிறதா என்று அறிந்திடுக.)
இதேபோல இரண்டு வரிகள் எழுத முயலவும்.
இரண்டு வரிகள் மட்டுந்தான் என்றால் எளிதில் முடிவதே:
அன்னை தந்தை ஆசி தந்து
நாங்கள் இன்று நன்றாய் உள்ளோம்.
வந்தால் கோழி இன்றேல் முட்டை
கொன்றால் பாவம் தின்றால் போச்சு.
நானும் நீயும் பார்க்கும் வேலை
வேறு யாரும் பார்க்க லாகும்?
ஆலும் வேலும் பல்லுக் காகும்
நாலும் ரெண்டும் சொல்லுக் காகும்.
பயிற்சி 6. செய்யுளடி புனைதல்: விடை
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
*****
- Sponsored content
Page 6 of 29 • 1 ... 5, 6, 7 ... 17 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 29