புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 1:26 pm

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
53 Posts - 41%
heezulia
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
29 Posts - 23%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
304 Posts - 50%
heezulia
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
59 Posts - 10%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
21 Posts - 3%
prajai
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10கவிதையில் யாப்பு - Page 16 Poll_m10கவிதையில் யாப்பு - Page 16 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 16 of 29 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 22 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 10:08 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 19, 2013 9:06 pm

5.23. மூன்றாம் எழுத்தொன் றெதுகை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாவ தல்லாமல்
அடிமுதற் சீரின் மூன்றாம் எழுத்துடன்
அடிபிற முதற்சீர் தன்னடி பிறசீர்
ஒன்றுதல் மூன்றாம் எழுத்தொன் றெதுகை.


’உமாவும் கலாவும் விழாவுக்குச் சென்றனர்’
’பாடுவது நாலுவகை காணுவது ஆறுவகை’
தொடர்களின் எதுகை மூன்றில் ஒன்றுமே.
கீழ்வரும் குறளின் முதலிரு சீர்களில்
மூன்றில் ஒன்றும் அடியெதுகை காண்க.

சான்று (குறள் வெண்பா)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
---திருக்குறள் 005:05

5.24. வழியெதுகை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்து
சீர்பல வற்றில் ஒன்றி வருதல்
வழியெது கையென அழைக்கப் படுமே.


சான்று (குறள் வெண்பா)
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10

காரணம் இன்றி வழியெதுகை அமைத்தால்
சொற்களின் ஆட்சியில் பொருள்தடு மாறுமென
கற்றுக் குட்டிகள் கற்றிட வேண்டுமே.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Apr 22, 2013 11:34 am

5.25. ஆசிடையிட்ட எதுகை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆசு என்றால் பற்றுக் கோடு.
ஆசிடுதல் என்றால் பொன்னின் துகள்களைப்
பற்ற வைத்துப் பொன்னணி செய்தல்
பற்றாசு என்று இதனைச் சொல்வர்
பட்டாசு என்பது பற்றாசின் திரிபோ?

முதல்தர எதுகை முடியா விட்டால்
கருத்தைச் சொல்லிட ’ய-ர ல-ழ’
எழுத்தின் ஒற்றிளால் ’பற்ற வைத்தலே’
ஆசிடை யிட்ட எதுகை என்பது.
இந்த நான்கு ஒற்றுகள் இடைவரினும்
ஓசை கெடாது என்பது செய்தி.


’வாய்மை-தீமை’, ’சாக்கிடை ஊர்க்கிடை’
’தாவாதே கால்வாயை’, ’யாழ்வகை பாவகை’
தொடர்களில் ஒற்றுகள் ஆசிடுவது காண்க.

அடியிடை பயிலும் ஆசிடை எதுகை:
மெய்யெலாம் புள்ளிருக்கும் வேளூரா உன்னையிந்தத்
தையலா ளெப்படிச் சேர்ந்தாள்?
---காளமேகப் புலவர், வைத்தீஸ்வரன் கோயில் இறைவனைக் குறித்து.

சொக்கன் மதுரையினில் தொண்டர்க்குன் அவிழ்ந்த
பொய்க்குதிரை சந்தைக்குப் போகுமதோ?
---காளமேகப் புலவர், வசையும் வசைமீட்சியும்

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Apr 24, 2013 6:54 pm

5.26. எதுகைப் பயிற்சி

நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியின் முதலெழுத் தளவொத் திருக்க
அடியின் முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியின் பிறசீர் இரண்டாம் எழுத்தும்
பிறவடி முதற்சீர் இரண்டாம் எழுத்தும்
உறவுடன் வருவது எதுகை யாகுமே.

1 என்பது அடிவிகற்ப மாகுமே
1 2 இணைவிகற்ப மாகுமே
1 3 பொழிப்பெனப் படுமே
1 4 ஒரூஉவெனப் படுமே
1 2 3 கூழையே
1 3 4 மேற்கதுவாய்
1 2 4 கீழ்க்கதுவாய்
1 2 3 4
முற்றெனும் விகற்பம் பெற்று வருமே.

பயிற்சி 1. முதல்தர எதுகை விகற்பங்கள் அறிதல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் பாடலின் முதலே(ழு) அடிகளில்
ஏழு விகற்பத்தில் எதுகைகள் வருவன
இணைமுதல் முற்றே இறுதி யென்ற
கணக்கில் அறிந்து கோடுகள் நிரம்பிடக்
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துச்
செய்யுள் அடிகளைப் பூர்த்தி செய்யவும்.

பன்மலர்க் துன்னிய துன்னுவித்(து) புன்னை
மென்பெடை மின்னிடை அன்ன மன்னிய
இன்னடை நன்னலம் இன்னிழல்

பொன்னின் ----- பொறிசுணங்கு ஏந்திப்
பன்னருங் கோங்கின் ----- கவற்றி
மின்னவிர் ஒளிவடம் தாங்கி -----
நன்னிற மென்முலை ----- வருத்தி
என்னையும் இடுக்கண் ----- -----
அன்ன ----- போலப் -----
கன்னியம் ----- ----- -----
மயிலேய் சாயலவ் வாள்நுதல்
அயில்வேல் உண்கணெம் அறிவுதொலைத் தனவே.
--யா.கா.மே.கோ.20


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 26, 2013 7:48 pm

5.26. எதுகைப் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. முதல்தர எதுகை விகற்பங்கள் அறிதல்: விடை


பொன்னின் அன்ன பொறிசுணங்கு ஏந்திப் இணை
பன்னருங் கோங்கின் நன்னலம் கவற்றி பொழிப்பு
மின்னவிர் ஒளிவடம் தாங்கி மன்னிய ஒரூஉ
நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி கூழை
என்னையும் இடுக்கண் துன்னுவித்(து) இன்னடை மேற்கதுவாய்
அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் கீழ்க்கதுவாய்
கன்னியம் புன்னை இன்னிழல் துன்னிய முற்று
மயிலேய் சாயலவ் வாள்நுதல்
அயில்வேல் உண்கணெம் அறிவுதொலைத் தனவே.
--யா.கா.மே.கோ.20


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 02, 2013 9:29 pm

பயிற்சி 2. முதல்தர எதுகை விகற்பங்கள் அறிதல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஏழு அடியுள்ள கீழ்வரும் பாடலில்
ஏழு விகற்பத்தில் எதுகைகள் வருவன
இணைமுதல் முற்றே இறுதி யென்ற
கணக்கில் அறிந்து கோடுகள் நிரம்பிடக்
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துச்
செய்யுள் அடிகளைப் பூர்த்தி செய்யவும்.

பண்ணும் வண்மையும் திண்ணம் விண்ணையும்
கண்ணென யுண்ட நண்ணுவோம். அண்ணியும்
மண்ணையும் வண்ணம் விண்ணை கண்ணனை

மண்ணை ----- மதனகோ பாலன்
கண்ணில் நிறைந்து ----- யளந்து
பண்ணை இசைக்கும் அடியார் -----
எண்ணியும் ----- ----- பூசைகள்
திண்ணம் ஏற்றே ----- -----
தண்மையும் ----- தழைக்கும் -----
பண்ணுதல் ----- ----- -----


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat May 04, 2013 12:12 pm

பயிற்சி 3. சொற்குறை எதுகை விகற்பங்கள் அறிதல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் அடிகள் ஆறினில் பயிலும்
சொற்குறை எதுகைகள் யாவும் அதன்பின்
கலைந்த நிரலில் அமைந்து உள்ளதைச்
சரிவர அமைத்து அடிகளின் வரிசையில்
பயின்று வந்திடும் எதுகை குறிக்கவும்.

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
கயல்விழி தயையில் உயிர்பெறும் என்மனமே.
திண்ணையில் தங்கத் தஞ்சம் தந்தாளே.
முகிலின் குளிர்ச்சியில் பகலவன் மறையவே.
கனாவினில் உலாவந்து விதைகள் விளைத்தாளே.
வாய்மை தீமையாக ஊழ்மையிலா உலகமே.
கனவினில் உலவியே உறவினள் ஆனாளே.

ஆசிடையிட்ட இன மூன்றாமெழுத்து
வருக்க நெடில் உயிர்



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue May 07, 2013 10:27 am

பயிற்சி 2. முதல்தர எதுகை விகற்பங்கள் அறிதல்: விடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மண்ணை யுண்ட மதனகோ பாலன்இணை
கண்ணில் நிறைந்து விண்ணை யளந்துபொழிப்பு
பண்ணை இசைக்கும் அடியார் கண்ணெனஒரூஉ
எண்ணியும் அண்ணியும் பண்ணும் பூசைகள்கூழை
திண்ணம் ஏற்றே மண்ணையும் விண்ணையும்மேற்கதுவாய்
தண்மையும் வண்மையும் தழைக்கும் வண்ணம்கீழ்க்கதுவாய்
பண்ணுதல் திண்ணம் கண்ணனை நண்ணுவோம்முற்று

ரமணி wrote:பயிற்சி 2. முதல்தர எதுகை விகற்பங்கள் அறிதல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஏழு அடியுள்ள கீழ்வரும் பாடலில்
ஏழு விகற்பத்தில் எதுகைகள் வருவன
இணைமுதல் முற்றே இறுதி யென்ற
கணக்கில் அறிந்து கோடுகள் நிரம்பிடக்
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துச்
செய்யுள் அடிகளைப் பூர்த்தி செய்யவும்.

பண்ணும் வண்மையும் திண்ணம் விண்ணையும்
கண்ணென யுண்ட நண்ணுவோம். அண்ணியும்
மண்ணையும் வண்ணம் விண்ணை கண்ணனை

மண்ணை ----- மதனகோ பாலன்
கண்ணில் நிறைந்து ----- யளந்து
பண்ணை இசைக்கும் அடியார் -----
எண்ணியும் ----- ----- பூசைகள்
திண்ணம் ஏற்றே ----- -----
தண்மையும் ----- தழைக்கும் -----
பண்ணுதல் ----- ----- -----


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue May 07, 2013 11:46 am

பயிற்சி 3. சொற்குறை எதுகை விகற்பங்கள் அறிதல்: விடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கயல்விழி தயையில் உயிர்பெறும் என்மனமே வருக்க
திண்ணையில் தங்கத் தஞ்சம் தந்தாளே[ இன
முகிலின் குளிர்ச்சியில் பகலவன் மறையவே உயிர்
கனாவினில் உலாவந்து விதைகள் விளைத்தாளே நெடில்
வாய்மை தீமையாக ஊழ்மையிலா உலகமே ஆசிடையிட்ட
கனவினில் உலவியே உறவினள் ஆனாளே மூன்றாமெழுத்து

*****
ரமணி wrote:பயிற்சி 3. சொற்குறை எதுகை விகற்பங்கள் அறிதல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் அடிகள் ஆறினில் பயிலும்
சொற்குறை எதுகைகள் யாவும் அதன்பின்
கலைந்த நிரலில் அமைந்து உள்ளதைச்
சரிவர அமைத்து அடிகளின் வரிசையில்
பயின்று வந்திடும் எதுகை குறிக்கவும்.

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
கயல்விழி தயையில் உயிர்பெறும் என்மனமே.
திண்ணையில் தங்கத் தஞ்சம் தந்தாளே.
முகிலின் குளிர்ச்சியில் பகலவன் மறையவே.
கனாவினில் உலாவந்து விதைகள் விளைத்தாளே.
வாய்மை தீமையாக ஊழ்மையிலா உலகமே.
கனவினில் உலவியே உறவினள் ஆனாளே.

ஆசிடையிட்ட இன மூன்றாமெழுத்து
வருக்க நெடில் உயிர்



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue May 07, 2013 11:50 am

5.30. மோனை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மோனை என்றால் முதன்மை எனப்பொருள்
மோனை என்றால் முனையென்றும் சொல்லுவர்
முனைந்து முதலில் நிற்பது மோனை.

5.31. மோனை என்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியின் முதற்சீர் முதலெழுத் துடனே
அடியின் பிறசீர் முதலெழுத் தொன்றியும்
பிறவடி முதற்சீர் முதலெழுத் தொன்றியும்
உறவுடன் வருவது மோனை யாகுமே.


’மலையும் மடுவும்’, ’மாதவன் மாலை’
தொடர்களில் முதலெழுத்து முற்றும் ஒன்றக்
குறில்நெடில் மோனைகள் வருவது காண்க.
பலவகைத் தொடைகளில் எதுகையும் மோனையும்
பாக்களில் வருவது சிறப்பென் றுரைப்பரே.

5.32. மோனை விகற்பங்கள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதுகை போலவே மோனைத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே

மோனைத் தொடைச் சான்றுகள்
(குறள் வெண்பா)

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் ... இணைமோனை
இல்லவள் மாணாக் கடை. ... அடிமோனை
---திருக்குறள் 06:3

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு ... இணைமோனை
யாண்டும் இடும்பை இல.
---திருக்குறள் 01:4

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க ... பொழிப்பு மோனை
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
---திருக்குறள் 01:6

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் ... ஒரூஉ மோனை
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
---திருக்குறள் 05:9

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் ... கூழை மோனை
பற்றுக பற்ற விடற்கு. ... அடிமோனை
---திருக்குறள் 35:9

வானின் றுலகம் வழங்கி வருதலால் ... மேற்கதுவாய் மோனை
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
---திருக்குறள் 2:1

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் ... கீழ்க்கதுவாய் மோனை
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
---திருக்குறள் 1:5

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் ... முற்று மோனை எதுகை
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 2:2


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 09, 2013 7:34 pm

5.33. மோனையின் வேறு பிற வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
செய்யுளில் பொருளின் பெருமை நோக்கி
முற்றிலும் முதலெழுத் தொன்றாத போது
வேறு வகைத்த மோனைகள் வரலாம்.

வருக்கமும் இனமும் உயிரும் நெடிலுமென
வகைத்த எழுத்துகள் மோனை யாகலாம்
மோனைகள் சீர்வழித் தொடர்ந்து வரலாம்
ஈரடிக் கொருமுறை வரலாம் அல்லது
இடையிடை நின்று வரலாம் அத்துடன்
அனுமோ னையென இனத்தில் வரலாம்.

5.34. வருக்க மோனை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வருக்கத்தில் ஒன்றும் வருக்க மோனை,
குறிலொடு குறிலோ நெடிலொடு நெடிலோ
குறில்நெடில் இணைந்தோ வருவ தாகும்.

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
’நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’
-- ஔவையின்
மூதுரையில் புல்-பொசி என்று வருகின்ற
மோனை ப-வருக்கம் காண்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
’ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே’
என்று
ஔவை நல்வழிப் படுத்தும் போது
வீற்-வாழ் என்பது நெடிலொன்றும் மோனை.

’கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்னும்
ஔவையின் மூதுரையில் கற்-காமு என்று
க-வருக்கக் குறில்நெடில் மோனை காண்க.

*****


Sponsored content

PostSponsored content



Page 16 of 29 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 22 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக