புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதையில் யாப்பு
Page 14 of 29 •
Page 14 of 29 • 1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 29
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.72. பாவின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகள் அடுத்தும் தொடைகள் தொடுத்தும்
வடிவுறும் பாக்கள் இருவகைப் படுமே
பாவே பாவினம் என்பன அவையே.
அறமும் பொருளும் இன்பமும் வீடும்
உறைத்துப் பாவி நடத்தலான் பாவென.
பாவகை யோடொரு ஒத்த இனமாய்
ஒருபுடை யாக வருவது பாவினம். ... [புடை=முறை, ஒழுங்கு]
பாவின் வகைகள்
பாவின் வகைகள் நான்கில் அமையும்:
வெண்பா ஆசிரியம் கலிப்பா வஞ்சியென.
இரண்டில் அடங்கும் நான்கு வகைகளும்
வெண்பா ஆசிரி யப்பா என்றே.
ஆசிரிய நடையைப் போன்றதே வஞ்சி
வெண்பா நடையைப் போன்றதே கலிப்பா.
மருட்பா என்பது ஐந்தாம் வகையாம்.
வெண்பா முதலா ஆசிரியம் இறுதியில்
கொண்டு தொடுப்பது மருட்பா வாகும். ... [யா.வி.]
மேலே சொன்னது போலே பாவகை ... [4.71]
சீர்தளை யடிகளால் வேறுபட் டமையும்
தற்சீர் தன்றளை தன்னடி கொண்டே.
4.73. பாவின் இனங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பாவகை நான்கிலும் இனங்கள் உண்டு
பாவகை ஓசை ஒட்டியே பாவினம்.
பாவின் பொதுவகை இலக்கணம் குறைந்து
பாவினம் பொதுவே அடியால் அமையும்.
’தாழிசை துறையே விருத்தம் என்றிவை
பாவினம் பாவொரு பாற்பட் டியலும்’ ... [யா.வி.]
(இணைக்குறள் ஆசிரியப்பா)
பாவுடன் கூடிப் பாவினம் நடக்கும்
வெண்டாழிசை வெண்டுறை வெளிவிருத்தம் என்றும்
ஆசிரியத் தாழிசை ஆசிரியத் துறை
ஆசிரிய விருத்தம் என்றும்
கலித்தாழிசை கலித்துறை கலிவிருத்தம் என்றும்
வஞ்சித் தாழிசை வஞ்சித் துறை
வஞ்சி விருத்தம் என்றும்
பாவுடன் கூடிப் பாவினம் நடக்குமே.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தாழம் என்பது தாழ்ந்த ஓசை
தத்தம் பாவொடு ஒத்த தாழத்தால்
ஒத்த பொருளால் இசைப்பது தாழிசை.
தத்தம் பாவிற்குத் துறைபோன்று நெறியுடன்
ஒத்து நடக்கும் துறையெனும் பாவினம்
எல்லாத் துறையிலும் இனிது நடக்குமே.
தத்தம் பாவொடு ஒழுக்கத்தில் அடியில்
ஒத்து புராணம் முதலிய விருத்தம்
உரைப்பது விருத்தம் என்னும் பாவினம்.
4.74. பாவகைகள்: அடியும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பாடல் ஒன்றைப் படிக்கும் போது
கண்ணில் தெரிவது பாவின் அடிகள்
காதில் கேட்பது பாவின் ஓசை.
பாவகை இலக்கணம் பயிலும் முன்னர்
பாவகை அடிகளின் அமைப்பும் ஓசையும்
முதலில் தெரிந்து கொள்ளல் வேண்டுமே.
யாப்பின் வழக்கில் குறளென்றால் இரண்டு
சிந்தென்றால் மூன்று அளவென்றால் நான்கு
நெடிலென்றால் ஐந்து கழிநெடி லென்றால்
ஐந்தின் அதிகம் என்று பொருளாகுமே.
(இணைக்குறள் ஆசிரியப்பா)
குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடி லடியென முறையே
இரண்டு மூன்று நான்கு ஐந்து
ஆறும் மேலும் சீர்கள் பெற்று
அடிகளின் வகைகள் ஐந்தில் அமையுமே.
(குறள் வெண்செந்துறை)
வெண்பா அகவல் கலிப்பா அளவடி .. [அகவல்=ஆசிரியப்பா]
வஞ்சியெனும் ஒண்பா குறளடி சிந்தடி. ... [யா.கா.21]
(நிலைமண்டில ஆசிரியப்பா)
’திண்பாமலி செப்பல்’என வெண்பா விற்கும்
’சீர்சால் அகவல்’என அகவற்பா விற்கும்
’சென்றோங்கு துள்ளல்’என கலிப்பா விற்கும்
’நலமிகு தூங்கல்’என வஞ்சிப்பா விற்கும்
ஓசைகள் கூறிக் காரிகை விளக்குமே.
ஓசைகள் பெரிதும் தளைகள் மூலமே.
ஆசிரி யத்தளை அகவல் ஒலிக்கும்
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும்
கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும்
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்கும்
தளைகளின் விளக்கம் மேலே அறிக. ... [4.50.]
அடிப்படை உறுப்பினில் பாவகை நோக்குமுன்
தொடையெனும் உறுப்பின் தொடுப்புகள் காண்போம்
எதுகை மோனை இயைபு முரணிவை
எதுவும் இல்லாத கவிதை இல்லையே
உரைநடை வழக்கிலும் தொடைகள் உண்டே.
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகள் அடுத்தும் தொடைகள் தொடுத்தும்
வடிவுறும் பாக்கள் இருவகைப் படுமே
பாவே பாவினம் என்பன அவையே.
அறமும் பொருளும் இன்பமும் வீடும்
உறைத்துப் பாவி நடத்தலான் பாவென.
பாவகை யோடொரு ஒத்த இனமாய்
ஒருபுடை யாக வருவது பாவினம். ... [புடை=முறை, ஒழுங்கு]
பாவின் வகைகள்
பாவின் வகைகள் நான்கில் அமையும்:
வெண்பா ஆசிரியம் கலிப்பா வஞ்சியென.
இரண்டில் அடங்கும் நான்கு வகைகளும்
வெண்பா ஆசிரி யப்பா என்றே.
ஆசிரிய நடையைப் போன்றதே வஞ்சி
வெண்பா நடையைப் போன்றதே கலிப்பா.
மருட்பா என்பது ஐந்தாம் வகையாம்.
வெண்பா முதலா ஆசிரியம் இறுதியில்
கொண்டு தொடுப்பது மருட்பா வாகும். ... [யா.வி.]
மேலே சொன்னது போலே பாவகை ... [4.71]
சீர்தளை யடிகளால் வேறுபட் டமையும்
தற்சீர் தன்றளை தன்னடி கொண்டே.
4.73. பாவின் இனங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பாவகை நான்கிலும் இனங்கள் உண்டு
பாவகை ஓசை ஒட்டியே பாவினம்.
பாவின் பொதுவகை இலக்கணம் குறைந்து
பாவினம் பொதுவே அடியால் அமையும்.
’தாழிசை துறையே விருத்தம் என்றிவை
பாவினம் பாவொரு பாற்பட் டியலும்’ ... [யா.வி.]
(இணைக்குறள் ஆசிரியப்பா)
பாவுடன் கூடிப் பாவினம் நடக்கும்
வெண்டாழிசை வெண்டுறை வெளிவிருத்தம் என்றும்
ஆசிரியத் தாழிசை ஆசிரியத் துறை
ஆசிரிய விருத்தம் என்றும்
கலித்தாழிசை கலித்துறை கலிவிருத்தம் என்றும்
வஞ்சித் தாழிசை வஞ்சித் துறை
வஞ்சி விருத்தம் என்றும்
பாவுடன் கூடிப் பாவினம் நடக்குமே.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தாழம் என்பது தாழ்ந்த ஓசை
தத்தம் பாவொடு ஒத்த தாழத்தால்
ஒத்த பொருளால் இசைப்பது தாழிசை.
தத்தம் பாவிற்குத் துறைபோன்று நெறியுடன்
ஒத்து நடக்கும் துறையெனும் பாவினம்
எல்லாத் துறையிலும் இனிது நடக்குமே.
தத்தம் பாவொடு ஒழுக்கத்தில் அடியில்
ஒத்து புராணம் முதலிய விருத்தம்
உரைப்பது விருத்தம் என்னும் பாவினம்.
4.74. பாவகைகள்: அடியும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பாடல் ஒன்றைப் படிக்கும் போது
கண்ணில் தெரிவது பாவின் அடிகள்
காதில் கேட்பது பாவின் ஓசை.
பாவகை இலக்கணம் பயிலும் முன்னர்
பாவகை அடிகளின் அமைப்பும் ஓசையும்
முதலில் தெரிந்து கொள்ளல் வேண்டுமே.
யாப்பின் வழக்கில் குறளென்றால் இரண்டு
சிந்தென்றால் மூன்று அளவென்றால் நான்கு
நெடிலென்றால் ஐந்து கழிநெடி லென்றால்
ஐந்தின் அதிகம் என்று பொருளாகுமே.
(இணைக்குறள் ஆசிரியப்பா)
குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடி லடியென முறையே
இரண்டு மூன்று நான்கு ஐந்து
ஆறும் மேலும் சீர்கள் பெற்று
அடிகளின் வகைகள் ஐந்தில் அமையுமே.
(குறள் வெண்செந்துறை)
வெண்பா அகவல் கலிப்பா அளவடி .. [அகவல்=ஆசிரியப்பா]
வஞ்சியெனும் ஒண்பா குறளடி சிந்தடி. ... [யா.கா.21]
(நிலைமண்டில ஆசிரியப்பா)
’திண்பாமலி செப்பல்’என வெண்பா விற்கும்
’சீர்சால் அகவல்’என அகவற்பா விற்கும்
’சென்றோங்கு துள்ளல்’என கலிப்பா விற்கும்
’நலமிகு தூங்கல்’என வஞ்சிப்பா விற்கும்
ஓசைகள் கூறிக் காரிகை விளக்குமே.
ஓசைகள் பெரிதும் தளைகள் மூலமே.
ஆசிரி யத்தளை அகவல் ஒலிக்கும்
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும்
கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும்
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்கும்
தளைகளின் விளக்கம் மேலே அறிக. ... [4.50.]
அடிப்படை உறுப்பினில் பாவகை நோக்குமுன்
தொடையெனும் உறுப்பின் தொடுப்புகள் காண்போம்
எதுகை மோனை இயைபு முரணிவை
எதுவும் இல்லாத கவிதை இல்லையே
உரைநடை வழக்கிலும் தொடைகள் உண்டே.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
5. யாப்பு விவரணம்: செயல்வகை உறுப்புகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முன்பே சொன்னதை நினைவில் கொணர
யாப்பும் தூக்கும் தொடையும் மாட்டும்
வண்ணம் இயைபு இழைபு என்று
செயல்வகை உறுப்புகள் ஏழெனத் தெரியுமே. [பார்க்க 2.2., 2.3.]
அழகும் மகிழ்ச்சியும் ஐந்தில் அமையும்:
தொடையும் மாட்டும் வண்ணம் இயைபு
தேர்ந்த சொற்களின் நடையில் இழைபு.
செய்யுள் செயல்வகை இரண்டில் அமையும்:
வடிவம் யாப்பில் மதிப்பு தூக்கில். [பார்க்க 2.6.]
5.1. தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தொடையெனும் சொல்லின் பொதுவான பொருளே
தொடையின் பங்கினைச் செய்யுளில் காட்டும்.
பின்னுகை தொடர்ச்சி கட்டுகை மாலைவடம்
கொத்து பூமாலை யாழ்நரம்பு அம்பு
படிக்கட்டு எனவரும் பொதுப்பொருள் நோக்கியே
தொடையெனும் அழகிய பெயர்வந் ததுவோ?
5.2. தொடையென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலடி முதற்சீர் வருமெழுத் துகளை
பலவடி களிலோ பலசீர் களிலோ
ஒன்றிடத் தொடுப்பது தொடையெனப் படுமே.
அடியிடைச் சீரிடை வருவ(து) ஆயினும்
அடியிடைத் தொடுப்பினை முன்னால் வைத்தே
’தொடையே அடியிரண் டியையத் தோன்றும்’என
தொடையின் இலக்கணம் யா.கலம் கூறுமே. ... [யா.கலம் = யாப்பருங்கல விருத்தி]
வகையில் ஒன்று வண்ணத்தில் ஒன்றென
விதவித இழைகள் வெளிவர உட்செலப்
பாங்காய்ப் பின்னிடும் பின்னல் போல
முதலில் இடையில் கடையில் என்று
எழுத்துகள் ஒன்றப் பின்னுகை தொடையாம்.
இடைவெளி விட்டோ பிளவே இன்றியோ
படரும் எழுத்துகள் சீரிடை அடியிடைத்
தொடர்ச்சியாய் ஒன்றத் தொடைகள் தோன்றுமே.
இப்படி வந்தால் பிளவறத் தொடுப்பது:
மின்னிடும் மேகலை மின்னல் மங்கை.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
இப்படி வந்தால் பிளவுறத் தொடுப்பது:
மாலைப் பொழுதில் சாலை மருங்கில்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு.
கொத்தாய்க் கிடக்கும் பலவித சொற்களை
ஒத்த வகைகளில் இயைத்துக் கட்டிப்
பூமாலை யொன்றில் பின்னிய பூக்களாய்ப்
பாமாலை யாக்கிப் பார்க்கவும் கேட்கவும்
யாழ்நரம் பொலிபோல் யாப்பின் ஓசையில்
ஆழித் தேராம் செய்யுளை இழுக்கும்
மாலை வடமெனத் தொடைகள் செயல்படும்.
’அன்றும் இன்றும் என்றும் ஒன்றே’
என்ற தொடரில் இன்ற-ஒலி ஊடுருவி
அம்பெனத் துளைக்கும் தொடைவரப் பொருளினை
அவிழ்த்துக் காட்டுதல் காணுதல் தவறுமோ?
’மலரது மலர்ந்திட மலர்ந்திடும் முகமே!’
மலரும் முகமும் விரிவதைத் தொடரில்
படிப்படி யாகத் தொடுத்தது காண்பீர்!
தொடையெனும் சொல்லின் பொதுப்பொருள் இப்படி
அடைவில் வந்து தொடையெனும் உறுப்பால்
படரும் இலக்கிய உத்திகள் சுட்டுமே.
தொடையின் பங்கு செய்யுளில் யாதெனின்
தொடுக்கும் உத்திகள் அடுக்கி வந்தே
செய்யுளின் ஓசையில் இனிமை கூட்டிச்
செய்யுளை மனதில் பதிய வைக்குமே.
இன்றைய புதுமைக் கவிதை வடிவிலும்
இலக்கணம் விடுத்தும் தொடைகளை விடுகிலர்
தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்
என்னும் பழமொழி இதனை விளக்குமே
இயலிசை நாடகம் முத்தமிழ் அனைதிலும்
இனிமை கூட்ட வருவது தொடைகளே.
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முன்பே சொன்னதை நினைவில் கொணர
யாப்பும் தூக்கும் தொடையும் மாட்டும்
வண்ணம் இயைபு இழைபு என்று
செயல்வகை உறுப்புகள் ஏழெனத் தெரியுமே. [பார்க்க 2.2., 2.3.]
அழகும் மகிழ்ச்சியும் ஐந்தில் அமையும்:
தொடையும் மாட்டும் வண்ணம் இயைபு
தேர்ந்த சொற்களின் நடையில் இழைபு.
செய்யுள் செயல்வகை இரண்டில் அமையும்:
வடிவம் யாப்பில் மதிப்பு தூக்கில். [பார்க்க 2.6.]
5.1. தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தொடையெனும் சொல்லின் பொதுவான பொருளே
தொடையின் பங்கினைச் செய்யுளில் காட்டும்.
பின்னுகை தொடர்ச்சி கட்டுகை மாலைவடம்
கொத்து பூமாலை யாழ்நரம்பு அம்பு
படிக்கட்டு எனவரும் பொதுப்பொருள் நோக்கியே
தொடையெனும் அழகிய பெயர்வந் ததுவோ?
5.2. தொடையென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலடி முதற்சீர் வருமெழுத் துகளை
பலவடி களிலோ பலசீர் களிலோ
ஒன்றிடத் தொடுப்பது தொடையெனப் படுமே.
அடியிடைச் சீரிடை வருவ(து) ஆயினும்
அடியிடைத் தொடுப்பினை முன்னால் வைத்தே
’தொடையே அடியிரண் டியையத் தோன்றும்’என
தொடையின் இலக்கணம் யா.கலம் கூறுமே. ... [யா.கலம் = யாப்பருங்கல விருத்தி]
வகையில் ஒன்று வண்ணத்தில் ஒன்றென
விதவித இழைகள் வெளிவர உட்செலப்
பாங்காய்ப் பின்னிடும் பின்னல் போல
முதலில் இடையில் கடையில் என்று
எழுத்துகள் ஒன்றப் பின்னுகை தொடையாம்.
இடைவெளி விட்டோ பிளவே இன்றியோ
படரும் எழுத்துகள் சீரிடை அடியிடைத்
தொடர்ச்சியாய் ஒன்றத் தொடைகள் தோன்றுமே.
இப்படி வந்தால் பிளவறத் தொடுப்பது:
மின்னிடும் மேகலை மின்னல் மங்கை.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
இப்படி வந்தால் பிளவுறத் தொடுப்பது:
மாலைப் பொழுதில் சாலை மருங்கில்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு.
கொத்தாய்க் கிடக்கும் பலவித சொற்களை
ஒத்த வகைகளில் இயைத்துக் கட்டிப்
பூமாலை யொன்றில் பின்னிய பூக்களாய்ப்
பாமாலை யாக்கிப் பார்க்கவும் கேட்கவும்
யாழ்நரம் பொலிபோல் யாப்பின் ஓசையில்
ஆழித் தேராம் செய்யுளை இழுக்கும்
மாலை வடமெனத் தொடைகள் செயல்படும்.
’அன்றும் இன்றும் என்றும் ஒன்றே’
என்ற தொடரில் இன்ற-ஒலி ஊடுருவி
அம்பெனத் துளைக்கும் தொடைவரப் பொருளினை
அவிழ்த்துக் காட்டுதல் காணுதல் தவறுமோ?
’மலரது மலர்ந்திட மலர்ந்திடும் முகமே!’
மலரும் முகமும் விரிவதைத் தொடரில்
படிப்படி யாகத் தொடுத்தது காண்பீர்!
தொடையெனும் சொல்லின் பொதுப்பொருள் இப்படி
அடைவில் வந்து தொடையெனும் உறுப்பால்
படரும் இலக்கிய உத்திகள் சுட்டுமே.
தொடையின் பங்கு செய்யுளில் யாதெனின்
தொடுக்கும் உத்திகள் அடுக்கி வந்தே
செய்யுளின் ஓசையில் இனிமை கூட்டிச்
செய்யுளை மனதில் பதிய வைக்குமே.
இன்றைய புதுமைக் கவிதை வடிவிலும்
இலக்கணம் விடுத்தும் தொடைகளை விடுகிலர்
தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்
என்னும் பழமொழி இதனை விளக்குமே
இயலிசை நாடகம் முத்தமிழ் அனைதிலும்
இனிமை கூட்ட வருவது தொடைகளே.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
5.3. தொடை வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
செய்யுளின் ஓசையும் இனிமையும் அமைவது
செய்யுளின் சீர்தளை நிரல்கள் பொறுத்தெனில்
சீர்களின் ஓசையைச் செய்வது தொடைகளே.
தொடைகள் எட்டு வகைகளில் வருவன:
மோனை எதுகை முர(ண்)இயைபு அளபெடை
ஆன-யிவ் வைந்துடன் அந்தாதி இரட்டைச்
செந்தொடை யென்றே மேலும் மூன்றே.
மோனை எதுகை முரண்தொடை அளபெடை
நான்கும் அடிகளின் முதற்சீ ருடனும்
இயைபெனும் தொடையே இறுதிச்சீ ருடனும்
தொடர்பு கொண்டு தொடுத்து வருவன.
மோனைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியின் முதற்சீர் முதலெழுத் துடனே
அடியின் பிறசீர் முதலெழுத் தொன்றியும்
பிறவடி முதற்சீர் முதலெழுத் தொன்றியும்
உறவுடன் வருவது மோனை யாகுமே.
சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)
பழகப் பழகப் பாலும் புளிக்கும்
என்னும் அடியில் சீர்களில் மோனையும்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
என்னும் குறளில் அடிமோ னையுடன்
சீர்களில் மோனையும் காணுதல் எளிதே.
எதுகைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியின் முதலெழுத் தளவொத் திருக்க
அடியின் முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியின் பிறசீர் இரண்டாம் எழுத்தும்
பிறவடி முதற்சீர் இரண்டாம் எழுத்தும்
உறவுடன் வருவது எதுகை யாகுமே.
சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)
காலையும் மாலையும் ஆலையில் வேலை
என்னும் அடியில் சீரெது கையும்
நன்றி மறப்பது நன்றன்று நண்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்னும் குறளில் அடியெது கையுடன்
சீர்களில் எதுகையும் காண்பது எளிதே.
முரண் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியின் முதற்சீர் சொல்லோ பொருளொ
அடியின் பிறசீர் களிலோ அன்றி
பிறவடி களில்வரும் முதற்சீ ருடனோ
முரண்படத் தொடுத்து நயம்பெற அமைவது
முரணெனும் தொடைவகை யெனப்பெயர் பெறுமே.
சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)
அல்லும் பகலும் சொல்லி மாளாது
என்னும் அடியில் முதலிரு சீர்களில்
பொருள்முரண் காண்க
வெள்ளாடு மேய்ந்த பசுந்தழை எனும்தொடரில்
நிறத்தில் தழையே பசுமை ஆயினும்
நிறத்தில் வெள்ளாடு வெண்மையன் றாதலால்
பொருள்முர ணின்றிச் சொல்முர ணாகுமே.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
என்னும் குறளில் அடிமுரண் பொருளிலும்
அடியெது கையும் சீர்மோ னையும்காணீர்.
அளபெடைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகளில் முதற்சீர் அளபெடுத் தமைந்து
அளபெடை யெழுத்தின் மாத்திரை நீள்வது
அளபெடைத் தொடையெனும் வகையினில் அமையுமே.
சான்று:
(இணைக்குறள் ஆசிரியப்பா)
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
என்னும் குறளில் அடிகளின் முதற்சீரில்
அளபெடைத் தொடைவரக் காண்பது எளிதே.
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
செய்யுளின் ஓசையும் இனிமையும் அமைவது
செய்யுளின் சீர்தளை நிரல்கள் பொறுத்தெனில்
சீர்களின் ஓசையைச் செய்வது தொடைகளே.
தொடைகள் எட்டு வகைகளில் வருவன:
மோனை எதுகை முர(ண்)இயைபு அளபெடை
ஆன-யிவ் வைந்துடன் அந்தாதி இரட்டைச்
செந்தொடை யென்றே மேலும் மூன்றே.
மோனை எதுகை முரண்தொடை அளபெடை
நான்கும் அடிகளின் முதற்சீ ருடனும்
இயைபெனும் தொடையே இறுதிச்சீ ருடனும்
தொடர்பு கொண்டு தொடுத்து வருவன.
மோனைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியின் முதற்சீர் முதலெழுத் துடனே
அடியின் பிறசீர் முதலெழுத் தொன்றியும்
பிறவடி முதற்சீர் முதலெழுத் தொன்றியும்
உறவுடன் வருவது மோனை யாகுமே.
சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)
பழகப் பழகப் பாலும் புளிக்கும்
என்னும் அடியில் சீர்களில் மோனையும்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
என்னும் குறளில் அடிமோ னையுடன்
சீர்களில் மோனையும் காணுதல் எளிதே.
எதுகைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியின் முதலெழுத் தளவொத் திருக்க
அடியின் முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியின் பிறசீர் இரண்டாம் எழுத்தும்
பிறவடி முதற்சீர் இரண்டாம் எழுத்தும்
உறவுடன் வருவது எதுகை யாகுமே.
சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)
காலையும் மாலையும் ஆலையில் வேலை
என்னும் அடியில் சீரெது கையும்
நன்றி மறப்பது நன்றன்று நண்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்னும் குறளில் அடியெது கையுடன்
சீர்களில் எதுகையும் காண்பது எளிதே.
முரண் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியின் முதற்சீர் சொல்லோ பொருளொ
அடியின் பிறசீர் களிலோ அன்றி
பிறவடி களில்வரும் முதற்சீ ருடனோ
முரண்படத் தொடுத்து நயம்பெற அமைவது
முரணெனும் தொடைவகை யெனப்பெயர் பெறுமே.
சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)
அல்லும் பகலும் சொல்லி மாளாது
என்னும் அடியில் முதலிரு சீர்களில்
பொருள்முரண் காண்க
வெள்ளாடு மேய்ந்த பசுந்தழை எனும்தொடரில்
நிறத்தில் தழையே பசுமை ஆயினும்
நிறத்தில் வெள்ளாடு வெண்மையன் றாதலால்
பொருள்முர ணின்றிச் சொல்முர ணாகுமே.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
என்னும் குறளில் அடிமுரண் பொருளிலும்
அடியெது கையும் சீர்மோ னையும்காணீர்.
அளபெடைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகளில் முதற்சீர் அளபெடுத் தமைந்து
அளபெடை யெழுத்தின் மாத்திரை நீள்வது
அளபெடைத் தொடையெனும் வகையினில் அமையுமே.
சான்று:
(இணைக்குறள் ஆசிரியப்பா)
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
என்னும் குறளில் அடிகளின் முதற்சீரில்
அளபெடைத் தொடைவரக் காண்பது எளிதே.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
அந்தாதித் தொடை
(இணைக்குறள் ஆசிரியப்பா)
அடியொன்றின் அந்தமென முடியும் எழுத்தோ
எழுத்தை உள்ளிட்ட அசையோ
அசையை உள்ளிட்ட சீரொன்றோ
அடுத்த அடியில் முதற்சீரில் முளைத்துத்
தொடர்ந்து வருவ(து) அந்தாதித் தொடையே.
அந்தமே ஆதியென வந்திடும் போது
எழுத்தசைச் சீருடன்
அடியே முழுவதும் திரும்புதல் உண்டு
அடியந் தாதி என்னும் பெயரிலே.
சான்று (இளம்பூரணார் தொல்காப்பிய உரையில் தருவது)
(நேரிசை ஆசிரியப்பா)
உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலிரு அடிகளில் அசையைந் தாதி
இரண்டும் மூன்றும் சீரந் தாதி
மூன்றும் நான்கும் சீரந் தாதி
நான்கும் ஐந்தும் அடியந் தாதி
ஐந்தும் ஆறும் சீரந் தாதி
ஆறும் ஏழும் எழுத்தந் தாதி
ஏழும் எட்டும் எழுத்தந் தாதி
எட்டும் முதலும் சீரந் தாதியே.
இரட்டைத் தொடை
(இணைக்குறள் ஆசிரியப்பா)
’வந்த மொழியே வருவ திரட்டை’ ... (யா.கா.)
அடியில் முதல்வரும் சொல்லே
மற்றச் சீர்களில் திரும்ப வருவது
இரட்டைத் தொடையென அழைக்கப் படுமே.
சான்று
பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
--புறநானூறு 247
செந்தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
மோனை எதுகை இயைபு முரணுடன்
ஏனை அளபெடை அந்தாதி இரட்டைத்
தொடைகள் எதுவுமே அமைந்து வராது
சொற்களின் இயல்பில் அழுகுற அமைவது
செந்தொடை என்னும் பெயரில் வழங்குமே.
சான்று
(நேரிசை ஆசிரியப்பா)
பூத்த வேங்கை வியன்சினை ஏறி,
மயிலினம் அகவும் நாடன்
நன்னுதல் கொடிச்சி மனத்தகத் தோனே
--யா.கா.மேற்கோள்
*****
(இணைக்குறள் ஆசிரியப்பா)
அடியொன்றின் அந்தமென முடியும் எழுத்தோ
எழுத்தை உள்ளிட்ட அசையோ
அசையை உள்ளிட்ட சீரொன்றோ
அடுத்த அடியில் முதற்சீரில் முளைத்துத்
தொடர்ந்து வருவ(து) அந்தாதித் தொடையே.
அந்தமே ஆதியென வந்திடும் போது
எழுத்தசைச் சீருடன்
அடியே முழுவதும் திரும்புதல் உண்டு
அடியந் தாதி என்னும் பெயரிலே.
சான்று (இளம்பூரணார் தொல்காப்பிய உரையில் தருவது)
(நேரிசை ஆசிரியப்பா)
உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலிரு அடிகளில் அசையைந் தாதி
இரண்டும் மூன்றும் சீரந் தாதி
மூன்றும் நான்கும் சீரந் தாதி
நான்கும் ஐந்தும் அடியந் தாதி
ஐந்தும் ஆறும் சீரந் தாதி
ஆறும் ஏழும் எழுத்தந் தாதி
ஏழும் எட்டும் எழுத்தந் தாதி
எட்டும் முதலும் சீரந் தாதியே.
இரட்டைத் தொடை
(இணைக்குறள் ஆசிரியப்பா)
’வந்த மொழியே வருவ திரட்டை’ ... (யா.கா.)
அடியில் முதல்வரும் சொல்லே
மற்றச் சீர்களில் திரும்ப வருவது
இரட்டைத் தொடையென அழைக்கப் படுமே.
சான்று
பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
--புறநானூறு 247
செந்தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
மோனை எதுகை இயைபு முரணுடன்
ஏனை அளபெடை அந்தாதி இரட்டைத்
தொடைகள் எதுவுமே அமைந்து வராது
சொற்களின் இயல்பில் அழுகுற அமைவது
செந்தொடை என்னும் பெயரில் வழங்குமே.
சான்று
(நேரிசை ஆசிரியப்பா)
பூத்த வேங்கை வியன்சினை ஏறி,
மயிலினம் அகவும் நாடன்
நன்னுதல் கொடிச்சி மனத்தகத் தோனே
--யா.கா.மேற்கோள்
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
5.4. தொடை விகற்பங்கள்
நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தொடைகள் எட்டு வகைகளில் வருவன:
மோனை எதுகை முர(ண்)இயைபு அளபெடை
ஆன-யிவ் வைந்துடன் அந்தாதி இரட்டைச்
செந்தொடை யென்றே மேலும் மூன்றே.
வகையொன் றதுவே வேறு படுதலே
விகற்பம் என்னும் பெயரால் வழங்குமே
மேலே சொன்ன தொடைவகை எட்டில்
முதல்வரும் ஐந்தும் வருமிடம் பொறுத்து
எண்வகை விகற்பம் ஏற்று வருமே.
அடியும் இணையும் பொழிப்பு ஒரூஉ
கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்று
என்பன இந்த எண்வகை விகற்பமே.
மோனைத் தொடையின் விகற்பம் விரிப்பின்
அடிமோனை இணைமோனை பொழிப்புமோனை ஒரூஉமோனை
கூழைமோனை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் மோனைகள்
முற்றுமோனை என்றே விகற்பம் எட்டே
மற்றத் தொடைகளும் இதுபோல் எட்டு
உற்ற விகற்பம் பெற்று வருமே.
விகற்ப விளக்கம்
(அறுசீரடிக் குறள் வெண்செந்துறை)
அடிகள் தோறும் முதற்சீரில் ஒன்றுதல் அடிவிகற்ப மாகுமே
அடியொன்றில் முதலிரு சீர்களில் ஒன்றுதல் இணைவிகற்ப மாகுமே
அடியொன்றில் முதலாம் மூன்றாம் சீர்களில் ஒன்றுதல் பொழிப்பாம்
அடியொன்றில் முதலாம் நான்காம் சீர்களில் ஒன்றுதல் ஒரூஉ
அடியொன்றில் முதல்மூன்று சீர்களில் ஒன்றுதல் கூழை விகற்பமே
அடியொன்றில் முதலாம் மூன்றாம் நான்காம் சீரிலொன்றின் மேற்கதுவாய்
அடியொன்றில் முதலாம் இரண்டாம் நான்காம் சீரிலொன்றின் கீழ்க்கதுவாய்
அடியொன்றில் முதல்நான்கு சீரகளிலும் ஒன்றுதல் முற்று விகற்பமே.
தொடை விகற்பம் காரணப் பெயர்களே
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தொடைவகைப் பெயர்கள் காரணப் பெயர்போல்
தொடைகளின் விகற்பமும் காரணப் பெயர்களே.
அடுத்து வருவது அடியெனப் படுவதால்
அடிமுதல் வருவது அடிவிகற்ப மாகுமே.
இணைந்து வருவதால் முதலிரு சீர்களில்
இணைவிகற்ப மென்றே அழைக்கப் படுமே.
கணுவெனப் பொருள்படும் பொழிப்பெனப் படுவது
கணுக்கள் கரும்பினைப் பிரித்தல் போல
பிரிக்கும் சீரொன் றிடையில் வரவே
ஒன்றிலும் மூன்றிலும் ஒன்றுதல் பொழிப்பே.
ஒருவு என்றால் விடுதல் நீங்குதல்
ஒன்றில் தொடங்கி இருசீர் விட்டு
ஒன்றுமே நாலில் ஒரூஉ விகற்பமே.
கூழை என்றால் குட்டை யானது
கூழைக் கும்பிடு போடும் போது
குழைவது தெரியும் உயரம் சுருக்கி.
கூழை நரிக்கு வாலது குட்டையாம்.
கூழைப் பாம்போ கழுத்தே இன்றித்
தலையும் உடலும் சேரும் குள்ளம்.
அளவடி தன்னில் நாற்சீர் இருக்க
முதற்சீர் தொடங்கி மூன்றாம் சீர்வரை
அமைவது கூழை விகற்ப மாகுமே.
அளவடி நாற்சீர்த் தலைச்சீர் வடக்கெனில்
இரண்டே கிழக்கு மூன்றே தேற்கு
நான்கே மேற்கு வரைபடத் திசைபோல்.
தலைச்சீர் மூன்று நான்கு, அதாவது
வடக்கு தெற்கு மேற்கில் ஒன்றுதல்
மேற்கது வாயென விகற்பப் பெயரே.
தலைச்சீர் இரண்டு நான்கு, அதாவது
வடக்கு கிழக்கு மேற்கில் ஒன்றுதல்
கீழ்க்கது வாயென விகற்பப் பெயரே.
அளவடிச் சீர்கள் நான்கிலும் தப்பாது
முற்றிலும் ஒன்றுதல் பற்றி இதனை
முற்று விகற்பம் என்றே அழைப்பர்.
தொடை விகற்பக் குறியீடுகள்: எண் குறியீடு
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எண்வகை விகற்பம் எளிதாய் விளங்க
எண்களில் அமைத்தே எழுதுவோம் கீழே
ஒவ்வொரு எண்ணும் குரலில் படிக்க
ஒவ்வொரு சீரென வருவது புரியுமே.
1 என்பது அடிவிகற்ப மாகுமே
1 2 இணைவிகற்ப மாகுமே
1 3 பொழிப்பெனப் படுமே
1 4 ஒரூஉவெனப் படுமே
1 2 3 கூழையே
1 3 4 மேற்கதுவாய்
1 2 4 கீழ்க்கதுவாய்
1 2 3 4
முற்றெனும் விகற்பம் பெற்று வருமே.
தொடை விகற்பக் குறியீடுகள்: திசைக் குறியீடு
(நிலைமண்டில ஆசிரியப்பா)
1 2 3 4
அளவடிச் சீர்களைத் திசைகளில் குறிக்க
வட-மேல் தென்-கீழ் என்று சுருக்குவோம்.
எண்குறி யீடுகள் திசைகள் சொன்னால்
திசைக்குறி யிடுகள் இப்படி அமையுமே.
வட-எனச் சொன்னால் அடிவிகற்ப மாகுமே
வடகீழ் என்பது இணைவிகற்ப மாகுமே
வடதென் என்பது பொழிப்பு விகற்பமே
வடமேல் என்பது ஒரூஉ விகற்பமே
வடகீழ்தென் என்பது கூழை விகற்பமே
வடதென்மேல் என்பது மேற்கது வாயாம்
வடகீழ்மேல் என்பது கீழ்க்கது வாயாம்
வடகீழ் தென்மேல் முற்று விகற்பமாம்.
தொடை விகற்பக் குறியீடுகள்: ஆன்மீகக் குறியீடு
(நிலைமண்டில ஆசிரியப்பா)
1 2 3 4
என்று சீர்களைக் குறிக்கும் எண்கள்
கர்ம பக்தி ஞான முக்தி
என்ற நான்கு பெயர்கள் பெற்றிட
கர்ம என்பது அடிவிகற்ப மாகுமே
கர்ம பக்தி இணைவிகற்ப மாகுமே
கர்ம ஞான பொழிப்பு விகற்பமே
கர்ம முக்தி ஒரூஉ விகற்பமே
கர்ம பக்தி ஞான கூழை
கர்ம ஞான முக்தி மேற்கதுவாய்
கர்ம பக்தி முக்தி கீழ்க்கதுவாய்
கர்ம பக்தி ஞான முக்தி முற்றே.
பலவகைத் தொடைகளின் விகற்பம் யாவும்
அளவடி தொட்டே அமைவது ஏனெனில்
அளவடி என்பதே பாவகை யறுதி
நெடிலடி கழிநெடி லடிகள் யாவும்
பாவினங் களிலே பயின்று வருமே.
*****
நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தொடைகள் எட்டு வகைகளில் வருவன:
மோனை எதுகை முர(ண்)இயைபு அளபெடை
ஆன-யிவ் வைந்துடன் அந்தாதி இரட்டைச்
செந்தொடை யென்றே மேலும் மூன்றே.
வகையொன் றதுவே வேறு படுதலே
விகற்பம் என்னும் பெயரால் வழங்குமே
மேலே சொன்ன தொடைவகை எட்டில்
முதல்வரும் ஐந்தும் வருமிடம் பொறுத்து
எண்வகை விகற்பம் ஏற்று வருமே.
அடியும் இணையும் பொழிப்பு ஒரூஉ
கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்று
என்பன இந்த எண்வகை விகற்பமே.
மோனைத் தொடையின் விகற்பம் விரிப்பின்
அடிமோனை இணைமோனை பொழிப்புமோனை ஒரூஉமோனை
கூழைமோனை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் மோனைகள்
முற்றுமோனை என்றே விகற்பம் எட்டே
மற்றத் தொடைகளும் இதுபோல் எட்டு
உற்ற விகற்பம் பெற்று வருமே.
விகற்ப விளக்கம்
(அறுசீரடிக் குறள் வெண்செந்துறை)
அடிகள் தோறும் முதற்சீரில் ஒன்றுதல் அடிவிகற்ப மாகுமே
அடியொன்றில் முதலிரு சீர்களில் ஒன்றுதல் இணைவிகற்ப மாகுமே
அடியொன்றில் முதலாம் மூன்றாம் சீர்களில் ஒன்றுதல் பொழிப்பாம்
அடியொன்றில் முதலாம் நான்காம் சீர்களில் ஒன்றுதல் ஒரூஉ
அடியொன்றில் முதல்மூன்று சீர்களில் ஒன்றுதல் கூழை விகற்பமே
அடியொன்றில் முதலாம் மூன்றாம் நான்காம் சீரிலொன்றின் மேற்கதுவாய்
அடியொன்றில் முதலாம் இரண்டாம் நான்காம் சீரிலொன்றின் கீழ்க்கதுவாய்
அடியொன்றில் முதல்நான்கு சீரகளிலும் ஒன்றுதல் முற்று விகற்பமே.
தொடை விகற்பம் காரணப் பெயர்களே
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தொடைவகைப் பெயர்கள் காரணப் பெயர்போல்
தொடைகளின் விகற்பமும் காரணப் பெயர்களே.
அடுத்து வருவது அடியெனப் படுவதால்
அடிமுதல் வருவது அடிவிகற்ப மாகுமே.
இணைந்து வருவதால் முதலிரு சீர்களில்
இணைவிகற்ப மென்றே அழைக்கப் படுமே.
கணுவெனப் பொருள்படும் பொழிப்பெனப் படுவது
கணுக்கள் கரும்பினைப் பிரித்தல் போல
பிரிக்கும் சீரொன் றிடையில் வரவே
ஒன்றிலும் மூன்றிலும் ஒன்றுதல் பொழிப்பே.
ஒருவு என்றால் விடுதல் நீங்குதல்
ஒன்றில் தொடங்கி இருசீர் விட்டு
ஒன்றுமே நாலில் ஒரூஉ விகற்பமே.
கூழை என்றால் குட்டை யானது
கூழைக் கும்பிடு போடும் போது
குழைவது தெரியும் உயரம் சுருக்கி.
கூழை நரிக்கு வாலது குட்டையாம்.
கூழைப் பாம்போ கழுத்தே இன்றித்
தலையும் உடலும் சேரும் குள்ளம்.
அளவடி தன்னில் நாற்சீர் இருக்க
முதற்சீர் தொடங்கி மூன்றாம் சீர்வரை
அமைவது கூழை விகற்ப மாகுமே.
அளவடி நாற்சீர்த் தலைச்சீர் வடக்கெனில்
இரண்டே கிழக்கு மூன்றே தேற்கு
நான்கே மேற்கு வரைபடத் திசைபோல்.
தலைச்சீர் மூன்று நான்கு, அதாவது
வடக்கு தெற்கு மேற்கில் ஒன்றுதல்
மேற்கது வாயென விகற்பப் பெயரே.
தலைச்சீர் இரண்டு நான்கு, அதாவது
வடக்கு கிழக்கு மேற்கில் ஒன்றுதல்
கீழ்க்கது வாயென விகற்பப் பெயரே.
அளவடிச் சீர்கள் நான்கிலும் தப்பாது
முற்றிலும் ஒன்றுதல் பற்றி இதனை
முற்று விகற்பம் என்றே அழைப்பர்.
தொடை விகற்பக் குறியீடுகள்: எண் குறியீடு
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எண்வகை விகற்பம் எளிதாய் விளங்க
எண்களில் அமைத்தே எழுதுவோம் கீழே
ஒவ்வொரு எண்ணும் குரலில் படிக்க
ஒவ்வொரு சீரென வருவது புரியுமே.
1 என்பது அடிவிகற்ப மாகுமே
1 2 இணைவிகற்ப மாகுமே
1 3 பொழிப்பெனப் படுமே
1 4 ஒரூஉவெனப் படுமே
1 2 3 கூழையே
1 3 4 மேற்கதுவாய்
1 2 4 கீழ்க்கதுவாய்
1 2 3 4
முற்றெனும் விகற்பம் பெற்று வருமே.
தொடை விகற்பக் குறியீடுகள்: திசைக் குறியீடு
(நிலைமண்டில ஆசிரியப்பா)
1 2 3 4
அளவடிச் சீர்களைத் திசைகளில் குறிக்க
வட-மேல் தென்-கீழ் என்று சுருக்குவோம்.
எண்குறி யீடுகள் திசைகள் சொன்னால்
திசைக்குறி யிடுகள் இப்படி அமையுமே.
வட-எனச் சொன்னால் அடிவிகற்ப மாகுமே
வடகீழ் என்பது இணைவிகற்ப மாகுமே
வடதென் என்பது பொழிப்பு விகற்பமே
வடமேல் என்பது ஒரூஉ விகற்பமே
வடகீழ்தென் என்பது கூழை விகற்பமே
வடதென்மேல் என்பது மேற்கது வாயாம்
வடகீழ்மேல் என்பது கீழ்க்கது வாயாம்
வடகீழ் தென்மேல் முற்று விகற்பமாம்.
தொடை விகற்பக் குறியீடுகள்: ஆன்மீகக் குறியீடு
(நிலைமண்டில ஆசிரியப்பா)
1 2 3 4
என்று சீர்களைக் குறிக்கும் எண்கள்
கர்ம பக்தி ஞான முக்தி
என்ற நான்கு பெயர்கள் பெற்றிட
கர்ம என்பது அடிவிகற்ப மாகுமே
கர்ம பக்தி இணைவிகற்ப மாகுமே
கர்ம ஞான பொழிப்பு விகற்பமே
கர்ம முக்தி ஒரூஉ விகற்பமே
கர்ம பக்தி ஞான கூழை
கர்ம ஞான முக்தி மேற்கதுவாய்
கர்ம பக்தி முக்தி கீழ்க்கதுவாய்
கர்ம பக்தி ஞான முக்தி முற்றே.
பலவகைத் தொடைகளின் விகற்பம் யாவும்
அளவடி தொட்டே அமைவது ஏனெனில்
அளவடி என்பதே பாவகை யறுதி
நெடிலடி கழிநெடி லடிகள் யாவும்
பாவினங் களிலே பயின்று வருமே.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
5.5. எதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதிர்கை என்பதே எதுகையா யிருக்கலாம்
என்பது எதுகையின் வேச்சொல் விளக்கம்.
எதுகை என்றால் எதிர்கொளல் எனப்பொருள்.
எதிர்கொளும் போது எதிர்த்தல் இன்றி
எதிர்கொளும் எழுத்துகள் பொருந்தி வருமே.
எண்வகைத் தொடைகளில் மோனையே முதலில்
எண்ணப் படுவ தாக வரினும்
எதுகையே பாவகை பாவினம் காட்டிட
எதுகையை முதலில் விரித்துக் காண்போம்.
5.6. எதுகை என்பது
அடியின் முதலெழுத் தளவொத் திருக்க
அடியின் முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியின் பிறசீர் இரண்டாம் எழுத்தும்
பிறவடி முதற்சீர் இரண்டாம் எழுத்தும்
உறவுடன் வருவது எதுகை யாகுமே.
எதுகை அடிகளில் சீர்களில் பயின்றிட
முதல்வரும் எழுத்தள வொத்திட வேண்டும்
குறிலொடு குறிலென நெடிலொடு நெடிலென.
கட்டு தட்டு சிட்டு இவையும்
காட்டு பாட்டு சீட்டு இவையும்
முதல்வரும் எழுத்து அளவில் ஒத்திட
முறையாய் அமைந்த எதுகைகள் ஆகுமே.
கட்டு பட்டம், மின்னல் பொன்னின்,
முதல்வரும் எழுத்து அளவில் ஒத்திட
இரண்டாம் எழுத்து ஒன்றிடும் எதுகைகள்.
சிகரம் தகரம், பாடல் நாடல்,
இதுபோ லிவையும் எதுகைக ளாகுமே.
கட்டு பாட்டு, சிட்டு சீட்டு
என்று வருவன எதுகைகள் ஆகா
முதலெழுத் தளவில் வேறு படுவதால்.
எதுகை அமைப்பதில் புதியோர் செய்யும்
இதுபோல் தவறுகள் திருத்திக் கொள்ள
எழுதும் செய்யுளின் கவிநயம் சிறக்குமே.
அடிகளில் சீர்களில் அமைந்திடும் எதுகையில்
முதல்வரும் எழுத்து அளவொத் திருக்க
இரண்டாம் எழுத்து ஒன்றினால் போதும்.
பின்வரும் எழுத்துகள் ஒன்ற ஒன்ற
ஓசை இனிமையும் நயமும் பெற்றிடும்.
வண்டு உண்டு எதுகைகள் ஓசை
வண்டு உண்ண எதுகைகள் ஓசை
இரண்டும் நோக்கி இனிமை அறிக.
எண்விகற் பங்களில் எதுகை வருமே
அடியும் இணையும் பொழிப்பும் ஒரூஉம்
கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்று
என்னும் எட்டும் அளவடி யில்வரும்.
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதிர்கை என்பதே எதுகையா யிருக்கலாம்
என்பது எதுகையின் வேச்சொல் விளக்கம்.
எதுகை என்றால் எதிர்கொளல் எனப்பொருள்.
எதிர்கொளும் போது எதிர்த்தல் இன்றி
எதிர்கொளும் எழுத்துகள் பொருந்தி வருமே.
எண்வகைத் தொடைகளில் மோனையே முதலில்
எண்ணப் படுவ தாக வரினும்
எதுகையே பாவகை பாவினம் காட்டிட
எதுகையை முதலில் விரித்துக் காண்போம்.
5.6. எதுகை என்பது
அடியின் முதலெழுத் தளவொத் திருக்க
அடியின் முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியின் பிறசீர் இரண்டாம் எழுத்தும்
பிறவடி முதற்சீர் இரண்டாம் எழுத்தும்
உறவுடன் வருவது எதுகை யாகுமே.
எதுகை அடிகளில் சீர்களில் பயின்றிட
முதல்வரும் எழுத்தள வொத்திட வேண்டும்
குறிலொடு குறிலென நெடிலொடு நெடிலென.
கட்டு தட்டு சிட்டு இவையும்
காட்டு பாட்டு சீட்டு இவையும்
முதல்வரும் எழுத்து அளவில் ஒத்திட
முறையாய் அமைந்த எதுகைகள் ஆகுமே.
கட்டு பட்டம், மின்னல் பொன்னின்,
முதல்வரும் எழுத்து அளவில் ஒத்திட
இரண்டாம் எழுத்து ஒன்றிடும் எதுகைகள்.
சிகரம் தகரம், பாடல் நாடல்,
இதுபோ லிவையும் எதுகைக ளாகுமே.
கட்டு பாட்டு, சிட்டு சீட்டு
என்று வருவன எதுகைகள் ஆகா
முதலெழுத் தளவில் வேறு படுவதால்.
எதுகை அமைப்பதில் புதியோர் செய்யும்
இதுபோல் தவறுகள் திருத்திக் கொள்ள
எழுதும் செய்யுளின் கவிநயம் சிறக்குமே.
அடிகளில் சீர்களில் அமைந்திடும் எதுகையில்
முதல்வரும் எழுத்து அளவொத் திருக்க
இரண்டாம் எழுத்து ஒன்றினால் போதும்.
பின்வரும் எழுத்துகள் ஒன்ற ஒன்ற
ஓசை இனிமையும் நயமும் பெற்றிடும்.
வண்டு உண்டு எதுகைகள் ஓசை
வண்டு உண்ண எதுகைகள் ஓசை
இரண்டும் நோக்கி இனிமை அறிக.
எண்விகற் பங்களில் எதுகை வருமே
அடியும் இணையும் பொழிப்பும் ஒரூஉம்
கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்று
என்னும் எட்டும் அளவடி யில்வரும்.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
அன்புடையீர் வணக்கம்.
http://www.eegarai.net/936386
5.4 தொடை விகற்பம் பகுதியில் (அஞ்சல் 136) மேலும் விவரங்கள் சேர்த்துள்ளேன். அவற்றை எளிதில் அறிய பச்சை வண்ணத்தில் குறித்துள்ளேன். ஏதேனும் திருத்தங்கள் வேண்டின் தெரிவிக்கவும்.
http://www.eegarai.net/936386
5.4 தொடை விகற்பம் பகுதியில் (அஞ்சல் 136) மேலும் விவரங்கள் சேர்த்துள்ளேன். அவற்றை எளிதில் அறிய பச்சை வண்ணத்தில் குறித்துள்ளேன். ஏதேனும் திருத்தங்கள் வேண்டின் தெரிவிக்கவும்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பதிவு நண்பரே
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
5.7. எதுகை விகற்பங்கள்: அடியெதுகைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியும் இணையும் பொழிப்பு ஒரூஉ
கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்றென
எதுகைத் தொடையில் எண்வகை விகற்பமே.
எதுகையில் மோனையில் எழுத்துகள் ஒன்றுதல்
அதுவே என்றோ வகையே என்றோ
பொதுவில் இரண்டு விதங்களில் வருமே.
சிகரம் தகரம் என்னும் எதுகையில்
ககர எழுத்தே ஒன்றுதல் காண்க.
சிகரம் சிறப்பு என்னும் மோனையில்
சியெனும் எழுத்தே ஒன்றுதல் காண்க.
சிலவகை சிலைகள் என்னும் எதுகையில்
லகர வருக்கம் ஒன்றுதல் காண்க.
புலவர் பொருநர் என்னும் மோனையில்
பகர வருக்கம் ஒன்றுதல் காண்க.
விதித்த வகையில் ஒன்றி வருதல்
முதல்தர எதுகை மோனை யாகும்
பிறவகை களிலே ஒன்றி வருதலைப்
புறனடை யென்று இலக்கணம் கூறுமே.
அடியெதுகை:
அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்து
அடிபிற முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியெது கையிலே ஒன்றி வருமே.
இரண்டடி எதுகைச் சான்றுக் குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
---திருக்குறள் 1:1
இரண்டடி களுக்கு மேல்வரும் எதுகை:
அன்று மூல மாதியாய்
இன்று காறு மேழையேன்
நன்று தீது நாடலேன்
தின்று தீய தேடினேன்
--கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம் 2582
விருத்தப் பாக்களில் அடிகளின் சீர்கள்
பெருத்து வருவதால் அடிகள் நீள
அதனை எழுதுவர் பலவரி களிலே
இதனால் அடிகளின் முதற்சீர் தெரிய
அடியெது கையினை அமைத்தே எழுதுவர்.
(பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
. . உத்தமர்தம் உறவு வேண்டும்
. . உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
. . உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெரும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
. . பேசா திருக்க வேண்டும்
. . பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
. . பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
. . மறவா திருக்க வேண்டும்
. . மதிவேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
. . வாழ்வுநான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
. . தலமோங்கு கந்த வேளே
. . தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
. . சண்முகத் தெய்வ மணியே.
---இராமலிங்க அடிகள், திருவருட்பா 8
பாவகை பாவினம் காட்டுமே எதுகைகள்
பாவகை களிலே ஈரடிக் கொருமுறை
எதுகை யொன்றை அமைத்தல் சிறப்பு
நேரிசை வெண்பா காட்டும் எதுகைகள்
முதலிரண் டடியிலும் இரண்டாம் அடியின்
ஈற்றுச் சீரிலும் அமைந்து வருமே.
பாவினங் களிலே விருத்தப் பாக்களில்
ஓரெது கையே அடிகளில் அமையுமே
பாவினத் துறைகளில் கலித்துறை தன்னில்
ஓரெது கையே அடிகளில் அமைய
இதர இனங்களில் அடியெது கைகள்
பொதுவில் வருவது ஒலியினிற் சிறக்குமே.
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியும் இணையும் பொழிப்பு ஒரூஉ
கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்றென
எதுகைத் தொடையில் எண்வகை விகற்பமே.
எதுகையில் மோனையில் எழுத்துகள் ஒன்றுதல்
அதுவே என்றோ வகையே என்றோ
பொதுவில் இரண்டு விதங்களில் வருமே.
சிகரம் தகரம் என்னும் எதுகையில்
ககர எழுத்தே ஒன்றுதல் காண்க.
சிகரம் சிறப்பு என்னும் மோனையில்
சியெனும் எழுத்தே ஒன்றுதல் காண்க.
சிலவகை சிலைகள் என்னும் எதுகையில்
லகர வருக்கம் ஒன்றுதல் காண்க.
புலவர் பொருநர் என்னும் மோனையில்
பகர வருக்கம் ஒன்றுதல் காண்க.
விதித்த வகையில் ஒன்றி வருதல்
முதல்தர எதுகை மோனை யாகும்
பிறவகை களிலே ஒன்றி வருதலைப்
புறனடை யென்று இலக்கணம் கூறுமே.
அடியெதுகை:
அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்து
அடிபிற முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியெது கையிலே ஒன்றி வருமே.
இரண்டடி எதுகைச் சான்றுக் குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
---திருக்குறள் 1:1
இரண்டடி களுக்கு மேல்வரும் எதுகை:
அன்று மூல மாதியாய்
இன்று காறு மேழையேன்
நன்று தீது நாடலேன்
தின்று தீய தேடினேன்
--கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம் 2582
விருத்தப் பாக்களில் அடிகளின் சீர்கள்
பெருத்து வருவதால் அடிகள் நீள
அதனை எழுதுவர் பலவரி களிலே
இதனால் அடிகளின் முதற்சீர் தெரிய
அடியெது கையினை அமைத்தே எழுதுவர்.
(பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
. . உத்தமர்தம் உறவு வேண்டும்
. . உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
. . உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெரும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
. . பேசா திருக்க வேண்டும்
. . பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
. . பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
. . மறவா திருக்க வேண்டும்
. . மதிவேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
. . வாழ்வுநான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
. . தலமோங்கு கந்த வேளே
. . தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
. . சண்முகத் தெய்வ மணியே.
---இராமலிங்க அடிகள், திருவருட்பா 8
பாவகை பாவினம் காட்டுமே எதுகைகள்
பாவகை களிலே ஈரடிக் கொருமுறை
எதுகை யொன்றை அமைத்தல் சிறப்பு
நேரிசை வெண்பா காட்டும் எதுகைகள்
முதலிரண் டடியிலும் இரண்டாம் அடியின்
ஈற்றுச் சீரிலும் அமைந்து வருமே.
பாவினங் களிலே விருத்தப் பாக்களில்
ஓரெது கையே அடிகளில் அமையுமே
பாவினத் துறைகளில் கலித்துறை தன்னில்
ஓரெது கையே அடிகளில் அமைய
இதர இனங்களில் அடியெது கைகள்
பொதுவில் வருவது ஒலியினிற் சிறக்குமே.
*****
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பதிவு
- Sponsored content
Page 14 of 29 • 1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 29