ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமாவின் சரித்திர ட்வீட்டும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும்!

3 posters

Go down

ஒபாமாவின் சரித்திர ட்வீட்டும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும்! Empty ஒபாமாவின் சரித்திர ட்வீட்டும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும்!

Post by சிவா Wed Nov 07, 2012 4:59 pm

ஒபாமாவின் சரித்திர ட்வீட்டும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும்! Obama_tweet%281%29

நாம் வாழ்ந்துகொண்டிருப்பது 'சமூக வலைத்தள யுகம்' என்பது இன்று மீண்டும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதில் தொடங்கி டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் விவாதங்களும் பிரசாரங்களும் சூடுபிடிக்கத் தொடங்கின.

தனது பிரசாரத்துக்குக் கைகொடுத்த மிக முக்கிய பங்களிப்பாகவே சமூக வலைத்தளங்களைக் கருதிச் செயல்பட்டு வருகிறார், பராக் ஒபாமா. இது, தனது வெற்றித் தருணத்தை முதலில் பகிர்ந்துகொண்ட விதத்தில் இருந்தே வெளிப்பட்டது.

ஆம், இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், வெற்றி உறுதி என்ற தகவல் தெரிந்தவுடன் ஒபாமா மக்களுக்கு நன்றி சொல்லப் பயன்படுத்திய தளம்... டிவி பேட்டி, பத்திரிகை அறிக்கை போன்றவை அல்ல; ட்விட்டர், ஃபேஸ்புக் சமூக வலைத்தளங்கள்தான்.

முதலில் ட்விட்டரில் 'உங்களால்தான் இது சாத்தியமானது. உங்களுக்கு நன்றி' என்று ட்வீட் செய்தார். அந்த ட்வீட் அடுத்த சில நிமிடங்களில் 2 லட்சம் ஃபாலோயர்களால் ரீட்வீட் செய்யப்பட்டது.

அதோடு முடியவில்லை. அமெரிக்காவின் 44வது அதிபராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதும், ''மேலும் நான்கு ஆண்டுகள்'' என்று குறிப்பிட்டு, மனைவி மிஷேலைக் கட்டித் தழுவியபடி ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்தார். அது, இந்திய நேரம் மாலை 3.30 மணி நிலவரப்படி 5.5 லட்சம் முறை ரீட்வீட் செய்யப்பட்டது.

அந்த ட்வீட்தான் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான ஃபாலோயர்களால் பகிரப்பட்ட ட்வீட் என்ற புதிய சரித்திர சாதனையை நிகழ்த்தி இருக்கிறது என்று தனது செய்திக் குறிப்பு ஒன்றில் ட்விட்டர் தெரிவித்தது. இதற்கு முன் இந்தச் சாதனையை வசப்படுத்தி இருந்தவர், அமெரிக்காவின் இளம் பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபர்.

இதேபோல், ஒபாமா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட மகிழ்ச்சித் தகவலும் லைக்குகளாலும் ஷேர்களாலும் மூழ்கியது.

விஷயம் இதுமட்டும் இல்லை. அமெரிக்க அரசியல் வரலாற்றில் தேர்தல் தொடர்பாக ஒரே நாளில் 3 கோடியே 10 லட்சம் ட்வீட்கள் பறந்ததும் இப்போதுதான். சராசரியாக, நிமிடத்துக்கு 3,27,452 ட்வீட்கள் (குறுந்தகவல்கள்) பகிரப்பட்டுள்ளன.

2008 தேர்தலின்போது, இணையப் பிரசாரத்தின் வீரியத்தை உலகுக்கு உணர்த்தினார் ஒபாமா. அதன் தாக்கத்தைப் புரிந்துகொண்ட குடியரசு கட்சியின் வேட்பாளர் ரோம்னி சமூக வலைத்தளங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கியது கவனத்துக்கு உரியது.

தலைவர்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவதற்கு இணையத்தைப் போன்ற சக்திவாய்ந்த ஊடகம் எதுவும் இல்லை என்பதையே ஒபாமாவின் அணுகுமுறையும் வெற்றியும் பறைசாற்றி இருக்கிறது.

மேலும், சமூக வலைத்தளங்களில் அமெரிக்க இணையவாசிகள் மேற்கொண்ட விவாதங்கள், கருத்துப் பகிர்வுகள் முதலானவை ஒபாமாவை மீண்டும் தேர்ந்தெடுக்கலாமா? வேண்டாமா? என்ற மக்களின் குழப்பத்தை நீக்குவது பெரும் துணைபுரிந்திருக்கக் கூடும்.

இணையம் சார்ந்த தொழில்நுட்பத்தில் இந்தியர்கள் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளச் சூழலில், இன்றைய அமெரிக்க அரசியல் நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவது என்ன?

‘இந்திய அரசியலில் மாற்றங்களை உண்டாக்குவதில் இணையவாசிகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு’ என்ற வாக்கியம் மெய்ப்படுவதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே அது.

- சரா @ விகடன்


ஒபாமாவின் சரித்திர ட்வீட்டும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒபாமாவின் சரித்திர ட்வீட்டும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும்! Empty Re: ஒபாமாவின் சரித்திர ட்வீட்டும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும்!

Post by காதல் ராஜா Wed Nov 07, 2012 8:11 pm

நூறு சதம் உண்மை.. ஆனால் அதற்கான சுதந்திரத்தை இன்றைய அரசியல்வாதிகள் இந்தியாவில் அளிக்க மாட்டார்கள்.. புன்னகை
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

ஒபாமாவின் சரித்திர ட்வீட்டும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும்! Empty Re: ஒபாமாவின் சரித்திர ட்வீட்டும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும்!

Post by கரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 8:12 pm

இணையத்தின் ஆதிக்கத்தை நல்வழியில் பயன்படுத்துவது நன்று
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஒபாமாவின் சரித்திர ட்வீட்டும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும்! Empty Re: ஒபாமாவின் சரித்திர ட்வீட்டும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum