புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழுகை மொழி அறிவோமா...? Poll_c10அழுகை மொழி அறிவோமா...? Poll_m10அழுகை மொழி அறிவோமா...? Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அழுகை மொழி அறிவோமா...? Poll_c10அழுகை மொழி அறிவோமா...? Poll_m10அழுகை மொழி அறிவோமா...? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அழுகை மொழி அறிவோமா...? Poll_c10அழுகை மொழி அறிவோமா...? Poll_m10அழுகை மொழி அறிவோமா...? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அழுகை மொழி அறிவோமா...? Poll_c10அழுகை மொழி அறிவோமா...? Poll_m10அழுகை மொழி அறிவோமா...? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழுகை மொழி அறிவோமா...? Poll_c10அழுகை மொழி அறிவோமா...? Poll_m10அழுகை மொழி அறிவோமா...? Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அழுகை மொழி அறிவோமா...? Poll_c10அழுகை மொழி அறிவோமா...? Poll_m10அழுகை மொழி அறிவோமா...? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அழுகை மொழி அறிவோமா...? Poll_c10அழுகை மொழி அறிவோமா...? Poll_m10அழுகை மொழி அறிவோமா...? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அழுகை மொழி அறிவோமா...? Poll_c10அழுகை மொழி அறிவோமா...? Poll_m10அழுகை மொழி அறிவோமா...? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகை மொழி அறிவோமா...?


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 07, 2012 12:25 pm

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒவ்வொரு படியையும் கவனம் நிரப்பிக் கடக்க வேண்டும் பெற்றோர்! பிறந்த குழந்தையைப் பொறுத்தவரையில்... அதன் அழுகைதான் பல மம்மி களுக்கு அலர்ஜியான விஷயம்!

''குழந்தை அழும்போது, என்னவோ ஏதோவென்று அதைவிட அதிகமாக தவித்துப்போகும் தாய் மனது. ஆனால், அதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டு சரிசெய்தால், குழந்தையின் அழுகை நிற்கும், அம்மாவுக்கும் நிம்மதி பிறக்கும்!

பொதுவாக, தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவந்ததும் அழும் முதல் அழுகையை, மருத்துவத்தில் 'குட் சைன்’ என்போம். அதுவரை தொப்புள்கொடி மூலமாகவே, ஆக்ஸிஜன் தேவைகளை எடுத்து வந்த குழந்தை, வெளியுலகத்துக்கு வந்தபின் முதல் முறையாக தானே சுவாசிக்க ஆரம்பிக்கும். அப்போது செயல்படத்துவங்கும் அதன் நுரையீரலின் சங்கிலித் தொடர் நிகழ்வுதான்... குழந்தையின் அழுகை. எனவே, பிறந்தவுடன் குழந்தை குரலெடுத்து அழுதால்தான்... சுவாசம் ஆரோக்கியமானதாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே, இது 'நார்மல் க்ரை' (Normal cry).

அழுகை மொழி அறிவோமா...? Avl58

அடுத்த அழுகை, 'ஹங்கர் க்ரை' (Hunger cry)...பசிக்காக அழுவது. இதுவும் இயல்பானதுதான். குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை தாயின் உள்ளுணர்வே எளிதாகப் புரிந்துகொள்ளும். அழும் குழந் தையை எடுத்து பால் புகட்டினால், வயிறு நிறைந்தவுடன் அழுகை அடங்கி குழந்தை தூங்கிவிடும். சில குழந்தைகள் பால் குடித்த பின்னும் அழுவார்கள். காரணம், பால் பருகும்போது அந்த வேகத்தில் காற்றையும் சேர்த்து உள்ளே இழுத்திருப்பார்கள். இதனால் வயிற்றில் சேரும் காற்றுதான், குழந்தையின் அழுகைக்குக் காரணம். எனவே ஒவ்வொரு முறை குழந்தை பால் குடித்தபின்னும், அதை மெதுவாக தோளில் சாய்த்து, அதன் முதுகில் இதமாக தடவிக் கொடுத்தால், உள்ளே சென்ற காற்று, ஏப்பமாக வெளிவந்துவிடும்.

பால் கொடுக்கும்போது கவனிக்க வேண் டிய விஷயம் ஒன்று இருக்கிறது. தாயின் மார்பகக் காம்புகளில் குழந்தை பால் குடிக்கும்போது முதலில் வரும் 'ஃபோர்மில்க்' (Foremilk) எனப்படும் தண்ணீரானது, குழந்தையின் தாகம் தணிக்கும். பிறகு வரும் கொஞ்சம் அடர்த்தியான 'ஹிண்ட்மில்க்' (Hindmilk), குழந்தையின் பசி தணிக்கும். எனவே, மார்பின் ஒரு காம்பில் முழுக்க பால் குடித்தபின்னே, அதை அடுத்த காம்புக்கு மாற்ற வேண்டும். ஆனால், சில அம்மாக்கள் ஒரு காம்பில் 'ஃபோர்மில்க்' குடித்ததுமே, அவசரமாக அடுத்த காம்புக்கு குழந்தையை மாற்றிவிடுவார்கள். அங்கேயும் 'ஃபோர்மில்க்'கையே குடிக்கும்போது, குழந்தையின் தாகம் தணியுமே தவிர... பசி தணியாது. இதன் காரணமாகவும் குழந்தை அழும். இது புரியாமல்... 'நல்லாதான் பால் குடிச்சுது... ஆனாலும் அழுது அட்டகாசம் பண்ணுது’ என்று புலம்புவதில், பலனில்லை.

பெரியவர்களுக்கு சிறுநீர்ப் பை நிரம்பிய வுடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட, சிறுநீர் கழிக்கச் செல்கிறோம். ஆனால், பச்சிளம் குழந்தை என்ன செய்யும்? அதன் சிறுநீர்ப் பையில் சிறுநீர் சேர்ந்ததும், அந்த உணர்வை அழுகையாக வெளிப் படுத்தி, சிறுநீர் கழிக்கும். பின் அழுகையை நிறுத்தி விடும். மோஷன் போவதற்கு முன்னும் இப்படி அழும். 'யூரின், மோஷன் போகும்போது அழுதுட்டே போறான்...’ என்று இதற்குப் பயப்படத் தேவையில்லை. 'நான் யூரின்/ மோஷன் போகவேண்டும். அல்லது போய்விட்டேன்... என்னை கவனியுங்கள், துணியை மாற்றுங்கள்!’ என்பதைத்தான் தன் அழுகையின் மூலம் உணர்த்துகின்றன குழந்தைகள்.

மூன்று மாதக் குழந்தை, வீட்டுக்கு யாராவது புதிதாக வந்தால், பயந்து அழும். அதை தனியாக விட்டுவிட்டு நீங்கள் சமையல், வேலை என்று சென்றுவிட்டால், அந்தத் தனிமை பிடிக்காமல் அல்லது பயந்து அழும். உடை இறுக்கமாக இருந்தால் அழும். தூக்கத்தில் இருந்து எழும்போது, தன் அருகில் யாரும் இல்லை என்றால், கவனத்தை ஈர்க்க, அழும். குளிக்க வைக்கும்போது காதில் தண்ணீர் போய்விட்டால் அழும். எறும்பு, பூச்சி ஏதும் கடித்தால் அழும். குழந்தையை வண்டியில் வைத்து வெளியில் அழைத்துச் செல்லும்போது, காதில் குளிர்காற்று நுழைந்தால் அழும்.

ஆபத்தான அழுகைகள்!

'பிரெத் ஹோல்டிங் க்ரை' (Breath holding cry): தடுப்பூசி போடும்போது பெரும்பாலும், 'குழந்தை மூச்சு விடாம அழுமா..?’ என்று கேட்டுவிட்டுத்தான் போடுவார்கள் செவிலியர்கள். அப்படி மூச்சு விடாமல் அழுவதற்குதான் இந்த பெயர். சில குழந்தைகள் கேவிக்கேவி அழும்போது சில நொடிகள் மூச்சு நின்று, பின் வரும். அப்படி அழும்போது அந்தக் குழந்தையின் உடல் நீல நிறமாக மாறினால், அதன் இதயம், மூளை என ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று சோதிக்க வேண்டியது அவசியம்.

'வீக் க்ரை' (Weak cry): பிறந்த 15 - 20 நாட்களில் குழந்தை எப்போதும் மெலிதாக அழுதுகொண்டே இருப்பதை இப்படி அழைப்பார்கள். ஏதேனும் தொற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பிருக் கிறது என்பதுதான் இதற்கு அர்த்தம். இதைக் குறிப்பிட்டுச் சொல்லி, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

'ஷ்ரில் க்ரை' (Shrill cry): வீல் வீல் என்று உச்சஸ்தாயில் 10 நிமிடங்கள் வரை குழந்தை நீடித்து அழுவதை இப்படி குறிப்பிடுவார்கள். இப்படி அடிக்கடி அழுதால், அதற்கு வலிப்பு நோய் அல்லது மூளை சம்பந்தமான ஏதோ பிரச்னை இருக்கலாம். மருத்துவரிடம் எடுத்துச் செல்வது முக்கியம்.

'லோ பிட்ச் க்ரை' (Low pitch cry): கனத்த குரல் அல்லது ஹஸ்கி வாய்ஸில் குழந்தை அழுவது. இதற்கு, தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதது காரணமாக இருக்கலாம். மருத்துவப் பரிசோதனை அவசியம்.

--
மழைக்காகிதம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 07, 2012 6:38 pm

அழுகை மொழி அறிவோமா...? 224747944 அழுகை மொழி அறிவோமா...? 224747944 அழுகை மொழி அறிவோமா...? 224747944நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Wed Nov 07, 2012 9:32 pm

உபயோகமான பதிவு.. நன்றி.. புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக