ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று-அச்சலா

+13
கா.ந.கல்யாணசுந்தரம்
றினா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
அருண்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
Muthumohamed
ஹர்ஷித்
krishnaamma
anandkce
சிவா
அச்சலா
17 posters

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Empty வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Thu Nov 01, 2012 5:00 pm

First topic message reminder :

நண்பர்களே வராலாற்றில் நடந்த நிகழ்வை இங்குதரலாம் என்று நினைக்கிறேன்..

வரலாற்றில் இன்று

நவம்பர்
1


1512 - வரலாற்றுப் புகழ் பெற்ற ஓவியர் மைக்கலாஞ்சலோவின் கைவண்ணத்தில் உருவான சிஸ்டின் தேவாலயத்தின் கூரை ஓவியங்கள் முதல் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
1520 - தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது.
1604 - ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1611 - ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1800 - வெள்ளை மாளிகைக்குக் குடியேறிய முதல் அமெரிக்க அதிபர் John Adams
1904 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.
1911 - இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன.
1914 - முதலாம் உலகப் போர்: சிலியில் ஜெர்மனியக் கடற்படையுடன் நடந்த மோதலில் பிரித்தானியக் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்
1928 - துருக்கிய மொழி சீர்திருத்தம் ஏற்பட்டது. அரபு எழுத்துக்கள் புதிய துருக்கிய எழுத்துக்களாக மாற்றப்பட்டன.
1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
1956 - நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம் உருவானது.
1956 -இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1957 - அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மக்கினாக் பாலம் அமைக்கப்பட்டது.
1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.
1981 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அன்டிகுவா பர்புடா விடுதலை பெற்றது.
1986 - தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக் கலைக்கப்பட்ட நாள் (முதல்வர் எம்.ஜி.ஆர்.
1993 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1998 - மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
1999 - ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Nov 14, 2012 11:32 pm

வரலாற்றில் இன்று

நவம்பர்
03

644 - இரண்டாவது முஸ்லிம் காலிப் உமர் இபின் அல்-காட்டாப் மதினாவில் பாரசீக அடிமையினால் கொல்லப்பட்டார்.
1493 - கரிபியன் கடலில் டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார்.
1838 - பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.
1903 - ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலை அடுத்து பனாமா கொலம்பியாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
1905 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டான்.
1913 - ஐக்கிய அமெரிக்கா வருமான வரியை அறிமுகப்படுத்தியது.
1917 - பார்ப்பனர் அல்லாதார் 3 ஆவது மாநாடு இராயலு சீமா புலிவேங்களாவில் பாரிஸ்டர் கே. சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற நாள்
1918 - போலந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1957 - உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.
1963 - தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.
1963 - ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1964 - வாஷிங்டன் டீசி மக்கள் முதன் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
1970 - சல்வடோர் அலெண்டே சிலியின் அதிபரானார்.
1973 - நாசா மரைனர் 10 என்ற விண்கப்பலை புதன் நோக்கி அனுப்பியது.
1974, மார்ச் 29 இல் அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1978 - டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 - கம்யூனிச பாட்டாளிகள் கட்சியில் 5 உறுப்பினர்கள் வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1986 - மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1988 - இலங்கையின் தமிழ்க் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் மாலை தீவுகள் அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.
1992 - அமெரிக்க அதிபர் தேர்தலில் பில் கிளிண்ட்டன் ஜனநாயகக் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றார்


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Nov 14, 2012 11:32 pm

வரலாற்றில் இன்று

நவம்பர்
04

1918: முதலாம் உலக யுத்தத்தில் இத்தாலியிடம் ஆஸ்திரியா - ஹங்கேரி சரணடைந்தது.

1921: ஜப்பானிய பிரதமர் ஹரா தகாஷி டோக்கியோவில் படுகொலை செய்யப்பட்டார்.

1956: ஹங்கேரியில் சோவியத் எதிர்ப்புப் புரட்சியை முறியடிப்பதற்காக சோவியத் யூனியன் துருப்புகள் படையெடுத்தன.

1979: ஈரானிலுள்ள அமெரிக்கத் தூதரகம்மீது ஈரானிய மாணவர்கள் குழுவொன்று முற்றுகையிட்டது.

1992: பில் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவானார்.

1995: இஸ்ரேலிய பிரதமர் யிட்ஸாக் ராபின் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2008: அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவானார்
.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Nov 14, 2012 11:33 pm

வரலாற்றில் இன்று

நவம்பர்
05
1872: அமெரிக்காவில் பெண்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறும் விதமாக சுசான் பி. அந்தனி எனும் பெண் வாக்களித்தார். பின்னர் அவருக்கு 100 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

1895: ஜோர்ஜ் பி ஷெல்டன் என்பவர் அமெரிக்காவில் முதல் தடவையாக வாகனத்திற்கான காப்புரிமை பெற்றார்.

1911: ஒட்டோமான் இராஜ்ஜியத்துக்கு எதராக போர்ப் பிரகடனம் செய்த இத்தாலி, திரிபோலியை (லிபியா) தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1937: ஜேர்மனியில் அடோல்வ் ஹிட்லர், ரகசிய கூட்டமொன்றை நடத்தி, ஜேர்மனியர்களுக்கு 'வாழ்வதற்கான இடத்தை' பெற்றுக்கொள்வதற்கான தனது திட்டம் குறித்து அறிவித்தார்.

1940: அமெரிக்காவில் பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவானார்.

1952:அமெரிக்காவில் ஜெனரல் டி.ஐஸனோவர் வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.

1995: கனடாவில் பிரதமர் ஜீன் செரிஷனை கொல்வதற்கு முயற்சி.

1996: பாகிஸ்தானில் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் அரசாங்கத்தை ஜனாதிபதி பாருக் லெகாரி கலைத்தார்.

2007: சந்திரனுக்கு சீனா அனுப்பிய முதலாவது செய்மதி, சந்திரனை வலம் வரத் தொடங்கியது.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Nov 14, 2012 11:33 pm

வரலாற்றில் இன்று

நவம்பர்
06
1789: அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்க ஆயராக அருட்தந்தை ஜோன் கரோலை பாப்பரசர் 6ஆம் பயஸ் நியமித்தார்.

1913: தென்னாபிரிக்காவில் இந்திய சுரங்கத் தொழிலாளர்களின் பேரணிக்குத் தலைமை தாங்கிய மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார்.

1941: சோவியத் யூனியன் அதிபர் ஜோஸப் ஸ்டாலின் தனது 3 தசாப்தகால ஆட்சியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜேர்மனியின் தாக்குதலால் 350,000 படையினர் உயிரிழந்ததாகவும் ஆனால், 45 லட்சம் ஜேர்மன் படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில் வெற்றி நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

1943: சோவியத் யூனியன் படைகள் கீவ் (உக்ரேன்) நகரை மீண்டும் கைப்பற்றின.

1944: அமெரிக்காவின் ஹன்பார்ட் அணு உலையில் முதல்தடவையாக புளுட்டோனியம் தயாரிக்கப்பட்டது. பின்னர், இப்புளுட்டோனியம் ஜப்பானின் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

1962: தென்னாபிரிக்க நிற வெறி ஆட்சியைக் கண்டித்து ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

1965: அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் கியூப நாட்டவர்களை விமானம் மூலம் கொண்டுசெல்வதற்கு இரு நாடுகளும் இணங்கின. 1971ஆம் ஆண்டளவில் 250,000 கியூப நாட்டவர்கள் இத்திட்டத்தின்மூலம் பயனடைந்திருந்தனர்.

1986: பிரிட்டனில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தொன்றில் 45 பேர் பலியாகினர்.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Nov 14, 2012 11:34 pm

வரலாற்றில் இன்று

நவம்பர்
07
1893: அமெரிக்காவின் கொலரோடா மாநிலத்தில் பெண்கள் வாக்குரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1910: முதலாவது சரக்கு விமானசேவை ரைட் சகோதரர்களாலும் பல்பொருள் அங்காடி உரிமையாளர் மக்ஸ் மூர் ஹவுஸினாலும் ஆரம்பிக்கப்பட்டது.

1917: முதலாம் உலக யுத்தத்தின்போது, ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்தது.

1917: ரஷ்யாவில் ஒக்டோபர் புரட்சி மூலம் அதிகாரத்தை லெனின் கைப்பற்றினார்.

1931: சீன மக்கள் குடியரசு - மா ஸே துங்கினால் பிரகடனம்.

1941: இரண்டாம் உலக யுத்தத்தின்போது, அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள பேர்ள் துறைமுகத்தின் மீது ஜப்பானின் 353 விமானங்கள், இரு அணிகளாக வந்து தாக்குதல் நடத்தின. 8 அமெரிக்க கப்பல்கள் அமெரிக்காவின் 188 விமானங்கள் அழிப்பு. 2,402 பேர் பலி.

1975: கிழக்குத் திமோர் மீது இந்தோனேஷியா படையெடுத்தது.

1988: ஆர்மீனியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 25,000 பேர் பலி.

1988: இஸ்ரேல் தொடர்ந்திருப்பதன் உரிமையை பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யஸீர் அரபாத் அங்கீகரித்தார்.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Nov 14, 2012 11:35 pm

வரலாற்றில் இன்று

நவம்பர்
08

1520: சுவீடன் மீது படையெடுத்த டென்மார்க் படையினர் ஸ்டொக்ஹோமில் சுமார் 100 பேரை கொலை செய்தனர்.

1731: அமெரிக்காவின் முதலாவது நூலகத்தினை பிடடெல்பியாவில் பென்ஸமின் பிறங்லின் திறந்து வைத்தார்.

1864: அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் 2ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1884: 2ஆவது லியோபோல்ட் மன்னனின் கொங்கோவினை சுதந்திர மாநிலமாக ஜேர்மன் அரசாங்கம் அங்கீகரித்தது.

1895: ஜேர்மனியின் வில்ஹெல்ம் ரொண்ட்ஜன் என்பவரால் X-கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

1923: ஜேர்மன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான நாஸிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றது.

1932: பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக முதல் தடவையாக தெரிவானார். பின்னர் மேலும் 3 தடவைகள் இவர் வெற்றிபெற்று சாதனை படைத்தார்.

1939: ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் படுகொலை முயற்சியிலிருந்து நூலிழையில் தப்பினார்.

1950: கொரிய யுத்தத்தின்போது அமெரிக்க விமானப்படையின் எவ்-80 ரக விமானத்தின் விமானி ரஸல் ஜே.பிரவுன், வடகொரியாவின் இரு மிக் 15 விமானங்களை சுட்டுவீழ்த்தினார். உலகில் விமானங்களுக்கிடையிலான நேரடி சமர் இதுவாகும்.

1963: எட்வர்ட் புரூக் என்பவர் அமெரிக்க செனட் சபைக்கு முதல் தடவையாக கறுப்பினத்தவரானார்.

1987: இங்கிலாந்து கிரிக்கெட் அணியினை 7 ஓட்டங்களால் தோற்கடித்து உலகக் கிண்ணத்தினை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

1988: சீனாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தினால் 900 பேர் உயிரிழப்பு

2004: ஈராக்கின் பலூஜா நகரின் மீது சுமார் 10 ஆயிரம் பேர்கொண்ட அமெரிக்க படை தாக்குதலை ஆரம்பித்தது.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Nov 14, 2012 11:35 pm

வரலாற்றில் இன்று

நவம்பர்
09
1905: பிரான்ஸில் அரசாங்கத்தையும் தேவாலயத்தையும் பிரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1906: தியோடர் ரூஸ்வெல்ட், பனாமா கால்வாய் நிர்மாணப்புப் பணிகளை பார்வையிடச் சென்றதன் மூலம் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.
1913: அமெரிக்க கனேடிய மத்திய பகுதியிலுள்ள ஏரிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 19 கப்பல்கள் அழிக்கப்பட்டதுடன் 250 இற்கும் அதிகமானோர் பலியாகினர். ஏரிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை அழிவு இதுவாகும்.
1921: விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1937: சீனாவின் ஷாங்கை பிராந்தியத்தை ஜப்பானிய துருப்புகள் கைப்பற்றின.
1953: பிரான்ஸிடமிருந்து கம்போடியா சுதந்திரம் பெற்றது.
1960: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 43 வயதான ஜோன் எவ். கென்னடி வெற்றி பெற்று, அமெரிக்க வரலாற்றில் தெரிவுசெய்யப்பட்ட மிக இளம் ஜனாதிபதியானார்.
1963: ஜப்பானிய நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 458 பேர் பலியாகியதுடன் 839 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
1989: கிழக்கு ஜேர்மனியிலிருந்து மேற்கு ஜேர்மனிக்கு மக்கள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த பேர்லின் சுவர் வீழ்த்தப்பட்டது.
1985: சோவியத் யூனியனைச் சேர்ந்த கெரி கஸ்பரோவ் 22 ஆவது வயதில் சக நாட்டவரான அனடோலி கார்போவை தோற்கடித்து உலகின் மிக இளம் செஸ் சம்பியனானார்.
2005: ஜோர்தான் தலைநகர் அம்மானில் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் சுமார் 60 பேர் பலி.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Nov 14, 2012 11:36 pm

வரலாற்றில் இன்று

நவம்பர்
10

1444 - அங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்டோமான் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
1520 - டென்மார்க் மன்னன் இரண்டாம் கிறிசுடியான் சுவீடனை முற்றுகையிட்டபோது ஃச்டொக்ஃகோம் நகரில் பலரைக் கொன்றான்.
1674 - ஆங்கிலேய-டச்சு போர்: வெசுமின்சுடர் உடன்பாட்டின் படி புதிய நெதர்லாந்தை நெதர்லாந்து இங்கிலாந்திடம் ஒப்படைத்தது.
1887 - ஃகே(ஹே) சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிசு லிங் என்ற தொழிலாளர் தலைவர் இலண்டனில் டைனமைட் வெடிக்கவைத்து த் தற்கொலை செய்து கொண்டார்.
1928 - ஃகீரொ ஃகீட்டோ சப்பானின் 124வது மன்னரானார்.
1970 - சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
1971 - கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் புனோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமானங்களை அழித்தனர்.
1972 - பேர்மிங்ஃகாமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு அவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
1993 - தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
1999 - பாகிசுதானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாசு செரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Nov 14, 2012 11:36 pm

வரலாற்றில் இன்று

நவம்பர்
11

1918: முதலாம் உலக யுத்தத்தின்போது பிரான்ஸின் கொம்பெய்ன் நகருக்கு வெளியே ரயில்வே வாகனமொன்றில் வைத்து ஜேர்மனிக்கும் நேசநாடுகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 11 ஆம் மாதம் 11 ஆம் திகதி 11 மணிக்கு மேற்படி யுத்தம் முடிவுற்றது.

1918: ஆஸ்திரியாவின் மன்னர் முதலாம் சார்ள்ஸ் தனது அதிகாரங்களைத் துறந்தார்.

1940: இரண்டாம் உலக யுத்தத்தன்போது பிரித்தானிய கடற்படை, வரலாற்றில் முதல் தடவையாக விமானத் தாங்கி கப்பல் மூலம் இத்தாலிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது.

1965: ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) வெள்ளை சிறுபான்மையின அரசு ஒரு தலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1975: அங்கோலா சுதந்திரம் பெற்றது.

1981: அன்டிகுவா- பார்புடா ஐ.நாவில் இணைந்தன.

2000: ஆஸ்திரியாவில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் பனிச்சறுக்காளர்கள் 155 பேர் பலியாகினர்.

2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் காலமானார்.

2008: ஆர்.எம்.எஸ். குயின் எலிஸபெத் கப்பல் தனது கடைசி பயணத்தை துபாய் நகரை நோக்கி ஆரம்பித்தது.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Wed Nov 14, 2012 11:37 pm

வரலாற்றில் இன்று

நவம்பர்
12

1847: பிரித்தானிய மருத்துவர் சேர் ஜேம்ஸ் யங் சிம்ஸன் முதல் தடவையாக குளொரோபோமை மயக்க மருந்தாகப் பயன்படுத்தினார்.

1927: சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து லினோன் ட்ரொஸ்கி வெளியேற்றப்பட்டதையடுத்து சோவியத் யூனியனின் முழமையான அதிகாரம் ஜோசப் ஸ்டாலினிடம் வந்ததது.

1956 மொராக்கோ, சூடான் ஆகியன ஐ.நாவில் இணைந்தன.

1969: வியட்னாமின் மை லாய் கிராமத்தில் 16.03.1968ஆம் திகதி 347-504 பொதுமக்கள் அமெரிக்கப்படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்தை 12.11.1969ஆம் திகதி சுயாதீன ஊடவியலாளர் சிமோர் ஹேர்ஸ் உலகிற்கு அம்பலமாக்கினார்.

1970: கிழக்குப் பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) ஏற்பட்ட போலா சூறாவளியினால் சுமார் 5 லட்சம் பேர் பலி. இதுவே வரலாற்றில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய சூறாவளியாகும்.

1982: சோவியத் யூனியனில் பிரெஸ்னேவைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக யூரி அண்டேரொபோவ் பதவியேற்றார்.

1996: புதுடில்லியில் சவூதி அரேபிய பயணிகள் விமானமொன்றும் கஸகஸ்தான் சரக்கு விமானமொன்றும் நடுவானில் மோதிக்கொண்டதால் 349 பேர் பலி.

1980: நாசாவின் வொயேஜர் -1 விண்கலம் மூலம் சனிக்கிரகத்தின் வளையங்கள் முதல் தடவையாக படம் பிடிக்கப்பட்டது.

1981: மனிதர்களுடன் இரு தடவை விண்ணுக்கு ஏவப்பட்ட முதல் விண்கலம் எனும் பெருமையை கொலம்பியா விண்கலம் பெற்றது.

1990: ஜப்பானில் முடிக்குரிய இளவரசர் அகிஹிட்டோ அந்நாட்டின் 125 ஆவது மன்னரானார்.

2001: அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்தொன்றில் 260 பேர் பலி.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum