ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று-அச்சலா

+13
கா.ந.கல்யாணசுந்தரம்
றினா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
அருண்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
Muthumohamed
ஹர்ஷித்
krishnaamma
anandkce
சிவா
அச்சலா
17 posters

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Empty வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Thu Nov 01, 2012 5:00 pm

First topic message reminder :

நண்பர்களே வராலாற்றில் நடந்த நிகழ்வை இங்குதரலாம் என்று நினைக்கிறேன்..

வரலாற்றில் இன்று

நவம்பர்
1


1512 - வரலாற்றுப் புகழ் பெற்ற ஓவியர் மைக்கலாஞ்சலோவின் கைவண்ணத்தில் உருவான சிஸ்டின் தேவாலயத்தின் கூரை ஓவியங்கள் முதல் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
1520 - தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது.
1604 - ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1611 - ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1800 - வெள்ளை மாளிகைக்குக் குடியேறிய முதல் அமெரிக்க அதிபர் John Adams
1904 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.
1911 - இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன.
1914 - முதலாம் உலகப் போர்: சிலியில் ஜெர்மனியக் கடற்படையுடன் நடந்த மோதலில் பிரித்தானியக் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்
1928 - துருக்கிய மொழி சீர்திருத்தம் ஏற்பட்டது. அரபு எழுத்துக்கள் புதிய துருக்கிய எழுத்துக்களாக மாற்றப்பட்டன.
1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
1956 - நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம் உருவானது.
1956 -இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1957 - அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மக்கினாக் பாலம் அமைக்கப்பட்டது.
1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.
1981 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அன்டிகுவா பர்புடா விடுதலை பெற்றது.
1986 - தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக் கலைக்கப்பட்ட நாள் (முதல்வர் எம்.ஜி.ஆர்.
1993 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1998 - மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
1999 - ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Sat Dec 15, 2012 1:05 am

வரலாற்றில் இன்று

டிசம்பர்
15


1256 - மொங்கோலியப் பேரரசன் குலாகு கான் அலாமுட் (இன்றைய ஈரானில்) என்ற இடத்தைக் கைப்பற்றி அழித்தான்.

1799 - முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட முதலாவது ஆங்கில செமினறி கொழும்பில் அமைக்கப்பட்டது.

1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.

1891 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.

1905 - அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.

1955 - உலகின் எட்டாவது அதிசயமான ஓல்சன் கடிகாரம் டென் மார்க் தலைநகரான கோப்பன் ஹேகனில் ஓட விடப்பட்டது.

1960 - மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

1965 - த சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது.

1970 - சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.

1978 - மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

1991 - இந்தியத் திரையுலகில் இமயம் என்று வருணிக்கப்படும் சத்யஜித்ரேக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது
1994 - இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது
1997 - தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.

2001 - பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

2006 - கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by Guest Sat Dec 15, 2012 10:31 am

நன்றி அச்சு .. தொடருங்கள்
avatar
Guest
Guest


Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Sun Dec 16, 2012 8:42 am

வரலாற்றில் இன்று

டிசம்பர்
16



பெருமணல் கார்னெட் எதிர்ப்பு
1431 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
1497 - வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.

1598 - கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.

1653 - சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார்.

1707 - ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.

1773 - அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.

1920 - மிக மோசமான நில நடுக்கங்களுள் ஒன்று சீனாவின் கான்ஸீ மாநிலத்தைத் தாக்கியது, ரிக்டர் அளவுகோளில் எட்டாக பதிவான இயற்கைப் பேரிடரில் சுமார் 200 ஆயிரம் பேர் மடிந்தனர்.

1925 - இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.

1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.

1971 - பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1991 - கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது
2000 - ஜூபிடர் கோளைச் சுற்றும் Ganymede என்ற நிலாவில் ஐஸ் மேற்பரப்பின் கீழ் திரவ உப்புநீர்க்கடல் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Mon Dec 17, 2012 10:47 am

வரலாற்றில் இன்று

டிசம்பர்
17

பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்
1398 - சுல்தான் மெஹ்மூடின் படைகளை டில்லியில் வைத்து டீமூர் படைகள் தோற்கடித்தன.
1577 - பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டான்.
1718 - பெரிய பிரித்தானியா ஸ்பெயினுடன் போரை அறிவித்தது.
1819 - சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.
1834 - அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1903 - ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்தனர்.
1926 - லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.
1946 - தமிழ் நாட்டில் அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வியமைச்சராக இருந்த போது அவரது பெரும் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது
1947 - இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.
1957 - அமெரிக்கா முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் பரிசோதித்துப் பார்த்தது.
1961 - கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.
1989 - 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by Muthumohamed Mon Dec 17, 2012 1:24 pm

சூப்பருங்க



 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 M வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 U வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 T வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 H வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 U வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 M வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 O வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 H வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 A வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 M வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 E வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Thu Dec 27, 2012 12:15 am

வரலாற்றில் இன்று: டிசம்பர் 18

1642: ஆபெல் தாஸ்மென், நியூஸிலாந்தைச் சென்றடைந்த முதல் மனிதரானார்.
1878: அல் தானி குடும்பம் கட்டாரின் அரச குடும்பமாகியது.
1915: உட்ரோ வில்ஸன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த பேது எடித் போலிங் கால்ட் வில்சனை திருமணம் செய்தார்.
1935: லங்கா சமசமாஜக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
1956: ஐ.நாவில் ஜப்பான் இணைந்தது.
1958: உலகின் முதலாவது தொலைதொடர்பு செய்மதி 'புரஜெக்ட் ஸ்கோர்' விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1978: டொமினிக்கா ஐ.நாவில் இணைந்தது.
1997: எச்.ரி.எம்.எல். 4.0 பதிப்பு வெளியிடப்பட்டது.
2009: டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனில் உலக காலநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Thu Dec 27, 2012 12:16 am


வரலாற்றில் இன்று: டிசம்பர் 19

324 - லிசீனியஸ் ரோமப் பேரரசன் பதவியைத் துறந்தான்.

1154- இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றி முடிசூடினான்.

1606 - ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.

1871 - யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் (ordination) வழங்கப்பட்டன.

1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.

1932 - பிபிசி எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம் முதன் முதலில் வெளிநாடு ஒன்றுக்கு ஒலிபரப்பத் தொடங்கியது. Empire Service என்ற அந்தச் சேவையைப் பெற்ற நாடு ஆஸ்த்திரேலியா.

1941 - அடொல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத் தலைவர் ஆனார்.

1961 - போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1963 - சன்சிபார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தான் ஹமூட் பின் முகமது தலைமையில் முடியாட்சியைப் பெற்றது.

1972 - சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.

1983 - உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.

1984 - ஹொங்கொங்கின் ஆட்சியை ஜூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியாவோபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.

1986 - சோவியத் எதிர்ப்பாளி அந்திரேய் சாகரொவ் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

1997 - ஆங்கிலத் திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய Titanic திரைப்படம் முதன் முதலில் திரையிடப்பட்டது.

2000 - யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Thu Dec 27, 2012 12:19 am

வரலாற்றில் இன்று: டிசம்பர் 20


69 - நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெஸ்பசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான்.

1192 - சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்
1606 - வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.

1803 - பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

1844 - இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது
1860 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.

1876 - பங்கிம் சந்திர சட்டோபாத்தியா என்பவர் "வந்தே மாதரம்" எனும் இந்தியாவின் சுதந்திர எழுச்சிப் பாடலை எழுதினார்.

1917 - சோவியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.

1943 - பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.

1951 - அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக ஐடஹோவில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.

1955 - கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

1960 - வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.

1988 - போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கைச்சாத்திடப்பட்டது.

1989 - பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.

1998 - Houston ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகளை ஈன்றெடுத்தார்
1999 - போர்த்துக்கல் மக்காவுவை மக்கள் சீனக் குடியரசிடம் கையளித்தது


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Thu Dec 27, 2012 12:20 am

வரலாற்றில் இன்று டிசம்பர் 21

69 - வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.
1768 - நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.

1898 - pierre Curie, Marie Curie என்ற இரண்டு விஞ்ஞானிகள் ரேடியத்தின் கதிரியக்கத் தன்மையைக் கண்டுபிடித்து அறிவியல் வரலாற்றில் தங்கள் பெயரைப் பதித்து கொண்டனர்.

1902 - இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

1913 - உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.

1948 - அன்னை தெரசாவின் சீரிய பணி தொடங்கியது. கல்கத்தாவின் மோத்திஜிஸ் சேரியில் தனது தொண்டைத் தொடங்கினார் அந்த தெய்வத்தாய்
1968 - சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.

1971 - ஐநா அவையின் பொதுச் செயலாராக கூர்ட் வால்ட்ஹெயிம் தெரிவானார்.

1973 - அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.

1979 - ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கைச்சாத்திடப்பட்டது.

1991 - கசக்ஸ்தானின் அல்மா-ஆட்டா நகரில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

1995 - பெத்லகேம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by அச்சலா Thu Dec 27, 2012 12:21 am

வரலாற்றில் இன்று டிசம்பர் 22

1790 - துருக்கியின் இஸ்மாயில் நகரை ரஷ்யாவின் சுவோரவ் என்பவனும் அவனது படைகளும் கைப்பற்றின.

1807 - வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது
1845 - பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.

1849 - ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

1851 - இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.

1895 - எக்ஸ்ரேயைக் கண்டுபிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்ஹெம் ரோண்ட்ஜென் ( Wilhelm Rontgen) முதன் முதலாக தனது மனைவியின் கையை எக்ஸ்ரே எடுத்துக் காட்டினார்
1915 - மலேசியாவின் இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

1937 - லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
1938 - எழுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அடியோடு அழிந்து போய் விட்டது என்று கருதப்பட்ட கொயலாகாந்த் இன மீன் வகை அன்ஜூவான் தீவுக்கருகே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.

1989 - ஒரு வார சண்டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்யூனிச ஆட்சியாளரான நிக்கலாய் செய்செஸ்குவை வீழ்த்தி ருமேனியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1989 - கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பேர்லினில் பிரித்த "பிராண்டன்பேர்க் கதவு" 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.

1990 - மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன


 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வரலாற்றில் இன்று-அச்சலா - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று-அச்சலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum