புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக போலீசாருக்கு உதவியாக சிறப்பு காவல் இளைஞர் படை - ஜெயலலிதா அறிவிப்பு Poll_c10தமிழக போலீசாருக்கு உதவியாக சிறப்பு காவல் இளைஞர் படை - ஜெயலலிதா அறிவிப்பு Poll_m10தமிழக போலீசாருக்கு உதவியாக சிறப்பு காவல் இளைஞர் படை - ஜெயலலிதா அறிவிப்பு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக போலீசாருக்கு உதவியாக சிறப்பு காவல் இளைஞர் படை - ஜெயலலிதா அறிவிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2012 12:58 pm

தமிழக போலீசாருக்கு உதவியாக சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மாதம் ரூ.7,500 சம்பளத்துடன் மொத்தம் 50 ஆயிரம் பேர் இதற்காக நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை, அக்.30-

தமிழ்நாடு சட்டசபையின் குளிர் கால கூட்டம் நேற்று காலையில் தொடங்கியது. புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ப.தனபால் தலைமையில் நடைபெறும் முதலாவது கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரவை தொடங்கியதும், சட்டமன்ற விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை தாக்கல் செய்து கூறியதாவது:-

பற்றாக்குறையை சீர் செய்யும் வகையில்

சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, குற்ற நிகழ்வுகளை கண்டுபிடிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்தை சீர்படுத்துவது, இயற்கை இடர்பாடுகளின் போது மீட்பு பணிகளை மேற்கொள்வது, விழாக்காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களை முறைப்படுத்துவது என பல்வேறு இன்றியமையா பணிகளை தமிழக காவல் துறை ஆற்றி வருகிறது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையில் உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 629 ஆகும். இது, 635 மக்களுக்கு ஒரு காவல் அலுவலர் என்ற விகிதாச்சாரத்தில் அமைந்துள்ளது. 1.1.2012 நிலவரப்படி, இந்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு எதிராக 82 விழுக்காடு காவல் அலுவலர்கள் மட்டுமே பணியில் இருந்து வருகிறார்கள்.

காவல் துறையில் நிலவும் இந்த பற்றாக்குறையினை சீர்செய்யும் வகையில், காலியாக உள்ள 12,208 காவலர் பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புமாறு நான் உத்தரவிட்டேன்.

எழுத்து தேர்வு

எனது உத்தரவினை அடுத்து, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், காவலர்களுக்கான எழுத்து தேர்வை 24.6.2012 அன்று நடத்தியது. இதனைத்தொடர்ந்து, 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உடற் தகுதித் தேர்வினை நடத்திய தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 12.10.2012 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 12,162 காவலர்களுக்கு தற்போது மருத்துவப்பரிசோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவப்பரிசோதனைக்கு பின், தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்கு 7 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின்னரே அவர்கள் பணியில் சேரும் நிலை உள்ளது.

சட்டம்-ஒழுங்கு பராமரித்தல்...

இதனைக் கருத்தில் கொண்டும், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ள அளவுகோல்களின்படி 19,096 காவல் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும்; ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் ஓய்வு பெறுவதை கருத்தில் கொண்டும் பார்க்கும் போது, காவல் துறை ஈடுபடும் பல்வேறு நடவடிக்கைகளில் குறிப்பிட்ட சிலவற்றில் அவர்களுக்கு துணையாக ஒரு துணைப்படையை உருவாக்குவது அவசியமாகிறது.

இவ்வாறு அமைப்பதன் மூலம், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்களை கட்டுப்படுத்துதல், குற்றப்புலனாய்வு போன்ற பிரதான காவல் பணிகளில் தற்போதுள்ள காவலர்களை முழுமையாக ஈடுபடுத்த இயலும்.

சிறப்பு காவல் இளைஞர் படை

இதற்கு வழி செய்யும் வகையில், ``தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை'' என்ற ஒரு சிறப்பு படை தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சிறப்பு படைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல்; நீதிமன்றங்களால் வெளியிடப்படும் வருவிப்பு ஆணைகளை சார்வு செய்தல்; கூட்ட நெரிசல்களை ஒழுங்குபடுத்துதல்; இரவு ரோந்து மற்றும் ஓட்டுநர் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

மதிப்பூதியமாக ரூ.7,500

தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு விளம்பரம் செய்யப்பட்டு; மாவட்ட வாரியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் தேர்வு நடத்தப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் இத்தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர் ஆவர். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை உறுப்பினர்களாக பணி அமர்த்தப்படுவர்.

தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்களுக்கு பயிற்சி காலத்திலும்; பணி காலத்திலும் மாதம் ஒன்றுக்கு மதிப்பூதியமாக 7,500 ரூபாய் வழங்கப்படும். மேலும், அவர்கள் காவலர்களுக்கான சிறப்பு அங்காடிகளில் அளிக்கப்படும் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர். இது தவிர, அரிசி, கோதுமை, சர்க்கரை, மைதா, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வகுக்கப்பட்டுள்ள அளவுகோலின்படி அவர்களுக்கு வழங்கப்படும்.

படிப்படியாக நிரந்தரம்

ஓர் ஆண்டு காலம் திருப்திகரமான பணியினை நிறைவு செய்யும் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை உறுப்பினர்கள், காவல் துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் ஈர்த்துக் கொள்ளக் கூடிய தகுதியை பெறுவர். ஒவ்வொரு ஆண்டும் காவல் துறையில் காவலர் நிலையில் ஏற்படும் காலியிடங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இந்த சிறப்பு காவல் இளைஞர் படையிலிருந்து தேர்ச்சி பெறும் நபர்களுக்கு ஒதுக்கப்படும்.

சீருடை பணியாளர் தேர்வாணையம் இதற்கென ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தேர்வினை நடத்தும். அத்தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுபவரின் பட்டியல் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும். இத்தேர்வில் வெற்றி பெறாதவர்கள், 40 வயது வரை, இந்த தமிழ்நாடு சிறப்பு காவலர் இளைஞர் படையிலேயே, தொடர்ந்து பணியாற்றுவர். 40 வயதிற்கு மேல், அவர்களுக்கு, தமிழக அரசே வேறு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும்.

இந்த ஆண்டு 10,000 பேர் தேர்வு

இந்த நிதியாண்டில் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கென மாநிலம் முழுவதும் 10,000 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் இந்த நிதியாண்டிற்குள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

2013-2014-ம் நிதியாண்டில் 15,000 பேர் இந்த இளைஞர் படைக்கென தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப 50,000 உறுப்பினர்கள் வரை இந்த தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர்க்கப்படுவார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை வரவேற்று பாராட்டி, சபாநாயகர் ப.தனபால், உறுப்பினர்கள் செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), ஆர்.சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), பிரின்ஸ் (காங்கிரஸ்), கலையரசு (பா.ம.க.), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் பேசினார்கள்.

தினத்தந்தி

தமிழக போலீசாருக்கு உதவியாக சிறப்பு காவல் இளைஞர் படை - ஜெயலலிதா அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 30, 2012 4:38 pm

மிக்க மகிழ்ச்சியான செய்தி பகிர்வுக்கு நன்றி அண்ணா...
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் இத்தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர் ஆவர்
இப்பிரிவிற்கான மற்ற உடல் தகுதிகள் பற்றிய தகவல்கள் இருந்தால் தாருங்கள் அண்ணா...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக