புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
92 Posts - 61%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
7 Posts - 5%
viyasan
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
284 Posts - 45%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
19 Posts - 3%
prajai
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!


   
   

Page 8 of 23 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 23  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 03, 2013 12:59 pm

ஓய்வுக்கு பின்னும் உழைப்பு!

எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணி, அரசு பணியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஆனால், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், தினமும் மதிய உணவு தயார் செய்து, பார்சல் கட்டி, தன் ஸ்கூட்டியில் ஒவ்வொரு அலுவலகமாகப் போய், தேவையானவர்களுக்கு விற்க ஆரம்பித்துள்ளார். நியாயமான விலையில், தரமான உணவாகவும் இருப்பதால், இப்போது நிறைய அலுவலகங்களில், அவருக்கு வாடிக்கையாளர்கள் பெருகி விட்டனர்.
சமாளிக்க முடியாமல், உதவிக்கு ஆள் வைத்திருக்கிறார். இது போக, அலுவலர்கள் விரும்பினால், அவர்கள் வீட்டிற்கே போய் சாப்பாடு கொடுத்துவிட்டு, மாலையில் கேரியரை வாங்கி வருவார். இதனால், மாதந்தோறும் கணிசமான தொகை கிடைக்கிறது.
அவருக்கு வரும் பென்ஷன் பணமே போதுமானதாக இருக்க, இதற்கு என்ன அவசியம் என்று அவரிடமே கேட்டேன்.
"முப்பது ஆண்டுகளுக்கு மேல், அலுவலகம் சென்று வேலை பார்த்த பழக்கம் நின்று விட்டதால், உடலும், மனமும் சோர்ந்து போகும். அதற்கு இடம் கொடுக்காமல், ஏதாவது வேலை செய்யும் போது, உற்சாகம் கிடைக்கிறது. வெளியுலகத் தொடர்பும் கிடைக்கிறது. வாழ்க்கையில் சலிப்பு வராது ...' என்றார்.
ஒரு டிகிரி வாங்கிவிட்டு, அரசு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினர் யோசித்தால், இந்த மாதிரி எவ்வளவோ வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. யோசிப்பார்களா?

— விஜயலட்சுமி, மதுரை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 03, 2013 12:59 pm

"ஜிம்'முக்கு போகிறீர்களா?

என் நண்பர், தன் உடல் எடையை குறைக்க, சில நண்பர்கள் ஆலோசனையை கேட்டு, ஜிம்முக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள, 1,600 ரூபாய் பணம் செலுத்தி உள்ளார். காலை 5:00 மணிக்கே பயிற்சி மேற்கொள்ள சென்றார். அங்கு இருக்கும் பல பயிற்சி எந்திரங்களில், ஆர்வக்கோளாறு காரணமாக, எதற்காக பயிற்சி என தெரியாமலே, அதிக நேரம் பயிற்சி எடுத்துள்ளார்.
இப்படி பத்து தினங்கள் தான் சென்று இருப்பார். கை, கால், உடல் வலி ஏற்பட, ஜிம்மிற்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டு, படுத்த படுக்கையாகி, பின், மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
விவரம் அறிந்து, மருத்துவமனைக்கு சென்று, நண்பரை பார்த்தேன். அப்போது தான் விஷயமே தெரிந்தது. பல பயற்சிகளை, ஒரே நாளில், மிக அதிக நேரம் செய்ததன் விளைவு மற்றும் அதே காலக் கட்டத்தில் உணவு கட்டுப்பாடு எல்லாம் சேர்ந்து, உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல், இடுப்பு பிடிப்பு, மூட்டுவலி, தசைவலி என, நண்பர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேற்படி விபரீதத்தை, விளைவை பற்றி, மருத்துவர் சொன்ன பிறகே, நண்பர் புரிந்து கொண்டார். இது, உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு, ஒரு எச்சரிக்கை. ஜிம்மிற்கு பயிற்சி மேற்கொள்ள செல்லும் இளைஞர்கள், எதற்காக பயிற்சி எடுக்க போகிறோமோ, அந்த பயிற்சியை அளவோடு, உரிய முறையில் செய்ய வேண்டும். குறுகிய நாளிலேயே, பல பயிற்சிகளை மேற்கொண்டால், நண்பர் கதிதான். புரிகிறதா இளைஞர்களே!

— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 03, 2013 1:01 pm

செல்போன் விஷமம்!

அரசு அலுவலகம் ஒன்றில், உதவியாளராக பணி புரியும் முப்பது வயது பெண் நான். அவசர தகவல் தொடர்பாக, நான் போன் பேச முயன்ற போது, என் மொபைலில், "டவர்' கிடைக்க வில்லை. அருகிலிருந்த எங்கள் பிரிவு கண்காணிப்பாளரான, ஐம்பது வயது ஆசாமி, என்னிடம் நம்பர் கேட்டு, தன் போனில் பதிவு செய்து எனக்கு பேசக் கொடுத்தார்.
நான் போன் பேசும் போது, நாசூக்காக எழுந்து வெளியில் சென்று விட்டார். பேசி முடித்த நான், இணைப்பை துண்டிக்க முயன்ற போது தான், அது, "டச் ஸ்கிரீன்' வகை போன் என்பது தெரிந்தது. அத்தகு மொபைலை பயன்படுத்தி பழக்கம் இல்லாத நான், ஸ்கிரீனை, இரண்டு மூன்று முறை தொட்டு, இணைப்பை துண்டிக்க முயன்றேன்.
அப்போது திடீரென, மொபைல் திரையில், நிர்வாணக் காட்சிகளுடன், படு ஆபாசமான ஒரு வீடியோ காட்சி ஓட, அதைப் பார்த்த நான் அதிர்ந்து போனேன். நான் மொபைல் திரையை, "டச்' செய்து லைனை, "கட்' செய்ய முயன்ற போது, அது வீடியோ ஆப்ஷனுக்கு போய், அவர் பதிவு செய்து வைத்திருந்த ஆபாசப்படம் இயங்க ஆரம்பித்து விட்டதென புரிந்து கொண்டேன்.
என்ன செய்வது என திகைத்த நான், போனை அப்படியே மேஜை டிராயரில் போட்டு பூட்டி விட்டேன்.
ஆத்திர அவசரத்துக்கு பேசவும், தகவல் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்தப்படும் மொபைல் போனில், இப்படியா ஆபாச வீடியோவை பதிவு செய்து வைத்துக் கொள்வது? கருமம்டா சாமி!


— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 10, 2013 1:11 pm

இளம்பெண்ணுக்கு களங்கம் கற்பிக்காதீர்!

நான் பிளஸ் 2 படிக்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன், எனக்கு வயிற்றில் கட்டி இருந்ததால், ஆபரேஷன் செய்தனர். இப்போது நன்றாக இருக்கிறேன். இருந்தாலும், அந்த கட்டி மீண்டும் வயிற்றில் வந்து விடக்கூடாது என்பதற்காக, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். ஆனால், நான் தெருவில் போகும் போதும், வரும் போதும், என்னை ஒரு வினோத பிறவியை பார்ப்பது போல் பார்க்கின்றனர்.
என் அம்மாவிடம் சென்று, "உங்க பெண்ணுக்கு கர்ப்பப்பையை எடுத்து விட்டீர்களா அல்லது கிட்னியையா அல்லது வேறு ஏதாவது காதல் விவகாரத்தில் குழந்தை உண்டாகி, கலைத்து விட்டீர்களா?' என்றெல்லாம் கேட்டு, புண்படுத்துகின்றனர். இதனால் என் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று என் பெற்றோர் கவலைப்படுகின்றனர்.
பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லையே என்று கவலைப்படும் பெற்றோருக்கு, ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, நடக்காததை எல்லாம் நடந்ததாக கூறி, பிறரது துன்பத்தில் மகிழ்ச்சியடையும் இவர்கள், என்னுடைய மனக்கஷ்டத்தை உணர்வார்களா?

— ஊர் பெயர் வெளியிட விரும்பாத ந.அர்ச்சனா.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 10, 2013 1:14 pm

தேவை தரமான நிகழ்ச்சி!

கடந்த வாரத்தில் ஒருநாள், சென்னை வானொலியின் பண்பலை அலைவரிசை ஒன்றை கேட்க நேர்ந்தது. காலை, 10:00 மணியிலிருந்து, 11:00 மணி வரை ஒலிபரப்பான, ஒருமணி நேர நிகழ்ச்சி அது.
அன்று, ஒரு தலைப்பை கொடுத்து, அதை பற்றி நேயர்கள் தனக்கு தெரிந்தவற்றை அறிவிப்பாளரோடு கலந்துரையாட வேண்டும்.
"ஈயடிச்சான் காப்பி என்றால் என்ன?' என்பதே, அன்றைய தலைப்பு. காப்பியடிப்பதற்கும், ஈக்கும் என்ன சம்பந்தம்? இந்த பெயர் எப்படி உருவானது? இந்த பயனுள்ள, இன்றைய வாழ்க்கைக்கு உபயோகமான தலைப்பை பற்றி, நேயர்கள் தொலைபேசி மூலம் கலந்துரையாட வேண்டும். இதைப்பற்றித்தான், ஒரு மணி நேரமாக விவாதித்தனர். நிகழ்ச்சியை கேட்பதற்கு, படு கேவலமாக இருந்தது.
பத்திரிகைத் துறைக்கு அடுத்து, சக்தி வாய்ந்த ஒரு மீடியா, வானொலி. அந்த வானொலியில் அதுவும், அரசாங்கத்தை சேர்ந்த வானொலியில், இப்படி ஒரு மொக்கையான நிகழ்ச்சியை, காது கொடுத்து கேட்க முடியவில்லை. அந்த ஒரு மணி நேரமும், நேயர்கள் போட்டி போட்டு போன் செய்து பேசினர். ஒரு நேயர், ஈயைப் பற்றி விலாவாரியாக பேசியது கொடுமையிலும் கொடுமை!
தனியார் எப்.எம்.,களில் தரமான, உபயோகமான பல நிகழ்ச்சிகள், நேயர் களுக்கு பரிசுகளோடு ஒலிபரப்பாகும் இந்நிலை யிலும், சென்னை வானொலி மட்டும், இப்படி எந்த உபயோகமும் இல்லாத நிகழ்ச்சிகளை வழங்கி, நேயர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறது. இந்த நிலை எப்போது மாறும்?

— வே.விநாயக மூர்த்தி, சென்னை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 10, 2013 1:16 pm

வேண்டாமே, "டையபர்...!'

என் தோழியின் மகளுக்கு, துணையாக மருத்துவமனைக்கு சென்றேன். அவள் குழந்தையின் இடுப்பு பாகம், தொடையிடுக்கு எல்லாமே வெந்து போனாற்போல சருமம் சிவந்து இருந்தது. சின்னக் கை குழந்தைக்கு இப்படியாகக் காரணம் என்ன என்று எனக்கும் புரியவில்லை. குழந்தை பாத்ரூம் போகையில், வீறிட்டலறினாள். பரிசோதனை செய்த மருத்துவர், எல்லாம் கேட்ட பின், குழந்தையின் தாய்க்கு செம டோஸ் கொடுத்தார்.
காரணம் இதுதான்: குழந்தைக்கு தொடர்ச்சியாக டையபரை உபயோகித்திருக்கிறாள். அது தான், டையபர் மாட்டி விட்டுட்டோமே என்ற மெத்தனத்தில், குழந்தை நான்கைந்து முறை யூரின் போனதும், நிதானமாக மாற்றியிருக்கிறாள். காற்றாடவோ, துணியால் துடைத்தோ விடாமல், உடனே அடுத்தடுத்து மாட்டி விட்டிருக்கிறாள். இரவிலோ கேட்கவே வேண்டாம்.
இதனால், அந்த இடமே இன்பெக்ஷன் ஆகி, நோய் தொற்று ஏற்பட்டு, சிவந்து போய் இருக்கிறது. பொது இடங்களில் மற்றவர் முகஞ்சுளிக்காமல் இருக்கத்தான் டையபரே தவிர, இப்படி இடைவெளி­யின்றி உபயோகிக்க அல்ல என்று, மிகவும் கடுமையாக கடிந்து கொண்டார் மருத்துவர். அக்காலத்தில் பருத்திப் புடவைகளை நன்றாக துவைத்த பின் சதுரமாகவோ, முக்கோணமாகவோ, வெட்டியோ, தைத்தோ தான் குழந்தைக்கு உபயோகப்படுத்துவோம். ஈரமானதும் உடனே மாற்றி விடுவோம். அந்தத் துணிகளையும் நன்கு துவைத்து, வெந்நீரில் அலசி, டெட்டாலில் ஊற வைத்து, வெயிலில் காயப்போட்டு, சாம்பிராணி புகை காட்டி, மடித்து வைப்போம். இதை உபயோகித்து வந்தால், குழந்தைக்கும் சுகம். நமக்கும் சந்தோஷ திருப்தி.
இப்போதோ... டையபர் தான் வசதி என்று காசை கொட்டி வாங்கி, காசுக்கும் கேடு, சுகாதாரத்துக்கும் கேடு. உடல் நலத்துக்கும் கேடு வரவழைத்துக் கொண்டுள்ளனர். எதுவானாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு. அளவாய் அவசியத்துக்கேற்ப உபயோகியுங்கள்.
இன்றைய இளந்தலைமுறை தாய்மார்களே...கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள்!

— ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 17, 2013 10:20 am

சபாஷ்... நல்ல யோசனை!
-
என் தோழியின் கணவர், அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம், ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து வெளியே வருவாள் எதிர் வீட்டு பெண். வந்ததும், நைசாக தோழியின் கணவரை பார்ப்பாள்; அவரும் அந்த பெண்ணை பார்த்து, ஒரு வெட்டு வெட்டி விட்டு செல்லத் தவறுவதே இல்லை.
மனதுக்குள் பொருமிய தோழி, விஷயத்தை என்னிடம் கூறினாள். நான் ஒரு யோசனை கூறினேன். அதன்படி, எதிர் வீட்டு பெண்ணின் கணவர், அலுவலகம் செல்லும் போதெல்லாம், வெளியே வந்து நிற்க ஆரம்பித்தாள் தோழி. ஆண் பிள்ளையாயிற்றே, சும்மா இருப்பாரா... "சைட்' அடிக்க ஆரம்பித்து விட்டார் தோழியை. அவ்வளவுதான்! எதிர் வீட்டுபெண்ணை பார்ப்பதே அபூர்வமாகி விட்டது.
"முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்' என்ற உபாயம் பலித்து விட்டது. இப்போது தோழியின் கணவரும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். பெண்களே... "சைட்' அடிக்கும்கணவரை திருத்த, சண்டை போட வேண்டாம்; சமயோஜிதமாக சிந்தித்து, செயல் பட்டாலேபோதும்!
— ஆ.சுகாசினி, சென்னை.
நன்றி:வாரமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 17, 2013 10:27 am

விவஸ்தை இல்லாமல் விமர்சிக்கும் ஆசாமிகள்!
-
எனக்கு தெரிந்த ஒருவர், வாரியம் ஒன்றில் பொறுப்பான உத்தியோகத்தில்இருக்கிறார். அவருக்கு தெரிந்தவர்களை எங்காவது சந்திக்க நேர்ந்தால், நலம்விசாரிக்க மாட்டார்."என்னய்யா... முன்னாடி துருத்திக்கிட்டிருந்த பல்லை, இன்னுமா டாக்டர்கிட்ட காட்டி பிடுங்காம இருக்கிற; ரொம்பஅசிங்கமா இருக்கு...' என்று, அவர் குறையை பலர் முன்னிலையில் விமர்சிப்பார். வந்தவர் முகமோ சுருங்கிப் போகும். இதே போல், வேறு ஒருவரை பார்த்து, "என்னடா... உன் தலை மயிர் இப்படி நரைச்சு போச்சு! ஒரேயடியா சுண்ணாம்புத் தலையனாட்டம்ஆயிட்டியே...' என்பார்.
-
மற்றொருவரின் வழுக்கை தலையை பார்த்து,"என்னப்பா... இப்படி பூராவுமே கொட்டிப் போச்சு!ஹூம்... எண்ணெய் செலவு மிச்சம்...' என்று சொல்லி சிரிப்பார். வந்தவருக்கோ,"இந்த ஆளை ஏன் சந்தித்தோம்'என்று ஆகிவிடும்.
இவரது முரட்டு சுபாவத்தையும், அநாகரிக பேச்சையும் அறிந்த காரணத்தினால், அவரிடம் நேரிடையாக எதுவும் சொல்ல பயப்படுகின்றனர். இப்படி பலர் முன்னிலையில், கேலியும், கிண்டலுமாக பேசுவதால், அவர்களது மனம் எவ்வளவு வேதனைப்படும் என்பதை, இவரைப் போன்ற மரமண்டைகள் எப்போதுதான் உணர்வரோ!
— வீ.கார்த்திக் ராஜா, மதுரை.
-
-
டாம்பீக கிறுக்குகள்!
-
சமீபத்தில், ஒரு மண விழாவுக்குச் சென்றிருந்தேன். அனைவரும்,பட்டு வேட்டி - ஜிப்பாவும், பட்டுப் புடவையுமாய் குவிந்திருந்தனர். முகத்தில் அப்பிய, "மேக்-அப்'பும், செயற்கை குசல விசாரிப்புகளுமாய் ஓடிக் கொண்டிருந்தது விழா.
அப்போது, அழுக்கு வேட்டி, சட்டையுடன், கரிய நிறத்தில் ஒருவர் வந்தார்.
-
உள்ளே நுழைந்ததும்,"நெடுநெடு'வென வளர்ந்திருந்த ஒருவரை நெருங்கி, வாய் நிறைய சிரிப்புடன், "என்னப்பா... எப்படி இருக்கே... எப்ப ஊர்லேர்ந்து வந்தே...' என ஆர்வமாய் விசாரித்தார். இவரைப் பார்த்ததும்,"நெடுநெடு'வின் முகமே மாறிப் போனது. அவரை ஏற, இறங்கப் பார்த்து, "ம்... ம்... நேத்து தான் வந்தேன்...'எனக் கூறி, மொபைல் போனில் பேசுவது போல் பாவனை காட்டி, நகர்ந்தது.
-
இவர் அதைக் கண்டு கொள்ளாமல், அடுத்தவரை நெருங்கினார்... "எனக்கு பக்கோடா உண்டாபா?' என, உரிமையுடன் அவரிடம் கேட்க,அவர், "அங்கே இருக்கு... கேட்டு வாங்கிக்கோ...' என ஒருமையில் பேசி, அனுப்பி வைத்தார்.
இவர் முகம், லேசாய் வாடியது. பொருட்படுத்தாமல், தட்டில் பக்கோடா வாங்கிக் கொண்டு, ஓரமாய் ஒதுங்கினார்.
ஒரு நிமிடம் கூட ஆகவில்லை...ஒரு வயதான டாம்பீகம், இவர் அருகே வந்து, "ஏம்பா... நீ போய்ட்டு அப்புறமா வாயேன்...' என்றது. இதைக் கேட்டதும், அவர் வாயில் இருந்த பக்கோடா, தொண்டையில் இறங்க மறுத்தது. "கூப்பிட்டாங்க...வந்தேன்...' எனக் கூறியபடியே, தட்டை கீழே வைத்து விட்டு, நடையைக் கட்டினார்!
இவர் யார் என்று விசாரித்தபோது, இப்போது டாம்பீகமாய்நிற்கிறாரே, அவர், குடும்பத்தில் சொத்து பிரச்னை ஏற்பட்ட போது, பலரிடமும் பேசி, அனைவரும் ஏற்றுக் கொள்வது போன்ற ஒருநல்ல தீர்வைச் சொன்ன, படிக்காத மேதை என்றனர்.
-
இந்த மேதை, இப்போது, அழுக்குச் சட்டையாம், ஆகாதஜாதியாம் என்று கூறி, ஒதுக்க நினைத்ததை எண்ணி, மனம் வலிக்க, நானும் நடையைக் கட்டினேன்!
— பா.மீனா, மாயவரம்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 17, 2013 12:43 pm

நன்றி பவுன்ராஜ்! நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 24, 2013 1:02 pm

ஹாஸ்டல் பெண்களே....

லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிப் பணிபுரியும் என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். லேடிஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த நான், அங்கு உலாவிக் கொண்டிருந்த சில பெண்களின் உடையை பார்த்ததும் அதிர்ந்து போனேன். மெல்லிய சிறு மேலாடைகள்; இடுப்பில், குட்டை பாவாடை போன்றவற்றை சிலர் அணிந்திருந்தனர். கையில்லாத பனியன் - லுங்கி போன்றவற்றுடனும் சிலர் இருந்தனர். என் தோழியிடம் கேட்ட போது, முழுக்க முழுக்க பெண்கள் தானே இருக்கிறோம் என்பதாலும், கோடை வெயிலை சமாளிக்கவும், இப்படி அரைகுறை ஆடையில் அவர்கள் இருப்பதாகக் கூறி, "இதிலென்ன தப்பு...' என்றும் கேட்டாள்.
அவள் சொல்வது ஒருபுறம் நியாயமாகப் பட்டாலும், இது மற்ற பெண்களுக்கு மனரீதியான, "காம்ப்ளெக்ஸை' ஏற்படுத்தும் என்பதே உண்மை. வளப்பமான பெண்களுக்கு பிரச்னை இல்லை. என்னைப் போன்ற ஒல்லிப்பாச்சான்களும், சுமாரான தோற்றம், அழகு மற்றும் நிறம் கொண்டவர்களும், இது போன்ற அரைகுறை ஆடையுடன் அழகிகளை பார்க்கும் போது, தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறோம்.
லேடிஸ் ஹாஸ்டல் தோழியரே... பெண்களின் உடல்வாகு, ஆளுக்கு ஆள் மாறுபடும். இதுபோன்ற விஷயங்களில், தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் என் போன்ற பெண்களின், "காம்ப்ளெக்சை' அதிகரிக்கும் வகையில், உங்கள் உடல் தோற்றத்தை வெளிச்சம் போட்டு காட்டத்தான் வேண்டுமா? யோசியுங்கள் ப்ளீஸ்!

— எஸ்.ஜானகி, சென்னை.

Sponsored content

PostSponsored content



Page 8 of 23 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக