ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!

+19
பூவன்
தளிர் அலை
அசுரன்
Aathira
chinnavan
விஸ்வாஜீ
செம்மொழியான் பாண்டியன்
krishnaamma
Powenraj
ஹர்ஷித்
balakarthik
யினியவன்
ஜாஹீதாபானு
Muthumohamed
றினா
ராஜா
பாலாஜி
சிவா
அருண்
23 posters

Page 4 of 23 Previous  1, 2, 3, 4, 5 ... 13 ... 23  Next

Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty இது உங்கள் இடம்..!

Post by அருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.


Last edited by அருண் on Mon Oct 29, 2012 1:33 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by அருண் Sun Dec 02, 2012 2:37 pm

குடிகார கணவரா நீங்கள்?

என் அலுவலகத்திற்கு, தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் கடைநிலை பெண் ஊழியரின் கணவர், சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி, கேட்டு, எப்படி இத்துயர செய்தியை, அப்பெண்ணிடம் பக்குவமாக கூறுவது; அவர் எப்படி இதை தாங்கிக் கொள்வார் என, பலவாறு சிந்தித்து, சில ஆண் ஊழியர்கள் கலந்து பேசி, பின், அப்பெண்ணை அழைத்து, தகவல் கூறினோம். அப்பெண், அச்செய்தியை மிக லேசாக எடுத்துக் கொண்டதுடன், ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் விட்டு விட்டு, விடுப்பு கடிதம் எழுதி தந்து விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார்.
மறுதினம், சில அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள், இறந்தவரின் வீட்டிற்கு சென்றோம். அப்பெண்ணே, எங்களை எதிர்கொண்டார். தன் கணவர் மிகப் பெரிய குடிகாரர் என்றும், அனுதினம் பணம் கேட்டு துன்புறுத்துவார் என்றும், மேல்நிலைப் படிப்பு படிக்கும் பெண் குழந்தை முன், செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதுடன், தகாத வார்த்தைகளால், வேறு ஒரு ஆண்மகனோடு இணைத்து பேசி அடிப்பார் என்றும், அனுதினம் செத்து பிழைத்தோம். என் பிரார்த்தனையை இன்று இறைவன் கேட்டு, கண் திறந்து விட்டார் சார்... இனி, நான் என் மகளுடன் குறைந்த வருவாய் என்றாலும், நிம்மதியாக வாழ்வை எதிர்கொள்வேன் என, பெருமூச்சு விட்டு பொருமினார். ஆறுதல் கூற சென்ற ஆண்களாகிய நாங்கள் தான், அழுது வருந்தினோம்; இப்படி ஒரு ஆண்மகனா என்று!
இக்கடிதம், குடிகார கணவன், சந்தேகப் பேர்வழி கணவன்மார்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். நீங்கள் செத்து போனால் அழ, மனைவி, குழந்தைகள் வேண்டும். குடியைவிட்டுவிட்டு, வாழும் கொஞ்ச காலத்தில், மனைவி குழந்தைகளை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள். இல்லையேல், மேற்சொன்ன கதிதான் குடிகாரனாகிய உங்களுக்கும்.

— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by அருண் Sun Dec 02, 2012 2:38 pm

மனித நேயம்...!

எங்களுக்கு பக்கத்து தெருவில் குடியிருக்கும் நபர், தீபாவளிக்கு முன்தினம், துவைத்த துணிகளை தேய்ப்பதற்கு எடுத்துச் சென்றார். அங்கு துணிகளை தேய்த்துவிட்டு, தேய்த்த பெண்மணிக்கு தீபாவளி பரிசாக, 200 ரூபாய் வழங்கினார். அதோடு, முடி திருத்தகம் சென்றார். அங்கு கடந்த வாரம் தான் முடி வெட்டிக் கொண்டார். தீபாவளிக்காக மீண்டும் முடிவெட்டிவிட்டு, அவருக்கு கைலி, சட்டை ஆகியவைகளோடு, பணமும் கொடுத்து, தீபாவளி வாழ்த்துக் கூறினார்.
ஐம்பது வயதான இவர், அதிகம் சம்பாதிப்பவர் இல்லையென்றாலும், அனைவரும் தீபாவளி கொண்டாடி மகிழ வேண்டும் என்ற மனித நேயத்துடன் செயல்பட்டதை, வெகுவாக வியந்து பாராட்டினேன். அவரிடம் கேட்கும்போது, 'நாம் வேலை செய்யும் இடங்களில், நமக்கு தீபாவளி போனஸ் வழங்குகின்றனர். அது, போல இவர் பணி செய்வது நமக்காக. ஆதலால், நாம் தான், "போனஸ்' வழங்க வேண்டும்...' என்று கூறினார்.
இப்பழக்கத்தை அனைவரும் கடைபிடித்தால், மனித நேயம் வளரும்.

— கே.குமார், ராமநாதபுரம்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by அருண் Sun Dec 02, 2012 2:40 pm

கறிக்கடை கலப்படம்!

நான் சொல்லப்போகும் பிரச்னை, தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இருக்கிறது. எங்க ஊரில், பத்துக்கும் மேற்பட்ட மட்டன் கடைகள் உள்ளன. கறி தீர்ந்து விட்டால், புதிய ஆட்டை ரோட்டில் போட்டு, துடிக்க துடிக்க அறுப்பர். அது நல்ல ஆடா, சீக்கு பிடித்த ஆடா என ஆராய்ந்து, சுகாதார ஆய்வாளரால், சீல் குத்தப்பட்டதல்ல. தவிர, கடைகளில் வட்டவடிவ கட்டையில், மாமிச சப்பைகள் இருக்கும். இரு ஆட்டின் தொடைப்பகுதிகள் கொக்கியில் தொங்கவிடப்பட்டிருக்கும். நாம் அரைக்கிலோ மட்டன் கேட்டால், 300 கிராம் வரை தொடை கறியிலிருந்து அரிந்து, தராசில் இடுவர். மீதி இருநூறு கிராமுக்கு, கட்டை மீதிருக்கும் மாட்டுக்கறி மாமிசத்தை எடுத்து, தராசில் இட்டு, ஐநூறு கிராமாக்குவர்.
ஆட்டு மாமிசம் ரோஜா நிறத்திலும், மாட்டுமாமிசம் அடர் குங்கும நிறத்திலும் இருக்கும். இந்த கலப்படத்தை, நம் கண் முன்னே மூணு சீட்டுக்காரர் போல் செய்வர். இதனாலேயே நான் மட்டன் வாங்குவதை நிறுத்தி விட்டேன். மீறி வாங்கினால், தொங்கும் ஆட்டு சப்பையை அப்படியே எடைபோட்டு வாங்கி விடுவேன் அல்லது தலை மற்றும் சுட்டு ரோமம் நீக்கிய ஆட்டுக்கால்கள் வாங்குவேன். என் சந்தேகம் நியாயமானதா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

— பெயர், ஊர் சொல்ல விரும்பாத வாசகர்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by அருண் Mon Dec 10, 2012 1:13 pm

எத்தனை காலம்தான் ஏமாற்றுவரோ!

மற்றவர்களை ஏமாற்றுவதற்கு எப்படியெல்லாம் யோசித்து செயல்படுகின்றனர் என்பதற்கு, நானும், என் நண்பரும் ஏமாந்த கதை ஒரு உதாரணம். நான் ஒரு சீனியர் சிட்டிசன். சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு அரசு கெஸ்ட் ஹவுஸ் அருகில், என் நண்பருக்காக நின்று கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில், இரண்டு டிரைவர்கள் இருந்தனர். ஆட்டோவில், 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் அமர்ந்திருந்தார்.
ஆட்டோ ஓட்டி வந்தவர் என்னிடம் வந்து, "சார் உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமா?' என்றான். "தெரியும்' என்றேன்.
"அவர்கிட்ட கொஞ்சம் பேசுங்க சார். ஆயிரம் டாலர் மாற்ற வேண்டும் என்று சொன்னார். பர்மா பஜார் அழைத்து சென்றோம். அங்கே ஆயிரம் டாலரை வாங்கிக் கொண்டு ஓடி விட்டனர். இப்போது அவரது கையில் பணமில்லை. எங்களுக்கு ஆட்டோ சார்ஜே, 700 ரூபாய் ஆகிவிட்டது...' என்று கூறினர்.
நான் அந்த நபரிடம் ஆங்கிலத்தில் பேசினேன். "இன்று மாலை, 4.00 மணி பிளைட்டில் சிங்கப்பூர் போக வேண்டும். பல்லாவரத்தில் மனைவியும், குழந்தையும் காத்திருக்கின்றனர். காலையிலிருந்து சாப்பிடவில்லை. இவர்களுக்கு ஆட்டோ சார்ஜ் கொடுக்கவும் பணம் இல்லை. தற்சமயம் என்னிடம் இருப்பது இந்த ரோலக்ஸ் வாட்சும், சோனி ஹான்டிகாம் கேமராவும்தான்...' என்று கூறி, இரண்டுக்கும், பில்லும், அதற்கு டூட்டி கட்டிய ரசீதும் காட்டினார். மொத்தம் 38,000 ரூபாய். "இதை வைத்துக் கொண்டு, 15,000 கொடுங்கள். நான் ஊர் போய் சேர வேண்டும்...' என்றார்.
"என்னிடம் பணம் இல்லை. அதனால், எனக்கு வேண்டாம். ஏதாவது கடையில் கொடுங்கள், பணம் கிடைக்கும்...' என்றேன்.
இதற்குள் என் நண்பர் வந்து விட்டார். இந்த கதையை கேட்ட அவர், "ஐயோ நம் ஊருக்கு வந்து கஷ்டப்படுகின்றனரே... அந்த, 4.00 மணி பிளைட் பிடிக்க வேண்டுமே என்ற கவலையில் உதவ முன் வந்தார். அருகிலிருந்த வங்கிக்கு அழைத்துச் சென்று, 15,000 ரூபாய் எடுத்து கொடுத்து, மேலும், அவர் கேட்காமலே, 1,000 ரூபாயும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
அதன்பின், அவரிடம் வாங்கிய ரோலக்ஸ் வாட்ச், சோனி கேமரா இரண்டையும், அவரது நண்பர் கடைக்கு எடுத்து சென்றோம், அதன் மதிப்பறிய. அவர் ரோலக்ஸ் வாட்ச், 1,500 ரூபாய் என்றும், கேமரா, 2,500 ரூபாய் என்றும் கூறினார். இரண்டுமே டூப்ளிகேட்; சைனா மேக் என்றார்.
அதிர்ச்சியில் பேசவே முடியவில்லை. மொத்தத்தில் நண்பருக்கு, 12,000 ரூபாய் நஷ்டம். "இந்த வயதில் பாடம் கற்றுக் கொண்டதற்கு எனக்கு செலவு, 12,000 ரூபாய்...' என்றார் மனம் தளர்ந்தவராக.
இப்படிப்பட்டவர்கள், இது போன்ற டூப்ளிகேட் பொருட்களுடனும், டூப்ளிகேட் ரசீதுடனும் சுற்றிக் கொண்டுதான் இருப்பர். இளகிய மனம் படைத்தவர்கள் ஏமாந்து விடாமல் இருக்க, எங்கள் அனுபவம் உதவும் என்று நம்புகிறேன்.

— எஸ்.ராமச்சந்திரன், சென்னை.


Last edited by அருண் on Mon Dec 10, 2012 1:15 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by அருண் Mon Dec 10, 2012 1:14 pm

முன்னெச்சரிக்கை முத்தண்ணா!

அலுவலக வேலையாக, சக அலுவலருடன் புதுச்சேரி சென்றிருந்தோம். ஓட்டலில் ரூம் பதிவு செய்தவுடன், "லெட்ஜர்ல ரூம் நெம்பர் போடாதீங்க. நான் போய் ரூமை ஒரு தடவை, "செக்' பண்ணி பார்த்துட்டு வந்துடறேன். பிறகு, ரூம் நெம்பரை என்ட்ரி போடுங்க...' என்று சொல்லி, ரூம்பாயுடன் ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று, சோதித்த பின், "ஓ.கே., ரூம் நெம்பர் போடுங்க...' என்று சொல்லி, சாவியை வாங்கிக் கொண்டான்.
அவனது இந்த நடவடிக்கை, எனக்கு ஆச்சரியமாக இருக்கவே, அவனிடம் இது குறித்து கேட்டேன்... "அது ஒண்ணுமில்லை மாப்ள... நாம தங்குறது ஒண்ணும் ஸ்டார் ஓட்டல் இல்ல. சாதாரண ஓட்டல் தான். ஒரு முறை, திருச்சியில ஒரு ஓட்டல்ல பாத்ரூம் குழாயை திறந்த போது, துருப்பிடித்த குழாய் உடைந்து, டிரஸ் பாழானது மட்டுமில்லாம, அந்த ஓட்டல்காரங்க, குழாயை, நான் தான் உடைச்சேன்னு சொல்லி, அதுக்கும், "தண்டம்' வசூலிச்சிட்டாங்க. அதுலேர்ந்து, எந்த ஊருக்குப் போய், எந்த ஓட்டல்ல தங்கினாலும், ரூம்ல எல்லாம் ஒழுங்கா, உருப்படியா இருக்கான்னு, "செக்' பண்ணிப் பாக்குறதை, வழக்கமா வச்சிருக்கேன்...' என்றான்.
ஓட்டல்களில் ரூம் போடுவதிலும், இவ்வளவு பிரச்னைகள் உள்ளதை நண்பனின் அனுபவம் உணர்த்தியது.

— ந.மகேந்திரவர்மன், மறைமலைநகர்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by அருண் Mon Dec 10, 2012 1:16 pm

நமீதா வேண்டாம் மச்சான்ஸ்!

உற்சாக பானத்தை ஆராதிப்பவன் நான். உ.பா., அருந்திவிட்டு தூங்கும் நாட்களில் எல்லாம், இடுப்பு கைலி நெகிழ்ந்து, நமீதா போல் அலங்கோலமாய் படுத்து கிடப்பேன் போல. இது, என் மனைவிக்கு பழக்கமான காட்சியாக இருந்தாலும், என் 15 வயது மகனின் முகத்தை சுளிக்க வைத்திருக்கிறது. பல விதமாய், "கமென்ட்' அடிக்க ஆரம்பித்தான்.
நானும், கைலியை இறுக்கிக்கட்டி, அய்யம்பேட்டை பாய் போல் இடுப்பில் சுருட்டி விட்டு பார்த்தேன். கைலி மேல் பெல்ட் அணிந்தும் பார்த்தேன்; பலனில்லை. காலையில் கைலி அவிழ்ந்து கிடந்து, "மச்சான்ஸ்...' என்றது.
கடைசியில் என் நண்பர் ஒருவர் ஐடியா கொடுத்தார். உ.பா., அருந்த பெர்முடா டவுசருடன் போய், அதனுடனேயே அருந்துவது. உ.பா.,விற்கு பின், தொளதொள பைஜாமா அணிந்து தூங்குவது. பெர்முடாவும், பைஜாமாவும் என் மானத்தை காப்பாற்றுகின்றன.
உ.பா., அன்பரே... லுங்கி தவிர்ப்பீர்; தொளதொள பெர்முடா டவுசர் அணிவீர்!

— ஆர்.ஒய்.எம்.பாலகிருஷ்ணன், சாத்தூர்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by அருண் Mon Dec 10, 2012 1:40 pm

உழைப்புத் திருடர்கள்!

உலகம் உருண்டை என்பது, நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன், தொழிலாளர்கள் சிகாகோ நகரில் போராடி, ரத்தம் சிந்தி, உயிர்களை இழந்து, "எட்டு மணி நேர வேலை...' நேரத்தை வென்றெடுத்தனர். அதுவரை அவர்களை, 12 மணி நேரம் முதல், 16 மணி நேரம் வரை, கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தனர்.
தற்போது தமிழகத்தில், பல தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வெளிநாட்டு கம்பெனிகளில்,
12 மணி நேர வேலை அமலில் உள்ளது. அவர்களுக்கு ஆதரவாகப் பரிந்து பேச, அங்கு தொழிற்சங்கங்களும் கிடையாது.
நண்பரின் மகன், அதுபோன்றதொரு கம்பெனியில் பணியில் இருந்தான். லீவு போடாமல் வேலைக்கு வந்தால், 500 ரூபாய் இன்சென்டிவ். லீவு போட்டால், 500 ரூபாய் கட் என்று ஒப்பந்தம். ஊதியம், 4,000 ரூபாய்.
நண்பரின் மகன், ஒரு ஆண்டாக விடுமுறையே எடுக்காமல், பணிபுரிந்து இருக்கிறான். சம்பளத்தை மட்டும் பிரதி மாதம், 10ம்தேதி கொடுத்து வந்தவர்கள், இன்சென்டிவை இன்னும் சாங்ஷன் ஆகவில்லை என்று தட்டிக் கழித்து வந்தனர்.
சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல், தொடர்ந்து எட்டு நாட்கள் லீவு எடுத்துவிட்டு, மீதி, 22 நாட்கள் வேலை செய்து இருக்கிறான். ஆனால், அதற்குரிய சம்பளத்தைத் தராமல், ஒப்பந்தப்படி, 4,000 சரியாகப் போச்சு என்கின்றனராம்!
இந்த உழைப்புத் திருடர்களை என்ன செய்வது?

— வி.லட்சுமணன், மயிலாப்பூர்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by பாலாஜி Mon Dec 10, 2012 1:48 pm

அருண் wrote:நமீதா வேண்டாம் மச்சான்ஸ்!

உற்சாக பானத்தை ஆராதிப்பவன் நான். உ.பா., அருந்திவிட்டு தூங்கும் நாட்களில் எல்லாம், இடுப்பு கைலி நெகிழ்ந்து, நமீதா போல் அலங்கோலமாய் படுத்து கிடப்பேன் போல. இது, என் மனைவிக்கு பழக்கமான காட்சியாக இருந்தாலும், என் 15 வயது மகனின் முகத்தை சுளிக்க வைத்திருக்கிறது. பல விதமாய், "கமென்ட்' அடிக்க ஆரம்பித்தான்.
நானும், கைலியை இறுக்கிக்கட்டி, அய்யம்பேட்டை பாய் போல் இடுப்பில் சுருட்டி விட்டு பார்த்தேன். கைலி மேல் பெல்ட் அணிந்தும் பார்த்தேன்; பலனில்லை. காலையில் கைலி அவிழ்ந்து கிடந்து, "மச்சான்ஸ்...' என்றது.
கடைசியில் என் நண்பர் ஒருவர் ஐடியா கொடுத்தார். உ.பா., அருந்த பெர்முடா டவுசருடன் போய், அதனுடனேயே அருந்துவது. உ.பா.,விற்கு பின், தொளதொள பைஜாமா அணிந்து தூங்குவது. பெர்முடாவும், பைஜாமாவும் என் மானத்தை காப்பாற்றுகின்றன.
உ.பா., அன்பரே... லுங்கி தவிர்ப்பீர்; தொளதொள பெர்முடா டவுசர் அணிவீர்!

— ஆர்.ஒய்.எம்.பாலகிருஷ்ணன், சாத்தூர்.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Mon Dec 10, 2012 2:49 pm

அனைத்தும் சூப்பருங்க



இது உங்கள் இடம்..! - Page 4 Mஇது உங்கள் இடம்..! - Page 4 Uஇது உங்கள் இடம்..! - Page 4 Tஇது உங்கள் இடம்..! - Page 4 Hஇது உங்கள் இடம்..! - Page 4 Uஇது உங்கள் இடம்..! - Page 4 Mஇது உங்கள் இடம்..! - Page 4 Oஇது உங்கள் இடம்..! - Page 4 Hஇது உங்கள் இடம்..! - Page 4 Aஇது உங்கள் இடம்..! - Page 4 Mஇது உங்கள் இடம்..! - Page 4 Eஇது உங்கள் இடம்..! - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by ஜாஹீதாபானு Mon Dec 10, 2012 2:54 pm

அருண் wrote:நமீதா வேண்டாம் மச்சான்ஸ்!

உற்சாக பானத்தை ஆராதிப்பவன் நான். உ.பா., அருந்திவிட்டு தூங்கும் நாட்களில் எல்லாம், இடுப்பு கைலி நெகிழ்ந்து, நமீதா போல் அலங்கோலமாய் படுத்து கிடப்பேன் போல. இது, என் மனைவிக்கு பழக்கமான காட்சியாக இருந்தாலும், என் 15 வயது மகனின் முகத்தை சுளிக்க வைத்திருக்கிறது. பல விதமாய், "கமென்ட்' அடிக்க ஆரம்பித்தான்.
நானும், கைலியை இறுக்கிக்கட்டி, அய்யம்பேட்டை பாய் போல் இடுப்பில் சுருட்டி விட்டு பார்த்தேன். கைலி மேல் பெல்ட் அணிந்தும் பார்த்தேன்; பலனில்லை. காலையில் கைலி அவிழ்ந்து கிடந்து, "மச்சான்ஸ்...' என்றது.
கடைசியில் என் நண்பர் ஒருவர் ஐடியா கொடுத்தார். உ.பா., அருந்த பெர்முடா டவுசருடன் போய், அதனுடனேயே அருந்துவது. உ.பா.,விற்கு பின், தொளதொள பைஜாமா அணிந்து தூங்குவது. பெர்முடாவும், பைஜாமாவும் என் மானத்தை காப்பாற்றுகின்றன.
உ.பா., அன்பரே... லுங்கி தவிர்ப்பீர்; தொளதொள பெர்முடா டவுசர் அணிவீர்!

— ஆர்.ஒய்.எம்.பாலகிருஷ்ணன், சாத்தூர்.

:அடபாவி:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 23 Previous  1, 2, 3, 4, 5 ... 13 ... 23  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum