புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதிக்கே நீதியில்லையா? Poll_c10நீதிக்கே நீதியில்லையா? Poll_m10நீதிக்கே நீதியில்லையா? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நீதிக்கே நீதியில்லையா? Poll_c10நீதிக்கே நீதியில்லையா? Poll_m10நீதிக்கே நீதியில்லையா? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நீதிக்கே நீதியில்லையா? Poll_c10நீதிக்கே நீதியில்லையா? Poll_m10நீதிக்கே நீதியில்லையா? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நீதிக்கே நீதியில்லையா? Poll_c10நீதிக்கே நீதியில்லையா? Poll_m10நீதிக்கே நீதியில்லையா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதிக்கே நீதியில்லையா? Poll_c10நீதிக்கே நீதியில்லையா? Poll_m10நீதிக்கே நீதியில்லையா? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நீதிக்கே நீதியில்லையா? Poll_c10நீதிக்கே நீதியில்லையா? Poll_m10நீதிக்கே நீதியில்லையா? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நீதிக்கே நீதியில்லையா? Poll_c10நீதிக்கே நீதியில்லையா? Poll_m10நீதிக்கே நீதியில்லையா? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நீதிக்கே நீதியில்லையா? Poll_c10நீதிக்கே நீதியில்லையா? Poll_m10நீதிக்கே நீதியில்லையா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிக்கே நீதியில்லையா?


   
   
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Tue Nov 06, 2012 6:48 am

கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமைகளைக் கண்டு, சாதாரண மனிதர்களுக்கே கோபம் வருவது இயல்பு. அப்படியிருக் கையில், நீதி தேவதை மட்டும் எத்தனை நாள்களுக்குத்தான் உறங்குவது போன்று நடிக்க முடியும்?


ஆனாலும் நீதி தேவதையின் விழிப்பு அதிகாரத்துக்கு பிடித்தமான ஒன்றல்ல.
அதிகாரத்தால் திரையிடப்பட்டு, நடந்தேறும் தில்லு முல்லுகளை நீதி தேவதையின் விழிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். ஆகவே கும்பகர் ணனைப்போல் எப்போதும் நீதியின் துயில் கொள்ளலையே ஆட்சியாளர்கள் விரும்பினர்.

ஆயினும், தன்னைச் சூழ நடக் கும் அநியாயங்களின் உக்கிரம் தாங்கமுடியாமல் நீதிதேவதை யால் நிம்மதியாக உறங்க முடிய வில்லை. அதிகாரம் தன்னுடைய பொம்மை என்று இது நாள்வரை நினைத்திருந்த நீதி தேவதை மீள் உயிர் பெற்றாள்.

அரியணை வாசிகளின் அக் கிரமங்கள் ஒவ்வொன்றாக வெளிப் படுத்தப்பட்டு, அவர்களின் ஒவ்வொரு நகர்தலும் கேள்விக் கணைகளால் முற்றுகைக்கு உள்ளாகின. தவறு செய்தவர்களுக்கு விழி பிதுங்கியது. அவர்களின் தயவில் ஒட்டிக்கொண் டிருந்தவர்களுக்கு பேதி குடிக்காமலே வயிறு கலங்கியது.

இனியும் விட்டு வைத்தால், தமது இருப்பு கேள்விக் குறியாகி விடும் என்பது அதிகாரத்துக்குப் புரிந்திருந்தது. தான் ஊட்டி வளர்த்த கடா மார்பில் பாய்ந்த பின்னர், வாளாவிருக்குமா ஆட் சித்தரப்பு? தொடங்கியது கண்ணுக்குத் தெரியாத போர். நீதியும் இந்தப் போரை எதிர்கொள்ள தயாராகவே இருந்தது. தமக்காகப் போராடும் நீதியின் பின்னால் மக்களின் ஆதரவு நிழல் பெரிதாகத் தொடங்கிற்று.

புறக்கணிப்புகள், சலுகைக் குறைப்புகள், திட்டமிட்ட பழிச்சொற்கள், அமைச்சர்களின் இடைவிடாத அறிக்கைகள் என்பவற்றை அதிகாரம் கைவலிக் கும்வரை பிரயோகித்துக் கொண்டே இருந்தது. எதற்கும் நீதி வளைந்து கொடுப்பதாக இல்லை. நீதியோடு, சீண்டி விட்டு சும்மா இருக்கவும் முடியாது. இருந்தால் நீதிதன் கைவரிசையை காட்டிவிடும்.

சாம, தான, பேத வழிக ளெல்லாம் நீதியின் முன்பயனற்றுப் போய்விட தண்ட வழியைக் கையிலெடுத்தனர் அதிகாராத்தின் அடிவருடிகள். நீதிச்சேவை ஆணைக் குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண சென்று கொண்டிருந்த வாகனத்தை கம்பிகள், பொல்லுகள் என்பவற்றை கைகளி லேந்திய கும்பல் சூழ்ந்து கொண்டது.

உயிர் தப்பியதே பெரிய காரியம் என்று எண்ணும் அளவுக்கு நிகழ்ந்தது தாக்குதல். மஞ்சுள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதிகாரத்தின் அடுத்த குறிபிரதம நீதியரசர்தான். அவரை வீழ்த்த காய்கள் வேக வேகமாக நகர்த்தப்பட்டன.

இந்தச் சதுரங்க ஆட்டத்தில் தன் பக்கத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுசரணையோடு, பிரதம நீதியரசருக்கு எதிராக பிரேரணையை அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும் பான் மையோடு இந்தப் பிரரேணை நிறைவேற்றப்பட்டால், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக் காவை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று அரசு எண்ணுகிறது.

ஆயினும் இதற்குப் பதிலடியாக சட்டத்தரணிகள் சங்கம், "திட்ட மிட்டே பிரதம நீதியரசர் மீது வீண் பழி சுமத்தப்பட்டு, இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது'' என்பதை மக்களிடம் சொல்லி, போராடுவதற்கான ஆயத்தங்களில் இறங்கி விட்டது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை அந்தப் பதவியில் விருப்பப்பட்டு அமர்த்தியவரே ஜனாதிபதிதான். ஆனால் அதிகாரம் நினைத்த திசையில் நீதியின் தராசை வளைக்க ஷிராணி இடங்கொடுக்கவில்லை.

இதற்கு முன்னரும் தனக்குச் சார்பாக நீதியை வளைக்க ஜனாதிபதி முயற்சியை மேற் கொண்டிருந்தார் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

"மஹிந்தவுக்குச் சார்பாக தீர்ப்பை நான் ஒரு வழக்கில் வழங்கியதால் தான் இன்று அவர் ஜனாதிபதியாக முடி சூடிக்கொள்ள முடிந்தது'' என்று எந்த வெட்கமும் இல்லாமல் நீதியை மஹிந்தவுக்காக அடகு வைத்த கதையை சரத் என் சில்வா போட்டு உடைத்திருக்கிறார். ஆனால், ஷிராணி அப்படியல்ல, அவர் சரத் என் சில்வாவைப்போல சுடலை ஞானம் வந்து தத்துவம் பேசாமல், நிகழ்கணத்திலேயே தன் கைகளில் கறை படியாமல் பார்த்துக் கொள்ளவே விரும்பினார்.

அதற்குப் பரிசே அவரது பதவியைப் பறிக்கும் முயற்சி களும், அதன் விளைவாக வந்துள்ள பிரேரணைகளும். அறம் பிழைத்த நாட்டில் அறமே கூற்றாக மாறும். இதற்கு புராணங்கள் முதல் கிட்டியகாலம் வரை நிறைய உதாரணங்கள் உண்டு. தனக்கு எதிராக கருத்துத் தெரிவித்தமைக்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவியைப் பறித்த மாலைதீவு ஜனாதிபதி, தன்னுடைய கதிரையைப் பறிகொடுக்க வேண்டியிருந்தது.

அதேபோன்று பாகிஸ்தான் ஜனாதிபதியும் உயர் நீதிமன்றத்தோடு, முரண்டு பிடித்ததால் தன்னுடைய பதவிக்கு எப்போது முற்றுப்புள்ளி விழப்போகிறதோ என்று நிம்மதியின்றி ஏங்கிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய மிக நெருக்கமான நட்பு நாடுகளான மாலைதீவு, பாகிஸ்தான் போன்றவற்றின் ஜனாதிபதிகள் செய்த தவறையும் அதனால் எழுந்த விளைவையும் கண்முன் கண்ட பின்னும் நீதித்துறையோடு சண்டித்தனம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர் இலங்கையின் ஆட்சியாளர்கள்.

யார் கண்டது, கெடுகாலம் வந்துவிட்டால் கண்ணும் அறிவும் கெட்டுவிடுமாம். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

நீதி தேவதையே தனக்கு நீதிகோரி புலம்பி அழுவது இலங்கைத் திருமணி நாட்டில் மட்டுமே நிகழும் அதிசயம். நடப்பதை எல்லாம் கைகட்டிக்கொண்டு, பார்ப்பது மட்டுமே எம்மால் முடிந்த காரியம்.
நன்றி உதயன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Nov 06, 2012 12:34 pm

இலங்கையைப் பொறுத்தவரையில் சுதந்திரமான நீதித்துறைதான் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உறுதுணையாக அமையும்.

அண்மையில் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முன்னாள் நகரசபை உறுப்பினர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் இயக்கத்தின் மாதாந்த மக்கள் சந்திப்பின்போது இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிக்கே நீதியில்லையா? Monthly-Meeting-02.11.2012-5-300x168

சிறுபான்மை மக்களை ஆட்சி செய்வதில் இலங்கை அரசுக்கு பங்களாதேஷ் அரசின் முன்மாதிரி சிறந்த பாடமாக அமைய வேண்டும்

-PMGGயின் மாதாந்த மக்கள் சந்திப்பில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தெரிவிப்பு-
சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பேணுவதில் பங்களாதேஷ் அரசாங்கம் சிறந்த முன்னுதாரணமான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதிலிருந்து இலங்கை அரசாங்கம் இன ஐக்கியத்திற்கான பாடங்களைக் கற்றுகொள்ள வேண்டும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மாதாந்த மக்கள் சந்திப்பு கடந்த 02ம் திகதி வெள்ளிக்கிழமை அதன் மக்கள் அரங்கில் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு “கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இன்றைய அரசியல் நிலவரம்” எனும் தலைப்பில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் உரையாற்றினார்.

அதன்போது அவர் மேலும் கூறியதாவது:

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிடும் பேச்சுக்களின்போது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எதனையும் பற்றி பேரம் பேசாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் தமக்கான ஒரு வேட்பாளர் ஆசனம் குறைக்கப்பட்டதன் காரணமாக தனித்துப் போட்டியிட்டது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளையும், இன, மதவாதப் போக்குகளையும் வெகுவாகக் கண்டித்து சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க மாகாண சபைகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் வேண்டும் எனக் கோஷமெழுப்பி ஆணை கோரிய அக்கட்சி, தேர்தலின் பின் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படாமல் அனைத்தையும் மறந்து விட்டு மக்கள் அளித்த ஆணைகளின் மூலம் கிடைத்த மாபெரும் அரசியல் அதிகார பலத்தை அரசாங்கத்தின் காலடியிலேயே மீண்டும் சமர்ப்பித்து சரணாகதியடைந்தது.

முஸ்லிம் சமூகத்தின் தன்மானத்தைக் காக்கவும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை கிழக்கு மண்ணில் நிலை நிறுத்தவும் ஆணை கேட்டு வந்த ஸ்ரீ.ல.மு.காங்கிரசுக்கு கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அமோக ஆதரவை வழங்கி “தங்கத் தாம்பாளத்தை” அதன் கைகளில் கொடுத்திருந்த போதிலும், பதவிக்கும், பவுசு வாழ்வுக்கும் அடிமைப்பட்டுப்போன அக்கட்சி அந்தத் “தங்கத் தாம்பாளத்தை” கையிலெடுத்துக் கொண்டு இப்போது பேரின சமூகத்திடம் பிச்சை பெற்று தன் காலத்தைக் கழித்து வருகின்றது.

இதனை “சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு” என்றும், “மர்ஹும் அஷ்ரப் அவர்கள் கண்ட முஸ்லிம் முதலமைச்சர் கனவை நனவாக்கிய சாதனை” என்றும் அக்கட்சித் தலைவர் இப்போது கருத்துத் தெரிவித்து மக்களைச் சமாளிக்க முற்பட்டு வருகின்றார்.

மர்ஹும் அஷ்ரப் அவர்கள் கனவு கண்ட முஸ்லிம் முதலமைச்சர், அரசாங்கத்தின் கட்டளைக்குப் பணிந்து கைப்பொம்மையாகச் செயற்படும் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரையல்ல. இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று ஏற்படும்போது முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகொன்றைப் பெற்று அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும், செயற்படவும் சக்திபெற்ற முஸ்லிம் முதலமைச்சரையே அவர் கருதியிருந்தார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மாத்திரமல்ல, தேர்தல் பிரச்சார காலத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளையும் போக்குகளையும் காரசாரமாக விமர்சித்து முஸ்லிம் சமூகத்தை உணர்ச்சியூட்டி வாக்குகளைப் பெற்றதன் மூலம் கிழக்கு மாகாண அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக அக்கட்சியை நிலை நிறுத்திய வாக்காளர்களையோ அல்லது பிரதேச மத்திய குழு முக்கியஸ்தர்களையோ சந்தித்து கலந்துரையாடி முடிவெடுக்காமல் கொழும்பில் இருந்தவாறே நாட்களை நகர்த்திச் சென்று இறுதியில் மீண்டும் இந்த அரசாங்கத்திற்கே ஆதரவு வழங்கும் தீர்மானத்தையும் அவர்கள் எடுத்தனர்.

அரசாங்கம் என்ன விலை கொடுத்தாயினும் கிழக்கு மாகாண அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியத்தில் இருப்பதை நன்குணர்ந்த நிலையிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து எதுவும் பேசாது “கட்சியைப் பாதுகாக்க” என்ற வழமையான பல்லவியைக் கூறி அரசுடன் இணைந்ததன் மூலம் இன்று அக்கட்சி அதன் ஆதரவாளர்கள் மத்தியிலும், அரசாங்கத்தின் பார்வையிலும் “சுயமரியாதை இழந்து” நிற்பதை அவதானிக்க முடிகின்றது.

தேர்தல் முடிவின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸை தம்முடன் இணைந்து சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்காக ஆட்சியமைக்க வருமாறு பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்தனர். அதற்காக முதலமைச்சர் பதவியுட்பட முஸ்லிம் சமூகத்தின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாகவும் அவர்கள் உலகறியத் தெரிவித்தனர். எனினும் “சுயமரியாதையுடன் கூடிய” அந்த நல்ல வாய்ப்பை ஸ்ரீ.ல.மு.கா. தலைமை தவறவிட்டு விட்டது.

கிழக்கு மாகாண அரசாங்கத்தை அமைப்பதற்காக அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் “முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தி” அத்தியாவசியமாகத் தேவைப்பட்டிருந்த அந்த வேளையில் அந்த சக்தியைப் பெற்றிருந்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் இரு தரப்புக்களுடனும் தனது சமூகத்தின் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசியிருக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வொன்று அரசாங்கத்தினாலோ அல்லது உலக நாடுகளின் அழுத்தங்களுக்கமையவோ ஏற்படும்போது அந்தப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் அந்தஸ்த்து என்ன? அரசியல் தீர்வில் முஸ்லிம்களின் பங்கு என்ன? என்பது குறித்து இவர்கள் இருதரப்புடனும் பேசியிருக்க வேண்டும்.

மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்த பட்ச அதிகாரங்களையென்றாலும் சுதந்திரமாகவும் மக்களுக்குப் பயனள்ளதாகவும் அமுல்படுத்துவதற்கான உத்தரவாதம் குறித்து பேசியிருக்க வேண்டும்.

வட கிழக்கிலுள்ள காணிகளில் முஸ்லிம் சமூகத்திற்கான நிலப்பகிர்வு குறித்து பேசியிருக்க வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கத்துடன் பேசுவதை விடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டிய தேவையே முஸ்லிம் சமூகத்திற்கு அதிகமுள்ளது.

முஸ்லிம் சமூகத்துடைய மீள் குடியேற்றம் குறித்து பேசியிருக்க வேண்டும். இனப்பிரச்சனைக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 33 கிராமங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறியுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. இதுபோலவே திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும், வடக்கில் பல பிரதேசங்களிலுமாக ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இவர்களின் மீள்குடியேற்றம் பற்றியும் அரசாங்கத்துடனும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் முஸ்லிம் காங்கிரஸ் பேசியிருக்க வேண்டும்.

நிர்வாக ரீதியாக ஓரங்கட்டப்பட்டு வரும் முஸ்லிம் சமூகத்திற்கான நிர்வாக பங்கீடுகள் குறித்தும் பேசியிருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறெல்லாம் பேசாமல்தான் நாட்களைக் கடத்தி வந்து இறுதியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருந்தது. முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கவெனத் தோற்றுவிக்கப்பட்டு, முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளால் வளர்த்தெடுக்கப்பட்டு பேரம் பேசும் சக்தி மிக்கதாகத் திகழ்ந்த முஸ்லிம் காங்கிரஸ், மக்களை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டு விட்டு தனது “கட்சியைப் பாதுகாக்கும்” காரணத்தைக் கூறி அரசுக்கு முட்டுக்கொடுத்திருப்பதை எந்த வகையிலும் முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்க முடியாது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் முஸ்லிம் சமூகம் மாத்திரமல்லாது சிங்கள சமூகமும், தமிழ்ச் சமூகமும், தமிழர் தரப்பு அரசியல் சக்திகளும் அவர்களின் அச்சுறுத்தல்களுக்கும், அடக்கு முறைகளுக்கும், தாக்குதல்களுக்கும் உட்பட்டிருந்த யதார்த்தத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோடு தேர்தலுக்கு முன்னர் நாம் நடாத்திய பேச்சு வார்த்தைகளின்போது அவர்கள் பகிரங்கமாகவே ஏற்றுக் கொண்டிருந்ததுடன் அக்காலப் பகுதியில் இடம்பெற்ற வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம், பள்ளிவாசல் படுகொலைகள், முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட முஸ்லிம் சமூகம் சந்தித்த இழப்புகளுக்கான தமது கவலைகளையும் அவர்கள் ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தனர்.

இப்போது அத்தகைய அச்சுறுத்தல் எதுவுமில்லாத காலத்தில் தமிழ்ச் சமூகத்தோடு முஸ்லிம் சமூகமும் இணைந்து சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளையும், இருப்பையும் பேணுவதற்கு முன்வர வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்களின் செல்வாக்கு மிக்க அரசியல் கட்சியான ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறெல்லாம் தமிழர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கௌரவமிக்க அழைப்புக்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறியே அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து கிழக்கின் ஆட்சியதிகாரத்தை மீண்டும் அரசாங்கத்தின் கைகளுக்கு ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை தாரை வார்த்து அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் முதலாவது பிரேரணையாக முன்வைக்கப்பட்ட ‘திவிநெகும’ சட்டமூலத்திற்கும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவை வழங்கி சிறுபான்மை சமூகங்களின் அதிகாரப் பரவலாக்கத்திற்கு ஆணை வழங்கிய முஸ்லிம் சமூகத்திற்கு வரலாற்றுத் துரோகத்தைச் செய்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூப்பாடு போட்டு முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைக் கோரிய ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ், பின்னர் அமைச்சுப் பதவிகளுக்காகவும், அரச சுகபோகங்களுக்காகவும் “கட்சியைப் பாதுகாக்கும்” பல்லவியைப் பாடிக் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து 18வது அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி துரோகமிழைத்தது.

இந்த 18வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு போன்ற நல்லாட்சிக்கான அத்திவாரங்கள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கு ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் மூலம் கிடைத்த அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததுடன் அதிகாரத்தைப் பறித்து வீட்டுக்கு அனுப்புவோம் என்று விமர்சித்த ஜனாதிபதி தொடர்ந்தும் பல்லாண்டு காலம் அதே நிறைவேற்று அதிகாரத்துடன் நாட்டை ஆட்சி செய்வதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த 18வது திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் கண்மூடித்தனமாக ஆதரவளித்ததன்விளைவும், பலாபலன்களும்தான் இப்போது மகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பறிப்பதற்கும், 13வது அரசியல் திருத்தத்தை இல்லாமல் செய்து மாகாண ஆட்சி முறைமையையே இல்லாதொழிப்பதற்கும், நீதித்துறையில் அரச அதிகாரத்தை பிரயோகிப்பதற்கும் வழி வகுத்துள்ளது.

“திவி நெகும” சட்டமூலம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது என்பதன் காரணமாகவே மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றே நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்பதை மிக எளிதாக அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும். மாகாண சபைகளுக்கு 13வது அரசியல் திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட ஒரு சில அதிகாரங்களையும் அச்சட்ட மூலம் பறிப்பதாக அமைந்திருக்கவில்லை என்றிருந்தால் உயர்நீதிமன்றம் அவ்வாறு ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கத் தேவையில்லை.

நிலைமை இவ்வளவு தெளிவாக இருக்கையிலும் அச்சட்ட மூலத்தை ஆராய வேண்டும், பரிசீலிக்க வேண்டும் என்றெல்லாம் மு.கா. தலைமைகள் கருத்து வெளியிட்டது மக்களை ஏமாற்றும் முயற்சியின் ஒரு வடிவமாகும். கிழக்கு மாகாண சபையில் அச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படும்போது கால அவகாசம் கோருவோம் என அக்கட்சியின் செயலாளர் கூறியிருக்கையில், அமெரிக்காவில் இருந்து தலைவர் அதனை ஆதரிக்குமாறு குறுஞ்செய்தி அனுப்பியதன் காரணமாகவே தாம் அச்சட்ட மூலத்தை ஆதரித்ததாக மாகாண சபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இதுபோலவே நமது காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து மாகாண சபைக்குச் சென்றுள்ள உறுப்பினர், அவரது அரசியல் வழிகாட்டியான பிரதியமைச்சர் அச்சட்ட மூலத்தை ஆதரிக்கச் சொன்னதற்காக தான் ஆதரித்ததாக விளக்கமளித்துள்ளார். இப்படி அச்சட்ட மூலத்தின் தாற்பரியம் என்ன? அதன் சாதக பாதகம் என்ன? என்பதெல்லாம் தெரியாமல், தமக்கு வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படாமல் தம்மை அரசியல் பதவிகளில் அமர்த்திய தலைவர்களின் விருப்பங்களுக்கமைவாக அவர்களுக்கு விசுவாசமாகவே கிழக்கு மாகாண சபையிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் அச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்து அதனை நிறைவேற்றியுள்ளனர்.

“திவிநெகும” சட்ட மூலம் பற்றியும், அதிலுள்ள பாதகமான அம்சங்கள் பற்றியும் ஏற்கனவே நாம் தெளிவான விபரங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையிலும், ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்து அச்சட்ட மூலத்தை ஆதரிக்க வேண்டாம் எனக் கேட்டிருந்தோம். எனினும் அவர்கள் அதனைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. கட்சி அரசியல் கண்ணோட்டத்துடன் அதனைப் புறந்தள்ளி மக்களுக்குத் துரோகம் செய்துள்ளனர்.

“திவி நெகும” சட்ட மூலத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் அதிகாரப் பறிப்புக்கு அங்கீகாரமளித்துள்ள ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ், எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சுக்களில் எவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கான அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்போகிறது? அவ்வாறு அதிகாரப் பகிர்வைக் கோருவதற்கு அக்கட்சிக்கு என்ன அருகதையும், யோக்கியதையும் இருக்கின்றது?

அந்த “திவி நெகும” என்ற சுழிக்காற்றின் ஒரு புயலாக மாறி இப்போது 13வது அரசியல் திருத்தத்தை நீக்கி மாகாண ஆட்சி முறைமையை ஒழிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்ற சூறாவளியாக மாறியிருக்கின்றது மாத்திரமல்ல, அரசாங்கம் விரும்பிய மாதிரி அனுசரித்துச் செயற்படாமல் சட்டத்திற்கும், நீதிக்கும் மதிப்பளித்து முன்சொன்னவாறு ஒரு ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் தீர்ப்பொன்றை அளித்தமைக்காகவே இன்று பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பத்திரிகையும் நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாகவும், பிரதம நீதியரசருக்கு எதிராகவும் அரசாங்கத்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள இக்குற்றப்பத்திரிகையை எந்த வகையிலும் முஸ்லிம் சமூகம் ஆதரிக்க முடியாது.

ஏனெனில், இந்த நாட்டில் நீதிமன்றங்களினூடாக நீதியை மிக அதிகமாக எதிர்பார்க்க வேண்டிய மூன்றாவது சிறுபான்மைச் சமூகமாக முஸ்லிம் சமூகமே இருந்து கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தினாலும்,நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியினாலும், சிங்கள – தமிழ் பெரும்பான்மைச் சமூகங்களினாலும் முஸ்லிம் சமூகத்திற்கு மறுக்கப்படுகின்ற பல்வேறு அடிப்படை உரிமைகளையும், பிணக்குகளுக்கான தீர்வுகளையும் சுதந்திர நீதித்துறை மூலமாகவே நாம் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

இத்தகைய நிலையில் நீதித்துறையையும் அரசியல் அதிகாரத்துக்குட்படுத்தும் வகையில் பிரதம நீதியரசருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கைக்கு எமது முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்களும் ஆதரவளித்திருப்பதானது முஸ்லிம் சமூகத்தின் நிர்க்கதியான நிலைக்கு வழிவகுப்பதாகவே அமையும்.

நாம் முஸ்லிம்கள் என்கிற அடிப்படையில் எந்தவொரு விடயத்தையும் முதலில் மார்க்க ரீதியாகவும், பின்னர் சமூக ரீதியாகவும் பார்க்க வேண்டும். இறுதியாகவே தமது அரசியல் கட்சி, அதன் கொள்கை என்ற பார்வையில் நோக்க வேண்டும். எனினும் இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் அவ்வாறு மார்க்கத்தையும், சமூகத்தையும் முன்னிலைப்படுத்தி எந்தவொரு விடயத்தையும் பரிசீலிப்பதாக இல்லை. தமது கட்சி நலன்களையும், தமது அரசியல் இருப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதையுமே முன்னிலைப்படுத்தி அதற்காகவே தமது ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலைமை இனிமேலும் நீடித்தால் எதிர்வரும் காலங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் மோசமான கையறு நிலைமையையே இந்நாட்டில் ஏற்படுத்தும். எமது சமூகத்திற்கான இழப்புக்கள் பற்றியும், அநீதிகள் பற்றியும் எங்கும் எவரும் வாய் திறந்து பேச முடியாத அடிமைச் சூழலை வலிந்து உருவாக்கும். எமது கைவிரல்களைக் கொண்டே எமது கண்களைக் குருடாக்கிக் கொண்ட அவலத்துக்கு எமது சமூகம் உள்ளாகுவதை எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது போகும். எனவே இன்றைய அரசியல் நிலவரம் குறித்து முஸ்லிம் சமூகத்திலுள்ள சகல தரப்பினரும் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியமும் அவசரமுமாகும்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பேணுவதில் பங்களாதேஷ் அரசாங்கம் சிறந்த முன்னுதாரணமான செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதை இந்த இடத்தில் நாம் கவனித்தாக வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த நாட்டில் சிறுபான்மையாக வாழுகின்ற பௌத்த மக்களின் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் அந்த நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட அதிரடியான நடவடிக்கைகளிலிருந்து இலங்கை அரசாங்கம் பாடங்களைக் கற்றுகொள்ள வேண்டும்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் உடனடியாக் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி தாக்குதல்தாரிகளெனச் சந்தேகிக்கப்பட்ட 160க்கும் அதிகமானவர்களை கைது செய்து, தனது அமைச்சர் ஒருவரையும் அப்பகுதிக்கு அனுப்பி வைத்து அங்கு வாழும் சிறுபான்மையினரான பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது மாத்திரமல்லாமல் சிறுபான்மை பௌத்த மக்களிடம் மன்னிப்பும் கோரியது மாத்திரமன்றி இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என்ற சகல பாதுகாப்பு உத்தரவாதங்களையும் பங்களாதேஷ் அரசு வழங்கி இருந்தது. அந்த நாட்டு அரசாங்கம் அங்கு சிறுபான்மையாக வாழுகின்ற பௌத்த மக்களின் பாதுகாப்பையும் மத உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்காக மேற்கொண்ட பொறுப்புமிக்க நடவடிக்கைகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் துரதிர்ஷ்டம், நமது நாட்டிலோ சிறுபான்மையிலும் சிறுபான்மையாக வாழும் நமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் எல்லாம் அரசுக்கு முட்டுக்கொடுத்து ஆதரவளித்து அமைச்சுப் பதவிகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பேரின மதவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கின்ற போதிலும் இன்று வரை ஒருவரைத்தானும் இலங்கை அரசாங்கம் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியதாக வரலாறில்லை. அந்தளவுக்கு செல்வாக்கு இழந்த நிலையில்தான் எமது முஸ்லிம் சமூகம் அரசுக்கு விசுவாசமாக இன்றும் ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றது.

ஒரு நாட்டில் ஜனநாயகம் நிறைந்த நல்லாட்சி நடப்பதற்கு நிறைவேற்றதிகாரம், நீதித்துறை, சட்டவாக்க சபை என்ற மூன்று அம்சங்களும் ஒன்றையொன்று அதிகார ஆக்கிரமிப்புச் செய்யாமல் செம்மையாகச் செயற்பட வேண்டும் உனபது பொதுவானதொரு கோட்பாடாகும். ஆனால் நமது நாட்டில் நிறைவேற்றதிகாரமானது சட்டவாக்க சபையை மூன்றிலிரு பெரும்பான்மை பெற்று ஆளுங்கட்சிக்கான அதிகார ஆடுதளமாக்கிக் கொண்டிருப்பதுடன் இப்போது நீதித்துறையையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கு முனைப்புக்காட்டி வருகின்றது.

இது அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும். சுதந்திரமான நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஈமான் கொண்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் மார்க்கத்தின் பெயரால் கடமையாகும். ஆட்சியதிகாரத்துக்குப் பயந்து அல்லது அரச சலுகைகளுக்கு சோரம்போய் நீதித்துறையை ஆட்சியாளர்களிடம் மண்டியிடச் செய்யும் அநியாயத்திற்கு முஸ்லிம் சமூகம் துணை போகக் கூடாது.

இதுதொடர்பாகவும், இன்றைய சமூக விரோத அரசியல் செயற்பாடுகளை விளக்கியும் எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எதிர்வரும் நாட்களில் பல்வேறு மட்டத்திலும் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடாத்தவுள்ளது – இவ்வாறு பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தனது நீண்ட உரையில் குறிப்பிட்டார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக