ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு!

+4
யினியவன்
சிவா
ராஜா
balakarthik
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! - Page 2 Empty ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு!

Post by balakarthik Tue Oct 23, 2012 11:54 am

First topic message reminder :

சமீபத்தில் நடந்த, அணி சேரா மாநாட்டில் பங்கேற்ற நம் பிரதமர் மன்மோகன் சிங், உடன் அவரது மனைவி குரு சரண் கவுர் மற்றும் இந்திய பத்திரிகையாளர்கள் பலர் பங்கேற்றனர். அக்குழுவில் நானும் நம் இதழ் சார்பில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.

இஸ்லாமிய நாடுகளுள் ஒன்று ஈரான். இது, முன்பு பெர்ஷியா என்றழைக்கப்பட்டது. ஈரான் என்பதற்கு, "ஆரியர்களின் பூமி' என்று பொருள். பெட்ரோல் வளம் நிறைந்த ஈரான், உலகிலேயே மிகப் பெரிய நாடுகளில், 18வது நாடாக விளங்குகிறது.
ஈரான், தற்சமயம் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. அதற்கு காரணம், அதன் இயற்கை அழகு மற்றும் சுற்றுலா பயணிகளை சிவப்பு சம்பளம் விரித்து வரவேற்கும், ஈரான் அரசின் ஆர்வமும் தான். கடந்த, 2004ல் மட்டும், இங்கு வந்து சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 17 லட்சம். அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது; ஏராளமான அன்னிய செலவாணியையும் ஈட்டி தருகிறது. டில்லியிலிருந்து விமானத்தில் நான்கே மணி நேரத்தில் ஈரான் தலைநகரான டெஹ்ரானை அடைந்து விடலாம்.

ஈரான் நாட்டின் எல்லைகளாக, வடக்கே ஆர்மீனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், தெற்கே பெர்ஷியன் வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவும், மேற்கே ஈராக்கும், வடமேற்கே துருக்கியும் உள்ளன. அந்நாடுகளிலிருந்து அதிக அளவில் அகதிகள் இங்கு வருகின்றனர். உலகிலேயே, அகதிகள் அதிகமுள்ள நாடு இதுதான்.

பெட்ரோல் வளம் கொழிக்கும் ஈரான், கடந்த, 20 ஆண்டுகளில், அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
கல்வி, விளையாட்டு, சினிமா, அறிவியல் போன்ற துறைகளில் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர். சினிமாவை பொறுத்தவரை, கடந்த, 25 ஆண்டுகளில், உலக அளவில் ஆஸ்கர் விருது உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது.

இங்கு நான்கு, ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அரிசி உணவே பிரதானமானது. அரிசியுடன் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன், காய்கறி என்று ஏதாவது ஒன்றை கலந்து செய்யப்படும் பிரியாணி வகை உணவுகளையே விரும்பி உண்கின்றனர். உணவுக்கு பின், கெட்டி தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

டெஹ்ரானில் அமைந்துள்ள கோலிஸ்தான் அரண்மனை, சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மொய்க்கும் இடமாக உள்ளது. இந்த அரண்மனை முழுக்க முழுக்க, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதே, இந்த ஈர்ப்புக்கு காரணம் இங்குள்ள சுற்றுலா தலங்களை விட, நம் கண்களை அதிகம் கவர்வது, ஈரானியப் பெண்கள் தான் பளிச்சென்ற வெள்ளை நிறம் மற்றும் நடுத்தரமான உயரம் கொண்டவர்கள். இங்கே பெண்கள் பொருளீட்டுவதை முக்கியமாக நினைக்கின்றனர்.

ஒரு ஆண், திருமணம் செய்ய விரும்பினால், அவனுக்கு சொந்த வீடும், வேலையும் இருக்க வேண்டும். எனவே, 20களின் கடைசியில் தான் பெண்களுக்கு திருமணமாகிறது. குழந்தை திருமணங்கள் குறைந்து விட்டன. ஆண்களுக்கு மட்டும், அநியாய சலுகை காட்டப்படுகிறது. ஒரு ஆண், நான்கு பெண்களை கூட திருமணம் செய்யலாம்.செல்வங்களில் புரள்பவர்களும், பெண்களுக்கு செலவு செய்ய முடிந்தவர்களும், மூத்த மனைவியின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் முடிந்ததாக ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தால் போதும்; உடனே விவாகரத்தாகி விடும்.
பெண்ணுக்கான அங்கீகாரம், இங்கு குறைவு தான்; கட்டுப்பாடுகள் மிக அதிகம். அதுவும், 1979க்கு பின் தான், இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தன. நகப்பூச்சு அணிந்த கால்கள், கைகள், கழுத்துப்பகுதி ஆகியவை ஆண்கள் பார்வையில் படக்கூடாது. நீளமான பேன்ட், முழங்காலைத் தொடும் கருப்புநிற டாப்ஸ், முன், பின் கழுத்தோடு, தலையை மறைக்கும், "ஹிஜாப்' அணிய வேண்டும்.

வெளியிடங்களில் பெண்கள் சர்வ சாதாரணமாக உலா வந்தாலும், பர்தா அணிவது அவசியம். பெரும்பாலும், ஒரே மாதிரியான கருப்பு நிறம் தான். இதற்கும் காரணமிருக்கிறது... வண்ணங்கள், ஆண்களை ஈர்க்கும் என்பதால், கருப்பு நிறத்திற்கு மட்டுமே அனுமதி. ஈரானியப் பெண்களுக்கு மட்டுமல்ல, அங்கு சுற்றுலா வருபவர்கள், பிறநாட்டு தூதுவர், அரசு அதிகாரிகளாக வருபவர்கள் யாராக இருந்தாலும், பெண்களுக்கு இதே நிலைதான் செல்லும் வழியெல்லாம், "ஈரானியப் பெண்களைப் போல, "ஹிஜாப்' அணிவது கட்டாயம்!' என்பது போன்ற அறிவிப்பு பலகைகள், தவறாமல் இடம் பெற்றிருந்தன.
கடை வீதிகளில், பெண்களுக்கான அழகு சமாச்சாரங்கள் குவிந்து கிடக்கின்றன. ஹேர் கிளிப் துவங்கி, பாதம் வரை அழகுபடுத்தும் பொருட்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.

முகம் தெரிவதற்கு மட்டுமே அனுமதி என்பதால், முகத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். முழுமையாக மேக்-அப் உடனே பெண்களை பார்க்க முடிகிறது. பர்தாவுக்குள் விதவிதமான, "ஸ்டைல்' முடி அலங்காரங்கள் அரங்கேறுகின்றன. அதுபோல, அழகு அறுவை சிகிச்சையும் இங்கு அதிகம். உதடு, மூக்கு, கன்னங்களை சரிசெய்யும் சிகிச்சையை, பெண்கள் அதிக அளவில் செய்து கொள்கின்றனர்.

ஈரான் நாட்டிலிருந்து திரும்பவும் டில்லிக்கு வந்து இறங்கிய போது, வேற்று கிரகத்திற்கு வந்தது போலிருந்தது. தொடை மற்றும் இடையை இறுக்கி பிடிக்கும் ஜீன்ஸ், பனியன், மொழு மொழு கைகள், நகப்பூச்சு பூசிய நீண்ட விரல்கள், செயற்கை சாயத்தில் சிரிக்கும் இதழ்கள், ஷாம்பூ உபயத்தில் காற்றில் பறக்கும் தலைமுடி சகிதமாய், நம்மூர் பெண்கள் சர்வ சுதந்திரமாக உலா வந்தனர் .சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊர் போல ஆகுமா!

எம்.எம். ஜெயலெட்சுமி
நன்றி : தினமலர் வாரமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! - Page 2 Empty Re: ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு!

Post by சிவா Wed Oct 24, 2012 3:04 pm

balakarthik wrote:எங்க வீட்டுல பேச்சு வாக்குல வீச்சுத்தான்

அடடா, இதைக் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது!

நடக்கட்டும்.. நடக்கட்டும்..!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! - Page 2 Empty Re: ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு!

Post by ராஜா Wed Oct 24, 2012 3:12 pm

சிவா wrote:
balakarthik wrote:எங்க வீட்டுல பேச்சு வாக்குல வீச்சுத்தான்
அடடா, இதைக் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! நடக்கட்டும்.. நடக்கட்டும்..!!!
நம்ம ரெண்டு பேர் வீட்டுலயும் பேச்சே கிடையாது ஒன்லி வீச்சு தான் என்ற ரகசியத்தை சொல்லிடாதீங்க தல,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! - Page 2 Empty Re: ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு!

Post by சிவா Wed Oct 24, 2012 3:15 pm

ராஜா wrote:
சிவா wrote:
balakarthik wrote:எங்க வீட்டுல பேச்சு வாக்குல வீச்சுத்தான்
அடடா, இதைக் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! நடக்கட்டும்.. நடக்கட்டும்..!!!
நம்ம ரெண்டு பேர் வீட்டுலயும் பேச்சே கிடையாது ஒன்லி வீச்சு தான் என்ற ரகசியத்தை சொல்லிடாதீங்க தல,

அதை ஏன் தல இப்பொழுது நினைவூட்டுகிறீர்கள்! இப்பொழுதுதான் ஈகரையின் CSS-ஐ Compress செய்தேன்! அடுத்து ஜாவாஸ்கிரிப்டை செய்ய நினைத்தேன், அதற்குள் என் மனைவி கையில் பூரிக்கட்டையுடன் வருவது போல் தெரிகிறது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! - Page 2 Empty Re: ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு!

Post by அசுரன் Wed Oct 24, 2012 3:26 pm

சிவா wrote:அதை ஏன் தல இப்பொழுது நினைவூட்டுகிறீர்கள்! இப்பொழுதுதான் ஈகரையின் CSS-ஐ Compress செய்தேன்! அடுத்து ஜாவாஸ்கிரிப்டை செய்ய நினைத்தேன், அதற்குள் என் மனைவி கையில் பூரிக்கட்டையுடன் வருவது போல் தெரிகிறது!
அது ஏன்னா? நைட்டுக்கு பூரி சுட மாவு பிசைய உங்கள கூப்பிட வந்திருப்பாங்க.. நீங்க ஏன் பயப்படுறீங்க தல புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! - Page 2 Empty Re: ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு!

Post by சிவா Wed Oct 24, 2012 3:27 pm

அசுரன் wrote:
சிவா wrote:அதை ஏன் தல இப்பொழுது நினைவூட்டுகிறீர்கள்! இப்பொழுதுதான் ஈகரையின் CSS-ஐ Compress செய்தேன்! அடுத்து ஜாவாஸ்கிரிப்டை செய்ய நினைத்தேன், அதற்குள் என் மனைவி கையில் பூரிக்கட்டையுடன் வருவது போல் தெரிகிறது!
அது ஏன்னா? நைட்டுக்கு பூரி சுட மாவு பிசைய உங்கள கூப்பிட வந்திருப்பாங்க.. நீங்க ஏன் பயப்படுறீங்க தல புன்னகை

ஓ, அதுக்குத்தானா? என்னை இப்படிப் பயமுறுத்தியே வளர்த்துட்டா என் மனைவி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! - Page 2 Empty Re: ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு!

Post by ராஜா Wed Oct 24, 2012 3:29 pm

சிவா wrote:அதை ஏன் தல இப்பொழுது நினைவூட்டுகிறீர்கள்! இப்பொழுதுதான் ஈகரையின் CSS-ஐ Compress செய்தேன்! அடுத்து ஜாவாஸ்கிரிப்டை செய்ய நினைத்தேன், அதற்குள் என் மனைவி கையில் பூரிக்கட்டையுடன் வருவது போல் தெரிகிறது!
இதெல்லாம் மனபிராந்தி தல , அதான் உங்க கண்ணுக்கு ஜாவாஸ்க்ரிப்ட் கூட பூரிஸ்கிரிப்ட் (அடச்சே) பூரிக்கட்டை போல தெரியுது.

(எனக்கும் கொஞ்சம் உதறலா ஆவுது..... )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! - Page 2 Empty Re: ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum