புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
108 Posts - 74%
heezulia
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
3 Posts - 2%
Pampu
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
273 Posts - 76%
heezulia
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
8 Posts - 2%
prajai
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யார் முட்டாள்?  Poll_c10யார் முட்டாள்?  Poll_m10யார் முட்டாள்?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் முட்டாள்?


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 20, 2012 11:05 am

ஓர் ஊரில் முட்டாள் ஒருவன் இருந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாருக்கும் விளையாட்டுப் பொருளே அவன்தான். அவனிடம் இரண்டு துணிகளைக் கொடுத்துப் போட்டுவரச் சொன்னால், காலில் அணிய வேண்டிய துணியைச் சட்டை போல் மேலே அணிந்து இருப்பான். மேலே அணிய வேண்டிய துணியை எப்படியாவது காலுக்குள் நுழைத்து அணிந்து வருவான். அந்தக் கோலத்தில் அவனைப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சிரித்து விடுவர்.
அந்த ஊருக்கு விருந்தினர் யார் வந்தாலும் முதலில் அவனை வரவழைத்து, ""இவனைப் போன்ற முட்டாள் உங்கள் ஊரில் உண்டா?'' என்று கேட்பர்.
ஒரு வீட்டிற்கு வெளியூரிலிருந்து நண்பர் ஒருவர் வந்தார். விருந்து முடிந்தது.
""இந்த ஊரில் முட்டாள் ஒருவன் இருக்கிறான். அவனை வர வழைத்தால், நம் பொழுது இனிதாகப் போகும்,'' என்று சொன்ன வீட்டுக்காரன்... அவனை வரவழைக்க ஆள் அனுப்பினான்.
சிறிது நேரத்திற்குள் அந்த முட்டாள் அங்கு வந்து சேர்ந்தான். வீட்டுக்காரன் அவனிடம் தன் இரண்டு கைகளையும் நீட்டி, ""நன்றாகப் பார்... ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயம் உள்ளது. இன்னொன்றில், ஒரு ரூபாய் நாணயம் உள்ளது. உனக்கு எது தேவையோ எடுத்துக் கொள்,'' என்றான்.
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்தான்.
""ஆ! ஒரு ரூபாய் பெரிய காசு!'' என்று சொல்லிக் கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொண்டான்.
""இவனைப் போன்ற முட்டாளை நீங்கள் எங்கேயாவது பார்த்ததுண்டா? ஒரு ரூபாயை விட ஐந்து ரூபாய் எவ்வளவு மதிப்புள்ளது? சின்னக்காசை எடுத்துவிட்டு இவ்வளவு கூத்தாடுகின்றானே?'' என்று சொன்னான் வீட்டுக்காரன்.
நண்பருக்கும், முட்டாளுடன், விளையாட வேண்டும் போல இருந்தது. தன் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டி, ""இதில், ஒன்றில் வைர மோதிரம் உள்ளது. இன்னொன்றில் வெறும் ஐம்பது காசு உள்ளது. ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்,'' என்றார் அவர்.
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்துச் சிந்தித்தான். ஐம்பது காசைத்தான் கடைசியாக எடுத்தான்.
""இந்த முட்டாளோடு நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள். எனக்கு வேலை இருக்கிறது,'' என்று உள்ளே சென்றார் வீட்டுக்காரர்.
""ஏன் முட்டாள்தனமாக நடக்கிறாய்? வைர மோதிரம் என்ன மதிப்புடையது? அதை விட்டுவிட்டு வெறும் ஐம்பது காசை எடுத்துக் கொண்டாயே... இனிமேலாவது சிந்தித்து, அறிவுள்ளவனாக நடந்து கொள்,'' என்று அறிவுரை சொன்னார் நண்பர்.
""ஐயா, நான் மிகக் குறைந்த மதிப்புடைய நாணயங்களையே எடுக்கிறேன். எல்லாரும் என்னை முட்டாள் என்று நினைத்து என்னிடம் நாணயங்கள் உள்ள கைகளை நீட்டுக்கின்றனர். இதிலேயே எனக்கு ஒரு நாளைக்கு நான்கைந்து ரூபாய் கிடைக்கிறது.
""நீங்கள் சொல்வது போல ஒரே ஒருநாள் விலை குறைவான நாணயத்தை எடுக்காமல், அதிக மதிப்புடைய நாணயத்தை நான் எடுத்துக் கொண்டால், அதன்பிறகு யாரும் என்னிடம் கையையே நீட்டமாட்டார்கள்,'' என்றான் முட்டாள்.
இதைக் கேட்ட வெளியூர்காரர் அசந்து போய்விட்டார்.

நன்றி ,தினமலர் , எழுத்து.com

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 20, 2012 11:22 am

சூப்பர் பூவன்.

இனிமே நாம யாரையும் டெஸ்ட் பண்ணாம புத்தியோட இருக்க பழகிக்கணும்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Oct 20, 2012 11:24 am

இவன் முட்டாள் கிடையாது. இவனைச் சுற்றியிருப்பவர்கள்தான் முட்டாள்கள்.

சிந்திக்க வேண்டிய விடயம். அனேகமாக நாம் சில வேளைகளில் இவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பது நிதர்சனம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 20, 2012 11:28 am

யினியவன் wrote:சூப்பர் பூவன்.

இனிமே நாம யாரையும் டெஸ்ட் பண்ணாம புத்தியோட இருக்க பழகிக்கணும்.

இவளோ நாள் அப்போ டெஸ்ட் பண்ணினோமா நாம ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 20, 2012 11:32 am

பூவன் wrote:இவளோ நாள் அப்போ டெஸ்ட் பண்ணினோமா நாம ??
அடுத்தவனை விட நாம் சிறந்தவன்ற எண்ணம் நிறைய இருக்கு பலரிடம் பூவன் - அதை ப்ரூவ் பண்ண முயற்சித்து முட்டாள் ஆயிடராங்க. அதைத் தான் சொன்னேன்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 20, 2012 11:38 am

யினியவன் wrote:
பூவன் wrote:இவளோ நாள் அப்போ டெஸ்ட் பண்ணினோமா நாம ??
அடுத்தவனை விட நாம் சிறந்தவன்ற எண்ணம் நிறைய இருக்கு பலரிடம் பூவன் - அதை ப்ரூவ் பண்ண முயற்சித்து முட்டாள் ஆயிடராங்க. அதைத் தான் சொன்னேன்.

அது வேணும்னா உண்மை தான் , நாம் நாமாக இருந்தாலே ....போதும் அதுவே நமக்கு
சிறப்பும் கூட .....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 20, 2012 11:54 am

அருமை அருமை புன்னகை யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று புரிய வைக்கும் கதை புன்னகை இதைப்படித்ததும் எனக்கு 'எதிர் நீச்சல் ' படத்தில் ஜெயா எல்லோரையும் பைத்தியமாக்குவாறே அது தான் நினைவுக்கு வந்தது புன்னகை
.
.
கதை பகிர்வுக்கு நன்றி நண்பரே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 20, 2012 12:02 pm

காரியக்கார முட்டாள்... வருமானத்துக்கு வருமானம் கோமாளி வேஷம்.. பலே

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sat Oct 20, 2012 12:27 pm

“அக்கா வாத்து…தங்கை வாத்து….’ என்ற இரண்டு வாத்துகள் ஒரு குட்டைக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. குட்டிகுட்டியான சில மீன்களும், கொசு முட்டைகளும்தான் அவற்றுக்கு உணவாகக் கிடைத்தன. பிளாஸ்டிக் கவர்களில் படர்ந்திருக்கும் அழுக்குகள் என்றால், தங்கை வாத்துக்கு கொண்டாட்டம்தான்! ஆனால், இது அக்கா வாத்துக்கு சுத்தமாக பிடிக்காது.”நீ செய்வது தவறு. மடமனிதனைப் போலவே இருக்கிறாயே………?! சாப்பிடும்போது பிளாஸ்டிக் கவரின் சிறு பகுதி உன் வயிற்றுக்குள் போனால்கூட மரணம் நிச்சயம்’’ என்று எச்சரித்தது அக்கா வாத்து. ”மடமனிதன் என்று என்னைச் சொல்கிறாயே……?! மனிதர்கள்தானே “வாத்து மடையன்’ என நம்மை வைத்து அவர்களாகவே சொல்லிக் கொள்வார்கள்?’” என்று சற்று கோபமாகக் கேட்டது தங்கை வாத்து. ”மடையர்கள், இந்த மனிதர்கள்தான்…..’ என நீ சொல்லும்போது எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. இந்தக் கதையை நான் சிறு வயதாக இருக்கும்போது நம் பாட்டி வாத்து எனக்குச் சொன்னது’’ என்றது அக்கா வாத்து. ”அப்படியா..?! நம் பாட்டி சொன்ன கதையா…?!சீக்கிரமாகச் சொல்லு’’ என்று ஆர்வமானது தங்கை வாத்து. .
ஒரு ஊரில் ஒரு கஞ்சன் இருந்தான் அவன் வாத்துக்கூட்டங்களை வளர்த்து வந்தான் அதில் பொன் நிறத்தில் ஒரு வாத்து இருந்தது இந்த வாத்து நீரில் நீந்தும்போது சூரியக்கதிர்கள் அதன் இறகுகளில் பட்டுத் தெறித்து பளபளக்கும் வாத்துக் கூட்டத்துக்கு சரியாக உணவே கொடுக்க மாட்டான். எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் சுயநலக்காரன். இந்த மனிதனைத் திருத்துவதற்காக மற்ற தோழர்களோடு சேர்ந்து பொன் நிற வாத்து ஒரு திட்டம் தீட்டியது. திட்டப்படி, பொன் நிற வாத்து முட்டைகளைப் பளபளப்பாக பொன் நிறத்தில் இட்டது. அந்த முட்டைகளை விற்று நிறைய லாபம் பார்த்தான். அந்த லாபத்தில் நன்றாகத் தின்று அவன் கொழுத்தே போய்விட்டான். அப்போதும் வாத்துகளுக்கு நன்றாக உணவு கொடுக்க வேண்டும் என்று அவன் நினைக்கவே இல்லை. இந்த நிலையில், ஒரு நாள் பேராசைப்பட்டு பொன் நிற வாத்தின் வயிற்றில் நிறைய முட்டைகள் இருக்கும் என எண்ணி அந்த வாத்தின் வயிற்றைக் கிழித்தான். அவனது பேராசையால் அந்த வாத்து இறந்ததுதான் மிச்சம்! இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அவன் திருந்தினான். பேராசைப்படுவதால் யாருக்கும் லாபமில்லை என்பதை உணர்ந்தான். பின்னர் ஏனைய வாத்துகளை நன்றாகப் பராமரித்தான்’’ என்று கதையைச் சொல்லி முடித்தது அக்கா வாத்து.
”அக்கா, இப்போது நினைத்தாலும் வருத்தமாக உள்ளது. அந்தப் பொன் நிற வாத்து எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறது’’ என்று உணர்ச்சிவசப்பட்டது தங்கை வாத்து. ”இது போன்ற அறிவில்லாத செயல்களில் ஈடுபடுபவர்களைத்தான் வாத்து மடையன் என மனிதர்கள் அழைக்கிறார்கள்’’ என்றது அக்கா வாத்து. ”சரி. வாத்தை கொன்ற அந்த மனிதனுக்கு ஏதாவது தண்டனை கிடைத்ததா..?! என்றது தங்கை வாத்து. ”அந்த மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் சேர்த்து நாம் ஒரு தண்டனையை வழங்கி இருக்கிறோமே… அதாவது, நாம் முட்டையை அடைகாத்து குஞ்சுகள் பொறிப்பதையே விட்டுவிட்டோம். நம் முட்டைகளை கோழிகளின் முட்டைகளோடு வைத்து அவற்றை ஏமாற்றித்தான் மனிதர்கள் வாத்துக் குஞ்சுகளைப் பெறுகிறார்கள். இதில் கோழிகளுக்கு இருக்கும் பெருந்தன்மையையும் மனிதர்கள் அறியமாட்டார்கள்’’ என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டது அக்கா வாத்து.
சுரேஷ் எஸ்கே வின் கருத்து: வைர மோதிரத்தை எடுத்துக்கொண்டால் பொன் முட்டை போடும் வாத்தை அறுத்தது போலாகிவிடுமே ஏனெனில் அப்படி செய்தல் தான் முட்டாள் இல்லை என்ற உண்மை வெளியாகிவிடும் ஆதலால் அவர் அதை எடுக்காமல் சாதரணமான முட்டையை அதாவது ஐம்பது காசுகளை மட்டுமே எடுத்துகொண்டார் தம்மை முட்டாள் என்று நினைப்பவர்களை முட்டாளாக்கிவிடுகிறார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 20, 2012 12:38 pm

சுரேஷ் நீங்கதான் அவரா? மீண்டுமா?

அடுத்த தளத்தின் விளம்பரம் தொடர்ந்தால் உங்கள் பதிவுகள் நீக்கப்படும்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக