ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம் நல்லதானால் உலகம் நல்லது...

2 posters

Go down

உள்ளம் நல்லதானால் உலகம் நல்லது... Empty உள்ளம் நல்லதானால் உலகம் நல்லது...

Post by றினா Sat Oct 20, 2012 6:23 pm

உள்ளம் நல்லதானால் உலகம் நல்லது...
உள்ளம் நல்லதானால் உலகம் நல்லது... Child-300x221

அதிகாலை ஐந்துக்கெல்லாம் ஆரம்பித்திருந்த மழை சுமார் இரண்டு மணிநேர இயக்கத்தின்பின் சற்று விட்டிருந்தது. அன்று செய்ய வேண்டிய வேலைகளை மனதில் திட்டமிட்டபடி முக்கியமான ஈ-மெயில் ஏதும் வந்திருக்கிறதா என்பதை அறிய இன்டர்நெட்டினுள் புகுந்தேன். அலுவலக விடயங்கள் தொடர்பான மெயில்களுடன்…….. அவனது மெயிலும் வந்திருந்தது. ஹனீம் அட் ராக்கெட்மெயில்…….. அவனேதான்…

அவனது மெயில் என்றால் என்னதான் அவசரம் என்றாலும் முழுமையாகப் படித்து விட்டுத்தான் மறுவேலை. முதலில் அதைத்தான் திறந்தேன். அவனது முழுப்பெயர் முகம்மது ஹனீபா முகம்மது ஹனீம்… அன்பின் அசீ… என்று அவன் ஆரம்பித்தால் அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவனது பெயருக்கு ஏற்றாற்போல் கனிவும் பணிவும் நிறைந்திருக்கும். ஆனால் ஒரு கவலைக்குரிய விடயம்… நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறைதான் அவனது மெயில் வரும். ஓரிரண்டு ரிப்ளையோடு சரி. அவ்வளவுதான். ஆனால் இம்முறை வந்த அவனது மெயில் என்னை திகைக்கவைத்தது. அது என் சிந்தனைச் சக்கரத்தை சுமார் பன்னிரண்டு வருடங்கள் பின்னோக்கிச் சுழலவிட்டது.

அது எங்கள் வகுப்பறை. வகுப்பறைக்கு சரி நேரே கொரிடோருக்கு அப்பால் ஒரு பெரிய்ய அகன்று கிளை பரப்பி வளர்ந்த மாமரம். எங்களைபோன்று பல லட்சம் மாணவர்களை அது கண்டிருக்கும். சுமார் ஏழு மீட்டர் தொலைவில் சிட்டுண்டிச்சாலை….. எங்களுக்கெல்லாம் அனேகமாக அங்கேதான் வேலை….

நாம் ஆண்களும் பெண்களுமாக மொத்தம் இருபது பேர். உயர் தரத்தில் உயர் ரகமான பிரிவு உயிரியற் பிரிவில் ஒரு வைத்தியராக வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தோடு நாமெல்லாம் படித்துக்கொண்டு இருந்தோம். பாடசாலைக்கு வந்தால் ஆசிரியர்கள் தரும் குறிப்புகளால் கொப்பியை நிரப்புவதை தவிர வேறு எந்த உருப்படியான வேலையையும் நான் செய்ததாக எனக்கு ஞாபகமே இல்லை.

அன்றொருநாள் நானும் எனது நண்பர்களும் வகுப்பில் அரட்டையடித்துக்கொண்டு இருந்தோம். ஹனீம்… அவன் மட்டும் அமைதியாக… ஒரு சிறிய புன்னகையோடு.. யாருடனும் பேசமாட்டான். அவன் எப்போதும் அப்படித்தான். அதனால் அவனுடன் பெரிதாக யாரும் ஒட்டுவதில்லை. ஏன் நானும் கூட…..

ஸாபர் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தான்.

“டேய் மச்சான், நமக்கு இண்டைக்கு ஆப்புத்தான்.. அந்த பயோலாஜி மேதை வந்திருக்கார்ரா”………

மாஜித் வாயைப்பிளந்தான். “யாரு ஐஎஸ்ஏ பயோலாஜி முனீர் ஆ?…………..”

“ஏன்டா அப்படிச் சொல்றாய்? அவரு பயோலாஜி கிங் மச்சான்.. நல்லதுதான் வரட்டும். இண்டைக்கு அவரை விடக்கூடா” என்றான் அனஸ். அவன்தான் வகுப்பில் ‘கெட்டிக்காரன்’ என்று பெயர் வாங்கி இருந்தவன்.

“டேய் மச்சான்ஸ், அவர் கேள்வி கேட்டுத் தொலைப்பார். என்னோட வாறாக்கள் வாங்க..” சொல்லி எழுந்தான் ரவுடி றமீஸ். ஸாபர் என்னைக் கூப்பிட்டான். “அசீ என்ன வாரியா? ” ………. ”நான் வரலைடா”... சொல்லி முடிப்பதற்குள் றமீஸ் தலைமையில் ஒரு கூட்டம் அவசர அவசரமாக வகுப்பறையை விட்டுப்பறந்தது.

இடைவேளையின் இரைச்சல் மெல்ல அடங்க அந்த உருவம் உள்ளே நுளைந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரும் எழுந்து சலாம் சொன்னோம். நல்ல வாட்டசாட்டமான தோற்றம், ஆறடி உயரம், அகன்ற நெற்றி, அறிவின் நிறம் கண்களில் தெரிந்தது. செல்வச்செழிப்பு தோற்றத்தில் இருந்தது. வந்ததுதான் தாமதம் “ஜீன் பூள் என்றால் என்ன? ”… முதலாவது கேள்வி வந்து விழுந்தது. அது பயோலாஜியின் எந்தப்பிரிவில் வருகிறது என்று கூட எனக்கு ஞாபகம் இல்லை. நெஞ்சு பட பட என அடித்துக்கொண்டது……….வியர்த்துக்கொட்டியது.

வழக்கமாக விடை தெரிந்தால் கூட விடை சொல்லாமல் இருப்பதும் எங்களுக்கு ஒரு ஸ்டைல்.

ஆனால் அன்று முன்வரி அனஸ் முந்திக்கொண்டான் “ஒரு குடித்தொகையிலுள்ள அனைத்து ஜீன்களையும் ஒட்டுமொத்தமாக சொல்வது”.

“இதைவிட சரியாகச் சொன்னால்…..???.” கேட்டார். யாரும் வாய் திறக்கவில்லை. பின்வரியில் வேண்டுமென்றே சிலர் கதைத்து வகுப்பைக் குழப்பிக்கொண்டு இருந்தனர். அவர் அனஸ் இன் தோள்களைத் தட்டினார். அவனது தலைமுடியைகோதிவிட்டு….“குட்…உன் பேரு?

“அனஸ்”

“ம்ம்..நல்லா ஆன்சர் பண்ணினாய்… உன்னோட ஹெயார் நிமிர்ந்து ப்றஷ் மாதிரி இருக்கு… உன்னோட லுக் எனக்குபிடிச்சிருக்கு..” என்றார். அவனுக்கு உச்சிகுளிர்ந்திருக்க வேண்டும்

.பக்கத்தில் இருந்த தடியன் அலியைப்பார்த்து “உன் பேரு?……..”“அலி”

“ஆனை வாழைப்பழம் மாதிரி இருக்கே.. ஆன்சர் பண்ணத்தெரியல்ல………..இல்ல?”

என்று சொல்லி அவனது தோளில் சற்று பலமாகத்தட்டினார். அவனது பால்போன்ற வெள்ளைமுகம் அப்படியே சட்டென சிவந்து கன்றிப்போனது. மொத்தமாக ஐந்து வரிகளில் நான் நான்காவது வரியில்.. எனக்குப் பக்கத்தில் ஹனீம்………….அவரது அடுத்த இலக்கு அவனாகத்தான் இருந்தான்.

“எழும்பு”“…………………………….”

“உன்னைத்தான் சோடாப்புட்டி…………கண்ணாடி…எழும்பு” அதட்டினார். மெல்ல எழுந்தான் ஹனீம்

.உயர்தரம் படிக்க பாடசாலைக்கு வந்து சுமார் ஒரு வருடத்திற்குப்பின்தான் அவனை உற்றுப்பார்த்தேன். ஆமாம் அவனது கண்களுக்கு கண்ணாடியைக் கொடுத்திருந்தான்… அமைதியான முகம்.

“வெளியேபோ” “………………………..”

“உன்னைத்தான்……….டைமை வேஸ்ட் பண்ணாம போ வெளிய…………………..”

“சேர்…நான்…நான்..” அவனுக்கு வார்த்தைகள் வர மறுத்தன.

“ஸ்கூல் வரும்போது ஷூ போட்டு வரணும்டு உனக்கு ரூல்ஸ் தெரியாது? போட்டிருக்கிற செருப்பைப்பாரு ……………………..கெட்அவுட் …” அவன் போய்விட்டான்.

அவர் பேசிய வார்த்தைகள் என் இதயத்தைத்துளைத்து இரத்தத்தை சூடேற்றின. அந்த சூட்டை என் மூச்சுக்காற்றில் உணர்ந்தேன். ஒரு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்குமளவுக்கு நிசப்தம் வந்து

வகுப்பறையைப் பற்றிக்கொண்டது. எல்லோரும் அப்படியே உறைந்து போயிருக்க ….

“ரைட்.. ஆல் ஒப் யூ லுக் அட் த பிளாக்போட்”

ஜீன் இலிருந்து ஜீன் பூள் அடங்கலாக ஜெனெடிக் எஞ்சினீயரிங் வரை இரண்டரை மணித்தியலத்துக்கு தரமான நீண்ட லெக்ஸர்… சுனாமியே வந்திருந்தால் கூட யாரும் இருந்த இடத்தைவிட்டு சற்றேனும் நகர்ந்திருக்கமாட்டோம். அவர் வகுப்பறையை விட்டுவெளியேறும்போது சற்று நின்று திரும்பிச்சொன்னார் “எப்படியோ ஒரு ஆளை வெளியே போட்டிருக்காட்டி இப்படி அமைதியா இருந்திருக்க மாட்டிங்க”. பேயறைந்தாற்போல் இருந்தது. ஆக,அவர் ஆரம்பத்தில் ஹனீமை வெளியேற்றியது வகுப்பை அமைதிப்படுத்துவதற்காக கையாண்ட தந்திரோபாயமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் எனது கால்களைப் பார்த்தேன். என் கால்களில் மட்டுமல்ல…..அனசின் கால்களிலும் ஷூ இருக்கவில்லை.

நா வறண்டு போயிருந்தது. வெளியே சென்று பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாருமில்லை… மெல்ல கன்டீனுக்குள் நுளைந்தேன். “நானா…ஹனீம் வந்தானா?…..”

“வந்தான்.. அப்பிடியே பின்னால போனான்… பாரு…. வேலைல அவன கவனிக்கல…. இல்லன்னா ஏதாச்சும் தின்னக்குடுத்திருப்பன்…”

“ஹனீம்….ஹனீம்…….ஹ………..னீ…” பின்னாலுள்ள சீமெந்துக்கட்டில் இருந்தபடி முடிவில்லாத முடிவிலியை தேடுபவன் போல எங்கோ வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹனீ………” தோளைத்தொட்டுத் திருப்பினேன். முகத்தை வேறொரு பக்கம் திருப்பிக்கொண்டான்.

“டேய்மச்சான்…இங்க பாரேன்”. அசையவில்லை.

உள்ளே சென்று இரு ப்லேன்டீ எடுத்துவந்து ஒன்றை அவனிடம் நீட்டினேன்.

“அவரு கிடக்கார்.. அத விடு.. இந்தா முதல்ல இதக்குடி.” வாங்கிகொண்டு நிமிர்ந்து பார்த்தான். கண்கள் சிவந்து வீங்கி இருந்தது. நான் பக்கத்தில் அமர்ந்தேன். இதுவரை யாரிடமும் பேசியிராத அவன் இப்போது பேசினான். “மற்றவங்கள் எல்லாம் ஷூ இருந்தும் போட்டு வாறல்ல. எனக்கிட்ட இல்லயே அசீம். பத்தாமாண்டுல வாங்கினது போன வருஷம் பிஞ்சிட்டு. ஏழையா பொறந்தது என் தப்பா.. நானெல்லாம் பயோ படிக்கப்போடாதா?”

“விடு மச்சான்.. அவரு அதுக்காக உன்ன வெளிய அனுப்பல்ல. நானேண்டபோல போட்டா இரிக்கேன்?” என்று சொல்லி என் கால்களைக்காட்டினேன். பின் அவர் சொன்ன விடயங்களை சொன்னேன்..

“அநியாயமா என் மானத்த வாங்கினது மட்டுமில்லாம படிப்பையும் கெடுத்துட்டாரே அசீம். சும்மாவே எனக்கு ஜெனெடிக்ஸ் விளங்குறல்ல.. நான் நம்பி வாறது இந்த ஸ்கூலத்தான்.. இங்கயும் அந்த சப்ஜெக்ட் விளங்கல்ல..” அவன் கண்களில் இருந்து கண்ணீர்க் குமிழி ஒன்று உடைந்து கன்னம் வழியே ஓடியது. அவன் இரண்டு விடயங்களுக்காக கவலைப்பட்டான். ஒன்று அவமானம், மற்றயது அவரோட லெக்சரை தவறவிட்டது.

“உனக்கு நான் விளங்கப்படுதிறேன். யோசிக்காத……அவர அல்லாஹ் பார்த்துக்குவான்…. நீ படிச்சி எல்லாருக்கும் முன்னுக்கு நல்லா வந்து காட்டு”. நான் உணர்ச்சிவசப்பட்டு சொன்னேன்.

அடுத்தடுத்த ஐந்து நாட்கள் அவன் பாடசாலைக்கு வரவில்லை…. அதன் பின்னர் அவனிடத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. முகத்தில் ஒரு தெளிவும். கண்களில் கூர்மையும் நடையில் வேகமும் தெரிந்தது. அவனுக்கு என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்தேன். நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருந்த நாட்கள் அதிகமானது. நாட்கள் உருண்டோடின. உயர்தரப் பரீட்சை வந்தது. முடிவும் வந்தது. எனக்கு நூற்றி இருபதாவது மாவட்ட நிலை…………………..ஹனீமுக்கு….

“அசீ ஆபீஸ்க்கு டைமாச்சுகிளம்பல?.... என் மனைவியின் குரலில் நினைவுகளில் இருந்து மீண்டேன்.

“கமிங் மண்டே ஹனீ………………ஸ்ரீ லங்கா வர்றானாம்” சத்தமாக சொன்னேன்.

இப்போது விமான நிலையத்தில் நான்…. அதோ அவன்… அதே புன்னகை, கண்களுக்கு கண்ணாடி, வெளீரென்ற இளமஞ்சள் நிற சேர்ட், அழகிய டை, கறுப்பு காற்சட்டை, பளிச்சிடும் புது ஷூவுடன்…. ஓடிப்போய் அணைத்துக்கொள்கிறேன். பேச்சு வரவில்லை. தூறலுடன் ஆரம்பித்திருந்த மழை எம் கண்களில் இருந்து வந்த ஆனந்தக் கண்ணீரைப் பறைசாற்றியது. அவனது மெயில் வந்தது என்பதைவிட அவனைக் கண்ட மகிழ்ச்சியை விட மெயிலில் இருந்த விடயம்தான் என் மனதைத் தொட்டது.

நான் இந்த முறை ஹஜ் போய் இருந்தபோது அங்குள்ள ஹாஸ்பிடலுக்கு எங்க டீம் அவசரமாக போக வேண்டி ஏற்பட்டது. ஹார்ட் பேசன்ட்ஸ் வார்டுல அந்த பயோலாஜி முனீர் சேரைக் கண்டேன்… ஹஜ்ஜுக்கு வந்தவருக்கு சுகமில்லையாம். ஸ்ரீ லங்கன் எண்டதால என் பொறுப்பில அவரைத் தந்தாங்க. மூன்று நாள் அவரை பொறுப்போடு பார்த்துக்கிட்டேன். அவர் என்னை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என இறைவனை வேண்டிக்கொண்டேன். சுகமானதும் என்னோடு பேசினார்.

“ரொம்ப தேங்க்ஸ்……. நீங்க நல்லா இருக்கணும் மகன்” என்றார்.கொஞ்சம் அதிகமாகத்தான் கேள்விகேட்டார்.

“ஓ சேர் உங்களை நல்லா தெரியும்………….” “சென்ட்ரல் காலேஜ் தான் சேர்……”

“இல்ல சேர் இரெண்டாம் தடவையும் ஏ.எல் எடுத்தேன்…………………….அதுலதான் மெடிசின் கிடைச்சது…”

“இப்போ யூகே லதான் சேர் வொர்க் பண்றேன்……..” “அது வந்து ஸ்கொலேர்ஷிப் ஒண்டு கிடைச்சு அங்க போனன்”

இப்படி எல்லாக்கேள்விகளுக்கும் சரியாக பதில் சொன்னேன். அவர் என்னை அடையாளம் கண்டுகொள்ளவுமில்லை. சிலவேளை அவர் சங்கடப்படக்கூடும் என்பதற்காக நான் அந்த சம்பவத்தை அவருக்கு ஞாபகம் ஏற்படுத்தவுமில்லை. அவரு நல்லவருதான்டா.

“துஆ செய்ங்க சேர்”

“கண்டிப்பா செய்றேன் மகன்…….”விடைபெற்றேன்.

உன்னை நேரில் சந்திக்கவேண்டும்போல் இருக்கிறது. நம்ம ஸ்கூலையும் பார்க்கணும், ஸ்கூலுக்கு ஏதும் பன்ட் பன்னனும்டு நினைக்கேன். வார மண்டே மோர்னிங் ஏழுக்கு எயார்போர்ட் வா அசீம்.

(சிறு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாககொண்ட கற்பனை, குறிப்பிடப்பட்ட எல்லாப்பெயர்களும் கற்பனை)
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உள்ளம் நல்லதானால் உலகம் நல்லது... Empty Re: உள்ளம் நல்லதானால் உலகம் நல்லது...

Post by கரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 8:25 pm

கதையினில் திளைத்துத் தான் போனேன். நானும் சற்று பின்னோக்கி சென்று மீண்டுவிட்டேன் .
மிக்க நன்றி பதிவிட்டதற்கு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உள்ளம் நல்லதானால் உலகம் நல்லது... Empty Re: உள்ளம் நல்லதானால் உலகம் நல்லது...

Post by றினா Sun Oct 21, 2012 11:06 am

கரூர் கவியன்பன் wrote:கதையினில் திளைத்துத் தான் போனேன். நானும் சற்று பின்னோக்கி சென்று மீண்டுவிட்டேன் .
மிக்க நன்றி பதிவிட்டதற்கு

நன்றிகள் உங்களுக்கும்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உள்ளம் நல்லதானால் உலகம் நல்லது... Empty Re: உள்ளம் நல்லதானால் உலகம் நல்லது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum