புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
2 Posts - 18%
heezulia
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
372 Posts - 49%
heezulia
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
25 Posts - 3%
prajai
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள் பத்து -1 கிரிகாசன்


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 14, 2012 4:09 pm

1. அணையாதோ?

( அன்பு)
திங்கள்தனை முகிலணைக்கும்
தீந்தமிழைக் கவியணைக்கும்
மங்குமிருள் இரவணைக்கும்
மாலைதடந் தோளணைக்கும்
பொங்குகட லலையணைக்கும்
பூவிழியை இமையணைக்கும்
எங்குமுயிர் அன்பணைந்தால்
இதயமகிழ் வெய்தாதோ

பொங்குமொளி பயிரணைக்கும்
பூத்தகொடி மரமணைக்கும்
பங்கயத்தை நீரணைக்கும்
பனித்துளியைப் புல்லணைக்கும்
செங்கரும்பின் சாறுஇனிக்கும்
சேர்ந்தசுவை நாவணைக்கும்
பங்குகொளும் வாழ்வுதனில்
பண்பைமனம் அணைக்காதோ

காலையொளி புவியணைக்கக்
கனவுவெழுந்து துயிலணைக்கும்
ஓலை மறை வெடுநிலவை
உள்ளமதன் உணர்வணைக்கும்
சோலைவருங் காற்றலைந்து
சொல்லாம லுடலணைக்கும்
ஞாலமதில் அன்பெழுந்து
நம்வாழ்வை அணைக்காதோ

( அழிவு)
கங்குல்வரப் பகலணையும்
காற்றெழுந்து சுடரணைக்கும்
பொங்கும்சினம் அறிவணைக்கும்
போதைகொளப் புகழணையும்
அங்கமெங்கும் நோயணைக்க
ஆனந்தமென் உணர்வணையும்
தங்குமிந்தப் புவிவாழ்வில்
தவிப்பென்ப தணையாதோ

சேலையணி மாதரது
சேல்விழிகள் நீரணைக்கும்
நாலுமறி மதிஅறிஞர்
ஞாபகத்தை வயதணைக்கும்
மேலுமுயிர் வாழுடலை
மோகமுடன் விதியணைக்கும்
காலமெனும் சக்கரத்தில்
கனவெனவே வாழ்வணையும்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 14, 2012 4:12 pm

௨. ஒருநாள் ராஜா - 2

தேவஎழிற் பூவையர்கள் தீந்தமிழ் பாட
தென்திசையின் காற்றுவந்து தேகம்தொட்டிட
கூவியொரு சங்கொலித்து கொள்புகழ்போற்ற
கொற்றவனென் பக்கமொரு கோதையும்காண
தேவிமலர் சூடியயல் தென்ற லென்றாக
தேன்நிறைந்த கிண்ணமதை தேவதை சேர்க்க
யாவு மினி தென்றொருவர் ஆளுமை போற்ற
யௌவனத்து பெண்சுழன்று நாட்டியமாட

மேவியெழு வான்சுடர்போல் வீர மார்பதை
மென்னிதழ்கொள் கன்னியர்பூங் கைகள் தொட்டிட
மாவிருந்து வீழ்ந்தகனி மாதர் கன்னமும்
மையிதழ்கள் பேசியெனை மகிழ்வினில் ஆழ்த்த
நாவினித்த கனிபிளந்து நங்கையர் ஊட்ட
நடையமைந்த ராஜகளை நற்புகழ் சேர்க்க
தேவர்களும் பூஎறிந்து என்பெய்ர்கூற
தோன்றுசுகம் இன்பமன்றோ இன்பமேயன்றோ

பால்நிலவில் மாடமதில் பைங்கிளியாட
பனியெழுந்து குளிர்நடுக்கி போர்வையைத் தேட
வேல்விழியாள் மான் பயந்து வெகுண்டது போலும்
விளங்க பெருந்தீ எழுப்பி வெம்மையில் காய
நால்திசையும் போர்முரசு சங்கொலி கேட்க
நாடு கொள்ள வந்தவனும் நடுவினில் தோன்ற
கால் நடக்க கைஉருவி வாளினைத்தேட
காலைவெயில் சுட்டது நான் கண்களை விழித்தேன்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 14, 2012 4:14 pm

3. உயிர் தமிழுக்கு

கவிக்கு உயிர் ஈவேன் கண்டதுண்டமாய் ஆக்கி
புவிக்குள் எனைப் புதைத்துப் பூமலர வைத்தாலும்
தவித்தே அலைதென்றல் தனில் ஓசைமீட்டியொரு
கவியாய் உயிர்கொண்டு காற்றில் இழைந் தோடிடுவேன்

மடித்தே எனதுடலை மாகடலில் எறிந்திடினும்
அடித்தே எழும் அலையில் ஆவென்று பாட்டிசைப்பேன்
துடித்தே உடல்நடுங்கத் தீயிடையே எறிந்திடினும்
படித்துப் பெருங்கவிதை பாட்டெழுதித் தீய்ந்திடுவேன்

வெடித்துச் சிதறவொரு வானிருந்து போடும்பொதி
அடுத்தென் அருகிலிடி ஆகாயம் வீழ்ந்ததென
பொடித்தே உடல் சிதறப் பூகம்பமாய் வெடித்தும்
நொடிக்குள் கவிபாடி நிம்மதியாய் செத்திடுவேன்

செழித்த சோலையிலே சிங்காரக் குருவிகளும்
களித்து குலவ அதைக் கண்டு கவிபாடிடுவேன்
குளித்தே எழும்குளத்தில் குமுதமுடன் அல்லிமலர்
விளித்துகிடப்பதனை விரும்பக் கவிசெய்வேன்

நெளிந்தே சிறுநாணல் நிலத்தை வணங்கிடினும்
தெளிந்த உரமெடுத்துத் தேக்குமரம் நின்றிடினும்
புளித்த மா தருவும் பின்னாலே ஆலமரம்
அளிக்கும் எழில்கண்டு ஆடியேநான் பாடிடுவேன்

தோகை மயில் விரிக்க துவானம் நீர்தெளிக்க
நாகம் படமெடுக்க நாரைகொளத் தவமிருக்க
பூகை யேந்தியொரு பெண்ணொருத்தி மலர்சூட
ஆகா அ\ழகென்றே ஆனந்தப்பாட்டிசைப்பேன்

வடித்துக் கொடுப்பதவள் வாரித் தெளிப்பதிவன்
குடித்துக் களிப்ப மனம் கூடிக்கிடப்ப துளம்
துடித்துக் கிளம்பி உயிர் தேகம் அடங்கும்வரை
நடித்துக் கவிகூற நாட்டியங்கள் ஆடிடுவேன்

தேனைக் கவிவடிக்கத் தென்றலதி லேறியுயர்
வானை க்கடந்தோடி வானவரின் நிலமேகி
சேனை படைஎதிர்த்து சிரம் கொள்ளவந்திடினும்
ஞானபழம் தருவாள் நாடிவரம் வென்றிடுவேன்

ஓடைமலர் பூக்கும் ஒளிவெள்ளம் பூமிகொளும்
ஆடை விரித்த அலை அசைவதிலே அழகூறும்
கூடை மலர் கவிதை கொண்டுலகின் சக்தியவள்
ஏடு எழுதவைத்தாள் இறையவளைப் போற்றிடுவேன்
***

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 14, 2012 4:37 pm

4 . மென்மையில் வலிமை
( தலைவியின் பிரிவுத்துயர்)

பொன்னெழில் கொண்டது வானம் - அங்கு
போவன பஞ்செனும் மேகம்
என்னழ கென்பது யாவும் - அங்கு
ஏகும் முகிலெனக் காணும்
தன்னிலை விட்டவை ஓடும் - எனைத்
தன்னந்தனி யென்ற தாயும்
மன்னவன் நீசெய்யும் மாயம் - இதில்
மாதிவள் செய்ததென் பாவம்?

தென்கடல் சுற்றியே வீசும் - அந்த
தென்றலும் என் பகையாகும்
புன்மை செய்தே மனம்நோகும் - வரை
பூந்தளிர் தேகம் தொட்டோடும்
சந்திரனும் இந்த நாளில் - மனச்
சஞ்சலத்தை உண்டுசெய்யும்
வந்துநின்றே அவர்கொண்ட - அந்த
வாழ்ந்த காலங்களைச் சொல்லும்

மந்திகள் மாவினி லேறும் - இவள்
மங்கையைக் கண்டு கூத்தாடும்
வந்தானோ என்றுபல் காட்டும் - மனம்
வானரம் தானென்று வையும்
அந்தியில் சிற்றலை யாடும் - குளம்
யாவும் மலர்ந்த செம்பூவும்
விந்தை குளிர்ந்தும் செவ்வானம் - வெயில்
விட்டும் எனையெண்ணி வாடும்

பந்தியில் உண்டிடும் வேளை - பயன்
பட்ட இலை கருவேம்பை
நிந்தை செய்தே தள்ளி வீசும் - தன்மை
நேர்ந்தே யெனை எறிந்தாலும்
வந்திடுவர் என வாசம் = தரும்
வண்ண மலர் தெம்பு கூறும்
அந்தோ மதுகொண்ட வண்டோ - பொய்
யாமெனப் பூவை விட்டோடும்

வெண்பனி போல்நெஞ்சு காணும் - விழி
வந்து சொரிந்திடும் நீரும்
எண்ண எண்ணக் கொள்ளும் துன்பம் - அந்த
ஏகாந்தமே யெனைக் கொல்லும்
கண்ணிரண்டும் இருளாகும் - அதில்
காவிய நாயகர்போலும்
அண்ணளவில் நீயும் நானும் - கண்ட
அந்தநாளின் நிழல் தோன்றும்

செங்களமோ எனவானும் - ரத்தம்
சிந்தியதோ வெனக் காணும்
பங்கயம் பூமுகம் தானும் - அது
பட்டது போற் சிவப்பாகும்
குங்குமம் கொள்ளெனத் தானும் - இவள்
கொண்ட மனஎண்ணம்யாவும்
பங்கம் விளைந்து புண்ணாகும் - கத்தி
பட்டதில்லை இரத்தம் சிந்தும்

தெங்கு வளர்ந் துயர்ந்தாலும் - அது
திங்கள் தொடஎண்ணினாலும்
அங்கு முகில்வந்துமூடும் - மதி
ஆகத்தொலைவு என்றாகும்
மங்கு மொளிகொண்ட வானில் - என்ன
மந்திரங்கள் போட்டபோதும்
தொங்கு மதி உயர்வாகும் - தொட்டு
கொள்ளு மெண்ணம் கனவாகும்

தங்கம்சுடச் சுட மின்னும் - உந்தன்
தாமதமும் என்ன செய்யும்
பொங்கும் கடலலை துள்ளும் - அந்தப்
போதை கொண்டே காணும் உள்ளம்
எங்கும் கடற்கரை காணும் - அங்கு
ஏக்க மிழந்தலை மீளும்
இங்கும் இவள் நெஞ்சினோரம் - இனி
இல்லை யெனும் உரம் காணும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 14, 2012 4:55 pm


5. வாழ்வில் சில வசந்தங்கள்

மனமொன்று படுகின்ற வேளை - என்
மதிகாணும் இன்பங்கள் மலர்பூத்த காலை
தினமொன்று பூப்பூக்கவேண்டும் - என்
திசையெங்கும் மலர்பூத்த பெருஞ் சோலைகாணும்
வனமங்கு துள்ளிடும் மானும் - பக்கம்
வளைந்தோடும் நதிபோலும் வருங்குளிர்வேண்டும்
நினவுகள் குதிபோடும் சாடை - கொண்டு
நின்றிடும் நெஞ்சமும் நிறைகண்டு வாழும்!

பிறந்ததும் வளர்ந்ததும் நினைவோ - அதில்
பிறந்திட்ட பின்கண்ட உணர்வென்ன கனவோ
திறந்திட்ட வருங்காலக் கதவோ- அங்கும்
தினம் தினமாடிய அழகென்ன சுகமோ
நிறங்கொண்ட சிலகாலம் சென்றும் - அதில்
நிற்பவை மனம்மீது சிலகாட்சி தன்னும்
திறங்கொண்டு வாழ்வோடு வாழும் - அந்த
தித்திக்கும் எண்ணங்கள் தரும் இன்பம்கூடும்

மணியோசை போல் நாதம்கொண்டு - என்றும்
மனம்போலப் பெருவாழ்வு கிடைக்கட்டு மின்று
அணிகொண்டு ஆனந்தமோடு - நல்ல
அரும்பெரும் செல்வங்கள் அடைந்தின்பங் காண்க
தணிந்திட்ட பகலவன் மாலை - வேளை
தளதளப் பிரகாசம் தனைகொண்டு வாழ்க
துணிவென்றும் எழும் நெஞ்சைகண்டு - யாரும்
பணிந்தன்பு கொளும்வாழ்வின்பயன் நூறுகொள்க

மாற்றங்கள் நிறைந்திட்ட வாழ்வு - அதில்
மறுபடி அலைதோன்றும் நினைவென்னும் ஆறு
காற்றினில் நெளிந்தாடும் சேலை போலும்
கற்பனை எழுந்தாடக் கலை என்னுந்தேரில்
வீற்றிருந் தேகிடும் விண்ணும் - நல்ல
வியப்புறு கவிதைகள் பொழிந்திடும் மேகம்
போற்றிட எண்ணங்கள் கொள்ளும் வாழ்வில்
பொழுதெங்கும் ஊற்றிடும் பேரின்பவெள்ளம்
***********

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 14, 2012 9:56 pm

கவிக்கு உயிர் ஈவேன் கண்டதுண்டமாய் ஆக்கி
புவிக்குள் எனைப் புதைத்துப் பூமலர வைத்தாலும்
தவித்தே அலைதென்றல் தனில் ஓசைமீட்டியொரு
கவியாய் உயிர்கொண்டு காற்றில் இழைந் தோடிடுவேன்

மடித்தே எனதுடலை மாகடலில் எறிந்திடினும்
அடித்தே எழும் அலையில் ஆவென்று பாட்டிசைப்பேன்
துடித்தே உடல்நடுங்கத் தீயிடையே எறிந்திடினும்
படித்துப் பெருங்கவிதை பாட்டெழுதித் தீய்ந்திடுவேன்


உயிரை விட உயரிய மொழி தமிழ் என உங்கள் கவி உரைத்த விதம் அருமை கவினரே ...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 15, 2012 3:08 am

நன்றிகள் , பூவன் அவர்களே!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 15, 2012 3:10 am



6. ஏங்கும் மனம்

வானிருந்து பூமழைதான் தூவாதோ - எங்கள்
வாழுமில்ல மெங்குமொளி தோன்றாதோ
மேனியெங்கும் புத்துணர்வு பொங்காதோ - கண்கள்
மின்னியொரு புன்னகையைக் கொள்ளாதோ
தேனின்நிலா வான்நடந்து வந்ததென - தமிழ்
தோன்றி எம்மில் துன்பநிலை போக்காதோ
பூனின்றோடும் வண்டெனவே புல்லரித்து - உள்ளம்
புத்துணர்வின் இனிமைதனும் கொள்ளாதோ

மானிருந்து துள்ளுவதாய் மென்விழிகள் - கொண்ட
மாதர்களும் நாட்டியங்கள் செய்யாரோ
தேனிருந்த பூக்கள்தீயைக் கொட்டியதாய் - எந்தத்
தீமை கண்டு பொங்குமுள்ளம் கொள்ளாரோ
வாநிறைந்த வளமிருக்கெம் பூமியிலே - என்று
வண்ணகிளி வாய்திறந்து பேசாதோ
மாநிறைந்த கனிபழுத்தே தூங்கநிரை - அதில்
மனமிழந்து சிறுவர் விட்டு ஓடாரோ

தாகம்பசி பாடமென மாறாதோ - அதைத்
தன்குருவை விழியுயர்த்திக் கேளாரோ
மேகமழை பொய்த்துவிடத் திரியுமெனில் - குட்டி
மின்னலிடி தூறலிட வைக்காதோ
போகமெலாம் கதிர் கொழுத்து குனியாதோ - அது
பூமிதொட மெய்சிலிர்த்துக் காணாதோ
ஏகம் இனி தென்று நிலம் கொள்வோமோ - துணை
எங்குஎன இரவும் அச்சம் தேடாதோ

பனிபடர்ந்த புல்லெனவே பாமரர்கள் - வாழ்வு
பச்சைநிறம் கொண் டுயிர்த்துக் காணாதோ
புனிதநதி பொங்கிப் புரண் டோடிவர - உள்ளம்
புன்னகைத்து தன் வலிமை காட்டாதோ
மனிதரெல்லாம் மாந்தரென்று வாழாரோ - இந்த
மண்ணின் பசி சைவமென்று மாறாதோ
தனிஒருவர் சுதந்திரத்தை தரமறுத்தால் - இந்த
தரணியையே மாற்றக்கவி சொல்லாரோ


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 15, 2012 7:05 am


7. தீப ஒளிகள்


யிரம் ஆயிரம் தீபங்கள் ஏற்றியும்
ஆனந்த மென்ப தில்லை
போயின்னு மேற்றிடப் போகுது வாழ்வுகள்
பொன்னெழிற் தீவின் நிலை
மாயினும் மாளினும் ஏற்றிடும் தீபங்கள்
மேலும் இருக்குத் தொகை
ஆயினும் அச்சம்கொண் டாடுது தீபங்கள்
ஆவேசக்காற்றின் தொல்லை


கோவிலுமில்லைக் குளக்கரை பூவனம்
கூடிய மண்டபங்கள்
தாவி ஏறிவிளையாடிடும் மாமரம்
தானதரும இல்லம்
மேவிவளர் தென்னை வீட்டருகே வேம்பு
வீதியெல்லாம் பறித்தே
போவீரெனச் சொல்லி நாலுபக்கவேலி
போட்டவர் பூட்டுகிறார்

தீபம் ஒளிர்வது தேக்குமரக்காடு
திங்கள் வரும்பொழுது
தூபமிடும் மலர் தூக்கி எறிந்தவர்
தெய்வமென் றன்னை தங்கை
சாபமிட்ட நிலை சற்றுவணங்கவும்
சீறுவர் கொண்டுவெம்மை
ஆபத்துடன் வாழ்வில் அன்றாடம் பூவிட
உண்டோ இன்னும் வருகை


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 15, 2012 7:15 am


8. வீண் பிறப்போ?

நாயின் குட்டியதன் வாலை நிமிர்த்திட
நாள்முழுதும் முயன்றேன் -சிறு
பாயை விரித்திட மூடும்சுருளொடு
பாடு பட்டுக் களைத்தேன்
சேயை அழுதிடத் திட்டித் திட்டி அது
சேர்ந்து கதறக்கண்டேன் -ஒரு
நோயை அழுந்துவன் நின்று இருமிட
நில்லென்று ஆணையிட்டேன்

காயை அடித்துக் கனியுமென்று எண்ணிக்
காணும் சுவையிழந்தேன் - ஒரு
பேயை அழைத்ததைப் பூசைசெய்தே நல்ல
புண்ணியம் கிட்டுமென்றேன்
வாயுமசைந்திட மந்திரமிட்டொரு
வாசல் திறக்குமென்றேன் - ஒரு
காயை நகர்த்திக் `களிக்`கென்று வெட்டிடக்
காணும் வழி மறந்தேன்


கூழிலு மாசையும் கொண்டதில்மோகமும்
கண்டவனா யிருந்தேன் -இந்தப்
பாழும் மனதந்தப் பண்ணும் தியாகங்கள்
பற்பலவும் அறிவேன்
ஏழும் அரையென ஏதும்பிடித்திட
என்னசெய்வேன் இருளில் -வந்து
வாழும் முறைதனை வையகம் தந்தது
வாழத்தெரிவன் அல்லேன்

கோளும் கிரகங்கள் சுற்றுகையில் இவன்
கொள்கை நிலைத்திடுமோ- இனி
மாளும்வரை கொண்ட மானிட வாழ்விது
மீண்டும் துலங்கிடுமோ
தாழும் உயர்ந்திடும் தன்னிலை கெட்ட
தராசில் அளந்திடவோ -அல்ல
வீழும் மரத்தினை வெட்டி எரித்திட
வையம் எழில்பெறுமோ

பாம்பொடு பூனையும் பாயும்புலிகளும்
பாரில் அழகுஎன்பேன் - ஒரு
மாம்பழம் வேம்புடன் மற்றும் அரளியும்
மாபெரும் தேவை ன்பேன்
வீம்போடு வந்து விழுந்தெல்லாம் புவி
வேண்டா தென் றாகிவிடில் - அதைக்
காம்போடு கிள்ளி எறியும்வரை கையில்
கள்ளிச்செடி நெருடும்
*******************

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக