ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரிக்காக கவிதைகள் சில

4 posters

Go down

நவராத்திரிக்காக கவிதைகள் சில Empty நவராத்திரிக்காக கவிதைகள் சில

Post by kirikasan Fri Oct 19, 2012 6:17 pm


நவராத்திரி பாடல் 1

வீரத்தின் தேவி!, வெற்றியின் ஊற்றே!
வேண்டுவ தீந்துவிடு
சாரமும் கெட்டுத் தளர்ந்தவர் கண்டு
சக்தியை ஊற்றிக் கொடு
தூரத்தில் தோன்றுமச் சூரியச் சூழையில்
சொல்லொணாச் சக்தி வைத்தாய்
பாரத்தைக் கொண்டு பற்றினோம் கையைப்
பணிந்தனம் சக்திகொடு

ஆற்றுக்குவேகம் அனலுக்குதீய்ப்பு
அடித்திடும் புயற் துடிப்பு
சீற்றத்துக் காழி செழிப்பதில் பூக்கள்
சிறப்பென நீ படைத்தாய்
வீற்றிருக்குமுன் வெள்ளிமலைபோல்
வீறுடன் நாம் நிமிர
போற்றுகின்றோமெம் புன்மையழித்துப்
பூமியில் மாற்றிவிடு

சேற்றுக்குள் பூத்தால் செந்தாமரைப்பூ
சீ யென்று தள்ளுவதோ
காற்றெனும் மூச்சு காயத்தினோடு
கோபத்தைக் கொண்டிடவோ
மாற்றுக்கு ஏதும் மாறுதலின்றியே
மாவுல கோடிடுமோ
நூற்றுக்கு ஒன்றாய் நாம்வாழல்விட்டு
நிலைதனில் கெடுவதுவோ

கொட்டலாம் மேகம் குமுறலாம் ஆழி
கூரைகள் பிய்த்தெறிந்தே
பட்டதைச் சூறை பாதி முறித்தே
பலமென்று காட்டிடலாம்
வெட்டலாம் மின்னல் வீழலாம் தாரை
வெள்ளமாய் நீர் கொட்டலாம்
விட்டெலாம் நீங்கும் வேகங்கள் வாழ்வில்
வந்திடத் தேறுவமோ
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நவராத்திரிக்காக கவிதைகள் சில Empty Re: நவராத்திரிக்காக கவிதைகள் சில

Post by சதாசிவம் Fri Oct 19, 2012 8:33 pm

பதமான பைந்தமிழ் பாத்து
பலகாலம் பறந்தாச்சு
பண்ணான பதமெடுத்து
பக்குமாய் பண்ணமைத்து
பாங்குடன் பண் பாடிய
பண்பான பாவலருக்கு
பணிவுடன் பாராட்டு
பாடல்கள் பரவட்டும்
பாரதி பன்மடங்கு அருளட்டும்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நவராத்திரிக்காக கவிதைகள் சில Empty Re: நவராத்திரிக்காக கவிதைகள் சில

Post by kirikasan Fri Oct 19, 2012 9:39 pm

சதாசிவம் wrote:பதமான பைந்தமிழ் பாத்து
பலகாலம் பறந்தாச்சு
பண்ணான பதமெடுத்து
பக்குமாய் பண்ணமைத்து
பாங்குடன் பண் பாடிய
பண்பான பாவலருக்கு
பணிவுடன் பாராட்டு
பாடல்கள் பரவட்டும்
பாரதி பன்மடங்கு அருளட்டும்

நன்றிகள் பல!! என் உள்ளத்திலிருந்து !!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நவராத்திரிக்காக கவிதைகள் சில Empty நவராத்திரிக்காக கவிதைகள் சில

Post by kirikasan Fri Oct 19, 2012 9:43 pm

2 வது கவிதை

கருணை காட்டு

அடிமனதிலெழும் கவலை
. அதையறிவ துனதுநிலை
. ஆற்றிவிடு சக்திதேவி
துடித் துளமும் துயருறவும்
. தொலைவிலிருந் தெமையறிவ
. திலைஎனவும் மறுப்பதா நீ
விடிவுகொள இவரெமது
. விளைவிலெழும் புதல்வரென
. விரும்பி எமக்கன்பை யருளி
முடிவையெடு இருகரமும்
. முகை மலரென் றிணையவுனை
. மனமுவந்து கேட்டோம் தேவி

தினம் நடந்த திங்கள்முகம்
. தனையிழந்து குறுகுதென
. தமிழ் சுவைத்து வாழ்ந்த இனமும்
தனமிழந்து தரமழிந்து
. தமிழ் குலைந்து தமையிழந்து
. தவிக்கும்வகை காண்பாய் சக்தி
மனமழிந்து வாழ்விழந்து
. மதிபிழன்று மானிடத்தின்
. மகிமைதனும் இழந்தே தேவி
கனமிழந்து வாடுமெமைக்
. காப்பதற்கு வேண்டுமுடன்
. கருணை கொண்டு காண்பாய் சக்தி


நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
. பழியெழுந்த விதமெதுவோ
. குகையொழித்த இருளும்போலே
மிகையழிய மேதினியில்
. அகமகிழ இருப்பதென்ன
. தொகையழியு முன்னர் காப்பாய்

**************************
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நவராத்திரிக்காக கவிதைகள் சில Empty Re: நவராத்திரிக்காக கவிதைகள் சில

Post by kirikasan Fri Oct 19, 2012 10:02 pm

நவராத்திரி பாடல் 3

தா வென்றேன்

அகிலின் புகையாய் வாசம் திகழும்
- அருமை பூவின்எழிலாய் வாழ
- அருளைத் தாவென்றேன்
துகிலும் சோரத் தாங்கும் கைகள்
- துவளும்நெஞ்சைத் தேற்றும் எண்ணம்
- தேவை கொடுவென்றேன்
மகிமை கொண்டாய் பாலை மண்ணில்
- மருளக் காணும் மானாய் ஆனோம்
- மாற்றம் செய்யென்றேன்
தகித்தே மனதில் தானென் றெண்ணம்
- தலையும் தூக்கா தென்னைக் காப்பாய்
- தமிழைக் கொடுஎன்றேன்

வளையும் கொடிகள் வாழ்வில் காணா
- வலிமை தன்னைத் தாராய் ஒளியே
- வந்தே சேரென்றேன்
துளையும் கொண்டோர் மூங்கில் குழலாய்
- துயரில் ஆடிக் கீதம் பாடித்
- தொழுதே அழுதிட்டேன்
அளையும் மனதின் அகம்பாவந்தான்
- அணியென் றென்னை அருகா துள்ளம்
- அழுக்கைக் களையென்றேன்
விளையும் பொழுதும் வீணென்றாகி
- வெயிலை போலும் வினைகள் சுடுமே
- வேண்டா மதுவென்றேன்

தழையும் கொடியும் ஆடும் உலகில்
- தலையும் மமதை கொண்டே ஆடும்
- தன்மை கொல்லென்றேன்
மழையும் வருமுன் கருமே கம்போல்
- மதியை வந்தே மூடும் இருளாம்
- மோகம் நீக்கென்றேன்
இழையும் உனது அருளால் தூறும்
- இனிமைத் துளிகள் வந்தே உள்ளம்
- எங்கும் பொலியென்றேன்
முளையில் பயிரும் மரமும் வேண்டி
- முகிலை இரக்கும் நிலையில் ஞான
- முதலே தாவென்றேன்

பிழியும் சோகம் விட்டேன் உள்ளப்
- பிறள்வை நீக்கிப் பின்னும் வாழப்
- பெரிதும் உதவென்றேன்
பழியும்தீரப் பகையுபோகப்0
- பணியும் மனதில் பலமும்தந்து
- பண்பை ஊட்டென்றேன்
அழியும் தீமை போகும் மிருளென்
- றாடும்காற்றில் அகலின்சுடராய்
- அன்பைக் கொடுவென்றேன்
இழியும் வண்ணம் இன்றிக் கால்கள்
- இறைமைகொண்டோர் தேசம்ஒன்றில்
- இருக்கும் நிலைகேட்டேன்

************************
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நவராத்திரிக்காக கவிதைகள் சில Empty Re: நவராத்திரிக்காக கவிதைகள் சில

Post by நாகசுந்தரம் Mon Oct 22, 2012 9:50 am

மிகவும் நன்று. தங்கள் கவிதைகள் பாரதியின் கவிதைகளை போன்று உள்ளன. பாராட்டுக்கள்.




Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

நவராத்திரிக்காக கவிதைகள் சில Empty Re: நவராத்திரிக்காக கவிதைகள் சில

Post by kirikasan Wed Nov 14, 2012 4:48 pm

நாகசுந்தரம் wrote:மிகவும் நன்று. தங்கள் கவிதைகள் பாரதியின் கவிதைகளை போன்று உள்ளன. பாராட்டுக்கள்.


மிக்க நன்றிகள்!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நவராத்திரிக்காக கவிதைகள் சில Empty Re: நவராத்திரிக்காக கவிதைகள் சில

Post by பூவன் Wed Nov 14, 2012 9:49 pm

நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்


உங்கள் கவிதை உணர்வை சாடிய விதம் அருமை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நவராத்திரிக்காக கவிதைகள் சில Empty Re: நவராத்திரிக்காக கவிதைகள் சில

Post by kirikasan Thu Nov 15, 2012 3:05 am

பூவன் wrote:நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்


உங்கள் கவிதை உணர்வை சாடிய விதம் அருமை

மிக்க நன்றிகள் பூவன்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நவராத்திரிக்காக கவிதைகள் சில Empty Re: நவராத்திரிக்காக கவிதைகள் சில

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum