ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

+22
முனைவர் ம.ரமேஷ்
krishnaamma
ஜாஹீதாபானு
N.S.Mani
ayyasamy ram
ப்ரியா
கலைவேந்தன்
தண்டாயுதபாணி
இளமாறன்
Manik
BPL
செந்தில்
அப்புகுட்டி
ரூபன்
மீனு
reachegopal
VIJAY
பாலாஜி
thesa
gv.raj
ramesh.vait
சிவா
26 posters

Page 4 of 24 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 24  Next

Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 4 Empty ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?


அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 4 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Mon Jul 27, 2009 6:33 pm

ஆங்கிலத்தில் செக்ஸ் என்ற வார்த்தை பாலினம் என்பதை குறிக்கிறது. அதே சொல் எப்படி பாலுறவை குறிக்கும் சொல்லாகவும் இருக்க முடியும்? -ரா.பிரசன்னா, மதுரை.


நீங்கள் சொல்வது சரியே. முதலில் செக்ஸ் என்பது ஆங்கில வார்த்தை இல்லை. லத்தீனிலிருந்து வந்தது.


செக்ஸுக்கும், செக்ஷனுக்கும் தொடர்பு உண்டு. மனிதர்களை ஆண், பெண் என்று இரு இனங்களாக, செக்ஷன்களாக பிரிக்கிறார்கள். செக்ஸ் என்ற வார்த்தைக்கு பாலின உறவு என்கிற அர்த்தம் வந்தது 20ம் நூற்றாண்டில் தான். முதலில் அப்படி ஓர் அர்த்தத்தில் பயன்படுத்தியவர் லேடி சேட்டர்லிஸ் நாவலை எழுதிய டிஹெச். லாரன்ஸ். ரொம்ப காலமாக தமிழில் ஆண் பால், பெண் பால், பாலின சேர்க்கை, ஓரின சேர்க்கை என்றெல்லாம் கச்சிதமாக பெயர்கள் இருக்கின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 4 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Mon Jul 27, 2009 6:33 pm

வைகுண்ட பதவி, சிவலோக பதவி ஆகியவற்றை பற்றி அரசியல்வாதிகள் சிந்திப்பது இல்லையே ஏன்?
- ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.



அதற்கு காரணம்- அந்த பதவிகளை அடையும்போது, அதை அனுபவிக்க அவர்கள் இருப்பது இல்லை. யாராவது அரசியல் தலைவரிடம் சென்று உங்கள் கொள்ளுப்பேரனின் மகனுக்கு 5 கோடி ரூபாய் தர ஏற்பாடு செய்கிறேன். எனக்கு இந்த வேலையை செய்து தாருங்கள் என்று கேட்டு பாருங்கள். ஒப்புக்கொள்வாரா? அவர் உயிருடன் இருக்கும்போது அவர் கையிலேயே பணம் வைத்தால் தான் ரசிப்பார். பதவியும் அப்படித்தான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 4 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Mon Jul 27, 2009 6:33 pm

பத்திரிகைகளில் சில நிருபர்கள் ப்ரீலான்சர் என்கிறார்களே அப்படி என்றால் என்ன அர்த்தம்?- சுகந்தாமோகன், சென்னை.


சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, யுத்தம் வரும்போது எல்லாம் மன்னர்களுக்கு நிறைய வீரர்கள் தேவைப்படுவார்கள். ஆகவே, வெளியில் இருந்து தன் கீழே நிரந்தரமான பணியில் இல்லாத, வீரர்களை வேலைக்கு எடுத்துக்கொண்டு கையில் ஈட்டியை கொடுத்து போருக்கு அனுப்புவர்கள். அந்த போருக்காக மட்டும் தற்காலிக வீரர்கள் அவர்கள் தான் ப்ரீலான்சர்கள் என்று அழைக்கப்பட்டனர். பிற்காடுஅந்த பெயர் (ஈட்டிக்க பதிலாக) பேனா பிடிப்பவர்களுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. இப்போது பணத்துக்காக ஒரு யுத்தத்தில் போரிடும் வீரர்களுக்கு மெர்ஸனெரி என்று பெயர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 4 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Mon Jul 27, 2009 6:34 pm

நாய்கள்அசந்து தூங்குவது இல்லையே, ஏன் சார்?
-ராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம்



ஒரு காலத்தில் நாய்கள் காட்டில் வசித்தபோது திடீர் என சிறுத்தைபோன்ற மற்ற மிருகங்கள் அவை மீது பாயலாம். ஆகவே, அசந்துதூங்க முடியாது. இப்போது அவை மீது மனிதன் கல் எறிகிறான். வாலை மிதிக்கிறான். திடீர் என்று நாய் வண்டியை அனுப்புகிறான். இப்போதும் அசந்து தூங்க முடியவில்லை. பாவம். மொத்தத்தில் நாய்களுக்கு நிம்மதியான தூக்கமே போச்சு. (உண்மையில், நாய்களுக்கு அந்த தூக்கமே போதும்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 4 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Mon Jul 27, 2009 6:34 pm

அந்த ஆளு மூஞ்சியில முழிச்சாலே ஒண்ணும் உருப்படாது என்கிறார்களே அதுஉண்மையா, பிரமையா?


- என்.கே.ஈஸ்வரி, பெங்களூர்.


பூனை சகுனம் மாதிரி தான் இதுவும். நாம் வெளியே கிளம்புபோது பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்? பூனை குறுக்கே போகிறது என்று தான் அர்த்தம். போன காரியம் நடக்கவில்லை என்றால், சற்று யோசித்து பூனை குறுக்கே போனதை நினைவு படுத்தி கொள்கிறோம். இது போன்ற சகுனங்களுக்கு எல்லாம் விஞ்ஞான ஆதரங்கள் கிடையாது. ஆனால் உண்டு என்கிறார் என் நண்பர் ஒருவர். நண்பரின் மனைவி அவர் வீட்டுக்கு போனபோது புடவை ரொம் நல்லா இருக்கே என்றார்அந்த பெண்மணி. நண்பரின் மனைவி திரும்பி சாலையை கடக்கும்போது சைக்கிள் மோதி கீழே விழுந்து புடவை எல்லாம் சேறாகிவிட்டது. அதிலிருந்து புதுசாக ஏதாவது உடுத்திக்கொண்டால் அவர் எட்டிப் பார்த்து, எதிர்வீட்டு பெண்மணி வாசலில் இல்லை என்று உறுதிப்படுத்தி கொண்டு, உடனே தெருக்கோடி வரை ஓட்டம் எடுக்கிறார். நம்பிக்கை தான் காரணம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 4 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Mon Aug 03, 2009 6:16 pm

இந்த வெயிலிலும் காலில் செருப்பு அணியாமல் தெருத்தெருவாக அலைந்து வியாபாரம் செய்கிறார்களே. அவர்களின் கால்கள் என்ன மரத்துப் போய் விடுமா? எனக்கு எல்லாம் செருப்பு இல்லாமல் கொஞ்சம் தூரம் நடந்தாலே கொப்புளம் வருகிறதே எப்படி?


மரத்துப் போகாது. காய்ச்சுப் போய்விடும்! அதாவது, பாதத்தின் அடிப் பகுதியே தோலால் ஒரு "செருப்பை'த் தயாரித்துக்கொள்கிறது! ஆனால், ரொம்ப சூடு என்றால் தாங்காது. எட்டாவது வகுப்பு முடிக்கும் வரை நானும் செருப்பு அணிந்தது இல்லை. அப்போது செருப்பு இல்லாமல் ஆறேழு மைல்கள் கூட நடந்து இருக்கிறேன். இப்போது, வெயிலில் ஐந்து அடிகள் கூட நடக்க முடியாது. திடீரென்று பாதத்தைத் திகைக்கவைத்தால் எப்படி?!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 4 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Mon Aug 03, 2009 6:16 pm

நமது நாட்டில் மறைமுகமாக மன்னர் ஆட்சி நடப்பது போல் தெரிகிறதே?

மறைமுகமாகவா?! அதாவது கிரீடம், யானை மேல் பவனி வருவது எல்லாம் இல்லாமல்... என்கிறீர்களா? ஒன்றை நாம புரிஞ்சுகணும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மன்னராட்சி ஒன்றுதான் நமக்கு தெரியும் (விக்டோரியா மகாராணி உட்பட) அது நம்ம மக்களோட ரத்தத்தில் ஊறிப்போயிடுச்சு! நம்ம நாட்டிலே இருக்கிறவங்களில் 70 சதவிகிதத்துக்கும் மேலே படிப்பறிவு இல்லாத கடும் வறுமையிலே தவிக்கிற "இலவசங்களால்' மயக்கப்படுகிற ஏழை மக்கள். சும்மா ஃப்ரெண்ட்ஸ்கிட்டே அரசியல் பற்றி குறை சொல்லிக்கொண்டு, ஓட்டுப் போடக்கூடப் போகாத நடுத்தர வர்க்கம். பிசினஸ் நல்லபடியாக நடக்கப் பணத்தை அரசியல்வாதிகளிடம் தூக்கி எறிந்தால் போதும் என்று நினைக்கும் பணக்கார வர்க்கம்... ஜனநாயகம் எப்படி ஓங்கித் தழைக்கும்? எந்த அவலத்தையும் மாற்றக்கூடிய வல்லமை மக்கள் கருத்துக்கு இருந்தால்... அதுதான் ஜனநாயகம். நம்முடையது நோய்வாய்ப்பட்டு இருக்கும் ஜனநாயகம். ஆகவே, இந்தியா முழுவதும் நடப்பது உண்மையில் மன்னர் ஆட்சிதான். இதை ஆதாரங்களோடு விவரிக்கப் பல பக்கங்கள் தேவைப்படும்! (பல முதிர்ந்த ஜனநாயக நடுகளில் "வாழ்க' கோஷம் கூடக் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?!)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 4 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Mon Aug 03, 2009 6:17 pm

வாய் இல்லாப் பிராணிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்திய சம்பவம் முன்பு எப்போதாவது நிகழ்ந்தது உண்டா?

ஒரு சிறுவன் மீது பெரிய பன்றி ஒன்று பாய்ந்து கடித்துக் குதறிவிட்டது. பையன் செத்துப் போனான். பன்றி மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் நீதிபதி அதற்குத் தூக்குத் தண்டனை விதித்தார். இது நடந்தது. பிரான்ஸில். 1386-ம் ஆண்டு! எனக்குத் தெரிந்தவரையில் அண்மையில் இது போன்ற "வழக்கு' எதைப்பற்றியும் நான் படித்தது இல்லை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 4 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Mon Aug 03, 2009 6:18 pm


முன்பெல்லாம் இரண்டு கார்கள் எதிரெதிரே இரவில் வந்தால் ஹெட் லைட்டுகளை அணைத்து ஏற்றுவார்கள். இப்போது அது நடைமுறையில் இல்லையே. கண்கள் கூசுவதால் விபத்து ஏற்படும் என்ற உணர்வு டிரைவர்களுக்கு வராதா?


நீங்கள் சொல்வது நியாயமானதுதான். அந்த நாகரீகம் குறித்து இப்போது யாரும் கவலைப்படுவது இல்லை. ஊருக்குள்ளேயே எல்லோரும் வேகமாக வண்டி ஓட்டுகிறார்கள். அதற்கு "நீண்ட தூர' வெளிச்சம் தேவைப்படுவதால் "ஹெட் லைட்' டை உச்சத்தில் போட்டுவிடுகிறார்கள். போக்குவரத்து போலீஸ் அந்த கார்களை நிறுத்தி "இதுதான் முதல் முறை. இன்னும் இருமுறை இப்படிச் செய்தால் 1,000 ரூபாய் அபராதம்' என்று எழுதப்பட்ட "ஸ்லிப்' ஒன்றைத் தந்தால்கூடப் போதும். இந்த "ஹெட் லைட்' அதிகப்பிரசிங்கித்தனம்' சற்று குறையும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 4 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Mon Aug 03, 2009 6:20 pm

உண்மையிலேயே கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்து அவ்வளவு பெரிய வசனம் பேசினாரா?

வீரபாண்டியக் கட்டபொம்மன் ஆங்கிலேயர் வரி கேட்டபோது சிவாஜிகணேசன் மாதிரி வசனம் பேசினாரா?


ஆங்கிலேயர்கள் ரொம்பத் "தெனாவட்டாக'த் திரிந்த காலம் அது. நிலைமை புரியாமல் கட்டபொம்மன் "வெள்ளைக்காரப் பசங்களுக்கு நான் ஏன்யா வரி கட்டணும்?' என்று நிச்சயமாக முரண்டு பிடித்திருப்பார். "என்னா மேன், திமிரா பேசறே?' என்று சொல்லி, உடனடியாக கங்காரு கோர்ட் ஸ்டைலில் மேஜை போட்டு "நீதிபதி' ஒருவரை உட்காரவைத்து தீர்ப்பு எழுதி, கட்டபொம்மனைக் கைது செய்து, அருகில் இந்த ஒரு புளியமரத்தில் தூக்கில் தொங்கவிட்டார்கள். "என் கவுன்ட்டர்' மாதிரிதான்! பிரிட்டிஷ் சிப்பாய்கள் துப்பாக்கிகளை வைத்து குறி பார்த்தால், கூடி இருந்த மக்கள் மிரண்டு போய் நின்றிருக்க வேண்டும். ஆனால் ஒன்று - சிவாஜி பேசிய வசனத்தை கட்டபொம்மனிடம் கொடுத்திருந்தால் "அட, ரொம்ப பிரமாதமா இருக்கே!' என்று பிரமித்து, அதை அப்படியே பேசி இருப்பார். அதற்கான நேரத்தை வெள்ளைக்காரர்கள் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 4 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 24 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum