ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அண்ணனுக்கு...

+4
யினியவன்
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
அகல்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்புள்ள அண்ணனுக்கு... Empty அன்புள்ள அண்ணனுக்கு...

Post by அகல் Wed Oct 17, 2012 11:45 am

எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்

அண்ணா...
எப்படி இருகிறாய்..?

பார்த்து பேசி பனிரெண்டு
மாதங்கள் ஆகிப்போயின..
நலமாக இருக்கிறாயா..?

சொர்க்கம், நரகம்
என்றெல்லாம்
சொல்கிறார்களே
நீ எங்கு இருகிறாய்..?

ஊருக்கே நல்லவனாயிற்றே
நீ எப்படி நரகத்தில் இருப்பாய்..!?

எத்தனை மருந்திட்டாலும்
எதையும் மறக்க முடியவில்லை
அண்ணா...

உன்னோடு நான் பிறந்த ஊர்
நம் இருவரையும் பெற்றெடுத்த தாய்
இருவரும் சேர்ந்து உணவு
உட்கொண்ட வட்டில்
நாம் ஒன்றாக ஊர்சுற்றிய நாட்கள்

பள்ளிப் பருவத்தில்..
நடந்து என் கால் வலிக்கும் நேரம்,
குதிரையாய் மாறிய நீ
பொதியாய் மாறிய நான்

எனக்கு உடல் நிலை
சரியில்லையாயின்
துடித்துப் போகும்
உன் மனது

எனக்காக மற்றவர்களிடம்
நீ சண்டையிட்ட தருணங்கள்

நாம் இருவரும் போட்டுக்
கொண்ட ஒரு நாள் சண்டை

அதன் விளைவாக
என் உடலோடு இன்றும்
ஒட்டிகொண்டிருக்கும்
ஒற்றைத் தழும்பு

இவ்வுலகில்
நினைவிழந்து நீ வாழ்ந்த
இரண்டு நாட்கள்

உன் உயிர்(என் உயிர்) இந்த உலகைப்
பிரிந்த அந்த கொடிய நொடிப் பொழுது

விறகின் மேல் வீற்றிருந்த நீ..
உனது நெற்றியில்
நான் கொடுத்த கடைசி முத்தம்

உன் உடல் நெருப்பிற்கு
இரையான வேலையில்..,
நான் உருண்டு புரண்ட
அந்த மயானக் காடு

உனைப் பிரிந்த இரவுகளில்
எனது ஓலங்கள்

உனது நினைவுகள் மட்டுமே
நிறைந்து கிடக்கும் நமது வீடு

எதையும் மறக்க
முடியவில்லை அண்ணா..!

ஊமையின் கனவுகளாய்
அத்தனையும் என் நினைவுகளில்..

சிலமுறை காற்றோடு
தேடித் பார்க்கிறேன்
கைகளுக்கு அகப்படுவாயென..!

அந்த கோர விபத்து
நமது வாழ்கையின்
திசைகளைத்
திருப்பிப் போட்டது...

அது ஆயிரம் விடயங்களை
எனக்கு கற்றும் கொடுத்தது..

இவ்வுலகில் விபத்திற்கு
ஏதும் விபத்து வராதா..?

நீ விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து
விமான நிலையம் நோக்கி ஓடிய எனக்கு
திருவிழாக் கூட்டமாய் இருந்த அந்த இடம்,
ஏனோ மேகமில்லா வானமாய்
வெறிச்சோடித்தான் தெரிந்தது

வாழ்க்கையில் இத்தனை
மணிப் பொழுதுகள்
எதற்காகவும் என் கண்ணீர்த்
துளிகள் கரைந்ததாய்
எனக்கு ஞாபகம் இல்லை..

இருந்தும்...

எப்படியும் உனைக் காப்பாற்ற
முடியும் என்ற நம்பிக்கையில்,
விமானம் ஏறி அமர்ந்து விட்டு
அதை இன்னும் வேகமாகச் செல்லச்
சொல்லி மனம் பரிதவித்தது...

தட்டுத் தடுமாறி
உன்னை அடைந்தேன்..

ஆனால்,
நீ என்னைப் பார்க்கமுடியவில்லை
நான் உன்னோடு பேசமுடியவில்லை

நடப்பதறியாது,
மற்றவரோடு பேசாது,
வாழ்நாளில் நீ
மௌனம் காத்த நாட்கள்,
அந்த இரண்டு நாட்களாகத்தான்
இருக்கும்...

இவ்வுலகில்..
தாங்க முடியாத வலிகளில் ஒன்று..,
உயிராய் நேசிப்பவரின் உயிர்
நேசிப்பவர் கண்முன்னே பிரிவது...

அந்த கொடிய வலியையும்
எனக்கு கொடுத்து விட்டாய்..!

உனை...
இந்த மண் எடுத்துக்கொண்ட நாளில்
இனி வாழ்ந்து பயனேது என்றெண்ணி,

தற்கொலை முயற்சிக்கும்
தயாரானேன் - இருந்தும்
தவிர்த்து விட்டேன்..

என்ன செய்வது...

இன்று நீ இல்லை
நம்மைப் பெற்றோருக்கு
என்னை விட்டால்
வேறு நாதி இல்லை...

26 ஆண்டுகள்
உன்னோடு வாழ்ந்த வீட்டில்..,
இன்று 26 நிமிடங்களும்
இமயமாய்ப் போனது...

உனைப் பிரிந்த நாட்களில்
சிரிக்கப் பழகிக் கொண்டேன்.

சொல்லப் போனால்..
உண்மையை மறைக்கப்
பழகிக் கொண்டேன்..

என்னைத் தவிக்க விட்டுப் போனாய்
பரவாயில்லை..
ஒரு பெண்ணையும் தவிக்க
விட்டுப் போனாயே..!

நிரந்தரமாகப் பிரிவைக் கொடுத்து
விட்டோம் என்று - நீ
நினைத்துக் கொள்ளாதே

என் நாடித் துடிப்பின்
கடைசி நொடிப் பொழுதும்
உன் நினைவுகளில் நானிருப்பேன்
என் நிழலிலும் நீ இருப்பாய்

உயிர் பிரிந்த பின்னும்
என் ஆன்மா உன் நினைவுகளை
அசை போட்டிக் கொண்டிருக்கும்..!

மறு ஜென்மம் இருப்பது
உண்மையானால்..,

நீ இப்போதே பிறந்து விடாதே
முதலில் நான் இறந்து விடுகிறேன்..

பின்பு..
அதே வயிற்றில்
மீண்டும் பிறப்போம்

நீ அண்ணனாக
நான் தம்பியாக..!

எனது அன்புச் சகோதரனின் முதலாம் ஆண்டு
நினைவு நாளிற்காக (18/8/12) எழுதியது

அன்புள்ள அண்ணனுக்கு... Brotherr


Photography by Agal


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அன்புள்ள அண்ணனுக்கு... Empty Re: அன்புள்ள அண்ணனுக்கு...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 17, 2012 11:52 am

அண்ணனை இழந்து தவிக்கும் உங்களுக்கு சமாதான உண்டாகட்டும். வாழ்க்கை என்னும் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போமாக. இழப்பு என்பது இன்றியமையாதது என்பதை மனதில் வைக்கவும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அன்புள்ள அண்ணனுக்கு... Empty Re: அன்புள்ள அண்ணனுக்கு...

Post by ரா.ரா3275 Wed Oct 17, 2012 12:40 pm

அய்யா சொன்னதுதான் உண்மை...இழப்பு என்பது இயற்கை...தவிர்க்க இயலாதது...
அதே வேளையில் அவ்விழப்பிற்காய் இதயம் துடித்தழுவதும் இயற்கை...இதையும் தவிர்க்க
இயலாது...ஏற்கக் கூடியவர்களுக்கே இறைவன் இழப்பையும் கஷ்டத்தையும் அவன் இஷ்டத்துக்கு ஏற்றுகிறான்...

ஏற்போம்...அவன் ஏற்றும் வரை...ஓர் நாள் அவனே அதை இறக்குவான்...

நல்ல இழப்புணர்வு அகல்...


அன்புள்ள அண்ணனுக்கு... 224747944

அன்புள்ள அண்ணனுக்கு... Rஅன்புள்ள அண்ணனுக்கு... Aஅன்புள்ள அண்ணனுக்கு... Emptyஅன்புள்ள அண்ணனுக்கு... Rஅன்புள்ள அண்ணனுக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அன்புள்ள அண்ணனுக்கு... Empty Re: அன்புள்ள அண்ணனுக்கு...

Post by யினியவன் Wed Oct 17, 2012 12:49 pm

வருத்தம் தொனிக்கும் பாச வரிகள்
மனதை கலக்கி விட்டது அகல்

நிலையான உறவு என்று ஒன்றுமே இல்லை
ஏனெனில் நாம் இருப்பதும் நிலை அல்லவே

உங்கள் சோகத்தை பங்கிட நாங்கள் இருக்கிறோம்
அண்ணன் சாதிக்க நினைத்ததை சேர்த்து சாதிக்கும்
பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது - மறக்க வேண்டாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்புள்ள அண்ணனுக்கு... Empty Re: அன்புள்ள அண்ணனுக்கு...

Post by முரளிராஜா Wed Oct 17, 2012 12:52 pm

உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியிலும்
பிரிவின் வலியை நன்கு உணரமுடிகிறது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அன்புள்ள அண்ணனுக்கு... Empty Re: அன்புள்ள அண்ணனுக்கு...

Post by Guest Wed Oct 17, 2012 12:54 pm

ரா ரா அண்ணனையும் , இனியவன் அண்ணனையும் , தயாளன் அய்யா சொன்னதையும் வழிமொழிகிறேன்
avatar
Guest
Guest


Back to top Go down

அன்புள்ள அண்ணனுக்கு... Empty Re: அன்புள்ள அண்ணனுக்கு...

Post by அகல் Wed Oct 17, 2012 2:11 pm

உங்கள் அன்பிற்கு எனது நன்றிகள் ஐயா தயாளன், ரா.ரா, யினியவன், முரளிராஜா, புரட்சி... தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே.. கண்டிப்பாக அந்த பொறுப்பை மறக்கமாட்டேன் இனியன் அண்ணா...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அன்புள்ள அண்ணனுக்கு... Empty Re: அன்புள்ள அண்ணனுக்கு...

Post by ஜாஹீதாபானு Wed Oct 17, 2012 3:34 pm

மனதை உருக்கி கண்ணில் நீரை வரவைத்து விட்டது இந்த பாச வரிகள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்புள்ள அண்ணனுக்கு... Empty Re: அன்புள்ள அண்ணனுக்கு...

Post by Manik Wed Oct 17, 2012 3:43 pm

நல்ல கவிதை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புள்ள அண்ணனுக்கு... Empty Re: அன்புள்ள அண்ணனுக்கு...

Post by அகல் Wed Oct 17, 2012 7:08 pm

ஜாஹீதாபானு wrote:மனதை உருக்கி கண்ணில் நீரை வரவைத்து விட்டது இந்த பாச வரிகள்
நான் எந்த ஒரு வரியையும் மிகைபடுத்தி எழுதவில்லை.. உங்களின் அன்பிற்கு எனது நன்றிகள் ஜாஹீதாபானு, Manik ...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அன்புள்ள அண்ணனுக்கு... Empty Re: அன்புள்ள அண்ணனுக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum