ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
குப்பை மனசு Poll_c10குப்பை மனசு Poll_m10குப்பை மனசு Poll_c10 
heezulia
குப்பை மனசு Poll_c10குப்பை மனசு Poll_m10குப்பை மனசு Poll_c10 
mohamed nizamudeen
குப்பை மனசு Poll_c10குப்பை மனசு Poll_m10குப்பை மனசு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பை மனசு

+2
யினியவன்
சிவா
6 posters

Go down

குப்பை மனசு Empty குப்பை மனசு

Post by சிவா Tue Oct 16, 2012 1:16 pm

தெரு பெண்மணிகள் கொதித்துப் போனார்கள்.

"எவ்வளவு திமிரு இருந்தா நாலு நாளா குப்பை எடுக்க வராம இருப்பான்...''

"தெருவே நாறிப் போயி கிடக்குது... இன்னும் ரெண்டு நாள் வரலேன்னா அவ்வளவுதான்...''

"நாலு நாள் குப்பை சேர்ந்து போச்சு... என்ன பண்றதுன்னே தெரியல... மாசமானா ரெண்டொரு நாள் குப்ப அள்ள வர்றதில்ல...''

"குப்பை எடுத்தாலும் ஒழுங்கா எடுக்கறதே இல்லை... பாதி குப்பைய வீட்டு எதிர்லயே சிந்திட்டுப் போறான்...''

"என்ன பண்ணலாம்... மாசமானா டான்னு வீட்டுக்கு பதினஞ்சு ரூவா கொடுத்திடறோம். தீபாவளி பொங்கல்ன்னா தனி காசு... இன்னும் என்ன வேணுமாம் அவனுக்கு...''

அவரவர் வீட்டு வாசலில் நின்றபடி பெண்கள் குப்பை அள்ளுபவனை கரித்துக் கொட்டினார்கள்.

அவர்கள் குப்பை என்பதில் காய்கறியின் மிச்சம்... கூட்டிப் பெருக்கியதன் கழிவு... சாராய பாட்டில்கள்... உபயோகப்படுத்தப்பட்ட நாப்கின் வரை அடக்கம்...

நான் மலர்விழியிடம் கேட்டேன்... "ஏம்மா குப்பை வண்டி வரலேன்னா என்ன... தெருமுனையிலதான் குப்பைத் தொட்டி இருக்கே... அங்க கொண்டு போயி கொட்டலாமே...''

"அதான்... நீங்க அவனுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு வந்திடுவீங்களே... மாசமானா பணம் கொடுக்கறோம்... அப்பப்ப பழைய துணிமணி கொடுக்கறோம்... கரெக்டா குப்பை எடுக்க வேண்டியதுதானே...''

"சரிம்மா... குப்பை அள்றவன் வரலேன்னா அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கணும்... அத விட்டுட்டு ஆளாளுக்கு பேசிக்கிட்டு நின்னா வீடு நாறிப் போயிடும்... நீ எல்லாத்தையும் பக்காவா பேக் பண்ணி கொடு... அடுத்த தெருவுல இருக்கிற குப்பைத் தொட்டியில போட்டுட்டு வந்துடறேன்...''

"அதெல்லாம் நீங்க போக வேணாம்... நான் பார்த்துக்கிறேன்...'' என்றபோது எதிர்வீட்டுப் பெண்மணி அங்கிருந்தபடியே பேசினாள்.

"ரகு அம்மா... இத அப்படியே விடக்கூடாது... மழைக் காலம் வேற வருது... குப்ப அள்றவன் மேல ஒரு புகார் எழுதி தெருக்காரங்க எல்லாரும் கையெழுத்துப் போட்டு கார்ப்பரேஷன் ஆபீஸ்ல குடுப்பம்... அவங்க இவன வேலைய விட்டு எடுத்திட்டு வேற ஆளு மாத்தி விடுவாங்க''

"அதுதான் சரி..." மற்ற பெண்கள் ஆமோதித்தார்கள். நான் எழுதிக் கொண்டு வர்றேன்... என்றபடி எதிர்வீட்டுப் பெண்மணி வீட்டுக்குள் போனாள்.

டூ வீலரில் அலுவலகம் புறப்பட்டு மெயின்ரோட்டுக்கு வரும்போது குப்பை அள்ளுபவன் வண்டியுடன் வேகமாக வந்து கொண்டிருந்தான்.

என்னை பார்த்து விஷ் செய்தான்.

"என்னப்பா நாலு நாளா உன்னைக் காணலியாம்... தெருவே பரபரத்துக் கிடக்கு...''

சிரித்தான்.

`உடம்பு முடியல... கடுமையான ஜுரம் சார்... குப்பை வண்டில எல்லாத்தையும் போடறாங்க சார்... கைய விட்டு அள்றோமோ... உடம்புக்கு ஆக மாட்டேங்குது... அப்பப்ப ஏதாச்சும் சீக்கு வந்து படுக்கற மாதிரி ஆயிடுது... இன்னைக்கு குப்பை எடுக்க வந்துடுவேன் சார்... இல்லேன்னா சம்பளம் கொடுக்கறப்ப திட்டுவாங்க... சில வீட்டுல சம்பளத்த குறைச்சிடுவாங்க... அதான் உடம்பு முழுசா முடியலேன்னாலும் இன்னைக்கு வேலைக்கு வந்துட்டேன்... இந்த மாசம் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும் சார்...'

படபடத்தபடி வேகமாகச் சென்றவனை பார்க்கையில் மனசு ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது.

-திருவாரூர் பாபு


குப்பை மனசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குப்பை மனசு Empty Re: குப்பை மனசு

Post by யினியவன் Tue Oct 16, 2012 1:28 pm

தன் வேலை ஆனா சரி என்ற மனப்போக்கு என்று மாறுமோ தெரியல.

அந்த வேலை செய்பவனுக்கும் ஒரு மனம் இருப்பதை
மறந்து போற மனசு தான் குப்பை ன்னு தெரிஞ்சா சரி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்பை மனசு Empty Re: குப்பை மனசு

Post by ஜாஹீதாபானு Tue Oct 16, 2012 5:13 pm

நல்லா இருக்கு கதை..


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குப்பை மனசு Empty Re: குப்பை மனசு

Post by balakarthik Tue Oct 16, 2012 5:16 pm

நல்லதொரு கதை அருமை


ஈகரை தமிழ் களஞ்சியம் குப்பை மனசு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குப்பை மனசு Empty Re: குப்பை மனசு

Post by ஜலஜா சிவகுமார் Tue Oct 16, 2012 5:37 pm

கதை ரொம்ப குப்பையா இருந்தாலும் சுத்தமா சூப்பரா இருந்திச்சி
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

குப்பை மனசு Empty Re: குப்பை மனசு

Post by கரூர் கவியன்பன் Tue Oct 16, 2012 9:40 pm

குப்பை மனசு
குப்பை அள்ளுபவனின்
மனசில் இல்லை
மனக் குப்பையை உள்ளே வைத்துவிட்டு
பெருட்குப்பையை வெளிக்கொட்டுபவர்களிடம்
அருமையிருக்கு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குப்பை மனசு Empty Re: குப்பை மனசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum