ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

Top posting users this month
ayyasamy ram
கதை எண்.32 - அன்பின் மொழியில் புதிய உலகம்  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.32 - அன்பின் மொழியில் புதிய உலகம்  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.32 - அன்பின் மொழியில் புதிய உலகம்  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண்.32 - அன்பின் மொழியில் புதிய உலகம் (சிறுகதை சின்னத்திருவிழா)

Go down

கதை எண்.32 - அன்பின் மொழியில் புதிய உலகம்  (சிறுகதை சின்னத்திருவிழா) Empty கதை எண்.32 - அன்பின் மொழியில் புதிய உலகம் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Sat Oct 13, 2012 11:41 pm

அன்பின் மொழியில் புதிய உலகம்


அமஹ்த்,அப்பாஸ் என்றால் அந்தத்தெருவேதிரும்பிப்பார்க்கும்.அந்த அளவுக்கு இருவரும் ஒரேவயதுடைய ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படிக்கும் உற்ற நண்பர்கள்.அயலவர்களும்கூட.அப்பாசிற்கு அவனது வீட்டை விட அஹ்மதின் வீடுதான் ரொம்ப பிடிக்கும்.எப்போதும் அவனுக்கு அங்கேதான் வேலை.அப்படி அங்கே என்னதான் இருக்கு? என்று கேட்குமளவுக்கு அவனது போக்கு இருந்தது.
ஆனால் அன்று ஐந்து வயதில்ஆரம்பித்த அந்த நட்பு இன்று பதினைந்து வயதில் சண்டையில் முடிந்து இருக்கிறது என்றால் எதோ பெரிய விளக்கம் இருக்க வேண்டும். அவர்களுக்குள் அப்படி என்ன பிரச்சினை என்பதை அறிய அப்பாசின் தாய் ஆரிபாவின்மனம்அல்லாடிக்கொண்டு இருந்தது.அவனிடம் மீண்டும் கேட்டால் எரிந்து விழுவான்.கேட்பதை விட கேட்காமல் விடுவதே மேல் என்று நினைத்துக்கொண்டாள். ஏற்கனவே கேட்டபோது அவன் சொன்ன பதிலால் மனம் புளுங்கிப்போயிருந்தது.‘சின்ன வயதில் இவன் கேள்வி கேட்டு என்னைக்கஷ்டப்படுத்துவான்.‘இப்போ நாமதான் கேள்வியும் கேட்டு நாமளே பதிலும் சொல்லவேண்டி இருக்கு’என்று மனதினுள் கறுவிக்கொண்டாள் அப்பாசின் தாய் ஆரிபா.
“எந்நேரம் பார்த்தாலும் படிக்கிற வேலைய பார்க்காம அஹ்மதுட வீட்டையேகிடப்பிங்க.... இன்னிக்கு போகலையா?”
“இல்ல”
“ஏன்”
“சொன்னா என்ன செய்வீங்க????????????? தீர்த்து வைச்சிடுவீங்களா?”..................வெடுக்கெனக்கேட்டான்.
“என்ன அப்பு வர வர நீ ரொம்பத்தான் வாய் காட்டுற.எல்லாம் படிக்கிறம் எண்ட திமிரு.பொறு வாப்பா வரட்டும்...”சொல்லிவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் போகும் சீரியலில் ஆழ்ந்தாள் ஆரிபா. விளம்பர இடைவேளையில் வெளிக்கொடியில் கிடக்கும் வெயிலில் காய்ந்த உடைகளை எடுக்க வெளியே சென்றவள், அப்பாஸ் வீட்டின் பின்புறத்தே தனியே அஹ்மதின் வீட்டுப்பக்கம் பார்த்தவண்ணம் நின்றதை அவதானித்தாள்.
“அங்க இருட்டுக்க என்னபண்றே? எக்ஸாம் வருது எண்ட எண்ணமே இல்ல..... அஹ்மத் இந்நேரம் விழுந்து விழுந்துபடிப்பான். பொய்யென்றால் பார் இந்த முறையும் அவன் தான் பர்ஸ்ட் வருவான்.நீஇப்பிடியே யோசிச்சு யோசிச்சு நேரத்த போக்காட்டு...இந்த முறையும் பத்தவதா தான் போவாய்”அவள்பொரிந்து தள்ளிவிட்டு வீட்டுக்குள் வரவும்இடைவேளையின்பின்னரானதொலைக்காட்ச்சித்தொடர்ஆரம்பமாகவும்டைமிங்சரியாகஇருந்தது.

அப்பு முன்பெல்லாம் படு சுட்டி. அவன் சிறுவயதில் கேள்வி கேட்பதில் மகா கெட்டிக்காரன்.ஆனால் அவன் பெற்றோருக்கு அது பெரும் தலையிடியாய் இருந்தது. ஆரிபா ‘என்டல்லாஹ் எண்ட பிள்ள கேட்கற கேள்வியால எண்ட நிம்மதியே போச்சு’ என்று அடிக்கடி புலம்பிக்கொள்வதுண்டு. ஒரு நாள் “ உம்மா காகமெல்லாம் ஏன் கறுப்பாய் இருக்கு?”என்று கேட்டு விட்டான். பதில் சொல்ல இவர்களுக்கு பொறுமையில்லை. “ஏய் அஹ்மத் காகமெண்டால் கறுப்பாய் தான் இருக்கும். உனக்கு ஒரே கேள்வி கேட்குறதுதான் வேலையா? தேவல்லாத கேள்வி எல்லாம் கேட்காம சும்மா இரு” என்று அதட்டினார் அவன் தந்தை. அழுது கொண்டு அஹ்மத்தின் வீட்டுக்கு வந்தான் அப்பாஸ். அஹ்மதின் தாய் ஆயிஷா கேட்டாள் “என்ன அப்பு அழுவறீங்க? அழக்கூடாது..அச்சாப்பிள்ளை...அப்பு குட் போய் அல்லவா...ஆ...இப்போ அப்பு சிரிக்க போறாரு.......”அவன் அழுகையை நிறுத்தவேயில்லை.
“ஏன் அழுவறீங்க?என்று அவனைத்தூக்கி நெற்றியில் முத்தமிட்டாள். அவனுக்கு அந்த அன்பின் மொழி இதுவரை தெரியாத ஒன்று.
“வாப்பா ஏசிப்போட்டாரு “மீண்டும் அழுதான்.
“அப்புக்குட்டிக்கு ஏன் எசின?”பதில் இல்லை.சிறிது நேரம் பேசாமல் இருந்து விட்டு அப்படியே உறங்கிப்போனான்.
உறங்கி எழுந்தவன் “ஆன்டி காகமெல்லாம் ஏன் கறுப்பாய் இருக்கு?”என்றான்.
அவன் தந்தை ஏன் ஏசி இருப்பார் என்ற காரணம் இப்போது அவளுக்கு புரிந்தது. “அது வந்து....உங்களுக்கு ஒரு கலர் இருக்கு இல்லையா?...அது மாதிரி காகத்துக்கும் கலர் இருக்கு......அது கறுப்பு”
“எண்ட கலர் வெள்ளை. உங்க கலர் பிரவுண். ஆனா எல்லா காகமும் ஒரே மாதிரியா இருக்கே.....................................ஏன்?”அடுத்த கேள்வி தடாலடியாக வந்து விழுந்தது.
அவளுக்கு இதற்குமேலே எப்படி பதில் சொல்வதுஎன்று புரியவில்லை. சட்டென ஒரு எண்ணம் தோன்றியது.
“அப்பு....உனக்கு தெரியுமா...வெள்ளை காகமும் இருக்கு...ஆனா இங்க இல்ல...” என்று சொல்லி இன்டர்நெட் இன் உதவியுடன் அவனுக்கு படங்களும் காட்டி அவன் கேள்விக்கு பதில் அளித்தாள்.அப்பு அதன் பின் மிக மகிழ்ச்சியாக இருந்தான்.அவள் தன் மகன் அஹ்மதிடம் பேசும் விதமும்பதிலளிக்கும் விதமும் இதுதான். இதுதான் குழந்தைகளுக்கு பிடித்தமான அன்பின் மொழி என்பதை அவள் நன்கு அறிந்து வைத்து இருந்தாள்.
ஆனால் இத்தனை பொறுமையாக பதில் சொல்ல எல்லாப்பெற்றோருக்கும் முடியுமா?
அப்பாஸ்தன் தாய் தந்தையின் அதட்டலுக்குப்பயந்து வர வர கேள்வி கேட்பதை குறைத்துக்கொண்டேவந்தான்.இப்போது அவன் தாயே கேள்வி கேட்டால்கூட சரியாகப் பதில் சொல்லும் மன நிலையை இழந்திருந்தான். அவனது அறிவுச்சிறகு உடைக்கப்பட்டிக்கிறது.

அவர்களதுதெருவில்இயற்கையைஅணைத்துக்கொண்டுஇருக்கும்வீடுஎன்றால்அதுஅஹ்மதுடையதாய்த்தான்இருக்கவேண்டும்.அழகியபூந்தோட்டமும்ஓங்கியுயர்ந்ததென்னைமரங்களும்மனதிற்கு எப்போதும் அமைதியைத்தரும்..அந்தவீடுசிறியஇடமாயினும்சுத்தமாயும்சீராயும்இருக்கும். அதேபோன்று,அவனதுபெற்றோரின்உள்ளம்சுத்தமானது.அங்கேதான் அன்பும் ஆதரவும் குடியிருக்கும்.அஹ்மத் இன் சிறு வயது மிக இனிமையானது. அவன் மிகவும் சுறுசுறுப்பு. அப்புவும் அவனது வாழ்நாளில் அதிகம் இங்கேதான் கழித்திருக்கிறான். ஐந்து வயதளவில் கோழி,புறா,வண்ணத்துபூச்சி பார்க்க என்று வருவான். முல்லா கதை கேட்க போறேன் என்று வருவான். அஹ்மதின் தங்கை பிறந்தபோது சிலகாலம் தங்கச்சி பார்க்க போறேன் என்று வருவான். விளையாடப்போறேன் என்று வருவான். இப்படியாக எதோ ஒரு காரணத்தை சொல்லி இங்கே வந்து விடுவான்.அதற்கு உண்மையான காரணம் இல்லாமல் இல்லை.ஆயிஷாஎதுவாகஇருந்தாலும்இருவருக்கும்சமமாகபங்கிட்டுகொடுப்பாள்.எப்போதும்ஒற்றுமையாய்இருக்கும்படிசொல்லுவாள்.அதிகமதிகம் நஸ்ருத்தீன் முல்லா, தெனாலி ராமன்,விக்கிரமாத்தித்தன் கதைகள் சொல்லுவாள். பஞ்சதந்திரக்கதைகள்,வீரதீரக்கதைகள் என்றால் இருவருக்கும் அலாதிப்பிரியம். அவை தைரியத்தையும் துணிவையும் ஏற்படுத்துவதாய் இருந்தன. இஸ்லாமிய வரலாற்றுச்சம்பவங்களை இலகு நடையில் சொல்லுவாள்.இவர்களுக்குள் சிறு சிறு சண்டைவந்தால்கூடஅவள்தீர்த்துவைக்கும் விதம் தனித்துவமானது. அஹ்மதின் தந்தை சலீமும் அப்படித்தான்.ஏதும்தவறுசெய்தால்கூடஉணர்ச்சிவசப்பட்டுதிட்டவோஅதட்டவோகுறைகூறவோமாட்டார்.
ஒருமுறை அஹ்மத் தேனீர் கிளாசை கைதவறிக்கொட்டி விட்டான். சலீம் மிக அமைதியாகச்சொன்னார்”அஹ்மத்...கிளாசைநிமிர்த்திப்பிடிங்க..............................மிச்சமுள்ளதுகொட்டாது”
ஆயிஷா “மகன் இதை நீங்கள்தான் துடைக்கவேணும்”என்றுசொல்லி தண்ணீரும் ஸ்பஞ்சும் கொண்டு வந்து கொடுத்தார்.
“மகன் இந்த ஸ்பஞ்சால் டீ கொட்டிய இடத்தை தொடைங்க. பிறகு அது மேல தண்ணி ஊற்றி தொடைங்க. நல்லா சுத்தமாகும்”
அஹ்மத் பெற்றோரை அன்புடன் பார்த்தான்.தனது செயலுக்காக உள்ளூர வருந்தினான். எதிர்காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்வதாக வாக்களித்தான்.“வாப்பா...எனக்கு கவலையா இருக்கு இதுக்கு புறவு நான் கொட்டமாட்டன்” அவனுக்குள் விளிப்பு ஏற்பட்டது. இனி இந்த தவறு நடக்க கூடாது என மனதினுள் உறுதி எடுத்துக்கொண்டான். இது மட்டுமல்ல. இன்னும் பல நூறு தவறுகளுக்கு அவனது பெற்றோர் மிகச்சரியான தீர்வுகளை சரியான நேரத்தில் சரியான விதத்தில் முன்வைத்திருந்தபடியால் அவன் தனது பல தவறுகளை திருத்திக்கொண்டிருக்கிறான்.இதனைப்பார்துக்கொண்டிருந்த அப்பு“என் வாப்பா எண்டால் எனக்கு இந்நேரம் பச்சைப்பேயன்...எண்டு ஏசி அடிச்சிருப்பார் இருப்பார்” என்றான்.அவனைப்பார்க்க பரிதாபாமாக இருந்தது.

அப்புவிடம் இல்லாத விளையாட்டு பொருட்களே கிடையாது.ஆனாலும் அவன் அஹ்மதுடன் ஓடிப்பிடித்து, ஒளித்து விளையாடுவதையே விரும்பினான். பிறந்த தினத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை அவனது பெற்றோர் என்னதான் அழகிய பொருட்கள் வாங்கிக்கொடுத்தாலும் அதைப்பற்றி அவன் கவனமெடுப்பதே இல்லை. அவ்வப்போது அச்சிறுவர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஆயிஷா தனது கையால் செய்து கொடுக்கும் காகிதக்கப்பல், பப்பாசி குழல் ஊதி என்பவற்றையே அவன் மிக விரும்பினான். காய்ந்த இலைகளும் பறவை இறகுகளும் கொண்டு செய்த வாழ்த்து அட்டைகளை அன்புடன் ஏற்றுக்கொள்வான். அவனுக்கு இது ஒரு புதிய உலகமாக இருந்தது. தண்ணீர் பள்ளத்தை சேர எந்தளவு விரும்பி ஓடுமோ அது போன்று அன்பும் ஸ்பரிசமும் கிடைக்கும் இடத்தை நோக்கி அப்பு போய்க்கொண்டு இருந்தான். அவன் வயது ஏற ஏற அவனது பெற்றோரிடமிருந்துமெல்ல மெல்ல விலகிப்போய்க்கொண்டிருந்தான். இப்போது அவனுக்கு வயது பதினைந்து. அவனது உள்ளத்தின் மாற்றமும் உடலின் மாற்றமும் சேர்ந்து அவனுள் ஒரு பெரிய இமாலயமாற்றத்தை உண்டு பண்ணி இருந்தன.

அஹ்மதிற்கு இன்று பாடசாலையில் நடந்த சம்பவம் மனதை மிகவும் பாதித்து இருந்தது. குற்றம் செய்தது போன்ற ஓர் உணர்வு அவனை வாட்டியது. அப்பு இரண்டு நாளைக்கு முதல் ‘பச்சை வீட்டு விளைவை’ விபரிக்கும் வகையிலமைந்த சித்திரமொன்று வரைந்து தரும்படி கேட்டு இருந்தது இப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. உடனே படிக்கும் மேசைக்கு சென்று அவனது கொப்பியை எடுத்து ஒவ்வொரு தாளாக புரட்டினான். அப்பு நடுப்பக்கத்தில் வித்தியாசமாக எதோ வரைந்தும் கிறுக்கியும் இருந்தான். அதில் ‘ஐ ஹேட் மை டாட்’என்று அதிகம் எழுதப்பட்டு இருந்தது. ஒரு எலும்புக்கூடு கீறப்பட்டு அதற்கு ‘மை டாட்’என்று பெயரிடப்பட்டு சிவப்பு பேனையால் குறுக்காக வெட்டிவிடப்பட்டு இருந்தது. பக்கத்தில் ‘மை மாம்’என்று ஒரு படம். அந்தப்படம் பேயுருவமாய் இருந்தது. இருவருக்கும் நடுவில் ஒரு வட்டம் இருந்தது. அதனுள் ‘அப்பு .... க்ரையிங்...........டையிங்........’ என்று எழுதப்பட்டு இருந்தது.அஹ்மத்திற்கு பயங்கர அதிர்ச்சியாய் இருந்தது.
அஹ்மத் இன் முகத்தில் தெரிந்த வாட்டத்தை ஆயிஷா கவனிக்கத்தவறவில்லை.
“அஹ்மத்....மகன் ...அஹ்மத்...”முகத்தைத்தொட்டு திருப்பி தலையைத்தடவி விட்டாள்.
“என்னமா?
“என்ன மகன் ஒரு மாதிரியா இருக்கிறீங்க?..........ஸ்கூல்ல ஏதும் ப்ராப்ளமா?”
“அது வந்து ...உம்மா....”அவன் சொல்வதற்குள்
“என்ன!!! பிரச்சனையா?...எங்க அஹ்மத்துக்கு அதெல்லாம் வர சான்சே இல்ல... என்ன பிரெண்ட் முகம் ஒரு மாதிரியா இருக்கு?..”என்று கேட்டார். தங்கையும் அவனது மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.அவன் பாடசாலையில் நடந்த சம்பவத்தை விபரிக்க தொடங்கினான்.

இடைவேளையில் லஞ்ச் பொக்ஸ் இனைத்திறந்து உண்ண முற்பட்ட வேளைதான் அது நடந்தது. அப்பு கண்களில் அனல் பறக்க வேக வேகமாக வந்தான். வந்ததும் வராததுமாக லஞ்ச் பாக்ஸ் இனை கையால் தட்டி விட்டான்.
“என்ன அஹ்மத்....இன்னிக்கு வச்ச சயன்ஸ் டெஸ்ட்ல நூறு மார்க்ஸ் எடுத்த எண்டு ரொம்ப சந்தோசமோ......அதெப்பிடிடா உனக்கு மட்டும் இப்பிடி எல்லாம் வருகுது. படிக்க, நடிக்க,அழகா எழுத, பேச...எப்பிடிடா?.......................உன்னால எனக்கு எவ்ளவு பிரச்சினை தெரியுமா?
“என் உம்மா எப்ப பாரு உன் பெயரையே சொல்லிட்டு இருக்கா..............
“அஹ்மத் அ பாரு எப்பிடி விழுந்து விழுந்து படிக்கான்”
“அஹ்மத் அ பாரு என்ன அழகா பேசுறான்...”
“அவன்ட ஹேன்ட் ரைட்டிங் என்ன வடிவு!!!.......நீ என்ன காகம் கிழிச்ச மாதிரி கிறுக்கி இருக்கே?..........”
“அவன பாரு எப்பிடி டைமுக்கு வேலை செய்யறான்....”
“அஹ்மதுக்கு நல்லா சித்திரம் கீற வருமாம்...உனக்கு ஒரு மண்ணும் தெரியா....”
“அஹ்மத்....அஹ்மத்....அஹ்மத்....” என்று சொல்லி தாறுமாறாக சத்தமிட்டுக்கத்தினான்.
“போனாப்போகுது எண்டு இங்க வந்தா...அஹ்மத் இஸ் பெஸ்ட்...............நீயும் அவன் ப்ரெண்டு தானே...ஏன் இப்பிடி அம்பது மார்க்ஸ் எடுத்தே?.......” எண்டு டீச்சர் வேற....
எனக்கு ஏன் வீடு பிடிக்கலை,என் உம்மா பிடிக்கலை,வாப்பா பிடிக்கலை, இந்த ஸ்கூல்பிடிக்கலை,படிக்க பிடிக்கலை,உன்னைப்பிடிக்கலை, உலகமே பிடிக்கலை...யாரும் என்னை புரிஞ்சிக்கிறாங்க இல்ல.........”என்று அஹ்மத் இன் சேர்ட் கொலரை பிடித்து கூவினான். அஹ்மதிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை.அவனுக்கு தந்தை அடிக்கடி சொல்லும் ஒரு விடயம்மட்டும் அவனுள் எழுந்த கோபத்தினை தணித்துக்கொண்டு இருந்தது. அது‘சண்டைல வெல்றவன் வீரன் இல்ல.கோபத்தை அடக்கிறவன் தான் உண்மை வீரன்’.அவனை அமைதிப்படுத்துவது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மலையில் மாடேற்றிய கணக்காய் போய்விட்டது.
“இதுதான் வாப்பா நடந்தது”
அவன் பேசும்போது இடை மறிக்காது நன்றாக செவிமடுத்துக்கேட்ட இரு பெற்றோரும் அஹ்மதை ஆறுதல்படுத்தினர். பிரச்சினை பெரியது என்று அறிந்த போதும் கூட அவர்கள் அவனிடம் ஆ ஊ என்று ஏதும் பேசவில்லை.
“அஹ்மத் இது பெரிய சிக்கல் இல்ல. எப்பிடியும் சரிப்படுத்திடலாம். இது உன் மிஸ்டேக் ஓ அப்புவோட மிஸ்டேக் ஓ இல்ல....அம் ஐரைட்? ”ஆயிஷா கேட்டாள்.
“மகன்...அப்புவ பற்றி நீ என்ன நினைக்கே.....................?”சலீம் கேட்டார்.
“நீங்க சொல்றது சரிதான் உம்மா........அவன் மனசால ரொம்ப பாதிக்க பட்டு இருக்கான் வாப்பா. அவன் ரொம்ப நல்லவன்.நான் அவனை ரொம்ப மிஸ் பண்றேன்...ஹீ இஸ் அ குட் பிரெண்ட்................ ஐ வான்ட் மை அப்பு எகைன் நியர் மீ.......நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்....வில் யூ டூ போர் மீ?”
“ஷ்ஷூவர் மைடியர் சன்....நானும் உம்மாவும் அவங்க பேரன்ட்ஸ்ட இன்ஷா அல்லாஹ் பேசுறம்.................. டோன்ட் வொர்ரி....”
“தேங்க்யூ ...தேங்க்யூ சோ மச்...”என்றுதந்தையை அணைத்துக்கொண்டான்.
“ வீ லவ் யூ அஹ்மத்.......... கவலைப்படாதே....வாங்க...........எல்லாரும் சாப்பிடுவோம்............”என்றாள் ஆயிஷா.
தனது தாயும் தந்தையும் தனக்கு அமைத்து தந்திருக்கும் இந்த கருத்து சுதந்திரமும் தன் பேச்சை நன்றாக செவி மடுக்கும் விதமும் அவனுக்கு பெரும் தைரியத்தை ஏற்படுத்தின. தனக்கு கிடைத்திருக்கும் இந்தப்புதிய அழகிய உலகம் அப்புவின் பெற்றோர் மூலம் அவனுக்கும் கிடைக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்தான்
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பிள்ளைகளோடு சிக்கனமான சிறு சுற்றுலா செல்வது சலீம் குடும்பத்திற்கு வழக்கம். அதன் போது அப்பு எப்படியும் இவர்களோடு வந்து விடுவான். இந்த முறை அப்புவின் குடும்பத்தினரையும் அழைக்கலாம் என தீர்மானித்தார்கள். அதன் படி கடற்கரைக்கு செல்ல அப்புவின் குடும்பத்தை அழைத்தார்கள். அவர்களும் இணைந்து கொண்டார்கள். அஹ்மத்தின் பெற்றோரும் அப்புவின் பெற்றோரும் தூரத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்புவும் அஹ்மதும் வேறோர் இடத்தில் தனித்தனியே வேறு வேறாக கடற்கரை மணலில் மீனைத்தேடுவது போல குனிந்து கொண்டு இருந்தார்கள்.
இதே மணலில் எத்தனை மணல் வீடுகளைக்கட்டி இருப்பார்கள் என்றால் எண்ணிக்கணக்கிட முடியாது. திடீரென்று அஹ்மத்தின் தோளை ஒரு கை தொட்டது. வாழ்கையில் முதன் முறையாக இன்றுதான் அஹ்மத் பயந்து இருக்கிறான்.பயத்துடன் திரும்பினான். அங்கே அப்பு கண்ணீருடன் நின்று கொண்டிருந்தான்.
“ஐ அம் சாரி டா......”
“அப்பு....எதுக்கு சாரி....நீ ஒன்னும் தப்பு பண்ணலையே...”
“இல்லை...நான் அப்படி நடந்திருக்க கூடாது.................என்னை மன்னிச்சு ஏற்றுப்பியா?”
“நீ என் நண்பன் டா...உன் பேரெண்ட்ஸ் ல உள்ள கோபாத்தை என்கிட்ட ஷேயார் பண்ணிக்கிட்டே....ஜஸ்ட் அவ்ளவுதான். என் கவலை,கோபம் எல்லாம் என்ன தெரியுமா.................எல்லாத்தையும் என் கிட்ட சொல்ற நீ இப்படி ப்ராப்லம் இருக்கெண்டு சொல்லலியே எண்டு தான்”
“மன்னிச்சிடு அஹ்மத்....”கவலையாக சொன்னான் அப்பாஸ்.
“மன்னிக்க மாட்டேன்........மன்னிக்கவே மாட்டேன் ........................”விளையாட்டாக சொல்லி தன் தோள்களைக்குலுக்கி..................கைகளை அகல விரித்தான்.
இருவருக்கும் சட்டென சிரிப்பு வந்து விட்டது. அஹ்மத் ஓட அப்பு துரத்த ...............
அஹ்மத் என்பவன் இன்ஷா அல்லாஹ் நல்லதொரு ஆளுமை மிக்கவனாக வருவான் என்பதில் சந்தேகமில்லை......
அங்கே தூரத்தில் அப்புவுக்கும் கூட ஆயிஷா சலீம் இன் அன்பின் மொழியில் ஒரு புதிய உலகம் உருவாகிக்கொண்டு இருந்தது......
பிறகு என்ன..........அப்புவும் தான்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum