Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எண். 28 -சில மனிதர்கள் ... (சிறுகதை சின்னத்திருவிழா)
2 posters
Page 1 of 1
கதை எண். 28 -சில மனிதர்கள் ... (சிறுகதை சின்னத்திருவிழா)
சில மனிதர்கள் ...
"கற்பழிப்புன்னு சொல்லாதே, அது வன்புணர்ச்சி"
"எல்லாம் ஒன்னுதாங்க, எல்லாருக்கும் தெரிஞ்சு நம்ம பேரு நாறப் போகுது"
"உளறாத விஜயா, அந்த மூணு தடியனுங்க முன்ன கொழந்த என்ன செய்யும் பாவம்"
"ஆமா கொழந்த, என் பேச்சை கேட்டு ஒழுக்கமா இருந்தா இப்படி நடந்திருக்குமா? அவ நடையும், உடையும்! ஊரே பாக்கற மாதிரி நடந்தா இப்படித்தான் ஒன்னு கிடக்க ஒன்னு ஆகும்"
"உன் பேச்சைக் கேட்டா போர்வைய சுத்திட்டுதான் அலையணும். இப்போ என்ன பண்ண சொல்ற, போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்னு சொன்னா நீயும் உன் பையனும்தான் வேண்டாம்னு சொல்றீங்க?"
"அண்ணி, நான் சொல்றதை கேளுங்க, உங்க மருமக வாழ்க்கைய நாசம் பண்ண அந்த மூணு பசங்களையும் பழி வாங்க வேண்டாம்?"
"அடி நீ போடி, மானம் சந்தி சிரிச்சிரும்"
"திலகா, நீயும் உன் அண்ணியும் ஏன் இந்த விஷயத்தைப் பெருசாக்கறீங்க? இப்போ என்ன, நம்ம மருமகள நாய் கடிச்சதா நெனச்சு மறக்கப் பாக்கலாம், அது நடந்து ஒரு மாசம் ஆயிடிச்சு இல்ல"
"நீங்க சும்மா இருங்கண்ணா, இதெல்லாம் அப்படியே விட்டுட முடியுமா? டெய்லி பேப்பர்ல, டீ.வீ.ல எவ்வளவு பாக்கறோம்? அண்ணி, இந்த விஷயத்த யெல்லாம் போலீஸ்ல சொன்னாதான், நாளைக்கு பொண்ணுங்கள தப்பாப் பாக்கற பொறுக்கி பசங்களுக்கெல்லாம் பயம் வரும். நாமளும் டீ.வீ.ல வந்த மாதிரி இருக்கும், காலம்போன காலத்துல நாம வேற எப்ப டீ.வீ.ல வரது"
"அந்த மகாலட்சுமி..."
ஆம் மகாலட்சுமி, சுந்தரம் குறிக்கும் ரூபா அழகில் குணத்தில் மகாலட்சுமிதான். முதலில் உங்களுக்கு ரூபாவை அறிமுகப்படுத்தி விடுகிறேன். பேசிக்கொண்டிருக்கும் சுந்தரம்-விஜயா தம்பதியின் ஒரே மகன் ரகு (32, 5'7", கருப்பு, தந்தை சிபாரிசால் தனியார் வங்கியில் கணக்கர்- ரூ 10000) அதிர்ஷ்டத்தால் அடைந்த புதையல் ரூபா, சில நாட்களுக்கு முன் ஒரு பின்னிரவில் பணிமுடித்துத் திரும்பும் வழியில் மூன்று மிருகங்களால் சீரழிக்கப்பட்ட ரூபா, அதிர்ச்சியில் இருந்து மீண்டு தாய்வீட்டில் அழுதுகொண்டு இருக்கும் ரூபா. இதோ வீட்டுக்குள் நுழைந்து சுந்தரத்தின் அருகே அமர்கிறானே கொட்டைப்பாக்கு ஜாடையில் ரகு, அவன் தர்மபத்தினி.
ரகுவைப் பார்த்ததும் அவன் தாய் புதிதாக அழ ஆரம்பித்தாள். சுந்தரம் ரகுவிடம் "வா கொஞ்ச நேரம் மாடிக்கு போயிட்டு வரலாம்" என்றார். "நானும் வரேங்க" என்ற விஜயாவைப் பார்த்து "அங்கேயும் வந்து அழ வேண்டாம், நீயும் உன் நாத்தனாரும் இனி சீரியல் பாத்து அழுங்க" என்றபடி ரகுவுடன் மாடிக்குச் சென்றார்.
"அண்ணி, அண்ணன் என்ன பேசறதுக்கு ரகுவை கூட்டிட்டு போறார்?"
"வேற என்ன, ரயில் விட்டுட்டு வருவார்"
"சரி அண்ணி, டீ.வீ.ய போடுங்க, வைகறை நாடகத்துலயும் கிட்டதட்ட நம்ம ரூபா கதைதான், என்ன அதுல நாலு பேர்!"
மாடியில் ரசிக்க வேண்டிய தென்றல் காற்றை சற்றும் மதிக்காமல் "ரகு, சிகரெட் குடு" என்றார் சுந்தரம். பற்றவைத்து சிறிது புகையை வெளியே விட்டபடி "உங்க அம்மா பேசறதெல்லாம் மனசுல வெச்சுக்காத, ரூபா தங்கம். அவ ஒரு தப்பும் பண்ணல" என்றார்.
"உறுத்துதுப்பா, புயலடிச்சு ஓஞ்ச மாதிரி வாழ்க்கை மாறிருச்சு. இது ஏன் ரூபாக்கு?"
"இட் ஜஸ்ட் சோ ஹேப்பென்ஸ். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதத்துல கஷ்டம் வரத்தான்டா செய்யும், அதை தாண்டியதற்கு அப்புறம் சந்தோஷம். பாரதி சொன்ன மாதிரி தீமையெலாம் அழிந்து போம், திரும்பி வாரா ..."
"இருந்தாலும் களங்கப்பட்டுட்டாளேப்பா "
"நீ என்னடா அறுபது வயசுக்காரன் மாதிரி பேசற, ரேஷனலா யோசி. கற்பு, களங்கம்ங்கறது எல்லாம் ஹம்பக். அவள மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைச்சது உன் அதிர்ஷ்டம்"
"அது வாஸ்தவம், அவ அழகுக்கு முன்னாடி நான் ஒண்ணுமே இல்லைதான். சில சமயம் நான் அவளுக்குப் பொருத்தமா இல்லைன்னு தோணும், உடனே அவளைக் கூப்பிட்டு பளார்னு அடிச்சிருவேன், திருப்பி நான் பெரியவன்னு தோண ஆரம்பிச்சிடும். எனக்கு உங்கள மாதிரி பெரிய மனசு எல்லாம் இல்ல. சில சமயம் அவள மிஸ் பண்ண கூடாதுன்னு நினைப்பேன், சில சமயம் அவள விட்டா வேற நல்ல ஆப்ஷன் இல்லைனு தோணும்"
"உன் தாழ்வு மனபான்மைய விட்டுட்டுப் போய் ரூபாவ கூட்டிட்டு வா"
"அம்மா ஏதாவது சொல்லுவாளேப்பா?"
"உங்க அம்மா ரூபாகிட்ட எதுவும் குத்தலா பேசாம நான் பாத்துக்கறேன்"
"அது இல்லப்பா, ரூபாவை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு சொன்னா, என்னை திட்டுவாங்களே?"
"சீ… என்னடா நீ? தாழ்வு மனபான்மைய விடல, ஆனா ஆண்மைய விட்டுட்ட. உன் அம்மாகிட்ட நான் பேசிக்கறேன். நீ இன்னிக்கே போய் என் மருமகளை கூட்டிட்டு வா"
"சரிப்பா, அவளை மன்னிச்சு ஏத்துக்கறேன்"
"முதல்ல இந்த ஆட்டிட்யூட்ட மாத்து. அவ ஒரு தப்பும் பண்ணலை. மன்னிக்க நீ கடவுளும் இல்ல. போய் கூட்டிட்டு வரத்தான் நான் சொன்னேன்"
ரகு நுழைந்தபின் ரூபாவின் வீடு மயான அமைதியில் இருந்தது. ரூபாவின் தந்தை வெங்கடேசன் ரகுவிற்கு எதிர்நாற்காலியிலும் தாய் வசந்தி சுவரோரமாகவும் நின்று ரகுவை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சற்று கனைத்த ரகு "நான் இன்னைக்கு ரூபாவ எங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போலாம்னு இருக்கேன் மாமா" என்றான்.
"நீங்க ஒரு மாசமா வராதத பாத்து ஏதோ தப்பான முடிவு எடுத்துட்டீங்களோனு நினைச்சுட்டேன். எதையும் பெருசா எடுத்துக்காம என் பெண்ணை அழைச்சுட்டு போக வந்திருக்கீங்க பாருங்க, தெய்வம் சார் நீங்க" என்று வெங்கடேசன் அழ ஆரம்பித்தார். அவர் அழுவதைப் கண்ட வசந்தி அவரருகே சென்று ஆறுதல் சொல்ல ஆரம்பித்தாள்.
"அவளுக்கு நடந்தத நான் எப்பவோ மறந்துட்டேன் மாமா. என்ன ஆனாலும் ரூபா என் மனைவிதான். நீங்க கவலைப்படாதிங்க. சரி ரூபாவை எழுப்புங்க, நாங்க கிளம்பறோம்"
"என்ன அவசரம், டிபன் சாப்டுட்டு நாளைக்கு காலையில கிளம்புங்க. ராத்திரில போக வேண்டாம். ரூபா இருட்ட பாத்தா பயப்படறா"
"சரி அத்தை, அதுவும் சரிதான். நாங்க நாளைக்கு காலை கிளம்பறோம். நான் வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடறேன்" என்றான் ரகு.
இரவு உணவை முடித்த ரகு படுக்கையறைக்குச் சென்றான். ரூபா தூங்கிக்கொண்டே இருந்தாள், அவளை யாரும் எழுப்பவில்லை. அறையை தாளிட்ட ரகு, சற்று நேரம் படுக்கையில் இருந்த ரூபாவை பார்த்தான். மெதுவாக அவளருகே படுத்து அவளை திருப்பினான். கண்விழித்தாள் ரூபா. "எப்போ வந்தீங்க" என்று கண்ணை கசக்கியபடி கேட்டாள்.
" எட்டு மணிக்கு வந்தேன். நாளைக்கு காலைல நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்" என்று சொல்லி மெதுவாக அணைத்துக் கொண்டே ரூபாவை பார்த்தான். "தேங்க்ஸ்" என்று அமைதியாக சொன்னாள் ரூபா.
அணைத்திருந்த ரகுவின் கரங்கள் ரூபாவின் உடம்பில் அவசரமாக முன்னேறின. அவனை நிறுத்திய ரூபா " சாரிங்க, இப்போ என்னால முடியாது" என்றாள். இதை கேட்ட ரகு எதுவும் பேசாமல் மல்லாந்து நேராய்ப் படுத்தான். அவன் செய்கையை பார்த்த ரூபா, மெதுவாக அவனது தோளைத் தொட்டாள் "சாரிங்க, அந்த கொடுமையான சம்பவத்த இன்னும் என்னால மறக்க முடியல, மன்னிச்சுடுங்க, கோவமா? என்றாள். சற்று நேரம் எதுவும் பேசாத ரகு திரும்பி ரூபாவைக் கேட்டான்
"அன்னைக்கு மூணு பேரும் ஒரே நேரத்துலயா, இல்ல,... ?"
Last edited by அசுரன் on Sun Oct 14, 2012 7:16 am; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கதை எண். 28 -சில மனிதர்கள் ... (சிறுகதை சின்னத்திருவிழா)
அடப்பாவி ! என்ன மனுஷன் இவன் ?
படிச்சு படிச்சு சொன்னாரே அவன் அப்பா?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கதை எண்.17 - கு( டீ ) (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண்.014 - ரத்தக்கண்ணீர் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண்.014 - ரத்தக்கண்ணீர் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 004 - முயற்சிக்காதே (சிறுகதை சின்னத்திருவிழா)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|