ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா)

4 posters

Go down

கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Sat Oct 13, 2012 9:34 pm

சொட்டும் ஒருநாள் கொட்டும்


பிரணவன், அனைத்து சிறுவர்களைப் போல் அவனும் விளையாட்டு பிள்ளை தான், ஆனால் அவன் தன் சமூகத்தின் மீது கொண்டிருந்த பற்று அவனை மற்றவர்களிடம் இருந்து பிரித்துக் தனித்துவப் படுத்திக் காட்டும். அவனுடையது சிறிய குடும்பம் அம்மா அப்பா பிறகு பிரணவன் மூன்று பேர் கொண்ட அளவான ஆரோக்கியமான குடும்பம். அன்று ஞாயிற்று கிழமை, வார வாரம் ஒரு தனியார் தொலைகாட்சியில் மதியம் ஒளிப்பரப்பாகும் சத்தியமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியை காண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர், அன்றும் அப்படி தான் மூவரும் தொலைகாட்சியின் முன்பு அமர்ந்திருந்தனர், அதில் சமூக சீர்கேடுகள் சமபந்தப் பட்ட நிகழ்வுகள் அலசப்படுவதால், அதில் தானாகவே தன்னை ஈடுபத்திக் கொண்டான் பிரணவன்...அன்றைய சத்திய மேவ ஜெயதே நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது...

"பிரணவா.............எங்க டா போன நிகழ்ச்சி ஆரம்பிச்சிட்டாங்க" என்று அம்மா கூற.......
தண்ணீர் குடிக்க சொம்பை எடுத்தவன்

"இதோ வந்துட்டேன் மா".......... என்று கூறி......சொம்பை அப்படியே வைத்து விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவந்து அம்மாவின் அருகில் அமர்கிறான்.......அவனுக்கு பிறகு தான் தெரிய வந்தது.......அன்றைய நிகழ்ச்சியும் தண்ணீர் சம்பந்தப் பட்டது தான் என்று..........

தண்ணீர் பற்றாகுறையால், இந்தியாவின் பல ஊர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப் பட்டுள்ளன, அந்த ஊர் மக்கள் தண்ணீருக்காக எப்படி எல்லாம் சிரமப்படுகின்றனர். தண்ணீரைப் பெற அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் என்ன என்பது பற்றி அலசிய அதே நிகழ்ச்சி, தண்ணீரை மக்கள் எப்படி எல்லாம் மாசு மாசுபடுத்துகின்றனர் என்றும் , இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பிற்காலத்தில் நாட்டின் நிலைமை என்ன ஆகும் என்பது குறித்தும் நிறைய ஆவண புகைப்படங்களும், படங்களும் காட்டப்பட்டன.......இதை பார்த்த பிரணவன்..அம்மாவிடம்...

"அம்மா பாரு மா எப்டிலாம் கஷ்ட படுறாங்கனு.....பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குமா"......

"ஆமா டா கண்ணு.......எல்லாம் நம்ம அரசியல் வாதிகள சொல்லணும்.....ஒவ்வொரு ஊருக்கும் தண்ணி குழாய் போட்டு கொடுத்தா இப்டிலாம் மக்கள் கஷ்டப்பட வேண்டியதே இல்ல.......ம்ம்ம்ம் என்ன பண்றது நமக்கு கிடைச்சிருக்க அரசியவாதிகள் இப்டி".......என்று அம்மா பதில் கூற

"அட போமா........இப்படியே மத்தவங்கள குத்தம் சொல்லிட்டே இருந்தா குத்தம் மட்டுமே சொல்லிட்டு இருக்க வேண்டியது தான் வேற எதுவும் செய்ய முடியாது"........."பாரு........இதே நிகழ்ச்சில தான.......ஒருத்தரு அவர் இருந்த ஊருக்கு எவ்வளவோ கஷ்டப் பட்டு தண்ணி வர வச்சிருக்காரு"........."இன்னொருத்தரு.......தன்னோட வீட்டுலையே மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டி.....அவங்க வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் தேவையான தண்ணிய அவரே வர்ற மழை ல இருந்து எடுத்துக்குராறு........இப்டி எதாச்சு பண்ணுனா தான் மா இதுக்கு தீர்வு கிடைக்கும்". என்று கூற.......

"சரிங்க விஞ்ஞானி நீங்க சொன்னா சரியா தாங்க இருக்கும்"......என்று அம்மா கூறி….."அதான் நிகழ்ச்சி முடிஞ்சிருசுல போயி படி நாளைக்கு.....காலாண்டு பரிச்சைன்னு சொன்னில...........போ போ போயி படி போ"..........என்றதும்

"ஏதாச்சும் சொன்னா இப்டியே சொல்லிட்டு இருமா .............உனக்கு எங்க புரிய போகுது ".......என்று பிரணவன் சலித்துக் கொண்டே
படிக்க சென்று புத்தகத்தை திறந்தவன் நினைவெல்லாம், அந்த நிகழ்ச்சியில், மக்கள் தண்ணீர் பிடிக்க லாரி மீது ஏறி கீழே விழுந்து பலியான சம்பவமே ஓடிக் கொண்டிருந்தது.........

ஒரு மாதம் கழித்து........

"தம்பி பிரணவா..........இங்க வாடா கண்ணு"…….என்று அம்மா அன்போடு அழைக்க

"என்னமா??"…….என்று அம்மா முன் பிரணவன் சென்று நிற்க …….

"கண்ணு……..நல்ல தண்ணி குழாய்க்கு போயி.......ரெண்டு குடம் தண்ணி கொண்டு வாடா......அம்மாக்கு நெறையா வேலை இருக்கு டா செல்லம்"......."ஊருல இருந்த மாமா அத்தை வராங்க அவங்களுக்கு சமையல் செய்ற வேலை இருக்குடா ……..ஒரு எட்டு போயிட்டு வாடா தங்கம்".............

"போ மா.......எப்ப பாரு வேலை சொல்லிகிட்டே இரு..........இப்ப தான்....... விளையாட போலாம் நு கைல பந்த எடுத்தேன் ....நீயே போயிட்டு வா இல்லைனா அப்பாட்ட சொல்லு"....

"என் கண்ணுல........அம்மாக்காக ஒரே ஒரு தடவ மட்டும் போ டா..........இனி உன் கிட்ட சொல்லவே மாட்டேன்.....அப்பா கிட்ட மட்டும் தான் சொல்வேன்........என் தங்கம் ல போயிட்டு வாடா".............

"சரி குடு"..............என்று முகத்தை சுழித்துக்கொண்டே குடத்தை எடுத்தவனிடம்.......

"கண்ணு அப்படியே ஒரு கட்டு கொத்தமல்லி தளை" என்று சொல்லி முடிப்பதற்குள்,,

"இங்க பாருமா……சும்மா போயிரு சொல்லிட்டேன்"......என்று வெறி வந்தவன் போல் கத்த...........

"சரி சரி.........தண்ணிய மட்டும் கொண்டு வா பா மகனே"...........என்று அம்மா பிரணவனை வழியனுப்ப, பிரணவன் குடத்தை எடுத்துக்கொண்டு....பொது குடிநீர் குழாய்க்கு செல்கிறான், அங்கே நான்கைந்து பேர் கையில் இரண்டு மூன்று குடங்களுடன் நிற்கின்றனர்..தன்னுடைய வாய்ப்பு வரும் வரை அங்கே நடக்கும் நிகழ்வுகளை கவனிக்கின்றான், ஒவ்வொருவரும் தண்ணீர் பிடிக்கும் முன் ஒவ்வொரு குடத்தையும் கால் குடம் தண்ணீர் பிடித்து கழுவி கீழே கொட்டுகின்றனர், சிலர், அரை குடம் வரை பிடித்து கழுவி கொட்டுவதைப் பார்கிறான், மேலும் குழாயை சுற்றிலும் தண்ணீர் தேங்கிய வண்ணம் இருப்பதையும் பார்கிறான்,
தன்னுடைய வாய்ப்பு வந்ததும் தண்ணீரை பிடித்து வீட்டிற்கு சென்றவன் மனதில்……..

ச்சே அவன் அவன் நாட்டுல தண்ணிக்கு எவ்ளோ கஷ்டப் பட்டுடு இருக்காங்க இவங்க என்னடானா இப்டி தண்ணிய கொட்டி தீர்க்கிறான்களே என்று கூறியவன் மனத்தில் ஒரு யோசனை உதித்தது.......அந்த யோசனை சரியானதாக இருக்குமா என்பதை உறுதி செய்ய......இது போன்று தண்ணீர் குழாய்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று உறுதி படுத்துகிறான், கிராமப் புற குழாய்களில் தண்ணீர் வீணாக்கப்பட்டு அவை ரோட்டில் ஓடுவதையும், நகர் புற குழாய்களில் தண்ணீர் வீணடிக்கப் பட்டு அவை சாக்கடைகளில் கலப்பதையும் பார்கிறான், இப்பொழுது அவன் யோசனை ஓரளவு சரியானதாக வரும் என்று கருதியவன்......என்ன செய்யலாம் இந்த யோசனையை யாரிடம் சென்று கூறலாம் என்று யோசித்தவன், அடுத்த வாரம் தன்னுடைய பள்ளி ஆண்டு விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வரப்போகிற விஷயம் அவனுக்கு நியாபகம் வருகிறது.......

அப்பா டா விஷயத்த அவருகிட்ட சொல்லிற வேண்டியது தான் என்று சந்தோசமாக பந்தை எடுத்து சிட்டாக பறந்தான் விளையாட......

அடுத்து, பள்ளி ஆண்டு விழா......அன்று ஒரு சிறப்பு என்னவென்றால், வந்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவரும், தண்ணீரின் இன்றியமையாமை பற்றியே பேசியிருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும், பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்கள் யாருக்கேனும் ஏதாவது மாவட்ட ஆட்சியாளரிடம் கேட்க வேண்டுமென்றால் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியதும்........முதலாவது ஆளாக, பிரணவன் எழுந்து, தான் பார்த்த அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றியும், குடி நீர் குழாயில் மக்கள் நீரை எப்படி வீணடிக்கின்றனர் என்பது பற்றியும் கூறி இதை சரிகட்ட எனக்கொரு யோசனை உள்ளது ஐயா.....என்று கூற.......என்ன யோசனை என்று மாவட்ட ஆட்சியர் வினவ.........

ஒவ்வொரு கிரமம் மற்றும் நகரங்களில், மக்கள் அதிகமாக பயன்படுத்தும், குடிநீர் குழாய்களை தேர்ந்தெடுத்து அவற்றின் அருகிலேயே மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை ஏற்படுத்தினோம் என்றால், தினம் தினம் மக்களால் வீணடிக்கப் படும் நீரை அதில் செலுத்தலாம், அதே சமயம் மழை பெய்யும் சமயங்களில் வரும் நீரையும் அவற்றில் செலுத்தி சேகரிக்கலாம், இதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று நான் கருதுகிறேன் ஐயா......என்று கூற மாவட்ட ஆட்சியர் கைதட்டி......அருமையான யோசனை தம்பி.....உன்னுடைய இந்த யோசனை கூடிய விரைவில் உயிர் பெற்று நாட்டில் உலா வரும் என்று கூறி சென்றவர்.......அன்றே அதற்கான தகவல் சேகரிப்பை முடுக்கி விட்டிருந்தார்.........

இதற்கிடையில், மாணவர்கள் குழுவாக சென்று மாவட்ட ஆட்சியரை அணுகி, ஐயா, மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க, அதாவது குழி வெட்ட எங்களால் ஆன உதவிகளை பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஒன்றாக இணைந்து செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறி ஆட்சியரை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். அங்கிருந்து அனைவரும் விடை பெற்று செல்கையில் ஆட்சியர் பிரணவனை மட்டும் அழைத்து........

பிரணவா, உன்னுடைய இந்த செயல் மிகவும் பாராட்டுதற்குரிய அரிய செயல்......நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து அதை சரி வர பராமரித்தோம் என்றாலே போதும், நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதே போல் உன் யோசனைப் படி செய்தோம் என்றால், மிக அதிகப் படியான நீரை நம்மால் நிலத்தடிக்கு கொண்டு செல்ல முடியும். நாம் இப்பொழுது செய்யப் போகின்ற இந்த செயல் ஒவ்வொருவரின் மனக் கதவையும் தட்ட வேண்டும்....அதற்காகத் தான், மழைநீர் குழி தோண்ட மாணவர்கள் ஒன்று கூடி உதவுகிறோம் ஐயா என்று கூறியதும் நான் ஒப்புக்கொண்டேன்.....என்று கூறி மாவட்ட ஆட்சியர் பிரணவனை வழி அனுப்பி வைத்தார்…

அன்றைய மாதமே, மழை நீர் குழி தோண்டும் பணிகள் தொடங்கப் பட்டன, மாணவர்கள் இதில் ஈடுபடுவதை பார்த்த ஊரில் உள்ள ஒவ்வொருவரும் தாங்களாகவே முன்வந்து மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து அந்த ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் , அதிகப்படியான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திய மாவட்டமாக அந்த மாவட்டம் அறிவிக்கப் பட்டது, தொலைக்காட்சிக்கு அது சம்பந்தப் பட்ட பேட்டியில் பேசிய மாவட்ட ஆட்சியர், இந்த ஒரு மாவட்டம் தமிழ் நாட்டின் பிற மாவட்டங்களுக்கு உதாரணமாக விளங்கட்டும், இதற்கு வித்திட்ட தம்பி பிரணவனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று கூறி அருகில் இருந்த பிரணவனை ஆரத் தழுவிக்கொள்கிறார்….

நீரின்றி அமையாது உலகு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by krishnaamma Sat Oct 13, 2012 11:15 pm

அருமை அருமை புன்னகை இது போல எல்லோரும் பொறுப்பாய் இருந்தால் நம் நாடு ரொம்ப முன்னேறிவிடும். நமக்கு உடனடித்தேவை தேவை தனிமனித ஒழுக்கம் தான் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by மு.வித்யாசன் Sun Oct 14, 2012 9:15 pm

தண்ணீர் வீனாக செலவாவதை பற்றிய இந்த கதையும், அது சிறுவன் மனதில் தோன்றி, அதனை தீர்க்கும் விதமும் நன்றாக இருந்தது. தண்ணீர் விலைக்கு விற்கப்படும் இன்றைக்கு இதுபோன்ற விழிப்புணர்வுகள் தேவையானதுதான்

நல்ல சிந்தனை, அழகிய கதை வாழ்த்துக்கள் எழுதிய விரல்களுக்கும், சிந்தித்த நினைவுகளுக்கும்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Sun Oct 14, 2012 11:26 pm

மிக அழகிய பின்னூட்டம் வித்யாசன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by ஆரூரன் Tue Oct 16, 2012 9:35 am

சின்னபையன்... பெரிய யோசனை!
நல்ல கருத்து உள்ள கதை
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by Guest Tue Oct 16, 2012 7:43 pm

அருமையான கதை . நினைத்ததை செயல்படுத்துவது நம்மிடம் சிலருக்கு தான் தோன்றும் ..
சிறுவன் மூலம் அதை உணர்த்தி , முக்கிய விடயத்தை கருவாக எடுத்து எதார்த்தமாக கதை நகர்வது , கண்முன் காண்பது போல இருந்தது ..

நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 001 - சொட்டும் ஒருநாள் கொட்டும் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum