ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா)

2 posters

Go down

கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Empty கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Sat Oct 13, 2012 7:49 pm

சொர்க்கத்தின் வாசல்...

விசுவநாதன், விசாலாட்சி தம்பதி கண் மூடி சிவன் சன்னிதியில் பிரார்த்திக்க யார் பேர்ல ‎அர்ச்சனை..? அர்ச்சகரின் குரல் கேட்டு..சின்னவன் பேருக்கு சாமி. சிவா, பரணி நட்சத்திரம். ‎அர்ச்சகர் சங்கல்பம் செய்தபடியே நகர. கடவுளே என் மகன், மருமகள் நல்லபடியா இருக்கனும். ‎

‎“இந்தாங்கோ பிரசாதம்… என்ன விசாலாட்சி அம்மா இன்னிக்கு என்ன விசேசம்? “‎
‎“என் மகனும், மருமகளும் இன்னிக்கு அமெரிக்கா போறாங்க சாமி அதான் அர்ச்சனை ‎பண்ணிட்டு போலாம்னு வந்தோம்.”‎

‎“அப்படியா ரொம்ப சந்தோசம். அவன் அருளால எல்லாம் நல்லபடியா நடக்கும் ‎கவலைப்படாதீங்கோ..”‎
‎“சரி சாமி நேரமாச்சு நாங்க கிளம்பறோம்.” என்றபடி கோவிலில் இருந்து கிளம்பினர்.

மூத்தவன் ரவிக்கு படிப்பிற்கேற்றவாறு நல்ல உத்தியோகம் கிடைக்க மனைவி, ‎குழந்தைகளுடன் சிங்கப்பூரில் வசிக்கத் துவங்கிவிட்டான். இரண்டாமவன் சந்துரு ஐந்து ‎வருடமாக துபாயில் மனைவி, மகனுடன் வசிக்கிறான்.

மூன்றாமவன்தான் சிவா கடைக்குட்டி அம்மாவின் செல்லப்பிள்ளை. காலேஜ் போனாலும் ‎அம்மா அம்மா என சுற்றி சுற்றி வருவான். சென்ற மாதம்தான் சங்கரியோடு திருமணம் ‎நிகழ்ந்தது. சங்கரி பணக்கார வீட்டு பெண், படித்தவள் இருப்பினும் கொஞ்சமும் அந்த பகட்டு ‎இல்லாமல் அத்தை, மாமா என அனைவரிடமும் மிகவும் அன்பாகவே நடந்துகொள்பவள். ‎இப்பொழுது சிவா வேலை பார்த்த நிறுவனமே அவனையும், மனைவியையும் அமெரிக்கா ‎அனுப்புவதின் விளைவு இன்றைய பயணம் .

விஸ்வநாதனும், விசாலாட்சியும் ஆரம்பகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டாலும், குழந்தைகள் ‎படித்து வேலைக்கு செல்லத்துவங்கியதும் நல்ல நிலைக்கு வந்து விட்டனர். வசதிக்கு ‎குறைவில்லை. மருமகள்களும் வந்துசெல்லும் நேரம் மட்டுமன்றி அவ்வப்பொழுது ‎அழைத்துப்பேசி, இந்தியா வருபவர்களிடம் அத்தை, மாமாவிற்கு தேவையானதை அனுப்பி ‎வைத்தனர்.

மாலை..சிவா, சங்கரி கிளம்பும் நேரமும் வர..விசாலாட்சி தன் மனக்கவலையினை வெளியில் ‎காட்டிக்கொள்ளாமல் வழியனுப்ப முயற்சித்தாள்.

அம்மா, அப்பா நாங்க கிளம்பறோம் எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க..என இருவரும் காலில் ‎விழ நல்லபடியா போயிட்டு வாங்க என கண்ணீர் மல்க ஆசீர்வதித்தாள் விசாலம். உடம்ப ‎கவனமா பார்த்துக்கோங்க. எதுவா இருந்தாலும் எந்த நேரம்னாலும் போன் பண்ணுங்க. ‎பிரபுகிட்ட சொல்லியிருக்கேன் அவனும் அப்பப்போ வந்து பார்த்துப்பான். நான் தினம் போன் ‎பண்றேன்.

மாமா, அத்தை நாங்க கிளம்பறோம் என்ற சங்கரியிடம் பிரியாவிடைகொடுத்தபடியே, ‎
‎“நாங்களும் ஏர்போர்ட் வரேன் சொன்னா ஏன் வேண்டாங்கிறே..??”‎
‎“அப்படி இல்லேம்மா அங்க வந்து என்ன செய்யப்போறீங்க..வாசலோட திரும்பனும் எதுக்கு ‎உங்களுக்கு வீண் சிரமம்ன்னுதான் வேண்டாம் சொல்றேன்.”‎
‎“சரிப்பா இரண்டு பேரும் கவனமா போயிட்டு வாங்க..கடவுள் என்னிக்கும் துணையிருப்பார்.”‎

அன்றிரவு முழுவதும் மகனைப்பிரிந்த ஏக்கத்தில் விசாலம் உறங்காமல் விழித்திருந்தவள் ‎அதிகாலை சற்றே கண்ணயர.. கணவனின் குரல் கேட்டு வேகமாக எழுந்தவள் அவர் ‎யாருடனோ போனில் பேசுவதைக் கண்டு “யாருங்க நம்ம சிவாவா..?” என ஆவலாய் ‎கேட்டாள். அவள் பக்கம் திரும்பி “ம்....” என்றவர் “இருப்பா அம்மாகிட்ட கொடுக்கறேன்.” ‎என்றார்.‎
‎“சிவா, எப்படிப்பா இருக்க..நல்லபடியா போய் சேர்ந்தியா.வீடு நல்லா இருக்கா..யாரும் ‎ஏர்போர்ட் வந்தாங்களா” என அடுக்க... “எல்லாம் வசதியா இருக்கும்மா.நீங்க ‎கவலைப்படாதீங்க.” என்றதும் சரிப்பா என சங்கரியிடமும் விசாரித்தவள் சற்றே ‎மனநிம்மதியுடன் காணப்பட்டாள்..‎

இவர்களது பாசம் இப்படியே போனில் தொடர்ந்தது. அவர்களது பரபரப்பான வாழ்வில் ‎ஆறுமாதம் ஆறுவாரம்போல் கடந்தது. ஒரு நாள் இரவு திடீரென அப்பாவிடமிருந்து ‎அழைப்பு....‎

‎“என்னப்பா இந்த நேரத்தில்...?” சற்றே திகிலுடன் சிவா வினவ.. “அம்மாவிற்கு மாலையில் ‎இருந்து நெஞ்சு வலிப்பா. நம்ம டாக்டர் வந்து பார்த்துட்டு போயிருக்கார். நாளை ‎ஹாஸ்பிடல் அழைத்துவர சொல்லியிருக்கார் ஏதோ டெஸ்ட்டெல்லாம் எடுக்கனுமாம்.” ‎
‎“அய்யோ...இப்ப எப்படிப்பா இருக்காங்க...நாங்க பேசலாமா..?”‎

‎“இல்லப்பா மாத்திரை சாப்பிட்டு தூங்கறா.. நீ கவலைப்படுவே உன்கிட்ட சொல்லவேணாம்னு ‎சொன்னா. எனக்குத்தான் பயமா இருந்திச்சு அதான் போன் பண்ணேன். சரி நீ வருந்தாத. ‎நாளை ஹாஸ்பிடல் போயிட்டு அங்கிருந்து போன் பண்றேன்.”‎

சங்கரியிடம் அம்மாவின் உடல்நிலை குறித்து வெகுநேரம் கவலையுடன் ‎பேசிக்கொண்டிருந்தவன் எப்பொழுது உறங்கினான் என்றே தெரியவில்லை..‎

போன் சத்தம் அலர..அதிர்ந்து எடுத்தவன் “என்னாச்சுப்பா..” பதற்றமாய் கேட்டான்.‎
‎“சிவா உங்க அம்மாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்திருக்கேன். ரொம்ப சீரியஸாம். ‎உடனே எல்லார்க்கும் தெரிவிங்கன்னு சொல்லிட்டாருப்பா நம்ம டாக்டரு.” எதிர் முனையில் ‎அப்பாவின் குரல் உடைந்திருந்தது. “அய்யோ அம்மா.. என்னப்பா இது.. ஆமா ‎அண்ணாக்கெல்லாம் சொல்லிட்டீங்களா..??” ‎

‎“இப்பதான் பேசினேன்பா.. பெரியவன் வேல விசயமா ஜெர்மனி போயிருக்கானாம். தொடர்பு ‎கொள்ள முடியல. அடுத்தவன் பிளைட் டிக்கட் எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்கலன்னு ‎ஒரே அழுகை.”‎

‎“அய்யோ... அப்பா இப்ப என்னாலயும் உடனே வரமுடியாதே. நாளை ஒரு அவசர மீட்டிங் ‎இருக்கு. அதுக்கு போகலேன்னா கோடிக்கணக்கில் நாம நஷ்ட ஈடு தரமாதிரி இருக்குமே.. ‎எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலியே... கண்கள் குளம் கட்ட, “அப்பா... அங்க நம்ம ‎டாக்டருகிட்ட கேட்டு கேமரா ஆன்பண்ண சொல்லுங்கப்பா. அம்மாவைப் பார்க்கனும் போல ‎இருக்கு.” என்றான்.‎

‎“இல்லப்பா ஐ.சி.யுவில இருக்கிறதால அனுமதி இல்ல. மூன்று பசங்க இருந்தும் கடைசி ‎நேரத்தில் ஒருத்தர்கூட பக்கத்தில் இருக்க கொடுப்பன இல்லாத பாவியாயிட்டோம் நாங்க...” ‎என விசுவநாதன் கதற. ‎

‎“அப்பா அழாதீங்க.. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது” என இவன் கதற...‎

‎“என்னாச்சுங்க” சங்கரி சிவாவை உலுக்கி எழுப்பினாள். ‎

திடுக்கிட்டு எழுந்தவன்., நான் கண்டது கனவா..?? என மணி பார்த்தான். காலை 6 மணி. ‎அதிகாலை கனவு பலிக்கும் என்பார்களே என குழம்பியபடியே எழுந்து வழக்கம்போல் ‎அலுவலகம் கிளம்பிச் சென்றான்.‎

அலுவலகம் சென்றவன், மேலதிகாரியிடம் தனது ராஜினாமாக் கடிதத்தை கொடுக்க..‎
‎“என்னாச்சு சிவா, சொர்க்கம் மாதிரி வசதிகள் செய்து கொடுத்திருக்கோம்.. இன்னும் வேற ‎என்ன வேணுமோ கேளு..அதுக்கு ஏன் ராஜினாமா செய்யனும்..??” என வினவ...‎

‎“சொர்க்கம் மாதிரி வசதிகளுக்கு அடிமையாகித்தான் அம்மா, அப்பாவுடன் சேர்ந்து வாழும் ‎சொர்க்கத்தையே இழந்துட்டு நிக்கறோம். போதும் சொர்க்கத்தின் வாசலை ‎அடைத்துவிட்டு சொர்க்கத்திற்கு போகும் வழி தேடறோம் நாங்க எல்லாம். ‎கஷ்டப்பட்ட காலத்தில் காசுமேல ஆசை இருந்தது உண்மைதான்..ஆனா அப்பகூட ‎சந்தோசமாத்தான் இருந்தோம். இப்ப காசு, வசதிகள் இருக்கு..ஆனா இந்த உலகுக்கு ‎அழைத்துவந்த அம்மா, அப்பாவை தவிக்கவிட்டு அவங்க மரணப்படுக்கையில் ‎இருக்கும்போதுகூட போன்ல அழற நரக வாழ்வு எனக்கு வேண்டாம் சார்...” எனக்கூறி ‎தன் இருக்கைக்குத் திரும்பியவனை மனைவி சங்கரி போனில் அழைக்க.. “என்னாச்சும்மா..? ‎

மாமா போன் செய்தார்ங்க..அத்தைக்கு ஒன்றும் இல்லையாம். சாதாரண கேஸ், அப்புறம் ‎உங்களப்பிரிஞ்ச கவலை இரண்டும் சேர்ந்த்தாலத்தானு டாக்டர் சொல்லிட்டாராம். நீங்க ‎கவலைப்பட வேணாம்னு மாமா சொல்லச்சொன்னார் என்றாள் சந்தோஷமாக.‎
நன்றி கடவுளே என்றவன், தான் ராஜினாமாக் கடிதம் கொடுத்துவிட்டதையும், அடுத்த ‎வாரமே இந்தியாவோடு செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் மனைவியிடன் கூற, ரொம்ப ‎சந்தோசங்க. உங்க முடிவு மிகவும் சரியானது. எனக்கும் மகிழ்ச்சி என்றவள் தன் கணவனை ‎நினைத்து பெருமிதப்பட்டவாறே இந்தியாப் புறப்பட என்ன என்ன செய்யவேண்டும் என ‎திட்டமிடலானாள் மனதினுள்...!!!‎
@@@@@@@@@@@
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by kumar006 Sun Oct 14, 2012 10:37 pm

கதை நல்லாயிருக்கு... எழுதிய கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
kumar006
kumar006
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum