ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வியை விட மோசமானது எது?

3 posters

Go down

தோல்வியை விட மோசமானது எது? Empty தோல்வியை விட மோசமானது எது?

Post by யாழவன் Sun Oct 11, 2009 6:36 pm

தோல்வி என்பது பல நேரங்களில் கேவலமாகவும் அவமானகரமானதாகவும் நம்மவர்களால் எடுத்துக் கொள்ளவும் பார்க்கவும் படுகிறது.
தோல்வி, சீண்டப்பட்ட மரவட்டை போல், நத்தை போல் மனத்தை சுருளச் செய்தும் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளச் செய்தும் வேடிக்கை பார்க்கிறது.
இதுகூடப் பரவாயில்லை. சிலரை இந்த உணர்வு தலைதூக்கவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
இன்று டென்னிஸ் உலகின் முடிசூடாத மன்னனாக விளங்கும் ரோஜர் பெடரர் பல வெற்றிகளைக் குவிக்கிறார். ஆனால் இவரது வெற்றிகள் எல்லாம் சுலபத்தில் வாய்த்தவையோ வந்தவையோ அல்ல.
சில வெற்றிகள், கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கிப் போய்த் தொட்டுவிட்டுப் பிறகு கைக்கு வந்தவை. 6-4; 6-4; 6-6 என்று முடியப் போகிற தருணத்தில் 6-7; 2-6; 3-6 என்று அடியோடு திரும்பியவை.
இதற்குக் காரணம் ரோஜரின் போராடும் குணம்தான். இவரது வெற்றித் திறமையைவிட கடைசி நிமிடம்கூட விட்டுக் கொடுக்காத போராட்டமே என்னைப் பல நேரங்களில் கவர்ந்திருக்கிறது.
தோல்வியை நெருங்குகையில் ‘ஐயோ! தொலைந்தோம்!’ என்று எதிர்மறையாக எண்ணுவதை விட்டுவிட்டு, ‘இதில் மட்டும் ஜெயித்துவிட்டால் எப்படி இருக்கும்?” என்று சிந்திக்க ஆரம்பித்து, வெற்றியின் பலன்களை அடைவதாகவும் எண்ணிப் பார்த்தால் நமக்குள் உறங்கிக் கிடக்கும் மகத்தான சக்தி தட்டி எழுப்பப்பட வாய்ப்பு இருக்கிறது.
தோல்வியின் விளிம்பில் அதைத் திசை திருப்பவல்ல ரோஜா பெடரர் இந்த உத்தியைத்தான் கையாள்கிறாரோ என நான் ஊகிக்கிறேன். நிச்சயம் வெற்றி கிடைக்காது என்பது தெரிந்த பிறகும் மேற்கொள்ளப்படும் முயற்சி இருக்கிறதே, இது நமக்கு இதுவரை கிடைத்திராத புதிய அனுபவமாக இருக்கும்.
ஒரு முதல் தர ஆட்டக்காரருக்கு எதிராக ஒரு கற்றுக்குட்டி ஆட்டக்காரர் எடுக்கும் ஒரு பாயிண்ட் கூடப் பார்வையாளர்களால் பெரிய அளவில் கைதட்டி வரவேற்கப்படும். இந்த அனுபவம் ஒரு கற்றுக் குட்டி ஆட்டக்காரருக்கு மகத்தான மன எழுச்சியைத் தரவல்லது.
ஆக, எதிரி எவ்வளவு பலமானவன் என்பது முக்கியமல்ல. நம் முயற்சி எந்த அளவு உண்மையானதாக இருந்தது என்பதே முக்கியம்.
இந் நேரம் புரிந்திருக்கும் உங்களுக்கு. ஆம்! தோல்வியைவிட மோசமானது முயற்சி செய்யாமல் இருப்பதே!
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

தோல்வியை விட மோசமானது எது? Empty சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

Post by யாழவன் Sun Oct 11, 2009 6:44 pm

ஒரு திருமண உறவில் ஏகச் சிக்கல். சம்பந்திகள் இருவரும் ஒன்று கூடிப் பேசி, ஒன்று உறவை அறுத்துக்கொள்வது, அல்லது ஒன்று சேர்த்து வைப்பது என்று முடிவுக்கு வருகிறார்கள்.
பேச்சுவார்த்தை நடந்த வேளையில் ஒருவரது வார்த்தை தடிக்க, பதிலுக்குப் பெண்ணைப் பெற்றவர் கடுமையாக ஒரு வார்த்தை பேசிவிட ஒரு பொது மனிதரின் பஞ்சாயத்திற்கு வந்தபோது “நான் அப்படிச் சொல்லவே இல்லை. அந்த அர்த்தத்தில் பேசவே இல்லை” என்றெல்லாம் இவர் சமாதானம் சொல்லப்போக, பையனின் அப்பா இதை மறுக்க பஞ்சாயத்துப் பேசிய அந்தப் பஞ்சாயத்து எவ்விதப் பலனையும் தரவில்லை. பையனின் தந்தை புறப்பட்டுப் போனதும், பெண்ணின் தந்தையிடம் “என்ன நீங்க! இப்படியா பண்றது? நீங்க ஒரு பொது மனிதரையும் அவர் பொதுமனிதரையும் வைத்தல்லவா பேசியிருக்க வேண்டும்?” என்று பஞ்சாயத்துப் பேசியவர் சிறிதாகக் குட்டு வைத்தார்.
கடன் வசூல் செய்யப் போனார் ஒருவர். வீட்டில் உரியவர் இல்லை. உரியவரின் மனைவி மட்டுமே இருந்தார். “வீட்டுக்காரர் வந்ததும் வரச் சொல்லுங்கம்மா. நான் வந்துபோனேன்னு சொல்லுங்கம்மா” என்கிற இரு வாக்கியங்களோடு முடிந்திருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்காது.
“ஏங்க அந்தாளுகிட்ட போய் கடன் வாங்கினீங்க? கன்னாபின்னான்னு பேசிட்டாருங்க அந்த மனுஷன்” என்று கடன்பெற்றவரின் மனைவி சொல்லுமளவு இவர் பேசிவிட “வீட்ல ஆம்பிளை இல்லாத நேரமாப் பார்த்து தாறுமாறாவா பேசறே? என்கிட்ட நீ பைசா வாங்கமாட்டே! உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்க” என்று கடன் வாங்கிய முரட்டு ஆசாமி பேசிவிட, வசூல் என்பது சாத்தியமற்றுப் போயிற்று. கடன் கேட்டவரே ஒரு சாட்சி வைத்துக்கொண்டு பேசியிருந்தால்? எண்ணிப்பாருங்கள்.
விவகாரமான விஷயம்; தர்மசங்கடமான சூழ்நிலை; இக்கட்டான உறவு முறைகள்; பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆகியவற்றிற்கு உண்மைகளை எடுத்துச்சொல்ல ஒரு அல்லது ஒரு சில சாட்சிகள் அவசியம்.
பனை மரத்தடியில் பால் குடித்தால் அதற்குக்கூட சாட்சியம் தேவைப்படும் காலமிது
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

தோல்வியை விட மோசமானது எது? Empty Re: தோல்வியை விட மோசமானது எது?

Post by ராஜா Sun Oct 11, 2009 6:47 pm

தோல்வியை விட மோசமானது எது? 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தோல்வியை விட மோசமானது எது? Empty Re: தோல்வியை விட மோசமானது எது?

Post by மீனு Sun Oct 11, 2009 6:51 pm

அருமையான விடயத்தை அழகா சொல்லி இருக்கின்றீர்கள் யாழவன்..பெடரர் அவர்களுக்கு தனிப் பட்ட பயிற்சியாளர் இல்லை..இந்த வருடம் தான் ஒரு பயித்சியாலரை அமர்த்தி விளையாட்டை பயின்றார்.. இங்கே உதாரங்களுடன் சொல்லிய விதம் அருமை..நன்றிகள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தோல்வியை விட மோசமானது எது? Empty Re: தோல்வியை விட மோசமானது எது?

Post by யாழவன் Sun Oct 11, 2009 6:52 pm

தோல்வியை விட மோசமானது எது? 678642
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

தோல்வியை விட மோசமானது எது? Empty Re: தோல்வியை விட மோசமானது எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum