ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது போதும் எனக்கு - புதியது

+5
அசுரன்
பூவன்
யினியவன்
லோகு
அகல்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இது போதும் எனக்கு - புதியது Empty இது போதும் எனக்கு - புதியது

Post by அகல் Sat Oct 13, 2012 9:45 am

குறிப்பு: "இதுபோதும் எனக்கு" எனும் வைரமுத்து அவர்களின் கவிதையின் தாக்கத்தில் நான் எழுதிய வரிகள் இவை. தலைப்பைத்தவிர மற்ற வரிகள் யாவும் எனது கற்பனையே..!

அடை மழையில்
சிறு குடைக்குள்
அன்பாக நீ
அணைக்க நான்.
இது போதும் எனக்கு..!

பனிபடர்ந்த மாலை நேரம்
பதமான குளிர்
நடை பாதைப் பயணம்
என் வலது கையில் நீ
உன் இடது கையில் நான்.
இது போதும் எனக்கு..!

காஞ்சிவரப்பட்டு
கண்ணாடி வளையல்
கழுத்தோரம் கருகமணி
மனம்மயக்கும் மதுரை மல்லி
வெள்ளிக் கொலுசு
அடி நெற்றியில் குங்குமம்
அதற்குமேலே சந்தனம்
பகலில் இதை அணிய நீ
இரவில் அதை களைய நான்.
இது போதும் எனக்கு..!

அதிகாலை நேரம்
ஆவி பறக்கும் காபி
அழுக்கு வாயால் உனக்கோர் முத்தம்
அதை அதட்டும் உன் இதழ்கள்.
இது போதும் எனக்கு..!

நாம் கொண்ட அன்பு
அதில் நீ கொண்ட தாய்மை
தாய்மை நாளின் தவிப்பு
உன் மாலை நேர களைப்பு
மெட்டியிட்ட உன் விரல்கள்
அதில் நெட்டி எடுக்க நான்.
இது போதும் எனக்கு..!

உன்கையில் ஒருபிடி சோறு
நெற்றியில் தரும் ஒற்றை முத்தம்
சுகத்தில் சாய உன் மடி
சோகத்தில் சாய உன் மார்பு
இது போதும் எனக்கு..!

மாலை நேரம்
திறந்த புல்வெளி
தலை கோதும் உன் விரல்கள்
உன் மடியில் நான்.
இது போதும் எனக்கு..!

நவம்பர் மாத நடுக்கம்
ராத்திரி நேர உறக்கம்
நடு இரவில் விழிப்பு
என் நெஞ்சுக்குள் நீ.
இது போதும் எனக்கு..!

எனது வலைப்பூவில் காண


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இது போதும் எனக்கு - புதியது Empty Re: இது போதும் எனக்கு - புதியது

Post by லோகு Sat Oct 13, 2012 9:53 am

காஞ்சிவரப்பட்டு
கண்ணாடி வளையல்
கழுத்தோரம் கருகமணி
மனம்மயக்கும் மதுரை மல்லி
வெள்ளிக் கொலுசு
அடி நெற்றியில் குங்குமம்
அதற்குமேலே சந்தனம்
பகலில் இதை அணிய நீ
இரவில் அதை களைய நான்.
இது போதும் எனக்கு..!

எனக்கு பிடித்த வரிகள்...! அற்புதம்.....!!!


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

இது போதும் எனக்கு - புதியது Empty Re: இது போதும் எனக்கு - புதியது

Post by யினியவன் Sat Oct 13, 2012 11:04 am

அருமை அருமை.

இது போதும் எனக்குன்னு எவ்வளவு தான் கெஞ்சினாலும்
இலவச இணைப்பா உங்களுக்கு வேண்டாததும் கிடைக்கும்

அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க அகல்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இது போதும் எனக்கு - புதியது Empty Re: இது போதும் எனக்கு - புதியது

Post by அகல் Sat Oct 13, 2012 11:13 am

யினியவன் wrote:அருமை அருமை.

இது போதும் எனக்குன்னு எவ்வளவு தான் கெஞ்சினாலும்
இலவச இணைப்பா உங்களுக்கு வேண்டாததும் கிடைக்கும்

அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க அகல்.
கண்டிப்பா அதுக்கும் தயாரா இருக்கேன் பாஸ் புன்னகை .. கருத்திற்கு நன்றிகள்..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இது போதும் எனக்கு - புதியது Empty Re: இது போதும் எனக்கு - புதியது

Post by பூவன் Sat Oct 13, 2012 11:14 am

இலவசம் யாரை விட்டது என்ன கொடுமை சார் ....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இது போதும் எனக்கு - புதியது Empty Re: இது போதும் எனக்கு - புதியது

Post by அகல் Sat Oct 13, 2012 11:16 am

லோகு wrote:காஞ்சிவரப்பட்டு
கண்ணாடி வளையல்
கழுத்தோரம் கருகமணி
மனம்மயக்கும் மதுரை மல்லி
வெள்ளிக் கொலுசு
அடி நெற்றியில் குங்குமம்
அதற்குமேலே சந்தனம்
பகலில் இதை அணிய நீ
இரவில் அதை களைய நான்.
இது போதும் எனக்கு..!

எனக்கு பிடித்த வரிகள்...! அற்புதம்.....!!!
நன்றிகள் லோகு... ஆனாலும் தேவையான வரிகளைத்தான் தேர்ந்தேடுக்கிரிங்க புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இது போதும் எனக்கு - புதியது Empty Re: இது போதும் எனக்கு - புதியது

Post by யினியவன் Sat Oct 13, 2012 11:17 am

இலவசம்னாலே பரவசம் ஆகிறவர்கள் இருக்கும் வரை
இலவசங்களும் இருக்கத் தான் செய்யும் பூவன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இது போதும் எனக்கு - புதியது Empty Re: இது போதும் எனக்கு - புதியது

Post by அசுரன் Sat Oct 13, 2012 11:26 am

எப்பவுமே மடி மீது மார்மீது... கைபிடித்து தானா!... புன்னகை

உலகம் ரொம்ப பெருசு தம்பி!... கவிதை அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இது போதும் எனக்கு - புதியது Empty Re: இது போதும் எனக்கு - புதியது

Post by பூவன் Sat Oct 13, 2012 11:27 am

யினியவன் wrote:இலவசம்னாலே பரவசம் ஆகிறவர்கள் இருக்கும் வரை
இலவசங்களும் இருக்கத் தான் செய்யும் பூவன்.

அரசியல் வசம் வீசும்
வலை இது ...
இதன் விலையோ
வாக்குரிமை ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இது போதும் எனக்கு - புதியது Empty Re: இது போதும் எனக்கு - புதியது

Post by Guest Sat Oct 13, 2012 11:57 am

வரிகள் அருமை அகல் ..
avatar
Guest
Guest


Back to top Go down

இது போதும் எனக்கு - புதியது Empty Re: இது போதும் எனக்கு - புதியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum