ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 21 - பிரசாத் (சிறுகதை சின்னத்திருவிழா)

Go down

கதை எண். 21 - பிரசாத் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty கதை எண். 21 - பிரசாத் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Fri Oct 12, 2012 9:55 pm

பிரசாத்


பதினைந்து வினாடிகளுக்கு முன் அதனுடன் இருந்த எங்கள் தொடர்பு அறுபட்டு இராவிடில் தற்சமயம் நானும் புதரில் என் வண்டிக்கு கீழே கிடந்திருப்பேன்.
முதல் மீசை முளைத்த நாட்களில் என் ஒரே ஆசை, இறப்புக்கு முன் இந்த வண்டியை நூறு அடியாவது ஓட்டிய பின் உயிர் விட வேண்டும். அவ்வளவு ஆசையாய் என்னுள் கலந்த என் ஆர்.எக்ஸ்.100 இன்று முன்சக்கரம் வளைந்து, சக்கர முட்கம்பிகள் அறுந்து, கியர்ராட் உடைந்து, பெட்ரோல் கொள்கலன் குழிந்து, முன்விளக்கு குருண்டு, புதருக்குள் கவிழ்ந்து படுத்து குற்றுயிராய் என்னைப் பார்த்தது, பாவமாய்..
எப்படி நடந்தது இவ்விபத்து? வீட்டிலிருந்து நாங்கள் ஆறு பேரும் கிளம்பியது, கோவை-சாய்பாபா கோவில் எதிரே பங்கில் பெட்ரோல், காரமடையில் தேனீர், மேட்டுபாளையம் தாண்டியதும் சில்லென்ற காற்று, ப்ளாக் தண்டர் முன் நின்றிருந்த அந்த நான்கு பெண்கள் (அதில் ஒருத்தி என்னைப் பார்த்துச் சிரித்ததாக ஞாபகம்), பின்னால் வந்த மற்ற இரு வண்டிகளும் திடீரென நின்றதை பிரசாத் கூற, வண்டியை ஒட்டியவாறே திரும்பிப் பின்புறம் பார்த்தது, இவை அனைத்தும் பசுமையாக நினைவில் உள்ளது.
"டேய் டேய் ரோட்டப் பாருடா, வளையுது" என்று பிரசாத் கத்த நேராகப் பார்த்தபின்தான் அதிர்ந்தேன்.
ரோட்டின் வலப்புறம் மிகக் குறுகிய வளைவு, மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் என் வண்டி. மணல் தெளித்த சாலை, பாதி கிளட்சை பிடித்து, பாதி பிரேக்கை பிடித்து வளைவில் வண்டியைச் சற்று அதிகமாய்ச் சாய்த்து கியரைக் குறைத்தபோது உணர்ந்தேன், என் முகத்தின் வலப்பாகம் ரோட்டின் மிகச் சமீபத்தில் இருந்ததை. என் வலது முழங்கை சாலையில் உராய வண்டி நகர்ந்து கொண்டேயிருந்தது. எப்போது நானும் பிரசாத்தும் கீழே விழுந்தோம், எப்போது வண்டி புதருக்குள் இறங்கியது என்பது சரியாக நினைவில்லை.
கீழே விழுந்தெழுந்து அரை நிமிடம் ஆகியும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை. சற்று தலைதாழ்த்திப் பார்த்த பின்தான் பிரசாத் இன்னும் கீழே அமர்ந்தே இருப்பதைக் கவனித்தேன், பயந்து "டேய், என்ன ஆச்சுடா, பெரிய அடி ஏதாவது பட்டுதா?" என்று கேட்டேன்
"தெரியலடா, கால் லைட்டா வலிக்குது, சின்ன அடின்னு நினைக்கறேன்"
"எந்த கால்லடா? காட்டு"
"வலது கால்ல", என்று அவன் காட்டிய மூட்டின் வலதுகீழ் ஓரம் தோலின்றி வெளிப்படையாக மூட்டெலும்பைக் காட்டியது. வெள்ளையான மூட்டுபந்தும், அதன் உள்ளே கருப்பாக என்னவோவுமாக 3 செ.மீ. அளவுக்குக் குழிவு தெரிந்தது, ஏனோ பார்த்ததும் அவன் கால் நடுங்க ஆரம்பித்தது. காயத்தை நான் ஆராய மற்ற நான்கு நண்பர்களும் வந்து சேர்ந்தனர்.
"வழக்கம்போல விழுந்தயா” என்று என் தோளில் கைபோட்டபடி பிரசாத்தின் காலைப் பார்த்த சரண் அமைதியாக இரண்டடி பின்னே சென்றான்
"உனக்கு என்னடா ஆச்சு" என்று என்னைக் கேட்டான் கார்த்திக். என் வலது முன்னங்கையின் நீண்ட சிராய்ப்பைக் காண்பித்தேன். ஆர்வமாய் தலை நீட்டி என் காயத்தைப் பார்த்த ஜனாவும் ஜுலியனும் பயமும் வாந்தியும் கலந்த பார்வையுடன் என்னைப் பார்த்தனர்.
பின் அவர்கள் நால்வரும் புதரிலிருந்து என் வண்டியைத் தூக்கி நிறுத்தி, விவாதித்து மேட்டுபாளையத்தில் ஏதாவது மருத்துவமனைக்கு எங்களைக் கூட்டிச் செல்வதாய் தீர்மானித்தனர். பிரசாத் கார்த்திக்கின் வண்டியில் ஒரு பக்கமாய் கால் மேல் கால் போட்டு உட்கார நான் ஜுலியனின் பின்னமர்ந்து பிரசாத்தையே பார்க்க, கிளம்பினோம்
என் பின்னே வந்து எனக்காக நிஜ ரத்தத்தைச் சிந்தும் பிரசாத் என் பள்ளி, கல்லூரி தோழன். விளைவறியாது யாருடனும் எனக்காக சண்டைபோடத் துணியும் நெருங்கிய நண்பர்களுள் ஒருவன். வெகு சிலரின் துணையில் மட்டுமே ஒரு வார்த்தையும் பேசாது கவிதையை, இசையை, கடலலையை, தனிமையைக் கூட ரசிக்க இயலும். பிரசாத் அத்தகையவன்.
பைக்கில் ஊர் சுற்றும் போதெல்லாம் நண்பர்கள் கிண்டலையும் மீறி என் பின் அமர்வது பிரசாத். அந்த நம்பிக்கையின் பயனா, அவன் விதிப்பயனா நாங்கள் விழுந்தது என்று நான் சிந்திக்க மருத்துவமனை முன் வண்டி நின்றது.
மொத்தமே நான்கு அறைகள் இருந்த அந்த மருத்துவனையில் (மருத்துவனை?) மருத்துவர் அறைக்கு பிரசாத்தை செவிலியர் அழைத்துச் சென்றனர். மற்றொரு அறையில் என் காயத்தை சுத்தம் செய்து அயோடின் பூசிக் கட்டினர்.
என் பைக்கை மெக்கானிக்கிடம் விட்டுவிட்டு ஜனாவும் சரணும் மருத்துவமனைக்கு உள்ளே வந்த சமயம் பிரசாத் இருந்த அறையிலிருந்து டாக்டரும் நர்சும் வெளியே வந்தனர். டாக்டர் ஓய்வு அறைக்குச் செல்ல நாங்கள் பாண்டவராய் நர்சைப் பின்தொடர்ந்தோம்.
" மேடம், அவனுக்கு பெரிய அடியா? நடக்க முடியும்ல" என்று சரண் கேட்டான்.
" தண்ணி அடிச்சுட்டு வண்டி ஓட்டினா என்னாகும்? ஏன் இப்படி திமிர் பிடிச்சு அலையறீங்க? போய் டாக்டர பாருங்க" என்றார் நர்ஸ்
"நர்ஸ், இன்னும் ஆரம்பிக்கவே இல்ல" என்று சரண் விளக்க, நாங்கள் டாக்டரின் அறைக்குச் சென்றோம்.
" டாக்டர் அவன் காலுக்கு ... " என்று கேட்ட என்னை பார்த்து லேசாய் சிரித்த டாக்டர் "கொஞ்சம் பெரிய காயம், டீப் வூண்ட். ஸ்டிட்ச் பண்ண முடியாது. கிளீன் பண்ணி டிரஸ் பண்ணிருக்கு. டாப்லெட்ஸ் தரேன், ஒரு மாசம் பெட் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்" என்றார்
அவர் பேச்சின் இடையே அறைக்குள் நுழைந்த சரண் "அட்மிட் பண்ணனுமா" என்று ஜனாவிடம் கிசுகிசுத்ததை கேட்டு "அவசியம் இல்ல, நீங்க ஊட்டி போய்ட்டு வரதுனா அட்மிட் பண்ணிட்டு போங்க, ரூம் ரெண்ட் ஒரு நாளைக்கு 1200 ரூபா" என்றார் டாக்டர்.
தப்பித்து அன்றே என்னையும் பிரசாத்தையும் தூக்கிக்கொண்டு ஊட்டி சென்று, எங்களுக்கு மருந்து கொடுத்துவிட்டு நாங்கள் ரூமில் ஓரமாய் படுத்தபடி பார்க்க மற்ற நால்வரும் மது அருந்தியது வேறு கதை. அது பிறிதொரு சமயம்.
மறுநாள் இரவு பிரசாத் வீட்டிற்கு அவனை விடச் சென்றோம். நான் முழுக்கைச் சட்டையிட்டு என் கைக்கட்டை மறைத்துக் கொண்டேன். பிரசாத்தைப் பார்த்து பதறிய அவன் தாய் " என்னடா ஆச்சு" என்று கேட்க "பைக் ஓட்ட கத்துக் கொடுத்தோம்மா, எறக்கத்துல பேலன்ஸ் பண்ணத் தெரியாம விழுந்துட்டான்" என்று கதை சொன்னான் கார்த்திக்
பிரசாத்தின் தந்தை என்னை பார்த்து "நிஜமாவா? " என்று கேட்க நான் குறுகி தலைகுனிந்து "ஆமாம்பா" என்றேன்
மூன்று மாதங்கள் கழிந்த ஒரு ஞாயிறு காலை. கார்த்திக், ஜூலியன், சரண், ஜனா நால்வரும் ஒன்றுகூடி பிரசாத் வீட்டிலிருந்து என்னை தொலைபேசியிட்டு அழைக்க நானும் சென்றேன். வீட்டுக்குள் நுழைந்ததும் சரண் "செம கிளைமேட் டா, மழம்புழா போலாம்னு பிளான் பண்ணிருக்கோம், டைம் ஆச்சு, வா கிளம்பலாம்" என்று என்னைத் திருப்பி வெளியே அழைத்து வந்தான். செருப்பு அணியும் பிரசாத்திடம் அவன் தாய் " பார்த்து போய்ட்டு வா கண்ணா" என்று கூற குற்றவுணர்ச்சியுடன் நான் வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
கார்த்திக், ஜூலியன் வண்டிகளின் பின்னிருக்கை காலியாய் இருக்க நேராய் வந்து பிரசாத் என் பின்னே அமர்ந்தான்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum